Thursday, January 15, 2009

நரசிம்மராவின் சிரிப்பும் பாலிவுட் சினிமாவும்

கலையைச் சந்திக்கக் கிளம்புனவுங்க கலைஞர்களைச் சந்திப்போமுன்னு யார் கண்டா? வருசத்தின் கடைசி நாள். பகல் சாப்பாடு ஆனதும் வெளியே கொஞ்சம் ஊர்சுத்தலாமுன்னு எண்ணம். அருமையான வெய்யில் பாழாக்கலாமா?
நண்பர் தொலைபேசி, 'ரெண்டுநாள் லீவு கிடைச்சது. தமிழ்ப்படங்கள் வந்து வாங்கிக்கவா'ன்னார். ஆஹா.... வாங்கன்னேன். ஆனா வர்றதா இருந்தா உடனே வாங்க. மத்தியானம் வெளியே போகணும். வந்தார். பேச்சுவாக்கிலே நேத்து ஒரு பெரிய க்ரூப் ஃப்ல்ம் ஷூட்டிங்குக்கு வந்துருக்காங்கன்னார். நண்பருக்கு உள்ளூர் பன்னாட்டு விமானதளத்தில் வேலை. யார் நாயகன் & நாயகின்னதுக்கு ..... தெரியலைன்னார். ஹைதராபாத்லே இருந்து வந்துருக்காங்க. போகட்டும், ஏதோ தெலுங்குப்படம்.....

திட்டப்படிப் புறப்பட்டாச்சு. புது ஆர்ட் காலரியை இன்னும் கோபால் பார்க்கலை. புதுசு என்ன புதுசு. இதுவே ஆரம்பிச்சு அஞ்சரை வருசமாச்சு. முந்திச் சின்னதா ஹேக்ளித் தோட்டத்தின் ஒரு பகுதியில் எங்க அருங்காட்சியகத்தையொட்டிய கட்டிடத்தில் இருந்துச்சு. இப்ப ரொம்ப மாடர்னா 47.5 மில்லியன் டாலர் செலவில் பிரமாண்டமாக் கட்டி வச்சுருக்காங்க. ரெண்டே நிலைதான். மனசுக்குள்ளே இலவசப் பார்க்கிங் இடங்களை ஓடவிட்டப்ப........ ஊஹூம். அஞ்சு நிமிச நடையில் ஒரு இடம் இருக்கு அங்கே வண்டியைப் போட்டுட்டுப்போகலாம் எப்படியும் நகரமையத்துக்குப் போய்த்தானே ஆகணும்? பார்க்கிங் கட்டிடத்துக்குப் பக்கத்தில் பளிச் பளிச் பளிச். ரிஃப்ளெக்டர்களும் டிஃப்யூஸர்களும் பிரமாண்டமான வெள்ளித் தகடுகளும், சின்னக் கூட்டமும்...புரிஞ்சுபோச்சு.

"என்ன இந்தப் பக்கம் கால் திரும்புது? ஆர்ட்கேலரி போகவேணாமா? '

' அஞ்சு நிமிசம், யாரு என்னன்னு விசாரிச்சுட்டுப் போலாம்.'

படப்பிடிப்புக் குழுவினருக்கு உள்ளூர் கோஆர்டினேட்டர் நம்ம அண்ணியின் குடும்பம்தானேன்னு பார்த்தால் எல்லாரும் அங்கேயே இருக்காங்க குட்டீஸ் உள்பட. சிலமாசங்களாப் பார்க்காததால் கொஞ்சம் வீட்டுவிஷயங்களைப் பேசிட்டுப் படப்பிடிப்புக் குழுவினருடன் என்ன ஏதுன்னு விசாரிச்சோம்.
(குட்டீஸ், நல்லா ஷூட்டிங் பார்த்து வச்சுக்குங்க. நாளைக்குப் பெரிய ஹீரோக்களா வரணும். நடிப்பு? அம்மா சொல்லித்தருவாங்க. அப்படி அவுங்க சொல்லித் தரலைன்னா...... நான் இருக்கேன். நடிக்கவா தெரியாது எனக்கு? நான் 'ட்ராமாக்வீன்'னு மகள் சொல்லிக்கிட்டு இருக்காள்)

ஹிந்திப் படமாம். புது நாயகன் & நாயகி. கதாநாயகன் இன்னும் வந்து சேரலை. ஜெயந்த்ன்னு தெலுங்கு இயக்குனர். சொந்தப் படம். தெலுங்கு டப்பிங் உண்டாம். நாயகியின் கூட ஆடும் சில இளம்பெண்கள் உள்ளுரில் நமக்குத் தெரிஞ்ச மக்கள்தான். "ஹலோ ஹலோ ஹலோ....."

