Tuesday, February 10, 2009

ஜலக்ரீடை

குளிக்கும்போது பார்க்கக்கூடாதுதான். ஆனா நாமென்ன அவுங்க பாத்ரூமிலயாப் போய் எட்டிப் பார்த்தோம். நம்ம கண்ணுமுன்னாலேயே தண்ணீரில் ஆடி அட்டகாசம் பண்ணுனா ......எப்படிங்க?

இன்னும் நல்லத் தெளிவா எடுக்கலாமுன்னா...... நடுவிலே ஒரு டபுள் க்ளேஸ்டு விண்டோ...நந்தி போல(-: மேலும் வெளிப்புறம் 'படப்பிடிப்பு'க்குன்னு போனால்..... நடிகநடிகையர்கள் 'பறந்து' போயிருவாங்க.



படப்பிடிப்புக்குன்னு நான் தயாரா இல்லாத சமயம். அடுக்களை ஜன்னலில் கிடைச்ச காட்சி. ரெண்டு நிமிசம்தான் என்றாலுமே ஸ்டெடியாக் கேமெராவைப் பிடிக்கவும் முடியலை. (வயசாகுதே) ஊமைப்படத்துக்கு இசை சேர்க்கும் வழி யாராவது சொல்லிக் கொடுத்தால்....முயற்சிக்கலாம்.

நம்ம நானானி ஒரு சமயம், குருவிகளே அருகிப்போச்சு, பார்க்க முடியலைன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அவுங்களை நினைச்சுக்கிட்டே இந்தப் பதிவைப் போட்டேன்.


ஆக்ஷன் ஃபோட்டோ எடுக்கும் அளவுக்குத் திறமை இல்லைன்னாலும் சிலசமயம் சில ஷாட்கள் நல்லா அமைஞ்சுருதுன்னு எண்ணம். மேலே உள்ள படத்தை இந்த மாசம் பிட்டுக்கு அனுப்பியாச்சு. எல்லாம் இருத்தலின் அடையாளமே.

48 comments:

said...

"சிட்டுக்குருவி தண்ணீரிலே குளித்திடக் கண்டேனே" என்று பாடினீர்களா?
படம் அருமை.
சகாதேவன்

said...

டீச்சர்.. மீ த ஃபர்ஸ்ட்டு... ;) விண்டோஸ் மூவி மேக்கர் ஓபன் செய்து, வீடியோவின் ஆடியோவை ம்யூட் செய்து, வேறு ம்யூசிக் சேர்த்து கொள்ளலாம் ;)

said...

நேர்க்குத்தாக குருவி விர்ரென மேலுழும் கோணம் சூப்ப்ர்ர்ர்ர், ஒரு மீன் துள்ளுவது போல...!

வாழ்த்துக்கள்.

said...

//எல்லாம் இருத்தலின் அடையாளமே//

பின்னவீனத்துவம் :))

said...

அழகான படம்..:)

said...

//எல்லாம் இருத்தலின் அடையாளமே.//

செல்லாது செல்லாது.. இந்த மாதிரி பிட்டையெல்லாம் போட்டா பயந்து உங்களை படிக்காம எல்லாம் இருந்துடமாட்டேன்.

said...

தலைப்பே அசத்துது!!! இப்ப புரிஞ்சு போச்சு...டீச்சருக்கு சமையல் வேலையே இல்லைனு.பாவம் கோபால்ஜி மற்றும் கோகி.

போட்டிக்கு அனுப்பின போட்டோவில் க்ளாரிட்டி கொஞ்சம் கம்மியோனு தோணுது டீச்சர்.

said...

சிட்டுகுருவி சிட்டு குருவி சேதி தெரியுமா? உன்னை எட்ட இருந்து படம் பிடிக்கும் ஆளு யார் தெரியுமா?வலைத்தளத்தில் வளையணிந்து விந்தைகள் புரியும் துளசிதளம்தான்.

தாமதமான பிறந்த நாள் வழ்த்துக்கள். உற்றார் உறவினருடன் நோய் நொடி இல்லாமல் பூர்ண வயதுடன் வழ்க

said...

Super teacher
Andha picture attagasama vandhirkku. This is a great idea - a pond for the birds.

Chennaila we had a small wood log hanging to the window. Pazhaya padathula saami vaikka oru wood shelf vachurupangaely, adhey dhaan. I used to keep , Kambu, Nellu and water in that. Kuruvi ellam vandhu galatta pannittu pogum. Pakkavey supera erukkum.

kakkai kuruvi engay jaadhinnu prove paniteenga teacher

said...

