Wednesday, February 04, 2009

ஆண்கள் பொல்லாதவர்களா?

வைக்கோல் இருக்கு பாருங்க அதுலே கொஞ்சம் எடுத்துப் பிரிபோல சுத்தி, அதை காலணிக்குள்ளே வச்சுக்கிட்டால் நடுக்கும் குளிரில் இருந்து கொஞ்சூண்டு தப்பிக்கலாமாம். நெல்லே விளையாத ஊருலே வைக்கோலுக்கு எங்கே போவேன்? ஏன்? கோதுமை விளையுதுல்லே அந்த வைக்கோலை எடுத்து வச்சுக்கோ. அதுவும் சரிதான். ஆனா இதுக்குன்னு பெரிய அளவுள்ள காலணி வாங்கணுமே..... துருவப் பிரதேசம் போகணுமுன்னா வாங்கித்தானே ஆகணும்?
நம்ம வீட்டுலே இருந்து பொடி நடையா தெற்குத் திசை நோக்கி 3832 கிலோ மீட்டர் நடந்தால் ஸ்காட் பேஸ்'' Scott Base வந்துரும்! ராபர்ட் ஃபால்கன் ஸ்காட் என்ற வீரர் (கடற்படை)தான் முதல் முதலில் தெந்துருவத்தில் கால் குத்துனவர். அங்கிருந்து திரும்பும் வழியில் , அதீதக் குளிர், களைப்பு, பசி போன்ற காரணங்களால் அவரும், அவர் தலைமையின் கீழ் கூடவே போன இன்னும் நால்வருமாய் (பஞ்சபாண்டவராய் அஞ்சு பேர்) மேலே போய்ச் சேர்ந்துட்டாங்க. சம்பவம் நடந்த வருசம் 1912. அவருடைய பெயரில்தான் இந்த ஸ்காட் பேஸ் என்னும் ஆராய்ச்சி மையம் நியூஸியின் அதிகாரபூர்வமானதா இயங்கி வருது. இந்த மையம் ஆரம்பிச்சது 1957. இப்போ ரெண்டு வருசம் முந்திதான் பொன்விழா கொண்டாடி, புது தபால்தலை வெளியிட்டோம்.
இங்கே கோடைகாலத்துலே மட்டும்தான் போய்வரமுடியுது. ஆறு மாசம் வரை பகல் பொழுதுகளாவே இருக்கும். கோடையில் குளிரும் கம்மிதான். வெறும் மைனஸ் முப்பது டிகிரி. அப்பக் குளிர்காலமுன்னா? மைனஸ் எண்பது.


போகும் வழியில் பேரசர் பெங்குவின் பறவைகளை நிறையப் பார்க்கலாம். பெயருக்குத் தகுந்தாப்போல நாலடி உயரம். 45 கிலோ எடைவரை இருக்கும். உடம்பில் ரெண்டு பக்கமும் கைகள் போல இறக்கைகள் இருந்தாலும் பறக்க முடியாத பறவைகள். அந்தக் கைகள் தண்ணீரில் நீந்தும்போது துடுப்புமாதிரி( நாம் நீந்தும்போது கைகளால் தண்ணியைத் தள்ளுறோமே அதே போல) செயல்படுது.
(நியூஸியில் பலவிதமான பெங்குவின் பறவைகள் இருக்கு. சில வகைகள் கோழி சைஸுக்குத்தான். நின்னால் ஒரு அடி இருந்தால் கூடுதல்.)

இந்த பேரரசர்களுக்குத் தோல் கனம் கூடுதல். கொழுப்புப் படிமானங்கள் தோலுக்கடியில் சேர்ந்து குளிரைத் தாங்கும் சக்தியைக் கொடுக்குது. இனப்பெருக்கம் சமயத்தில் ஆண்கள் துணைவியைத் தேடி 120 கிலோமீட்டர் தூரம்வரைகூட நடந்தே வருதுங்க. ஜோடி சேர்ந்தபிறகு , உனக்கு நான் எனக்கு நீ. வேறு யாரையும் ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன்னு 'ஏக பத்தினி, ஏக பத்தனன்' விரதம்தான்.

ராணி ஒரே ஒரு முட்டைதான் இடுவாங்க. ஏறக்குறைய அரைக்கிலோ எடை. எங்கே பார்த்தாலும் உறை பனி இருக்கும் இடத்தில் முட்டையை எங்கே வச்சு அடை காக்க முடியும்? முட்டையைப் பிரசவித்த ராணி, குளிர்காற்று முட்டையை அண்டவிடாமல் கவனமாத் தன் பாதங்களின் மேல் ஏந்திக்கும். இதுக்குள்ளே ராணிக்கு, புள்ளைப்பெத்த உடம்பாச்சா.... பலகீனம் அதிகமாவேற . ராஜா உதவி செய்யறேன்னு முட்டையை ஆடாம அசங்காமத் தன் பாதங்களில் மாத்தும்விதம் சொல்லால் விளக்கமுடியாத வகையில் இருக்கும். சிலசமயம் முட்டை தவறுதலாக் கீழே விழுந்து உடையவும் வாய்ப்பு இருக்கு. குளிர் தாங்காம 'சட்'னு உறைஞ்சுபோகவும் வாய்ப்பு இருக்கு.