கெமராக்கள் ரெண்டு நிக்குது. ஒன்னு ஸ்டெடி கெமெராவாம். அதை இயக்குபவர் நம்ம நரசிம்மராவ்.
"என்னங்க , இப்படிப் பேரைவச்சுக்கிட்டுச் சிரிச்சுக்கிட்டு நிக்கறீங்க?"

"அவர் கட்டை வேகலைங்க. ரெண்டுவாட்டிக் கொளுத்தும்படி ஆயிருச்சு. அதான் சிரிச்சுக்கிட்டே இருக்கேன்."

"நெசமாவாச் சொல்றீங்க?"

"ஆமாங்க. எரிச்சு முடிச்சு மறுநாள் அஸ்தி எடுக்கப்போனால் நெஞ்சுப் பக்கம் எல்லாம் சரியா வேகலையாம். இன்னொருக்கா..."

த்சு த்சு...பாவம். அந்த மனுஷருக்கு என்னமாதிரி மன அழுத்தமோ? எல்லாப் பக்கமிருந்தும் போட்டுத் தாக்குனாங்களோ என்னவோ!!!!

எந்த ஊர்ங்க? என்ன சென்னையா? சென்னையில் எங்கே? வழக்கமான கேள்விகள்.

புரசைவாக்கம்.( அட! நம்ம கேஆரெஸ் வீடு இருக்குமிடம்) பின்னி மில்லில் ஷூட்டிங் நிறைய நடக்குது போல இருக்கே. ஆமாங்க. எங்க அப்பா அந்த மில்லில்தான் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தார். (ஓட்டேரி நரி? நினைவுக்கு வந்துச்சு)
ஸ்டெடி கெமராவைப் பார்த்துக் கோபாலுக்கு பயங்கரப் பரவசம். லேசாத் தொட்டுப் பார்த்தார்.

"எத்தனை கிலோ கனம்? "

" ஒரு முப்பது கிலோ இருக்குங்க"

" இதைத் தூக்கிவச்சுக்கவே தனியா பயிற்சி எடுத்துக்கணும்போல இருக்கே"

"இதுதான் முதல்முறையா இங்கே நியூஸி வர்றது? வேற என்னென்ன படம் செஞ்சுருக்கீங்க?" இது நான்.

"ஆமாங்க. நிறையப் படங்களில் வேலை செஞ்சுருக்கேங்க. ஒரு 150 இருக்கும்"

"சிலபடங்கள் பெயரைச் சொல்லுங்க."

"அப்படிச் சட்னு சொல்லமுடியலைங்க. இண்டியன், சிவாஜி இப்படி நிறைய......"

நரசிம்மராவ் என்ற பெயர் டைட்டிலில் வந்துச்சோன்னு மனசுக்குள்ளே சிலபடங்களை ஓட்டிப்பார்த்தேன் (ஆனாலும் என் ஞாபகம் மேலே இவ்வளவு அசாத்திய நம்பிக்கை எனக்கே ஆகாது)
சரி. உதவியாளர்கள்ன்னு வந்துருக்கும்.....

"எங்கே வேலை இருக்கோ அப்பப்போப் போய் செஞ்சு கொடுப்பதுதாங்க. இந்தப் படத்துக்குக்கூட ஒரு மாசம் ஃபாரீன் ஷூட்டிங்னு சொல்லித்தான் வந்தேங்க."
அதுக்குள்ளேப் பக்கத்துக் கேமெராவைக் கவனிச்ச கோபால், 'அட! வெங்கடேஷ் படம் இதுலே ஒட்டி இருக்கு'ன்னதும் அதை இயக்குபவர், ' இது அவரோட சொந்தக் கேமெராதாங்க. அதான் நானும் வரவேண்டியதாப் போச்சு. இது என்னோட பத்தாவது ட்ரிப் இங்கே'ன்னார்.