நல்லா என்ஜாய் பண்ணியிருக்காங்க...ம்ம்ம்..நன்றாக எடுத்துயிருக்கிங்க டீச்சர் ;))

\\எல்லாம் இருத்தலின் அடையாளமே.\\

என்ன லைட்டாக சோகம் எட்டி பார்க்குது...படம் நல்லா தான் இருக்கு டீச்சர் ;)

said...

வாங்க சகாதேவன்.

வருகைக்கு நன்றி.

பாட்டெல்லாம் மூச்...... :-)

said...

வாங்க நட்டி.

தகவலுக்கு நன்றி. முயற்சிக்கிறேன்

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நன்றிப்பா.

said...

வாங்க புதுகை அப்துல்லா.

நமக்கும் கொஞ்சம் முன் & பின் நவீனத்துவங்கள் தெரியுதே!!!!

said...

வாங்க கயலு.

உங்க 'நடனம்' அருமை.

இது...ச்சும்மா.....:-))))

said...

வாங்க பினாத்தலாரே.

//செல்லாது செல்லாது.. இந்த மாதிரி பிட்டையெல்லாம் போட்டா பயந்து உங்களை படிக்காம எல்லாம் இருந்துடமாட்டேன்.//

அப்படிப் போடு(ங்க) அருவாளை:-)))

said...

வாங்க சிந்து.

கோகிக்குக் கவலை இல்லை. எல்லாம் ரெடிமேடு:-))))

//போட்டிக்கு அனுப்பின போட்டோவில் க்ளாரிட்டி கொஞ்சம் கம்மியோனு தோணுது டீச்சர்.//

அதுக்குத்தான் இருத்தலின் அடையாளம்:-))))

said...

வாங்க ஸ்ரீவத்ஸ்.

நம்ம வீட்டுலே தினமும் 3 ப்ரெட் ஸ்லைஸ் பிச்சுப்போடணும் ப்ரேக்ஃபாஸ்ட்
முடிச்சு, குளிச்சுட்டு ஆடிட்டுப் போவாங்க.

ஒருநாள் கொஞ்சம் தாமதமாயிட்டா....எல்லாம் திட்டிக்கிட்டே உக்காந்துருப்பாங்க.

said...

வாங்க தி.ரா.ச.

நலமா? ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணோமே.....

வாழ்த்துகளுக்கும் பாட்டுக்கும் நன்றி.

said...

வாங்க கோபி.

தினமும் நாலைஞ்சு முறை தண்ணீர் நிரப்பிவைக்கணும். பெரிய கருப்பு ஆடும் ஆட்டத்தில் குளமே காலி:-)))

said...

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு, தென்றலே உனக்கிது சொந்த வீடு....பறந்து பறந்து, பிரட்டும் தின்று நீரிலே நீ விளையாடு.... :-)

நல்ல படம்..

[வல்லியம்மா பதிவில் தாமதமான வாழ்த்துச் சொல்லியிருந்தேன்...இங்கும் ஒருமுறை பிறந்தநாள் வாழ்த்தைச் சொல்லிடறேன்]

said...

ஜலக்ரீடை அருமையா நடந்திருக்கு.

அதை அட்டகாசமா பதிவு போட்டதுக்கு பாராட்டுக்கள்.

said...

suuppaar Thulasi.
ஃபுல்ஸ்க்ரீன் போட்டுப் பார்த்தேன்பா. ரொம்ப நல்லா எடுத்திருக்கீங்க. இந்தக் குருவிகளோட சந்தோஷத்தை உணர முடிந்தது. செம ஆக்ஷன் படம் பா.

said...

டீச்சர்,

நல்ல சுறுசுறுப்பான காட்சி.

சரி.ஏன் சூம்(zoom) யூஸ் பண்ணவே இல்ல?


//ரெண்டு நிமிசம்தான் என்றாலுமே ஸ்டெடியாக் கேமெராவைப் பிடிக்கவும் முடியலை. (வயசாகுதே)//


இந்த தூரத்துக்கு அவ்ளோ சேக்(shake)இல்லியே. ஸோ இன்னும் நீங்க இளமைதான். கவலையே படாதீங்க.

said...

பிட்டு போட்டோ சூப்பர் ரீச்சர்!!! குளியல் சீனும் நல்லா இருக்கு :)))

said...

சிறுவயதில் வீட்டுப்புறா வளர்ப்பதில் அடிக்ஷன் டீச்சர். இந்த குருவிகள் குளிப்பதைப்பார்க்கும்போது சிறுவயதில் புறா குளிப்பதை வேடிக்கை பார்த்தது ஞாபகம் வந்தது. புறா குளித்துவிட்டு கஷ்டப்பட்டு பறக்கும் (இறக்கைகள் ஈரமாக இருப்பதால்) :-)

said...

