Monday, January 19, 2009

புத்தம் சரணம்.....சந்தையில்

கொஞ்ச நாளா, மனசு ஏன் ஒரு நிலையில் இல்லாம ஆடுதுன்னு இப்பப் புரிஞ்சுபோச்சு. புத்தா, புத்தா, புத்தா.....கஜபீடத்தில் இருக்கும் இந்த புத்தர் நம்ம வீட்டுக்கு வரணுமுன்னு பிடிவாதம் பிடிச்சுக்கிட்டு இருக்கார். தூக்கிப் பார்த்தேன். பளிங்குக் கற்சிலை. இளம் பச்சை நிறம். அழகாத்தான் இருக்கு. பீடத்தில் மூணு பக்கத்தில் மொத்தம் ஏழு யானைகள். விலை கேட்டப்ப வாயடைஞ்சு போச்சு. அவ்ளோ மலிவுன்னு சொல்ல வந்தேன்., பேசாம நம்ம வழக்கப்படி அரைவிலை கேட்டுருக்கலாம். ஆனால்.... 'சாமிக்கு பேரமா'ன்னு பெரியமனசு செஞ்சுட்டேன்.
அட..... எப்படி இவ நம்ம தர்மத்தை விடாம நியூஸியிலும் பேரம் பேசுறாளேன்னு....... இது சந்தை(மாதிரி) கடை. ஒவ்வொரு ஞாயிறும் உள்ளூர் ரேஸ் கோர்ஸ் மைதானத்துலே நடக்கும். அழகழகான கைவினைப்பொருட்கள், காய்கறிகள், பூக்கள், செடிகொடி மரங்கள், மரச்சாமான்கள், அவுட்டோர் ஃபர்னிச்சர்கள், பார்பக்யூ மேசைகள் இப்படி. புதுசு பழசுன்னு. பழசு வாங்க வெக்கப்படக்கூடாது. இதை ஒரு பெத்தபேரில் சொல்லிக்கலாம், ஆண்டீக் :-)))) ஒன்னும் வாங்கலைன்னாலும் சும்மாச் சுத்திட்டு வருவோம். அதான் டாக்டர் தினமும் (ஞாயிறு மட்டும்) நடைப்பயிற்சி செய்யணுமுன்னு சொல்லி இருக்காருல்லே!



மக்கள்ஸ் கூடும் இடமுன்னா தீனிக் கடைகள், பொழுதுபோக்குகள் வேணுமே. ஒரு பிஜி இந்தியரும் கடை போடறார்.


ஃப்ரெஞ்சு அம்மிணி தோசை ஊத்தறதைப் பாருங்க. T குச்சியில் மாவைப் பரத்தும் அழகே அழகு!

இப்பெல்லாம் 'கடைபோடும் சீனர்கள்' கூட்டம் மொலுமொலுன்னு மேயுது. நான் முற்பிறவியில் தப்பித் தவறி செய்த ஏதோ புண்ணியத்தால், இங்கே இவுங்க கடையில் நல்ல கீரைக்கட்டு கிடைக்குது. (பசு மாட்டுக்குப் புல் கொடுத்தேனோ என்னவோ!!!) இன்னொரு மவோரி நபர், நமக்காகப் பாவக்காய், வெள்ளைப்பூசனிக்காய் , சுரைக்காய்ன்னு விளைவிச்சுக் கொண்டு வந்து கோடையில் மட்டும் கடை போடுறார்.

