(பதிவைப் படிக்காமல் பின்னூட்டமிடும் வகுப்புக் கண்மணிகளுக்கான டெம்ப்ளேட்:
(பதிவைப் படிக்காமல் பின்னூட்டமிடும் வகுப்புக் கண்மணிகளுக்கான டெம்ப்ளேட்:
1.விரைவில் மம்மி குணமடைய வேண்டுக்கின்றோம்.
2. எங்கள் கண்ணீர் அஞ்சலி. மம்மியின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்)
எங்கூர் பப்ளிக் ஆஸ்பத்தியில்தான் நடந்துச்சு. ரிப்போர்ட்டை வேணுமுன்னா ஸ்கேன் செஞ்சு போடவா?
உயரம் அஞ்சடிக்கும் குறைவு. அவுங்க எடை அம்பது அம்பத்தியஞ்சு கிலோதான் (ஹைய்யோ தாஜ்மஹால்!!) சரியாச் சாப்புடாமக் கொள்ளாம உடம்பைக் கெடுத்துக்கிட்டு இருந்துருக்காங்க. இருபத்தியஞ்சு வயசுலேயேப் போய்ச் சேர்ந்துட்டாங்க. ஹூம்........ சாகற வயசா? ஆயுசு என்னவோ அவ்ளோதான் விதிச்சிருந்துருக்கு(-:
இன்னிக்கான சர்க்யூட்க்கு எங்கே போகலாம்? அதுவும் காசே செலவு பண்ணாம..... ஆ............. ஆப்டுக்கிச்சு. நான் ஒரு ஏழெட்டு வருசமா இங்கே வரவே இல்லை. உள்ளூர் சமாச்சாரமுன்னா இவரைக் கிளப்பிக்கிட்டு வர்றதே பெரும்பாடு.
ஆர்ட் காலரி அனுபவத்துக்குப் பிறகு, நாமும் கொஞ்சம் சூதானமா இருக்கணும்தானேன்னு வரவேற்பு மேசையில் இருந்தவர்கிட்டே, படம் புடிச்சுக்கலாமான்னு கேட்டால்........ எவ்வளோ வேணுமுன்னாலும் புடிச்சுக்கோன்னுட்டார். இந்த கோடை காலத்துக்குன்னு என்னென்ன ஸ்பெஷல் போட்டுருக்காங்கன்னு ஒரு லிஸ்ட் கொடுத்தார். எங்கெங்கே என்னென்ன என்ற விலாவரியான விவரமும் கூடவே கிடைச்சது.
அப்படியே கொஞ்சூண்டு சரித்திரத்தையும் சொல்றேன் ( இது பரிட்சைக்கு வரும் பகுதி)
1867 வது ஆண்டு நமக்குன்னு ஒரு ம்யூசியம் கட்டணுமுன்னு பொதுமக்கள் கேட்டுக்கிட்டதுக்கு இணங்க எந்த இடம் வாகா இருக்குமுன்னு ஆராய்ஞ்சு தாவர இயல் பூங்காவை ஒட்டுன இடம் சரியா இருக்குன்னு தீர்மானிச்சு( இதுக்கே ரெண்டு வருசம் ஆயிருச்சு. எது செய்யணுமுன்னாலும் இங்கிலாந்துக்குச் சேதி அனுப்பி அங்கிருந்து அனுமதி வாங்கணுமே. இமெயிலா பாழா அப்போ!!! )உள்ளுர் பத்திரிக்கையில் கட்டிடம் கட்ட ஒரு டெண்டர் அறிவிப்பு செஞ்சாங்க.
பொல்லாத கட்டிடம்...... ஒரே ஒரு ஹால். 70 அடி நீளம் 35 அடி அகலம்.
