Sunday, January 11, 2009

All because of Uthappa

வீட்டுலே ஸ்மோக் அலார்ம் போட்டுருக்கீங்களா? அது வீட்டு செக்யூரிட்டி அலார்ம்கூட இணைஞ்சுருக்கா? வெரிகுட். நல்லது. மாசாமாசம் வரும் பில்லுக்குப் பணம் கட்டறோமுல்லே? இதெல்லாம் ஒழுங்கா வேலை செய்யுதா? இதை எப்படிப் பரிசோதிச்சுப் பார்க்கணும்?

எப்படின்னு தெரியலைன்னா இதோ நாங்க செஞ்சதுபோல செஞ்சுதான் பாருங்களேன்.....

முதல்நாள் 'மகேஷ், சரண்யா மற்றும்பலர்' னு ஒரு படம் பார்த்தோம். குடும்பக் கதை. அருமையான வீடு. திண்ணை, முற்றம் எல்லாம் வச்ச பிரமாண்டமான வீடு. இப்படியெல்லாம் வீடுகள் இன்னும் இருக்கான்னு கோபாலுக்கு ஒரே ஆச்சரியம். 'இது எல்லாம் ஸ்டெர்லிங் லே எடுத்ததுன்னு நான் என்னுடைய மேதாவிலாசத்தை (நானே) மெச்சிப் பதில் சொல்லிக்கிட்டு இருந்தேன். அதுலே நம்ம எஸ்.பி. பாலாவின் 'வைகறைப் பனியே பூமியின் அழகு' ன்னு ஒரு பாட்டு.... அருமை. இசை வித்யாசாகர். இப்பெல்லாம் அதிகமாப் படங்களில் இசை அமைக்கும் யுவனோட, கடமுடாக் காட்டுக்கத்தல்களால் பாட்டுசீன் என்றாலே மனம் வெறுத்துப் போயிருந்த எங்களுக்கு கொஞ்சம் ஆசுவாசம்னு வச்சுக்குங்க. (அதுக்காக வித்யாசாகரைத் தலையில் தூக்கிவச்சு ஆடமுடியாது. இந்தப் பாட்டு நல்லா வந்துருக்கு.)

ஒரு வாரத்துக்குன்னு அரைச்சுவச்சுக்கும் மாவில் முதல் நாள் மட்டும் இட்டிலி. மறுநாளில் இருந்து தோசை. ஆறாம் நாளுவரைத் தாக்குப் பிடிக்கும் தோசைமாவு கடைசிநாளில் பொங்களமாகி மங்களம் பாடிரும் நம்ம வீட்டில். அது என்ன பொங்களம்? பயந்துறாதீங்க. ரெஸிபி இதோ.

மீந்துகிடக்கும் ஒன்னரைக் கப் அளவு இருக்கும் தோசை மாவில் அரைக் கப் பொடி ரவை, கால் கப் துருவிய தேங்காய்ப்பூ, ஒரு கைப்பிடிக் கடலைப் பருப்பு, கால் டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கலக்கி வச்சுறணும். ரவை எல்லாம் ஊறி மறுநாள் கெட்டியான மாவா ஆகி இருக்கும். அதுலே கொஞ்சூண்டு தண்ணீர் சேர்த்து இட்டிலி மாவுப் பதத்துக்குக் கொண்டுவந்துருங்க. உங்களுக்கு விருப்பமுன்னா பொடியா நறுக்குன வெங்காயம் பச்சை மிளகாய்ச் சேர்த்து ஊத்தப்பமா ஊத்திக்கலாம். இல்லைன்னா கலக்கி வச்சுருக்கும் மாவையே ரெண்டு கரண்டி எடுத்துச் சூடானத் தோசைக்கல்லில் ஊத்தி லேசாப் பரத்திவிடுங்க. அடை செய்யும் கனம் இருக்கணும். ஒரு டீஸ்பூன் எண்ணெயைச் சுத்திலும் ஊத்தி, ஒரு மூடி போட்டு மூடி சிறுதீயில் வேகவிடணும்.