ரோட்டரி சங்கம், கடைகளுக்கான இடத்துக்கு வாடகைக் காசு வசூலிக்கும். 35 டாலர் ஒரு கடைக்கு ஒரு நாளைக்கு. காலையில் 9 முதல் பகல் 2 வரை. சங்கத்துக்காரங்க கடைகடையா வந்து வாடகை வசூலிப்பதைப் பார்த்தால் தமிழ் சினிமாவில் வில்லன் ஆட்கள் தண்டலுக்கு வரும் காட்சி நினைவில் வரும். இந்தக் காசில் செக்யூரிட்டி, க்ளீனர்ஸ், நாலைஞ்சு வேலை ஆட்கள் இவுங்களுக்கெல்லாம் கொடுத்ததுபோக மீதிப் பணம் எல்லாம் தரும காரியங்களுக்குப் போயிருது. இதுவரை தருமம் செஞ்சது ஒன்னரை மில்லியன் டாலர்கள். வாரம் அஞ்சு பேர்ன்னு சங்கத்து ஆட்கள் எல்லாமே தன்னார்வச் சேவையா இதில் வேலை செய்றாங்க. லண்டன் போர்ட்டொபெல்லோ ரோடு மார்கெட் மாதிரி புகழ் அடைஞ்சுருக்கு. வாராவாரம் பத்தாயிரம் பேர் வருகையாம். தெற்குத் தீவிலேயே பெரிய மார்கெட். சுற்றுலாப் பயணிகளும் வந்து பார்த்துட்டுப் போறாங்க.
இப்ப 1989 வது ஆண்டு Car Boot sale ன்னு ரிக்கர்ட்டன் மால் கார் பார்க்கில் ஆரம்பிச்சு அசுர வளர்ச்சியால் இந்தப் பகுதியிலேயே பல இடங்கள் மாறிக் கடைசியா (இப்போதைக்கு) உள்ளூர் ரேஸ் கோர்ஸ் மைதானத்தை வாரம் ஒருநாள் பயன்படுத்த லீஸுக்கு எடுத்துருக்காங்க.

இம்மாங்கூட்டத்தைப் பார்த்துத் திகைச்சுப்போன அரசியல்வியாதிகள், இப்பெல்லாம் தேர்தல் வரும் வருசம் இங்கே ஒரு ஸ்டால் 'வாடகை'க்கு எடுத்துக்கிட்டு அவுங்க செய்யப்போற நன்மை, எதிர்க்கட்சி செய்யப்போறத் தீமைகளை விலாவரியா நமக்கு அச்சடிச்சுக் கொடுத்துக்கிட்டு இருக்காங்க.

மைக் புடிச்சுப் பேச்சு கீச்சுன்னு ஒன்னும் இல்லை. 'கப்சுப்'பா இருந்தாத்தான் நாங்க 'கேப்போம்':-)

பாராளுமன்ற அங்கத்தினர்களின் சொந்தச் சமையல்குறிப்புகளைப் புத்தகமாப் போட்டு ஒரு வேட்பாளர் மூணு மாசம் முன்பு நடந்த தேர்தலில் கொடுத்தார். அவர் ஒரு செஃப். அதனால் இது தொழிற்சார்ந்த புத்தகம்!!!

கூடுதல் சந்தைப் படங்கள் இந்தச் சுட்டியில்

பழைய பொருட்கள், ஆடை ஆபரணங்கள், குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்கள், எல்லாம் இருந்தாலும் எங்க ஓட்டு பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்கே. சின்னதா ஒரு மேய்ச்சல் மேயணும்.

ஜேம்ஸ் ஹரியட் கண்ணுலே பட்டார். எவ்வளோ நாளாச்சு, இவரைப் படிச்சு. All Creatures Great And Small இன்னும் மனசுலே இருக்கு. இன்னிக்கு இந்த (If Only They Could Talk & It Shouldn't Happen to a Vet ) ரெண்டு கதைகளும் ஒன்னா ஒரே புத்தகமாக் கிடைச்சது.

மனுசன் சும்மாச் சொல்லக்கூடாது.... படிக்கப் படிக்கச் சிரிப்போ சிரிப்பு.
நாய், பூனை, மாடு, குதிரைன்னு ஒன்னுவிடாம 11 புத்தகம். முதல் புத்தகம் வெளி வந்தது 1970. 54 வயசுலே!

முப்பதுகளின் கடைசியில் இருந்த காலகட்டங்களில் ஸ்காட்லாந்து விவசாயிகள், பண்ணை நிலவரங்கள், ஊருளவாரங்கள் எல்லாம் கலந்துகட்டிக் கண்முன்னால் வருது.

