Monday, February 02, 2009

இலவசக்கொத்தனாரைப் பத்திப் புரிஞ்சுபோச்சு!!!

அதிர்ச்சிதான்...ஆனா அது இன்பமா துன்பமான்னு நீங்கதான் சொல்லணும்:-) கனவிலே கூட நினைச்சுப் பார்க்கலை இப்படிக் கொத்தனாரின் விஷயங்கள் அம்பலமாகுமுன்னு!!!! இலவசக் கொத்தனாரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைச்சும் விட்டுட்டோமோன்னு வீட்டுக்குவந்தபிறகு மனசு துடிச்சதென்னவோ நிஜம். இன்னும் ஒரு வாரம் வரை இங்கே இருப்பாராம். ஆனால்... நாளை மற்ற நாள் கோபாலுக்குச் சீனப் பயணம் இருக்கு. இவர் வரும்வரை இலவசம் காத்திருக்க வாய்ப்பில்லை. ஆனது ஆகட்டும் மறுநாள் அடிச்சுப்பிடிச்சுப் போய்ப் பார்த்தால்தான் உண்டு.

புட்டுப்புட்டு வச்சது போல மொத்தச் சரித்திரமும் கிடக்கு அங்கே. முதலில் இவுங்களோடச் சின்னம் இப்படியாம். Square & Compasses. இது ரெண்டும்தான் இவுங்க மொராலிட்டிக்கு ( ஒழுங்குமுறை, ஒழுக்க சிந்தனைன்னு தமிழ்ப் படுத்தவா?) அடையாளமாம்.
சின்னம் ( தேர்தலுக்கு நின்னா இதையே வச்சுக்கலாம்)

என்னென்ன எப்படின்னு சரிபார்க்க இவுங்களுக்குன்னு தனியா ஒரு புத்தகமே இருக்கு. இதுதான் இவுங்களுக்கு பைபிளாம். (இந்தியாவில் இருந்தால் ..... ஒருவேளை இதுதான் அவுங்களுக்கான கீதையா இருக்கும்)

1850 வது வருசம் நியூஸியில் செட்டில் ஆகறதுக்காக வந்தாங்க வெள்ளைக்காரர்கள்ன்னு சொன்னது நினைவிருக்கா? வந்து ஒரு வருசம்கூட ஆக்லை வேலையை ஆரம்பிச்சுட்டாங்க இந்த இலவசக் கொத்தனார்கள். அதென்னவோ லாட்ஜ் லாட்ஜா உலகம் பூராவும் கட்டிக்கிட்டு, இதே வேலையா இருப்பாங்க போல.

கேண்டர்பரிக் கொத்தனார்கள் எல்லாம் பெரிய பெரிய பதவியில் இருக்கும் முக்கிய புள்ளிகள். பத்திரிக்கையாளர் ஒருத்தர்கூட இதுலே இருந்துருக்கார். நகரத்தந்தை போட்டுக்கும் பட்டை(காசுமாலை) நெக்லேஸ் போல கண்ணாடிப் பொட்டிக்குள்ளே இருக்கு. அதுக்கு ஒரு பெண்டண்ட் இவுங்க சின்னதோட டிஸைன்லே. குழுத்தலைவர் போட்டுக்குவாரா இருக்கும். அதுக்கப்புறம் வெவ்வேற நிறத்துலே அலங்காரங்கள், அதுலே வெள்ளிக்கொலுசுலே இருக்கும் சலங்கை முத்துப்போல இருக்கு. ( நகை டிஸைன் பண்ணத் தெரியலைப்பா...... )சுருக்கமாச் சொன்னா..... நம்மூர் குஷன் கவர்ஸ்லே இருக்கும் டிஸைன்களாட்டம் என் கண்ணுக்குத் தெரிஞ்சதுப்பா!!(விவரம் கெட்ட டீச்சர் நான்) இதெல்லாம் என்னன்னு சொல்லுங்கன்னு கோபாலைத் தொணப்பிக்கிட்டே இருந்தேன். என்னவோ சொன்னார்...... மரமண்டையில் ஏறலை. இந்தக் குழு ஒருவேளை லயன்ஸ் க்ளப், ரோட்டரி க்ளப் இப்படி இந்த வகையைச் சேர்ந்ததான்னு கேட்டேன். அதுக்கும் ஒரு லெக்சர் அடிச்சார் ( இன்ஷூரன்ஸ் கம்பெனி பத்திரங்களில் பொடி எழுத்துலே சட்டதிட்டம் போட்டுருக்குமே அப்படி) ப்ளெய்ன் இங்லீஷ்லே சொன்னாப் புரிஞ்சு போயிருமாமே!!!!
லாட்ஜ் கட்டுவாங்க, லாட்ஜ் கட்டுவாங்கன்னே சொல்லிக்கிட்டு இருந்தால்.........
உள்ளூர் பெரிய மனுசங்க
நம்மூர்க் கொத்தனார் வச்சுருக்கும் கயித்துலே கட்டுன 'குண்டு' எல்லாம் வச்சுருக்காங்க...........

