Tuesday, January 20, 2009

குப்பைத் தொட்டி வைக்கலேன்னா...... இப்படித்தான்.

ரெண்டுவிதமான கருத்துகள் (இப்போதைக்கு) இருக்கு இந்தக் குப்பை விவகாரத்துலே. குப்பைத் தொட்டின்னு ஒன்னு வச்சால் அதுலே குப்பை போடுவோம். வைக்கலைன்னா? கண்ட இடத்தில் குப்பைகளை வீசி எறிஞ்சுட்டுப் போவோம். (குப்பைத் தொட்டி வச்சாலும் அதுலே போடாமல் கண்ட இடத்துலே போடும் 'மாக்கள்' இந்தக் கணக்கில் இல்லை(-: யாராலே முடியுது, பத்தடி நடந்து போய்க் குப்பைத்தொட்டியில் போட! )

மூணாவது கருத்து.........குப்பைத் தொட்டி வச்சால் அதுலே குப்பையைப் போடுவோம். இல்லேன்னா எங்க குப்பைகளை நாங்களே கையோடு எடுத்துக்கிட்டுப்போய் எங்க வீட்டுக் குப்பையில் சேர்த்துருவோம். இது எப்படி இருக்கு?

பகல் சாப்பாடு ஆனதும் நார்த்லேண்ட் மால் வரை போகலாமுன்னு கிளம்புனோம். நகரின் அடுத்த கோடியில் இருக்கு. லீவு காலத்தை வீட்டுக்குள்ளேயே ஓட்டலாமா? ஆன்னா ஊன்னா 'மால் டெவெலெப்மெண்ட்'ன்னு உள் & வெளி அமைப்புகளை மாத்தி மாத்திக் கட்டிக்கிட்டே இருக்காங்களே. எப்பப் போனாலும் புதுமைதான். அக்கம்பக்கம் இருக்கும் கடைகளையெல்லாம் வளைச்சுப்போட்டு அந்த ஏரியாவிலேயே பெரியமால்னு நமக்குக் காட்டிக்கிட்டு இருந்தாங்க. அடப்போய்யா..... எப்படின்னாலும் எங்க ரிக்கர்ட்டன் மாலை அடிச்சுக்க முடியாது. தெற்குத் தீவிலேயே பெரூஊஊஊஊஊசு எங்களுது.


முட்டாய்க் கடை ஒன்னு புதுசா வந்துருக்கு. கண் எதிரில், கண்ணாடித் தடுப்புக்குப் பின்னே முட்டாய் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. ஒரு முட்டாய் 135 டாலராம். எப்படிப் புடிச்சுத் தின்னணுமுன்னு தெரியாததால் வாங்கிக்கலை:-))))கிறிஸ்மஸ் அலங்காரங்கள் எல்லாம் இன்னும் ஒரு 10 நாள் வரை அப்படியே இருக்கும். அழகா அலங்கரிச்சு இருந்தாங்க. எல்லா மால்களிலும் சாண்ட்டாவுக்கு ஒரு இடம். அழகான நாற்காலியில் சேண்ட்டா குறிப்பிட்ட நேரங்களில் வந்து அமர்ந்துருப்பார். பிள்ளையும் குட்டிகளுமா வரும் மக்கள் சேண்ட்டாவுடன் படம் புடிச்சுக்கலாம். இதுக்குன்னே ஒரு ஃபோட்டோக்ராஃபர் எல்லா முஸ்தீபுகளும் செஞ்சுவச்சுக்கிட்டு தயாரா இருப்பாங்க. சில குழந்தைகள் அழுது அமர்க்களப்படுத்திரும். அவ்ளோ பெரிய தாடியைப் பார்த்துப் பயந்துரும்போல. எத்தனை காப்பி வேணுமோ அதுக்குண்டான காசைக் கட்டிட்டு வாங்கிக்கலாம். உற்றார் உறவினருக்கு அனுப்பணுமே.
நம்ம வீட்டு சேண்ட்டா:-)

இதுலேகூட எங்க வீட்டுக்கிட்டே இருக்கும் ஒரு ஷாப்பிங் செண்டர் தாராளமனசோடு ஒரு குடும்பத்துக்கு ஒரு படம் இலவசம் ன்னு விளம்பரம் கூடச் செஞ்சாங்க. அப்படியாவது ஆள் வருதான்னு பார்க்கறாங்க.

