Monday, February 09, 2009

குளிரான குளிர்

குழந்தை பொறந்துருக்குங்க.

அட! சுகப்பிரசவம்தானே?

ஆமாங்க.

குழந்தை என்ன எடை?

அறுபது பவுண்ட் எடை இருக்குங்க.

என்ன பொறக்கும்போதே... அறுபதா?


அம்மாவும் குழந்தையும் பாருங்களேன்...ஹாய்யா வெய்யில் காய்ஞ்சுக்கிட்டு இருக்கறதை!

ஒருவிதத்தில் இப்பெல்லாம் அவ்வளவாக் கஷ்டம் இல்லாத வாழ்க்கைதான். முந்திதான் தோலுக்காகவும் மற்ற சமாச்சாரங்களுக்காவும் வேட்டையாடிக்கிட்டு இருந்தாங்க.

சாப்பாட்டு நேரம் ராத்திரி என்பதால் யாருக்கும் தொந்திரவு இல்லாம ராவோடராவாப் போயிட்டு வந்துரும் பழக்கம். ஆறுவயசில் வயசுக்கு வந்துருதுங்க. அதுக்குப்பிறகு வருசாவருசம் புள்ளைத்தாய்ச்சிதான்.

ஒரு ஆறு வாரமோ இல்லை மிஞ்சிப்போன எட்டு வாரமோதான் குழந்தைக்குத் தாய்ப்பால். அதுக்கப்புறம் அம்மா நீந்தச் சொல்லிக் கொடுத்துருவாங்க. தன் உணவைத் தானே தேடிக்கணும்.

இந்த எட்டு வாரத்துலேயே குழந்தை 200 பவுண்டு எடை கூடிரும். குழந்தையே இந்தக் கனமுன்னா? அப்பா, அம்மா? மகா கனம்தான். ஒரு ஆயிரம் பவுண்டு தேறுமாம். அம்மாதான் கம்பீரமா இருப்பாங்க. அப்பாங்க எல்லாம் கொஞ்சம் ஒல்லி. மத்தபடி நீளம் பத்தடி வரை இருக்கும். படுத்தே கிடப்பதால் அவ்வளவா உயரம் தெரியாது. இவுங்களுக்கு Weddell Sealsன்னு பெயர். James Weddel என்ற ப்ரிட்டிஷ்காரர் தெந்துருவத்தைத் தேடிப்போனவர். இவர் பெயரையே இந்த சீல் வகைகளுக்குக் கொடுத்தாச்சு.

நியூஸியின் தெற்குத்தீவில் கைக்கோரா என்ற ஊர் இருக்குங்க. அங்கேயும் கடற்சிங்கங்கள் காலனி ஒன்னு பெருசா இருக்கு. அந்த வகைகள் கொஞ்சம் ப்ரவுன் நிறம் கலந்தக் கறுப்புதான். அவ்வளவா ரோமமும் இருக்காது. பக்கத்தில் இருக்கும் சின்னக் குன்றின்மேல் ஏறிப் பார்த்தால் கோயில்திருவிழாக் கூட்டம்போலப் புள்ளையும் குட்டிகளுமாக் கூட்டமான கூட்டம்.

உங்களுக்கும் ஆசையாத்தானே இருக்கு? நேரில் பார்க்கலாமேன்னு ,மனசு கிடந்து அலையுதுல்லே? அதேதான் மனுசங்களுக்கு.....

