Thursday, January 15, 2009

கையில் ஒரு கண் இருந்தால்....

தரையைப் பார்த்து நடப்பதே கிடையாது. கீழே எது இருந்தாலும் அப்படியே மிதிச்சுக்கிட்டுப் போற பழக்கம் சின்ன வயசுலே. இதுக்காக ரொம்பவே திட்டு வாங்கி இருக்கேன். பார்த்துப்போகக்கூடாதான்னு பாட்டி சொல்லும்போது நக்கலா ஒரு பதில் 'கால்லெ கண்ணா இருக்கு? பார்த்துப்போக' இந்தத் திமிரான பதிலுக்கும் கொஞ்சம் கூடவே கிடைக்குமுன்னு வச்சுக்குங்க. அதை அப்படியே தொடைச்சுப்போட்டுட்டுப் போறதுதான் வழக்கம்..........
கிறைஸ்ட்சர்ச் ஆர்ட் கேலரிக்கு நடையைக் கட்டுனோம். தண்ணீர் வழிஞ்சு ஓடுவதுபோல ஒரு அலங்காரம் வெளிச்சுவற்றில். இந்த Fengshui இங்கேயும் எல்லாரையும் பாடாப் படுத்துது . எங்கூர் கதீட்ரலில்கூட 'பாத்திரம் நிரம்பிவழிவதாக'ன்னு ஒன்னு இருக்கு. தாவர இயல் பூங்காவிலும் இப்படி ஒன்னு உயரமான மண்ஜாடி டிஸைனில் பெருகி வழிஞ்சுக்கிட்டு இருக்கு.

இந்த ஆர்ட்கேலரியும் முதலில் இந்தப் பூங்காவின் உள்புறத்தில்தான் இருந்துச்சு. தொடங்குன வருசம் 1932. Robert McDougall Art Gallery. அஞ்சு வருசம் கழிச்சு 'இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு'Ex Tenebris Lux ( from darkness. light ,Out of darkness) என்ற கருப் பொருளுக்காக, சிற்பி Ernest Gillick வடிச்ச ஒரு வெண்கலச் சிலையை இங்கிலாந்துலே இருந்து நம்ம புரவலர் Robert McDougall வாங்கி கிறைஸ்ட்சர்ச் நகர மக்களுக்கு அன்பளிப்பாக் கொடுத்தார்.

இந்தச் சிலைக்குன்னே ஒரு கதையும் இருக்கு. பர்மிங்ஹாம் மருத்துவ மனை வளாகத்துலே வைக்க வடிச்ச சிலை இது. சிலை நிறுவ அவுங்க ஒதுக்குன இடம், பொருத்தமா இல்லைன்னு சிற்பிக்கு மனத்தாங்கல். அதுதான் நிறுவாம வச்சுட்டார்.(அதுக்குப்பிறகு ரெண்டு வருசம் கழிச்சு இன்னொரு சிலை இதே கருவில் செஞ்சு ஆசுபத்திரிக்குக் கொடுத்தாராம்)
நம்ம ஊருக்கு வரணுமுன்னு சிலைக்கு விதி இருந்துருக்கே. அதான் இங்கே வந்துருச்சு!


இதை 1937 இல் ஆர்ட் கேலரி வாசலில் வச்சாங்க. புதுக் கட்டிடம் கட்டிமுடிச்சதும் தோட்டத்தில் இருந்த சிலையை (நம்மூரா இருந்தால் தமிழன்னைன்னு சொல்லி இருப்பாங்களோ?) இங்கே கொண்டுவந்து வச்சுட்டாங்க. போகட்டும் வெய்யில், மழை எல்லாம் இனியும் தாங்கவேணாம் இந்தக் கலை அரசி.


தோட்டத்தில் இருந்தப்போ......