பொங்களம் போட்டுக்கிட்டு இருக்கேன். இவர் பேசாமச் சாப்புட்டுட்டுப் போகலாமில்லே? அதான் தொட்டுக்க மிளகாய்ப்பொடி இருக்கே. அத்தைவிட்டுட்டு, நேத்துப்பாட்டு அருமையா இருக்கு. எஸ்பி எவ்ளோ நல்லா பாடறார். அதைக் கேட்டுக்கிட்டே தின்னா உனக்கென்னன்னு ஆரம்பிச்சு டிவிடியைப் போட்டார். இவருக்குண்டானதைச் சுட்டுப்போட்டுட்டு(?) நானும் என்னோட தேவைக்குச் சுட ஆரம்பிச்சேன். அழகா அம்சமா எண்ணெய் குறைவா ரெண்டு ஆச்சு. இன்னும் கொஞ்சூண்டு மாவு இருக்கு,கூடுதலா ஒன்னு சாப்புடுங்கன்னா ...... ஐய...இருக்கற நோணாவட்டம் கொஞ்சமா? த(வ்)வா சூடா இருக்கும்போதே மீந்த மாவையும் ஊத்திவச்சுட்டா வேலை முடிஞ்சது, இல்லையா? ஊத்துனேன். மூடியையும் போட்டேன். அம்புட்டுதான்

இங்கே 'வைகறைப்பனியே ரெண்டாம் முறை ஓடிக்கிட்டு இருக்கு. ஒரு கையில் என் தட்டும் மறுகையில் கணினியில் ஸ்டெர்லிங்கைத் தேடுவதுமா உலகையே மறந்தேன்............................ஊஊஊஊஊய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்......... சத்தம் எங்கே இருந்து வருதுன்னே ஒரு நிமிஷம் கண்டுபிடிக்கமுடியலை.....ஆஹா..... ஸ்மோக் அலார்ம் வெளுத்துவாங்குது. ஏன் இப்படின்னுப் பார்வையை அடுப்பின் பக்கம் திருப்புனா...... மூடியையும் மீறிப் புகை.

அலார்மில் பேட்டரியை எடுத்துருங்கன்னு அலாரத்துக்குமேலே அலர்றேன். இதுக்கு பேட்டரி ஏது? மெயின்லே கனெக்ட்டட்ன்னு அவரும் பதில் அலறல். ஓடிப்போய் அதுக்குண்டான ஸ்விட்சை ரீசெட் பண்ண முயற்சிக்கிறார். குட்டிக்குட்டியா லைன்கட்டி இருக்கும் ஃப்யுஸ் தொகுப்பில் எது எங்கே இருக்குன்னே புரியலை.

இதுக்குள்ளே அடுப்பை அணைச்சு, மூடியைத் திறந்தால்...... காக்கைச் சிறகிலே...... கரிய நிறம் தோன்றியிருக்கு! வீட்டுக்குள் மண்டும் புகையை விரட்ட எல்லாக் கதவு ஜன்னல்களையும் 'பாம்'ன்னு விரியத் திறந்தாச்சு. அலார்மின் அலறலும் நின்னது. நல்லா எஃபெக்டிவா இருக்கு நம்ம ஸ்மோக் அலார்ம்ன்னு சொல்லிப் பாராட்டிக்கிட்டே, ஹோம் செக்யூரிட்டி இப்பப் போன் பண்ணுவாங்க அவுங்ககிட்டேக் 'கோக்குமாக்கா ஒன்னும் சொல்லாம, ஸ்மோக் ஃப்ரம் குக்கிங்'னு சொல்லுங்கன்னு சொல்லி வாய் மூடலை, ஃபோன் வந்தே வந்துருச்சு. சமாளிச்சு முடிக்குமுன் வீட்டுவாசலில் ஃபயர் எஞ்சின் வந்து நிக்குது! ஓ மை காட்!!!!!

அதான் முன்வாசக் கதவு உள்பட எல்லாம் விரியத் திறந்து கிடக்கே...... என்ன ஆச்சுன்னு கேட்ட ஃபயர் ஆபீஸர்கிட்டே...'.பொங்களம் கருகிங்'ன்னா புரியாதேன்னு 'பர்ண்ட் டோஸ்ட்'னு அவுங்களுக்குப் புரியும்விதமாச் சொல்லித் திருப்பி அனுப்புனோம் ஏராளமான நன்றிகளுடன்......