கேப்டன் ஜேம்ஸ் குக் நியூஸியைக் கண்டுபிடிச்ச பிறகு ( 1769) வந்தக் காலக்கட்டத்தில் ( ஒரு அம்பது வருசங்களில்) பலருக்கு, உலகின் தென்கோடியில் என்னதான் இருக்குன்னு போய்ப் பார்க்கும் ஆவல். அங்கே ஒரே பசுமையான செழிப்பான இடங்கள் இருக்குன்னு புரளிவேற. தேடல் ஆரம்பிச்சாச்சு.
1820 வது வருசம் தெந்துருவ எல்லைக்குப் பக்கம் 20 மைல் வரை போய்வந்தவங்களும் சொல்லி இருக்காங்க அங்கே கண்ணுக்கெட்டிய தூரம்வரை வெள்ளையாப் பனிதான் கொட்டிக் கிடக்குன்னு. 1841 வது வருசம் James Clark Ross என்றவர் இன்னும் கொஞ்சம் கிட்டேபோய் ஒரு தீவு மாதிரி இடத்தைக் கண்டுபிடிச்சார். அவர் கடந்துபோன கடல்பகுதிக்கு ராஸ் கடல், அவர் கண்டுபிடிச்ச தீவு ராஸ் தீவு இப்படிப் பெயர் வந்துருச்சு. இங்கே இருக்கும் எரிமலைதான் மவுண்ட் எரபஸ். Mount Erabus. (இன்னும் உயிரோடுதான் இருக்காம்) இதையும் விடாம 1907 லே ஒரு குழு ஏறிப்பார்த்துருக்கு. எல்லாம் நாலைஞ்சு பேர் மிஞ்சுனா ஏழெட்டுப்பேர் கொண்ட சின்னக் குழுக்கள்தான்.








புதுக் கட்டிடம் இல்லாத காலத்தில் மரப்பலகைக் குடிசை.

இப்போ இருப்பதுபோல இயந்திரங்கள், குளிர் உடுப்புகள், வசதிகள் எல்லாம் இல்லாத காலம். மரப்பலகையில் குடிசைகள் கட்டிக்கிட்டுக் குளிரில் ஆராய்ச்சி செஞ்சுருக்காங்க பாருங்களேன்.


அதுக்குப்பிறகுதான் நம்ம ஸ்காட் 1912 வருசம் போய்ப் பார்த்துத் திரும்பவராமலேயே போனது. இவர் பனியில் போகும் நாய்களை உதவிக்குக் கொண்டுபோகாததும் ஒரு காரணமுன்னு சொன்னாங்க. ஸ்காட் குழு போனபிறகு 1933 வருசம் நியூஸிலாந்து அண்டார்ட்டிக் சொஸைட்டின்னு ஒன்னு ஆரம்பிச்சாங்க. அதுக்குபிறகு 20 வருசம் கழிச்சு 1953 இல் நியூஸி அரசுடன் சேர்ந்து ஒரு ஆராய்ச்சி மையம் கட்ட அனுமதி வாங்கி 1956 இல் கட்டிடம் கட்டுனாங்க. மொத்தம் 8 கட்டிடங்கள். எல்லாத்தையும் இணைக்கும் சுரங்கப்பாதைகள்னு ஆரம்பிச்சது. ஸ்டீல் தண்டுகள் பயன்படுத்தி இங்கே வெலிங்டனில் கட்டடம் கட்டி அதுக்கு எண்கள் எல்லாம் கொடுத்துப் பிரிச்சு எடுத்துக்கிட்டுப்போய் பேஸில் கட்டுனாங்க. பிரிச்சு எடுக்குமுந்தி பொதுமக்கள் பார்வைக்குன்னு கண்காட்சியாக் கொஞ்ச நாள் வச்சுருந்தாங்க.




இதுதான் அந்த ஸ்காட் பேஸ் கட்டிடங்களின் மாடல். 85 பேர் இங்கே தங்கி ஆராய்ச்சி செய்யறாங்க. அக்டோபர் மாசம் முதல் அடுத்த அக்டோபர்வரைன்னு ஒரு குழு வேலைசெய்யுது. கோடைகாலத்துக்குன்னு மட்டும் இன்னொரு குழு அக்டோபர் முதல் ப்ப்ரவரிவரை போய் இருந்து வேலை செய்யும். சகலவசதிகளுன் அட்டகாசமா இருக்குன்னு கேள்வி. உள்ளே வசிக்கும்போது வெறும் டி ஷர்ட் போட்டுக்கலாமாம். அவ்வளவுக்கு சூடான வெப்பம் இருக்காம்.
இந்தக் கட்டிடம் கட்டுனது 1957 வது வருசம். இந்த கடந்த 50 வருசங்களில் இன்னும் ரொம்ப நல்ல வசதிகளுடன் இதைப் புதுப்பிச்சு ரெண்டு நிலைக் கட்டிடங்களா ஆக்கிட்டாங்க.

