குழியிலே வச்சப் பழைய சமாச்சாரத்தையெல்லாம் இப்படித் தோண்டவச்சுட்டாங்களே.......
மின்னி (Minnie Dean ) என்று அறியப்பட்ட வில்லியமினா Williamina என்ற பெண்மணி ரொம்ப வருசங்களுக்கு முன்னே நியூஸிக்கு வந்து குடியேறி இருக்காங்க. இவுங்க எப்ப வந்தாங்கன்றதுக்குச் சரியான சான்றுகள் இல்லை. 1868 லே வந்தாங்கன்னு ஒரு ஆவணத்துலே படிச்சேன். ஆனா அவுங்க பிறந்த வருடம் ரெண்டு விதமா 1844, 1847 ன்னுக் குறிப்பிடப்பட்டு இருக்கு இருவேறு இடங்களில் . இதே போல ரெண்டு குழந்தைகளுக்கு அம்மான்னு இருந்தாலும் ஒரு இடத்துலே... ரெண்டு குழந்தைகளொடு இங்கே வந்தாங்க/ ரெண்டு குழந்தைகளைப் பற்றிய மேல் விவரம் இல்லை ..... அடடா....என்ன குழறுபடின்னு தெரியலை. ஆனா ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் எந்த விதமான குழப்பமும் இல்லை. அது என்னன்னு பார்க்கலாம்.
பண்ணை நடத்திக்கிட்டு இருந்துருக்காங்க. என்ன பண்ணையாம்? குழந்தைப் பண்ணை. 'வேண்டாத' குழந்தைகளை வளர்க்கிறோமுன்னு சொல்லி விளம்பரம் பண்ணி இருந்துருக்காங்க. திருமண பந்தத்துக்கு வெளியே பெத்துக்கும்படியா ஆன பிள்ளைகள் இவுங்ககிட்டே வந்துருக்கு. ஸோலோ மதர் என்பது சமூகத்தில் அங்கீகாரம் இல்லாமல் விபரீதமாகப் பார்க்கப்பட்டக் காலக்கட்டம். குழந்தைகளைக் கொண்டுவந்து கொடுக்கும் சிலர் மொத்தமாக ஒரு தொகையும் கொடுத்துருவாங்க. சிலர் வாராவாரம், மாசாமாசமுன்னு செலவுக்குக் கொடுத்துக்கிட்டு இருந்துருக்காங்க.
ஒரு சமயம் இந்தம்மாகிட்டே 9 குழந்தைகள் இருந்துருக்கு. சில சமயங்களில் குழந்தை இவுங்க கைக்கு வந்த சில நாட்களிலேயே இறந்தும் போயிருக்கு. மருத்துவப் பரிசோதனையில் இயற்கை மரணம் என்றுதான் எழுதியிருக்காங்க.
சில சமயங்களில் திடீர்ன்னு குழந்தைகள் காணாமலும் போயிருக்கு. தன்னிடம் 'வளர வந்த' குழந்தைகளுடைய விவரங்கள் ஒன்னும் மின்னி எழுதி வச்சுக்காததால்..........சரியா எத்தனை பிள்ளைகள் பண்ணையில் இருந்துச்சுன்னு தெரியலையாம்.
அக்கம்பக்கத்து மக்களுக்கு லேசுபாசா ஒரு சந்தேகம் வர ஆரம்பிச்சது. 1895 வது வருடம் ஒரு நாள் ஒரு கைக்குழந்தையோடு ரயிலில் ஏறுனதாகவும், ரயிலில் இருந்து வேற ஊரில் இறங்கிப்போனப்ப வெறுங்கையோடு போனதாவும் அந்த ரெயிலில் இருந்த கார்டு சொல்லி இருக்கார். காவல்துறைக்கு, இப்படி ஒரு சாட்சி கிடைச்சதும் இந்தம்மாவைக் கைது செஞ்சுருக்காங்க. ரயில் போன வழியெல்லாம் தண்டவாளத்தையொட்டித் தேடலும் ஆரம்பிச்சது. ஒன்னும் கிடைக்கலை. மின்னியை விட்டுட்டாங்க. ஆனால்....மேற்கொண்டு துப்புத் துலக்கும்போது ஒரு மாசக் கைக்குழந்தை ஒன்னை, அந்தக் குழந்தையின் பாட்டி, மின்னியிடம் கொடுத்தது தெரியவர, மின்னி வீட்டைச் சோதனை போட்டப்பக் குழந்தையின் துணிமணிகள் கிடைச்சது. குழந்தையைக் கொன்னுட்டு, கையில் வச்சுருந்த ஹேட் பாக்ஸ்லே புள்ளையின் சவத்தை ஒளிச்சுக் கொண்டுவந்தாங்கன்னும் சொல்றாங்க.