தன் காலில் வந்த முட்டையை அடிவயித்துச் சிறகுகளால் கவனமாக மூடிக்கிட்டு, ராஜா அசையாம நிக்கும். எதுவரை? முட்டை அடைகாத்துக் குஞ்சு வெளிவரும்வரை! இதுக்கு எத்தனை நாள் ஆகுமாம்? 64 நாட்கள். ராணி, முட்டையைக் கணவனிடம் கொடுத்துட்டு, தளர்நடைபோட்டு ( 120 கிலோ மீட்டர் கூட இருக்கலாம்) கடல்தண்ணீருக்கு வரணும். அப்பத்தான் அதுக்குச் சாப்பாடு. ரெண்டு மாசம்வரை தினமும் சாப்பிட்டு உடம்பைத் தேத்திக்கிட்டு குழந்தைக்கு வேண்டிய சாப்பாட்டுக்கான மீன்களை முழுங்கி அதையும் வயித்துக்குள்ளே சேமிச்சுக்கிட்டு, ராஜாவைத் தேடிப் புறப்பட்டுரும்.

இதுக்குள்ளே கொட்டும் பனியில், கொடுமையான பனிப்புயல் வீசும்போதும் ஒரு துறவி தியானம் செய்யறது போல அசையாமல் நின்னு முட்டையைக் காப்பாத்தும் இந்த ராஜாக்கள். படத்துலே இந்தக் காட்சியைப் பார்த்து மனம் கசிஞ்சு போச்சு. கண்கள் பனித்தன. இதயம் விம்மியது. ஆண் என்னும் இனத்தின் மேல் உண்மையான பரிதாபம் வந்தது எல்லாம் அப்போதான்.

இயற்கையின் அதிசயத்தை என்னன்னு சொல்ல? அங்கே சிலைகள் மாதிரி கூட்டமா ஆயிரக் கணக்கில் நின்னுக்கிட்டு இருக்கும் ராஜாக்களில் தன்னுடையவனை மிகச்சரியாக் கண்டுபிடிச்சு, குஞ்சு வெளிவரும் சமயம் அம்மா ஆஜர் ஆகிருது. முட்டையின் ஓடு கொஞ்சம் கடினமானதா இருக்கறதாலே முழுசா ஓடு உடைஞ்சு குஞ்சு வெளிவர சில சமயம் 3 நாள் கூட ஆகுமாம்.குழந்தை பொறந்த நிமிஷம்முதல் அதுக்குப் பசியும் கூடவே வந்துருதே. அம்மா கொண்டுவந்த மீனை வயித்துக்குள்ளே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக் கக்கி வெளியே கொண்டுவந்து குழந்தைக்கு ஊட்டுது. சில அம்மாக்களுக்குக் கணக்குத் தவறிப்போய் தாமதமாத் திரும்பிவருவதும் உண்டு. ஆனால் இது குழந்தைக்குத் தெரியுமா? பசிபசின்னு அழ ஆரம்பிக்கும்போது, ராஜா அப்பா...தன்னுடைய தொண்டையினுள்ளே இருக்கும் ஒரு சுரப்பியில் இருந்து தயிர்மாதிரி இருக்கும் புரோட்டீனைக் குழந்தைக்கு ஊட்டி விடும். அம்மா வரும்வரை தாங்கணுமே.....

இப்பவும் தரையைத் தொடாமல் குழந்தையைத் தன் காலில் மாத்தி எடுத்துக்கும் நிகழ்ச்சி நடக்கும். ராஜா பட்டினியில் துடிச்சுக்கிட்டு இருப்பார். துணைவியைத் தேடி வெகுதூரம் நடந்துவந்து, இணை சேர்ந்து, அடை காத்துன்னு இதுக்குள்ளே 115 நாளுக்குக்கிட்டே ராஜா சாப்பிட்டே இருக்கமாட்டார்.கிட்டத்தட்ட நாலு மாசம்!!!!! கொலைப் பட்டினின்னா இதுதான். குழந்தையைத் தாயிடம் ஒப்படைச்சுட்டு ராஜா நடையான நடை நடந்து கடலுக்கு வரணும் உணவைத்தேடி. சில சமயங்களில் பலகீனப்பட்டுப்போன ராஜாக்கள் நடந்துபோகும் வழியிலேயே முடியாமப்போய் மயங்கி விழுந்து மரணம் அடைவதும் உண்டு. ஐயோ....பாவம்.....(-: தலைவிதி நல்லா அமைஞ்ச ராஜாக்கள் போய் வயிறார சாப்பிட்டுக் களைப்பைப் போக்கிக்கிட்டு குழந்தைக்குச் சாப்பாடு சேகரிச்சுக்கிட்டு 24 நாளில் திரும்பிவரும். இதுவும் தன் குடும்பத்தைக் கரெக்ட்டாக் கண்டு பிடிச்சுரும்.
முட்டையைக் கால் மாற்றும் சமயம் சரியான பாதுகாப்பு இல்லாம முட்டை உடைஞ்சு விரிசல் விட்டோ, இல்லேன்னா குளிரில் உறைஞ்சோ போயிருந்தால் அதுலே இருந்து குஞ்சு வெளிவராதுதானே? ஆனா இதை ஒன்னும் புரிஞ்சுக்காம அந்தக் கெட்ட முட்டையையும் தெய்வமேன்னுக் காலில்வச்சு நிக்கும் ராஜாவைப் பார்க்கும்போது கல்மனசும் கரைஞ்சுரும்.

