Thursday, January 29, 2009

குழந்தைங்க..... படு ஸ்மார்ட்.

இன்னும் நாமெல்லாம் இங்கே அருங்காட்சியகத்தில்தான் சுத்திக்கிட்டு இருக்கோம்,நினைவிருக்குல்லே? பாவாச் சிப்பி சேகரிக்க இவ்வளோதூரம் வந்தது வந்தோம். இன்னும் ஒரு எட்டுவச்சா அண்டார்ட்டிக்காவுக்கே போயிறலாம். ஹைய்யோ.......... இப்படி ஒரு குளிரா?குளிர் கூடுதலாத்தான் இருக்கும். அதுக்கு நாம் என்ன செய்யறது? அது அப்படித்தான். போற வழியிலேயே கடல் சிங்கங்கள், கடல்புறாக்கள், அல்பட்ராஸ், பெங்குவின் வகைகள் எல்லாம் பார்த்துக்கிட்டே போகலாம். ஓமரு என்ற ஊரில் பெங்குவின் பறவைகள் காலனி இருக்குன்னாலும் அதெல்லாம் நம்மூர்க் கோழி சைஸில் இருக்குதுங்க. அண்டார்ட்டிக் பகுதிகளில் எம்பரர் பெங்குவின்கள் ஆளுயரத்தில் கம்பீரமா நிக்குதே. பேரரசர் என்ற பட்டம் பொருத்தம்தான். 'அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்' இங்கே இதுக்குப் பொருத்தமா இருக்காது. துயரமான வாழ்க்கைன்னா இதைத்தான் சொல்லணும். ஒருமுறை இந்தப் பறவைகளின் விவரணப்படம் ஒன்னு பார்த்துட்டுப் பெருகிவந்த கண்ணீரை அடக்கவே முடியலை. இயற்கையின் படைப்பில் உள்ள விசித்திரத்தில் இதுவும் ஒன்னு.

இந்தப் பகுதிக்குப்போகும் வழியில் தாற்காலிகக் கண்காட்சியா உள்ளூர் பத்திரிக்கை ஒன்னு ஒரு முப்பதுவருசக் கணக்கைக் காமிச்சுக்கிட்டு இருந்துச்சு. ஆடுவாங்கி மேய்ச்சு ஒரு பண்ணை உண்டாக்கணுமுன்னு ஆசையோடு இங்கே வந்த ஒருத்தர் ஆடுவாங்கக் காசு இல்லாமப் பப்ளிஷரா தினசரிப் பத்திரிக்கை ஒன்னை, The Press ஆரம்பிக்கவேண்டியதாப் போச்சு. 1861லே.. ஒரு கம்பெனியா, வெறும் 500 பவுண்டு காசு முதலீடு செஞ்சு ஆரம்பிச்சது இன்னிக்குக் கணக்குக்கு 148 வருசமாகுது. காலைப் பத்திரிக்கையா இருக்கு. இப்போ இந்த ப்ரெஸ் அலுவலகத்தில் 'த மெயில்' ன்னு ஒன்னு வாரம் ரெண்டு முறை வெளிவரும் மாலைப் பத்திரிக்கையும் நடத்தறாங்க. இந்த மெயில் பத்திரிக்கை முற்றிலும் இலவசமா எல்லா வீடுகளுக்கும் வந்துருது. காலைப் பத்திரிக்கை மட்டும் காசு கொடுத்து வாங்கிக்கணும். நானோ கருமி நம்பர் ஒன்னு. எல்லா சேதிகளும், வலையிலும், ஓசிப் பத்திரிக்கையிலும், தொலைக்காட்சியில் மூணு நாலு சானலில் ஒரு பத்துப் பதினைஞ்சுமுறையும் வந்துருதே...எதுக்குக் காசை தேவையில்லாமச் செலவு செய்யணுமுன்னு வாதிப்பேன்.