'அப்ப என்னைப் பார்த்துருக்கீங்களா?' -நான்.

"ஆமாங்க எத்தனையோ முறை பார்த்திருக்கேனே பார்ட்டியிலே எல்லாம். சாம்பார்........" (போச்சுரா)

டான்ஸ் மாஸ்டர் யாரு? அட! நம்ம ப்ருந்தா!!!
எதிர்வரிசை நடைபாதையில் நாயகிக்கு நடன அசைவு செஞ்சு காமிச்சுக்கிட்டு இருந்தவங்க, இங்கே நாங்க நிக்கிறதைப் பார்த்துட்டு வந்தாங்க. நம்ம தோஸ்துதான். பார்த்துச் சிலவருசங்களாச்சு. அவுங்க கல்யாணத்துக்கு அப்புறம் (அதாச்சு 4 வருசம்) இப்பத்தான் பார்க்கிறேன். கொஞ்சம் சதை போட்டுருக்காங்க. .(ரங்கமணி சமையல் நல்லா இருக்கும் போல) அவுங்க கணவரும் வந்துருக்கார். வேலை இதே லைனான்னு கேட்டேன். ஊஹூம்.... பொட்டிதட்டும் வேலையாம்.
கலாவோட குழந்தை நல்லா இருக்கா? ப்ரஸன்னா இப்போ என்ன செய்யறார்ன்னு சில குடும்ப விஷயங்களைப் பேசுனோம்.தமிழ்நாட்டுச் செய்திகளை விசாரிச்சதும். 'நீங்க எல்லாம் இப்படி எங்களுக்கு முந்தி அப் டு டேட்டா இருக்கீங்களே'ன்னாங்க. நம்ம (புது) பொழைப்பு இணையத்தில் தூங்கி எழுந்திரிப்பது இவுங்க:ளுக்குத் தெரியாதுல்லே.....
(மகளுக்குக் குடைபிடிக்க அம்மாவும் வந்துருக்காங்க)

நாயகி, பார்த்தால் ரொம்பச் சின்னப் பொண்ணு. (சைல்ட் லேபர்?) ஒல்லியா உடைஞ்சு விழுந்துரும்போல இருக்காங்க. சப்போர்ட்டுக்கு நான் வேணாப் போகலாமான்னு இருந்துச்சு. நவநாகரிக ஆடை அணிகலன்(???) ஐயோன்னு எனக்கு மனசுலே பட்டது. ஒருவேளை திரையில் இந்த உடை & அணி ஜொலிக்குமோ என்னவோ................

படத்தின் பெயர் 'லவ் ஃபார் எவர்'. 'தமிழ்ப்படமா இருந்தால்தான் தலைப்பு'க்குக் கவலைப்படணும், இல்லே?

சரி. வெய்யில் இருக்கு. வந்த வேலையைப் பாருங்கன்னு சொல்லிட்டுக் கிளம்புனோம். அப்புறம் ஒருநாள் சந்திச்சால் ஆச்சு. அதான் ஒரு மாசம் இங்கே டிக்கானாவாச்சே!!!!

எல்லாருக்கும் 'ஹேப்பி நியூ இயர்' சொல்லியாச்சு. ஆனால்.... இன்னும் ராத்திரி பன்னெண்டாகலைன்னு சொல்றாங்க எங்க ஊர் மருமகள் (முன்னாள் நடிகை)
இன்னிக்கு இரவுதான் இங்கே சதுக்கத்தில் விழா இருக்கே, அப்ப வந்து சொல்றேன்னேன். ஆனால் சோம்பல், பார்க்கிங் இருக்காதுன்னு சிலபல காரணங்களால் போகலை. (வருசப்பிறப்புக்கு வேற நிகழ்ச்சி ஒதுக்கிட்டேன் அதை அப்புறம் பார்க்கலாம். ஆர்ட் கேலரி போகலையான்னு அங்கே யாருங்க கேக்கறது. ஆங்..... யாரும் கேக்கலையா? போயிட்டுப்போகுது நானே சொல்லிக்கறேன், போனோம். அதுவும் அப்புறம்....)