வாங்க மதுரையம்பதி.

வாழ்த்துகளுக்கு நன்றி.

எப்போ இந்தியா திரும்புவீர்கள்?

said...

வாங்க புதுகைத் தென்றல்.

தினம்தினம் (இந்தக்கோடை முழுசும்) எனக்குக் கொடுத்துவச்சுருக்கு:-))))

குளிரில்தான் குளமே உறைஞ்சு போயிரும்(-:

said...

வாங்க வல்லி.

உண்மைதான்ப்பா.
என்ன கூச்சல் & கும்மாளம். பார்க்கவே ஆசையா இருக்கு.
தினமும் ஃப்ரீ ஷோ:-)

said...

வாங்க விஜய்.

ஜூம்(விஜயகாந்த் ஸ்டைலில் படிக்கணும்) போட்டு எடுத்ததுதான்.:-)

எட்டு மீட்டர் இடைவெளி. நடுவிலே ஜன்னல் டபுள் கண்ணாடி(-:

said...

வாங்க இலா.

ஆடையில்லாக் குளியல் ஸீன் போட்டால் பிட்டுப் (bit) படம்தானாம்:-)))

said...

வாங்க வருண்.

புறா வளர்க்கறீங்களா?

அந்தக் கூட்டுப் பக்கம்போனாலே 'குக்குக்'ன்னு அதுங்க சத்தமாப் பேசுமே:-)

அதைத்தான் சிலர் cook cook ன்னு சொல்லுதுன்னு, தப்பா நினைச்சுக்குவாங்க.

said...

கண்கவர் குளியல்........

said...

still அட்டகாசம்... கண்டு பிடித்ததற்கும் காண கொடுத்ததிற்கும் நன்றி டீச்சர் :)

அழகான வீடு. நானும் பறவைகளை ஈர்க்க கொஞ்சம் தோட்ட முயற்ச்சிகளை செய்து பார்க்கிறேன்.

www.sugumar.com

said...

வாங்க வெயிலான்.

நலமா?
குளியலே ஒரு சுகம்தான். அதிலும் இவை......இன்னும் சுகம்!

said...

வாங்க சுகுமார்.

தோட்டத்தில் கொஞ்சம் ப்ரெட், பிஸ்கெட்டுன்னு சின்னச்சின்னதாக் கிள்ளிப் போட்டுப்பாருங்க.

ஆப்பிள் பழத்தை ரெண்டாவெட்டி கயித்துலே கட்டி மரக்கிளையிலும் தொங்கவிடலாம்.

பர்ட் ஸீட் ( Bird Seed)கடையில் கிடைக்கும் அது வேணாம். தோட்டத்தில் தூவினால் பறவைகள் வரும். ஆனால் புல்வெளியில் வேண்டாத செடிகள் முளைச்சுரும்.

எல்லாம் நீங்கள் இருக்கும் ஊரைப் பொறுத்து:-)

said...

Natty முன்மொழிந்ததை வழி மொழிவதாய் வைத்துக் கொள்ளுங்கள்; 'வின்டோஸ் மூவி மேகர்' பயன்படுத்தலாம். இலவசம். சுலபமும் கூட. ஒலி/இசைக்கான mp3 தடத்தை முதலில் தேர்வு செய்து கொள்ளுங்கள். ஒளிப்படத்தை மூவி மேக்கரில் இறக்குமதி செய்ததும், ஒளி, ஒலிக்கான தனித்தடங்களைப் பார்க்கலாம். ஒளிப்படத்தையும் ஒலித்தடத்தையும் அதற்கான இடத்தில் சேர்க்க வேண்டியது தான். படத்தில் எங்கே தேவையோ அங்கே தலைப்புகள் கூட பொருத்தலாம்.

பொதுக்குளியல் காட்சி பார்த்து எத்தனை நாளாகி விட்டது! (போன வருடம் குற்றாலத்தில் பார்த்த கிளுகிளு, அது வேறு விடுங்கள்)

உங்கள் பதிவுகள் அருமையாக இருக்கின்றன. ஆஸ்திரேலியா நியூசிலேந்து பக்கம் சென்றதே இல்லை, உங்களால் இந்த அனுபவம் கிடைக்கிறது. நன்றி.

said...

வாங்க அரசன்

அரசர் சொல்லுக்கு அப்பீல் ஏது?
செஞ்சு பார்த்துட்டுச் சொல்றேன்.

மரமண்டை என்பதால் நிதானமாத்தான் செய்யமுடியும். புரியணுமே முதலில்:-)

said...