இந்த ப்ரெஸ் பத்திரிக்கையைத் தவிர்த்துக் 'கிறைஸ்ட்சர்ச் ஸ்டார்'ன்னு ஒன்னு மாலை நேரத்துப் பதிப்பா ஒரு 20 வருசம் முந்திவரை வந்துக்கிட்டு இருந்துச்சு. விற்பனை சரி இல்லாம அதை மூடிறலாமான்னு நினைச்சப்ப, புதுசா ஒரு உத்தி கண்டுபிடிச்சப் புண்ணியவானுக்கு நன்றி சொல்லி மாளாது. இதையும் இலவசப் பத்திரிக்கையாவே ஊர் முழுசும் விநியோகிக்கறாங்க. அப்ப வருமானம்? எல்லாம் விளம்பரம்தான். ஒவ்வொரு வீட்டுக்குள்ளிலும் போகமுடியுதேன்னு இதுலே விளம்பரம் கொடுக்குதுங்க அநேகமா எல்லா நிறுவனங்களும். தவறாமல் புதனும், வெள்ளியும் வந்துருது. . பேப்பர் போடும் பசங்க சிலநாள் சோம்பேறித்தனமா இருந்துட்டு, மறுநாள் காலையில் போட்டுட்டுப் போவாங்க. தொலையட்டுமுன்னு விடறதுதான். ஆனா சில நாள் வராமலேயேப் போனா ஓசிப் பத்திரிக்கைதானேன்னு.... , இருக்கமாட்டேன். போன் அடிச்சுச் சொல்லி அதெல்லாம் கறாரா வாங்கிருவேன்:-) எனக்காகவா இதெல்லாம்? நெவர்! பாவம், கோபால். பேப்பர் படிக்கணுமுன்னா உசுரு. (அதென்ன, ஆம்பளைங்களுக்குத்தான் இப்படிப் பேப்பர் பைத்தியம் இருக்கோ?
'ஆண்களும் தினசரிகளும்' என்ற தலைப்பில் ஒரு பதிவாப் போடுமளவு விஷயம் இருக்கு. ஒருநாள் எழுதுனால் ஆச்சு. இப்போ ப்ரெஸ்ஸைக் கவனிக்கலாம்)


1940 முதல் 1970வரை இருந்த காலக்கட்டத்தில் நடந்த சம்பவங்கள், சேதிகள் வாழ்க்கை நிலவரம், அப்போ வெளியான பதிப்புகள்ன்னு ஒரு சின்ன ஹால் முழுக்க வச்சுருந்தாங்க. நம்ம கன்னிமாராலே இருப்பது போல தினசரிகளை பைண்ட் பண்ணி வச்சுருந்துச்சு. (இப்பெல்லாம் சேமிப்புகளைத் தாளா வைக்காம எல்லாத்தையும் மைக்ரோ ஃப்லிமா மாத்தி ரீல்ரீலா வச்சுருக்காங்க. நம்ம ப.மு. (பதிவராகுமுன்) காலத்தில் ஒரு நாள் பத்திரிக்கை அலுவலகம் இயங்கும் முறையைப் பார்த்துருக்கேன்.)
வால் பேப்பர் மாதிரி முதல் பக்கத்தைப் பெரூசாக்கி ஒட்டிவச்சுருந்தது படிக்கச் சுலபமா இருந்துச்சு. இங்கே ஹைலைட் என்னன்னா கண்காட்சி வைக்கும் காலம் முழுக்க, அன்றன்று வெளியாகும் தினசரியை ஒரு இடத்தில் ( ஒரு 100 காப்பி இருக்கும்) வச்சுட்டு, இலவசமா எடுத்துக்கோ எடுத்துக்கோன்னு கெஞ்சறதுதான்:-) ஒருத்தர் மனம் நோகப் பொறுக்கமாட்டார் எங்க கோபால். பேப்பரை எடுத்த கையோட ஒரு இருக்கையில் அமர்ந்து படிக்க ஆரம்பிச்சுட்டார். திருத்தவே முடியாது(-:
இந்தக் கண்காட்சி இருக்கும்வரை சோம்பல் பார்க்காம தினம் ஒருநடை வந்து தினசரியை எடுத்துக்கிட்டுப்போனா நல்லா இருக்குமுல்லே? நான் மட்டும் 'பறவைகளைப் பிடிச்சுக்கிட்டு' அடுத்தபகுதிக்குப் போனேன்.