சினிமாவைக் கையோடுச் சொல்லி முடிச்சுறலாமே...அப்புறம் கண்டின்யூட்டி போயிறப்போகுது!!!!!

ஒருநாள் இடைவெளிவிட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை, வெளியே போய் ஹனுமான் போடும் சாப்பாட்டைச் சாப்புடலாமுன்னு 'கோவிந்தாஸ்' உணவுவிடுதிக்குப் போனோம். சிட்டிமால் பக்கத்துலே இருக்கு. வண்டியைப் பார்க்கிங்லே போட்டுட்டு வெளியே வரும்போதே, காலையில் இருந்த குளிர் போய் வெய்யில் நல்லா வந்துக்கிட்டு இருக்கு. ஷூட்டிங் வந்தவங்களுக்கு ஏத்தமாதிரி காலநிலை இருக்குன்னு சொல்லிக்கிட்டே மாலுக்கு வர்றோம், எதிரில் நரசிம்மராவ். அதுவும் சிரிச்ச முகத்தோட! இன்னும் ஹீரோ வரலையாம். காலையில் ஏழுமணிக்கே படப்பிடிப்பு நடத்தக் கிளம்புனாங்களாம். ஆனா....பயங்கரக்குளிர்!!!!

'ஹாஹா....இதுவே பயங்கரக்குளிருன்னா இன்னும் ரெண்டு நாளில் க்வீன்ஸ்டவுன் போறீங்கல்லே.... அங்கே உண்மையாவே குளிர் நடுக்கும்'ன்னு சொல்லி நம்ம பங்குக்குக் கொஞ்சம் பயமுறுத்துனோம். இந்திய சினிமா உலகம் பூராவும் நம்ம தமிழ் டெக்னீசியன்கள்தான் நிறைஞ்சுருக்காங்க.


ரெண்டு நிமிசம் பேசிட்டு ஹனுமானைப் பார்க்கப்போனோம். சாப்பாடு ஒன்னும் சரி இல்லை. முந்தி நம்ம ஹரே க்ருஷ்ணா நடத்திக்கிட்டு இருந்தாங்க. இப்ப தனிப்பட்ட முறையில் ஹனுமார் நடத்துறாராம். உள் அலங்காரம் எல்லாம் பரவாயில்லை, கண்ணாடி மேசையெல்லாம் போட்டுருக்கு. ஆனால் சாப்பாடு..... ஊஹூம்...... விலைக்கு ஏற்ற தரம் இல்லவே இல்லை. (ஒரு படம் போட்டுருக்கேன்.நீங்களே பார்த்துக்குங்க)





சாப்பாடு முடிச்சு வெளியில் வந்தால் முந்தி பார்த்த இடத்துலே இருந்து ஒரு பத்து மீட்டர் தள்ளி படப்பிடிப்பு நடந்துக்கிட்டு இருக்கு. போறவர்ற ஆட்களைக் கூப்புட்டு(முக்கியமா இளசுகளை) அங்கங்கே படத்துக்குக் கோர்த்துவிடறாங்க.
ஸ்டெடி கேமெரா வச்சு ஷூட் பண்ணுவதைக் கொஞ்ச நேரம் பார்த்தோம். உண்மையைச் சொன்னால் படப்பிடிப்பு வேடிக்கை பார்ப்பது மகா போர்.


அதுக்குள்ளே அந்தப் பக்கமா வந்த, இளவயசில்லாத உள்ளூர் அம்மிணிகள் சிலர், கோபால்கிட்டே இங்கே ஏன் கூட்டம்? என்ன நடக்குதுன்னாங்க. இவர் இண்டியன் ஃப்லிம் ஷூட்டிங்ன்றார். அவுங்க முகத்தில் ......(உணர்ச்சிகள்)ஒன்னுமே இல்லை.

