Monday, December 01, 2008

அக்கா ( பாகம் 5 )

வத்தலகுண்டு 'மெட்ராஸ் கேஃபே'யில் ஒன்னு இல்லே ரெண்டு ஜாங்கிரி மட்டும் அப்பப்ப வாங்கித் தின்னவளுக்கு, இதோ கண் முன்னாலே தட்டுத்தட்டா ஜாங்கிரி, லட்டு, மைசூர்பாக்கு, பர்ஃபி, இன்னும் பெயர் தெரியாத இனிப்புகள் தன்னைச் சுத்தி அடுக்கி வச்சுருக்கறதைப் பார்த்தால் எதோ சொர்க்கத்துக்கு வந்தாப்புலே இருந்துச்சு.

(வயித்துக் கடுப்புக்கு 'ஜீரா'வோட ஜிலேபி தின்னாச் சட்னு குணமாகுமாம். ஐடியா கிடைச்சுருச்சு. அதுவுமில்லாம ஜுரம் மாதிரி இதைக் கண்டுபிடிக்க முடியாதுல்லே. ரெண்டுமுறை போயிட்டேன்னு அம்மாட்டே சொல்லி, அவுங்க மருந்துக்குப்பியில் கை வைக்கப்போகும் முன்பே..... காசு கொடுங்க. ஜிலேபி வாங்கிக்கறென்னு நானே வைத்தியமும் சொல்லிருவேன். ஜாங்கிரியும் ஜிலேபியும் ஒன்னுன்னு நினைச்சுக்கிட்டு இருந்த அப்பாவி!)

இங்கே பள்ளிக்கூடத்துலே கால்பரிட்சை, அரைப்பரிட்சை லீவு வந்தப்ப என்னை அனுப்பிவைக்கணுமுன்னு அக்காவோட நாத்தனார்( மாமாவின் அக்கா) சொல்லிட்டுப் போயிருந்தாங்க. பக்கத்து ஊர்தான். அவுங்களைப் பத்தி இங்கே முந்தி எழுதி இருக்கேன். நாங்க அவுங்களைச் சித்தின்னு கூப்புடுவோம். அவுங்களுக்குன்னு பிள்ளைங்க இல்லை. மகன்கள் எல்லாம் மூத்தாளொட பிள்ளைங்க. நான் போய் இருக்கும் நாட்களில் என்னை ரொம்ப ஆசையாப் பார்த்துக்கிட்டாங்க. தினம் எக்கச்சக்கமா பலகாரங்கள். மிட்டாய்க்கடை வீடாச்சே. அடுப்புக்குப் பக்கத்தில் ஸ்டூல் போட்டு உக்காந்து பலகாரங்கள் செய்முறையெல்லாம் பக்காவா மனசுலே நிறைச்சுக்கிட்டேன். சமையலில் ஒரு ஆர்வம் வந்தது அப்போதான். அந்தச் சித்தப்பா ரொம்பவே வயசானவர். அங்கே வீட்டுலே நான் தின்னுவது பத்தாதுன்னு கைநிறையக் காசைக் கொடுத்து எதுவேணுமுன்னாலும் வாங்கிக்கோன்னு சொல்வார். சித்தியும் அடுப்பு வேலை முடிஞ்சு, தினமும் மாலை நேரத்துலே அவுங்களோட நல்ல நல்ல புடவைகளைக் கட்டிவிட்டுத் தலைநிறைய பூச்சூட்டி அக்கம்பக்கம் கோயிலுக்கெல்லாம் கூட்டிக்கிட்டுப் போவாங்க. ஜோக்கெல்லாம் சொல்லிச் சிரிக்கச் சிரிக்கப் பேசுவாங்க.

ஐயோ ஒன்னு சொல்லவந்தா அதுலே வேறொன்னு ஞாபகம் வருது பாருங்க. இது அக்கா சம்பந்தமுள்ளதுதான் அதனாலே இங்கே சொல்லிக்கலாம். அக்காவோ மாமாவோ கோயிலுக்குப் போய் நான் பார்த்ததே இல்லை. இன்னும் சொல்லப்போனா..... இந்த ஊர்லே கோயில் எங்கே இருக்குன்னே எனக்குத் தெரியாது! அக்கா வீட்டுலேயும் சாமிப் படங்கள்னு ஒன்னும் இல்லை. பொதுவா எங்க வீடுகளில் கிழக்குப் பார்த்தச் சுவத்துலேயே தரையில் இருந்து ஒரு முழ உசரத்துலே, அரைச்ச மஞ்சளை வச்சு வட்டமாப் பூசிவிடுவாங்க. ஒரு சாண் விட்டத்துலே ஒரு வட்டம். அவுங்கவுங்க கை அளவா இருக்குமோ என்னவோ! அதுலே நடுவுலே நேரா மூணு கோடு குங்குமத்துலே இழுப்பாங்க. செவப்பா ஒரு நூத்திப்பதினொன்னு:-) வெள்ளை நாமக்கட்டியைத் தண்ணி தொட்டுக் குழைச்சு அந்த குங்குமக்கோட்டின் கீழ் பாகத்துலே ஒவ்வொரு கோட்டுக்கு அடியிலும் ஒரு ஆங்கில 'வி' போடுவாங்க. அதுக்குக் கீழே நெத்திப்பொட்டு அளவுலே குங்குமம் தொட்டு ஒரு பெரிய பொட்டு( ஏதோ ஒரு படத்துலே ஜெயசித்ரா வச்சுக்கிட்டு இருப்பாங்களே அந்த சைஸ்.) அதுக்கு நாலு பக்கமும் குட்டியா நாமக்கட்டி குழைவில் வெள்ளையா நாலு பொட்டு(இப்போ நாம் வச்சுக்கற சைஸில்) இதுக்கு நடுவீடுன்னு சொல்வாங்க.

