Sunday, January 18, 2009

வாங்களேன்...கேக் சாப்புடலாம்:-)

வாழைப்பழக் கேக் (மைக்ரோவேவ் சமையல்)

வாழைக்காய்போல இருந்த வாழைப்பழங்களைத்தான் வாங்கி வச்சேன். நிதானமாப் பழுக்கும்போது ஒவ்வொன்னா எடுத்து முழுங்கலாமுன்னு. அடியாத்தீ..... இப்படி ஒரே சமயம் பழுத்துப்போகுமுன்னு கண்டேனா....

(ஒரே சீப்புப் பழங்கள் பின்னே எப்படிப் பழுக்குமாம்) அதுவுஞ்சரி, இது சரியான சீப்புதான். மத்தகடைகளைவிட இங்கே ஒரு டாலர் விலை மலிவு.


கழிச்சுக் கட்ட என்னென்ன வழின்னு பார்த்தால்.....


1.தோட்டத்தில் பறவைகளுக்குப் போடலாம்.

2. சைலண்டா இதுகளைக் குப்பைப் பையில் போட்டுறலாம்.

3. எதாவது சமையலில் சேர்த்துக்கலாம்.

ஒன்னாவது............பாவம் அதுகள். நேத்து வச்ச பழத்தையேத் தின்ன முடியாமல்/தெரியாமல் பாதியை அப்படியே விட்டு வச்சுருக்குகள்.

ரெண்டாவது............ அடுத்த வியாழன்வரை காத்துருக்கணும். இல்லேன்னா வேஸ்ட்மாஸ்டரில் போட்டு அரைச்சுக் கழிவுநீர் குழாயில் தள்ளிறலாம். காசு கொடுத்து வாங்குனதை இப்படி வீணாக்க, ஜஸ்டிஃபை
பண்ணிக்கனுமுன்னா இன்னும் நாலு நாள் காத்துருக்கணும், அழுகட்டுமேன்னு.


மூணாவதுக்கு அடிச்சது ப்ரைஸ். பழங்கள் நல்லாப் பழுத்துக் கனிஞ்சுருக்கு. உரிச்சுப் பார்த்தால் பால்வெள்ளை. பனானா கேக். முடிவு பண்ணிட்டேன். அடுப்புடன் சேர்ந்திருக்கும்அவன் எல்லாம் சூடாக்கிச் செய்யச் சோம்பலா இருக்கு. அவந்தான் எண்ணெய்ச்சட்டி, தோசைக்கல் எல்லாம் வைக்கும் ஸ்டோரேஜ் யூனிட்டா வேற டபுள் ஆக்ட் கொடுத்துக்கிட்டு இருக்கானே. எல்லாத்தையும் வெளியே எடுத்துவைக்கணும்(-:

மைக்ரோவேவ் எதுக்கு இருக்கு? கேக்குக்குத் தேவையான பொருட்கள் கைவசம் இருக்கான்னு பாண்ட்ரியில் தேடுனப்ப ...... அதிர்ஷ்டதேவன் என்னப் பார்த்துச் சிரிச்சான்.

செய்முறையைப் பார்ப்போம்.


தேவையான பொருட்கள்:

செல்ஃப் ரெய்ஸிங் பவுடர் - ஒன்னரைக் கப்

ஸாஃப்ட் ப்ரவுண் ஷுகர் - ஒன்னரைக் கப்

மார்ஜரின் - 250 கிராம்

முட்டை- 2 (சைஸ் 7)

பால் - முக்கால் கப்

வாழைப்பழம் - ஆறு. கனிஞ்சதா இருக்கணும்:-))))))))

ஏலக்காய்த் தூள் - முக்கால் தேக்கரண்டி

ஒரு பெரிய கண்ணாடிப் பாத்திரத்தில்( மைக்ரோவேவில் வைக்கக்கூடியது) மார்ஜரின், பால் ரெண்டையும் சேர்த்து 40 வினாடி வைக்கணும். ஜஸ்ட் உருகி ஒரு கலவை கிடைக்கும். அதுலே ப்ரவுண் சக்கரை சேர்த்து நல்லாக் கலக்கணும். ரெண்டு முட்டையை உடைச்சு கலவையில் சேர்த்து நல்லா அடிச்சுக் கலக்கணும். இப்போ வாழைப்பழங்களை உரிச்சு ஒரு ஃபோர்க்கால் அழுத்தமா நசுக்கி கொஞ்சம் கூழானதும் கலவையில் சேர்க்கணும். ஏலக்காய்தூள் போட்டுக்குங்க. கடைசியா மாவு சேர்த்துக் கலக்கிக்குங்க.