கண்ணாடிக் கதவைத் தள்ளி உள்ளே நுழைஞ்சதும் உள்ளூர் வழக்கப்படி வலது பக்கம் கலைப்பொருட்கள் விற்கும் கடை, இடதுபக்கம் தாகசாந்திக் கடை. அடுத்த கதவில் கலையகத்தின் நினைவுப்பொருட்கள் விற்கும் கடை. தப்பிச்சு அந்தப் பக்கம் போனால் மகா விஸ்தீரணமான ஹால். ஒருபக்கம் வரவேற்பு. கொஞ்சம் தள்ளி அந்தக் கலை அரசி. கலையகத்தைச் சுற்றிக் காமிச்சு விளக்கம் சொல்ல வழிகாட்டிகள் இருக்காங்க. வேணுமுன்னா,குறிப்பிட்ட நேரங்களில் அவுங்க(இலவச) சேவையைப் பயன்படுத்திக்கலாம். நாம்தான் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்களாச்சேப்பா...... வாயிலே இருக்கு வழி இல்லை?
அங்கங்கே தொலைக்காட்சிப்பெட்டி. கலைப்பொருட்கள் பற்றிய குறும்படங்கள் போய்க்கிட்டு இருக்கு. ஒரு நல்ல ஆடிட்டோரியம் இந்தத் தளத்துலே இருக்கு. பல படங்கள் இலவசம்தான். அதுக்குன்னு நேரம் ஒதுக்கி வரவேணும். கலை ஆர்வம் அதிகமா இருப்பவுங்க வருவாங்க போல. மேலும் வெவ்வேறு நாடுகள்/இடங்களில் இருந்து ஒருமாசம், ரெண்டு மாசமுன்னு காட்சிக்காகக் கொண்டுவரும் கலைப்படைப்புகளுக்கு என்றே பெருசும் சிறுசுமா ஆறு ஹால்கள். நாங்கள் போனப்ப வாங்கரேய் என்ற ஊரில் இருந்து (நியூஸியின் வடக்குத் தீவில் உள்ள ஒரு இடம்) வெள்ளையர்கள் நாடுபிடிக்கவந்ததும், மவோரிகளைத் தங்கள் (வலையில் வீழ்த்தியதும்) சக்தியால் கொஞ்சம் அமுக்கி வச்சதும் என்ற தலைப்பில் மவோரிமக்கள் அப்போதிருந்த நிலைகளை விளக்கும் சித்திரங்களும் ஆஹான்னு இருந்துச்சு. படங்களைப் படம் எடுக்கவேண்டாம்.
அதுக்கு பதிலா நாங்களே படங்களில் சிலதை அச்சடிச்சுக் கூடவே விவரமும் தர்றோமுன்னு அங்கே கையேடு வச்சுருந்ததை எடுத்துக்கிட்டோம். 12 படங்கள் இருக்கு.


இன்னும் சில படங்களுக்கான சுட்டி

18ஆம் நூற்றாண்டு இறுதிகளில் இருந்து, போன நூற்றாண்டு வரை வரையப்பட்டச் சித்திரங்கள். சில படங்களைப் பார்த்தால்....... வெள்ளைக்காரன் அட்டூழியம் செஞ்சுருக்கான் இப்படி நாடு பிடிக்கன்னு கொஞ்சம் மனசுக்கு வருத்தமாவும் இருந்துச்சு.

