Wednesday, February 11, 2009

குரங்காய்த்தான் ஆரம்பிச்சு.......

மூணு குரங்குகள் பொம்மையைப் பார்த்ததும் என்ன ஞாபகம் உங்களுக்கு வரும்? (இன்னும் ஒரு குரங்கைக் கூடுதலாச் சேர்த்து நாலு குரங்குகளாகவும் சில இடங்களில் கிடைக்குதாமே) இந்த கூட்டு எல்லாம் நமக்கு வேணாம். இந்த மூணே போதும், இல்லை?

மூணு என்ற எண்ணுக்கு உரிய விசேஷ குணங்கள் என்னென்ன? தெரிஞ்சவுங்க சொல்லுங்க பார்க்கலாம்.

குரங்கைவிட்டுட்டு எங்கியோ போயிட்டேன்........

இந்தக் குரங்குகள் பலவிதமா மாறி யானைவரைக்கும் வந்துருக்கு.




அதுக்குப்பின்?

யானைக்கொரு காலமுன்னா பூனைக்கொரு காலம் இருக்கே.....

இப்பப் பூனையாவும் ஆகியாச்சு.


( எல்லாம் மகள், அவ்வப்போதுத் தாய்க்குக் கொடுத்த பிறந்தநாள் பரிசுகள் )


இதுகள் எல்லாம் என்ன சொல்லுதுன்னு கவனிச்சீங்களா?

கெட்டதைப் பார்க்காதே

கெட்டதைப் பேசாதே

கெட்டதைக் கேட்காதே

மூணே மூணு அன்புக் கட்டளைகள்.

கடைப்பிடிச்சுக்கிட்டு அமைதியா இதுவரை நடந்த பாடங்களை 'எப்பவாவது' படிச்சுக்கிட்டு ஓய்வு எடுத்துக்குங்க. பாவம். உங்களுக்கும் வகுப்புக்கு வந்து அலைச்சலா இருக்கும். பரிட்சை வேற வருது!!!!

மூணு வாரம் நல்லா ஓய்வெடுத்துக்கிட்டு வாங்க.

அப்ப டீச்சர்....?

உங்களுக்காக ஒரு டூர் போய் மேட்டரைத் தேத்திக்கிட்டு வரேன்.

பத்திரமா இருங்க. டேக் கேர்.

இதுதான் உங்களுக்கு ரிவிஷன் ஹாலிடேஸ்.

54 comments:

தமிழன்-கறுப்பி... said...

நான்தான் முதலாவது..!

தமிழன்-கறுப்பி... said...

அப்ப போய் வந்ததுக்கப்புறம் எக்ஸ்ரா கிளாஸ் நிறைய இருக்கும்போல...

:)

தமிழன்-கறுப்பி... said...

இனிமையான சுற்றுலாவுக்கு வாழ்த்துக்கள் டீச்சர்...

நசரேயன் said...

நல்ல படியா போயிட்டு வாங்க டீச்சர்,உங்க பாடத்திலே இன்னும் நான் அரியர் வச்சி இருக்கேன்

அபி அப்பா said...

ரீச்சர் கடேசி பெஞ்சுல உக்காந்தா காதுவலிக்குமா? எனக்கு காது வலி அதான் 2 கிளாஸ் வரலை:-((

Anonymous said...

நல்ல படியா போயிட்டு வாங்க

கோவி.கண்ணன் said...

பாடம் படிச்சாச்சு......

வெற்றிகரமான மகிழவான பயணத்துக்கு நல்வாழ்த்துகள் !

கோபால் ஐயாவை மணி பர்ஸ் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. பேங்காக் ராசி கற்கள் நினைவு இருக்கட்டும்.

:))))))

Anonymous said...

எஞ்சாய் பண்ணிட்டு வாங்க

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க. வந்துட்டு நல்லா எஞ்சாய் பண்ணுங்க.:)
மூணு வாரமா??????

துளசி கோபால் said...

வாங்க தமிழன்-கறுப்பி.

வாழ்த்துகளுக்கு நன்றி.
எக்ஸ்ட்ரா க்ளாஸைப் பிறகு பார்ப்போம்.
இப்பெல்லாம் பயணக்கட்டுரைகள் எழுத நமக்குப் போட்டியாளர்கள் வந்துட்டாங்க:-))))))))))

துளசி கோபால் said...

வாங்க நசரேயன்.

நிதானமா அரியர்ஸ் முடிக்கலாம். பிரச்சனை இல்லை. வாசிப்பு மட்டுமே வேணும்.

துளசி கோபால் said...

வாங்க அபி அப்பா.