வீட்டு முன்கதவு நிலவாசப்படியிலும் இடம் வலமுன்னு ரெண்டு பக்கமும் மஞ்சள் பூசி குங்குமக்கோடு, நாமக்கட்டின்னு எல்லா உபசாரமும் வீட்டுக்குள்ளே சுவத்தில் செஞ்சமாதிரியேதான். அளவு மட்டும் சின்னதா இருக்கும்.

சிலவீடுகளில் குறுக்குக்கோடும் மைனஸ் நாமக்கட்டியுமா இருக்கும். அவுங்க சிவனைக் கும்பிடுறவங்களாம். இங்கே நிலைப்படியிலும் குறுக்குக்கோடுகள்தான் இருக்கும். ஒரு வீட்டைப் பார்த்தவுடன் அந்த வீட்டு மனுசங்க எந்த சாமியைக் கும்புடறாங்கன்னு கண்டுபிடிக்க இதைவிட எளிதா ஒரு வழி இருக்க முடியுமா? ஆளுங்க நெத்திகூட வேணாம். வாசல் நிலையே போதும் ஆஹா ஆஹா.....

வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை மஞ்சள் அரைச்சு, பூசின்னு இது ஒரு முக்கிய வேலையா இருக்கும். கற்பூரம் சாம்பிராணி, விளக்குன்னு அங்கேதான் ஏத்தி வைப்பாங்க. அங்கேதான் சாமியும் கும்பிடுவாங்க. படையல்கூட இங்கேதான் வச்சுப் படைப்பாங்க. குடும்ப வழக்கத்தின்படி
அக்கா வீட்டிலும் ஒரு 'நடுவீடு' சுவத்தில் வரைஞ்சு வச்சுருக்காங்களே தவிர வாரவாரம் அதுக்கு மேற்பூச்சுப் பூசியோ, விளக்கு வச்சுக் கும்பிட்டோ நான் பார்த்ததே இல்லை. அதுபாட்டுக்கு அது இருக்கும். முந்தியாவது அடுப்பாங்கரை அந்த சுவத்துக்குப் பக்கத்தில் இருந்ததால் அதைக் கவனிச்சுக் கும்பிட்டிருக்குமோ என்னவோ.... இப்ப அடுப்பு முன்வாசல் திண்ணைக்கிட்டே இடம் மாறுனபிறகு அந்த மூலையை யாருமே சட்டை செய்யறதில்லை.


இந்த 'நடுவீட்டு'ச் சுவர் சாமியிலேயும் எங்க பாட்டி, அவுங்க வீட்டுலே ஒரு புதுமையைப் புகுத்திட்டாங்க. பாட்டி வீட்டில் சுவற்றில் மஞ்சள் பூசமாட்டாங்க. அதுக்குப் பதிலா ஒரு சதுரமான மரப்பலகையில் (ஒரடிக்கு ஒரடி இருக்கும்) மஞ்சள் பூசி, சுவத்துலே செய்யும் எல்லா அலங்காரத்தையும் ஒன்னுவிடாம அதுலே வரைஞ்சு வச்சுருப்பாங்க. சனிக்கிழமைதான் எங்க பாட்டிக்கு வெள்ளிக்கிழமை. முற்றத்துலே அந்தப் பலகையைக் கொண்டுவந்து வச்சு கழுவி மறுபடி எல்லாம் செஞ்சுக் கொஞ்சநேரம் வெயிலில் காயவச்சு ஈர வாசனை போனதும் சாமி அறையில் சுவத்துலே சாய்ச்சுவச்சுப் பூக்கள், விளக்கு, கற்பூரமுன்னு அமர்க்களமாக் கும்புடுவாங்க. இதுக்கு மேலே ஒரு பலகை அடிச்சு, கிருஷ்ணன், பிள்ளையார், லக்ஷ்மின்னு வெள்ளிப்படங்கள் வரிசையா இருக்கும். தளுக்கா இருக்கும் வெள்ளித் தகட்டில் சாமி உருவங்களை அச்சடிச்சு வச்சு, அதுக்கு ஒரு கண்ணாடி ப்ரேம் போட்டு நகைக்கடையில் விற்பனைக்கு வந்துக்கிட்டு இருந்த காலக்கட்டம் அது. இந்த மஞ்சள் பலகைக்கும் கண்ணாடி போட்டுட்டா வேலை மிச்சமாச்சேன்னு சொல்வேன். போடீ சோம்பேறின்னு வைவாங்க. சாமி அறைக்கு ஏகபோக உரிமை எங்க பாட்டிக்குத்தான். அங்கேயே ஒரு ஓரத்துலே கட்டில் போட்டு அதையே அவுங்க படுக்கை அறையாவும் ஆக்கிக்கிட்டாங்க. எங்க பாட்டியோட 'கதை' ரொம்ப விசித்திரமாவும் விசனமாவும் இருக்கும். 'அப்புறம் கதை'களில் விலாவரியாச் சொல்றேன். இப்போதைக்கு ஒரு சின்னக் குறிப்பு மட்டும் தரவா? அவுங்களுக்கு ஆறுவயசில் கலியாணம். அதுக்குப்பிறகு ஏழே மாசத்தில் கைம்பெண்(-:

இப்போ எல்லாமே ரொம்ப மாடர்னா ஆகி, நெத்திப்பொட்டுக்கே ஸ்டிக்கர்ன்னு வந்துருச்சு பாருங்க. அதே போல புது யுகத்தில் நிலை வாசப் படியில் மஞ்சள், சிவப்புப் பெயிண்டாலே வரைஞ்சு வச்சுக்கறாங்க. நிம்மதி. மஞ்சள் அரைக்கும் வேலையும் மிச்சம். சிக்கனமா இருந்தமாதிரியும் ஆச்சு. இல்லீங்களா?

சொல்லவந்ததை விட்டுட்டு அங்கே இங்கேன்னு தாவறதுலே நான் சரியான குரங்குதான். என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்.....ம்ம்ம்ம்ம்ம் சித்தி, மிட்டாய்க் கடை.....கோவில்......ஆங்... அங்கேயே போகலாம் வாங்க.


நான் திரும்ப வந்தபிறகு தினமும் அங்கிருந்து பலகாரங்கள் ரெகுலரா பஸ்ஸில் வர ஆரம்பிச்சது அப்போ இருந்துதான். மிட்டாய்க் கடையில் அன்னைக்குப் போட்ட வகைகள் வந்துரும். மாமாவும் டென்னிஸ் ஆடிட்டு வீட்டுக்கு வரும்போது அந்தப் பையைப் பிடிச்சுக்கிட்டு வந்துருவார். எல்லாம் ஃப்ரீ கூரியர் சர்வீஸ்:-))))) இதுவும் போதலைன்னா பள்ளிக்கூடம் விட்டு வரும்வழியில் நாயர்கடையில், மாமா அக்கவுண்டுலே என்ன வாங்கிட்டு வரணுமுன்னு மதியானம் சாப்பாடு முடிச்சுப் பள்ளிக்கூடம் போகும்போது அக்கா சொல்லி விடுவாங்க. மாலையில் பள்ளிக்கூடம் விட்டுக் கூட்டமா பசங்க வர்றதாலே எனக்குக் கழுகு பயம் கிடையாது.

அக்கா எனக்காக தின்பண்டம் தனியா எடுத்து வச்சுருப்பாங்க. அக்காவின் பெரிய மகளுக்கும் எனக்கும் ஆறே வயசுதான் வித்தியாசம். பசங்க ஆரம்பப் பள்ளியில் இருந்து சீக்கிரம் வீட்டுக்கு வந்து, அவுங்க பங்கை எல்லாம் தின்னு முடிச்சுருப்பாங்க. உயர்நிலைப்பள்ளி விட்டு நான் வீடுவர லேட்டாகிரும். பசங்க என்னைத் தின்ன விடாதுன்னு அக்கா ஒரு 'ஐ'னா பாஷை யில் எனக்கு விவரம் சொல்லுவாங்க.

"உய்னுள்ளே முய்னூனாவது டைனப்பாலே வைனச்சுருக்கேன். எய்னெடுத்துக்கோ. இய்னுதுகளுக்கு தைனராதே"

"சைனரி ஐனக்கா"

பெரியவள் பயங்கரி. கொஞ்சநாளா இதைக் கவனிச்சுக்கிட்டே இருந்துருக்கா போல. சூத்திரத்தைக் கண்டுபிடிச்சுட்டாள். ஒரு நாள் அக்கா சொல்லி முடிச்சதும்,

'சிய்னித்தி. எய்னெனக்கு மைனட்டும் கொய்னஞ்சம் தைனரயா?'

அக்காவும் நானும் வியப்போடு சிரி சிரின்னு கண்ணுலே தண்ணிவரும்வரை சிரிச்சோம்.


தொடரும்.................

61 comments:

said...