ஆஸ்த்ராலியா கலைஞர் ஃபியோனா ஹால் அவர்கள் செஞ்சு வச்ச பொருட்கள் அட்டகாசம். தினப்படிச் சாமான்களான, கோக் கேன்கள், பழைய ரூபாய் நோட்டுகள்( புழக்கத்தில் இல்லாத/செல்லாத நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் கழிச்சுக்கட்டும்போது சேகரிச்சது) ஸார்டீன் மீன்களைப் பேக் செய்யும் மீன் டப்பாக்கள் இவைகளையெல்லாம் கலைப்பொருட்களாக மாற்றி இருக்கார். அலுமினியம், ரப்பர், ப்ளாஸ்டிக்குன்னு ஒன்னையும் விட்டுவைக்கலை இந்த அம்மிணி. பழைய வீடியோ ஆடியோ கேஸட் டேப் எல்லாம் என்னென்னவோ உருவமா ஆகி இருக்கு. (நம்ம வீட்டுலே இருக்கும் ஆயிரக் கணக்கான டேப்களை (எல்லாம் தமிழ் சினிமா) கொடுத்தாக் கவர்ச்சியான உருவங்களைச் செஞ்சுக்குவாங்களான்னு கேட்டுப் பார்க்கணும். ஜோதிலட்சுமி, அனுராதா, ஸில்க், ரம்யா கிருஷ்ணன்னு ஒரு கூட்டமே அதுலே அடங்கி இருக்கே) கோக் டின்னைப் பிரிச்சு ரொம்ப மெலிசா உல்லன் நூல் கனத்துகே வரிசைவரிசையா வெட்டி அதையே பயன்படுத்தி ஒரு ஸ்வெட்டர்/ஜாக்கெட் கூட பின்னி வச்சுருக்கு.
மீன் டப்பாக்களில் பலதரப்பட்ட மரங்கள். தாயகத்தில் அவைகளின் பெயர்கள் எல்லாம் விளக்கமா இருந்துச்சு. பாக்கு மரத்தின் பக்கத்துலே 'கமுகு'ன்னு (இங்கிலிபீஸில்) எழுதி இருந்துச்சு!!!! அங்கே இருந்த டப்பாக்களைப் பார்த்தால் தினமும் மீன் மீன் என்றே தின்னு அலுப்பாகி இருக்குமோ.

நூலாய் வெட்டுன கரன்ஸித்தாள் பறவைக்கூடுகள் பலே பலே. அதிலும் அந்தத் தூக்கணாங்குருவிக் கூடு பேஷ் பேஷ். எதைச் சொல்ல எதைவிட என்னும் (காப்பிரைட்:சிவசங்கரி) வரியை இங்கே போடறேன். மூணுமாசம் நம்ம ஊரில். இதில் மணிமண்டையோடு இருக்கு.


என்னவோ மலைக் கோயில்படிகள் மாதிரி இருக்கேன்னா,அது மாடிக்குப் போகும் படிக்கட்டு. ஒரேதா 'மல்ட்டிக் கலர் மாடர்ன் டிஸைன்'னு நிறவகைகள் பட்டை அடிச்சுக்கிடக்கு. படிகள் முடியும் இடத்தில் கறுப்பு நிறக் கடல்சிங்கம் ஒன்னு மூக்குமேலே ஒரு ஸ்டூலும் அதுக்கும்மேல் ஒரு சைக்கிள் சக்கரத்தையும் வச்சு வச்சு பேலன்ஸ் செஞ்சுக்கிட்டு இருந்துச்சு. கோபால் க்ளிக்கி வச்சார்.

அடுத்த அஞ்சாவது நிமிசம் வெள்ளை நிறம்(ஒயிட் இன் ஒயிட்) என்ற தீம் இருக்கும் ஹாலில் வெள்ளை உருவங்களைப் பார்த்துக்கிட்டு இருக்கும்போது கலையகத்தின் வரவேற்பில் நாம் பார்த்த பணியாளர், நம்மகிட்டே வந்து அந்த கடல்சிங்கத்துக்கு காப்பி ரைட் இருக்கு. அந்தப் படத்தை உங்க கெமெராவில் இருந்து டெலீட் பண்ணிருங்கன்னு பணிவாச் சொல்லிட்டுப் போனார். எப்படிச் சரியா நம்மைப் பிடிச்சார்? . அங்கே இருந்த பார்வையாளர்களில் இந்தியமக்கள் நாங்க ரெண்டுபேர்தானே. நம்ம பேச்சையே நாம் கேக்கமாட்டோம், இதுலே போர்டு போட்டு வேணாமுன்னு சொன்னா..........