கட்டிடத்தைக் கட்டி முடிச்சு திறப்புவிழா செஞ்சது 1870 வது வருசம். அதுக்குப்பிறகு கொஞ்சம் கொஞ்சமா விஸ்தரிச்சுப் புதுசா மாடியெல்லாம் வச்சுக்கட்டி (107 வருசத்துக்குப் பிறகு) அண்டார்டிக் கண்டத்துக்குன்னு உண்டானத் தனிப்பட்ட சுவையான விஷயங்களையெல்லாம் சேர்த்துத் தனி ஹாலில் வச்சாங்க. அதுக்கு நம்ம எடின்பரோக் கோமகனார் (Duke of Edinburgh) இங்கே வந்துருந்தப்ப அவர் கையால் முன்னாள் அருங்காட்சி இயக்குனர் Roger Duff என்பவர் பெயரை அந்த ஹாலுக்குச் சூட்டினார்.( என்னத்தைக் கோமகனோ, தன் பெயரை வச்சுக்கத் தெரியலை போங்க)
சமீபத்தில் 1995 வது ஆண்டு ஒன்னேகால் நூற்றாண்டு விழா அமோகமா நடந்தது. நாலு மாடிக் கட்டிடமுன்னு சொன்னாலும் ரெண்டு மாடி முழுக்கத்தான் காட்சிக்கு இருக்கு. மத்த மாடிகளில் அலுவலகம், சேமிப்புக் கிடங்கு, அது, இது கிடக்கு. இயக்குனர்கள், நிபுணர்கள் எலோரும் ரொம்ப நட்பாவே இருக்காங்க.
ஒருமுறை மகள் பள்ளிக்கூடச் சுற்றுலான்னு Fossil ஃபொஸில் இருக்கும் ஆற்றங்கரைப் பகுதிக்குப் போனப்ப, அங்கிருந்து ஒரு கல் போல ஒன்னைக் கொண்டுவந்துருந்தாள். ரெண்டுபக்கம் ஒரே அளவா, அமைப்பா நடுவில் அரைவட்டக் குழியோடு ஒரு ராட்சஸப் பறவை மூக்குபோல இருந்துச்சு. அது என்னவா இருக்கும்முன்னு கேட்க ம்யூஸியத்துக்குப் (Curator)போன் பண்ணிக்கேட்டு, அவர் கொண்டுவரச் சொன்னாரே போய்ப் பார்த்தோம். அதை என்னவோ பரிசோதனையெல்லாம் செஞ்சுட்டு, 1.25 மில்லியன் ஆண்டு பழமை வாய்ந்ததுன்னு ஒரு சர்ட்டிஃபிகேட்டும் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஆற்றுப்படுகையில் இருந்தப்பத் தண்ணீர் அதை மெதுவா அரிச்சு ஓட்டைவிழுந்து அதுவழியா நீர் போயிருக்குன்னார்.
உள்ளே நுழைஞ்சதும் நம் கண்ணில் விழுவது உள்ளூர் மவோரிகள் அந்தக் காலத்தில் (வெள்ளையர்கள் இங்கே வந்து சேர்ந்த காலக் கட்டம்) எப்படி இருந்தார்கள், அவுங்க வாழ்க்கை முறை என்ன? என்பதெல்லாம் அப்படியே விவரிச்சு இருக்கு. நிஜ ஆள் அளவிலான உருவப் பொம்மைகள்.
ஐயோ.... அப்பவும் சமையல் செய்வது பொம்பளை வேலை தானான்னு மனசுக்குப் பட்டுச்சு.
மீன் பிடிக்க உதவும் தூண்டில்முள் செஞ்சுக்கிட்டு இருக்காங்க சில ஆண்கள்.
அட! சுரைக்குடுக்கை இருந்துருக்கு. (அப்போ ஏன் சுரைக்காய் இங்கே கிடைக்கலை???)
குளிருக்குப் பயனாகும் உடை இந்த ஃப்ளாக்ஸ் என்னும் நாரில் உண்டாக்குன கோட்.
கிவிப் பறவைகளின் சின்னச்சின்ன இறகுகளைக் கொண்டு உண்டாக்குன உடை, அவர்கள் பயன்படுத்துன படகு, மரச்சிற்பங்கள், அவுங்களுடைய வீடுகள் இப்படி நிறைய தெரிஞ்சுக்க முடிஞ்சது.
'எதையும் தொடாதே' என்ற அறிவிப்பைப் பார்த்தவளுக்கு இந்தக் கல்லைத் தொட்டுப் பாருன்னு ஒரு அறிவிப்பு வச்சுருந்தது..... ...
நியூஸிலாந்து ஜேடு எனப்படும் பச்சைக் கல். மவோரிகளுக்கு ரொம்பப் புனிதமான கல்.
மோஆ என்ற பறவை இனம். முற்றிலும் அழிஞ்சு போச்சு. இப்படிப் பார்த்தால்தான் உண்டு.