சந்தேகம் அதிகமானதும் வீட்டுத் தோட்டத்தில் தோண்டிப் பார்த்தப்ப மூணு பிள்ளைகளுடைய சவங்கள் கிடைச்சது. பிரேதப் பரிசோதனை செஞ்சதில்
குழந்தைகளுக்கு மயக்கமருந்து கொடுத்து மூச்சை நிறுத்துனது புலனாச்சு. மறுபடியும் கைது செஞ்சு விசாரிச்சுக் குற்றம் உறுதிப்பட்டவுடன் (ஆறுவார விசாரணை) தூக்கு தண்டனை கொடுத்து அதை உடனடியா நிறைவேத்திட்டாங்க. 12ன் ஆகஸ்ட் 1895 எல்லாம் முடிஞ்சது. விண்ட்டன் என்ற ஊரில் இவுங்களைப் புதைச்சாங்க. இவுங்கதான் நியூஸியிலேயே தூக்குதண்டனை பெற்ற முதல் பெண். இதுக்குப் பிறகு, நியூஸியில் மரணதண்டனை என்பதே ரத்து ஆகிருச்சு.
சம்பவம் நடந்து 113 வருசங்களான பிறகு, போனமாசம் ஜனவரி 30 (2009) தேதிக்கு அவுங்களைப் புதைச்ச இடத்தில் ஒரு நாள் திடீர்ன்னு ஒரு ஹெட்ஸ்டோன் ( headstone) இருந்துருக்கு. அதுலே பொறிக்கப்பட்ட வாசகம் இது "Minnie Dean is part of Winton's history Where she now lies is now no mystery". யார் கொண்டுவந்து வச்சதுன்னே தெரியலை. அவுங்க உறவினர்களிடம் விசாரிச்சால் அவுங்க யாருக்குமே தெரியலையாம்.
நகரசபை பார்த்துச்சு. நல்லதோ கெட்டதோ இது மின்னியின் வாழ்க்கையும் சரித்திரத்தில் ஒரு பகுதிதானே....பேசாம நாமே ஒன்னு வச்சுறலாமுன்னு அழகான ஒரு ஹெட்ஸ்டோன் செஞ்சு கல்லறையில் வச்சுட்டாங்க. விழாவுக்கு சுமார் 100 ஆட்கள் வந்துருந்தாங்க. கூட்டமான கூட்டம்( நம்ம ஊரில்தான் 4 பேருக்கு மேல் இருந்தால் கூட்டம் என்று கொள்ளணுமே)
இதை எதுக்கு இப்போ சொல்றேன்?
நேத்து தொலைக் காட்சியில் காமிச்ச முக்கிய சேதி இது.
அண்டை நாடான அஸ்ட்ராலியாவில் மெல்பெர்ன் நகரத்தில் இருந்து 40 கி.மீ தூரத்தில் சில கிராமங்கள் தீப்பிடிச்சு எரிஞ்சுபோய் 181 பேர் இறந்துட்டாங்க. இன்னும் பலர் ஆபத்தான நிலையில், மருத்துவமனைகளில் இருக்காங்க. இந்தத் தீயை , யாரோ விஷமிகள் வேணுமுன்னே மூட்டி விட்டதா ஒரு தகவல் கசிஞ்சு, விசாரணை ஆரம்பிச்சு இருக்கு. செய்தி உண்மையாக இருந்தால் பிடிபடும் குற்றவாளிக்கு என்ன மாதிரியான தண்டனை ? அங்கேயுந்தான் கேப்பிட்டல் பனிஷ்மெண்ட் ரத்தாகி இருக்கே!
Wednesday, February 11, 2009
The One & Only !!!!
Posted by துளசி கோபால் at 2/11/2009 03:54:00 PM
Labels: Minnie Dean, NZ history
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
எகொஇச! :(
மெல்பெர்ன் நகரத்தில் காட்டு தீனு சன் டிவி நியுசில் ரெண்டு நாளைக்கு முன்னாடி காமிச்சாங்க டீச்சர்.