" யோவ் வெட்டு, நேத்து ராத்திரி மாடு செத்துப் போச்சுய்யா.வந்து சோதிச்சுப் பார்த்து இடிவுழுந்து செத்துச்சுன்னு ரிப்போர்ட் கொடுய்யா"

" மழையே பெய்யலையே. எப்படி இடி விழும்?"

" எங்கூட்டாண்டை மழை பெய்ஞ்சதுய்யா. நீ சீக்கிரம் வந்து இடி வுழுந்துதான் மாடு அவுட்ன்னு எழுதிக்கொடுய்யா. இன்ஷூரன்ஸ் ஆபீஸுக்கு ஓடணும்நான். தலைக்கு மேலெ நிறைய வேலை கிடக்கு.

"மாட்டைப் பார்த்தா இடிவிழுந்து தோல் தீய்ஞ்ச அடையாளம் ஒன்னும் இல்லையேப்பா. என்னாலே பொய்யா எழுதித் தரமுடியாது. மாட்டை அறுத்துப் பார்த்து உண்மைக் காரணத்தைத்தான் எழுதுவேன்."

"எம்பது பவுண்ட் நஷ்டப்படச் சொல்றே...... உன் காசையாக் கொடுக்கப்போறே.....இரு இரு. நான் யாருன்னு உனக்குத் தெரியாது இந்தப் பேட்டையில் நீ எப்படி இனிமேல் தொழில் பண்ணுவேன்னு நானும் பாக்கறேன்.வுடமாட்டேன்யா, உன்னைச் சும்மா விடமாட்டேன்"

வேறொரு பண்ணையில்:

"மாடு இடிவிழுந்து எப்படிப் பொசுங்கி இருக்கு பாருங்க. சீக்கிரம் சர்ட்டிஃபிகேட் எழுதித்தாங்க."

"ஆமாம்ப்பா. மாடு உடம்புலே இருந்து கால் குளம்பு வரை மின்னல்வெட்டித் தீய்ஞ்சு போயிருக்கு. அடையாளம் சரியாத்தான் இருக்கு. ஆனால்.......... மெழுகுவத்தி உருகி அங்கங்கே விழுந்ததைச் சரியாச் சுத்தம் பண்ணாம விட்டுட்டியே......"


ஒன்னரை மணி நேரம் சுலபமாக் கடந்து போயிருச்சு. இனி வீட்டுக்குப்போய் சமையலை முடிக்கனும். கீரை கிள்ள கூடுதல் கைகள் இருக்கும்போது மசமசன்னு நான் நிக்கக்கூடாது:-)
சாப்பாடு ஆனதும் அடுத்த சுற்றலை ஆரம்பிக்கலாம். போயிறாதீங்க இருங்க.

37 comments:

said...

ரங்குவுக்காக ஒரு சோதனை ஊட்டம்:-)

said...

ஹலோ மேடம், புத்தாண்டு வாழ்த்துகள்! நீண்ட நாட்களாக பின்னூட்டம் எழுத நினைக்கிறேன்,பொழுது எப்படியோ போய் விடுகிறது.ஆனால் உங்கள் பதிவுகளை என்றும் மிஸ் பண்ணுவதில்லை,பிள்ளைகளுக்கும், வீட்டுக்காரருக்கும் கூட,அறிமுகப்படுத்தி உள்ளேன்.எவ்வளவு சுவையாக எழுதுகிறீர்கள்.அன்புடன் பானு,சிட்னி.

said...

//ஃப்ரெஞ்சு அம்மிணி தோசை ஊத்தறதைப் பாருங்க. T குச்சியில் மாவைப் பரத்தும் அழகே அழகு!//

ஆமாமா... கொள்ளை அழகு :)

said...