மைக்ரோவேவ் கேக் செய்யும் பாத்திரத்தில் கொஞ்சம் மார்ஜரீனைத் தடவிட்டு, இன்னும் ரெண்டு தேக்கரண்டி மாவைத் தூவி எல்லாப் பக்கத்திலும் ஒட்டுவதுபோல் பாத்திரத்தைச் சாய்ச்சுக் குலுக்கிட்டு கூடுதலா இருக்கும் ஒட்டாத லூஸ்மாவை(?) கேக் கலவையில் சேர்த்துருங்க.
கேக் பாத்திரத்தில் அரை அளவுவரை கலவையை நிரப்பணும். மைக்ரோவேவில் வைக்கக்கூடிய ஒரு பிரிமணை/ ஸ்டேண்டு ஒன்னை அவனில் வச்சு அதுமேலே கேக் பாத்திரம் வையுங்க. ஆறு நிமிஷம் 100% பவரில் வச்சு அவனை ஆன் செஞ்சுருங்க. அம்புட்டுதான். அவன் பீப்புனதும் வெளியே எடுத்து இன்னொரு ஸ்டேண்டு மேல் அஞ்சு நிமிசம் நிக்க வச்சுட்டு (இதுதான் ஸ்டேண்டிங் டைம்) இன்னொரு தட்டோ அல்லது வலை கம்பி ரேக்கோ எடுத்து அதுலே கேக் பாத்திரத்தைத் தலைகீழா வச்சு லேசா ஒரு தட்டு.

டபக்னு கேக் வந்து விழுந்துரும். இதுக்குமேல் 'அலங்காரம்' செஞ்சுக்கவேண்டியது உங்க விருப்பம்.

டபுள் க்ரீம் கடையில் கிடைக்கும். அதை நல்லா அடிச்சுக் கெட்டிக் க்ரீம் ஆக்கி மேலே தடவலாம். விருப்பமான ஜாம் அதுக்குமேலே பூசலாம். ஜாம் வேணாமுன்னா க்ரீம் தடவுனதுக்குமேல் செர்ரிப் பழங்களை வைக்கலாம்:
-))))) (இன்னும் செர்ரீஸ் பாக்கி இருக்கு)

ஐஸிங் செய்யணுமுன்னா செஞ்சுக்கலாம். ஹண்ட்ரட் தௌஸண்ட்ன்னு கடுகு சைஸில் கலர்கலரா முட்டாய்(கேக் அலங்காரத்துக்குன்னே ஏகப்பட்ட சமாச்சாரங்கள் கிடைக்குது. சூப்பர் மார்கெட்டில் தேடுங்க) ஐஸிங் உலருமுன்னே தூவி விடுங்க.

இத்தனை சீர்செனத்தி செய்யணுமான்னு (என்னைப்போல நினைச்சா) கொஞ்சம் ஐஸிங் சக்கரையை மேலாகத் தூவி விடுங்க. கேக் நல்லா ஆறினபிறகு தூவணும்.


ஒரு அஞ்சாறு வருசமுன்னே ஒரு டாலருக்கு ஸேலில் வாங்குன கேக் ராக், இன்னிக்கு வெளியே வந்துருக்கு. எல்லாம் ஆறுபழத்தின் புண்ணியம்


குக்கிங் டிப்ஸ்:

இதெல்லாம் சொல்லாட்டி சமையல் நிபுணின்னு யாரும் ஒத்துக்கமாட்டாங்க அதனால்:-)

நம்ம வீட்டில் இருக்கும் மைக்ரோவேவ் 1000W பவர் உள்ளது. கூடுதல் அல்லது குறைவான பவர் அடுப்பு வைத்திருப்பவர்கள் சமைக்கும் நேரத்தை குறைச்சோ இல்லை கூட்டியோ வச்சுக்கணும்.

மைக்ரோவேவ் கேக் செய்ய எப்பவும் ரிங் போல வடிவுள்ள பாத்திரம்தான் சரிப்பட்டுவரும். சாதாரணப் பாத்திரமுன்னா கேக் நடுப்பகுதியில் வேகாம இருக்கும்.

ஹைகிரேடு மாவுன்னு பேக்கிங் செய்ய கைவசம் இருந்தாலும் என் ச்சாய்ஸ் இந்த செல்ஃப்ரெய்ஸிங் மாவுக்குத்தான். பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடான்னு எதுவும் இதுக்குத் தனியாச் சேர்க்க வேணாம்.

வெள்ளைச் சக்கரையை விட்டுட்டு ப்ரவுண் ஷுகர்( அந்த ப்ரவுண் ஷுகர் இல்லைப்பா. இது ஆபத்தில்லாத கரும்புச்சக்கரை) எதுக்குன்னா..... மைக்ரோ அவனில் பேக் செய்வதால் எலெக்ட்ரிக் அவனில் செஞ்ச இளம் ப்ரவுண் நிறம் கிடைக்காது. அதைச் சரிக்கட்டத்தான் இப்படி. வெள்ளையைவிட இதில் சக்தி கூடுதலாம்!

ஏலக்காய்த் தூள், முட்டை வாசனையைப் போக்க. இதுலே இண்டியன் டச் வேற கிடைக்கும். வெனில்லா எசென்ஸ் இருந்தால் சேர்க்கலாம்.