ஆல்பி பாப்பா

அடுத்த ஹாலில் 'ஆசியக் கலைகள்'ன்னு சீனப் பொருட்கள். ரெண்டு பெரிய சிங்கங்கள் வரவேற்கும் முகமா எதிரும் புதிருமா. அதுக்குள்ளே இவரும் வந்து சேர்ந்துக்கிட்டார். இந்த ஹாலை முந்தி எப்பவோ அவசர அடியில் பார்த்தேன் இன்னிக்குக் கொஞ்சம் விலாவரியாப் பார்க்கணுமுன்னு இருந்தேன், அதுக்கே பொறுக்கலை போல.
ஒரு சின்னப் பொண்ணு மூணு மூணரை வயசு இருக்கும் அழுதுக்கிட்டே வந்து கோபால் பக்கத்துலே நிக்குது. இந்தியக் குழந்தைதான். பெயர் சுஜாதாவாம். அம்மா, காணாமப் போயிட்டாங்களாம். கோபாலின் இளகுன மனசுக்கு வந்த சோதனை......குழந்தையை ஒரு கையில் பிடிச்சுக்கிட்டு அது காமிச்ச திசையில் ஓடிக்கிட்டு இருக்கார். ஏழெட்டு ஹாலைத் தாண்டி, மாடிப்படிகளில் இறங்கி கீழ் தளத்தில் ரெண்டுபேரும் ஓடறதை வேடிக்கைப் பார்த்துக்கிட்டேப் பின் தொடர்ந்து போய்க்கிட்டு இருக்கேன். கடைசியா அவுங்க போய் நின்னது கட்டிடத்தின் மறு கோடியில் இன்னொரு மாடிப் படிக்கட்டின் அருகே. நீங்களே ஏறிப்போங்கன்னு நான் நின்னுட்டேன். ஏன்? இந்தப் படிக்கட்டுப் போய்ச் சேரும் இடம் அந்தச் சீனச் சிங்கம் பக்கத்துலேதான். அம்மா, அங்கே இருந்த ரெஸ்ட் ரூமுக்குள்ளே நுழைஞ்சதைப் பொண்ணு கவனிக்கலை. திடுக்கிட்டுப்போன குழந்தை, கரெக்ட்டா ஒரு(அப்பாவி) இந்தியனை வந்து பிடிச்சுச்சு பாருங்களேன். இப்பத்துக் குழந்தைகள் படு ஸ்மார்ட்!!!!
மூச்சு வாங்கிக்கிட்டு நிற்பவரைப் பார்த்தால் பரிதாபமா இருந்துச்சு. 'ஆறு பிள்ளைங்களோட என்னையும் ஒருசமயம் இதே மியூஸியத்துலே தொலைச்சுட்டாங்க'ன்னு சொன்னதும் இவருக்கு ஆச்சரியமாப் போச்சு. 'கண்டுபிடிச்சுட்டாங்களே கடைசியில்' ன்னு இவரோட உள்மனசுலே ஒரு துக்கம் இழையோடுனதா எனக்கு தோணுச்சு.

50 comments:

said...

மீ த ஃபர்ஷ்ட்டூ ...

said...

//கரெக்ட்டா ஒரு(அப்பாவி) இந்தியனை வந்து பிடிச்சுச்சு பாருங்களேன். இப்பத்துக் குழந்தைகள் படு ஸ்மார்ட்!!!!//

இது சூப்பர் :)

said...