கடைசி பெஞ்சுலே உக்காந்து, டீச்சர் சொல்றதைக் கவனிக்காம அக்கம்பக்கம் சளசளன்னு பேசிக்கிட்டு இருந்தாக் காதுவலி வருமாம். டாக்'குட்டர்' சொன்னார்!!!!

துளசி கோபால் said...

நன்றி கவின்.
மீண்டும் சந்திப்போம்.

துளசி கோபால் said...

வாங்க கோவியாரே.
நீங்கவேற!!!!

கோபால் என் கண்ணைக் கட்டிக் கூட்டிட்டுப் போகப்போறார். கண்பட்டி எல்லாம் பேக் பண்ணி வச்சுருக்கார்:-)

பேங்காக் போகலை....நோ ராசிக் கல்:-)

துளசி கோபால் said...

வாங்க சின்ன அம்மிணி.

நீங்க நல்லா எஞ்சாய் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா?

வந்தவுடன் எழுதுங்க.

துளசி கோபால் said...

வாங்க வல்லி.

3 வாரம் உங்க வீட்டுலேதான் கேம்ப்:-))))

நாங்க ரெடி. நீங்க ரெடியா?:-)))

இலவசக்கொத்தனார் said...

மூணு வாரமா? யார் சாங்க்‌ஷன் பண்ணினாங்க? நான் சரி சொல்லலையே!!

போகட்டும். ஒரேடியா சைலண்டா இருக்காம அப்பப்போ வந்து ஒரு குரல் விட்டுட்டுப் போங்க.

sri said...

Enjoy ur trip mam. expecting to hear from u soon.

துளசி கோபால் said...

வாங்க கொத்ஸ்.

நீங்கதான் இன்சார்ஜ்.

சாவிக் 'கொத்ஸ்' இப்போ உங்க கையில்தான்.

போற இடத்துலே இணையத் தொடர்பு கிடைப்பதைப் பொறுத்து, எட்டிப் பார்ப்பேன்:-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

டூர் நல்லபடியா நடக்கட்டும்.. :)
இப்ப டீச்சர்ன்னு போட்டு யானை அலங்காரமா உலா போகிற படத்தைப் போட்டிருக்கீங்களே.. எத்தனை கல் வச்சி சூப்பரான அலங்காரம் அதுக்கு..

நானானி said...

குரங்கு, யானை, பூனை எல்லாம் சொன்னபடி செய்யும். இதில் மனிதர்களைத்தான் காணோம்!!!அவர்களால் முடியாது என்பதாலா?

இனிய சுற்றுலாவுக்கு வாழ்த்துக்கள்!!!

வெண்பூ said...

நல்ல பயணம் அமைய வாழ்த்துகள் டீச்சர்.. (ஹாப்பி ஜர்னியை இப்படி சொல்லலாமா?)...

M.Rishan Shareef said...

ஐயோ டீச்சர் லீவு விட்டுட்டீங்களே.. :(

சரி..நல்லபடியா, பத்திரமாப் போய்ட்டு வாங்க..வந்து புதுசு புதுசா பாடம் நடத்தணும்.. :)

துளசி கோபால் said...

வாங்க ஸ்ரீவத்ஸ்.

விடுமுறை முடிந்து திரும்ப வரும் வழியில் உங்க ஊர்ப்பக்கமா வருகிறேன்:-)

துளசி கோபால் said...

வாங்க கயலு.

அந்த கல்வச்ச யானை ரொம்ப அழகா இருக்குல்லே!!! அது கோபால் போனமாசம் ஹாங்காங்கில் இருந்து வாங்கிவந்தது. 101 வெள்ளைக்கல் & 1 பெரிய நீலம் பதிச்சு இருக்கு. அதன் வயிறு ஒரு சின்ன பெட்டியாத் திறக்குது.

துளசி கோபால் said...

வாங்க நானானி.
மனுசன் வாயை மூடிக்கிட்டு இருந்துட்டாலும்.........

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

துளசி கோபால் said...

வாங்க வெண்பூ.

தமிழ் 'முழி 'பெயர்ப்பு சரியாத்தான் இருக்கு.
'மகிழ்ச்சியான பயணம்' ன்னு சொல்லலாமோ!!!

துளசி கோபால் said...

வாங்க ரிஷான்.
எனக்கு உங்க ஊருக்கு வந்து 'யானைகள்' பார்க்கணுமுன்னு ஆசை.

எப்ப வாய்க்குமோ தெரியலை.

கிடைக்கணும் என்பது கிடைச்சுரும்:-))))

ராமலக்ஷ்மி said...

பெரிய உடம்புகளை வைத்துக் கொண்டு யானைகள் துதிக்கையை வளைத்து நெளித்து கண், வாய், காதுகளை மூடுகின்றன என்றால் பூனைகள் பாடு அதை விட சிரமப் படுதே:)! பாவம் கடைசிப் பூனைக்கு காது எட்டவே இலலை கைக்கு சாரி:) காலுக்கு!