ஆமா..... கொத்தனார் குழுவிலே விமான ஓட்டிக்கு என்ன வேலை? பறக்கும் வீடு?

எப்படியோ 'நாலுவீடு கட்டுவாங்க' ன்னு நினைச்சுக்கிட்டேன். ( நான் ஒருத்தி...எதுக்கோ தெரியுமா கற்பூர வாசனை? ஐயோ..... பழமொழிவேற கரெக்டா நினைவுக்கு வந்து தொலைக்குது)
நீதிபது ஆர்டர் ஆர்டர்ன்னு தட்டும் மரச்சுத்தியல் இருக்கு.... அதாலே மண்டையில் ரெண்டு போட்டுக்கணுமோ என்னவோ!!!!
பேசாம நம்ம கொத்ஸ் கிட்டே கேட்டால் ஆச்சுன்னு அங்கே காட்சிக்கு வச்சுருந்த எல்லாத்தையும் க்ளிக்கிட்டுக் கொண்டுவந்து இங்கே போட்டாச்சு. இந்தப் பாடம் மட்டும் கொத்ஸ் நடத்துவார். நானும் உங்களில் ஒருத்தியா உக்கார்ந்து கேட்டுக்கணும்.

மண்டை நல்லாவே காஞ்சு போச்சு..... அடுத்த பகுதிக்கு ஓடுனேன், குளிர் பிடிக்க. உங்களுக்காவது புரிஞ்சதுங்களா? இல்லேன்னா நீங்களும் குளிர் புடிக்கக் கூடவே வந்துருங்க.

ஆனா ஒன்னுமட்டும் புரிஞ்சதுங்க...... 'இலவசக் கொத்தனார்' என்றாலே குழப்பம்தான்:-))))))

64 comments:

said...

அன்பு ரீச்சர் அவர்களுக்கு.

எனது பணிவான வணக்கங்கள். இது போன்ற தனிமனிதத் தாக்குதல்களில் தாங்கள் இதுவரை ஈடுபட்டதில்லை, படமாட்டீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது. ஆனால் இப்படி அபாண்டமானக் குற்றச்சாட்டுகளை அடுக்குவீர்கள் என எதிர்பார்க்கவில்லை.

முதலாவது தாங்கள் சென்று பார்த்தபின் எனது விஷயங்கள் அம்பலமாகி இருப்பதாகச் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் இந்த விஷயங்கள் என்னாலேயே இவ்வுலகத்திற்கு சொல்லி இருப்பதை தாங்கள் மறைத்தது ஏன்?

//அதென்னவோ லாட்ஜ் லாட்ஜா உலகம் பூராவும் கட்டிக்கிட்டு, இதே வேலையா இருப்பாங்க போல.//

தமிழர்கள் என்றால் தமிழ் தமிழ் என்று பேசினால் போதும். ஆனால் சரியான தமிழில் பேசவும் எழுதவும் தேவை இல்லை. எழுத்துப்பிழையோடு தமிழில் எழுதினால்தான் தமிழன் என்றே மூளை சலவை செய்யப்பட்ட காரணத்தால் கொத்தனார்கள் என்றால்
என்றால் கட்ட மாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா? கொத்தனார்கள் கட்டுவது என்பது தங்களுக்கு வியப்பினைத் தருகிறதா? ஏஇகொவெ?

இது பற்றி நான் பாடம் நடத்திய பொழுது நீங்கள் பள்ளிக்கு வராமல் மற்ற மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருந்தீர்களே. அதனைப் பற்றி நான் ஏதாவது சொல்லி இருக்கிறேனா? சரி பாடம் நடத்திய பொழுதுதான் வரவில்லை. அதனை எத்தனை முறை ரிவிஷன் க்ளாஸ் எடுத்து இருக்கிறேன். அதற்கேனும் வந்தீர்களா? அல்லது வந்திருந்தாலும் பாடப்பதிவுகளை திறந்துதான் பார்த்தீர்களா?

இப்படித் திறந்தமடலாக இருக்கும் என்னை ஒரு குழப்பவியாதியாகச் சித்தரிக்க தாங்களுக்கு எப்படி மனம் வந்தது?

போகட்டும். படத்தைக் கொண்டு வந்து கொட்டி பாடம் நடத்து என நீங்கள் இட்ட ஆணையை என் சிரமேற்கொண்டு மீண்டும் அந்தப் பாடங்களை நடத்த இச்சுட்டிகளை அளிக்கிறேன்.

http://elavasam.blogspot.com/2006/01/1.html

http://elavasam.blogspot.com/2006/01/2.html

இனியாவது என்னை குழப்பவியாதியாக சித்தரிக்காமல் இருக்க விண்ணப்பிக்கிறேன்.

இப்படிக்கு உங்கள் மாணவன்

இலவசக்கொத்தனார்.

said...

அன்பு ரீச்சர் அவர்களுக்கு.