வெண்ணெய்க்குப் பதிலா நான் மார்ஜரீன் சேர்த்துருக்கேன், வெயிட் ப்ராப்ளம் இல்லாதவங்க வெண்ணையே சேர்த்துக்கலாம்

ஏற்கெனவே உடம்பு வெயிட் போடுது அது இதுன்னு ஏகப்பட்டது. இதுலே டபுள் க்ரீம் வேறயா? போச்சுறா...... அதுக்குத்தான் சிம்பிளா ஐஸிங் ஷுகர். இதைத் தூவ ஒரு டீ வடிகட்டியை பயன்படுத்தலாம். ஒரு ஸ்பூன் சக்கரையை டீ வடிகட்டியில் போட்டு அதை விளிம்பில் லேசாத் தட்டுனால் பூ மாரி பெய்யும்.


மேற் சொன்ன கலவையில் ரெண்டு கேக் செஞ்சேன். ஆறு பழம் இருந்ததே. ஒருவழியாப் பழம் தீர்ந்துச்சு. இப்போ...... கேக் உக்கார்ந்துருக்கு.



இப்ப அடுத்த முக்கியமான விஷயம்..... இதைத் திங்க ஆள் தேடணும்.

ஆறு வாழைப்பழங்களை ஒழித்துக் கட்டுவது எப்படின்னு தலைப்பு வச்சுருக்கலாமோ???

72 comments:

Anonymous said...

சீப்பாரத்துக்கிடந்த பழத்தை கேக் பண்ணியாச்சு, திங்கறதுக்கு கோபால் சாரோ ,கோகியோ மாட்டாமயா போயிடுவாங்க

Anonymous said...

சீப்பாரத்துக்கிடந்த வாழைப்ப்பழத்தை கேக் பண்ணியாச்சு. கோபால் சாரோ, கோகியோ மாட்டமாட்டாங்களா என்ன

said...

வாங்க சின்ன அம்மிணி.

முதல் துண்டு உங்களுக்குத்தான். எவ்வளோ ஆர்வமா ரெண்டுவாட்டி வந்துருக்கீங்க!!!!!..

பி.கு:

கோ & கோகிக்குக் கொடுத்துவைக்கலை(-:

Anonymous said...

முதல் தரம் தட்டச்சினது என்ன ஆச்சுன்னே தெரியலை. சரின்னு மறுபடியும் தட்டச்சினேன்.
ரெண்டு துண்டா குடுங்க

said...

//"வாங்களேன்...கேக் சாப்புடலாம்:-)"//


கேக் எல்லாம் சின்னப் பிள்ளைங்க திங்கிறது டீச்சர்...பிரியாணி செய்யும்போது சொல்லி விடுங்க...குடும்பத்தோட ஆஜர் அயிடறோம்.

said...

ஆஹா..டீச்சர்..புதுசு புதுசா 'கலக்குறீங்களே' ? :)

அதுசரி..இதுவரைக்கும் சாப்பிட்ட பயபுள்ளக என்ன சொன்னாங்க டீச்சர் ? :)

said...

கேக் செய்முறை நல்லா இருக்கு,ஆனா என் பொண்ணு கெஞ்சி கேட்டுகிட்டதால கேக் பண்ணறதை நிறுத்திவெச்சிருக்கேன்(அப்ப நான் பண்ணின கேக் எப்படி இருந்திருக்கும்). ஆமா டீச்சர் பக்கத்து வீட்டு அழையா விருந்தாளிக வரது இல்லையா? ஆளுக்கு ஒரு துண்டு குடுத்தாலே தீந்திருமே...நீங்க கேக் பேக்கினது அவங்களுக்கும் தெரிஞ்சிட்டது போல!!!!!!

நேத்து சரித்தர பாடமா அதான் ஜீட் விட்டுட்டேன் அதுவில்லாம கொஞ்சம் பிஸி இப்ப.

said...

அடுத்த முறை வாழைப்பழம் அல்லது வேறு ஏதாவது பழம் வீணாகும் போது மூட்டை சேர்க்காத கேக் பண்ணும் முறையைச் சொல்லிடுங்க ரீச்சர்.. :-)

said...

வாழைப்பழம் ஒவ்வொன்றாக பழுக்கும் என்று எதிர்பார்த்தீர்களா? உங்களுக்கே அதிகமாக தெரியலை?? :-))
வாழைப்பழம் ----> கேக் ------> பதிவு பதிவு தான் கடைசிவரை இருக்கும்.

said...

எங்க ஆபீஸ் ஒவ்வொரு monday மீட்டிங்லயும் வெள்ள்ளக் காரனுங்க நானே செஞ்சதுனு கலர்கலரா கேக் கொண்டுவந்து வெறுப்பேத்த்திட்டு இருக்காங்க. அவங்கள பலி வாங்க நல்ல ஐடியா குடுத்தீங்க. அடுத்த வாரம் அவங்களுக்கு இந்தக் கேக்தான். :)

said...