ஐ நல்லாருக்கு ஐ னா பாஷை! உங்க அக்கா பொண்ணு சுட்டி!!

said...

சைனரி ஐக்கா!

பயங்கரி!

அப்பவே புதுமொழி, புதுவார்த்தை எல்லாம் கண்டுபிடிச்சிறீக்க்ங்க...பலே

இதைபோல் தஞ்சாவூர் பக்கம்
க பாஷை உண்டு

said...

:)

said...

வாங்க கபீஷ்.

அதுக்குப் பிறகு அவளிடம் முழுக்க முழுக்க 'ஐ'னாவே பேசுன காலமும் உண்டு:-)

எப்பவுமே இளைய தலைமுறை ஸ்மார்ட் தானே?

said...

வாங்க சிஜி.

'க' பாஷை எப்படின்னு ஒரு வரி 'கோடி' காட்டக்கூடாதா?

said...

வாங்க விவேக்.

வருகைக்கு நன்றி.

முதல்முறை விஜயமா?

எனக்கென்னமோ இப்பெல்லாம் யார் பேரைப் பார்த்தாலும் இப்பத்தான் புதுசாப் பார்க்கறமாதிரி இருக்கு!!!!

'இன்று புதிதாய்ப் பிறந்தேன்'

said...

கநகல்கலா கபாகருகங்கக கதெகரிகயுகம்

கபோகதுகமா?

said...

கபாகஷை கதெகரிகயாகதா? கஎகன்கன கரீகச்கசகர் கநீகங்கக?

said...

கசிகஜி,

கஇகதுகவா? கபுகரிகஞ்கசகது. கநாகன் கவேகற கஎகன்கனகவோகன்கனு கநிகனைகச்கசேகன்:-)

said...

வாங்க கொத்ஸ்.

ஐனாவில் இருக்கும் ஃப்ளோ இதுலே இல்லை ன்னு நினைக்கிறேன்.
கசகரிகயா?

said...

5 பாகத்தையும் இப்பத்தான் முடிச்சேன்..கொஞ்சம் பயமாவே இருக்கு..கடைசில வழக்கம்போல மனச கனக்க வெச்சிருவீங்க..

ஐ-னா மாதிரி 'அல்'-னா பாஷை இருக்கு தெரியுமா?ஜெல்ஜெயம்-ல சல்சதா தல்தங்கச்சி பெல்பேசுமே:-)

Anonymous said...

//வயித்துக் கடுப்புக்கு 'ஜீரா'வோட ஜிலேபி தின்னாச் சட்னு குணமாகுமாம்//

ரசகுல்லா தின்னா வயித்துப்போக்கு நின்னுடும்.
எல்லாரும் இனி வகுப்புல ஐனா பாஷை , கனா பாஷை பேச ஆரம்பிச்சுடுவாங்க பாருங்க.நிறைய பதிவு வந்தாலும் ஆச்சிரியப்படறதுக்கில்லை.

said...

இந்த ஐ பாஷை எங்க அத்தை, அக்கா எல்லாம் நல்லா பேசுவாங்க... எனக்கு புரியாது....:) நல்லா ஸ்வீட் சாப்பிட்டு வளர்ந்து இருக்கீங்க.....ம்.. அடுத்து?

said...

நான் ஏற்கனவே உங்கள் ப்ளாக்கை என் கூகிள் ரீடரில் தரவு செய்து படிப்பேன். ஆனால் இப்ப சமீபத்தில் தான் பின்னூட்டம் போட ஆரம்பிச்சிருக்கேன்!

இது என்னோட 3வது பின்னூட்டம்.

>>அக்கா எனக்காக தின்பண்டம் தனியா எடுத்து வச்சுருப்பாங்க. அக்காவின் பெரிய மகளுக்கும் எனக்கும் ஆறே வயசுதான் வித்தியாசம்.

அப்ப, உங்க அக்கா கல்யாணம் முடியும் போது உங்களுக்கு ஒரு 4 வயது இருக்கும்னு நினைக்கிறேன். என்ன ஒரு நியாபக சக்தி.
எங்க அக்காவுக்கு நான் காலேஜ் முடிக்கும் போதுதான் கல்யாணம் நடந்தது... அதுக்குள்ள பல விசயங்கள் மறந்து போயிட்டு... மறக்காதது ஒன்னே ஒன்னு... அன்றைக்கு டிபன்ல வச்ச ‘உளுந்த வடை’ காலியாய்ட்டு( கடைசி பந்தில நான் உக்காரும் போது .. எல்லோரும் சொன்னாங்க, வடை நல்லா இருக்குன்னு :-) ரொம்ப கஷ்டமாயிட்டு... பின்ன விடியற்காலை 3 மணிக்கு நான் போய் மாவு அரைக்கக் கொடுத்து, 4 மணிக்கு அரைத்து திரும்ப வாங்கியது நானல்லவா :-(

said...