ஐயோ ஐயோ..... சரியானச் சொற்களைப் போட்டுப் பேசத்தெரியலை பாருன்னு மனசுக்குள் சபிச்சுக்கிட்டே, 'பாலிவுட் மூவீ ஷூட்டிங்'ன்னேன். அவுங்க முகம் அன்றலர்ந்த தாமரைகள் ஆச்சு! இங்கே இவுங்களுக்குத் தெரிஞ்ச ஒரே இந்திய விஷயம் பாலிவூட்தான்:-))))))


புதுப்படம் இது பொங்கல் ரிலீஸ் பதிவு.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ(போஸ்டர் நல்லா சுவையா இருக்கு) ம்ம்ம்மாஆஆ

46 comments:

said...

முன்னாடியே தெரிஞ்சு இருந்தா என்கதையை சொல்லி வாய்ப்பு கேட்டு இருப்பேனே

said...

வாங்க நசரேயன்.

இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகலை. ஒரு ஆயிரம் டாலர்(எண்களால் எழுதுனால் பயந்துருவீங்களே) எங்கிட்டே கொடுத்துப் பெயரைப் பதிவு செஞ்சுக்குங்க.

கதை சொல்லும் வரிசை வலர்ந்துக்கிட்டே போகுது.:-)

said...

என்னது நரசிம்மராவ் சிரிச்சாரான்னு ரொம்ப அதிர்ச்சியோட வந்தேன்...பரவாயில்ல...அனுமார் சாப்பாடு போட்டு சிரிக்க வச்சிட்டீங்க....

said...

வாங்க அதுசரி.

இங்கே ஹரே க்ருஷ்ணாவில் இருப்பவர்களுக்கு அவுங்க தீட்சை எடுத்தபிறகு வெள்ளைக்காரப் பெயர்களுக்குப் பதிலா பக்தி சம்பந்தமான பெயர் ஒன்னு வைக்கிறாங்க. அப்படி இவர் ஹனுமான் ஆனவர்.

பாண்டவா, மகாபிரசாத், ஹரிகீர்த்தன், ஜனசங், பாண்டுராணி இப்படியெல்லாம் பெயர்கள் இருக்கு.

said...

ம்...உள்ளேன்

said...

வாங்க நரேன்

இப்ப எதுக்கு அவர்கூட இப்படி?
அவர் சிரிச்சா நீங்க சிரிக்க மாட்டீங்களாக்கும்!!!!

said...

வணக்கம் துளசி மேடம்,
வழக்கம் போல அசத்தலான பதிவு. ம்ம்,, வெயில் வந்திருச்சா அங்கே... குளிர் பின்னி எடுக்குது இங்கே. பாருங்க இதை
http://www.premkg.com/2008/12/blog-post_29.html

said...

//ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ(போஸ்டர் நல்லா சுவையா இருக்கு) ம்ம்ம்மாஆஆ//
இன்று அதுக்கான வாழ்த்துக்கள்!!!!

said...

அருமையான படங்கள், அட்டகாச நையாண்டியுடன் வழக்கம் போல் உங்கள் டிரேட் மார்க் பதிவு

சூப்பர்

said...

வாங்க பிரேம்ஜி.

உத்தராயணம் முடிஞ்சதும் இங்கே நடுக் வந்துரும். இன்னும் ரெண்டு மாசம்தான். அதுக்குள்ளே குவிச்சுவச்சுருக்கும் அழுக்குத்துணிகளுக்கு விமோசனம் கிடைக்குதான்னு பார்க்கனும்.

அதுவரை எஞ்சாய் 'யுவர் ' குளிர்:-)

said...

வாங்க நானானி.

இங்கே அந்த 'அது'(வும்) நாந்தான். டபுள் ஆக்ட்:-)

நன்றிப்பா.

உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க முரளிகண்ணன்.

'மேடையில்' ஜொலிக்கறீங்களே.
மாஸ்டர் ஆஃப் த செரிமனி,சூப்பர்.

அதுக்கு இனிய பாராட்டுகள்.

said...

உள்ளேன் ரீச்சர்!

Anonymous said...