இல்லேன்னா.....

ச்சீச்சீ.......செக்யூரிட்டி கெமெராவில் வந்துருப்போம்.

எதையும் தொடாமல் பாருங்கன்னு அங்கங்கே எழுதிப்போட்டால், மக்களுக்கு (அது யாரா இருந்தாலும்) கை, குறுகுறுன்னாதா? இந்த அரிப்பைத் தீர்த்துக்கொள்ள அங்கேயே ஒரு மூலையில் மருந்து வச்சுருந்தாங்க. சுவரில் ஆட்டு ரோமமோ, இல்லை (வெண் புலி, சிங்கம்?) செயற்கை ரோமமோ 5 x 8 அடி அளவிலே நல்லாச் சட்டம்போட்டு மாட்டி இருக்கு. பக்கத்து மேசையில் நம்மூர்லே துணி துவைக்கும்போது பயன் படுத்தும் ப்ரஷ் போல ஒன்னு. பால் வெள்ளைத் துணியினால் ஆன சில கையுறைகள். செயல்விளக்கம் அங்கே வச்சுருந்தாங்க. கையுறையைப் போட்டுக்கிட்டு, அந்த ப்ரஷ்ஷால் வெண்ரோமப் பரப்பில் படங்களை வரைஞ்சுக்கலாம். நமக்காக இவ்வளவு ஏற்பாடு இருக்கும்போது மதிக்கணும் இல்லையா? நான் நம்ம கோகியை வரைஞ்சு பெரிய நீளமான வால் போட்டுவிட்டேன். எனக்குப் பின்னால் வந்து நின்ன ஒரு பெண்மணி, ஒரு ஓரத்தில் சின்னதா என்னமோ வரைஞ்சாங்க. பரவாயில்லை.... நம்ம கோகியைப் ப்ரஷ்ஷால் அழிச்சுட்டு வரையுங்கன்னு சொன்னால் கேட்டால்தானே? நம்ம கோகியைக் கலைக்க மனசு வரலையாம். அவ்ளோ அழகாவா வரைஞ்சுருக்கேன் !!!! (???)

அடுத்தமூலையில் ஒரு கணினி. கீ போர்டைப் பார்த்ததும் காலையில் இருந்து தமிழ்மணம் பார்க்கலைன்னு மூளையில் ஒரு சிகப்பு விளக்கு எரிஞ்சது. ஸ்டார்ட் அமுக்குனதும் விவரம் திரையில். கை ஆர்ட் செஞ்சுக்கோன்னது. மேசைப்பரப்பில் கையை நமக்குப் பிடிச்சமாதிரி வைச்சுட்டு இன்னொரு பொத்தானை அமுக்கினால் பக்கத்தில் தெரியும் ஏராளமான கண்களில் ஒன்னை இழுத்துவந்து அந்த கைக்குப் பார்வை
கொடுக்கலாம். இடது கைதான் வைக்கும் வசதி. அதுவும் சரியா....எப்படியோ.....


சேமிச்ச படத்தை நம்ம மெயில் பெட்டிக்கு அனுப்பிக்கலாம். அனுப்பினோம்.

மேற்படி வந்துபோகும் கலைப்பொருட்கள்தவிர, பழைய கட்டிடத்தில் இருந்த சித்திரங்கள் மாடியில் ரெண்டு ஹாலை அடைச்சு வச்சுருக்காங்க. இங்கிலாந்துச் சூழல் நிறைஞ்ச படங்கள். ஒவ்வொன்னுக்கும் ஃப்ரேம்தான் அள்ளிக்கிட்டுப் போகுது. என்னதான் நாம் ஊரில் இருந்து பெயிண்டிங் (சரி. ஒரிஜனல் இல்லை. ப்ரிண்ட்டட் காபிதான்) வாங்கிவந்தாலும் சட்டம் போடும் சமயம் கொட்டிக் கொடுக்க மனசு வர்றதில்லை. சாதாரணத்துக்கே 200 டாலர் ஆயிருது. 100 ரூபாய் படத்துக்கு இப்படி அழும்போது 'எதுக்கோ பட்டுக்குஞ்சம்' என்ற பழமொழி தேவையில்லாம நினைவுக்கு வருதே.