மாடி ஏறிப்போனால் மம்மி படுத்துருந்தாங்க.. ஒரு ரெண்டாயிரத்து நூத்து அறுபது வருசமா இப்படிப் படுத்த படுக்கைதான். இந்த ம்யூஸியத்தின் தந்தை(???) ரெண்டு மம்மிகளை கெய்ரோ நகரில் இருந்து கிறைஸ்ட்சர்ச் நகரத்துக்கு வரவழைச்சார். அவுங்க வந்து சேர்ந்தது 1888. இவருக்கு என்ன அவசரமோ, காத்திருக்காம அவுங்க வர்றதுக்குக் கொஞ்சம் முன்னாலேப் போய்ச் சேர்ந்துட்டார். பாவம்..... வந்தவங்க ரெண்டு பேரும் ம்யூஸியத்துலே தங்கி இருந்தாங்க. 1957 இல் ஒருத்தரை ஆக்லாந்து ம்யூஸியத்துக்கு அனுப்புனாங்க. இங்கேயே தங்கிட்டவங்க பெயர் டாஷ் பென் கொன்சு Tash Pen khonsu (ஹைய்யோ பேருலேயே கொஞ்சு கொஞ்சுன்னு கொஞ்சறாங்கப்பா)
மம்மியோட மர்மத்தைத் தெரிஞ்சுக்க மம்மியை எக்ஸ்ரே எடுத்து, சி டி ஸ்கேன் எல்லாம் செஞ்சு பார்த்தோம். பொட்டிக்குள்ளே அமுக்கிவைக்கணுமுன்னு இடுப்பைக் கொஞ்சம் உடைச்சுப்புட்டாங்கப்பா(-:
' பாடம்' எப்படி பண்ணுவாங்கன்னு விலாவரியா பக்கத்துலே எழுதி வச்சுருக்கு. உள் உறுப்புகள் சிலதைத் தனியா எடுத்து ஒரு ஜாடியில் போட்டு மம்மிகூடவே வைப்பாங்களாம். அந்த ஜாடிகளில் ஒன்னு பபூன் வேஷம் கட்டிக்கிட்டு இருக்கு. ஹைய்யோ..... பபூன் மூஞ்சு செல்லம்போலப் பார்க்கவே ஆசையா இருந்துச்சு.
மம்மி, எகிப்து இந்த விசயங்கள் எல்லாம் எப்பவுமே ஒரு அபூர்வ ஆசையைத் தூண்டும் சமாச்சாரமுல்லே? ரகசியம் புதைஞ்சு கிடக்கும்னு சொன்னாவே போதாதா? போதாக்குறைக்கு இவுங்களுக்குப் பூனை சாமி. நான்கூட போன நாலைஞ்சு பிறவிக்கு முன்னே எகிப்துலே (கிளியோபாட்ராவுக்கு வேலைக்காரியாவா? ) பொறந்துருப்பேன் போல. பழைய ஜென்ம வாசனை விடலை இன்னும். இதை எழுதிட்டு நம்மாளைத் திரும்பிப் பார்த்தேன். ஒத்தைப் பல்லாலே சிரிப்புக் காட்டிக்கிட்டு இருந்தான் ஜிகே சாமி!
நம்மூரு பசங்க மம்மிபைடு பண்ணிவச்சுருக்கு பாருங்க. என்னவா இருக்குமுன்னே தெரியலைப்பா:-))))
ஒருமுறை பிரிட்டிஷ் ம்யூஸியத்துலே இருந்த கடைகளில் மம்மி மாதிரி லெட்டர் செட் கிடைச்சதேன்னு ரெண்டு செட் வாங்குனேன். மகள் மம்மி பைத்தியம். அவளுக்கு ஒன்னும், பயணத்துலே அடுத்துப்போகும் சென்னையில் உள்ள உறவினர் மகனுக்கு ஒன்னுமா. ஆனா உறவினர் இதைப் பார்த்துட்டு மம்மி படம் வீட்டுலே வச்சாக் குடும்பத்துக்கு ஆகாதுன்னு திருவாய் மலர்ந்தாங்க. டபக்னு எடுத்து பைக்குள்ளே வச்சுக்கிட்டேன். அவரவருக்கு ஆயிரம் நம்பிக்கைகள்!!!!