எனது பணிவான வணக்கங்கள். இது போன்ற தனிமனிதத் தாக்குதல்களில் தாங்கள் இதுவரை ஈடுபட்டதில்லை, படமாட்டீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது. ஆனால் இப்படி அபாண்டமானக் குற்றச்சாட்டுகளை அடுக்குவீர்கள் என எதிர்பார்க்கவில்லை.

முதலாவது தாங்கள் சென்று பார்த்தபின் எனது விஷயங்கள் அம்பலமாகி இருப்பதாகச் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் இந்த விஷயங்கள் என்னாலேயே இவ்வுலகத்திற்கு சொல்லி இருப்பதை தாங்கள் மறைத்தது ஏன்?

//அதென்னவோ லாட்ஜ் லாட்ஜா உலகம் பூராவும் கட்டிக்கிட்டு, இதே வேலையா இருப்பாங்க போல.//

தமிழர்கள் என்றால் தமிழ் தமிழ் என்று பேசினால் போதும். ஆனால் சரியான தமிழில் பேசவும் எழுதவும் தேவை இல்லை. எழுத்துப்பிழையோடு தமிழில் எழுதினால்தான் தமிழன் என்றே மூளை சலவை செய்யப்பட்ட காரணத்தால் கொத்தனார்கள் என்றால்
என்றால் கட்ட மாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா? கொத்தனார்கள் கட்டுவது என்பது தங்களுக்கு வியப்பினைத் தருகிறதா? ஏஇகொவெ?

இது பற்றி நான் பாடம் நடத்திய பொழுது நீங்கள் பள்ளிக்கு வராமல் மற்ற மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருந்தீர்களே. அதனைப் பற்றி நான் ஏதாவது சொல்லி இருக்கிறேனா? சரி பாடம் நடத்திய பொழுதுதான் வரவில்லை. அதனை எத்தனை முறை ரிவிஷன் க்ளாஸ் எடுத்து இருக்கிறேன். அதற்கேனும் வந்தீர்களா? அல்லது வந்திருந்தாலும் பாடப்பதிவுகளை திறந்துதான் பார்த்தீர்களா?

இப்படித் திறந்தமடலாக இருக்கும் என்னை ஒரு குழப்பவியாதியாகச் சித்தரிக்க தாங்களுக்கு எப்படி மனம் வந்தது?

போகட்டும். படத்தைக் கொண்டு வந்து கொட்டி பாடம் நடத்து என நீங்கள் இட்ட ஆணையை என் சிரமேற்கொண்டு மீண்டும் அந்தப் பாடங்களை நடத்த இச்சுட்டிகளை அளிக்கிறேன்.

http://elavasam.blogspot.com/2006/01/1.html

http://elavasam.blogspot.com/2006/01/2.html

இனியாவது என்னை குழப்பவியாதியாக சித்தரிக்காமல் இருக்க விண்ணப்பிக்கிறேன்.

இப்படிக்கு உங்கள் மாணவன்

இலவசக்கொத்தனார்.

said...

மீ த பஸ்ட்டூ!!!!!!!!!

கொத்தனாரைப்பத்தி டப்பா புழுங்சிட்டிடீங்க டீச்சர்.

said...

அய்யய்யோ !!

எழுத்துப்பிழையோட்டிட்டேனே!!

பரவாயில்லே.!!

ஆனாலும் கொத்ஸ் மனசை புரிஞ்சுக்காம
இப்படி எதிர்க்கட்சி ரேஞ்சுக்கு அவரை
இப்படி நூடில்ஸ் ஆக்குவீங்கன்னு,அவர் பாட்டுக்கு ஏதாவது தனிக்கட்சி இல்லாட்டி
தனி ஸ்கூல் ஆரம்பிக்கப்போறார்.

said...

வாங்க கொத்ஸ்.

நினைத்தேன் வந்தாய் 100 வயசு!!!!!

டீச்சர் உங்க பாடத்தை மிஸ் மட்டுமா செஞ்சேன்? புரிஞ்சுக்க முடியாத குழப்பத்துலேயும் இருந்தேனேப்பா.....

ஆனாலும் நம்ம மாணவர் என்ர பெயருக்காகவே விழுதடிச்சு ஓடுனேனே பார்க்க!!!!1
இந்த (நல்ல) எண்ணத்தைப் புரிஞ்சுக்க முடியலையா?

டீச்சரும் ஒரு மாணவியேன்னு உங்க பாடங்களைப் படிக்க ஆரம்பிச்சுட்டேன்.

நோ ஒர்ரீஸ்......

( இப்பத் தமிழ் சரியா எழுதிட்டேனா இல்லையா?)

said...

வாங்க பெருசு.

கொத்தனாருன்னதும் இப்படி உணர்ச்சிவசப்பட்டுக் குழறுவீங்கன்னு எனக்குத் தெரியாமப்போச்சே......

said...

//கொத்தனார்கள் என்றால்
என்றால் கட்ட மாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா?//
கண்ணாலம் கூட கட்ட மாட்டாங்களா என்ன?

said...