சப்பைவடிவ பாட்டில்கள் (சின்ன அளவு. 10 முதல் 15 செமீ உயரம்) சுவத்துலே வரிசைவரிசையா அடுக்கி இருந்துச்சு. மாடர்ன் ஆர்ட். நிர்வாண மகளிர். 'அசிங்கமா வரைஞ்சு வச்சுருக்கு'ன்னார். 'கலைக் கண்ணோடு பாருங்க'ன்னேன்.( ஆனா கொஞ்சம் ஆபாசமாத்தான் இருந்துச்சு)
இதுக்கு ஈடு செய்யும் விதமா பெரிய அளவிலான சில ஆயில் பெயிண்டிங்கில் மகனர்.

கலைகளை ஆற 'அமர' ரசிக்க அங்கங்கே அருமையான இருக்கைகள் . ஆனாலும் நமக்குக் கால் தளர்ந்து போகுதே. கட்டிடத்தைவிட்டு வெளியே வரும் கதவைத் தள்ளித் திறக்கும்போதுதான் கவனிச்சோம். Oops... ஃப்ராஸ்டட் க்ளாஸில் கெமெரா படம் போட்டுக் குறுக்குக் கோடு போட்டுருக்கு. கண்ணாடியை மாத்தனும், என் கண் கண்ணாடியை. சரியாத் தெரியமாட்டேங்குது. எனக்கும்தான்னு சொன்னார் இவர். பளிச்னு சிகப்பு நிறத்தில் போட்டுருக்கலாமுல்லே?
வெளியே வந்து நீண்டபடிகளில் நின்னப்பப் பின்னால் இருந்து சுவற்றில் நீர் வழியும் சலசலச் சத்தம். அப்பாவோடு வந்துருந்த ரெண்டுவயசுக் குழந்தை, ட்ரவுஸரைக் கழட்ட முயற்சி செஞ்சப்பத்தான்......அட.... ..... அதுவா இது? ........

பிஞ்சுக் குழந்தைக்குப் பாவனைகள் ஏது?:-))))))

32 comments:

said...

டீச்சர் நான் இன்னைக்கு நல்லா பாடம் படிச்சேன், படமும் பார்த்தேன்

said...

இதுல மாத்திரம் நான் பஷ்ட்டு வரலைன்னா................

திரும்ப முயற்சி பண்ணுவேன்!

said...

இப்போ எல்லாம் ஒரு நாளைக்கு ரெண்டு பதிவு.. ஏதாவது சபதமா? ஆனாலும் கலக்குங்க

said...

வாங்க நசரேயன்.

பாடத்தில் ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்க.

said...

வாங்க அபி அப்பா.

முயற்சி இன்னும் திருவினை ஆகலை.

இன்னுமோர் கஜினி:-)

said...

வாங்க நரேன்.

ரெண்டுரெண்டாவாத் தெரியுது?

அடக் கடவுளே அடக் கடவுளே

said...

//இதை 1937 இல் ஆர்ட் கேலரி வாசலில் வச்சாங்க. புதுக் கட்டிடம் கட்டிமுடிச்சதும் தோட்டத்தில் இருந்த சிலையை (நம்மூரா இருந்தால் தமிழன்னைன்னு சொல்லி இருப்பாங்களோ?) இங்கே கொண்டுவந்து வச்சுட்டாங்க. போகட்டும் வெய்யில், மழை எல்லாம் இனியும் தாங்கவேணாம் இந்தக் கலை அரசி.
//

தமிழன்னைன்னு - நீங்க சொல்வதும் சரிதான், அதுவும் புத்தகத்தோடு அந்தம்மாவின் சிலை. :)

படங்களும் விளக்கமும் அருமை, அப்படியே ஹாலுக்குள் சென்று வந்த மாதிரி இருந்தது படித்ததும்

said...