ஆபத்து ஒன்னுமில்லாம எல்லாம் நல்லபடியா நடந்த தம்பதிகள் ஒருத்தர் மாத்தி ஒருத்தர்ன்னு குஞ்சுகளைக் காலில் வச்சே வளர்த்துடறாங்க. ஒன்னரை மாசம் வரை கீழே இறக்காமல் வளர்த்த பிறகு பசங்களை எல்லாம் ஒரு இடத்துலே கூட்டிக்கிட்டுவந்து வச்சுட்டு ராஜா ராணிகள் சிலர் மட்டும் (குழந்தைகள் காப்பகம், அங்கே குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் பெரியவர்கள்மாதிரி) காவலுக்கு இருக்காங்க. மத்தவங்க எல்லாரும் கடலுக்குப்போய் சாப்பிட்டுட்டு, பிள்ளைகளுக்குப் பார்சலும் வாங்கிவந்துருவாங்க. மறுநாள் இவுங்க காவலுக்கு நின்னா மத்தவங்க சாப்பிடப் போவாங்க. ஒழுங்குமுறையோடு 'முறை ' போட்டுக்கிட்டுப் புள்ளைங்களை வளர்க்கறதைப் பார்க்கணுமே!!!!
எல்லாக் குழந்தைகளும் பிழைச்சுக்குமுன்னு சொல்ல முடியாது. குளிர் தாங்காமச் செத்துப்போறதும் உண்டு. இந்தப் பிள்ளைகளைப் பிடிச்சுத் திங்க ஒரு விதமான (Skua)கழுகுக்கூட்டம் வேற காத்துக்கிட்டே இருக்கும். அண்டார்ட்டிக் போனாலும் ஆபத்து இல்லாம இருக்கா? எல்லா இடத்திலும் வாழ்க்கை என்பது ஒரு போராட்டம்தான்.
(உள் நாட்டுலே இருக்கும் சின்ன வகை பெங்குவின்கள் ரெண்டு முட்டைகள் இடும்.)


குழந்தையை எதிர்பாராதவிதமா இழந்துட்ட மனிதத் தாயின் மனநிலைக்குக் கொஞ்சமும் குறைஞ்சதுல்லே இந்தப் பெங்குவின் தாய். குழந்தையை இழந்த துக்கத்துலே இன்னொருத்தர் குழந்தையை நைஸாத் திருடி எடுத்து வச்சுக்கும் தாய்களும் உண்டு. ஒரு பிள்ளை இரு தாய்கள். சண்டை வந்து பிறகு அக்கம்பக்கத்தார் சேர்ந்து, 'இதோ பாரு..... இது அவ பிள்ளை. உன் பிள்ளை இது இல்லை' ன்னு நாட்டாமை செஞ்சு சண்டையை விலக்கிப் பிள்ளையை உரிய தாயிடம் சேர்க்கறதும் உண்டு.

இப்படி நடையா நடந்துக்கிட்டு இருக்காம, கடலுக்குப் பக்கத்துலேயே வாழ்க்கை நடத்தக்கூடாதா? எதுக்காக இம்மாந்தூரத்துலே காலனிகளை வச்சுக்கிட்டு இருக்கு? அதுகளுக்கும் ஊர், கிராமம் இப்படி எதாவது கட்டுப்பாடு இருக்கோ?

இப்பச் சொல்லுங்க...... இதை விட உலகில் பாவப்பட்ட உயிர்கள் (இப்படியாகப்பட்ட வாழ்க்கையை எனக்குக் கொடுத்துட்டயேன்னு புலம்ப) எதாவது இருக்கா?

(இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு.நாளைக்குச் சொல்றேன்)

99 comments:

said...

//ஆண் என்னும் இனத்தின் மேல் உண்மையான பரிதாபம் வந்தது எல்லாம் அப்போதான்.//

பிராணிவதை தடுப்பு பத்தி சிக்கன் பிரியாணி சாப்பிட்டுக்கிட்டே பேசற மாதிரி இருக்கு!!

அட்லீஸ்ட் பென்குவின் ஆண்கள் மேலவாவது பரிதாபம் இருக்கே!! :)

said...

நான் தான் முதல் மாணவனா?
ரெம்ப நல்லா இருக்கு

said...

ஆஜர் டீச்சர்

said...

March of the Penguines பாத்திருக்கேன். அண்டார்டிகாலயே போய் எடுத்திருக்காங்க. மார்கன் பிரீமன் வர்ணனையோட. சூப்பரா இருக்கும்.

said...

வாங்க கொத்ஸ்.

இது என்ன புது மொழியா?

பழசே இருக்கேப்பா...நினைவில்லையா?


'ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்'

இது இன்னும் பொருத்தமா இருக்கே:-)

said...

வாங்க நசரேயன்.

க்ளாஸ் லீடர் முதல்லே வந்துருக்கார்.

நோ g , ஒன்லி c

said...

வாங்க நரேன்.

கடைசி பெஞ்சுக்கு முதலிடம்?

said...

வாங்க சின்ன அம்மிணி.


நானும் அண்டார்டிக்குக்கு நேரில் போய் இந்தப் படங்களை எடுத்தேன்:-))))

நம்புவீங்கதானே?

said...

நீங்க சொல்ல சொல்ல எனக்கும் பாவமாத்தான் இருக்கு.. ஆனா நாம பெங்குவின் இல்லையே.. அதனால் தலையை உலுக்கிட்டு நிஜத்துக்கு வந்ததும் தெளிவாகிட்டேன்..:)

said...

\\கண்கள் பனித்தன. இதயம் விம்மியது. ஆண் என்னும் இனத்தின் மேல் உண்மையான பரிதாபம் வந்தது எல்லாம் அப்போதான்.
\\

பென்குவின் கதை எல்லாம் சொல்லி தான் எங்கள் நிலைமையை தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு..!

said...

Very moving yeah.. poor creatures. Over harvesting of fish in artic regions have left them food less. I have seen this documentry and also "happy feet" . These beautiful species are getting extinct so fast.

"Dodo" kku ana kadhai aagam erundha sari.

30% of our planet resources is completely gone, thanks to greedy mankind. Sometime I wonder whether we, humans(?!)are blessing or bad karma to this planet.

said...

Touching ....

said...