துளசி

எனக்குப் புரியலே - இருந்தாலும் பாத்துட்டேன் - அப்புறம் படிக்கறேன் - இ.கொவோட அந்த ரெண்டு சுட்டியும் பாத்தேன் - அதுலெ உங்க மறு மொழியும் பாத்தேன். புதசெவி.

கொஞ்சம் பொறுமையாப் படிக்கறேன் - வர்ட்டாஆஆஆஆஆ

said...

எதிர்பார்த்துதான் வந்தேன். நினச்ச மாதிரியே கொத்தனார்களைப் பத்தி நிறையவே சொல்லியிருக்கீங்க. இன்னமும் நிறைய இருக்குங்கோவ்.

- இந்த மாதிரியான brotherhood எல்லாம் பாகனிய மதத்தின் பாதிப்பில் உருவானதுன்னு சொல்லுவாங்க.

- நம்மூர் அரசியல் கட்சிகள் சினிமாக்காரங்களை தேடிப் போய் சேக்கிற மாதிரி, இந்த அமைப்பில் உள்ளவங்க பெருந்தலைகளை தேடிப் பிடிச்சு பட்டம் கொடுத்திடுவாங்க. பல celeberities பேருக்குதான் freemason. உண்மையில் நிறைய தெரியாது அவங்களுக்கு.

- எதுக்கெடுத்தாலும் சம்பிரதாயம், சடங்குன்னு ஏகப்பட்ட நியமங்கள் இருக்கும். நிழலான காரியங்கள்னா பழைய பாகனிய சம்பிரதாயங்கள், தேவதை வழிபாடல்கள், நம்மூரு அதர்வன வேத சடங்குகள் மாதிரி நிறைய நடத்துவாங்க. எல்லாம் Church-க்கு எதிரான ஒரு rebel ஆசைதான்.

நம்ம பதிவர் கொத்தனார் நடத்துற குறுக்கெழுத்து எல்லாம் freemasonry சடங்குகள்ல வராது :-)

Angels & Daemons திரைப்படமா வருதாம். அப்புறம் இலுமினாட்டி, ஓபஸ் டே பெயர்கள்ல பதிவர்கள் வந்தாலும் வரலாம் :)

said...

ஹிஹிஹி, காலங்கார்த்தாலே நல்லா இருக்கு! அப்புறம் கொத்தனாரின் நெடுநாளைய ரசிகை என்ற முறையில் அவருக்கு ஒரு ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏஏ போட்டுக்கறேன், அவர் எனக்குச் செஞ்ச துரோகத்தைக் கூட நினைச்சுப் பார்க்காம! :P:P:P:P:P:P:P

கொத்தனாரின் துரோகத்துக்குப் பார்க்க http://sivamgss.blogspot.com/2009/02/blog-post_02.html

said...

பதிவை படிச்சி எதிர்ப்பு தெரிவிக்கலாமின்னு வந்தேன்... ஒன்னுமே தேறலையே ரீச்சர்.. :))


BTW.... போன பதிவுக்கு நான் மைனஸ் குத்து குத்தல.... :)

said...

நான் இன்னைக்கு கடைசி பெஞ்சுல படுத்து தூங்கிக்கட்டா.. எனக்கு மயக்கமா வருது வயித்த வலிக்கறாப்பல இருக்கு டீச்சர்.. ( பிள்ளைங்க எப்பவும் எக்ஸ்யூஸ் கேட்டு இப்படித்தான் தூங்குங்க.. நான் ஒரு முறை கூட செய்ததில்லை இந்த வகுப்பில் ட்ரை செய்துகட்டா)

said...

ஹாஹ்ஹா! உண்மையை இப்படி உலகறிய போட்டு உடைச்சதுக்கு நன்றி. அதுவும், போன வீராங்கனை பதிவுக்கு அப்புறமும் இந்த வெளிப்படையான பதிவுக்கு, நான் என்னுடைய ஆதரவை இங்கிருந்து தெரிவித்துக் கொண்டு, இரண்டு ப்ளஸ்கள் குத்தப்படும் என்றும் தெரிவித்து அமைகிறேன்.

அடுத்தது ஹாட் ட்ரிக்கா?

(பத்த வைச்சாச்சு!:-)))))))))

said...

இதுக்கும் ப்ளஸ் குத்திட்டேன் டீச்சர்.ஆஹா இப்படி எல்லாம் கொத்தனாரை கொத்தி(அந்த ”கொத்து” அல்ல)எடுப்பிங்கனு தெரிஞ்சிருந்தா நானும் ஜீட் விட்டிருப்பேன் ஆனா எனக்கு முன்னால கயல் வேற வயத்து வலினு சொல்லிட்டாங்க.....ஹி ஹி ஹி என்னையும் கடைசி பென்ச்சில் சேர்த்துடுங்க டீச்சர்

said...

நல்லா கிளப்புறீங்க டீச்ச்சர் பீதிய :)

said...