க னா, ஐ னா பாஷைக்கு ஒரு பதிவு போடுங்க டீச்சர்...ஜீனியர் மாணவர்கள் நாங்க படிக்க.இந்த டீச்சர் அடைமொழி எப்படி வந்ததுனு தெரிஞ்சுக்கலாமா? உங்களை மாதிரியே சுட்டியா இருக்கும் போல உங்க அக்கா பொண்ணு!!!!!!!!

said...

உங்க அக்காப் பொண்ணாச்சே. அறிவுக்கு கேட்பானேன்:))!

அப்புறம், கஇகந்கத கக கபாகஷை கரொகம்கப கஈகஸி!

வேகமா பேசுவோம்.

said...

எங்க தூரத்து சித்தப்பா ஒருத்தர் க நா பாஷை சொல்லிக்கொடுத்தார்.. அப்ப்லேர்ந்து அவரை.. சித்தப்பான்னே சொல்றதுல்ல.. கசி கத் கதா கப் கபா.. தான்.. :)

said...

பாஷை வகுப்பு வேற ஆரம்பித்தாச்சா:)
செம கில்லாடிப் பொண்ணு உங்க அக்கா மக. பின்ன, சித்தியைப் பார்த்து வளந்தா இப்படித்தான் செய்யும்.

க பாஷை தெரியும் ஐ பாஷை தெரியாதுப்பா:)

பயங்கரியா:)))))))))

said...

வல்வாங்க தல்தங்ஸ்.

பல்பயமில்லாம பல்படிங்க. முல்முடிவு முல்மட்டும் சுல்சும்மா ஒல்ஒரு நல்நாலு வல்வகை வல்வச்சுக்கலாம்:-)

said...

வாங்க சின்ன அம்மிணி.

இப்படி நீங்க தமிழுக்குத் துரோகம் பண்ணலாமா?

வடநாட்டு சரி வங்காள இனிப்பைச் சொல்லலாமா?

நம்மூர் இனிப்புதானே உசந்தது இல்லையா?

( ஹைய்யா...வடக்கு தெற்கு பிரிவினை பேசிட்டேன்)

ஹல்திராம் ரசகுல்லா வாங்காதீங்க. நல்லாவே இல்லை. வெறும் சக்கை(-:

said...

வாங்க தமிழ் பிரியன்.

இனிப்புப் பிசாசு நான். எங்க அம்மாகூடச் சொல்வாங்க, அவுங்கமேலே கொஞ்சம் சக்கரை தூவிட்டா அவுங்களையே தின்னுருவேன்னு.

அதேபோலத்தான் சக்கரை தூவாமலேயே முழுங்கிட்டேன்(-:

said...

வாங்க ரமேஷ் ராமசாமி.

மூணாவது பின்னூட்ஸ்?

ஆஹா..... வாங்க வாங்க வாங்க.

கலியாணம் கட்டுன அடுத்தவருசமே ராணி பிறந்துட்டாள்.

அப்படி ஞாபகசக்தி ரொம்பன்னு சொல்ல முடியாது. பலவிஷயங்கள் வீட்டுலே பெரியவுங்க சொல்வாங்க.
நீ அப்போ இப்படிச் செஞ்சே, இப்படிச் சொன்னேன்னு. அதெல்லாம் நினைவுலே வச்சுக்கிட்டேன்.

இப்போ என் பொண்ணுகிட்டே நான் சொல்றது போல:-)

said...

வாங்க சிந்து.

இப்பப் பாருங்க, வகுப்புலே உக்கார்ந்துருக்கேன். அப்ப நான் டீச்சர் இல்லைன்னா யார்? :-)))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வேகமாப் பேசுவீங்களா?

நான் கஅகம்கபேகல்:-)

said...

வாங்க கயலு.

'க' னா பாஷை ரொம்பப்பேருக்குத் தெரிஞ்சுருக்கே!!!!
அதையும் செம்மொழி ஆக்கிறலாமா?

ச்சும்மா:-))))

said...

வாங்க வல்லி.

பயங்கரனுக்குப் பெண்பால்:-)))))

சித்தி, ஒருவழி பண்ணிட்டாளா?
அச்சச்சோ

said...

அய் சிய்னித்தி

இந்த ஐனா பாஷை ஸ்கூல் டைம்ப ரொம்ப யூஸ் ஆச்சு, மறுபடி இங்க்னதான் பாக்குறேன்.

இந்த நடுவீடு எனக்கு ரொம்ப புடிச்ச விசயம், ரொம்ப இஷ்டப்பட்டு செய்வேன்.

நீங்க எங்க தாவி எங்கவேனா போய் விட்ட எடத்துக்கே வாங்க,,

ஆனா அக்கா பாகம் நெறைய வரணும்னு கேட்டுக்கறேன்.

said...