//இம்மாங்கூட்டத்தைப் பார்த்துத் திகைச்சுப்போன அரசியல்வியாதிகள், இப்பெல்லாம் தேர்தல் வரும் வருசம் இங்கே ஒரு ஸ்டால் 'வாடகை'க்கு எடுத்துக்கிட்டு அவுங்க செய்யப்போற நன்மை, எதிர்க்கட்சி செய்யப்போறத் தீமைகளை விலாவரியா நமக்கு அச்சடிச்சுக் கொடுத்துக்கிட்டு இருக்காங்க.//

எல்லா நாட்டிலும் அரசியல் வியாதிகள் அவிங்க வேலையில் கண்ணும் கருத்துமாத்தான் இருக்காங்கே. :)

said...

//பிரேம்குமார் said...
//ஃப்ரெஞ்சு அம்மிணி தோசை ஊத்தறதைப் பாருங்க. T குச்சியில் மாவைப் பரத்தும் அழகே அழகு!//

ஆமாமா... கொள்ளை அழகு :)
///


ரிப்பிட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்! :))

said...

// நான் முற்பிறவியில் தப்பித் தவறி செய்த ஏதோ புண்ணியத்தால், இங்கே இவுங்க கடையில் நல்ல கீரைக்கட்டு கிடைக்குது. (பசு மாட்டுக்குப் புல் கொடுத்தேனோ என்னவோ!!!) //


இதிலே என்ன சந்தேகம் டீச்சர் ! இனிய வாழ்வு வாழ, நாலு காரியங்கள் செய்யவேண்டும் தினமும். அதில் ஒன்று ஒரு பசு மாட்டுக்குப் புல் கொடுங்கள் தினமும்
எனும் அறிவுரையைத் திருமூலர் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

அண்மையில் விஜய் டி.வியில் ஒலிபரப்பான பிரபல நடிகர் சிவகுமார் அவர்கள் இது பற்றி
வெகுவாக சிலாகித்துச் சொன்ன விவரம் எனது வலையில் இட்டிருக்கிறேன்.

பசுமாட்டுக்கு ஒரு வாய் கவளம் கொடுப்பது மட்டுமன்றி இன்னொன்றும் நீங்கள் செய்கிறீர்கள்.
அது என்ன எனத்த்தெரிந்துகொள்ள வாருங்கள்:

http://vazhvuneri.blogspot.com

உங்களுக்குப் பரிச்சயமான வலைப்பதிவு தான் இது.

சுப்பு ரத்தினம்.

said...

கீரைன்னாலே எனக்கு முளைக்கீரை தான்.. அதுல என்ன செய்தாலும் நல்லா சாப்பிடுவேன். ஊருக்கு போனா கீரைக்காரப்பாட்டிக்கு வெயிட் செய்வேன் ... :) நீங்க கீரைய என்னவா செய்யபோறீங்கன்னு சொல்லாம போயிட்டீங்களே..

said...

வாங்க பானு.

நல்வரவு. பிள்ளைங்க தமிழ் படிக்கிறாங்களா?

அப்டீன்னா கொஞ்சம் நல்ல தமிழில் வரும் பதிவுகளைப் படிக்கச் சொல்லுங்க.

டிவித் தமிழ் மாதிரி நம்ம பதிவுத் தமிழ் இருக்குன்னு நினைச்சு அதுதான் உண்மைத் தமிழ்ன்னு.....
குழம்பிடப் போறாங்க.

said...

வாங்க பிரேம்குமார்.

மாவைத்தானே சொல்றீங்க? இல்லே தோசைக் கல்லையா?

said...

வாங்க கோவியாரே.

போனவாரம் இன்னொரு இடத்துலே உள்ளூர் எம்.பியைச் சந்திச்சுப் பேசிக்கிட்டு இருந்தப்ப, அடுத்த தேர்தலுக்கு இன்னும் 32 மாசம்தான் இருக்குன்னாங்க.

ஆமாம். இப்போ இருந்தே கஷ்டப்பட்டு வேலை செய்யுங்க. அப்பதான் உங்க கட்சி அடுத்தமுறை ஜெயிக்குமுன்னு சொல்லிட்டு வந்தேன்.

said...

வாங்க ஆயில்யன்.

ஆயில் சேர்க்காத தோசை அது:-))))

said...

வாங்க சுப்பு ரத்தினம்.