என்னங்க சின்ன அம்மிணி.

ரெண்டு துண்டு...... உங்களுக்கே முழுசையும் தூக்கிக் கொடுத்துருவேன். கைக்கு எட்டலை.....அடுத்த நாடாப் போயிட்டீங்களேப்பா(-:

said...

வாங்க மிஸஸ் டவுட்.

பிரியாணி மட்டுமா இல்லே தொட்டுக்க 'அது'வுமா?

said...

வாங்க ரிஷான்.

தின்னவங்களுக்கு இதுவரை ஒன்னும் ஆகலை:-))))

said...

வாங்க சிந்து.

அடுத்த வீட்டுலே எல்லாரும் ஊருக்குப் போயிருக்காங்க. இங்கே பள்ளிக்கூடம் இன்னும் கோடை விடுமுறையில் இருக்கு.

சரித்திரமுன்னு ஜூட் விட்டீங்களா? சரியாப் போச்சு. நானே ஒரு சரித்திரம், நம்ம வகுப்பே சரித்திரத்துக்குன்னுதான் இருக்கு. அப்பப்ப இப்படி எதாவது எக்ஸ்ட்ராகரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் இருக்கும்.

said...

வாங்க மதுரையம்பதி.

ஆப்பிள் சைடெர் Apple Cider முட்டைக்குப் பதிலாப் பயன்படுத்தலாம்.

ஒரு முட்டைக்கு பதிலா கால் கப் சைடெர்.

நம்மூர் கோயிலில் கேக் இப்படித்தான் செய்யறாங்க.

said...

வாங்க குமார்.

குலையில் ஒவ்வொரு சீப்பாப் பழுக்குதே.

அதே டெக்னிக் வீட்டுக்கு ஆகாதான்ற நப்பாசைதான்:-)

அடுத்தமுறை நாலே பழம் இருக்கும் 'சீப்பு' வாங்கிக்கணும்!!!!

said...

வாங்க விஜி.

ஒரு ரெண்டு டேபிள் ஸ்பூன் கோக்கோ பவுடர் சேர்த்துக்குங்க. நீங்களும் 'கலரா'க் கேக் கொண்டு போகலாம்!!!!

said...

சின்ன அம்மிணி said...
சீப்பாரத்துக்கிடந்த பழத்தை கேக் பண்ணியாச்சு..

>>>>அதானே இதை கேக்க ஆள் இல்லையா இங்க:):) ஆனாலும் துளசிமேடம் கேக்விவரம் அருமை. ஸ்டார்பக்ஸ்ல banana cake கூட நல்ல காஃபி குடிச்ச நினைவுவருது இப்போ!

said...

ரீச்சர், இதுல கேசரி பவுடர் சேர்த்தா இன்னும் கலர்புல்லா இருக்குமா? :))
(ஹிஹி, நம்ம புத்தி எங்க போனாலும் போகாதே!)

said...

//துளசி கோபால் said...
வாங்க மிஸஸ் டவுட்.

பிரியாணி மட்டுமா இல்லே தொட்டுக்க 'அது'வுமா?/


இதென்ன வம்பா போச்சு ???

டீச்சர் நீங்க வேற பீதியக் கிளப்பாதீங்க சொல்லிட்டேன்...ஆமாம்."அதுனா " எதுன்னு நான் கேட்கலைங்க டவுட்!

Anonymous said...

:)

said...

இந்த கேக் செய்ற லொள்ளு வேலைக்கெல்லாம் நா போமாட்டேன்.
அதுக்குத்தான் மக இருக்காளே! அவள படிச்சு செஞ்சுதரச் சொல்றேன். சேரியா?

said...

சிங்கை வரும்போது எடுத்துக் கொண்டு வருவியளா? :P
டோனட் மாதிரி இருக்கு.
அருமை!

said...

//ஆறு வாழைப்பழங்களை ஒழித்துக் கட்டுவது எப்படின்னு தலைப்பு வச்சுருக்கலாமோ???//

ஆறு வாழைப்பழங்களை வச்சிக் கட்டுவது எப்படி??? :)

டீச்சர்...கேக்கை இது வரை யார் யார் சாப்பிட்டார்கள்? அவர்கள் தற்போதைய நிலை என்ன? என்று கிறைஸ்ட் சர்ச் சுகாதாரத் துறை உங்களுக்கு ஏதோ லெட்டர் போட்டிருக்காமே? அப்படியா? :)))

said...

// அவங்கள பலி வாங்க நல்ல ஐடியா குடுத்தீங்க. அடுத்த வாரம் அவங்களுக்கு இந்தக் கேக்தான். :)//

வன்முறைக் கலாச்சாரம்...ச்சே...செய்முறைக் கலாச்சாரம் எப்படி எல்லாம் பரவுது பாத்தீங்களா டீச்சர்? :)

said...

//
இப்ப அடுத்த முக்கியமான விஷயம்..... இதைத் திங்க ஆள் தேடணும்.
//

ரொம்ப கஷ்டம் தான்...பாவம் நீங்க...