//"அவர் கட்டை வேகலைங்க. ரெண்டுவாட்டிக் கொளுத்தும்படி ஆயிருச்சு. அதான் சிரிச்சுக்கிட்டே இருக்கேன்."//

:-))))))

said...

அது யார் டீச்சர் மறுமகள்(முன்னால் நடிகை)? நானெல்லாம் ஆவரேஜ் ஸ்டூடண்ட்,இப்படியெல்லாம் ஒரேடியா ரெண்டு மூணு சப்ஜெக்ட் எடுத்தா எப்படி படிக்கறது டீச்சர்?

said...

சாம்பார்........" (போச்சுரா)
அவ்வளவு கொடுமையா!! :-)
எங்கே ஓடிட போறாங்களே என்று பிருந்தாவை லாக் பண்ணிட்டீங்களா?

said...

//நம்ம (புது) பொழைப்பு இணையத்தில் தூங்கி எழுந்திரிப்பது இவுங்க:ளுக்குத் தெரியாதுல்லே.....//

ஹி..ஹி

//நாயகி, பார்த்தால் ரொம்பச் சின்னப் பொண்ணு. (சைல்ட் லேபர்?) //

ஆனாலும் நக்கல் ஜாஸ்தி டீச்சர் :)))

said...

//ஹாஹா....இதுவே பயங்கரக்குளிருன்னா இன்னும் ரெண்டு நாளில் க்வீன்ஸ்டவுன் போறீங்கல்லே.... அங்கே உண்மையாவே குளிர் நடுக்கும்'ன்னு//

அப்ப அதுதான் உண்மையான குளிரா?????

//ஸ்டெடி கேமெரா வச்சு ஷூட் பண்ணுவதைக் கொஞ்ச நேரம் பார்த்தோம். உண்மையைச் சொன்னால் படப்பிடிப்பு வேடிக்கை பார்ப்பது மகா போர்.//

உண்மையா டீச்சர். ஆனா நான் இது வரைக்கும் ஒரு ஐம்பது பட சூட்டிங்க்கு மேல பாத்திருக்கேன் :)

என்னடா தலைப்பு வித்தியாசமா இருக்கேன்னு நினைச்சேன். ஆனா மேட்டர்ஸ் எல்லாம் சூப்பர்

said...

//ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ(போஸ்டர் நல்லா சுவையா இருக்கு) ம்ம்ம்மாஆஆ//

அந்த பொங்கல் வாழ்த்துக்கள்

said...

மறந்து போயிருந்த சிரிப்பை நினைவுபடுத்திட்டீங்க டீச்சர்:)இப்ப பதிவுக்குப் போகிறேன்.

said...

பொங்கல் வாழ்த்துக்கள் டீச்சர்!

said...

டீச்சர்..

இந்தியால ஆரம்பிச்சு ஆஸ்திரேலியா போய் கடைசியா நியூஸிலாந்துல முடியற மாதிரி ஒரு கதை இருக்கு..

மொதல்ல வாய்ப்பு வாங்கிக் குடுங்க.. அதுலேயே ஆயிரம் டாலரை எடுத்துக்குங்க..

அதுல ஹீரோயினோட அப்பா கேரக்டருக்கு நம்ம கோபால் ஸார் பொருத்தமா இருப்பாரு..)))))))))))

said...

நரசிம்மராவ் உடல் எரியாதது பற்றி நான் இதுவரையில் படித்ததும் இல்லை.. கேள்விப்பட்டதும் இல்லை. உங்களால் கிடைத்திருக்கிறது..

நன்றி..

said...

குழந்தைகள் படம் ரெண்டும் அழகோ அழகு.. கலக்கல்...

said...

//உண்மையைச் சொன்னால் படப்பிடிப்பு வேடிக்கை பார்ப்பது மகா போர்.//

உண்மையா தான் மேடம்.. நான் எங்க கோபி ல படம் ஷூட்டிங் பார்த்து வெறுத்து போய் இப்பெல்லாம் ஷூட்டிங் பார்க்க யாரவது கூபிட்டலே பீதி ஆகி விடுகிறேன்.

//இவர் இண்டியன் ஃப்லிம் ஷூட்டிங்ன்றார். அவுங்க முகத்தில் ......(உணர்ச்சிகள்)ஒன்னுமே இல்லை.