நார்த் லேண்ட் மாலின் சுற்றுப்புறக் கடைகள் ஒன்னில் ரொம்ப நாளாப் பார்த்துவச்ச (வேற ஒரு இடத்தில்) சக்கூலண்ட் அரைவிலையில் கிடைச்சது. கடைகளைப் பொறுத்தவரை எல்லாமே செயின் ஸ்டோர்ஸ்.
புத்தருக்கு முன்னால் வச்சால் அம்சமா இருக்கும். ஆனால் கொளுத்தமாட்டேன். இன்னிக்குன்னு பார்த்து அரைவிலை. புத்தர் அதிர்ஷ்டம் செஞ்சவர். (புத்தர் இதைவிட மலிவு)
என்ன இது வெய்யில், இந்தப் போடு போடுது இன்னிக்கு. பேசாம க்ரோய்ன்ஸ் பார்க் போகலாம். இங்கிருந்து 10 நிமிஷ ட்ரைவ்தான். இதுவும் நம்ம சிட்டிக் கவுன்ஸில் பராமரிக்கும் தோட்டம்தான். குப்பைகள் இல்லாத குடும்பப் பார்க். Litter free zone!!!! அங்கங்கே பார்பெக்யூ செஞ்சுக்க கேஸ் அடுப்புகள் வச்சுருக்காங்க. காசு போட்டால் அடுப்பெரியும். அவுங்கவுங்க, சுட்டுக்கிட்டுச் சுத்தம் பண்ணிட்டால் வேலை ஆச்சு. எங்கேயும் குப்பைத் தொட்டிகள் இல்லை. அவரவர் குப்பைகளை அவரவர் கையோடு எடுத்துக்கிட்டுப் போயிறணும்.

அங்கங்கே குப்பைத் தொட்டிகள் வச்சு அதுக்கு ப்ளாஸ்டிக் பை மாட்டி அப்பப்போ சுத்தம் செஞ்சு, இதுகள் சுத்தத்தைப் பராமரிக்கன்னு ஆள் போட்டு, அவருக்கு சம்பளம் அது இதுன்னு ஆகும் செலவைச் சரிக்கட்ட மக்கள் வரிப்பணத்தைச் செலவு செஞ்சுன்னு......இப்படி ஒன்னுபின்னாலே ஒன்னுன்னு தொடர்ந்துக்கிட்டு இருக்கு பாருங்க. இந்தக் குப்பையில்லாத் திட்டத்தை ஒரு பரிசோதனைக்காகன்னு ஆரம்பிச்சு இப்போ முழு இடமும் பளிச்ன்னு இருக்கு.

மொத்தம் 93 ஹெக்டேர் இடத்தைக் கொண்டிருக்கும் இந்தத் தோட்டத்துலே நாய்களுக்கான தனிப் பகுதி ஒன்னு இருக்கு. நாய்களுக்கு தினசரி உடற்பயிற்சி செஞ்சுக்கச் சரியான இடம். முழுசும் வேலிகள் போட்டு, நாய்களும், அவுங்க உடமையாளர்களும் கவலையில்லாமல் வந்து பொழுது போக்கிட்டுப் போகலாம். இங்கே குப்பைத் தொட்டி வசதிகள் செஞ்சு வச்சுருக்காங்க. நாய்களின் மானிடத் தோழர்கள் Dog doo bag கையோடு கொண்டுவந்து அவுங்கவுங்க நாய்த் தோழர்களின் 'வஸ்து'க்களை வாரி எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டுறணும். மனுசங்களை நல்லாப் பழக்கிவச்சுருக்கோம். (இங்கே மட்டுமில்லை பொதுவா நாய்களைத் தெருக்களில் நடக்கக் கொண்டுபோகும்போதும், கடற்கரைக்கு விளையாடக் கொண்டுபோனாலும் கடைப்பிடிக்கவேண்டிய முறை இது)

தொங்கு பாலம் ஒன்னு கம்பிவலைகளால் அமைச்சுருக்காங்க. இங்கே கறுப்பு அன்னப் பறவைக் குடும்பம் ஒன்னு இருக்குமேன்னு தேடுனேன். காணோம். பாலத்துக்கு இந்தப் பக்கம் பசங் (ஒருமை) தண்ணீரில் குதிச்சு விளையாடிக்கிட்டு இருக்காங்க. அந்தப் பக்கம் தெளிஞ்சு கிடக்கும் தண்ணீரில் வாத்துக் குடும்பங்கள். ஒரு பாப்பா மட்டும் அம்மாகூடவே வந்து அஞ்சு நிமிசத்துக்கு, ஒருமுறை தண்ணிக்குள்ளே முங்கி இரைதேடும் பயிற்சி எடுத்துக்கிட்டு இருந்துச்சு. பாலம் கட்ட வலை பின்னுவதில் உதவி செஞ்சவுங்க உள்ளூர் உயர்நிலைப்பள்ளி மாணவமணிகள். மகள் படிச்ச பள்ளிக்கூடம்.




கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி போல, இங்கே வாத்து போல மாறு வேஷம் போட்டுக்கிட்டு ஒரு பறவை. கொண்டையை மறைக்கத் தெரியலை பாருங்க:-))))



பாலத்துக்கு அந்தப் பக்கம் படகுச் சவாரி. ( நம்ம முட்டுக்காடு ?)
வலது கைப்பக்கம் இருக்கும் ஒத்தையடிப் பாதையில் காட்டுக்குள்ளே போனால் 'ஜோ'ன்னு தண்ணீர் விழும் குட்டி அணை. Groyne ன்னு சொல்லும் காங்க்ரீட் தடுப்புச்சுவர் வச்சுருப்பதாலே இந்த இடத்துக்கும் Groynes Park ன்னு பெயர் வந்தாச்சு. (நம்ம வடுவூரார் சுவர் விளக்கம் தருவார் என நம்புகின்றேன்) வைமாக்காரிரி(Waimaakariri River) ஆத்துத் தண்ணி ஓடையா இங்கே வந்து சேருது. சூடுதாங்காம தண்ணீர் திரைக்குப் பின்னால் உக்கார்ந்துருக்காங்க மக்கள். ப்ரிட்டிஷ்காரங்கன்னு 'பேச்சு' சொல்லுச்சு.



ஒருக்கால் குளிக்கலாமுன்னு இருக்காரோ?


அணையில் இருந்து வழியும் தண்ணீர் சின்ன ஆறா ஓடிக்கிட்டு இருக்கும் இயற்கை அழகை எல்லாம் கெமெராவில் புடிச்சுக்கிட்டு, ஒரு சுத்து சுத்திவந்துப் படகுத் துறைக்கு எதிரில் மரத்தடி மீட்டிங் போட்டோம். எழுத்தாளர் & வாசகர்/க்ரிடிக். புதுக்கெமரா வாங்கவேண்டியதின் அவசியத்தைப் பற்றி ஒரு மணிநேர லெக்சர் கொடுக்கும்படியா ஆச்சு எனக்கு. எதிராளி கப்சுப்!
ஏரித்தண்ணீர் நிறைஞ்சு வழிஞ்சு ஒரு பச்சைத் திரை போட்டது. எல்லாம் பாசி பிடிச்சுக்கிடந்த இடம். ஆனால் கலைக்கண்ணோடு பார்த்தேனா.......... ஹைய்யோ.......இதுவும் ஒரு அழகுதான்.

(பதிவின் நீளம் கருதி என்னுடைய ஐஸ்க்ரீம் வாயில் வைக்குமுன் கீழே விழுந்ததையும், கெட்ட எண்ணத்துக்கு அப்படித்தான் நடக்குமுன்னு கோபால் சொன்னதையும், கடைசியில் ஐஸ்க்ரீம் தின்னக் கொடுத்து வைக்காதவங்க யார் என்பதையும் உங்க ஊகத்துக்கே விடுகிறேன்)

27 comments:

said...

//குப்பைத் தொட்டி வச்சால் அதுலே குப்பையைப் போடுவோம். இல்லேன்னா எங்க குப்பைகளை நாங்களே கையோடு எடுத்துக்கிட்டுப்போய் எங்க வீட்டுக் குப்பையில் சேர்த்துருவோம்//

நல்லா இருக்கு

டீச்சர் நான் தான் இன்னைக்கு முதல் மாணவன்

said...

டீச்சர், சாரும் ஒரு டவுசர் பாண்டி தான் என்று நன்றாக தெரிகிறது ஹி ஹி ஹி

said...

ஐஸ்க்ரீம் தியாகம் செய்த அண்ணனுக்கு ஒரு வாழ்க சொல்லிக்கறேன்.