நீங்களும் கொத்ஸும் என்ன பாடம் எடுத்தாலும் இலவசக்கொத்தனாரை புரிந்து கொள்ளவே முடியவில்லையே :(
இது ஆப்சன் சப்ஜெக்ட் தானே (...நானும் தமிழ் கற்றுக்கொள்கிறேன்) ?

said...

//நம்மூர்க் கொத்தனார் வச்சுருக்கும் கயித்துலே கட்டுன 'குண்டு' எல்லாம் வச்சுருக்காங்க...........//

ரீச்சர்! சுத்த தமிழ்ல சொல்லனும்ன்னா அதுக்கு பேர் "பிளம்பாப்" ஆங்கிலத்திலே "தூக்கு குண்டு"ன்னு சொல்லுவாங்க:-))

said...

டீச்சருக்கு தலை வலிச்சா "டேய் வந்து இந்த பாடத்தை நல்ல சத்தமா படி, நான் உக்காந்து கேக்குறேன்"ன்னு ஜகா வாங்கி முத்துலெஷ்மியாட்டம் கடேசி பெஞ்சிலே போய் தூங்குவாங்க. இதுவும் அதே போல தான் இருக்கு! கொத்ஸ் பாடம் நடத்த போய் எதுனா ஆகிட போவுது ரீச்சர் எங்களுக்கு:-))

said...

// இராம்/Raam said...
பதிவை படிச்சி எதிர்ப்பு தெரிவிக்கலாமின்னு வந்தேன்... ஒன்னுமே தேறலையே ரீச்சர்.. :))


BTW.... போன பதிவுக்கு நான் மைனஸ் குத்து குத்தல.... :)//

இல்ல ரீச்சர்! ராம் தான் குத்தினான். நான் பார்த்தேன்!

said...

Hello Thulasi Mam,

I happen to be here last week and started reading everything you wrote.

I feel like living next door, I have celebrated pillayar chadhurthi, new year , krishna jayanthi, travelled with you to Fuji. celebrated marriage.

I was born and brought up in chennai, never had a chance to experiance village life. Thanks to you I thoroughly enjoyed ur "marthadi ninaivugal" post.

Your blog is the first thing I open when I get connected to internet. Very much captivating.

Simple, childlike attitude, humorous, good hearted, sensitive to emotions, easy going, loving, caring, Empathtic.. ennum nerya sollalam , ungala pathi ..

Very happy to be here. Please keep writing and if possible make it as book.

One more place has joined my list of places to visit :)

Endrum Anbuden , your new student
Sri

said...

நல்லா தான் க்ளிக்கியிருக்கீங்க.. இதெல்லாம் எந்த ஊர் எந்த இடமுனு சொன்னா என்னைப் போல கிணத்துத் தவளைங்களுக்கும் கொஞ்சம் நாக்கு நீளும் பாருங்க? அப்படியும் வால் நுழைஞ்சாப்புல தான் புரியும்னு வையுங்க.

said...

ஏன் இப்படி நக்கீரன், தமிழ் முரசு மாதிரி பரபரப்பு தலைப்பு வைத்து கூட்டம் சேர்க்க முயற்சி செய்கிறீர்கள் என்று புரிய வில்லை.

சத்தியமாக நான் பதிவர் இலவச கொத்தனார் சந்திப்பு பற்றி பதிவு இருக்கும் என்றுதான் வந்தேன், ஏமாற்றம் அடைந்தேன், பதிவை முழுதாக படிக்க கூட மனம்/ ஆர்வம் இல்லை. மன்னிக்கவும்.

குப்பன்_யாஹூ

said...

ரீச்சர்..

வன்மையாகக் கண்டிக்கிறேன்..

இதுவரையில் ஒரு குடிசை வீட்டைக்கூட கட்டிக் காண்பித்திராத நமது இலவசக் கொத்தனாரின் சுயரூபத்தைக் காட்டுகிறேன் என்று சொல்லி இப்படியா செய்வது..?

நான் இன்றைக்கு மெடிக்கல் லீவு..? வாந்தி, பேதி, வயித்துவலி, கால்வலி, தலைவலின்னு எல்லாம் ஒண்ணா சேர்ந்து வந்திருக்கு..

லீவு கொடுங்க ரீச்சர்..

said...

\\ குப்பன்_யாஹூ said...
ஏன் இப்படி நக்கீரன், தமிழ் முரசு மாதிரி பரபரப்பு தலைப்பு வைத்து கூட்டம் சேர்க்க முயற்சி செய்கிறீர்கள் என்று புரிய வில்லை.

சத்தியமாக நான் பதிவர் இலவச கொத்தனார் சந்திப்பு பற்றி பதிவு இருக்கும் என்றுதான் வந்தேன், ஏமாற்றம் அடைந்தேன், பதிவை முழுதாக படிக்க கூட மனம்/ ஆர்வம் இல்லை. மன்னிக்கவும்.