ஐயோ ஐயோ..... சரியானச் சொற்களைப் போட்டுப் பேசத்தெரியலை பாருன்னு மனசுக்குள் சபிச்சுக்கிட்டே, 'பாலிவுட் மூவீ ஷூட்டிங்'ன்னேன். அவுங்க முகம் அன்றலர்ந்த தாமரைகள் ஆச்சு! இங்கே இவுங்களுக்குத் தெரிஞ்ச ஒரே இந்திய விஷயம் பாலிவூட்தான்:-)))))//

அடப்பாவிகளா! இவனுக எடுக்கற டுபாக்கூர் படத்திற்கு தான் மவுசு என்ன பண்ணுறது.. நம்ம ஊர்ல மாதிரி வெரைட்டி இயக்குனர் எங்கே இருக்காங்க.

பதிவு நல்லா சுவாரசியமா இருந்தது. உங்களுக்கு ஆனாலும் பதிவெழுதுவதில் ரொம்ப பொறுமை :-)

said...

;)))

\\இளவயசில்லாத உள்ளூர் அம்மிணிகள் சிலர், \\

கோபால் சார்க்கு பதில் நான் சொல்லிக்கிறேன் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;))

said...

//
வெண்பூ said...
குழந்தைகள் படம் ரெண்டும் அழகோ அழகு.. கலக்கல்...//

ரிப்பீட்டே....

said...

ஹிந்திப் படமாம். புது நாயகன் & நாயகி. கதாநாயகன் இன்னும் வந்து சேரலை. ஜெயந்த்ன்னு தெலுங்கு இயக்குனர். சொந்தப் படம். தெலுங்கு டப்பிங் உண்டாம். நாயகியின் கூட ஆடும் சில இளம்பெண்கள் உள்ளுரில் நமக்குத் தெரிஞ்ச மக்கள்தான். "ஹலோ ஹலோ ஹலோ....."//

இப்பவே கண்ணக்கட்டுதே தமிழ்ல அடுத்த விஜய் படம் இதுதான்.

said...

எவ்ளோ பெரிய இடுகை...

said...

நல்லவேளை..........

said...

வாங்க கொத்ஸ்.

அவர் பெயரே இப்படி நடுங்க வைக்குதா?

அமைதியா உள்ளேன்னு சொல்றீங்க!!!!

said...

வாங்க வடகரை வேலன்.

நன்றி உங்க வரவுக்கும் சிரிப்புக்கும்:-)

said...

வாங்க சிந்து.

இவுங்க ஒரு அஞ்சாறு வருசத்துக்கு முன்னால்வரை படங்கள் & தொலைக்காட்சி சீரியல்களில் நடிச்சுக்கிட்டு இருந்தாங்க. ஆனா எல்லாம் ஹிந்தி.

எங்கூருக்கு ஷூட்டிங் வந்தப்ப, காதல் வந்துருச்சு. எல்லாத்தையும் விட்டுட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.

said...

வாங்க குமார்.

சாம்பார் பாத்திரமாவது மிஞ்சுமான்னு ஒவ்வொரு தடவையும் என்னைக் கவலைப்பட வச்சுருவாங்க. இதுக்காகவே வந்து இறங்குனவுடன் தொலைபேசுவாங்க.

நமக்குத்தான் நாக்கு நீளமாச்சே:-))))

லாக் பண்ணலேன்னா நம்மையும் ஆடவச்சுருவாங்க அந்த அம்மிணி:-))))

said...

வாங்க நான் ஆதவன்.

ஷூட்டிங் எல்லாம் இங்கே நம்ம சினிமாக்காரங்க வர ஆரம்பிச்சது முதல் பார்த்துக்கிட்டு இருந்தோம். அப்பெல்லாம் சாதாரண மூவி கேமெராதான். ஸ்டேண்டு இல்லாமத் தோளில் வச்சுக்கிட்டுப் படம் புடிக்கறதும் உண்டு.