இங்க துபாய் மாலில் பெங்குவின் இருக்குனு போய் பார்த்தா நீங்க சொன்ன மாதிரி கோழி சைசில் தான் இருக்கு.இப்ப தானே தெரியுது அது உங்க ஊருனு.

டீச்சர்னா டீச்சர் தான்..பாடத்தை கூட உணர்ச்சிமயமா சொல்லி குடுக்கறது.எங்க வீட்டு ரங்குவை ”ரொம்ப நல்லவன்னு” நினைக்க வெச்சுடீங்க டீச்சர்.

said...

பென்குவின் பத்தி நெறய்யாத் தெரிஞ்சுக்க முடிஞ்சுது..

பிறந்த நாள் வாழ்த்துகள்!

said...

இந்தக் காட்சியைப் பார்த்து மனம் கசிஞ்சு போச்சு. கண்கள் பனித்தன. இதயம் விம்மியது. ஆண் என்னும் இனத்தின் மேல் உண்மையான பரிதாபம் வந்தது எல்லாம் அப்போதான்.//இந்தக் காட்சியைப் பார்த்து மனம் கசிஞ்சு போச்சு. கண்கள் பனித்தன. இதயம் விம்மியது. ஆண் என்னும் இனத்தின் மேல் உண்மையான பரிதாபம் வந்தது எல்லாம் அப்போதான்.// அது "இதயம் இனித்தது"
சரித்திரத்தின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களை உங்கள் இஷ்டத்துக்கு விம், சபீனா போன்றவைகளாய் மாற்றியதற்கு என் கண்டனங்கள்.

said...

குழந்தையை எதிர்பாராதவிதமா இழந்துட்ட மனிதத் தாயின் மனநிலைக்குக் கொஞ்சமும் குறைஞ்சதுல்லே இந்தப் பெங்குவின் தாய். குழந்தையை இழந்த துக்கத்துலே இன்னொருத்தர் குழந்தையை நைஸாத் திருடி எடுத்து வச்சுக்கும் தாய்களும் உண்டு. ஒரு பிள்ளை இரு தாய்கள். சண்டை வந்து பிறகு அக்கம்பக்கத்தார் சேர்ந்து, 'இதோ பாரு..... இது அவ பிள்ளை. உன் பிள்ளை இது இல்லை' ன்னு நாட்டாமை செஞ்சு சண்டையை விலக்கிப் பிள்ளையை உரிய தாயிடம் சேர்க்கறதும் உண்டு.//

படிக்க படிக்க ஆச்சர்யமா இருக்கு டீச்சர்


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எல்லாரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க பிறந்த நீவிர் நின் குடும்பத்தாருடன் வாழ்க பல்லாண்டு


இதை கேள்விப்பட்ட எனக்கும் ச்ந்தோஷம் இன்று சந்தோஷம் தான்.

said...

மனமார்ந்த பிறந்த்நாள் வாழ்த்துக்கள்!!!

said...

படிச்சி முடிச்ச உடனே யூடூபில் "கத்தாழை கண்ணால" பாட்டுக்கு பென்குயின் ஆடியிருக்கிற ஆட்டம் தான் ஞாபகம் வந்தது.
முடிஞ்சா பாருங்க.

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

தலைப்பை பார்த்ததும் அடடா நம்ம சமூகத்தை பத்தி சொல்ல ஒரு தலவி கிடைச்சாச்சுன்னு வந்தா...

அட இதுவும் நம்ம சமூகந்தான்.

நேர்ல பாத்த ஃபீலிங்.

கலக்கல் வர்ணனை.

said...

இ.கொ, இந்த பெங்குவின் பெண்களோட நுண்ணரசியலை பாருங்க. 120 கிமீ போய் குழந்தைகளுக்கு மீன் எடுத்துகிட்டு வருதுங்க. ஆனா பாவப்பட்ட புருசனுக்கு ஒண்ணும் கொடுக்காதா? வன்மையாக கண்டிக்கிறேன்!
:-)))))))))))))

அருமையான பதிவு அக்கா!

said...

பென்குவின்களின் வாழ்க்கை மனசைத் தொட்டது.

அடுத்த பகுதியையும் படிக்க ஆவல்.

அத்துடன்,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டீச்சர்!

said...

பெங்குவின் படிச்சிருக்கேன், பாத்திருக்கேன். ஆனால், ஆண்களின் புகழ்பாடும் கண்ணீர்க் காவியமாய்ப் படைத்த உங்கள் எண்ணத்தை என் சொல்வேன்?

இதுக்கு ப்ளஸ் ”அவர்கள்” போட்டால் தான் உண்டு:-)

said...

பெண் குவீன் பதிவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

said...

டீச்சர், இந்த மாதம் என் பிள்ளைகளுக்கும் ஆர்டிக்/அண்டார்டிக்/பனிகாலம்/பென்குவின் தான் theme. அவர்களுடன் சேர்ந்து நான் கற்றது: தாய் உணவுத் தேடிப் போகும் போது தந்தைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி நின்று உடல் சூட்டைத் தக்கவைத்துக் கொள்கின்றன. இந்தக் இடத்திற்கு 'Rookery'(Delivery ward?) என்று பெயர். பெற்றோர் உணவுத் தேடிப் போகும் போது குழந்தைகள் இருக்கும் காலணி 'Huddle' (Nursery?) என்று அழைக்கப்படும்.
ஒரு மாதமாய் பல புத்தகங்களில் நான் படித்ததை, ஒரே பதிவில் எளிய தமிழில் படிக்க தந்தமைக்கு நன்றி.

said...

டீச்சர் மறந்தே போயிட்டேன்....இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)))

பிறந்த நாள் ஸ்பெசல் என்ன டீச்சர்..கிளாசுக்கு லீவா!!?? ;))

said...