ராஸ் தீவு, ஸ்காட் பேஸ் போயிட்டோமுன்னா தென் துருவம் போயிட்டேன்னு சொல்லிக்க முடியாது. அங்கே இருந்து இன்னும் தெற்கே 1500 கிலோமீட்டர் போனால்தான் தெந்துருவத்தின் மையப்புள்ளியைத் தொடமுடியும். அப்படித் தொட்டவர்களும் இருக்காங்க. அங்கே போய்வந்த அடையாளமா அவுங்கவுங்க தங்கள் நாட்டுக் கொடிகளை நட்டுவச்சுட்டு வந்துருக்காங்க. ( ஒரு விவரணப் படத்தில் பார்த்தேன்)


அண்டார்டிக் ஒரே உறைபனியா இருக்கும்முன்னு சேதி பரவ ஆரம்பிச்சதும் அதையும் போய்ப் பார்க்கணுமுன்னு ஆசை பலருக்கும் இருந்துச்ச்சு. நியூஸியின் விமானச் சேவையான 'ஏர் நியூஸிலாந்து' மக்கள் ஆசையைப் புரிஞ்சுக்கிட்டுத் தெந்துருவம் வரை போக முடியாது. ஆனால் ராஸ் தீவுவரை போய் ஜஸ்ட் ஒரு பார்வைப் பார்க்கன்னு ஒரு சர்வீஸ் ஆரம்பிச்சது 1977 ஃபிப்ரவரி. எங்கேயும் நிறுத்தமாட்டாங்க ஆக்லாந்து நகரத்துலே,விமானம் ஏறி நேராப்போய் மவுண்ட் எரெபஸ் என்னும் எரிமலை இருக்கும் இடத்துக்கு மேலே ஒரு வட்டம் அடிச்சுத் திரும்ப வந்து ஆக்லாந்துலே இறக்கி விட்டுருவாங்க.


1979 லே இப்படிப்போன ஒரு விமானம் நவம்பர் மாசம் அதே எரிமலையில் மோதி அதுலே இருந்த 257 பேரும் மரணமடைஞ்சாங்க. அவுங்க உடலைக்கூட மீட்கமுடியாமல் போயிருச்சு. இப்பவும் கோடை காலத்துலே பனி உருகும்போது அந்த விமானத்தின் உடைஞ்ச பகுதிகள் சிலசமயம் வெளியே தெரியுமாம். whiteout கண்டிஷந்தான் காரணமாம். சிலசமயம் பனிப்புயல், காலநிலைக் காரணத்தால் எதிரில் இருப்பது ஒன்னுமே தெரியாமல் வெறும் வெள்ளையாவே இருக்குமாம். கண் தெரியாமப்போய் முட்டிக்கிட்டக் கதைதான்(-:


ஸ்காட் பேஸ், விஸிட் பண்ணனுமுன்னா நாம் போயிட்டும் வரலாம். ஆனா அதுக்கான கண்டிஷன்கள் ஏராளம். முதலில் சர்வதேச ஒப்பந்தப்படி போடப்பட்டுள்ள சட்டதிட்டங்கள். ரெண்டாவது நம்ம உடம்பு. ஆரோக்கியம். நல்ல நிலையில் இருக்கணும். முதலுதவிக்கான பயிற்சி (16 மணி நேரப் படிப்பு) முடிச்சு அதுக்குண்டானச் சான்றிதழ் வாங்கிக்கணும். சாமான்கள் பேக்கிங் செய்ய பாலிஸ்டைரின் சம்பந்தமுள்ள எதையும் பயன்படுத்தக்கூடாது. ஆராய்ச்சிக்காகக் கொண்டுப்போகும் சாமான்களை ஒன்னுவிடாமத்திருப்பிக் கொண்டுவரணுமுன்னு ஏகப்பட்ட சட்டங்கள். எல்லாத்துக்கும் மேலே இந்தப் பயணத்துக்கு ஆகும் செலவுகள்...... ஐயோ நம்மாலே முடியாது. ஆனா அதுக்காக அப்படியே விட்டுற முடியுதா?