கொடுமைக்காறங்க எல்லா ஊரிலேயும் ஒரே மாதிரி தான் இருப்பாங்க போல!!!! டெல்லில கூட கண்டுபிடிச்சாங்களே இது மாதிரி ஒருத்தனை...அவன் இப்ப என்ன ஆனானே தெரியலை.
கொஞ்சம் ஒரு மாதிரி கிறுக்கா டீச்சர் அந்த அம்மா?
எதுக்கு விளம்பரப்படுத்தி குழந்தைகளை கொண்டுவந்து கொல்லனும்?!
கொஞ்சம் விளக்கம் (உங்களுக்கு புரிந்த) சொல்லுங்க, ப்ளீஸ்?
வாங்க கொத்ஸ்.
எகொஇச= எனக்குக் கொலையில் இப்போது சம்பந்தமில்லை.
இதானே சொல்லவந்தீங்க? :-))))
வாங்க சிந்து.
மெல்பேர்ன்னு சொன்னதும் கொஞ்சம் ஆடிப்போயிட்டேன்.சின்ன அம்மிணி அங்கே இருக்காங்க. நகரில் இருந்து 40 கிமீ என்றதும் நிம்மதி ஆச்சு. ஆனாலும் இத்தனைபேர் மரணம்..ப்ச்(-:
வாங்க வருண்.
என்னோட தியரி என்னன்னா......
சில குழந்தையுடன் கூடவே மொத்தமா ஒரு தொகை கிடைச்சது பாருங்க..... காசு வந்துருச்சே. இனி இந்தப் பிள்ளையை வளர்க்கரது வேண்டாத வேலைன்னு அதுகளை மேலே அனுப்பி இருக்கும் அந்தம்மா.
எல்லாமே 'வேண்டாத' பிள்ளைகள்தானே?
பணம் படுத்தும் பாடு.
வருமானத்துக்குத்தான் பிள்ளை வளர்க்கறேன்னு சொல்லி இருக்கே அந்த விளம்பரத்தில்.
அப்போ இந்த ('டோல்' சிஸ்டம்) அரசாங்க உதவித்தொகையெல்லாம் கிடையாதே.
காலகாலமாகவே இருந்து வருகிறது குழந்தைகளுக்கு எதிரான் இவ்வகைக் கொடுமை, எல்லா நாடுகளிலும்:(! தீ வைத்து கிராமங்களை அழித்து பின் நிலத்தைக் கைவசப் படுத்தும் கொடுமையும்தான்:(!
//நம்ம ஊரில்தான் 4 பேருக்கு மேல் இருந்தால் கூட்டம் என்று கொள்ளணுமே//
Ha haaaa :)))
//எகொஇச//
???????
கொடுமை தான் .. :(
பணம் படுத்தும்பாடு..
Addada , Kozhandainga sirikkaradha partha kadvul tharisanam theriyumnu solvaanga, epdi dhaan manasu varudho epdi panna.
Capital punishment ellaya, appo kutrangal neryaa agalaya ? Engey singaporela ellathukkum cane - electric shok kudupaangannu kelvi patrukken, adhanala kuttramum konjam kurayudhu.
கொடுமை...டீச்சர் உங்க தியரி ஓகே தான் பட் இருந்தாலும் வேற மாதிரி இருக்குமேன்னு ஒரு டவுட்டு!?
@அம்பி அண்ணே ;)
\\//எகொஇச//
???????\\\
இப்படின்னா என்ன கொடுமை இது சரவணா ;)
படிக்கவே பயமா இருக்கு! எப்படித்தான் இந்த மாதிரி காரியமெல்லாம் செய்யறாங்களோ...
ஒவ்வொறு பிலாக்-லும் ஒரு படத்த சேர்த்து சுவராஸ்யமாகிர்ரீங்க. நான் கூட ஒரு படக்கவிதை (ஒத்துகிட்டீங்கன்னா) போட்டேன் பார்த்தீங்களா?
www.sugumar.com
உண்மையாவே கொடுமை துளசி.