This blog reminds me the movie Ice age. They show how the baby penguin was conceived and delivered. I thought it was a story. but it looks like real. Thanks for sharing

said...

ஐயகோ ! இதை எல்லாம் பார்த்து வெகுண்டு எழுந்து தாங்கமுடியாத மனித இனம் "குளோபல் வார்மிங்" ஏற்படுத்த முயற்சி பண்றாங்க. அத புரிஞ்சிகோங்க. இனிமே புகைய பாத்தா penguin ஞாபகம் வரணும்.

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் துளசியம்மா

said...

ரீச்சர்! அவசரம்! நான் போயே ஆகனும்! கிளாச்க்கு இனிக்கு வீவு! வேர கிலாஸ் பையன் வம்புக்கு வந்துட்டான்! நான் பின்ன வரேன்!

ஆனா எனக்கு பதிலா எங்க அண்ணி இருப்பாங்க:-))

\\\ramachandranusha(உஷா) said...
இந்தக் காட்சியைப் பார்த்து மனம் கசிஞ்சு போச்சு. கண்கள் பனித்தன. இதயம் விம்மியது. ஆண் என்னும் இனத்தின் மேல் உண்மையான பரிதாபம் வந்தது எல்லாம் அப்போதான்.//இந்தக் காட்சியைப் பார்த்து மனம் கசிஞ்சு போச்சு. கண்கள் பனித்தன. இதயம் விம்மியது. ஆண் என்னும் இனத்தின் மேல் உண்மையான பரிதாபம் வந்தது எல்லாம் அப்போதான்.// அது "இதயம் இனித்தது"
சரித்திரத்தின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களை உங்கள் இஷ்டத்துக்கு விம், சபீனா போன்றவைகளாய் மாற்றியதற்கு என் கண்டனங்கள்.\\

said...

ரீச்சர் மனசு வலிக்குது.. நெஞ்சு கொதிக்குது.. இதயம் துடிக்குது..

பாவம் அந்த பறவைகள்.. மனுஷனா பொறந்தாலும் குடும்பத்துக்காக உழைச்சே செத்துர்றான்.. பறவையா பொறந்தாலும் புள்ளைய பாதுகாத்து, பாதுகாத்தே செத்துப் போயிடறான்..

அப்போ ஆண்கள் எம்புட்டு பொறுமைசாலிங்கன்னு பார்த்துக்குங்க..

அடுத்த தலைப்பு பெண்கள் பொறுமைசாலிகளான்னு வைங்க..

said...

ஆண்கள், பெணகள்ன்னு பிரிக்க ஏதும் இல்ல டீச்சர். வாழ்க்கை நெறய பேருக்கு தியாகம்தான். மழை மழைன்னு சொல்ரோமே ஒண்ணு அது இவங்களாலதான் நிஜமாவே பெய்யுது. எல்லா நேரத்துலயும் இல்லனாலும் பெரும்பாலான நேரங்களிலே இதுதான் டிரைவிங் போ(f)ர்ஸ். இதுல ஆச்சரியம் என்னன்னா இந்த உயிர் சங்கிலியில் மனிதன் மட்டும் விலக ஆரம்பித்து தன் சுகம் பிரதானம்னு யோசிக்க ஆரம்பிச்சி இருக்கான். விளைவு போக போகதான் தெரியும்.

அப்புறம் இது நான் கேட்ட கேள்விக்கான பதில் பதிவுங்கறதால அதுக்கு ஒரு தனி நன்றி.

எல்லாத்துக்கும் மேல லேட்டா சொன்னாலும்(எப்பவும் போல) லேட்டஸ்டா சொல்லிகிறோம். ""ஹாப்பி பர்த்து டே.""

said...

I have seen these programmes many times and enjoyed them. But to read the translated version was very touching and humourous too.

Only you can write with such polish!!!

said...

வாழ்த்துக்கள்.

said...

//துளசி கோபால் said...
வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நன்றி.

கோபி.... வருசமா? 2009//

அவ்வ்வ்வ்வ்வ்..............

கி.மு வா? :P

said...

//நம்ம வீட்டுலே இருந்து பொடி நடையா தெற்குத் திசை நோக்கி 3832 கிலோ மீட்டர் நடந்தால் ஸ்காட் பேஸ்'' Scott Base வந்துரும்!//

நானும் பொடி நடையா வந்துகிட்டே இருக்கும் போது உங்க வீடு தென்பட்டது டீச்சர்.பெண் குயின்கள் இன்னொரு உங்க பதிவுல பார்த்த மாதிரி இருக்கே.எதுக்கும் பதிவை மறுபடியும் ஒரு தடவை படிச்சிடறேன்.

said...

நானும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கிறேன் டீச்சர்.

said...

அருமையான பதிவு டீச்சர்.ஆண்கள் பாவம்தான் இல்ல!

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள். Belated தமிழ் ல எப்படி சொல்றது? ;)

said...

தலைப்பு மட்டும் தான் நெருடல்.. ஆண்களை பற்றி எவ்வளவு தவறான சமூக சிந்தனைகள்... ஆண்களுக்கு சம உரிமையும், சமூக மரியாதையும் என்றுதான் கிடைக்குமோ! ;)

said...

அருமையான பதிவு டீச்சர்.. ரொம்ப நுணுக்கமான தகவல்கள். ஒரு டாக்குமென்ட்டரி பாக்குற எஃபக்ட். நன்றி..

said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

said...

வாங்க கயலு.

தலையை உலுக்குமுன் பெங்குவின் ராஜாவுக்கு ஒரு வணக்கம் சொன்னீங்களா?

பாவம் அந்த ஆண்கள்ப்பா(-:

said...