ஆண்கள் உள்ளாடையுள் எறும்புகளை விட்டு வேடிக்கை பார்க்கும் பெண் பித்தளைத்தனத்தை வன்முறையாகக் கண்டிக்கிறோம்.

said...

ஹிஹி, பெண் வீராங்கனைக்கு வீர வணக்கம் (கொத்ஸ் பின்னூட்டத்துக்கு பதில்).

பெங்குவின் படத்தையெல்லாம் பாத்தா, அங்க ஒரு எட்டு (பத்து) நாங்க வரலாம் போலிருக்கே!

பசங்க விவரமான பசங்க தான். அப்புறம் திரும்பி, "இந்த அங்கிள் பாவமா போரடிச்சுட்டு இருந்தார், அதான் கொஞ்சம் போக்குக் காமிக்கலாம்"னு அம்மா கிட்ட சொல்லியிருக்குமோ!

ஆம்பளைங்க இந்த நியூஸ்பேப்பர்ல தலைய விட்டா, பொம்பளைங்க கிட்ட காதைக் கொடுக்காம தப்பிக்கலாங்கறதுக்காகன்னு என் தீர்மானமான எண்ணம்.

said...

//இலவசக்கொத்தனார் said...
ஆண்கள் உள்ளாடையுள் எறும்புகளை விட்டு வேடிக்கை பார்க்கும் பெண் பித்தளைத்தனத்தை வன்முறையாகக் கண்டிக்கிறோம்.
//

அந்த படத்தை பார்த்ததும் எனக்கு அப்பிடிதான் கமெண்ட் தோணுச்சு... பின்னூட்ட பக்கத்துக்கு வந்தா தானை தலைவர் கொத்ஸ் முன்னாடியே பின்னூட்டம் போட்டுட்டாரு... :))


இந்த‌ அராஜ‌க‌த்துக்கு எதிர்ப்பு தெரிவிப்ப‌து குறித்து எங்க‌ள் செய‌ல் குழுவில் முடிவு எடுக்க‌ப்ப‌டும்... :)

said...

வாங்க சதங்கா.

பசங்க உண்மையாவே டூஊஊஊ க்ளவர்!!!!

said...

வாங்க கொத்ஸ்.

அதென்னவோ தெரியலை நியூஸ் பேப்பர் காட்சி இருந்த பக்கத்துச் சுவரில் இந்த எறும்புகளும் உள்ளாடையும் இருந்துச்சு!!!! காரணமில்லாமலா ம்யூஸியம் ஆளுங்க இதைக் காட்சிக்கு வச்சுருப்பாங்க?

Ants in pants இருந்தது குழந்தைகளுக்கானப் பகுதி:-))))

இது இருக்கட்டும், நம்ம பதிவுக்கு ரெண்டு மைனஸ் குத்து விழுந்துருக்கு பார்த்தீங்களா!!!!!

said...

வாங்க கெக்கே பிக்குணி.

என்னப்பா வீரம்? ரெண்டு மைனஸ் ஆகிருச்சு:-)))))

said...

வாங்க இராம்.

வகுப்புலே பசங்க முழிச்சுக்கிட்டு இருக்காங்களான்னு பார்க்க இப்படி(யும்) ஒரு சோதனை!

said...

present teacher

said...

கண்டிப்பா தோணியிருக்கும்...

said...

/இது இருக்கட்டும், நம்ம பதிவுக்கு ரெண்டு மைனஸ் குத்து விழுந்துருக்கு பார்த்தீங்களா!!!!!//

ஒடுக்கப்பட்ட ஆணினத்தை கேலி செய்யும் பொருட்டு இருக்கும் வன்முறை படத்துக்காகவே கோடிக்கணக்கான குத்துக்கள் விழ வேண்டியது...
ரெண்டுதானே விழுந்துருக்கு... :)

ஆனா இதே நான் குத்தலை... :))

said...