snow mobil

கவலையேபடாதீங்க. கிறைஸ்ட்சர்ச் நகரத்தில் (நம்ம ஊருதான்) அண்டார்ட்டிக் செண்டர்ன்னு ஒன்னு கட்டிவச்சுருக்காங்க. தென் துருவத்துக்குப் போனா எப்படி காலநிலை இருக்குமோ அதே போல இதுக்குள்ளே செஞ்சுவச்சாச்சு. பனிப்புயல்கூட வீசும். மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்துலே பனிக்காத்து. இதைச் சமாளிக்கத் தேவையான உடுப்புகளும், காலணிகளும் அங்கேயே கொடுக்கறாங்க. (நல்லவேளை வீட்டுலே இருந்து நாம் சுமந்துக்கிட்டுப் போகவேணாம்) பெங்குவின் பறவைகளும் வச்சுருக்காங்க. அவை சின்ன சைஸில் உள்ள ப்ளூ பெங்குவின்கள். ஒரு அனுபவத்துக்காக ஒரு முறை போய்வரலாம். இப்போதைய டிக்கெட் விலை 68 டாலர்கள்.

நம்ம ஊரில் இருந்துதான் அண்ட்டார்டிக் South Pole airdrop க்குன்னே தனி விமானம் அங்குள்ள ஆராய்ச்சி மக்களுக்கான சப்ளையெல்லாம் கொண்டுபோய்ப் போட்டுட்டு வருது. கோடைகாலம்தான் இதுக்கு ஏற்றது. (இன்னிக்கு இந்தப் பதிவு எழுதும் நாள் சப்ளை விமானம் கிளம்பிப் போகும் சத்தம் கேட்டுச்சு) அவசரம் ஆபத்துன்னா மெடிக்கல் டீம் போறது, அங்கிருந்து நோய்வாய்ப்படவர்களை இங்கே மருத்துவத்துக்குக் கொண்டு வர்றதுன்னு ஏகப்பட்ட விஷயங்கள் ஓசைப்படாம நடந்துக்கிட்டு இருக்கு.

அண்ட்டார்டிக் ப்ரோக்ராம் என்ற திட்டத்தில் அமெரிக்காவுக்கான விமானத்தாவளமும் நம்ம ஊரில்தான் இருக்கு. நத்தானியல் பி. பால்மர் என்ற ஐஸ் ப்ரேக்கர் கப்பல் Nathaniel B. Palmer ( அமெரிக்கநாட்டின் விஞ்ஞான ஆராய்ச்சிக் கப்பல்)கூட நம்மூர் துறைமுகத்துக்குத்தான் அப்பப்ப வந்து போகுது. ஒருமுறை உள்ளே போய்ப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைச்சது. தென் துருவத்துக்குப் பக்கம் இருக்கும் பெரிய ஊர் நம்மதுதான் என்பதால் இப்படி விசேஷமான சிலதைக் காண்பது கொஞ்சம் எளிது:-)


மனுஷன் தன்னுடைய அதீத ஆர்வத்தால் பூமியே தனக்கு மட்டுமுன்னு நினைக்காமல் மத்த ஜீவராசிகளோடு பங்குபோட்டுக்கிட்டு வாழக் கத்துக்கணும். எல்லாத்துக்கும் மேலா வரப்போகும் சந்ததிகளுக்கு உலகத்தை நல்லமுறையில் விட்டுட்டுப்போகணும் என்பதுதான் என் ஆசை. உங்களுக்கும் இப்படித்தானே?

37 comments:

sury siva said...