ஆனா கோபால் சார் இருப்பாரே...அவருக்கு இந்த பதிவை காட்டாம குடுத்துருங்க...:0))

அப்புறம் இந்த கோகிப்பையன்....அவனுக்கு பதிவை காட்டிட்டே குடுக்கலாம்...அவனுக்கு படிக்க தெரியலைன்னா அது அவன் பிரச்சினை...நாம என்ன பண்றது?

எனக்கு...வேணாம்...கேக்கு என்றால் எனக்கு ரொம்ப பயமே :0))

said...

உங்களுக்கு எங்கள மாதிரி பசங்க மேல ரொம்ப பாசம் ரீச்சர்.. வருசம் தொடங்குனதும் பொங்களம் என்ன/பொங்கல் என்ன... இப்ப கேக்..

said...

எனக்கு மிச்சம் ஒரு பீஸாவது கிடைக்குமா? லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா, 10 பின்னூட்டம் வேண்ணாலும் போடறேன்:-)

ஆமா, இந்த விஜி சார் ஆஃபிஸ் எங்கன்னு சொன்னா, அங்கியே நானும் திங்கள்தோறும் மீட்டிங்கில் கலந்து கொள்ளலாம்னு! ஹிஹி.

said...

டீச்சர். நியூட்டனின் விதி என்ன? ஒன்னாவதா ரெண்டாவதா மூனாவதான்னு தெரியலை. ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு ஆற்றலை இன்னொரு ஆற்றலகத்தான் மாத்த முடியும். ஆனா அழிக்க முடியாது :D

வாழைப்பழங்களை நீங்க அழிக்க முயற்சி பண்ணீங்க. ஆனா என்னாச்சு... அது கேக்காச்சு... அதையும் இன்னும் அழிக்க முடியலை பாத்தீங்களா? :D

said...

இன்னொன்னு சொல்றேன். பெண்கள் சமைக்கிறப்போ சமையலைத் தேவையில்லாமக் கடினப்படுத்தீர்ராங்கன்னு நெனைக்கிறேன். ஆறு வாழப்பழத்துக்கு இவ்ளோ கஷ்டப்பட்டிருக்க வேண்டாம். :)

வாழப்பழத்த நல்லாப் பெசஞ்சு வெச்சுக்கனும். அதே முட்டைய நல்லா அடிச்சுக்கனும். புசுபுசுன்னு வரனும். ஆம்லெட் போட்டாக்கூட மெத்துன்னு இருக்குற அளவுக்கு அடிச்சிக்கனும். மாவைத் தண்ணி விட்டுக் கரச்சிக்கனும். அதே செல்ப் ரைசிங் எடுத்துக்கோங்க. அதுல லேசா...அதென்ன மார்ஜரினா...அது... பெசஞ்ச பழம்...அடிச்ச முட்ட....அந்த பிரவுன் சுகர்.. எல்லாம் கலந்துக்கனும்.

நான் ஸ்டிக் அடுப்புல வெச்சு....குக்கி போட்டுறனும். கும்முன்னு இருக்கும். அல்லது... மாவைத் தண்ணியாக் கரைக்காம கேக்குக்குக் கரைச்சிட்டு ஓவன்ல வெச்சிரனும். இல்லைன்னா பான் கேக் ஊத்திரலாம். இல்லைன்னா இட்டிலி சுடலாம். அதுவும் இல்லையா....சப்பாத்தி மாவு பெசஞ்சு வாழைப்பழத்தப் போட்டுப் பெசஞ்சி பூரி சுடலாம். அதுன்னா ஒரு வேளைச் சாப்பாட்டுக்கு ஆச்சு. கேக்குன்னா எவ்ளோ திங்க முடியும் சொல்லுங்க? ;)

said...

கேக்ல முட்டை இருக்கும் என்று சாப்பிடமாட்டேங்குறா தங்கமணி...

முட்டை இல்லாத கேக் என்று ஏமாற்றி ரெண்டு முறை கொடுத்திருக்கேன்...

முட்டை இல்லைன்னா சாப்ட்ட்டா வராதா கேக்கு ?

said...

துளசி
அடுத்த முறை கனிஞ்ச வாழைப்பழத்தை சின்ன சின்ன துண்டாக்கி Freezerல உறைய வச்சிடுங்க. எப்ப தோணுதோ அப்ப சில துண்டங்கள்+ பால்+ சின்ன ஐஸ் கட்டி கலந்து சர்க்கரை சேர்க்காம Blender or magic bulletல ஒரு சுத்து சுத்தினா நல்ல மில்க் ஷேக் ஒர் ஸ்மூதி கிடைக்கும். பழங்கள் எல்லாத்தையுமே வெட்டி நீங்க உறைய வச்சுக்கலாம்.

said...

முட்டைக்கு பதிலா எண்ணெய் சேர்த்தாலும் soft ஆ வரும். ஒரு முட்டைக்கு கால் கப் எண்ணெய் கணக்கு.