Saturday, January 24, 2009
எங்க மம்மிக்கு சி டி ஸ்கேன் எடுத்தோம்......
Posted by துளசி கோபால் at 1/24/2009 03:28:00 PM
Labels: Canterbury Museum NZ, அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
நீங்க எகிப்து மம்மியையா பிரிட்டன் மம்மியையா யாரை சொல்றீங்கன்னு புரியலை. பதிவை படிச்சதும் புரிஞ்சுது. எனக்கும் ஜேட் ரொம்ப பிடிக்கும். நேரா பார்க்க வரும் போது ஞாபகம் வச்சுக்கங்க:))
அனுபவம் super !!!!!!!
வாங்க பத்மா.
//எனக்கும் ஜேட் ரொம்ப பிடிக்கும். நேரா பார்க்க வரும் போது ஞாபகம் வச்சுக்கங்க:))//
இல்லையா பின்னே....என்னாலே தனியாத் தூக்கிவர முடியாது.
வாங்க பத்மா.
//எனக்கும் ஜேட் ரொம்ப பிடிக்கும். நேரா பார்க்க வரும் போது ஞாபகம் வச்சுக்கங்க:))//
இல்லையா பின்னே....என்னாலே தனியாத் தூக்கிவர முடியாது.
வாங்க செந்தழல்.
ஆமாங்க. அனுபவம் மட்டுமா சூப்பர்? இத்தனை வருசம் ஆனாலும் மம்மி மேலே வரைஞ்ச டிஸைன்கள் எல்லாம் கலர் போகாம சூப்பரா இருக்கு.:-)
உங்க விருப்பபடியே
மம்மியை ஒரு நல்ல ஆர்த்தோவிடம் காண்பித்து உடைந்த இடுப்பு எலும்பை குணப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்
விரைவில் மம்மி குணமடைய வேண்டுகின்றோம்.
அறிவியல் சேவைக்காக தனது இடுப்பையே ஒடித்துக் கொண்ட மம்மிக்கு இடுப்பைக்கொடுத்தார் என்ற பட்டத்தினை அளிக்கிறோம்.
நம்மூர் பசங்க பண்ணியிருக்க மம்மி மாதிரி எங்க பாட்டி துணி பொம்மை பண்ணி தருவாங்க சின்ன வயசில.
ஜேட் கம்மல் , பெண்டண்ட் எல்லாம் விக்குதே. நீங்க வாங்கலையா
படிச்சிட்டேன் டீச்சர்...இருந்தாலும் இதை போட்டுக்கிறேன்
எங்கள் கண்ணீர் அஞ்சலி. மம்மியின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்
;)
படிச்சிட்டேன் டீச்சர்...நான் ஏதோ உங்க மம்மியைப் பத்தி தான் எழுதி இருக்கீங்க போலனு உள்ள வந்தா "மம்மி ரிட்டன்ஸ் "படம் பார்த்த எஃபெக்டக் கொடுத்திட்டீங்களே...நல்ல அனுபவப் பதிவு .
மாவெரி வாழ்க்கைமுறை புகைப்படங்கள் அருமை ரீச்சர். ஒரு மாதிரி மாவேரி கிராமத்தை சமீபத்தில் சென்று பார்த்தேன். அவங்க விளையாட்டுகள் பாட்டு/இசை/நடனம்/பாவனைகள் எல்லாமே அருமை. அதிலே எப்படி ஒரு புது மனிதர் அவங்க ஏரியால வந்தா எப்படி தலைவர்கிட்ட அழைத்திட்டு போவாங்கன்னு காமிச்சாங்க..அதில கடைசில ஒரு மாவேரி பெரியவர் சொன்னது. உங்களுக்காக( நானும் தப்பா சொல்லிடாம இருக்க) "We Stopped fighting and stated to live being civilized in 1820s.. ever since we are asking the rest of the world to do the same "
அந்தம்மா சுடறது கோழியா இல்ல வேற பறவையா டீச்சர்.
செந்தழல் ரவி said...
அனுபவம் super !!!!!!!//
டெம்பிளேட் தாண்டிய பின்னூட்டம்
வாங்க நரேன்.
உங்கள் 'அன்பு'க்கு நன்றி!
வாங்க கொத்ஸ்.
உங்களுக்குமே ஒரு அதிர்ச்சி காத்துருக்கு!
வாங்க சின்ன அம்மிணி.