//ஆடுவாங்கி மேய்ச்சு ஒரு பண்ணை உண்டாக்கணுமுன்னு ஆசையோடு இங்கே வந்த ஒருத்தர் ஆடுவாங்கக் காசு இல்லாமப் பப்ளிஷரா தினசரிப் பத்திரிக்கை ஒன்னை, The Press ஆரம்பிக்கவேண்டியதாப் போச்சு.//

என்னாது ஆடு மேய்க்க முடியாம பத்திரிக்க ஆரமிச்சாரா??? எங்கூர்ல பத்திரிக்கை ஆரமிச்ச ஒருத்தர் சரியாப் போகாம இப்ப ஆடு மேச்சுக்கிட்டு இருக்காரு :)))

said...

அம்மா எம்.எம்.அப்துல்லான்னவுடனே யாரோன்னு நினைக்காதீங்க. வழக்கமான அப்துல்லாதான். நம்ப பிளாக் ஹிருடப்பட்டதாலே இந்த புது ஐ.டி :))

said...

யாரந்த மைனஸ்னு தெரியாதா? அவங்க தானே இங்க எதிர்ப்பு தெரிவி்ச்சு கமெண்டினது! சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு! அவங்க தங்கமணிகளுக்குச் சொல்லிடலாம்.

:-)

said...

ரீச்சர்

இந்த மைனசுக்கு எல்லாம் அஞ்சறவங்களா நாம! உங்க பாடமாகட்டும் என் புதிராகட்டும் இதுக்கு எல்லாம் மைனஸ் குத்தறவங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்திடலாம்.

இதனை வைத்து நுண்ணரசியல் செய்ய முயலும் கெபி அக்காவே இந்த காரியத்தினை செய்ததாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன!

said...

//'கண்டுபிடிச்சுட்டாங்களே கடைசியில்' ன்னு இவரோட உள்மனசுலே ஒரு துக்கம் இழையோடுனதா எனக்கு தோணுச்சு.//

பாவம் டீச்சர் அவரு

said...

பிக்சர்ஸ் கலக்கலா இருக்கு.

said...

\\இது இருக்கட்டும், நம்ம பதிவுக்கு ரெண்டு மைனஸ் குத்து விழுந்துருக்கு பார்த்தீங்களா!!!!!
\\

நான் அவனில்லை!

said...

ஆனா துபாய்ல எறும்பு தொல்லை இல்லை! ஆனா மூட்டைபூச்சி தான்! மீடிங்க சில சமயம் சில பேர் "எஸ்கியூஸ் மீ"ன்னு நெளிஞ்சுகிட்டே போகும் போது எனக்கு என்னன்னவோ கேட்க தோணும்:-)

said...

ரீச்சர் போனபதிவிலே என் க்விஸ்க்கு நீங்க சரியாபதில் சொல்லலை! அது கீதாம்மா! ஸோ அதனால உங்களுக்கு தண்டனை கொடுத்தாச்சு:-)))

said...

இந்தமாதிரி நண்டுகளைப் பார்த்ததேயில்லையேன்னு குழப்பத்தோடு பின்னூட்டத்துக்கு வந்தா கொத்தனார் எறும்புன்னு சொன்னதும் சுரீர்.இப்படியும் எறும்பு பார்த்ததேயில்லை.வித்தியாசமான கற்பனையும் படமும்:)

said...

பதிவில் சார் நல்லவர் வல்லவர்ன்னு புகழ்ந்திருக்கீங்களே.. என்ன கேமிரா வாங்கித்தந்துட்டாங்களா இல்லையா இன்னும்..? :)

said...

அந்த சீனத்து சிங்கத்தைப்பார்த்து என் வீட்டுக்காரி கேட்கிறாங்க:

" ஏங்க ! அது மூஞ்சியை கவனிச்சீகளா ! ஏதோ ஒரு மூஞ்சி நினைவுக்கு
வருதுல்ல..."