வாங்க கோபி.

உங்க நிலையைப் பெங்குவினோட கம்பேர் பண்ண முடியாது.

115 நாள் சாப்புடாம நம்மால் இருக்க முடியுமா?

ஆனாலும் ஆணினம் பாவம்தான்!

said...

வாங்க ஸ்ரீவத்ஸ்.

மனுசனை மாதிரி ஒரு டேஞ்சரஸ் இனம் உலகில் இருக்கா?

எல்லா உயிர்களுக்கும் பொது இந்த பூமி என்பதை மறந்தவர்கள்தானே நாம்(-:

said...

வாங்க தருமி.

//Touching ....//

same same ......

said...

வாங்க சிந்து.

//எங்க வீட்டு ரங்குவை ”ரொம்ப நல்லவன்னு” நினைக்க வெச்சுடீங்க டீச்சர்.//

திருமதி ஒரு வெகுமதி படத்தில் விசுவோட ஒரு வசனம் நினைவுக்கு வருது!

said...

வாங்க பாசமலர்.

வாழ்த்துக்கு நன்றிப்பா.

said...

வாங்க உஷா.

விம்மக்கூடாதா....? இனிக்கணுமா?

அச்சச்சோ......

பேசாம இதுக்கு ஒரு மறுப்பு போடலாமா?

said...

வாங்க அமித்து அம்மா.

பாசத்துக்கு மனுசனுக்கு மட்டும் காப்பிரைட் இருக்கா என்ன?

எதையும் திருப்பி எதிர்பார்க்காம வம்சம் வளர்க்கும் கலையில் நாமெல்லாம் மற்ற உயிர்களிடம் பிச்சை வாங்கணும்.:-))))

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க பழமைபேசி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

said...

வாங்க குமார்.

ஏற்கெனவே பார்த்துருக்கேன். 'குன்றத்துலே குமரனுக்குக் கொண்டாட்டம்' பூனையார் ஆடுனாரே அப்ப:-))))

said...

வாங்க தேனியார்.

டீச்சருக்கு ரெண்டு சமூகமும் வேண்டப்பட்டதுதான்:-))))

வாழ்த்துகளுக்கு நன்றி

said...

வாங்க திவா.

சரியாச் சொன்னீங்க. நாங்களும் அதைபத்தித்தான் பேசிக்கிட்டிருந்தோம்.

ரெண்டு மாசம் லீவுலே போற அம்மா ஒரு மாசத்துலே திரும்பிவந்தி அப்பாவை ஒரு மாச லீவுல் அனுப்பிச் சாப்பிடச் சொல்லலாம் இல்லையா?

குழந்தை பிறந்தபின் வீட்டுலே முக்கியத்துவம் குழந்தைக்குத்தான்.

said...

வாங்க சுந்தரா.
நலமா? ரொம்ப நாளாச்சே உங்களை இங்கே பார்த்து!!!!

ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை முறை. கவனிச்சுப் பார்த்தால் அதிசயமாத்தான் இருக்கு.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க கெக்கே பிக்குணி.

ப்ளஸ் அவர்கள் போட்டாங்களான்னு தெரியலை. ஆனால் மறுபடியும் சிலர் மைனஸ் போட்டுட்டாங்க:-)


வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க பாண்டியன் புதல்வி.

நர்ஸரியிலும் வெளிவட்டத்தில் இருப்பவைகளை அவ்வப்போது இடம் மாற்றி உள்வட்டத்தில் வைத்து அனைவரும் உடல் சூட்டைத் தக்க வைக்கும் விதமாகக் கவனித்துக்கொள்வார்களாம் பெரியவர்கள்.
என்ன அறிவு பாருங்களேன்!!!!!

said...

வாங்க கோபி.

வாழ்த்துகளுக்கு நன்றி.

லீவெல்லாம் இதுக்கு இல்லை. ஆனால் வரப்போகுதுன்னு மட்டும் சொல்லிக்கறேன்:-)

said...

வாங்க தெய்வா.

நிழல் இல்லை நிஜமுன்னு சொல்றீங்கதானே?

அதே அதே!

said...

வாங்க மணிகண்டன்.

குளோபல் வார்மிங்கால் ஆபத்து நிறையத்தான் இருக்கு.

மற்ற உயிர்களுக்கும் சரி, மனிதனுக்கும் சரி கஷ்டம்தான். கடல் மட்டம் உயர ஆரம்பிச்சால் சில தீவுகள் முழுசாக் கடலுக்க்கடியில் போயிருமாம்(-:

said...

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா பா.புதல்வி.

said...

வாங்க அபி அப்பா.
சொன்னால் நம்பமாட்டீங்க......
ஒரு புத்தகம் போட்டுருக்கீங்க நேத்து என் கனவில்!

எழுத்தாளர் அபி அப்பா:-)

said...

வாங்க உண்மைத் தமிழன்.

குடும்பம் என்பதே அசையாம எல்லாரையும் விழுங்கி ஏப்பம் விடும் சமாச்சாரம்தான்.

உழைச்சு உழைச்சு ஓடாப் போயிட்டா....

பாவம்ப்பா ஆண்கள்.

இதையெல்லாம் கண்கொண்டு பார்க்கும் பெண்களும் பொறுமை சாலிகள்தான்.

தீனிக்கும் தானிக்கும் சரி போயிந்தி!!!!

said...

வாங்க விஜய்.

வகுப்பிலே ஆர்வமா ஒரு மாணவர் விளக்கம் கேட்டால் சொல்வது டீச்சரின் கடமையாச்சேப்பா.

வரவர மனுசனின் சுயநலம் அளவுகடந்து போய்க்கிட்டு இருக்கு என்பதுதான் இப்போதைய வருத்தம்.