குப்பன்_யாஹூ
\\

பார்ரா பார்ரா! குப்பன் தம்பி, இப்ப்புடித்தானே இருந்ட்திருக்கும் நீங்க மானாட ம்மயிலாடன்னு போஸ்ட் போட போது! ஓடி வந்து பார்த்தோமே , அடப்பாவி ஒரு போட்டோ கூட போடலைய்யா நீர்! என்ன கொடுமை குப்பன் தம்பி!!

வர வர்ர ரீச்சர் எல்லாம் கெட்டு போனதுக்கு நம்ம மாதிரி ஸ்டூடண்ட் நம்பர் 1 தான் காரணம் போல இருக்கு:-))

குப்பா, டோண்ட் பீ சீரியஸ், சும்மா ஊலுலுக்காக :-))

said...

யோவ் உனா தனா! கொத்ஸ் 'குடிசைகட்டின"தை எல்லாம் சொல்ல இங்க என்ன பாரதிராசா படமா எடுத்துகிட்டு இருக்கு! வயத்து வலி ஆளுங்க எல்லாம் கடேசி பென்ச், ஓக்கே:-))

said...

சாரி டீச்சர் நேத்து ராத்திரி படத்துக்கு போயிட்டேன் அதான் நீங்க பாடம் நடத்தும் போது தூங்கிட்டேன்...ஆஆஆஆஆஆஆ ;)

said...

\\அபி அப்பா said...
// இராம்/Raam said...
பதிவை படிச்சி எதிர்ப்பு தெரிவிக்கலாமின்னு வந்தேன்... ஒன்னுமே தேறலையே ரீச்சர்.. :))


BTW.... போன பதிவுக்கு நான் மைனஸ் குத்து குத்தல.... :)//

இல்ல ரீச்சர்! ராம் தான் குத்தினான். நான் பார்த்தேன்!
\\

கஷ்டகாலம் அபி அப்பா உங்க கூட...உங்களை கூட வச்சிக்கிட்டு ஒன்னும் செய்யமுடியல ;)

said...

//BTW.... போன பதிவுக்கு நான் மைனஸ் குத்து குத்தல.... :)//

இல்ல ரீச்சர்! ராம் தான் குத்தினான். நான் பார்த்தேன்!//

அபி அப்பா சொன்னா சரியாத் தான் இருக்கும்! :)))) ஹிஹிஹி!!

என்ன டீச்சரும் லீவு எடுத்துட்டாங்களா?
\\

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !!

said...

துள்சி!!இந்த கொத்தனார்களுக்கு தலைவரா எங்கூரிலே அப்பா, அண்ணாச்சி,சின்னண்ணன் எல்லோரும் தலைவரா இருந்திருக்காங்க. அது என்ன ரகசியமோ? பொண்டாட்டிக்கிட்டே கூட சொல்லமாட்டாங்களாமே?பொத்திபொத்தி வச்சுக்குவாங்க. பைபிள் மாதிரி ஒர் பொஸ்தகம் வச்சிருப்பாங்க. 'லாட்ஜ் மீட்டீங்'போறதுக்கு முன் பரீட்சைக்குப் படிப்பது போல் படிப்பாங்க. ரசியமா எடுத்துப் பிரித்துப்பார்த்தால் ஒரு எழவும் புரியாது. அப்பா சூட் போட்டுப்பார்த்தது இந்த மீட்டிங்குக்ககத்தான். நீங்கள் காட்டிய அந்த அலங்காரங்கள் எல்லாம் வீட்டிலிருக்கும் அதுக்கான ப்ரீஃகேஸ் மாதிரியான மரப் பொட்டிக்குள்.
சின்ன அண்ணன் தன் ஹைநெக் கோட் பட்டன் மாட்ட என்னிடம்தான் வருவான். 'என்ன ரசியம் சொல்லு..அப்பத்தான் பட்டன் போடுவேன்.' என்பேன். ஹூஹும் அசையமாட்டானே! சிரித்து மழுப்பிவிட்டுப் போய்விடுவான்.
மீட்டிங் மிடிந்து எல்லோரும் 'பாட்டில்களை'த் திறக்கும் நேரம் அப்பா அங்கிருந்து வெளியேறி விடுவார். அந்த உடையில் அப்பா எடுத்துக்கொண்ட போட்டோ கூட என்னிடம் இருக்கு.

சமீபகாலங்களில் அதனுடை கௌரவம், கம்பீரம் எல்லாம் கலைந்துவிட்டது...காரணம் தெருவுக்கு ஒரு லாட்ஜ் வந்துவிட்டதே!

யாரும் தொடாத, யாருக்கும் தெரியாத, புரியாத ஒரு பாடம் நடத்திவிட்டீர்கள்.
ஸ்ரீதர் நாராயணனுக்கு கொஞ்சம் புரிஞ்சமாரி இருக்கு.

said...

வாங்க இளா.

//கண்ணாலம் கூட கட்ட மாட்டாங்களா என்ன?//

அச்சச்சோ.... இன்னும் கட்டலையா?

said...

வாங்க சீனா.