உள்ளுர்பொறுப்பாளர்னு சொன்னேன் பாருங்க, அந்த அண்ணன் பக்கத்துலே ஒரு ஊருக்கு சினிமாக்குழுவுடன் போனப்ப, ஒருநாள் மாரடைப்புலே இறந்துட்டார்.

அப்போமுதல் என்னவோ சினிமாக்காரர்கள் தொடர்பு ஆசை கொஞ்சம்கொஞ்சமாப் போயிருச்சு.

அந்த அண்ணியும் பசங்களும்தான் இப்பவும் படப்பிடிப்பு ஏற்பாடு எல்லாம் உள்ளூரில் செஞ்சுதராங்க.

பிஸினஸ் இப்போ கொஞ்சம் டல்தான். அவ்வளவா யாரும் வர்றதில்லை. பழையபடி பெர்ன் சிட்டிக்கு லக்.

said...

வாங்க ராஜ நடராஜன்.

எத்தனை பேரை மனசு இப்படி நினைவு வச்சுருக்குன்னு நினைச்சால் ஆச்சரியமாத்தான் இருக்கு.

இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க உண்மைத் தமிழன்.

சேதி அப்போ ஹைதராபாத் பத்திரிக்கைகளில் வந்துருக்கலாம்.


உங்க கதையை நல்லா டெவெலப் பண்ணிக்கிட்டே இருங்க. நல்லகாலம் வரும்.

ஆமாம்....ஹீரோயின் அம்மா ரோல் எனக்குப் பொருத்தமா இருக்காதா?????

said...

வாங்க கிரி.

எடுத்தேன் கவுத்தேன்னு எழுத வரலையேப்பா. எல்லாம் நிகழ்காலச் சரித்திரமாச்சே.

இப்படி விலாவரியா எழுதாம விட்டுத்தான் நம்ம நாட்டு 2000 வருஷ சரித்திரம் எல்லாம் போயிருச்சு. இனியும் இந்தத் தவறை நாம் செய்யலாமோ? :-)))))

said...

வாங்க கோபி.

கோபாலுக்கு ஆதரவா இருப்பதுக்கு நன்றி(யாம்)

said...

வாங்க ச்சின்னப் பையன்.

கள்ளம் கபடம் அறியாத பருவமல்லவா?

குட்டீஸ் அழகுதான்.

said...

வாங்க குடுகுடுப்பை.

அடைமொழியை விட்டதை மென்மையாகக் கண்டிக்கிறேன்.

டாக்குட்டர் ஓஓ டாக்குட்டர்....

said...

வாங்க SUREஷ்.
இதையே பிச்சு நாலு பதிவா ஆக்கி இருக்கலாம். சினிமாவாச்சே....கண்டின்யூட்டி போயிறப்போகுதேன்னு.....

ரெண்டரை மணி நேர சினிமாவை ஜஸ்டிஃபை பண்ணிப் பதிவு நீண்டுருச்சு.

ஆமாம். நல்லவேளை?????????

said...

ஷூட்டிங் நேரடி ஒளிபரப்பு அருமை. சைல்ட் லேபர் கமெண்ட் சூப்பர். ஸ்டோரி டிஸ்கஷன் நீங்க வந்தா காமெடி சீன் நல்லா வரும் போல இருக்கு.
kalyanje.blogspot.com
kalyangii@gmail.com

said...

வாங்க கல்யாண்ஜி.

சினிமாக்காரர் சொன்னதுக்கு அப்பீல் ஏது?

படப்பிடிப்புக்கு வந்துட்டுப்போங்க நீங்களும். நான் அதைப் பதிவா எழுதணும் ஆமா:--))))

said...

மறந்து போயிருந்த சிரிப்பை நினைவுபடுத்திட்டீங்க டீச்சர்:)இப்ப பதிவுக்குப் போகிறேன்.


அய்யோ நடராஜன் என் தங்கம்.

ரெண்டுபேரும் ஒரே மாதிரி........

மறுபடியும் உள்ளே வருவேன்.

said...

எத்தனை பேரை மனசு இப்படி நினைவு வச்சுருக்குன்னு நினைச்சால் ஆச்சரியமாத்தான் இருக்கு.


ஒரு வரி விடாம படிக்க வச்சீங்க.