வாழ்த்துக்கு நன்றி

said...

வாங்க வெற்றி மகள்.

நன்றி.

said...

வாங்க வண்ணத்துப்பூச்சியார்.

நன்றிங்க.

said...

வாங்க ராஜநடராஜன்.

நியூஸித் தொடர் எழுதுனப்ப ஓமரு பெங்குவின்கள் காலனி பற்றி எழுதி இருந்தேன். அதன் சுட்டி இந்தப் பதிவின் ஆரம்பத்துலே கொடுத்துருந்தேனே, பார்க்கலையா?

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க நட்டி?

பிறந்தநாளுக்கான தாமதமான வாழ்த்துகள்ன்னு சொல்லலாமோ?

தலைப்பு நெருடல்ன்னா சொல்றீங்க????

அச்சச்சோ......

said...

வாங்க வெண்பூ.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

வாங்க நரேன்.

வாழ்த்துக்கு நன்றி.

said...

மிக சரளமான தமிழ் சொற்றொடர் . ஆங்கிலத்தில் பார்த்திருந்தாலும் நம் தாய் தமிழ் மொழி வாயிலாக அறிய தந்ததிற்கு மகிழ்ச்சி.

said...

//துளசி கோபால் said...
வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நன்றி.

கோபி.... வருசமா? 2009//

அவ்வ்வ்வ்வ்வ்..............

கி.மு வா? :P

டீச்சர், இதுக்கு நீங்க பதிலே சொல்லலியே? (அடி வாங்காம போக மாட்டோம்ல நாங்க!!!!)

said...

//வாங்க சுந்தரா.
நலமா? ரொம்ப நாளாச்சே உங்களை இங்கே பார்த்து!!!!//

நன்றி டீச்சரம்மா...நலமோ நலம்...நீங்க நலமா?

பள்ளியிறுதித் தேர்வுக்குப் படிக்கும் பிள்ளைக்கு முன்மாதிரியா இருக்கோமாக்கும் :)
அதனால் அடிக்கடி வர இயலுவதில்லை.

said...

\\ துளசி கோபால் said...
வாங்க அபி அப்பா.
சொன்னால் நம்பமாட்டீங்க......
ஒரு புத்தகம் போட்டுருக்கீங்க நேத்து என் கனவில்!

எழுத்தாளர் அபி அப்பா:-)
\\

அட ரீச்சர்! கீதாம்மாவோட சிதம்பர ரகசியும் "சுபம்" பதிவிலே என் முதல் பின்னூட்டம் படிச்சுட்டு அப்படியே தூங்கியிருப்பீங்க! அதான் கனவு!

அப்படியே ஒரு வேளை உங்க கனவு பலிச்சுதுன்னா முதல் தண்டனை உங்களுக்குதான்! வேற என்ன புத்தகம் பார்சேல்ல்ல்ல்ல்ல்:-))

said...

அது என்ன டயலாக்குனு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் டீச்சர்.

எல்லாரும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னாங்க..எனக்கு தெரியாம போச்சே!!!!! Belated Happy B`day டீச்சர்.

said...

அபி அப்பா,
தண்டனையைத் 'தாங்கும்' மன உறுதி இருக்கு:-)))))

said...

சிந்து,

வாழ்த்துக்கு நன்றி.

வசனம் அப்படியே நினைவில்லை. ஆனா....... அநேகமா இப்படி இருக்கும்.

'கட்டுன மனைவியைக் காப்பாத்தணுமுன்னு நினைக்கும் ஆண்கள் இருப்பதால்தான் பெண்கள் கவலை இல்லாமல் இருக்க முடியுது'

said...

வாங்க அசோஸியேட்.

படிச்சது, பிடிச்சதுன்னு சொல்றீங்கதானே? நன்றிங்க.

said...

விஜய்,

இது ப.மு & ப.பி காலம்:-)))))

said...

நல்லது சுந்தரா.

நம்மால் செய்யமுடியாததை, பிள்ளைங்களைச் செய்யச் சொல்லக்கூடாது:-))))

said...

// துளசி கோபால் said...
அபி அப்பா,
தண்டனையைத் 'தாங்கும்' மன உறுதி இருக்கு:-)))))//

உங்களுக்கு இருக்கலாம் ரீச்சர்! ஆனா ப்ரூஃப் திருத்துபவன் நிலைமையை நினைச்சு பாருங்க:-))

said...

எச்சக்குச்சுமி, டீச்ச்சார்ர்ர்ர், ப.மு & ப.பி.... வாட்டு மீனிங்குசு. கொச்டின் பிரம் டுப் லைட்.-)))

said...

விஜய்,

திஸ் ஈஸ் டூ பேட்......

இதெல்லாம் தெரிஞ்சுக்காமலேயே இத்தனை நாள் வகுப்பில் இருக்கீங்களா?

நாமெல்லாம் யார்?......இதுலேதான் இருக்கு விடை:-)
நமக்கெல்லாம் ரெண்டே காலம்தான்:-)

ப.மு: பதிவராகும் முன்

ப.பி: பதிவரான பின்

said...

//நாமெல்லாம் யார்?......இதுலேதான் இருக்கு விடை:-)
நமக்கெல்லாம் ரெண்டே காலம்தான்:-)

ப.மு: பதிவராகும் முன்

ப.பி: பதிவரான பின்//


ஆச்சுவலி டீச்சர், யூ மிச்டேக் மீ. சோகத்த கெளப்பாதிங்க டீச்சர்..... "நாமெல்லாம்" ம்ம்ம்...ம்ம்....கேக்கறத்துக்கு நல்லாத்தான் இருக்கு.. ஆனா நான் இன்னுமும் "பதிவர்"ஆவுலியே. பதிவு இன்னும் "வரும்ம்ம்ம்..... ஆனா..... வராதூஊஊ" நெலமைலதான் இருக்கு...... :((((. இருந்தாலும் என்னையும் ஆட்டைல சேத்துகினதுக்கு நன்னி... நன்னி... நன்னி....

said...