" எனக்குத் தெரியல்லையே ! " என்றேன் அப்பாவியாக.

" தெரியலையா ! நல்லாப்பாத்து சொல்லுங்க.. ஆஞ்சு ஓஞ்சு போய்
உக்க்கார்ன்து இருக்குல்ல‌..? இப்ப‌வ‌னாச்சும் ஞாப‌க‌ம் வ‌ருதா > "

என்ன‌ சொல்கிறாள் என்ப‌து லேசாக‌ புரி ந்த‌து. இருப்பினும்
" இல்லையே ! " என்றேன்.

" என்ன இல்லையே ! என் மாமனாரை அப்படியே உரிச்சு வச்சுருக்கு !" என்கிறாள்.

லயன்ஸ் நீட் நாட் டு ரோர் என்னும் வாசகம் நினைவுக்கு வருகிறது.

சுப்பு ரத்தினம். http://vazhvuneri.blogspot.com

said...

துளசி ரீச்சர்.. எப்படி இப்படி வரிக்கு வரி நகைச்சுவை இழையோடுது. எனக்கு பிடிச்சது கடைசி பாரா :))

Anonymous said...

//அப்பாவி) இந்தியனை //

டீச்சர் நீங்களும் ஸ்மார்ட்தான். அதே அப்பாவி இந்தியனை கைப்பிடிச்சிருக்கீங்களே !!!

said...

நானும் வந்துட்டேன் டீச்சர்..”எல்லாம் நல்லபடியா முடிச்சிட்டு”.

க்ளாஸ் ரூமே மாறிதான் போயிருச்சு,பதிவு பெரியதா இல்லை பின்னூட்டம் பெரியதானு பட்டிமன்றம் வெக்கற ரேன்ச்சுக்கு போயிருச்சு.தான் தான் லேட் போல இருக்கு.அது என்ன டீச்சர் மைனஸ் குத்து?

said...

இராம்,

நம்பிட்டேன்:-)

said...

வாங்க மிஸஸ்.டவுட்.

எறும்பில்லாத இடமாப் பார்த்து உக்காருங்க!

said...

வாங்க நரேன்.

அப்டீங்கறீங்க? நோ டவுட்!

said...

வாங்க அப்துல்லா.

வீட்டையேத் திருடிட்டாங்களா?
அடடா.... பேசாம ப்ரெஸ்ஸிலே போட்டுறலாமா?

இங்கே ஆட்டுப் பண்ணைகள் ஒவ்வொன்னும் லட்சக் கணக்கான ஆடுகளை வச்சுருக்கே.

மொத்த ஜனத்தொகைக்கும் ஆளுக்கு 12 ஆடு வீதம் இருக்கு:-)

said...

கெக்கேபிக்குணி,
தங்கமணிகளுக்கு எதைச் சொல்லலாமுன்னு சொல்றீங்க?

எறும்பு இருப்பதையா? :-)

said...

கொத்ஸ்,

என்ன் மாதிரிப் போராட்டமுன்னு கொஞ்சம் தீவிரமா யோசிக்கணும்.

பதற்றத்துலே எதாவது வேண்டாததா இருந்துறப்போகுது......

said...

வாங்க நான் ஆதவன்.

பாவமா?

ஆமாமாம். ஆண்பாவம் கூடாதுல்லே:-))))

said...

வாங்க ராம்சுரேஷ்.

நன்றி.

ஆமாம் எந்தப் படமுன்னு குறிப்பாச் சொல்லலாமுல்லே:-)))))

said...

வாங்க அபி அப்பா.

நம்பிட்டேன்.

அந்தச் சூட்டுக்கு மூட்டை தாங்குதா!!!!

தண்டனையை 'அனுபவித்தேன்' :-))))

கீதா என்ற சரியான விடையைச் சொன்னதுக்கு நன்றி!!!!

said...

வாங்க நடராஜன்.

Ants in Pants ஒரு போர்டு கேம்.