ராகவன்: குக்கி, பான் கேக், மஃவின் பரவாயில்லை. அதென்ன இட்லி?

said...

ஆகா, கேக் பாக்க ரொம்ப நல்லா இருக்கே :)

சாப்பிட்டவுங்க மறுமொழி என்னவோ?

said...

பழங்களை நெசமாலும்
ஒழித்துக் கட்டினீர்களா
அல்லது கேக்குக்குள்
ஒளித்து வைத்தீர்களா:)))?

மேடம் இன்னொரு ரெசிபி சொல்லவா டயட்டு டயட்டு என்பவர்களுக்கு? இதற்கு எண்ணெய் வெண்ணெய் முட்டை ஒண்ணும் வேண்டாம்.

3 பழத்துக்கு... மைதா சோடாவுடன் சலித்தது அல்லது செல்ஃப் ரைசிங் மாவு 1 கப், பால் 1 கப், சீனி 1 கப்.
முதலில் பால் பழம் சீனி மூன்றையும் சீனி நன்கு கரையும் வரை பிசைந்து பின் மாவை சேர்த்துப் பிசைந்து அவனில் வைக்க வேண்டியதுதான்,மேலே ஏலக்காய் பொடி, குங்குமப் பூ தூவிக்கலாம்.

said...

முட்டையுடன் எங்க பேமிலுயும் 'டூ' விட்டாச்சு, முட்டை இல்லாமல் செய்ய என்ன செய்யனும் ? பட்டர் ரீப்பிளேஸ்மென்ட் ஓகேவா ?

said...

வாங்க ஷைலூ.

உதவிக்கு நன்றி.

பனானா கேக் அருமை தெரியாம மத்தவங்க வந்து என்னென்னவோ சொல்றாங்கப்பா!!!!!

said...

வாங்க அம்பி.

உண்மையைச் சொன்னா முதலில் வாழைப்பழக் கேஸரி முயற்சிக்கலாமான்னுதான் இருந்தேன்.

அப்புறம்தான் மனசை மாத்திக்கிட்டேன், யார் கைவிடாமல் கிளறுவதுன்னு:-)

கேஸரின்னதும் நீங்கதான் 'டாண்'னு மனசுலே ஆஜர்:-)

said...

டவுட் எல்லாம் கேக்கமாட்டீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் மிஸஸ் டவுட்.

இதுலே டவுட் வேற இருக்கான்றதே இப்போதைய டவுட்:-)

said...

வாங்க தூயா.
சிரிச்சுவச்சதுக்கு நன்றி:-))))

said...

வாங்க நானானி.

கேக் செய்யறதை விட, அதுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்களைச் சுத்தம் செய்ய்றது ரொம்ப நொச்சுப்பிடிச்ச வேலை.


மைக்ரோ என்றதால் தப்பினேன்.

நிதானமாச் செஞ்சுபார்க்கச் சொல்லுங்க மகளை. பழமும் பழுக்கணுமே:-)))))

said...

வாங்க ஜோதிபாரதி.

சிங்கை வரும்வரைத் தாக்குப்பிடிக்குமா?

நோ ச்சான்ஸ்.........

ஜெயண்ட் சைஸ் டோநட்!!!!!

said...

வாங்க கே ஆர் எஸ்.

நிலமை நல்லா இருக்கு. நேத்துமட்டும் கேக் செஞ்ச அதே நேரம் கிறைஸ்ட்சர்ச்சில் 2000 முறை மின்னல் வெட்டுச்சுன்னு ரிப்போர்ட் சொல்லுது!!!!!

http://nz.news.yahoo.com/a/-/mp/5268816/christchurch-lights/

said...

கே ஆர் எஸ்,

நம்ம விஜி ஏதோ பழிவாங்கப்போறாருன்னு நினைச்சா....அவர் போட்டுத்தள்ளும் முடிவோட இருக்காரேப்பா:-)

said...

வாங்க அதுசரி.

கோபாலுக்குத் தெரிவிக்கணுமுன்னுதான் இந்தப் பதிவே!!!!

ஒரு வார்த்தைச் சொல்லாமக் கல்லைப்போட்டுட்டான்னு ஒரு அவச்சொல் வரவிடலாமா?

said...

வாங்க இலா.

பள்ளிக்கூடத்துலே பகலுணவு தரும் வழக்கம் இருக்கேப்பா!!!

அவுங்க 'முட்டை' போட்டா நான் கேக்கு போடறேன்,அம்புட்டுதான்:-))))

said...

வாங்க கெக்கே பிக்குணி.

எப்ப வந்தாலும் ஒருபீஸ் என்ன எல்லா பீஸுமே உங்களுக்காச்சுன்னு எடுத்து ஃப்ரீஸ் பண்ணிட்டேன்.

said...

எங்க வீட்ல வாழைப்பழம் வாங்குறது அழுக மட்டுமே, இந்த வாரம் கேக் முயற்சி பண்ணி பாப்போம்

said...