அப்புறம் எங்க ஊரிலும் ஒரு பூங்காவில் இப்படித்தான். பார்க்கிங் டிக்கெட் உண்டு. அதோட சேர்ந்து ஒரு பிளாஸ்டிக் பை ஒண்ணும் குடுத்துடுவாங்க. அதிலே குப்பை எல்லாம் கட்டி எடுத்துக்கிட்டு வீட்டைப் பார்க்க போக வேண்டியதுதான். நல்ல ஐடியாதானே.

said...

வாங்க நசரேயன்.

இவ்வளவு ஆர்வமா படிப்புலே!!!!!
அடடடா........

நல்லா இருங்க.

said...

வாங்க செந்தழல்.


கோடை காலம். பின்னே எப்படிக் கொண்டாடுவதாம்:-)))))

said...

வாங்க கொத்ஸ்.

அதான் அண்ணனே சொல்லிட்டாரே 'கெட்ட எண்ணத்துக்கு ஐஸ்க்ரீம் கிடைக்காதுன்னு'

நம்மூர்லே பார்க்குக்குப் பார்க்கிங் காசு இல்லை. அட! அதுவும் 'இலவசம்'தான்:-))))

said...

துளசி மேடம்,
உங்க பதிவும் ரொம்ப சுத்தமா, அருமையா இருக்கு.

said...

டீச்சர்

உங்கட பதிவும் கொஞ்சம்கூட அழுக்கு இல்லாம, சுத்தமா, அழகா, நீட்டா இருக்குது..

பாவம் கோபால் ஸார்.. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி சப்போர்ட்டிங் ஆக்ட்டராவே வருவார்..?

அவரை கொஞ்சம் ப்ரீயா, தனியா, தனி ஆவர்த்தனம் பண்ண விடுங்க டீச்சர்..

ஆண் பாவம் பொல்லாதது..

said...

வாங்க பிரேம்ஜி.

சுத்தமா இருந்தா நல்லதுதானே?

அசைவம் அவ்வளவா இல்லை:-))))

said...

வாங்க உண்மைத் தமிழன்.

கதாநாயகி முக்கிய ரோலில் இருக்கும்போது கோபால் சப்போர்ட்டிங் ரோல்.

ஆனா மாசத்துலே பாதி நாள் உலகம் சுத்தப் போறாரே அப்ப என்னன்னு நினைச்சீங்க.

ஏர்ப்போர்ட்க்கு, டாக்ஸி கிளம்புனவுடனே முகப்பொலிவைப் பார்க்கணுமே!!!!!

சுடச்சுட ஒரு சேதி தரவா? நேத்து ஹாங்காங் இண்டியன் ரெஸ்டாரண்டுலே லைவ் ம்யூசிக் கேட்டு நேயர் விருப்பமா 'கல் சாந்தினி கி ராத் தி' எல்லாம் எழுதிக் கொடுத்துக் கேட்டு ஆடிட்டு வந்துருக்கார்.:-)))

said...

//////(குப்பைத் தொட்டி வச்சாலும் அதுலே போடாமல் கண்ட இடத்துலே போடும் 'மாக்கள்' இந்தக் கணக்கில் இல்லை(-: யாராலே முடியுது, பத்தடி நடந்து போய்க் குப்பைத்தொட்டியில் போட! )/////

இதுதான் உண்மை டீச்சர்!
வைத்தாலும் பயனில்லை (உள்ளூர் நிலவரம்)

said...

நான் எப்பவும் செய்வேன் துளசி.. எங்க போனாலும் ஒரு எக்ஸ்ட்ரா கவர் வச்சிருப்பேன்.. குப்பைய அதுல போட்டு வீட்டுல போட்டுக்கலாம்ன்னு எடுத்துட்டுவந்துடுவேன்.. :)

ஆமா கோபால் சார் தனியா வந்தப்ப எப்படி இருந்தாங்கன்னு பாத்துருக்கேனே.. :))

அந்த பச்சைபாசி போட்டோ சூப்பரு இன்னும் ந்ல்ல கேமிரா வாங்கவேண்டியது அவசியம் தான்..
சார் கிட்ட காமிக்காதீங்க இந்த பின்னூட்டத்தை..

said...

சார் ரொம்ப இளமையா ஆயிட்டாரு

said...