ஜெர்மனில கூட குழந்தைகள் நிறைய இருந்தால் பணம் நிறையக் கிடைக்கும்னு கேள்விப்பட்டேன். ஆனா இந்த அம்மா டூஊ மச்:(
//சின்ன அம்மிணி அங்கே இருக்காங்க. நகரில் இருந்து 40 கிமீ என்றதும் நிம்மதி ஆச்சு. ஆனாலும் இத்தனைபேர் மரணம்..ப்ச்(-:
//
இப்ப இந்தியால இருக்கேன் டீச்சர். வீட்டில இருந்து ஒரு 20 கி.மீ தள்ளி தான் இந்த சம்பவம். நாம தப்பிச்சோம்னு நினைச்சாலும் பாவம் தீயால் இறந்தவங்க. :(
வாங்க ராமலக்ஷ்மி.
இந்த 113 வருசத்துலே அநேகமா எல்லாமே மாறிப்போச்சு. இப்பெல்லாம் குழந்தைகளுக்கு உரிமை ரொம்பவே கூடுதல்.
அப்பா, அம்மா அடிச்சாங்கன்னா....அவுங்களுக்குத்தான் சிறைதண்டனை.
'அடியாத மாடு படியாது'பழமொழியெல்லாம் இங்கே ஆகாது!!!!
வாங்க அம்பி.
என்ன சிரிப்பு?
நீங்க வந்துருங்களேன். அப்ப அஞ்சு பேர் இருந்தாக் கூட்டமுன்னு மாத்திக்கலாம்:-))))
வாங்க கயலு.
அந்தம்மா ஏன் இந்த பேபி ஃபார்மிங் ஆரம்பிச்சதுன்னு தெரியலையேப்பா......
வேற வகை பிழைப்பு செஞ்சுருக்கலாமுல்லே?
வாங்க ஸ்ரீவத்ஸ்.
குற்றங்களுக்குத் தண்டனைன்னா பார்த்தால்.....
இங்கே ஹோம் டிடென்ஷன் தான் நிறைய இப்பெல்லாம்(-:
கொலை செஞ்சுட்டாக்கூட மனநிலை சரியா இருந்துச்சா அப்பன்னு பரிசோதனை செய்வாங்க. அதுலே பலபேர் தப்பிச்சுடறாங்க. எல்லா மனுசனுக்கும் மனசுலே கிறுக்குத்தனம் எதாவது ஒளிஞ்சுருக்காதா?
வாங்க கோபி.
என்ன டவுட்டு?
சொல்றது....
வாங்க சுகுமார்.
இதெல்லாம் ரொம்பப் பழைய கதை.
எதுக்கு இப்போ பயம்?
உங்க கவிதையைப் பார்த்தேன்:-)
வாங்க வல்லி.
இங்கே வெல்ஃபேர் அரசு. குழந்தைகள் நிறைய இருந்தால் அரசு உதவி கிடைக்கும். ஆனா அதெல்லாம் அவுங்க பெத்ததா இருக்கணும்.
கடன் வாங்கப்பிடாது:-))))
வாங்க சின்ன அம்மிணி.
எப்போ திரும்பவரும் உத்தேசம்?
இந்தியா எப்படி இருக்கு?
வேண்டாத குழந்தையை அப்படியே தண்ணீர் ட்ரம்முக்குள் போட்டு மூடிய கொடுமை, சாக்கடையில் உயிரோடு வீசிய சிடுமையெல்லாம் நிறைய நடந்திருக்கிறது. மனசாட்சியே இல்லாத ஜென்மங்கள்!!!
ஊரும் நாடும் வேறானாலும் இவ்விஷயத்தில் ஒன்றுதான் போலும்!!
வாங்க நானானி.
கடவுளின் டிஸ்ட்ரிப்யூஷன் டிபார்ட்மெண்ட்லே பலசமயம் நியாயம் இல்லை. எத்தனைபேர் குழந்தைக்கு ஏங்கறாங்க!!! வேணாமுன்னு சொல்றவங்களுக்குத்தான் பொறக்கவும் செய்யுது(-:
ஏனதான் அந்த அம்மா இப்படி கொலைகள் செய்தாள்.
இங்கும் பல இடங்களில் அனாதைகளை வளர்ப்பதாகச் சொல்லி கொடுமை செய்யப்படுவதாக சொல்கிறார்கள்.
வாங்க டொக்டர் ஐயா.
பதிலளிக்கக் கொஞ்சம்(?) தாமதாப் போயிருச்சு. மன்னிக்கணும்.
பயணத்துலே இருந்தேன். இணையம் கிடைக்கலை(-:
நிறைய பேருக்கு மனவியாதி இருக்குன்னு புரியுது. இது இன்னும் கொஞ்சம் அதீதமாப் போன கேஸ்(-:
Post a Comment