நானும் இதே மாதிரி வாழைப்பழம் கோதுமை மாவு போட்டு .. ஸ்பாஞ்சு ன்னு ஒன்னு இரண்டு மூணு த்டவை செய்தேன்.. நல்லாருக்குன்னு டிபன் பாக்ஸ்ல வச்சு அதை என் பொண்ணு பள்ளிக்கூடமெல்லாம் கொண்டு போனா.. ஆனா எனக்குத்தான் அந்த வாழைப்பழ வாசம் என்னவோ செய்தது .. மூக்கை மூடிக்கிட்டு சாப்பிட்டா நல்லா இருந்தது.. இது போல சின்னப்புள்லையா இருந்தப்ப .. வாழைப்பழ மில்க் ஷேக் செய்தேன் அப்பவும் எனக்குத்தான் பிடிக்கல.. என் தம்பிக்கு ரொம்ப பிடிச்சதாம்.. சொன்னான்.
எப்படியோ வாழைப்பழம் காலியாகறது தானே மேட்டர்.... :)

said...

வாங்க ராகவன்.

அடுக்கடுக்கா இப்படிச் சமையல் குறிப்புகளை வாரித் தெளிக்கிறீங்க!!!!!

கொடுத்துவச்ச புண்ணியவதி வரப்போறவங்க:-)

எல்லாம் செய்யலாம். பிரச்சனை என்னன்னா...... இதையும் திங்க ஆள் வேணுமே!!!

said...

வாங்க செந்தழல்.

உங்க வீட்டுக்கு வந்த டீச்சரை இப்போதெல்லாம் கவனிக்கறதே இல்லைன்னு இருந்தேன்.

முட்டையில்லேன்னாலும் 'சாப்ட்டா' நல்லா இருக்கும், கொஞ்சம் ஆப்பிள் சைடரைச் சேர்த்தால்.

நம்ம பத்மா, எண்ணெய் போடச் சொல்லி இருக்காங்க பாருங்க.

said...

வாங்க பத்மா.

மில்க் ஸ்மூதி செஞ்சுட்டு ஐயா குடி அம்மா குடி, அள்ளிக்குடின்னு ஆயிருதுப்பா.

said...

வாங்க பிரேம்குமார்.

சாப்பிட்டவங்களுக்கு இதுவரை ஒன்னும் ஆகலை. 24 மணி நேரம் கடந்துபோயிருச்சு. ஆபத்தான கட்டத்தைத் தாண்டியாச்சுன்னு டாக்டர் சொல்லிட்டார்:-)))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

புது ரெஸிபிக்கு நன்றிப்பா.

அடுத்தமுறை அழுகட்டும் செஞ்சுறலாம்:-)

said...

வாங்க கோவியாரே.

பட்டர் ஓக்கேவான்னு சீனுவைக் கேக்கணும்:-)

முட்டைக்கும் நோவா? சைவ முட்டை இருக்கே!!!!

said...

வாங்க குடுகுடுப்பை.

இந்தக் கேக் மாவை சின்ன மஃப்பின் ட்ரேயில் ஊத்தியும் செஞ்சுக்கலாம்.

ஃப்ரீஸ் பண்ணினால் ஒன்னும் ஆறதில்லை.

காஃபி மார்னிங் கூட்டத்துக்கு ஓக்கே!!!

said...

வாங்க கயலு.

வாழைப்பழ வாசனைக்கே இப்படீன்னா.....

மலேசியாவுக்குப் போனால்......

சரி. விடுங்க!!!!

said...

ஏன் சேச்சி

வாழைப்பழ அப்பம் செய்திருக்கலாமே?? எங்க ஊர் "டிஷ்"நு சொல்லி அந்த ஊர்க்காரங்களுக்கு கொடுத்து (கொடுமை) இருக்கலாமே...

said...

வாங்க ஸ்ரீலதா.

முதல்லே அக்கம்பக்கத்து வீட்டு ஆட்களைக் கூட்டுங்க. அப்புறமா அப்பம் செஞ்சுக்கலாம்(-:

said...

//கெக்கே பிக்குணி said...
ஆமா, இந்த விஜி சார் ஆஃபிஸ் எங்கன்னு சொன்னா, அங்கியே நானும் திங்கள்தோறும் மீட்டிங்கில் கலந்து கொள்ளலாம்னு! ஹிஹி.//
எங்க ஆபீஸ் உலக்த்துலயே பசுமையான கேப்பிடல் பெர்லின்ல இருக்குதுங்க. வாங்க மிட்டிங்க்கு இந்த வாரத்துல இருந்து கேக் கூட ட்ரின்ங்ஸ் வேற குடுக்கிறாங்க :)

said...

ஆறு வாழைப்பழத்துக்கு அரை டஜன் ரெசிப்பியும் 60 பின்னூட்டமும்...

said...

கேக் சாப்பிடாமே வயறு நிறைஞ்சு போச்சு

said...