\\(பதிவின் நீளம் கருதி என்னுடைய ஐஸ்க்ரீம் வாயில் வைக்குமுன் கீழே விழுந்ததையும், கெட்ட எண்ணத்துக்கு அப்படித்தான் நடக்குமுன்னு கோபால் சொன்னதையும், கடைசியில் ஐஸ்க்ரீம் தின்னக் கொடுத்து வைக்காதவங்க யார் என்பதையும் உங்க ஊகத்துக்கே விடுகிறேன்)
\\

ரொம்ப கஷ்டமான கெஸ்ட்டின் டீச்சர்..கொஞ்சம் க்ளூ கிடைக்குமா!!!??

;))

Anonymous said...

ஆஹா , இத்தனை தண்ணி பாத்து எவ்வளோ நாளாச்சு :)

said...

வாங்க வாத்தியார் ஐயா.
வணக்கம். நலமா? ரொம்ப நாளா உங்களை இங்கே காணோமே....

தனி மனுசன் ஆரம்பிக்கணும். அப்புறம் சமூகம் அப்படியே நடத்திக்கிட்டுப் போகும். சுத்தமும் இப்படித்தான்.

said...

வாங்க கயலு.

மனம் திறந்து பாராட்டுகிறேன் உங்கள் குப்பைக் கவனத்திற்கு.

பின்னூட்டம் மட்டும் எந்த ஊரில் இருந்தாலும் பார்த்துருவார்.

உண்மையைச் சொன்னால் பதிவின் மூலம்தான் பேச்சுவார்த்தை:-)

said...

வாங்க கோபி.

க்ளூ எல்லாம் தரமுடியாது கோ......(பி)

'பால்'மாறாம இன்னொருக்காப் படிச்சுக்குங்க.

said...

வாங்க சின்ன அம்மிணி.

தண்ணீ பார்த்து நாளாச்சா?

வீக் எண்ட் காக்டெயில் பதிவெல்லாம் அமர்க்களமா போட்டுருந்தீங்க:-))))

said...

டீச்சர் ஒரு சந்தேகம்!நீங்க எங்கே போனாலும் கேமராவை வச்சிகிட்டு சுத்துறீங்களா?அல்லது கைபேசியில் படம் கிளிக்கிறீங்களா?பதிவுடன் படமும் நல்ல டெக்னிக்.

said...

//ஒருக்கால் குளிக்கலாமுன்னு இருக்காரோ?//

உட்கார்ந்திருக்கிற ஸ்டைலப் பார்த்தா ஒரு கால் குளியல் மாதிரிதான் தெரியுது:)

said...

படங்கள் எல்லாம் பார்த்தால் பொறாமையா இருக்கு.. :(

said...

வாங்க ராஜநடராஜன்.

கெமெராவைக் கையோடு கொண்டுபோகணும் என்பது புத்தாண்டுத் தீர்மானம்!!!!

கைப்பேசியை மறக்காமல் வீட்டுலே வச்சுட்டுப்போவேன் வழக்கம்போல்:-)

கடைசி நிமிஷம் மனம் மாறி, ரெண்டு கால் குளியல் ஆயிருச்சு:-))))

said...

வாங்க சஞ்சய்.

நல்லதுக்கில்லையேப்பா......

said...

////குப்பைத் தொட்டி வச்சால் அதுலே குப்பையைப் போடுவோம். இல்லேன்னா எங்க குப்பைகளை நாங்களே கையோடு எடுத்துக்கிட்டுப்போய் எங்க வீட்டுக் குப்பையில் சேர்த்துருவோம்////

என்னது குப்பைய வீட்டுக்கு போய் போட்டுபீங்களா??
காணும் பொங்கலுக்கு மேரீனால சேர்ந்த குப்பை மட்டும் 100 டன்னுக்கு மேல..

said...

வாங்க வாழவந்தான்.

முதல் வருகை போல இருக்கே......வணக்கம். நல்வரவு.
நலமா?

குப்பைபோட நம்ம மக்களுக்குச் சொல்லியாத் தரணும்?

தனிமனுசன் திருந்துனா நாடே திருந்திரும்.

அந்த நாள் வரணும்.

said...

அன்று சென்னையில் அடையாறு கூவம் இங்க எல்லாம் பாலாறும் தேனாறும் ஓடும்...

ஆமாமுங்கோ! சில மாசமா பதிவுகளை பாத்துடுவாறேன் ஆனா பாருங்க இப்பதான் கமண்டிருக்கேன் போல..