எவ்ளோ பெரிய ஹால்..!

said...

எவ்ளோ பெரிய பதிவு..!

said...

எப்படி ரீச்சர்....

said...

மூச்சுவிடாம ஒரு கைடு மாதிரியெ சொல்லி இருக்கறிங்க ரீச்சர்...:)

said...

பகிர்வுக்கு நன்றி மேடம்...

said...

வேர் இஸ் கோகி படம்?

said...

எவ்ளோ பெரிய பதிவு..!//

repeeatttttttttu

வெளியே வந்து நீண்டபடிகளில் நின்னப்பப் பின்னால் இருந்து சுவற்றில் நீர் வழியும் சலசலச் சத்தம். அப்பாவோடு வந்துருந்த ரெண்டுவயசுக் குழந்தை, ட்ரவுஸரைக் கழட்ட முயற்சி செஞ்சப்பத்தான்......அட.... ..... அதுவா இது? ........

பிஞ்சுக் குழந்தைக்குப் பாவனைகள் ஏது?:-))))))

:)-

said...

// இந்தத் திமிரான பதிலுக்கும் கொஞ்சம் கூடவே கிடைக்குமுன்னு வச்சுக்குங்க. அதை அப்படியே தொடைச்சுப்போட்டுட்டுப் போறதுதான் வழக்கம்..........//

ஹிஹிஹி, நாம எல்லாம் தான் சுரணையே இல்லாத வர்க்கமாச்சே! இங்கேயும் அப்படித் தான்!//கலையகத்தின் வரவேற்பில் நாம் பார்த்த பணியாளர், நம்மகிட்டே வந்து அந்த கடல்சிங்கத்துக்கு காப்பி ரைட் இருக்கு. அந்தப் படத்தை உங்க கெமெராவில் இருந்து டெலீட் பண்ணிருங்கன்னு பணிவாச் சொல்லிட்டுப் போனார்//

ம்ம்ம்ம், கொடுத்து வைக்கலை, அந்தக் கடல் சிங்கத்துக்கு!


//நான் நம்ம கோகியை வரைஞ்சு பெரிய நீளமான வால் போட்டுவிட்டேன். எனக்குப் பின்னால் வந்து நின்ன ஒரு பெண்மணி, ஒரு ஓரத்தில் சின்னதா என்னமோ வரைஞ்சாங்க. பரவாயில்லை//

அதானே! கோகியை என்னடா இன்னும் காணோமேனு நினைச்சேன்!
//பிஞ்சுக் குழந்தைக்குப் பாவனைகள் ஏது?:-))))))//
உண்மையான வார்த்தை! பஞ்ச் இது தான்!

said...

வாங்க கோவியாரே.

எல்லாம் நான் பெற்ற இன்பம்தான்....

இம்மாந்தூரம் யார்வந்து பார்க்கப்போறாங்க என்ற ஆதங்கமும்.

said...

வாங்க தமிழன் - கறுப்பி.

பின்னூட்டத்தையே பிச்சுப்பிச்சு அஞ்சு கவளமாக் கொடுத்துருக்கீங்க:-))))

படத்தை எடுத்துட்டாப் பதிவு சின்னதுதான்.

ஆனாலும் பதிவுக்கு ஒரு 'வெயிட்' தர்றது 'கண் காட்சி' இல்லையோ.

said...

வாங்க கொத்ஸ்.

கடல்சிங்கத்துக்கிட்டே கடி வாங்குன வேகத்தில் கேமெராவை ஒளிச்சு வச்சாச்சு.