திரிசங்குவுக்கு ஒரு சொர்க்கம் கொடுத்தா மாதிரி இவங்களுக்கு ஒரு இடம் கொடுங்க.
:-))

said...

விஜய்,
எதுக்கு இவ்வளோ சோகம்?
இன்னிக்கு நாள் நல்லா இருக்கு. பேசாம வலைத்தளத்தை ஆரம்பிச்சுப் புள்ளையார் சுழி(?) பதிவு ஒன்னு 'உ' ன்னு போட்டுருங்க. அதான் தமிழ் தட்டச்சு செய்ய வந்துருச்சே...இன்னும் ஏன் வெயிட்டிங்?????

said...

வாங்க திவா.

நாமெங்கே இடம் கொடுப்பது?
ஆண்டவனாப் பார்த்து அளந்து கொடுக்கணும்!

said...

hai teacher intha pathiva naan en blogla pottu iruken parunga

ivalavu azakana pathivu mathavangalum padikkanumra ennathula ok

http://pirivaiumnesippaval.blogspot.com/

said...

வாங்க காயத்ரி.

ஆணிகள் இல்லையா?

இன்னிக்கு மட்டுமா இல்லே எப்பவுமே இப்படித்தானா? :-))))

படிச்சீங்கன்னு நம்பறேன்!!!

said...

வணக்கம் டீச்சர். காயத்ரி சொன்னதால இந்த பக்கம் வந்தேன். ரொம்ப அருமையான பதிவு. படிச்சு முடிச்சதும் பென்குவின்ஸ் மேல ஒரு தனி மரியாதை வந்துடுச்சு.

said...

வாங்க நவாஸுதீன்.

அதான் வந்துட்டீங்களே. ரொம்ப மகிழ்ச்சி.

அரியர்ஸா ஒரு 888 பதிவு இருக்குதுங்களே. காயத்ரி சொல்லலையா?:-)

said...

இன்னிக்கு வேறப் பதிவைப் படிச்சுட்டு இங்கே வந்தேன், மனசு கெனத்துப் போச்சு.

said...

வருகைக்கு நன்றி கோவியாரே!

said...

"ஒரு பிள்ளை இரு தாய்கள். சண்டை வந்து பிறகு அக்கம்பக்கத்தார் சேர்ந்து, 'இதோ பாரு..... இது அவ பிள்ளை. உன் பிள்ளை இது இல்லை' ன்னு நாட்டாமை செஞ்சு சண்டையை விலக்கிப் பிள்ளையை உரிய தாயிடம் சேர்க்கறதும் உண்டு."எப்படி அவை இனம் கண்டு கொள்கின்றன? என்ன பரிசோதனை முறை உபயோகிக்கின்றன?

அன்புடன்
தமிழ்த்தேனீ

said...

"ஒரு பிள்ளை இரு தாய்கள். சண்டை வந்து பிறகு அக்கம்பக்கத்தார் சேர்ந்து, 'இதோ பாரு..... இது அவ பிள்ளை. உன் பிள்ளை இது இல்லை' ன்னு நாட்டாமை செஞ்சு சண்டையை விலக்கிப் பிள்ளையை உரிய தாயிடம் சேர்க்கறதும் உண்டு."எப்படி அவை இனம் கண்டு கொள்கின்றன? என்ன பரிசோதனை முறை உபயோகிக்கின்றன?

அன்புடன்
தமிழ்த்தேனீ

said...

வாங்க தமிழ்த்தேனீ.

இதுதான் நமக்கு மகா வியப்பு!

ஆயிரக்கணக்கான ஆண்கள் மத்தியில் சரியாகத் தன் துணையைத்தேடி எப்படிக் கண்டுபிடிக்குது இந்தப் பெண்கள்!!!

எப்படி கணவன் அடைகாக்கும் அந்த இடம் தேடிப்போகுது? அங்கே லேண்ட் மார்க் ஒன்னும் இல்லையே வெறும் வெள்ளைப்பனியைத்தவிர!

அப்படித்தான் குழந்தையையும் கண்டு பிடிக்கும் போல!

வாழ்நாள் முழுசும் ஒரே துணையுடன் இருக்கும் இனங்கள் இவை.

ஆயிரக்கணக்கான பசு மந்தையில் கன்னுக்குட்டி எப்படி அம்மாவைக் கண்டு பிடிக்குது?இயற்கையின் அதிசயங்களில் இதுவும் ஒன்னுன்னு சொல்லணும்.

said...

டிஸ்கவரியில்(நேஷ்னல் geograpic)பார்த்திருக்கிறேன்..........

said...

I have seen this in Discovery channel . but nothing like reading your article . normally there is a say that things get registered deep and faster while you see . but I can say that you ,your writng has disproved that version .
enna life in your writing .
Hats off !!!!!
All the best for everything .
sorry due to some problem could'nt share my happiness in tamil . WOW !!! and thankyou .

said...

வாங்க சசி கலா.

நியூஸி முழுசும் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கேப்பா. அதைக் கொஞ்சமாவது அனுபவிச்ச அனுபவத்தை எழுதாமல் இருக்க முடியுமோ?

சிரங்குப்பிடிச்சவன் கை மட்டுமா, மௌஸ் பிடிச்ச கையும் சும்மா இருக்காதுப்பா:-)

said...

வாங்க நான்.

வருகைக்கு நன்றி.