//எல்லாம் இருத்தலின் அடையாளமே.\\
ஏனிந்த தளர்வான..சலிப்பான ஸ்டேட்மெண்ட், துள்சி?
ஜெயிக்கத்தான் வேணும்!!உங்க 'A' சான்றிதழ் வாங்கிய படம் அப்படி!!
நான் காக்கா குளிப்பதைத்தான் பாத்திருக்கேன். பறவைகளிலேயே ரொம்ப சுத்தமானதாமே? நான் தேடிய குருவியைக்க் காட்டியதுக்கு நன்னி!!!

said...

தண்ணீரில் தலையை விட்டு ஒரு சிலுப்பு சிலுப்பிக்குமே...அது கண்கொள்ளாக் காட்சி!!!நான் ரசிப்பது அதைத்தான்!!!

said...

வாங்க நானானி.

சலிப்பில்லைப்பா. உண்மையைச் சொல்றேன்.

வயசாகிட்டாத் தூங்கும்போது காலை ஆட்டிக்கிட்டே தூங்கணுமாம். இல்லேன்னா..............

அதைப்போல:-))))

பறவைகள் குளிச்சுட்டு உடம்பை அப்படியே பலூனாட்டம் 'உப்ப'ச்செய்து தண்ணீரை உதறும்:-)

நாந்தான் சுடுதண்ணிக்குக் காத்துருப்பேன். இதுகள் பயங்கரக் குளிரில்கூட காலையில் பச்சைத் தண்ணிக்குளியல்.

அவ்வளோ தைரியம் எனக்கில்லை:-)

said...

சிட்டுக் குருவிகளின் குளிப்பைக் கண்டதும், சிறுவயதில் வல்லிபுரக் கோயில் குளத்திலும்,
மாணிக்கங்கையிலும் மூழ்கிக் குளித்த ஞாபகத்தை கிளறிவிட்டீர்கள். நன்றி

said...

நல்ல வீடியோ. படமும் அருமை. அந்தப் பறவைகள் பெயர் என்னவோ. எங்க வீட்டு மிருகவியல் நிபுணர் கிட்ட கேட்டேன் - இது என்ன பறவைடான்னு.

வீடியோ இன்னும் கொஞ்சம் க்ளோஸ் அப் இருந்தாதான் தெரியும்னுட்டான்.

அனால் நியுஸிலாந்து தனியாக இருப்பதால் அந்த ஊர் பறவை எல்லாம் வேற மாதிரி இருக்கும். நிறைய பறவைகள் பறக்காதாம் predator அதிகமாக இல்லாததால் என்று எல்லாம் ஜல்லியடிக்கிறான்.

ebirds.org -ல் போடுங்க...

said...

வர வர உங்க பதிவு தலைப்பு எல்லாம் விபரீதமாக போகுது :-)

said...

வாங்க டொக்டர் ஐயா.

//சிறுவயதில் வல்லிபுரக் கோயில் குளத்திலும்,
மாணிக்கங்கையிலும் மூழ்கிக் குளித்த ஞாபகத்தை கிளறிவிட்டீர்கள்.//

இப்போதுள்ள குழந்தைகளுக்கு இந்த மாதிரி அருமையான வாய்ப்பு எங்கே கிடைக்கப்போகுது.... ஹூம்...

சின்னச் சின்ன சந்தோஷங்களை அப்போது முழுமையா அனுபவிச்சோம் இல்லையா?

said...

வாங்க நாகு.

வீட்டுலே 'பறவை நிபுணர்' சொன்னாச் சரியாத்தான் இருக்கும்:-)

நியூஸிப் பறவைகள் என்றே ஒரு பதிவு போடணும். விஷயங்களைச் சேகரிச்சு வச்சுருக்கேன். நேரம் கிடைக்கமாட்டேங்குது.
இந்த வருசமாவது முடிச்சுறணுமுன்னு இருக்கேன்.

தாமதமான பதிலுக்கு மாப்பு. பயணத்துலே இருந்தேன்.

said...

வெட்கமில்லாமல் :)) என்னமாதிரி குஸியாக குளிச்சல்அடிக்கிறாங்கள் கூட்டமாக. சூப்பர்! மிகவும் ரசித்தேன்.

said...

அற்புதமாக் குளிக்கிறதுகளே. அதுலயும் அந்தக் கறுப்பு நகரவே இல்லை. அழகா எடுத்து இருக்கீங்க துளசி.இதைப் படித்த நினைவேய்ல்லை. ரொம்ப நன்றிப்பா. ஃப்ரீஸ் பண்ணி எடுத்த படம் ரொம்ப அழகு.