இப்பத் தோணுது, நம்ம படத்துக்குக் காப்பிரைட் நமக்குத்தானே ? எடுத்துருக்கலாமோன்னு.

said...

வாங்க அமித்து அம்மா.

ஹாலுக்குத் தகுந்த நீளம். பதிவைச் சொல்றேன்:-))))

said...

வாங்க கீதா.

மாட்டுப்பொங்கலை முடிச்ச கையோடு காணும் பொங்கலுக்கு வந்து கண்டுகிட்டதுக்கு நன்றி.

காணும் பொருள் யாவும் அவன் (கோகி) தோற்றம்தான் எப்பவும்.

இத்தனைக்கும் அவன் என் பூனை அல்ல:-)

said...

இவ்வளோ சீக்கிரம் பதிவு மேல பதிவா போடறீங்களே :)

said...

வாங்க சின்ன அம்மிணி.

கையிலே இருக்கும் கண் மீது கண் வச்சுறாதீங்கப்பா:-)))))

நேரம் கிடைக்கும்போது எழுதிட்டா நல்லதுன்னு இருக்கு.
எனக்கு ரைட்டர்ஸ் ப்ளாக் வரப்போகுது.

said...

மிக நல்ல பதிவு. புதிதாக பலவற்றை அறிந்துகொண்டேன். தமிழன்னை போலவே இருக்கே.

said...

சும்மா சொல்ல பிடாது உண்மேல நல்லாதான் இருக்கு

said...

நியூசிலாந்து வரனும் போல இருக்கே.

ஆமா அந்த சிலை சேலை கட்டிருக்க மாதிரியே இருக்கே

said...

வாங்க டொக்டர்.

நம்ம பதிவுகளில் நியூஸி சரித்திரத்தை அப்பப்போக் கொஞ்சம் கொஞ்சமாச் 'சொட்டு மருந்து' போலக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.

நூத்தறுபத்தெட்டு வருசம்தான் என்றாலும் நிறைய ஆவணங்கள் இருக்கு.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க கஜன்.

புதுசா இருக்கீங்க!!!

வணக்கம். நலமா?

//உண்மேல நல்லாதான் இருக்கு//

ஆஹா.... கண்மேலே நல்லா இருக்குன்னு சொல்லுங்க:-))))))


(நண்பரின் மகன் பெயரும் கஜன்)

said...

வாங்க குடுகுடுப்பை.

வாங்க வாங்க வந்துட்டுப்போங்க.

'பதிவில் வரும் சம்பவங்கள் பொய் அல்ல' ன்னு சொல்ல ஒருத்தர் வந்தா நல்லதுதான்:-)))

ஃப்ரெஞ்சு நாட்டுச் சிற்பங்கள் புடவைதான் கட்டிக்கிட்டு இருக்கு. சுதந்திரதேவிச் சிலை ஒரு சான்று.

ஒருகாலத்துலே புடவை ஆட்சி செஞ்சுருக்கு:-))))

said...

நீண்ட நாட்களுக்கு பாடம் படிக்க வந்தேன்,

படம் பார் - கதை சொல் ...

டீச்சர்ன்னா டீச்சர்தான் ...

வண்ண படிகள் அழகு ...

said...

லீவு முடிஞ்சு வந்திருக்கேன்.. டீச்சர்..

said...

வாங்க நட்புடன் ஜமால்.

இவ்வளவு நட்பான பெயரோடு வந்துருக்கீங்களே!!!!!

நலமா?

அடிக்கடி வகுப்புக்கு மட்டம் போடாம வரணும். அட்டெண்டண்ஸ் முக்கியம்.:-)))

said...

வாங்க கயலு.

தாத்தாவோட பொறந்தநாள் கொண்டாட்டத்துலே ஜமாய்ச்சுட்டு வந்துருக்கீங்க.கண் பட்டுருக்கப்போகுது:-)))