சிவகுமார் பேச்சுதானே?

திருமூலரை அருமையாச் சொன்னார்.

ஒன்னும் முடியலைன்னா தினம் ஒரு இன் சொல்லா ஒரு பின்னூட்டம் போட்டாலும் போதுமாம் இப்போதையக் கணினி காலத்தில்.

said...

வாங்க கயலு.

கீரை எப்பவுமே பொரியல்தான்.

மசியல், பருப்பு சேர்த்துன்னு வைக்கமாட்டேன். அப்புறம் அது ஒரு ஆறு மாசத்துக்கு ஃப்ரிட்ஜ்லே உக்கார்ந்துருக்கும்:-)

said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

கீரைன்னாலே எனக்கு முளைக்கீரை தான்.. அதுல என்ன செய்தாலும் நல்லா சாப்பிடுவேன். ஊருக்கு போனா கீரைக்காரப்பாட்டிக்கு வெயிட் செய்வேன் ... :) நீங்க கீரைய என்னவா செய்யபோறீங்கன்னு சொல்லாம போயிட்டீங்களே..
///


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

முளைக்கீரை மசியல் செஞ்சு,சுடச்சுட சாதம் போட்டு அதுல கீரையை போட்டு ஒரு கை வெண்ணை (கொஞ்சமாத்தான் ச்சும்மா ஒரு பில்ட் அப்!) போட்டு கலந்து கட்டி குந்த வைச்சு உக்காந்து தின்னா......!

தின்னுக்கிட்டே இருக்கலாம் ! :))))

(ஊருக்கு போறப்ப டிரை பண்ணுவேனே!!!!!)

Anonymous said...

ஜேட் புத்தரை தேடிட்டு ஜாக்கி சான் இன்னும் சுத்தறார். உங்க வீட்டுக்கு வந்தாலும் வருவார் பாருங்க :)

said...

ஃப்ரெஞ்சு அம்மிணி தோசை ஊத்தறதைப் பாருங்க. T குச்சியில் மாவைப் பரத்தும் அழகே அழகு..........ஆன இப்ப அங்க ஊத்துறது இல்லை,நமதான் பிரான்ஸ் இல் ஊத்துறம்

said...

வாங்க ஆயில்யன்.

மாயவரத்துக்காரங்க தொல்லை தாங்க முடியலையேப்பா. மசியல் மசியல்ன்னு ஆசைகாட்டுனா எப்படி?

ஊருக்குப் போகும்போது சொல்லுங்க. நானு வரேன். அந்த வெண்ணெயை விடறதில்ல:-)))

said...

வாங்க சின்ன அம்மிணி.

ஜாக்கி வந்தா அவரையும் 'படம் எடுத்து'ப் பதிவு போட்டால் ஆச்சு:-))))

said...

வாங்க கஜன்.

அம்மிணி உங்களை அங்கே தோசை ஊத்தச் சொல்லிட்டு இங்கே நம்மூருக்கு வந்துட்டாங்க:-)))

said...

மனுசன் சும்மாச் சொல்லக்கூடாது.... படிக்கப் படிக்கச் சிரிப்போ சிரிப்பு.
நாய், பூனை, மாடு, குதிரைன்னு ஒன்னுவிடாம 11 புத்தகம். முதல் புத்தகம் வெளி வந்தது 1970. 54 வயசுலே!

இவர்தான் உங்க இன்ஸ்ப்ரேஷனா டீச்சர்
உங்க பதிவுலயும் சிரிப்புக்கு குறைவில்லை.

said...

படிச்சிட்டேன் டீச்சர் ;)

said...

உள்ளேன் ரீச்சர். போன பதிவுக்கு டயட் காரணங்களினால் வர முடியவில்லை! :)

said...

மாஸ்டர்..ஒரு ஆனியன் ரவா பார்சல்

said...

பக்கோடா நாலு ஒரு ரூபாயா? அது எப்படி? எங்க ஊரில் எல்லாம் பக்கோடா எடை போட்டுதான் தருவாங்க. இப்படிக்கு
இன்னும் ஒரு பதிவுக்கு மேட்டர் குடுத்த மாணவன்

said...