மனுஷன் தன்னுடைய அதீத ஆர்வத்தால் பூமியே தனக்கு மட்டுமுன்னு நினைக்காமல் மத்த ஜீவராசிகளோடு பங்குபோட்டுக்கிட்டு வாழக் கத்துக்கணும். எல்லாத்துக்கும் மேலா வரப்போகும் சந்ததிகளுக்கு உலகத்தை நல்லமுறையில் விட்டுட்டுப்போகணும் என்பதுதான் என் ஆசை. உங்களுக்கும் இப்படித்தானே?//
முதல்லே மனுசன் தன்னைப்போன்ற ஜீவ ராசியோடவேயே ஒத்துப்போய் வாழக்கத்துக்கவே இல்லையே !
சுப்பு ரத்தினம்
ந்யூ ஜெர்சி.

துளசி கோபால் said...

வாங்க சுப்பு ரத்தினம்.
வணக்கம். நலமா இருக்கீங்களா? இப்போ இருக்கும் ஊரில் குளிர் இன்னும் கூடுதலா இருக்கோ?

எங்களுக்கு இப்போ கோடை என்பதால் கொஞ்சம் அக்கம்பக்கம் சுத்த முடியுது:-))))

//முதல்லே மனுசன் தன்னைப்போன்ற ஜீவ ராசியோடவேயே ஒத்துப்போய் வாழக்கத்துக்கவே இல்லையே ! //

சரியாச் சொல்லிட்டீங்க. மனுசன் மாறணும் முதலில்(-:

நான் நரேந்திரன்... said...

கோபால் சார் கிட்ட சொல்லி உங்களுக்கு தென்துருவத்துக்கு ஒரு டிக்கெட் போட சொல்லலாம்...கடைசியா ஒரு முயற்சி

துளசி கோபால் said...

வாங்க நரேன்.

உங்க கடைசி முயற்சி ஃபெயில்(-:

ஃபிட்னஸ் இல்லை. கழுத்தை அவுங்களே பிடிச்சுத் தள்ளுமுன் கவுரவமா நானே ஒதுங்கிட்டேன்:-)

இலவசக்கொத்தனார் said...

ரீச்சர்
உங்க ஊருக்கு எனக்கு டிக்கெட் அனுப்பின உடனே அந்த அண்டார்டிக் சென்டருக்கும் ரிக்கெட் வாங்கி வைச்சுடுங்க. அவசியம் பார்க்க வேண்டிய ஐட்டம்! :)

நான் நரேந்திரன்... said...

வடை போச்சே

துளசி கோபால் said...

வாங்க கொத்ஸ்.

பிரச்சனையே இல்லை. வாங்கிறலாம். ஸேலுக்காகக் காத்துருக்கேன். Buy one & get 10 free offer வரட்டும்:-)

துளசி கோபால் said...

நரேன்,

No luck!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காக்காசு செலவில்லாம எல்லா ஊரையும் காமிக்கிறீங்க..
அந்த ப்ரீ டிக்கெட் 10 ங்கரதில் தான் எங்க டிக்கெட்டும் இருக்கா..?

sindhusubash said...

டீச்சர் சீலில் ஆரம்பிச்சு எங்கயோ கொண்டு போய்ட்டிங்க.மனித இனம் ஆரம்பிச்ச காலத்தில் இருந்து இப்ப வரைக்கும் சுயநலவாதியாதான் இருக்கோம்.இதுல எங்க மத்த ஜீவராசியோட பங்கு போடறது?

சீனியர் ஸ்டூடன்ஸ்க்கு டிக்கெட் எடுக்கும் போது என்னையும் சேர்த்துக்குங்க டீச்சர்.

வல்லிசிம்ஹன் said...

ஒரு வாரம் தான் பாத்துக்குமா:)
சிரமமில்லாத பாடா இருக்கே.
தென் துருவத்துக்கு ஏன்பா போகணும்
நாங்க எல்லாம் நூசி வரோமே!!!!

துளசி கோபால் said...

வாங்க கயலு.

இப்போ அந்தப் பத்துலே 8 தான் இருக்கு. கொத்ஸ்க்கும் உங்களுக்கும் இடம் போட்டாச்சு:-)

துளசி கோபால் said...

வாங்க சிந்து.