//ஜாங்கிரியும் ஜிலேபியும் ஒன்னுன்னு நினைச்சுக்கிட்டு இருந்த அப்பாவி!//

அப்போ நிஜமாவே ஒண்ணு கிடையாதா டீச்சர்? :(

//"உய்னுள்ளே முய்னூனாவது டைனப்பாலே வைனச்சுருக்கேன். எய்னெடுத்துக்கோ. இய்னுதுகளுக்கு தைனராதே"//

டீச்சர் இது என்ன பாஷை? அப்படியே நம்ம உதித் நாராயணன், மதுஸ்ரீ தமிழ்ல பாடுற மாதிரியே இருக்கு..சீக்கிரம் இந்த பாஷைக்கு காப்பிரைட் வாங்கிடுங்க..நம்ம இசையமைப்பாளர்கள் யாராவது பார்த்தாங்கன்னா 'உம்ம ஹஸியோ வாஹியானா...' மாதிரி ஆக்கிடுவாங்க :)

said...

//அவுங்களுக்கு ஆறுவயசில் கலியாணம். அதுக்குப்பிறகு ஏழே மாசத்தில் கைம்பெண்(-://

ஆறு வயதிலேயே விதவையா? கொடுமை :(
அவங்க கதையைச் சொல்லுங்க டீச்சர்..

said...

/*
'சிய்னித்தி. எய்னெனக்கு மைனட்டும் கொய்னஞ்சம் தைனரயா?'
*/
ராணுவத்திலே ரகசிய பாசியா வைக்கலாம்

said...

//
'சிய்னித்தி. எய்னெனக்கு மைனட்டும் கொய்னஞ்சம் தைனரயா?'//

நானும் பேசிருக்கேன் பள்ளிக்காலதில இந்த பாசை.

said...

நேர்ல உக்காந்து கத சொல்றா மாதிரியே சொல்றீங்க. போன பதிவில் கெக்குபெக்கேணி மேடம் சொல்லிருந்த ரெண்டாவது பாயிண்டை நான் வழிமொழிகிறேன்:):):)

said...

இந்த ஐ பாஷயாட்டம், சிவ ஞானம்ஜி அவர்கள் சொல்லிருக்க மாதிரியே, எங்கப்பா வீட்லயும் சின்ன வயசுல 'க' பாஷை பேசுவாங்களாம். ஆனா இது கொஞ்சம் வில்லங்கமான பாஷை போல, எங்கப்பா வீட்ல கிட்டத்தட்ட யார் பேசினாலுமே, கேக்குரவங்களுக்கு, மொதல் தரம் புரியாது:):):) நாலஞ்சு தரம் கேட்டுத்தான் புரிஞ்சுப்போம். சமயத்துல எங்கப்பா பேசறதும் இப்டி இருக்கும்:):):) இதுல இவங்களுக்கெல்லாம் குசும்பு ஜாஸ்தி.அவங்க உளறு வாய் வெச்சுக்கிட்டு, ஊர்ல யாருக்குமே சரியா காதுகேக்க மாட்டேங்குதுன்னு சொல்வாங்க:):):)

said...

நல்லாருக்கு. கடைசில ஜாங்கிரி செய்ய கத்துக்கிட்டீங்களா இல்லியா?

ஜாங்கிரி தான் ஜிலேபின்னு நான் ரொம்ப நாளா நெனைச்சிக்கிட்டு இருக்கேன்...இல்லியா? அப்பிடின்னா ரெண்டுக்கும் என்ன டிஃபரன்ஸ்?

said...

வாங்க அமித்து அம்மா.
நடுவீடு இன்னும் இருக்கா உங்கவீட்டுலே?

அட!!


அக்காவை ஒரு ஏழுக்குள் அடக்கலாமுன்னு பார்த்தா முடியாது போல இருக்கு.

முயற்சி செய்துட்டு....... விட்டுட்டேன். போறவரை போகட்டுமுன்னு.

said...

வாங்க ரிஷான்.

இப்பெல்லாம் பிள்ளைங்களும் சரி பெரியவங்களும் சரி ஒரே வீட்டுலே இருக்கறோமுன்னு பேர்தானே ஒழிய அவுங்கவுங்க உலகம் தனின்னு ஆகிருச்சு.
அதிலும் இந்த டிவிச்சனியன், குடும்ப உறவுகளைச் சிதைச்சிருச்சுன்னு நான் நினைக்கிறேன்.

'ஐ'னாவுக்குக் காப்பிரைட் வாங்கிக்கலைன்னா...அதையும் மஞ்சள் போல அமெரிக்காக்காரன் எடுத்துக்குவானோ???

said...

ரிஷான்,

கதைக் கருன்னு நான் எங்கியும் வெளியே தேடவே வேணாம். அவ்ளோ இருக்கு குடும்பத்தைச் சுத்தியே....

சிலசமயம் நான் நினைச்சுக்குவேன்.....ஒவ்வொருத்தர் மாதிரி ஸீதாசாதா சிம்பிள் வாழ்க்கை நமக்கு ஏன் அமையலைன்னு(-:

said...

வாங்க நசரேயன்.