இன்னும் Bed Wetas ன்னு கிறிஸ்மஸ் தாத்தா படுக்கை முழுசும் இருக்கும் Weta பூச்சிகளும், க்ரீப்பி க்ராவ்லீஸ் ன்னு என்னென்னவோ வச்சுருக்காங்க.

இந்த வேடா பூச்சிகள் நியூசியில் மட்டுமே இருக்காம்!

said...

வாங்க கயலு.

பாருங்க நான் புகழறேன்னு நீங்க சொல்றீங்க. நம்ம நான் ஆதவன் அவர் பாவம்னு சொல்றாரு!!!!

கேமெரா எல்லாம் நானே போய் வாங்கிப்பேன். பில் மட்டும்தான் அவருக்குப் போகும் :-)

said...

வாங்க சுப்பு ரத்தினம்.

ரொம்பச் சரி.

லயன்ஸ் நீட் நாட் ரோர்!!!!

பார்வையாலேயே அடக்கிப்புடலாம்,இல்லே?

said...

வாங்க இலா.

சிரித்து வாழவேண்டுமைக் கூடியவரைக் கடைப்பிடிச்சு, நம்ம பொழப்புச் சிரிப்பாச் சிரிக்குது இப்போ:-))))

said...

வாங்க சின்ன அம்மிணி.

சாதாரண இந்தியனை அப்'பாவி' ஆக்குனதே நாந்தான்ப்பா:-)))))

said...

வாங்க சிந்து.

விருந்தினர் எல்லாம் திரும்பிப் போயாச்சா?

ப்ளஸ் குத்தாத ஆளுக்கு மைனஸ் எங்கே தெரியப்போகுது?

இனிமே நம்ம பதிவுகளுக்கு + குத்துங்க.

சரியாக் குத்துனீங்கன்னா ஒரு நாள் மைனஸ் பத்திச் சொல்றேன்:-)))

said...

ப்ளஸ் கண்டுபிடிச்சு குத்திட்டேன் டீச்சர்..இப்ப மைனஸ் பத்தி சொல்லுங்க.

said...

எப்படி ரீச்சர் இவ்வளவும் பாக்கறிங்னக இவ்வளவும் எழுதறிங்க ..

said...

கொத்தனாரோட கமன்டுக்கு ரிப்பீட்டு போடலாமா... :)

said...

"அதென்ன, ஆம்பளைங்களுக்குத்தான் இப்படிப் பேப்பர் பைத்தியம் இருக்கோ?" இப்பொழுது, கம்பியூட்டர், இணையம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என இங்கு சில பெண்கள் சொல்கிறார்கள்.

said...

//துயரமான வாழ்க்கைன்னா இதைத்தான் சொல்லணும். ஒருமுறை இந்தப் பறவைகளின் விவரணப்படம் ஒன்னு பார்த்துட்டுப் பெருகிவந்த கண்ணீரை அடக்கவே முடியலை. இயற்கையின் படைப்பில் உள்ள விசித்திரத்தில் இதுவும் ஒன்னு.//

என்ன டீச்சர் இது? கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன்.

said...

வாங்க தமிழன் - கறுப்பி.

நான் பார்த்ததையெல்லாம் உங்களோடு பகிர்ந்துக்கும் ஆர்வம்தான் வேறென்ன?:-)))

said...

வாங்க டொக்டர் ஐயா.

வருகைக்கு நன்றி.

பெண்களும் பேப்பர் படிப்பாங்கதான். ஆனால் முக்கியமான பகுதிகள் மட்டுமே எங்க கண்களில் படும்:-))))

இணையம், கணினி எல்லாம் இப்ப இருபாலருக்கும் பொது!

said...

வாங்க விஜய்,

ரொம்பத் தாமதமா இந்தப் பதிவின் பின்னூட்டங்களுக்குப் பதில் தரும்படி ஆகிவிட்டது.

மன்னிக்கணும்.