நானும்தான் புரிஞ்சு 'போச்சு'ன்னு சொல்லி இருக்கேனே:-)
நிதானமா வாங்க. இன்னிக்கு வகுப்பு நம்ம கொத்ஸ்தான் எடுக்கறார்!

said...

வாங்க ஸ்ரீதர் நாராயணன்.

//எல்லாம் Church-க்கு எதிரான ஒரு rebel ஆசைதான்.//

அதான் இவுங்க 'லாட்ஜ்'களாக் கட்டி விடுறாங்க போல!!!!

ஆனா ரெண்டு இடத்துலேயும் பொதுவான ஒன்னு 'கூடல்'தானே:-)

said...

வாங்க கீதா.

நம்ம கொத்ஸ் இதைக் கொஞ்சம்கூடத் தப்பாவே எடுத்துக்கலை.

பள்ளிகள், கல்லூரிகளுக்கு மட்டும் காலவரையற்ற விடுமுறையா?

நம்ம வகுப்புக்கும் ஒரு நாள்.........

விடணும்தானே?

said...

வாங்க இராம்.

எதிர்ப்புத் தெரிவிக்கும் அளவுக்கு என்ன இருக்கணுமாம்? அதைச் சொல்லக்கூடாதா?

போனபதிவு..... நம்பிட்டேன்:-)

said...

வாங்க கயலு.

//பிள்ளைங்க எப்பவும் எக்ஸ்யூஸ் கேட்டு இப்படித்தான் தூங்குங்க.. நான் ஒரு முறை கூட செய்ததில்லை இந்த வகுப்பில் ட்ரை செய்துகட்டா)//

ஒருமுறைகூட செய்யலைன்றது ஒரு காரணமா?

அண்ணாத்தைக்கிட்டே போட்டுக் கொடுக்கணும் போல:-)

said...

வாங்க கெக்கே பிக்குணி.

அடுத்த பதிவும் ஆண்களைப் பத்திதான்:-)

said...

வாங்க சிந்து.

இன்னிக்குக் கடைசி பெஞ்சு ஹவுஸ் ஃபுல்:-)

said...

வாங்க நான் ஆதவன்.

ரகசியச் சங்கம் விஷயமா பீதியைக் கிளப்புது??? அச்சச்சோ.....

said...

வாங்க மணியன்.

நீங்கெல்லாம் நல்லாப் புரிஞ்சுக்கணுமுன்னுதான் இன்னிக்கு கொத்ஸ் வகுப்பு எடுக்கறார்!!!!

said...

வாங்க அபி அப்பா.

தூக்குக் குண்டா? பேஷ் பேஷ். பெயர் பொருத்தமா இருக்கே.

கொத்ஸ் இன்றைய ஆசிரியர் என்பதால் எல்லாரும் வகுப்புலே 'அடக்கமா' இருங்க.

பக்கத்துப் பையர்களிடம் என்ன கலாட்டா?:-)

said...

வாங்க ஸ்ரீவத்ஸ்.

காலையில் கேலண்டர்தாள் கிழிச்சப்பவே நம்ம ராசிக்குப் 'புதுவரவு' ன்னு போட்டுருந்துச்சு.

மகிழ்ச்சியா இருக்கு எனக்கு உங்க பின்னூட்டம் பார்த்து.

புத்தகம் போடணும்தான். இன்னும் 997 பேர் கிடைச்சால் போட்டுருவேன்.

மூணு பேர் ஏற்கெனவே புக்கை புக் செஞ்சுட்டாங்க.
1. டிபிஆர் ஜோசஃப்.
2. நீங்க.
3. நம்ம கோபால்:-)

கூட வர்றதுக்கு நன்றிப்பா.

said...

வாங்க அப்பாதுரை.

எல்லாம் பூலோகம்தான். நீங்க 'தர்மனின்' இடமுன்னு நினைச்சுக்கிட்டீங்களா?

பூலோகத்தில் இதை நியூஸிலாந்து என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.

said...

வாங்க குப்பன் யாஹூ.

ஒரிஜனலா நினைச்சு வச்சுருந்த தலைப்பைக் கேட்டால் என்ன சொல்வீங்களோ?

'கொத்தனாரின் ரகசியங்கள் அம்பலம்'

said...

வாங்க உண்மைத் தமிழன்.

எல்லா வலியையும் சொல்லிட்டுக் கால்வலியை விட்டுட்டீங்களே!!!
15 கிலோ மீட்டர் நடப்பதுன்னா சும்மாவா?

லீவு சாங்ஷண்டு:-)

said...

இன்னிக்கு வகுப்புத் தலைவர் வகுப்பு எடுப்பதால் அவர் போஸ்ட்டுக்கு அபி அப்பா செல்ஃப் அப்பாய்ண்டட்:-)

said...

வாங்க கோபி.

கடைசி பெஞ்ச் 'ஃபுல் பெஞ்சா'க் கிடக்கு.
'வாய்தா '
வேணுமுன்னா வாங்கிக்குங்க:-)

said...

வாங்க மணியன்.