மூன்று வாரம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் மேடம்.

துளசி கோபால் said...

வாங்க ராமலக்ஷ்மி.

சின்னக் கைகளுக்கு எப்படிப்பா எட்டும்:-))))

வாழ்த்துகளுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

மூணு வாரமென்ன நிறையா மாதமே தங்கலாம்ப்பா. வாங்க் வாங்க,.

கோபிநாத் said...

சரி டீச்சர்..போயிட்டு வாங்க...புது பாடத்துக்கு வெயிட்டிங் ;))

sury siva said...

// மூணு என்ற எண்ணுக்கு உரிய விசேஷ குணங்கள் என்னென்ன? தெரிஞ்சவுங்க சொல்லுங்க பார்க்கலாம்.//


மூணு என்ற‌ எண் ஒரு ஸ்பிரிசுவ‌ல் ந‌ம்ப‌ர் ந்யூம‌ரால‌ஜி ப‌டி, ஆனால், அ ந்த‌ வ‌ரிசையில் அதாவ‌து 3, 6, 9 என்ப‌தில் குறைவான‌ ம‌திப்பு உடைய‌து.

ஒரு மார்ச்‍ பாஸ்ட் போது அணியில் மூணு மூணாக‌ சோல்ஜ‌ர்க‌ள் செல்வார்க‌ள். முப்படை என்பது ஆர்மி, நேவி, ஏர்ஃபோர்ஸ் ஆகியவை ஆகும்.

பிரும்மா, விஷ்ணு, சிவ‌ன் என்ப‌து முத‌ல் மூணு தெய்வ‌ங்க‌ளைக்க்குறிக்கும்.

ப‌டைத்த‌ல், காத்த‌ல், அழித்த‌ல் என்று மூன்று தொழில்க‌ள் இவ‌ர்க‌ள் செய்கிறார்க‌ளாம்.

எ ந்த‌ப்போட்டியிலும் மூணு ப்ரைஸ் உண்டு. ஏங்க‌ மூணாம் பிரைஸ் வாங்கின‌வ‌ன் மாதிரி இருக்கீங்க‌ என்பார்க‌ள். போட்டியில் கோட்டை விட்ட‌வ‌னை மூணாம் பிரைஸ்
வாங்கின‌து போல‌ என்பார்க‌ள். இதே போல் முதல் தரம், இரண்டாம் தரம் என்று சொல்லும்பொழுது, மூன்றாம் தரம் என்றால் அவ்வளவு நல்லது இல்லை என்று அர்த்தம்.

ப‌ழ‌ங்கால‌த்தில் கிராம‌ங்க‌ளில் சுண்ணாம்பு என்று சொல்ல‌மாட்டார்க‌ள். மூணாவ‌து
கொடுங்க‌ என்பார்க‌ள். வெற்றிலை, பாக்கு முத‌ல் இர‌ண்டு. மூன்றாவ‌து சுண்ணாம்பு.

ஜாத‌க‌த்தில் மூன்றாவ‌து பாவம் ச‌கோத‌ரர்க‌ளைக்குறிக்கும். செவ்வாய் கிர‌க‌ம் மூன்றில் இருப்ப‌து திர‌விய‌ லாப‌ம்.

மூன்று எழுத்தில் என் மூச்சு இருக்கும் என்று பிர‌ப‌ல‌மான‌ பாட்டு உண்டு. அது த‌மிழ் ஆகும்.

த‌மிழ‌க‌ ச‌ரித்திர‌த்தில், சேர‌, சோழ‌, பாண்டிய‌ என்னும் மூவேந்த‌ர் ஆட்சி புரி ந்த‌ன‌ர்.

க‌டைசியாக‌, த‌ம‌து பெய‌ர் மூன்று இலக்கத்தைக்‌க்கொண்ட‌வ‌ர் மனித நேயம் மிக்கவர்கள். அன்பானவர்கள். அதிருஷ்ட‌ சாலிக‌ள். உதார‌ண‌ம் துள‌சி.


மீனாட்சி பாட்டி.

தெய்வசுகந்தி said...

இனிய பயணத்திற்க்கு வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

வல்லி,


வா வான்னுட்டுட்டு அப்புறம் துபாய் கிளம்பிரப்போறீங்க:-))))

துளசி கோபால் said...

வாங்க மீனாட்சி அக்கா.

இதுக்குத்தான் பெரியவுங்க வேணுங்கறது. மூணை விதவிதமாச் சொல்லிட்டீங்களே.