"ஈஸ் எவ்ரிதிங் ஓகே......?"

"எஸ் ப்ளீஸ். தேங்க்ஸ் ஃபார் கமிங். "

மேற்படி டயலாக் ஒரு 10 ரிப்பீட்டு:-)

பரவாயில்லை விடுமுறைநாளில் கூட ஜரூரா வேலை செய்றாங்க!!!!

நம்ம விடுமுறை இப்படி ஜாலியாகப் போகப்போகுதுன்னு யார் கண்டா?



நேத்து மகள் வந்துருந்தாள். எனக்குக் கிடைச்ச கிறிஸ்துமஸ் பரிசு ரெண்டு யானைகள். கோபாலுக்கு ஒரு எலி. பயணத்துக்குப் பயன்படுத்தும் வகையில் வாலைச் சுருட்டி வயித்துலே வச்சுருக்கு:-)

மகளிடம் நடந்த விஷயத்தைச் சொன்னதும் ,'ஓ மை காட். ஹௌ குட் யூ?'

டோண்ட் ப்ளேம் மீ...... ஐ டிட்ண்ட் மீன். பட் ஒன் திங் ஃபார் ஷ்யூர்.. இட்ஸ் ஆல் பிகாஸ் ஆஃப் ஊத்தப்பா. டெஃபனைட்லி ஆல் பிகாஸ் ஆஃப் ஊத்தப்பா!!!!

48 comments:

said...

பதிவு இன்னும் படிக்கலை, படங்கள் நல்லா இருக்கு...தளபதிக்கு முன்னாடி போட்டிடணுங்ற அவசரம் எனக்கு.... இஃகிஃகி!

said...

பொங்களம் படம் போடாததற்குக் கண்டனங்கள்:-)

பொங்களத்தை நானும் செய்ய முயற்சி செய்கிறேன். ஃப்ளேம் இல்லாத வந்தால் ப்ளேம் (=நன்றி) உங்களுக்கு:-)

said...

பல விஷயங்களை உள்ளடக்கிட்டீங்க...பாட்டு நல்லா இருக்கு..படம் பப்படம்..அரைச்ச மாவு..சிறு சமையல் குறிப்பு...காப்பு(Fire Officer)..பாப்பு வருகை..அப்புறம் அந்த ரெண்டு யானையும் ரொம்ப அழகு

said...

ஆகா.... அந்த பொங்களத்தைப் புகைப்படலம் ஆக்குனதப் புகைப்படமா எடுத்துப் போட்டிருக்கக் கூடாதா! நாங்களும் பாத்து ரசிச்சிருப்போம்ல.

said...

இந்த மாதிரி தீயணைப்பு வண்டி வந்தாக் காசு குடுக்கணுமா? இங்க எதோ முதலிரண்டு மூன்று முறை விட்டுடுவாங்களாம். அதையும் மீறினால் பில் உண்டாம்.

said...

துளசி
மெயில் வந்துதா? பொங்களம் புகையுமா அமர்க்களப்படுத்திட்டீங்க பதிவுல.
கொத்ஸ், சும்மா 911 கூப்பிட்டா அப்ப்டித்தான். அதிகம் இல்ல %25 தான்.

said...

வாங்க பழமைபேசி.

போணி பண்ணுனதுக்கு நன்றி:-))))

said...

வாங்க கெக்கேபிக்குணி.

நம்ம பொங்களம் இப்படிச் சரித்திரம் படைக்கப்போகுதுன்னு தெரிஞ்சுருந்தாப் படம் புடிச்சுப் போட்டுருக்கமாட்டேனா?

வீட்டில் இப்போதைய தோசைமாவு கடைசி நாளாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். அன்றையதினம் உங்கள் ஆவல் நிறைவேறும். தங்கள் மேலான ஓட்டுக்களை....
( திருமங்கலம் தேர்தல்விவரம் படிச்சுப்படிச்சு இப்படி மைக் பேச்சா வந்துக்கிட்டு இருக்கு)

said...

வாங்க ராகவன். நலமா? ரொம்ப நாளா ஆளைக் காணோமே!!!!

போன பதிவில்கூட 'டச்சு டச்சு'ன்னு உங்க நினைவு வந்துச்சு:-)

அன்னிக்கு இருந்த பதற்றத்தில் கெமெராவை மறந்துட்டேன்.

ஜகஜகன்னு ஜொலிச்சுக்கிட்டு தீவண்டி வந்து வீட்டுவாசலில் நின்ன கம்பீரத்தைப் படம் எடுக்காமப் போயிட்டேனேன்னு மனசு பரிதவிச்சது என்னவோ நிஜம்.

ஆனா கெட்டதில் ஒரு நல்லது என்றதுபோலத் தோசைக்கல்லில் சிட்டம்கட்டி இருந்த எண்ணெய்ச் சிக்கு எல்லாம் போயே போச். இப்பப் பளிச்:-))))

said...

வாங்க கொத்ஸ்.

அட! மூணு மன்னிப்பு உண்டா?

அப்ப இது நமக்கு நம்பர் 1. :-))))

இங்கே, நம்ம நகரில் ஆம்புலன்ஸுக்கு சிலவருசங்களா 50 டாலர் சார்ஜ் செய்யறாங்க. கட்டாயம் கொடுக்கனுமுன்னு இல்லை. ஆனால் பில் வந்துரும்.

இதே பாருங்க, வெலிங்டன் நகரில் முற்றிலும் இலவசம்.
அதுக்காக அங்கே போய் அடிபட்டுக்கமுடியுதா என்ன?

said...

வாங்க பத்மா.

மெயிலா? ஒன்னும் வரலையேப்பா!!!!

ஆனா ரொம்பநாளுக்குப் பிறகு உங்களை இங்கே சந்திக்கப் பொங்களத்தைப் பொசுக்கவேண்டியதாப் போச்சே:-))))

said...

ரீச்சர் !இன்னிக்கு மிக்ஸ் பண்ணுனா நாளைக்குதான் பொங்கள்ம் பண்ணமுடியும் :-)அப்பிடிதானே...

said...

ஆஹா இப்படி எல்லாம் (பொங்களம்) ரெசிபி இருக்கா!!!!!!!! அலாரம் எல்லாம் பிரமாதமா இருக்கும் போலிருக்கே. யானை படம் தான் இருக்கு..எலி படம் எங்கே டீச்சர்?

said...

டைட்டில படிச்சிட்டு கிரிக்கெட்டர் உத்தப்பா பத்தி டீச்சர் என்னவோ சொல்லப் போறாங்கன்னு வந்தேன்.. பாத்தா அது ஊத்தப்பா... :))))

said...

ஊத்தப்பாவில் இருந்து புகைவராமல் இருக்க கொஞ்சம் வெங்காயம்,தக்காளி அதன் மேல் கொத்துமல்லி போடனும். :-)
நானும் சமைக்கிறேன் அல்லவா?எனக்கும் குறிப்பு கொடுக்கத்தெரியும். :-))))
ஆமாம் ஒரு சந்தேகம்,உங்க அடுப்புக்கு மேல் ஹூட் இருக்குமே அது வேலை செய்யலையா? அல்லது அதையும் மீறி புகையா?

said...

வாங்க சிங்.செயகுமார்.

ஏன் அப்படி? திங்க ஆள் ரெடியா இருந்தால் இன்னிக்கே வேணுமுன்னாலும் செஞ்சுக்கலாம். கடலைப்பருப்பைத் தனியாக ஊறவச்சுச் சேர்த்தால் ஆச்சு. ரவை பிரச்சனை பண்ணாது. அப்பாவியா சீக்கிரம் ஊறிக்கும்.

said...

வாங்க சிந்து.

பொங்கலுக்காக இந்த பொங்களம் போட்டேன்:-)


பிரமாண்ட யானைக்கு முன்னே சுண்டெலி ஜூஜூபி. அது யானையின் பின்னே ஒளிஞ்சுக்கிச்சு!

said...

வாங்க வெண்பூ.

இரும்படிக்கும் இடத்தில் இந்த ஈக்கு என்ன வேலை? :-))))

said...

வாங்க குமார்.

ஹூட் எல்லாம் வேலை செஞ்சுக்கிட்டுத்தான் இருந்தது.

நல்லாக் கனமான மூடி போட்டு வச்சுருந்தேன் ஊத்தப்பாவுக்கு.

எவ்வளவு நேரம் கவனிக்காம விட்டுருந்தா இந்தக் கருகலாகி இருக்குமுன்னு சொல்லுங்க!!!!

போனவாரம், அடுப்பில் எண்ணெய்வச்சுட்டுக் கவனிக்காம விட்டு ஒரு வீட்டுலே, தீப்பிடிச்சு 4 பேர் இறந்துட்டாங்க. ரெண்டுநாள் முன்னே சவ அடக்கம் ஆச்சு. ஐலண்ட் ஆட்கள்.

said...

சரி, புகையோட போச்சே. அத்தைச் சொல்லுங்க. அப்படி என்னதான் கணினியோ. கொஞ்சம் கூட நல்லா இல்லப்பா:)
என்னோட ஓட்ஸ் கஞ்சி கூட. இருட்டுக்கடை அல்வா ஆகிடுத்து முந்தா நேத்து.

இவ்வளவு படம் விட்டுப்போச்சே. த்சு த்சு!!!!!
அதென்ன பேரு பொங்களாம்னு:)

said...

டீச்சர்...ஹா ஹா ஹா..சிரிப்பை அடக்க முடியலை..
அது சரி..அந்த பொங்களம் போட்டோவையும் போட்டிருக்கலாமே :)

(இதுக்குத்தான் கோபால் அண்ணாவையே சமையல் பொறுப்புக்களப் பார்த்துக்கச் சொல்லணும்கிறது :) )

Anonymous said...

பொங்களத்தையும் எலியையும் படம் பிடித்து போடாமல் எங்களை ஏமாத்திட்டீங்களே. எலிபண்ட் படம் போட்டு எலியோட படம் போடம விட்டுட்டூங்களே :)

said...

//ஒரு வாரத்துக்குன்னு அரைச்சுவச்சுக்கும் மாவில் முதல் நாள் மட்டும் இட்டிலி. மறுநாளில் இருந்து தோசை. ஆறாம் நாளுவரைத் தாக்குப் பிடிக்கும் தோசைமாவு கடைசிநாளில் பொங்களமாகி மங்களம் பாடிரும் நம்ம வீட்டில்//

எங்க வீட்ல அடுத்த நாள் இல்லைன்னா மறுநாள் மாவு காணாமப் போயிடுது:)

said...

எண்டே துளசிச்சேச்சி

"பொங்கிய பொங்களம்னு" தலைப்பு வெச்சிருக்கலாமில்ல. அதுசரி கடலப்பருப்பும், வெங்காயமும் எண்ணயில் வறுத்துப் போட வேண்டாமோ?

said...

\\சின்ன அம்மிணி said...
பொங்களத்தையும் எலியையும் படம் பிடித்து போடாமல் எங்களை ஏமாத்திட்டீங்களே. எலிபண்ட் படம் போட்டு எலியோட படம் போடம விட்டுட்டூங்களே :)
\\

ரீப்பிட்டே...;))

said...

நானும் பொகையளம் ச்சே பொங்களம் பண்ணிப் பார்த்துட்டு சொல்றேன் :0))

said...

பொங்களமா?? இது புதுசா இருக்கே!!! இனி பழைய தோசை மாவில கோதுமைமாவு கரைச்சு ஊத்தவேணாம் :)) செய்திட்டு சொல்றென். இங்க 10 மாடி கட்டடம். இவனுங்க நடு ராத்திரியில என்ன செய்வானுங்களோ தெரியலை நிச்சயமா யாரும் பொங்களம் செய்யலைன்னு மட்டும் தெரியும்.. மணி 3.00 அதிகாலை அலாரம் அடிச்சி .. அடிச்சி பிடிச்சி புள்ள குட்டி/நாய்குட்டி /பூனை எல்லாம் தூக்கிட்டு ஓட வேண்டியதா இருக்கு

said...

டீச்சர், இதெல்லாம் சகஜம்... எங்க வீட்டில அலார்ம் அடிச்சதும்,ஜன்னல், Patio door எல்லாம் திறந்து, பின்னர் தலகாணி எடுத்துட்டு போய் அலார்ம் முன்னாடி நின்னு வீசனும்... ஒரே நிமிஷம் சரியாயிடும்... ;)

said...

மனமார்ந்த பொங்கள் திருநாள் வாழ்த்துக்கள் டீச்சர்.

said...

என்னால சிரிப்பை ரொம்ப நேரம் அடக்க முடியலை, கடைசியில் பொங்களம் படம்னு நெனச்சா, கிப்ட் படம் போட்டு மங்களமா முடிச்சிட்டீங்க டீச்சர், ஆல் பிகாஸ் ஆப் ஊத்தப்பா, எவ்ரி திங்க் இஸ் ஓகே, 10 தடவை ரிப்பீட்டு, சான்ஸே இல்ல.

பொங்கல் நினைவுகளை அசைபோட்டு ஒரு பதிவிட உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

said...

இதே பாருங்க, வெலிங்டன் நகரில் முற்றிலும் இலவசம்.
அதுக்காக அங்கே போய் அடிபட்டுக்கமுடியுதா என்ன?

:)-

said...

இப்படித்தான் 3 மாதங்களுக்கு முன்னால் என் மகளின் பீடிங்க் பாட்டில் ஸ்டெரிலைஸ் செய்ய சுடுதண்ணீர் வைத்து அதில் பாட்டிலை போட்டு கொதியிட செய்தேன், அப்புறம் ஏதோ போன் வர அப்படியே போன் பேசிவிட்டு தூங்கிவிட்டேன். மறந்து போனது ஸ்டவ் ஆஃப். சரியாக இரவு 1 1/2 மணிக்கு வீடெல்லாம் ஒரே புகை மயம். என் மாமனார் எழுந்து கேஸ் ஆஃப் செய்தார். இல்லையென்றால் அன்னைக்கு குடும்பத்தோடு கோவிந்தா தான். ஸ்மோக் அலார்ம் நல்ல சிஸ்டம்தான், நம்ம ஊர்லதான் நல்லதெல்லாம் ஆகாதே. புகையின் பலனால் எனக்கு வீசிங் வந்ததுதான் மிச்சம், இவ்வளவு கூத்துக்குமிடையில் என் ரங்கமணி தூங்கியதுதான் ஹைலைட். காலையில் எழுந்து நாங்கள் விஷய்ம் சொல்லும்வரை அவருக்கு தெரியாது:)_

said...

ஹைய்யோ வல்லி.

இருட்டுக்கடை அல்வாவைப் படிச்சுட்டு இடி இடின்னு இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன்:-)))))

said...

வாங்க ரிஷான்.

உங்க கோபால் அண்ணாவுக்கு இந்தப் பொறுப்பெல்லாம் முந்தியே கொடுத்துருந்தா.......

கொடுத்துருந்தா?

நான் ஒரு 20 கிலோ தாஜ்மகாலா ஆகி இருப்பேனே:-))))

ஒரு டீ போட்டுத் தாங்கன்னு சொல்லிட்டு, ரெடியா என் காலில் இருப்பதைக் கழட்டி எடுத்துக் கையில் வச்சுக்கணும்.

இனிமே டீ போடச் சொல்லுவையா, சொல்லுவையான்னு என்னையே அடிச்சுக்கத்தான், வேற எதுக்குமில்லை.

said...

வாங்க சின்ன அம்மிணி.

க்கியத்தில் கூறியது கூறல் கூடாதாம்.
அதான் எதுக்கு எலி(பண்ட்) ன்னு விட்டேன்(-:

said...

வாங்க ராஜ நடராஜன்.

ரெண்டு பேர் இருக்கோம். ஆளுக்கு ரெவ்வெண்டு தோசை ஒரு நாளுக்கு.

மாவு மீதமாகாமல் இருந்தாத்தான் அநியாயம்:-)

said...

வாங்க ஸ்ரீலதா.

கடலைப்பருப்பு அப்படியே மாவில் இருக்கும் ஈரத்திலேயே ஊறிரும்.

பொடியா அரிஞ்ச வெங்காயத்தை அப்படியே, தவ்வாவில் மாவை ஊத்துனதும் மேலாகத் தூவிறலாம்.

எதுக்கு வதக்கல், வறுவல் அது இதுன்னு எண்ணெய் சேர்த்துக்கிட்டே போகணும்?

said...

வாங்க கோபி.

வாங்க வாங்க வாங்க.

said...

வாங்க அது சரி.

//நானும் பொகையளம் ச்சே பொங்களம் பண்ணிப் பார்த்துட்டு சொல்றேன் :0))//

நீங்க சொன்னாச் சரி:-)

said...

வாங்க இலா.

ஒருவேளை 'அக்னி ஹோத்திரமோ' என்னவோ? :-)))

said...

வாங்க நட்டி.

ஐயோ இந்தத் தலைகாணி விஷயம் தெரியாமப் போச்சே!!!!

தேவலோக சீன் வரும்வரை யாரும் கவனிக்கலையே:-)))

said...

வாங்க புதுகைத் தென்றல்.

உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்

said...

வாங்க அமித்துஅம்மா.


தண்ணீரை (கொதிக்கவீட்டு) தீச்சு வச்சதை இப்பத்தான் கேக்கறேன்!!!!!!

பாட்டில் என்ன கதியில் இருந்துச்சு? ரப்பர் எல்லாம் கூழா?

ரங்க்ஸ், போன ஜென்ம கு. கர்ணனோ என்னவோ!!!!

ஸ்மோக் அலார்ம் பேட்டரி வகைகள் சல்லிசாக் கிடைக்குது. அலார்ம் இருந்தால் வீட்டுக் காப்புறுதி எடுக்கும்போது தனியா டிஸ்கவுண்டு உண்டு.

வசதி குறைஞ்சவங்களுக்கு அரசாங்கமே இலவச அலார்ம் கொடுக்குது. ஆனாலும் மக்கள் பேட்டரி தீர்ந்தவுடன் வாங்கிப்போடாம மெத்தனமா இருப்பவர்களும் உண்டு.

போனவாரம் இப்படி தீப்பிடிச்சு நாலுபேர் (ஒரே குடும்பம்) போயிட்டாங்க(-:

said...

நான் இப்படி அடிக்கடி எரிக்கறேன் புகைக்கிறேன்னு. என் தம்பி எனக்கு ஒரு அலார்ம்வாங்கித்தந்தான்...இன்னும்
அதை மாட்டலை.. அதுக்கு எதும் நல்ல நேரம் பாக்கலாம்ன்னு வெயிட்டிங்கு///

said...

வாங்க கயலு.

//....புகைக்கிறேன்னு...//

ஹா..... நெசமாவா?

புகை உடலுக்குப் பகையாம்!!!

said...

அன்பின் துளசி - உத்தப்பா - ஊத்தாப்பம் - இடுகை அருமை - துளசிக்கும் அடி சறுக்குகிறதே ...... ம்ம்ம்ம்ம் - பீ கேர்ஃபுல்மா

said...

அட ஆனாலும் இவ்வளவு புகை ஆகாது டீச்சர். இப்படியா புகை பிடிக்கறது!

கணினியில் ஆழ்ந்து விட்டால் யார் கிட்டயெல்லாம் சாரி கேட்க வேண்டியிருக்கு பாருங்க!

பொங்கள் - நல்லா பொங்க விட்டீங்க!

இத்தனை வருடமாச்சு! இன்னும் பொங்கள் படம் போடலை.... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். [நான் ஓடறேன் கீதாம்மா கிர்ர்ர்ர்ர்-க்கு ராயல்டி கேட்பாங்க!]

said...

உங்கள் ஊத்தப்பமும் என் அப்பளம் போல் தான் போலிருக்கிறது. என் அளவு நீங்கள் பயப்படவில்லை என்று புரிகிறது.

கீழே போட்டோ பார்த்ததும் ஊத்தப்பம் போட்டோவும் இருக்கிறதோ என்று பார்த்தேன் . ஏமாற்றி விட்டீர்களே!
மிகவும் அருமையான நடையில் அழகாய் செல்லும் பதிவு. நன்றாகவே சுவைத்து ரசித்தேன் உங்கள் ஊத்தப்பத்தை!