முதலில் வந்தவங்களுக்கா, இல்லே சீனியாரிட்டி பிரகாரமான்னு 'பட்டி' மன்றம் ஒன்னு வச்சு முடிவு செஞ்சுருவோம்:-)))

துளசி கோபால் said...

வாங்க வல்லி.

பாடத்தைச் சரியாப் படிக்கிறதே இல்லையா?

எட்டுவாரம் பார்த்துக்கும்.

குண்டுக் குழந்தையைத் தூக்கிவச்சுக் கொஞ்ச வேணாம்:-))))

sindhusubash said...

ஆனாலும் டீச்சருக்கு (தமிழ்)குசும்பு ஜாஸ்தி.

வடுவூர் குமார் said...

ஒருமுறை உள்ளே போய்ப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைச்சது.
உங்க ஊருக்கு எது வந்தாலும் உங்க வீட்டுக்குதான் முதல் டிக்கெட்டா?
ஏதாவது வேலை வந்தால்/இருந்தால் தென் துருவத்துக்கு போய் வரனும்.

அபி அப்பா said...

அப்பா, ஃபிரிட்ஜ்ல வச்ச மாதிரி ஒரு பதிவு!

வெண்பூ said...

அருமையான பதிவு, அற்புதமான தகவல்கள் டீச்சர்..

என்ன ஒண்ணு.. உண்மைத்தமிழனோட பதிவுகளை அதிகமா படிக்காதீங்கன்னா கேட்டாத்தானே!!! :))))

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

துளசி கோபால் said...

சிந்து,

டீச்சர் குசும்பியல்ல, கேட்டோ:-)))

துளசி கோபால் said...

வாங்க குமார்.

நமக்குக் காமிக்கணுமுன்னு ஆசையாக் கொண்டுவந்து நிறுத்தறாங்க.அப்பப் போகாட்டா நல்லாவா இருக்கும்?

கேப்டன் குக் வந்த Endeavor என்ற பாய்மரக் கப்பலைப்போலவே செஞ்சு அதே பெயரோடு எங்கூர் துறைமுகத்தில் நுழைஞ்சது. அன்னிக்கு திருவிழாதான்.

அந்தக் கப்பல் உள்ளே போய் சுத்திப் பார்த்துட்டு வந்தோம்.

துறைமுகத்துக்கும் ஓப்பன் டே வச்சப்பக் கண்டெய்னர் டெர்மினல் எப்படி வேலை செய்யுதுன்னும் பார்த்தோம்.

கப்பல் கதைகூட ஒன்னு இன்னும் பாக்கி இருக்கு!!

எதையும் விடறதா இல்லை இப்போதைக்கு:-))))

துளசி கோபால் said...

வாங்க அபி அப்பா.

மே மாசம் முதல் ஆகஸ்ட்/ செப்டம்பர்வரை ஊரே ஃப்ரிட்ஜில் வச்சது போலத்தான்.

குழம்பு கெட்டாக் கீழே ஊத்திடலாமுன்னு வெளியில் வச்சால்
(ஜஸ்டிஃபை பண்ணுவது) நாலு நாளானாலும் அதுபாட்டுக்கு நல்லாவே இருக்கும் (-:

துளசி கோபால் said...

வாங்க வெண்பூ.

என்னதான் இருந்தாலும் உ.த. அவர்களோடு போட்டி போட முடியுமா?????

துளசி கோபால் said...

வலைப்பூக்கள் குழுவினரே,

மிகவும் நன்றி.

sri said...

Belated bday wishes teacher.
Wishing you ever green health, tranquility, peace and abundance in everyway.

Thanks for being yourself and inspiring everyone around in unique way.

Very informative post. I couldnt bare the german weather when I was there. Weather goddess has to be respected in all sense, for she wont show much mercy :(

மங்கை said...

துளசி..

உண்மையில் நீங்க ஒரு ரிசர்ச் பண்ணலாம்..அவ்ளோ மேட்டர் இருக்கு உங்க கிட்ட... ஆந்தரபாலஜி..ஹிஸ்ட்ரினு ஒரு டாக்டரேட் வாங்கலாம்..:-)

Vijay said...