ஒரு ரெசிபிக்கு வந்தால் பின்னுட்டதில் இருந்து இன்னும் ரெசிபி கிடைச்சிருச்சு. ட்ரை பண்ணி பார்க்கிறேன். கேட்க நினைச்ச கேள்விக்கெல்லாம் குக்கிங் டிப்ஸ் உஷாரா கொடுத்திட்டீங்க...

said...

வாங்க நரேன்.

ஒருநாள் உணவை ஒழிஎன்றால் ஒழியாய்......

பாட்டி சொல்லிட்டுப்போயிட்டாங்க!!!!

said...

வாங்க நசரேயன்.


தப்பிக்க இதுவும் ஒரு வழி:-))))

said...

வாங்க அமுதா.

//....கேட்க நினைச்ச....//

அப்படியெல்லாம் 'வாயைத் திறக்க'விட்டுருவேனா?

:-)))))

said...

//துளசி கோபால் said...
வாங்க கோவியாரே.

பட்டர் ஓக்கேவான்னு சீனுவைக் கேக்கணும்:-)

முட்டைக்கும் நோவா? சைவ முட்டை இருக்கே!!!!
//

சைவ முட்டையா ? :))

ஐரோப்பாவில் Red Meat தவிர அனைத்தும் சைவமாம் ! அது போலத்தானே !

said...

//"வாங்களேன்...கேக் சாப்புடலாம்:-)"
66 Comments //

கேக் நன்றாக கல்லா கட்டி (66 Comments) இருக்கிறது !

said...

கோவியாரே,

சீனு பேசலைன்னா என்ன? பேசாம 'பட்டர்;கிட்டே கேட்டே இருக்கலாம்!!!!

அடை வைக்கும் முட்டைகளுக்குள்தான் உயிர் இருக்காம். இதுக்கு ஃப்ரீ ரேஞ்ச் கோழிமுட்டைதான் பயன்படும்.

கோழிப்பண்ணைகளில் கிடைக்கும் முட்டைகளை அடைகாக்க வச்சாலும் குஞ்சு பொரிக்காது.
அதனால் இதை சைவ முட்டையா ஆக்கிட்டாங்க.

கேக் பதிவுக்குப் பின்னூட்டம் வரக் 'கேக்'கணுமா?
கடையில் ஒரு பொருள் வந்தவுடனே வித்துப்போச்சுன்னா 'ஹாட் கேக்'ன்னு சொல்றாங்களே.

said...

Follow up:

துண்டம் போட்டு, ஃப்ரீஸரில் எடுத்துவச்சுருந்த கேக்கை எடுத்து மைக்ரோவேவில் ஒரு நிமிஷம் வச்சு எடுத்தபின் சாப்பிட்டோம்.

சூப்பர். அன்றுபோலவே இன்றும்:-))))

said...

வணக்கம்

நான் ஒனிடா பிளாக் பெரி ஒவன் வைத்துள்ளேன். அதில் எல்லாமே செய்யலாம் என்றார்கள்.( விலை 9500/-) இதில் கேக் , பிஸ்கட் ,பன், பிரட் செய்வது எப்படி என தெரியவில்லை. ( கன்வெக்சன் ஒவன்) கேக் செய்வதற்கு முன் பிரி ஹீட் செய்யணும் என்றார்கள் அது எப்படி செய்யணும் என தெரியவில்லை. சுழலும் கண்ணாடி தட்டு உள்ளது. பிரிஹீட் செய்தால் வெடித்து விடுமோ என பயமாய் உள்ளது. இந்த மாடல் ஒவன் பார்த்துள்ளீர்களா? தயவு செய்து எப்படி செய்வது என சொல்லமுடியுமா? ஒவன் வாங்கி 4 வருடம் ஆகிவிட்டது அப்படியே உள்ளது.சமையல், தந்தூரி வகை, கேக் , பிஸ்கட் என எல்லாம் செய்யலாம் என்றார்கள் ஆசை பட்டு வாங்கிவிட்டு யூஸ் பண்ண தெரியாமல் உள்ளது.

said...

வாங்க ஷாந்தி ஸ்ரீ.

துளசிதளத்துக்கு நல்வரவு!

மைக்ரோவேவ் அவனை ப்ரீஹீட் பண்ண வேண்டியதைல்லைன்னுதான் சொல்றாங்க.

கன்வெக்‌ஷன் மோட் பட்டனை தட்டிட்டு நேரடியாவே சமைக்கலாமாம்.

அவன் கூடவேவந்த புக்லெட்/ப்ரோஷரைப் பாருங்களேன். அதுலேயே சமையல் குறிப்பு வகைகளையும் ஒரு சின்னப் புத்தகமாகப் போட்டுருந்துருப்பாங்களே.

என்னிடம் கன்வெக்‌ஷன் அவன் இல்லாததால் விவரமா ரொம்பச்சொல்ல முடியலை:(

கூகுளிச்சுப் பாருங்க. முத்து கிடைக்கலாம்.

குட் லக்.