ராணுவத்துலேயா? அப்ப ஹிந்தி ஐனா:-))))

said...

வாங்க குடுகுடுப்பை.

நைநல்ல கைனாலம் வைனருது ஜைனக்கம்மா :-))))

said...

வாங்க ராப்.

படிப்பெல்லாம் எப்படிப் போகுது?

'க'னா பாஷை ரொம்பப் பரவி இருந்துருக்குபோல அப்ப:-)))))

அந்தச் சின்னச்சின்னச் சந்தோஷங்கள் எல்லாம் எப்போ எப்படிக் காணாமப்போச்சுன்னு தெரியலை, இல்லே.

said...

வாங்க அதுசரி.

ஜாங்கிரி செய்யக் கத்துக்கிட்டேந்தான். ஆனா ஒரு சமயம் வீட்டுலே செஞ்சு பார்த்தப்ப நல்லா கிறிஸ்பா வராம ஜீராவில் ஊறுனதும் தடிதடியா குண்டு ஜாங்கிரியா ஆகிருச்சு. பாகு இன்னும் கொஞ்சம் கெட்டியா இருக்கணும்போல.

உளுத்தம்பருப்பை ஊறவச்சு அரைச்சுச் செஞ்சால் ஜாங்கிரி. நம்மூர்து இது.

வட இந்திய ஜிலேபி, மைதாவைக் கரைச்சுக் கொஞ்சம் புளிக்கவச்சுச் செய்வாங்க.

said...

துளசி கோபால் said...

வாங்க அதுசரி.

ஜாங்கிரி செய்யக் கத்துக்கிட்டேந்தான். ஆனா ஒரு சமயம் வீட்டுலே செஞ்சு பார்த்தப்ப நல்லா கிறிஸ்பா வராம ஜீராவில் ஊறுனதும் தடிதடியா குண்டு ஜாங்கிரியா ஆகிருச்சு. பாகு இன்னும் கொஞ்சம் கெட்டியா இருக்கணும்போல.

உளுத்தம்பருப்பை ஊறவச்சு அரைச்சுச் செஞ்சால் ஜாங்கிரி. நம்மூர்து இது.

வட இந்திய ஜிலேபி, மைதாவைக் கரைச்சுக் கொஞ்சம் புளிக்கவச்சுச் செய்வாங்க.
//
அதான் மொறுமொறுப்பே இல்லாம பிசுபிசுன்னு இருக்கா?

said...

//படிப்பெல்லாம் எப்படிப் போகுது?//

அய்யய, நான் எங்க படிக்கிறேன்? வேலதான தேடுனேன்,இப்போ அதையும் விட்டாச்சு:):):)

said...

///rapp said...
//படிப்பெல்லாம் எப்படிப் போகுது?//
அய்யய, நான் எங்க படிக்கிறேன்? வேலதான தேடுனேன்,இப்போ அதையும் விட்டாச்சு:):):)////
அய்ய... ராப் அக்கா! இலக்கணப் பிழை இருக்கு. ’நான் எப்ப படித்தேன்’ என்று இருக்க வேண்டும். நீங்க மூணாப்போட நிப்பாட்டினத சொன்னா குறைஞ்சா போயிடுவீங்க..;)))

said...

என்னம்மா ராப்,

எங்கியோ ஒரு பின்னூட்டத்தில் 'ஸ்டூடண்ட் ராப்' னு பார்த்தேனே!!!

ஒருவேளை ஏதாவது 'ப்ரிட்ஜிங் கோர்ஸ்' செய்யறீங்களொன்னு நினைச்சுக்கிட்டேன்ப்பா.

said...

குடுகுடுப்பை,
எனக்கும் மைதாமாவு ஜிலேபி பிடிக்காது. கிடைச்சுச்சுன்னா..... வேற வழி இல்லாமத் தின்னுருவேன்(-:

said...

ம், படிச்சுட்டேன். ஸ்வீட்டு கடையெல்லாம் காட்டிட்டு, கதை மிச்சத்தை எப்ப சொல்லப் போறீங்க?

வெயிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டிங்க்கு.

said...

அதுசரி ராப், அச்சச்சொ..... (அச்சச்சொன்னும் யாராவது பதிவர் இருக்கப் போறாங்க)

நான் சொல்ல வந்தது என்னன்னா,

//இப்போ அதையும் விட்டாச்சு:):):)// ஏன், என்ன விசேஷம்? :-)

(இன்னிக்குப் பின்னூட்டம் போடற இடத்துல எல்லாம் என் பேருக்கு ஏற்றாற் போல் பின்னூட்டம் போட்டுடுடறதுன்னு ஒரு வேண்டுதல்:-).

said...

வாங்க அமித்து அம்மா.
நடுவீடு இன்னும் இருக்கா உங்கவீட்டுலே?

இருக்கு இருக்கு
அது பின்னாடி ஒரு கதையும் இருக்கு
போடறேன் என் ப்ளாக்ல

அக்காவை ஒரு ஏழுக்குள் அடக்கலாமுன்னு பார்த்தா முடியாது போல இருக்கு.