//துளசி கோபால் said...
வாங்க கொத்ஸ்.

பிரச்சனையே இல்லை. வாங்கிறலாம். ஸேலுக்காகக் காத்துருக்கேன். Bஉய் ஒனெ & கெட் 10 fரே ஒffஎர் வரட்டும்:-)//

டீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....அது என்னா வெறும் 10 டிக்கட் மட்டும் பிரீ.....அப்போ நல்லா படிக்கிற ஸ்டுடண்ட்ஸ் மட்டும் கூட்டிட்டு போலாம்னா...எல்லாஆஆரையும் கூட்டிட்டு போங்க டீச்சர். ஒரு 200 பிரீ டிக்கடாவது கேளுங்க.

Vijay said...

FOR Follow up.

சுந்தரா said...

துளசி அம்மா, நலமா? உங்களுக்காக ஒரு சிறிய விருது இங்கே...

http://kurinjimalargal.blogspot.com/

துளசி கோபால் said...

வாங்க ஸ்ரீவத்ஸ்.

வாழ்த்துக்கு நன்றி.

நம்ம பதிவுகளில் எதாவது ஒன்னுரெண்டு முக்கியக் குறிப்புகள் இருக்கணுமுன்னு திட்டம். 'சரித்திரம்' வகுப்பாச்சே:-)))

இங்கே நியூஸியில் இந்தக் குளிர்மட்டும் இல்லைன்னா...பூலோக சுவர்க்கம் இதுதான்னு அடிச்சுச்(?) சொல்லலாம்:-)

துளசி கோபால் said...

வாங்க மங்கை.

இருக்குற 'டாக்குட்டர்'கள் போதாதா?

சமீபத்திய டாக்குட்டர்கள் எல்லாம் கோச்சுக்கப் போறங்கப்பா!

துளசி கோபால் said...

வாங்க விஜய்.

லாட்டோ மட்டும் வரட்டும். தனி விமானத்தைச் சார்ட்டர் செஞ்சுருவோம்:-)

துளசி கோபால் said...

வாங்க சுந்தரா.
நலமே நலம்.

நன்றிப்பா அந்தப் பட்டாம்பூச்சிக்கு:-)

எம்.எம்.அப்துல்லா said...

//மனுஷன் தன்னுடைய அதீத ஆர்வத்தால் பூமியே தனக்கு மட்டுமுன்னு நினைக்காமல் மத்த ஜீவராசிகளோடு பங்குபோட்டுக்கிட்டு வாழக் கத்துக்கணும். எல்லாத்துக்கும் மேலா வரப்போகும் சந்ததிகளுக்கு உலகத்தை நல்லமுறையில் விட்டுட்டுப்போகணும் என்பதுதான் என் ஆசை. உங்களுக்கும் இப்படித்தானே//

ஆமா!ஆமா! இந்த பூமிக்கு நாம் பொறுப்பாளி மட்டுமே. பயனாளி அல்ல...இதை நாம் அனைவரும் உணர வேண்டும் :))

M.Rishan Shareef said...

அன்பின் டீச்சர்,

அருமையான பதிவு.

அப்படியே எஸ்கிமோக்கள் பற்றியும் எழுதுங்களேன்..அறிந்துகொள்ள ஆசையா இருக்கு :)

துளசி கோபால் said...

வாங்க புதுகை அப்துல்லா.

சரியாச் சொன்னீங்க நாம் பயனாளி என்று.

அதையும் நம்ம ஆளுங்க நாம் மட்டுமே ஒன்லி பயனாளின்னு ஆக்கிருவாங்க(-:

துளசி கோபால் said...

வாங்க ரிஷான்.

டீச்சரை தொலைதூர(கல்வி)த்துக்கு அனுப்பும் எண்ணமா?

இக்ளூவெல்லாம் இப்ப இல்லையாமே.... அவுங்க வாழ்க்கை முறைகள் வெகுவாக மாறினதாக் கேள்வி!