நீங்க சொன்ன 'அணிகலன்கள்' எல்லாம் என்னோட ஃபேவரிட் இல்லையேப்பா(-:
வாங்க கோபி.
இந்த வியாழன் முதல் 4 வியாழன்களுக்கு கோடை கால மாலை நேர ஸ்பெஷலா, ம்யூஸியம் ரெண்டு மணி நேரம் திறந்து வைக்கப்போறாங்க. லைட் எல்லாம் போடாம இருட்டாவே இருக்கும். நாம் டார்ச் லைட் கொண்டுபோய் அந்த வெளிச்சத்தில் எக்ஸ்ப்ளோர் பண்ணலாமாம்.
அப்ப எப்படியும் மம்மி எழுந்து உலாத்துவாங்கதானே? உங்க அஞ்சலிகளை நேரிலேயே சொல்லிறலாம். கிளம்பி வாங்க.
வாங்க மிஸஸ்.டவுட்.
கோபிக்குச் சொன்ன பதிலைப் பாருங்களேன். சந்தேகமே வேணாம். கிளம்பி வாங்க. இன்னும் நல்ல அனுபவம். மம்மி நிஜமா(வே) ரிட்டர்ன்ஸ் ஆகலாம்!
வாங்க இலா.
உலகம் எங்கே சொன்ன பேச்சைக் கேக்குது(-:
சண்டையில் அப்பாவிங்களும் கொல்லப்படுவது எந்தவகையில் நியாயமுன்னே தெரியலை(-:
வாங்க குடுகுடுப்பை.
பார்த்தால் கோழி மாதிரிதான் தெரியுது.
ஒருவேளை காட்டுக்கோழி, கிவி பறவை இப்படி இருக்குமோ என்னவோ!
இப்ப நிலைமையில் கிவி பறவையைக் கொல்லக்கூடாது. அது எங்க தேசியப் பறவை.
டீச்சர் டார்ச்சோட உள்ள நொழையறாங்க...
மம்மி மம்மி
யெஸ் டீச்சர்,
டிரிங்கிங் பிளட்?
நோ டீச்சர்
ஓபன் யுவர் மவுத்!
ஆ...ஹா...ஆ..ஆ..ஆ
இந்த சீன் நல்லா இருக்கு இல்ல? :))
வணக்கம். நான் உங்கள் பதிவுக்கு பின்னூட்டம் இடுவது புதுசு, ஆனால் நான் உங்களுக்கு புதுசு இல்லை :-)
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
// நான்கூட போன நாலைஞ்சு பிறவிக்கு முன்னே எகிப்துலே (கிளியோபாட்ராவுக்கு வேலைக்காரியாவா? ) பொறந்துருப்பேன் போல. //
என்னங்க கிளி போல இருந்துகிட்டு, கிளியோபாட்ராவுக்கு வேலைக்காரியா
பொறந்திருப்பேன் போல அப்படின்னு சொல்றீக.. கோபாலுவைக் கேட்டுப்பாருங்க.
அவருக்குனாச்சும் ஞாபகம் வருதான்னு பார்ப்போம்.
என்க்கென்னவோ நீங்க தான் கிளியோபாட்ராவா பிறந்திருப்பீங்கன்னு தோணுது.
மீனாட்சி பாட்டி.
வாங்க விஜய்.
'மம்மி இன் த டார்க்' நாடகம் போட்டுறலாமா?
கதை வசனம் நீங்க எழுதறீங்க:-))))
(இப்பெல்லாம் எழுத்தாளர்கள்தான் சினிமாவுக்கு வசனம் எழுதறாங்க)
வாங்க ஏ ஜே.
நல்வரவு.
உங்களுக்கு புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
வாங்க மீனாட்சி அக்கா.
கோபாலைக் கேட்டேனே..... 'மியாவ்'ன்னு சொல்றார். அப்போ சூடான (கழுதைப்) பாலை (அம்மா குளிக்கறதுக்காகத் தொட்டியில் நிரப்புனதை) வச்சுட்டேன்னுதான் இப்பப் பழி வாங்க வந்துருக்காறாம்!!!!!
பதிவைப் படிச்சுட்டேன்னு பதிஞ்சிக்கறேன்:)
சூப்பர் படங்கள்.
என்ன மாதிரியான தேடல் இது
Post a Comment