முயற்சி செய்துட்டு....... விட்டுட்டேன். போறவரை போகட்டுமுன்னு

தயவு செய்து போக வைங்க ப்ளீஸ்

said...

\\அக்காவும் நானும் வியப்போடு சிரி சிரின்னு கண்ணுலே தண்ணிவரும்வரை சிரிச்சோம்.\\\

இப்போ எனக்கும் கண்ணுலே தண்ணிவருது...;)))))))))))

said...

வாங்க கெக்கேபிக்குணி.

கதை எங்கேயா?

அந்த இனிப்புக்குள்ளேதான் இருக்கு:-)

ஆமாம் அது என்ன அதுசரி ராப்?

அதுசரி ன்னும் ஒரு பதிவர் இருக்காங்க:-)))

said...

வாங்க அமித்துஅம்மா.

நடுவீட்டுக் கதைக்கு நாங்க வெயிட்டீஸ்:-)))

said...

வாங்க கோபி.

ஆஹா.... இதுக்கும் இப்படி ஒரு ரிப்பீட்டா:-)))))

said...

டீச்சர் ஒரு வாரம் ஆபிஸ்ல ஆணி அதிகம் அதுனால இந்த பக்கம் வரமுடியல :-(

எங்க வீட்ல எங்க அம்மாவும் அக்காவும் 'ட்'ல மொழியில பேசுவாங்க...எனக்குதான் ஒன்னும் புரியாது

said...

டீச்சர் இன்னும் பதிவைப் படிக்கவே ஆரம்பிக்கவேயில்லை.அதற்குள் ஜாங்கிரி,லட்டுன்னு சொன்னதும் ஒரு பின்னூட்டம் போட்டுட்டு தொடரலாமேன்னு...

முன்பெல்லாம் சர்க்கரைப் பஞ்ச காலமோ அல்லது அளவாப் பயிர் செஞ்சாங்களோ அல்லது எல்லாத்தையும் வெளி நாட்டுக்கு வித்துப்புட்டு டாலர் வாங்கினாங்களோன்னு தெரியல.ஜாங்கிரி,லட்டுன்னா அந்தக் காலத்தில் செஞ்சது லட்டு.அல்லது அடிக்கடி வாங்கிச் சாப்பிடாத காரணத்தால் மிகைப் படுத்துவதாகக் கூட தோணும்.உண்மை என்னன்ன இப்பவெல்லாம் இனிப்புப் பண்டங்கள் எல்லாமே அளவுக்கு மீறிய இனிப்பு.இனிப்பு இனிப்பாவேயில்லை.

said...

//ஜாங்கிரியும் ஜிலேபியும் ஒன்னுன்னு நினைச்சுக்கிட்டு இருந்த அப்பாவி!//

இன்னும் கூட இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாத அப்பாவி லிஸ்ட்ல நானும் இருக்கேன்:)

said...

//"உய்னுள்ளே முய்னூனாவது டைனப்பாலே வைனச்சுருக்கேன். எய்னெடுத்துக்கோ. இய்னுதுகளுக்கு தைனராதே"//

எங்கேயோ கேட்ட மாதிரியிருக்கே:)

said...

வாங்க நான் ஆதவன்.

புரியாம இருக்கணுமுன்னுதானே இப்படிப் புதுசாக் கண்டுபிடிச்சுப் பேசுவது:-)))

said...

வாங்க ராஜ நடராஜன்.

முந்தியெல்லாம் விசேஷங்களுக்கு மட்டும்தான் இனிப்பு. இப்ப என்னன்னா...தினமுமே ஸ்வீட் காரம் காஃபின்னு ஆகி இருக்கு.

இதுலேயும் பார்த்தீங்கன்னா...வட இந்தியத் தயாரிப்புகளில் (அங்கே வட இந்தியாவில் மட்டும்) அவ்வளவா இனிப்பு இல்லை. அதே பொருட்களை நாம் தெற்கே தயாரிக்கும்போது இனிப்பைக் கொஞ்சம் அள்ளிப்போட்டுடறாங்க. நமக்கு கை ரொம்ப தாராளமாச்சேங்க.

ஜாங்கிரி - உளுந்து

ஜிலேபி - மைதா


உள்ளே மூணாவது டப்பாலே வச்சுருக்கேன். எடுத்துக்கோ. இதுகளுக்குத் தராதே:-)))

said...

இப்பவும் புரட்டாசி மாசம் இந்த நாமத்தை போட்டுகறதுதான்.. அது ஒரு அழகு...

அடுத்தவனுன்னு போடாம இருந்தா சரி...

said...

வாங்க மங்கை.

நாமே போட்டுக்கிட்டாத்தான் அழகு.
அப்படி வேற யார்கிட்டேயும் நெத்தியைக் காட்டமாட்டொம்ல:-))