வணக்கம் ரீச்சர்.. எனக்கும் இந்த மாதிரி பிளீ மார்க்கெட் சுத்தி பாக்க பிடிக்கும் . ஒரு சைனீஸ் கடையில் குட்டி சங்கு மட்டும் வைத்து யானைகுட்டி பார்த்தேன். உங்க நியாபகம் தான் வந்தது. அவர் ரெண்டு யானையா இருந்தா வாங்கலாம்ன்னு சொல்லி அடுத்த கடைக்கு கூட்டிகிட்டு போயிட்டார் :((

said...

nice website ilike your template...

said...

கீரை கிள்ள கூடுதல் கைகள் இருக்கும்போது மசமசன்னு நான் நிக்கக்கூடாது:-)//

இதுக்காகவும் கொடுத்து வெச்சிருக்கீங்க போல டீச்சர்.

:)))))))))

said...

வாங்க அமித்து அம்மா.

இன்ஸ்ப்ரேஷன்னு பார்த்தால்.....

நம்ம வீட்டுலே 33 வருசமாச் செல்லங்கள் நடமாட்டம் இருக்குப்பா.

நம்ம செல்லங்களைப் பத்தி எழுதுனப்ப தலைப்பை எனக்குப் பிடிச்ச எழுத்தாளர்கிட்டே இருந்து நைஸா உருவிட்டேன். சின்னதா அதுலே ஒரு மாற்றமும் செஞ்சுக்கிட்டேன்.

என் செல்ல(செல்வ)ங்கள்.

சிவசங்கரி ஒன்னும் சொல்லமாட்டாங்க என்ற அதீத நம்பிக்கை!

ஜேம்ஸ் ஹெரியட் படிச்சது ஒரு 22 வருசம் முன்புதான்.

said...

வாங்க கோபி.

பரிட்சைக்கு வரும் பகுதி இது:-)

said...

வாங்க கொத்ஸ்.

(உங்களுக்காக) தேங்காய் சேர்க்கலையே.....
அப்படியுமா?

அடடா......

said...

நரேன்,

இது தேன், மேப்பிள் சிரப் இப்படித் தொட்டுக்க இருக்கும் தோசை.

ஆனியன் ரவான்னா அது துளசிவிலாஸில் கிடைக்கலாம்.

said...

கொத்ஸ்,

இது பட்டணம் பக்கோடா இல்லை.
பக்கோரா.....வட இந்திய பக்கோரா.

ஒருவகை போண்டா(மாதிரி)

said...

வாங்க இலா.

அடுத்த கடைக்கும் இந்தக் கடைக்கும் இடையில் இன்னொரு ஊர் இருந்துச்சா?

யானையைக் கோட்டை விட்டுட்டீங்களே......

said...

தமிழ்ப்ளொக்கர்ஸ் யூனிட்?

வாங்க, நீங்க யாரா இருந்தாலும்.

வருகைக்கு நன்றி. உங்க பாராட்டுக்கும்தான்:-)

said...

வாங்க புதுகைத் தென்றல்.

கீரை கிள்ளூவது ஒருவகை தியானம்னு சொல்லிப் பாருங்களேன்:-)))

'மசியலை
ன்னா இது ஒரு தெரபி

பேரை மாத்துனால் ஆச்சு!!!

said...

கீரை கிள்ளூவது ஒருவகை தியானம்னு சொல்லிப் பாருங்களேன்:-)))

'மசியலை
ன்னா இது ஒரு தெரபி

பேரை மாத்துனால் ஆச்சு!!!//

ஆஹா எம்புட்டு டெக்னிக் கையில வெச்சிருக்கீங்க!!!

அதனாலதான் வலையுலகின் டீச்சரா நீங்க மட்டும்தான் நிக்கறீங்க!!!!!

said...

ரொம்பப் புகழாதீங்க புதுகைத் தென்றல்.

வெக்கமா இருக்கு.

ம்ம்ம்ம் அப்புறம்:-))))