சாப்பாட்டுலேகூட குழம்பு, ரசம், மோர்ன்னு மூணு கோர்ஸ் வச்சுருக்கோமே:-))))))

உங்க அன்புக்கு நன்றி அக்கா.

துளசி கோபால் said...

வாங்க தெய்வசுகந்தி.

அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா........ என்ன தெய்வீக மணம்.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

நம்மூட்டுலே சாமிக்கு ஊதுவத்தியும் Tulasi Floraதான்.
சாமி வாசனை!!!!

துளசி கோபால் said...

வாங்க கோபி.

பாடத்துக்கு வெயிட்டிங்????

பலே பலே பேஷ் பேஷ்.

இப்படித்தான் படிப்பிலே 'ஆர்வமா' இருக்கணும்:-)

sri said...

Good to hear that mam, I am travelling to chennai tomorrow 17th would be there till 22nd. Neengay eppo Singapore vareengannu thernija oru hi solla varuven. Transit la vareengalo?

:)

Sri

துளசி கோபால் said...

hi Srivats,

we will be in SG on 5th of March.

Hope to meet some of our friends on 6th.

this could be a pathivar sandhippu:-))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹாப்பி ஹாலிடேஸ் டீச்சர்

உங்க பழைய பதிவெல்லாம் படிச்சு ரிவிஷன் செஞ்சுக்க நல்ல வாய்ப்பு

அந்த கிஃப்ட் மூணுமே சூப்பர்.

அது ஏன்
மூணுமே ஒரே அர்த்தத்தை சொல்றா மாதிரி குடுத்துருக்காங்க.

Vijay said...

போதும் டீச்சர், சீக்கிறம் வாங்க… ரொம்ப லீவ் விட்டா பசங்க காணாம போய்டுவாங்க.

Suresh said...

nalla pathivu nanba, nanum pathivu potu ullan ungala mathiri makkalin asirvathathudan, padithu pidithal potunga vote :-)

sri said...

adada, i missed seeing you

:(

eppo dhaan comments parthen.

erundhalum nalladhukku dhaan,
erumbu kadaila erumbukku enna velai.

LOL

இலா said...

"எப்ப வருவாரோ எந்தன் குறை தீர்க்க" ரீச்சர் சீக்கிரம் வாங்க. ரொம்ப நாளா பதிவு இல்லாதது என்னவோ போலிருக்கு. உடல்நலம் எல்லாம் சுகம் தானே???!!!!!

துளசி கோபால் said...

my dear students.......

missing teacher?

OMG. Thanks

I miss you all......

will be back by next week.

Sorry NO tamil fonts(-:

Jayashree Govindarajan said...

துளசி, ரொம்பநாள் பறந்து போயிட்டதுக்காக ஒரு சின்ன அவார்ட்.

http://mykitchenpitch.wordpress.com/2009/03/13/oh-butterfly/

காட்டாறு said...

இந்த மூணு விஷயம் என் மண்டைய குடைந்தது உண்டு. கெட்ட வழி செல்லாதேன்னு காலுக்கும், பிறர் பொருள் திருடாதேன்னு கைக்கும் ஏன் சொல்லல. ஒரு வேளை இப்படி பொம்மை போட முடியாதுன்னா? உலகம் சுற்றிவிட்டு வந்து எனக்கும் விளக்குங்களேன்.

மீனாட்சி சுந்தரம் said...

இன்று தான் உங்களையும் உங்கள் வலைப்பதிவும் சந்திக்க நேர்ந்தது..மிக்க மகிழ்ச்சி..

priyamudanprabu said...

எல்லாம் மகள், அவ்வப்போதுத் தாய்க்குக் கொடுத்த பிறந்தநாள் பரிசுகள் )///

நல்லாயிருக்குங்கோ

Renie Ravin said...

Hi, I see that you're not a member of IndiBlogger.in. We have 88 blogs in Tamil, and we would like to make it a hundred. :-) Please join in!

david santos said...

Really beautiful posting! This is Art! You are Master! Congratulations!!!
Have a nice week.

துளசி கோபால் said...

வாங்க ஜெயஸ்ரீ.

ஊருலே இல்லாமப்போயிட்டேன். அதான் பரிசளிப்பு விழாவுக்கு வரமுடியலை!!!

நன்றி ஜெ.

துளசி கோபால் said...

வாங்க,
காட்டாறு,
மீனாட்சிசுந்தரம்
பிரியமுடன் பிரபு
ரெனீ

தாமதமாய் பதில் சொல்லுவதற்கு மன்னிக்கணும்.

இப்போதான் பழைய பின்னூட்டங்களைப் பார்த்துக்கிட்டு இருக்கேன்.

கருத்துக்கு ரொம்ப நன்றி

டேவிட் சாண்ட்டோ....உங்களுக்கும்தான்!