நன்றி. உங்கள் சகோதரிக்கும் பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்துக்களை நான் சொன்னதாகச் சொல்லுங்கள்.

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் துளசி.

said...

துள்சிக்கு என் இனிய, மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!

இன்று போல் என்றும் பாடம் குழப்பி...மன்னிக்கவும் நடத்தி மாணவர்கள் அனைவரையும்(கடைசி பெஞ்ச் உட்பட) தேத்திவிடவும் வாழ்த்துகிறேன்!!!!!

said...

கடைசி பெஞ்ச்சுக்கு இந்த அடிதடி நடக்குது. குப்ஸ்கிட்ட வகுப்பு பிடிக்கலைன்னா வேற ஸ்கூலுக்கு போயிட சொல்லுங்க. :)

said...

வாங்க நானானி.

உண்மையான கொத்தனார் குடும்பமா நீங்க!!!!

லாட்ஜ் என்ற பெயருக்கு இப்ப வேற 'அர்த்தம்' ஆனதால் ரகசிய லாட்ஜ்க்கு கம்பீரம் குறைஞ்சுருச்சோ என்னவோ?

பொம்பளைகளைச் சேர்த்துக்கிட்டு இருந்தால் ரகசியம் காப்பாற்றப்பட்டிருக்கும் இல்லையா?

அட்லீஸ்ட்....நெக்லேஸை இன்னும் நல்லா டிஸைன் செஞ்சுருப்போம்.

said...

கீதா & நானானி,

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

எதோ நம்மால் ஆனவரையில் குட்டையைக் குழப்பியே தீருவதுன்னு முடிவே செஞ்சுட்டேன்:-)))))

said...

வாங்க சின்ன அம்மிணி.

ஒரு மாணவரை இழக்கவும் முடியாது. அது குப்ஸ்ஸே ஆனாலும் சரி.

இனிமேல் வகுப்புக்கு ஹெல்மெட் சப்ளை செய்யலாமுன்னு இருக்கேன்.

பாடம் ப/பிடிக்கலைன்னா....போட்டுக்கிட்டு 'ஓய்வு' எடுக்கலாம்!!!!

said...

நான் லீவு போட்டாச்சு, பதினைந்து நாட்களுக்கு! டீச்சர் பாடம் நடத்தினதும், கடைசி பெஞ்ச் மாணவர்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கறேன். :D

said...

Always my pleasure, Thanks for accepting me to the class :P

Sri

said...

இத்தனை விஷயம் இருக்கா:)

அடடா கொத்தனார்கள் பற்றித் தெரிஞ்சுக்க ஒரு விளக்கப் பாடம் நடத்திட்டாங்க டீச்சரம்மா.

அவரு கொடுத்த சுட்டிகளையும் பார்த்தேன். நீங்க போட்ட படங்களையும் பார்த்தேன் டிசின் டிசினா என்னாமா கட்டி இருக்காங்க,. அது குஷன் கவர் டிசினா இருந்தாக் கூட எல்லாமே நல்லாத்தான் இருந்தது. ஆகக் கூடி இன்னா பிரியதுன்னா, செல்லப் பிள்ளையை உசத்திவச்சு புகழ் பாடவே டீச்சரம்மா பதிவு போட்டுட்டாங்கன்னு தான்::))))))
பிறந்த நாள் வாழ்த்துகள் துளசி.

said...

//துளசி கோபால் said...
வாங்க மணியன்.
நன்றி. உங்கள் சகோதரிக்கும் பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்துக்களை நான் சொன்னதாகச் சொல்லுங்கள்.//

நன்றி டீச்சர். ஒரு சிறுதிருத்தம். உங்களுடன் பிறந்தநாளைப் பகிர்வது அடியேனே. அதனால் உங்கள் வாழ்த்துகளை நானே எடுத்துக் கொண்டேன்:))
உங்களுடன் திருமணநாளைப் பகிர்வது தான் எனது தங்கையாகும்.

said...

என்னங்க கீதா.

மறுபடியும் சிங்கம் பார்க்கப் புறப்பாடா?

said...

ஸ்ரீவத்ஸ்,
புதுமாணவர்கள் விருப்பப்பட்டு வகுப்புக்கு வந்தால் வேணாங்கலாமா?

கடைசி பெஞ்சு வேணாம்தானே? :-))))

said...

வாங்க வல்லி.

'தெரிந்த பெயர் தெரியாத விவரமுன்னு' தெரிஞ்சுக்கவே ஓடினேன் :-)))

நன்றிப்பா.

said...

மணியன்.

நம்ம (பதிவர்) குடும்பத்துலே குழப்பம் செஞ்சுட்டேனே....... அட!ஒன்னாவா பொறந்துருக்கோம்!!!!

நல்லா நினைவு வச்சுக்கணும்.

உங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லிக்கறேன்.

said...

கொத்தனார்க்கும் டீச்சர்க்கும் லடாய் என்ற ஆவலில் ஓடோடி வந்த என்னை ஏமாற்றிவிட்டீர்களே...
:-)

said...

இங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites/