Friday, January 09, 2009

Dahliaஸ் கோ இதர் டால் தியா

முடியலைப்பா.... முடியலை.....விட்டுவைக்க முடியலை. அழகெல்லாம் கொட்டிக்கிடக்கும்போது இருந்துட்டுப் போகட்டும் கழுதைன்னு விட்டுவைக்க முடியலை.

டாலியாப் பூக்களைப் பார்த்துருப்பீங்கதானே? இல்லைன்னா இங்கே இருப்பதைப் பார்த்துக்குங்க.

இது கோடைகாலத்தில் மலரும் பூ. இதுக்கு விதைன்னு ஒன்னு அநேகமா இல்லை. ட்யூபர்ன்னு சொல்லும் கிழங்குதான் நட்டுவைக்கணும். நம்மூர்ச் சக்கரைவள்ளிக் கிழங்குபோல நீளமா இருக்கும். அதை குளிர்காலம் முடிஞ்சு வசந்தம் வருது பாருங்க அப்ப காலநிலைக் கொஞ்சம் 15 டிகிரி செ.கிரேடு வரும்போது நட்டுவைக்கணும். விதைக் கிழங்குலே இருந்து முளைச்சுவருவது கண்ணில் பட்டால் ( உருளைக்கிழங்குலே முளை வருது பாருங்க சிலசமயம் அதைப்போல) அந்தக் கிழங்கை முளையோடு இருக்கும் பகுதி ஒட்டிக்கிட்டு இருப்பதுபோல ரெண்டாய் நறுக்கியும் நட்டுவைக்கலாம். ஒரு செடி ரெண்டு செடியாகும் மாயம் காணீர்:-)

ஒருவருசம் நட்டாலே போதும். அந்த இடத்தில் மீண்டும் மீண்டும் முளைச்சு வரும். இதுலே கிட்டத்தட்ட 35 வகைகள் இருக்காம். அப்ப 35 நிறத்தில் பூக்குமோ என்னவோ!!!! இதுலே ஒரு வகைக்கு PomPomனு பெயர். குளிர்க் குல்லாய்லே உச்சியில் உருண்டையா வைக்கும் அலங்காரப் பந்துபோல இருக்கும்.


பூவிதழ்கள் சாதாரணமா இருக்கும் வகை பார்க்கச் சுமாராத்தான் இருக்கும். நூலைத் திரிச்சு ஒட்டவைச்சமாதிரியும், குழல்குழலா அடுக்கிச் சொருகிவச்சதுபோலவும் இருக்கும் பூக்கள் கொள்ளை அழகு. Aztecs இன மக்கள் இந்தச் செடியின் தண்டை எடுத்துச் சின்ன ஊதுகுழல்கள் செஞ்சுக்கிட்டாங்களாம் அந்தக் காலத்துலே. இந்தக் கிழங்கையெல்லாம் சாப்புட்டும் இருக்காங்க!

இந்தச் செடிவகைகளின் தாய்மண் மெக்ஸிகோ, கொலம்பியா நாடுகள். பூக்களின் அழகைப் பார்த்த டச்சுநாட்டுக்காரர்கள் 1872 லே ஒரு பெரிய பெட்டி நிறைய இந்தச் செடிகளின் கிழங்குகளை மெக்ஸிகோ நாட்டில் இருந்து நெதர்லாந்துக்கு அனுப்புனாங்களாம். கப்பல் பயணம் முடிஞ்சு அங்கே போய்ச் சேர்ந்தப்ப ஒரே ஒரு கிழங்குதான் கிழங்கா இருந்துருக்கு. மத்ததெல்லாம் கெட்டுப்போய்க் கிடந்துச்சாம். உப்புக்காத்து ஒடம்புக்கு ஆகலை(-: அதுவும் சிகப்புக் கலர் பூ. அதைவச்சே நர்ஸரிக்கலையில் தேர்ந்த நிபுணர்கள் வகைவகையான நிறங்களில் இப்பக் கிடைக்கும் செடிகளை உருவாக்குனாங்களாம்.

18வது நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தாவர இயல் நிபுணரின் பெயரை இந்தப் பூக்களுக்குச் சூட்டியிருக்காங்க. அவர்பெயர் Anders Dahl. இவர் ஸ்வீடன் நாட்டுக்காரர்.

ஜெர்மனியில் இந்தப் பூக்களுக்கு ஜியார்ஜைன்னு பெயராம். ரஷ்ய நாட்டுகாரரான Johann Gottlieb Georgi என்றவரைக் கவுரப்படுத்த ஜெர்மனி தாவர இயல் நிபுணர் ஒருவர் ( Carl Ludwig Willdenow) இந்தப் பெயரைச் சூட்டினாராம்.

இப்படி ஆளாளுக்குப் பேர் வச்சுருக்காங்க. பேசாம நாமும் ஒரு பெயர் வைச்சுக்கலாமான்னு இருக்கு.













48 comments:

said...

இத்தனை பூவா!!! அசத்திட்டீங்க மேடம் அசத்திட்டீங்க!!

said...

ஹைய்யோ கொள்ளை அழகு துளசி!!

said...

ஹைய்யோ கொள்ளை அழகு

Repeateay

said...

உள்ளேன் ரீச்சர்!

said...

அக்கா!
உங்க தோட்டப் பூவா அமர்க்களம்,
இங்கே இப்படி தோட்டக் கலையில் ராசியான கைகளை - mains vert(மா வேர்)அதாவது 'பசுமைக் கை' என்பார்கள்.
நானும் சாடியில் வைப்பேன்.சிலவகையே...

said...

வாங்க கிரி.

சம்மர் சீஸன், அதுவும் நம்ம ஊர் கார்டன் சிட்டி. பின்னே பூக்களுக்கு என்ன, கேக்கணுமா?

மார்ச் ஆனதும் என்னமோ வெறுமையாப் போனமாதிரி இருக்கும்(-:

said...

வாங்க ராதா & தெய்வசுகந்தி.

நன்றிப்பா. எனக்கு அவ்வளவு அழகாப் படம் பிடிக்கத் தெரியலையோன்னு இருக்கு. நேரில் எல்லாம் அற்புதமேதான்.

said...

வாங்க கொத்ஸ்.

இருக்கு உங்களுக்கு:-)

said...

வாங்க யோகன் தம்பி.

நம்ம வீட்டையும் ஊர்ப்பொது தோட்டத்தையும் பிரிச்சுப் பார்க்கப் பிடிக்காது எனக்கு:-)))))

க்ரீன் ஃபிங்கர்ஸ் இருக்குக் கொஞ்சமா.

தின்னு போட்ட இனிப்பு ஆரஞ்சு ஜோரா முளைச்சுருக்கு:-)

Anonymous said...

டீச்சர் , வரலாறு வகுப்பு முடிஞ்சு தாவரவியல் வகுப்பா, கொஞ்சம் பிஸி , வேலைக்கு போக ஆரம்பிச்சாச்சு. எப்படியாச்சும் பதிவுகள் படிச்சு பின்னூட்டறேன்.

said...

முப்பது வகையா இருக்கு துளச்சி. ஒரு சின்னக் கிழங்கிலிடுந்து இத்தனை வெரைட்டி வந்திருக்க்கா.


விரிந்த டெலியாஸ் அழகே தனிதான். அப்பா ஒரே அழகு கொட்டிக் கிடக்கும்மா.

said...

துளசி கோபால்,

”ஆயிரம்...மலர்களே..மலருங்கள்”
அமுத கீதம் பாடுங்கள்”
(பின்னணியில் Maestroவின் டிரம்ஸ்)

”வரவேற்பூ” என் கமெண்டுகள்:-

தோற்றம் யானை மாதிரியும் இருக்கு
விரலுக்கு பச்சை மருதாணி இட்ட தொப்பிபோலவும் இருக்கு

"Dahliaஸ் கோ” என் கமெண்டுகள்:-

மலர்கள் இயற்கையின் புன் சிரிப்பு.
சில மலர்கள் காஸ் ஸ்டவ் பர்னர் மாதிரி சிலது குழந்தை முகத்தில் பவுடர் ஒத்த உதவும்”puff" மாதிரி இருக்கு.

ஆமா முக்கியமான விஷயத்த சொல்லலியே... எல்லாத்துக்கும் வாசன உண்டா?

said...

இந்த பூக்கள்(படை)போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமானு அசத்தறீங்க!!!!!!!! ம்ம்ம் நீயுஸிக்கு வரவெச்சுருவீங்க போலிருக்கு......

said...

என்ன கோபாலு ஸார் இந்தப்பாட்டை முணுமுணுத்துக்கிட்டே இருக்காரேன்னு
நினைச்சுகிட்டே இருந்தேன். இதான் சமாசாரமா !!

ரியலி சூபர்.
http://www.musicindiaonline.com/p/x/cqKg3z9b6S.As1NMvHdW/?done_detect




சுப்பு ரத்தினம்.

said...

வித்தியாசமாக இருக்கு...ரொம்ப அழகாக இருக்கு ;;)

said...

மாதங்களில் மார்கழி. எங்குமே இசை வெள்ளம்.
திருவெம்பாவை பக்தி வெள்ளத்திலே தமிழ்ப்பெருமக்களை மூழ்கடிக்கும் ஒரு வலைப்பதிவு
http://kavinaya.blogspot.com
சிவனடியார்களுக்கு ஒரு புண்ணிய பூமி.

அங்கு இடம் பெற்ற பல பாசுரங்களை என்னால் இயன்ற வரை, எனக்குத்தெரிந்த வரை
பாடி யூ ட்யூபில் பதிவு செய்துகொண்டு வருகிறேன்.

அது போல இன்றும்,
செங்கணவன் பால் எனத்துவங்கும் திருவெம்பாவையின் பதினேழாம் பாடலை இன்று
மோஹன ராகத்தில் பாட முயற்சி செய்வோம் என்று நினைத்தேன்.

அடடா ! மோஹனத்தில் பாடி அந்தப்பாட்டை சிவபெருமானுக்கு அர்ப்பிக்கும் வேளையில்
மலர்கள் எங்கேனும் கிடைக்குமா , அவற்றையும் சேர்த்துப் பெருமனை அர்ச்சிப்போம் என
நினைத்தேன்.

வரும் வழியில் மேடம் துளசி கோபால் அவர்களின் பூந்தோட்டம் ஒன்று வா வா , சிவ பக்தனே வா !
உனக்காகவே நான் பூத்துக் குலுங்குகிறேன் எனச் சொல்லாமல் சொன்னது போல் தோன்றியது.

என்ன அழகான பூக்கள் !! அவற்றிலே சில , இல்லை , பலவற்றையும் கொய்து சிவனின்
சன்னதியில் சமர்ப்பித்திருக்கிறேன்.

வாருங்கள். பாருங்கள். கேளுங்கள்.

http://uk.youtube.com/watch?v=JnzDEqWcB6A

சுப்பு ரத்தினம்.

said...

அருமையான புகைபடங்கள்

said...

வாங்க சின்ன அம்மிணி.

சூடு அங்கேயும் தீ மாதிரி இருக்குமே!!!!

ஆணி குறைவா இருக்கும் சமயம் கிடைக்கும்போது படிச்சாப் போச்சு:-)

தாவரம் வரலாறுன்னு தனித்தனியா இல்லைப்பா. தாவரம் மண்ணுலே இருக்கு. அந்த மண்ணின் கதை வரலாறு:-))))

said...

வாங்க வல்லி.
முப்பதா?

அஞ்சை யாருக்குக் கொடுத்தீங்க?

அஞ்சா நெஞ்சள் நீங்க:-)))

said...

வாங்க ரவிஷங்கர்.

பின்னணி இசையோடு பார்த்தா அப்படியே தூள்!!!! இங்கே அந்தத் தோட்டத்தில் வருசத்தில் சில முக்கிய விழாக்களில் நியூஸிலாந்து சிம்ஃபொனி ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சி நடக்கும் சமயம் இப்படித்தான் மனசை அள்ளிக்கிட்டுப் போகும்.

பின்னூட்டங்களுக்கு நன்றி.

மணம் உண்டான்னு நம்ம 'தருமி'கிட்டே கேட்கலாம். அவருக்கு யாராவது மண்டபத்துலே வந்து சொல்லுவாங்க:-))))

பி.கு: ரோஜாவுக்கு மணம் உண்டு.

said...

முடியலை !!! முடியலை!!! என்னாலும் முடியலை!!!
பூக்கள் அழகை சொல்லவா??!!! இல்லை இப்படி தினம் ஒரு துளி துளியா அறிவு களஞ்சியமா என்னை மாத்துறத சொல்லவா??
என்ன இருந்தாலும் ரீச்சர் உங்க தொண்டு வாழ்க!!!

//எனக்கு அவ்வளவு அழகாப் படம் பிடிக்கத் தெரியலையோன்னு இருக்கு. நேரில் எல்லாம் அற்புதமேதான்.//
சங்கமம் பட பாடல் - வராக நதிக்கரையோரம்
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணிய உறுத்தும்
காமிரா பிடிக்காத படங்களெல்லாம் கண்ணுக்குள்ள இனிக்கும்

said...

வாங்க சிந்து.

நியூஸிக்கு வாங்க வாங்கன்னு வரவேற்கிறேன். ஆனால்..... டிசம்பர் ஜனவரியில் மட்டும் வாங்கப்பா.

பூக்கும் காலம் அது:-))))

said...

வாங்க சுப்பு ரத்தினம்.

அந்தத் தோட்டத்தில்போய் கோபால் இந்தப் பாட்டைப் பாடுனா......Bob ( கிஸ் கா பாப்?) மிரட்டமாட்டாரா?

ஆன்னா ஊன்னா மை சிட்டின்னு சொல்லிக்கிட்டு இருக்கார் பாப்.

அவர் சிட்டின்னு சொல்லுன்னு சொல்லி வச்சுருக்கோம்.

Bob இந்த நகரின் தந்தை (இப்போதைக்கு)

said...

வாங்க கோபி.

வித்தியாசம்..... அதே அதே பார்த்தா விடமாட்டேன்:-)

said...

சுப்பு ரத்தினம் ஐயா,
அந்தப் பூக்கள் உண்மையில் புண்ணியம் செய்தவை.

அருமையாப் பாடி இருக்கீங்க.

அந்தக் காலத்துலே (நான்)பாடுன அறுபதில் இதுவும் ஒன்னு. வேற ராகமுன்னு நினைக்கிறேன்.

மனம் மகிழ்வா இருக்கு.

நன்றிகள்.

said...

வாங்க சதுக்க பூதம்.

இன்னும் கொஞ்சம் அருமைகளை இன்னொருநாள் போடத்தான் வேணும்:-)))

said...

வாங்க இலா.

அருமையான கவாலி பாட்டின் இசை அந்த வராக நதிக்கரையோரம்.

எனக்குப் பிடிச்சதில் அதுவும் ஒன்னு.

நன்றி.

said...

தூள். ஆனா, ஏன் எந்தப் படங்களும், 'நச்'னு இழுக்கலைன்னு நீங்களே, செல்ஃப் அஸெஸ்மெண்ட் பண்ணணும்.
எனக்குத் தெரிஞ்சு, உங்களின், ஏங்கிள் சில படங்களில் சரிய அமையலை.

'கலைக்' கண்ணை இன்னும் கொஞ்சம் கூர்ப்பாக்கி பார்க்கவும்;)

ஹி ஹி. எனக்கு ரொம்பவே பிடித்துப் போன என் டாலியா இங்கே:
http://surveysan.blogspot.com/2009/01/2008.html

btw, டீச்சர் ஏன் ரீச்சர் ஆக்கராங்க சிலர்? குறிப்பா நம்ம ஈழ நண்பர்கள்.ரொம்ப நாள் டவுட்டு இது ;)

said...

சர்வேசன், "ரீச்சர்" எல்லாம் எவ்வளவோ தேவலாம். நாங்க "யீச்சர்"ன்னு தானே கூப்பிடரது. படங்கள் அருமைங்க. அத "பூ" மேறியும் படம் புடிக்கலாம். "புய்பம்" மேறியும் படம் புடிக்கலாம். நீஙக சொல்றா "???" மாதிரியும் படம் புடிக்கலாம்ங்க. அழகு கொறையாதுங்க.

said...

கிழங்கை நடுக் கடலிலேயே வைத்து கொலை பண்ணிட்டாங்களே!!
உள்ளேன் ரீச்சர் - இருக்கு உங்களுக்கு வழக்கமாக சிரிப்பை வரவழைத்தது.
இந்த பூக்களை பார்க்கும் போது ஹோட்டலில் சில சமயம் டிஷ்யூ காகிதத்தை இப்படி சுருட்டி வைப்பது ஞாபகத்துக்கு வந்தது.

said...

முடியலை....என்னாலும் முடியலை!
ப்போங்கப்பா.....நா வரலை இந்த வெளாட்டுக்கு.
அங்கே கொட்ட்டிக்கிடந்த அழகையெல்லாம் இங்கேயும் கொஞ்சம் கொட்டியதுக்கு....ம்ம்..என்ன சொல்லலாம்? என்னவேணாலும் சொல்லலாம்.
க்ராஃப்ட் மேளான்னு என்னென்னவோ சொல்லிக் கொடுக்காங்க...கடவுளோட கைவினைக்கு முன்னால்...அடடா!
சின்னச்சின்ன கோன் மாதிரி சுருட்டி, அடுக்கி..என்ன அழகு!!!!

said...

வாங்க சர்வேசன்.

படம் நல்லா வந்துருந்தா அது 'என் திறமை'

சுமாரா இருந்தா ...'கேமெரா சரியில்லை'

இந்தக் கண்ணோட்டத்துலே பார்க்கக்கூடாதா? ;-)))))
பிற் & முற் சேர்க்கைகள் ஏதும் செய்யாம அப்படிக்கப்படியே போட்டுருக்கேன். அதுவும்கூட ஒரு காரணமா இருக்கலாம்!!!!

உங்கள் கேள்விக்கு விடையை நம்ம விஜய் சொல்லிட்டார்:-))))

said...

வாங்க விஜய்.

//அழகு கொறையாதுங்க//

ஆஹா அப்படிப்போடு(ங்க) அருவாளை:-)))))

said...

வாங்க குமார்.

கொத்ஸைப் பத்தி எழுத லட்டாட்டம் ஒரு விஷயம் இங்கே கிடைச்சுருச்சு. அதுக்குத்தான் சொன்னேன் 'இருக்கு'ன்னு:-))))

என்னதான் நாம் செயற்கையாச் செஞ்சாலும் கிட்டே போய்ப் பார்த்தால் பல்லை இளிச்சுருதே(-:

டிஷ்யூ பூக்களைச் சொல்றேன்!

said...

வாங்க நானானி.

இயற்கையை மிஞ்சுனது ஏதும் உண்டா?

உண்மையாப் பார்த்தால் இதுதான் கடவுள். நாம்தான் அவரவர் நம்பிக்கைக்குத் தகுந்தாற்போல் பேர் வச்சுருக்கோம்,சாமிக்கு.

said...

டாலியா சூப்பர்யா...

said...

// இயற்கையை மிஞ்சுனது ஏதும் உண்டா?

உண்மையாப் பார்த்தால் இதுதான் கடவுள். நாம்தான் அவரவர் நம்பிக்கைக்குத் தகுந்தாற்போல் பேர் வச்சுருக்கோம்,சாமிக்கு.//

உலகத்து சனங்களுக்கு எல்லாம் என்னிக்கு இது புரிஞ்சு
என்னிக்குத்தான், எல்லோரும், தானும் நிம்மதியா வாழ்ந்து மற்றவங்களையும்
நிம்மதியாய் வாழ் விடுவாங்களோ ?! தெரியல்லையே !!

மீனாட்சி பாட்டி.
http://vazhvuneri.blogspot.com

said...

't'eacher -aka- 'r'eacher

enakku innum padhil puriyalla. dhayavu seidhu vilakkavum ;)

said...

//படம் நல்லா வந்துருந்தா அது 'என் திறமை'

சுமாரா இருந்தா ...'கேமெரா சரியில்லை'

இந்தக் கண்ணோட்டத்துலே பார்க்கக்கூடாதா? ;-)))))//

பதில் சூப்பரப்பூ :)))))

Very Practical !!!!

said...

உங்க தோட்டத்து பூவெல்லாம் ஒட்டுமொத்தமா இந்தியாவுக்கு வந்துடுச்சே !!
பார்த்தீகளா ?

http://arthamullavalaipathivugal.blogspot.com

சுப்பு

said...

வாங்க வெண்பூ.

//டாலியா சூப்பர்யா...//

யாயா எஸ் யா:-)

பூவைப் பார்த்துப் பூவே சொன்னது ரொம்பவே சரி!!!

said...

வாங்க மீனாட்சி அக்கா.

வணக்கம். நலமா இருக்கீங்களா?

'எங்கும் எதிலும் இருப்பான் அவன் யாரோ' ன்னு 'முண்டாசு' சொல்லிட்டாரேக்கா:-)

said...

சர்வேசன்,
நம்ம இலங்கைத் தமிழில் 'டி' என்ற எழுத்தை 'ரி'ன்னு எழுதறாங்க. அதனால் 'டீச்சர்' ரீச்சரா ஆகிப்போச்சு.

டிவி கூட ரிவிதான்:-))))

said...

வாங்க சதங்கா.

தப்பிக்கவிரும்பும் பிழைப்'பூ' இது:-)))

said...

என்னெங்க சுப்பு ரத்தினம் ஐயா.

போங்க, எனக்கு ஒரே வெக்கமா இருக்கு!

ஆனாலும் உங்க அன்புக்குத் தலைவணங்குகின்றேன்.

said...

ரியலி சூபர் ரீச்சர்!.

said...

வாங்க சிங்.செயகுமார்.


கவிஞர்கள் மென்மையானவர்கள்னு உறுதியாச்சு!!!!

said...

அருமையான பூக்கள். கூடவே நிறைய தகவல்களும்.

நான் பூக்களை ரசித்து அதை க்ளிக் செய்து விட்டேன். நீங்கள் தகவல்களையும் இங்கே தந்திருப்பது சிறப்பு.

நன்றி டீச்சர்.