Sunday, December 21, 2008

அக்கா ( பாகம் 14 )

அப்பா...... கடிதம் வந்தே ரெண்டு மாசம் ஆகி இருக்கு. என் பெயருக்கு வந்துருக்கு. ஆனாலும் அதை எல்லாரும் படிச்சுட்டாங்க(-: கர்நாடகாவில் ஒரு புண்ணிய க்ஷேத்திரத்தில் இருக்காராம். 'செஞ்ச பாவத்துக்குப் புண்ணியஸ்தலம் போனாலும் மோட்சம் கிடைக்காது'- இது பாட்டி. மறுநாளே சித்தப்பாச்சித்தி வீட்டுக்குப் போனேன். அண்ணனின் கையெழுத்தைப் பார்த்தே சித்தப்பாவுக்குக் கண்களில் வெள்ளம். அண்ணனும் தம்பியும் அப்படி ஒரு ஒட்டுதல். அதனால்தான் அக்காதங்கையாவே பார்த்துக் கலியாணம் கட்டுனாங்களாம்.

எப்பப் பார்த்தாலும் பாட்டிவீட்டுலே இவரைக் கரிச்சுக் கொட்டுறாங்களே. அந்தக் குடும்பமே அப்படின்னு....... இவர் என்ன தன் குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சு போயிட்டாரா? என்னதான் ஒரு தாய் வயித்துப் பிள்ளைகள் என்றாலும் குணம் ஒன்னுபோலவா இருக்கு? நாங்க அக்காதங்கை மூவரும்............. ஒருத்தர் சிதம்பரம், ஒருத்தர் மதுரை. நான்...?

திருச்செங்கோடு:-)

போய்ப் பார்க்கலாமான்னு ஆசையா இருக்கு. சித்தப்பாவுக்கும் அப்படித்தான். ஆனா பயணம் போகும் அளவு உடல்நலம் இல்லை. அந்த அண்ணன், நான் வரேன். ரெயில்வே பாஸ் இருக்கேன்னார். கிளம்பி வர்றோமுன்னு பதில் கடிதம் எல்லாம் போடலை. சொல்லிட்டுப் போனா அதுலேயும் ஆபத்து இருக்கு. கம்பி நீட்டிட்டாருன்னா?

(அங்கே போய் அவரைச் சந்திச்சது, விடாப்பிடியாக் கையோடு கூட்டிவந்தது, சித்தப்பா வீட்டுலே நேராப்போய் இறங்குனதுன்னு எல்லாம் அப்புறம் கதைகளில் வேணுமுன்னாச் சொல்லலாம். இப்ப நம்ம கதை நாயகி 'அக்கா' என்றதை ஞாபகப்படுத்திக்க வேண்டி இருக்கு அடிக்கடி.)

சித்தப்பா வீட்டுக்குச் சரியா எதிர்ப்பக்கம் வீடு வாடகைக்குக் கிடைச்சது எனக்கு நல்லகாலம். நானும் அப்பாவுமா அங்கே இருந்தோம். (பேசாமச் சித்தப்பாகூடவே இருந்துருக்கலாம்) அண்ணனும் தம்பியுமா இங்கே இல்லேன்னா, அங்கேன்னு உக்காந்து பேசிக்கிட்டே இருப்பாங்க. வாக்கிங் போறோமுன்னு போய் டீக்கடையில் சாயா, சிகெரெட்,பீடி. சித்தப்பா பீடி என்றதால் அப்பாவும் அப்பப்பப் பீடி. எனக்கு எரிச்சலா இருந்தாலும் போகட்டும் ஒன்னும் சொல்லவேணாம். வேதாளம் முருக்கை மரத்துலே ஏறிடப்போகுதேன்னு இருந்தேன். அதுவுமில்லாம காலையில் கிளம்பிப் போயிட்டு மாலையில் வீடுவரவே ஏழு ஏழரை ஆயிரும். வந்துட்டு ஒரு சோறு மட்டும் வடிப்பேன். குழம்பு பொரியல் எல்லாம் எதுத்த வீடு. அப்பாவுக்குப் பகல் சாப்பாடு சித்தப்பா கூடவே .

ஆடுனகாலு மட்டுமா சும்மா இருக்காது? ஓடுன காலும்தான். எண்ணி ரெண்டே மாசம். பேசறதெல்லாம் பேசி முடிச்சுட்டாங்க போல. பெரியக்கா வீட்டுக்குப் போகணுமுன்னு சொல்ல ஆரம்பிச்சார். அண்ணனைப் பார்க்கணுமுன்னு ஆசையா இருக்குன்னார். எனக்குப்போய் அண்ணன்கிட்டே சொல்ல தயக்கமா இருந்துச்சு. ஆனாலும் சரின்னு பல்லைக் கடிச்சுக்கிட்டுப் பாட்டி வீட்டுக்குப் போனேன். வாசத் திண்ணையிலே பாட்டி உக்காந்து பூ கட்டிக்கிட்டு இருந்தாங்க. 'உங்க அண்ணன் பார்த்தா வெட்டிப் போடுவான். உசுரோட திரும்பி ஓடு'ன்னாங்க. 'சம்பாதிக்கிற திமிர். அசிங்கம் வேணான்னு நாங்க ஒதுங்கி இருக்கோம். (நம்ம கதைகள் எல்லாம் தெரிஞ்சுதான் இருக்கு போல.) இப்பத்தான் அவன் நிம்மதியா தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பிக்க நினைக்கிறான். இப்பப்போய் அப்பா, கிப்பான்னு வந்தா செருப்புப் பிஞ்சுரும்.......'.

வெளியே போன அண்ணன் அப்பத் தான் திரும்பி வந்தவர், என் பக்கம்கூடத் திரும்பாம செருப்பை வாசலில் உதறிப்போட்டுட்டு வீட்டுக்குள்ளே போய் கதவை அடிச்சுச் சாத்துனார். கோவமா நிக்கிறேன்னு பேருதானே ஒழிய , என் கண்ணுலே கரகரன்னு கண்ணீர் பொங்குது. நின்ன இடத்துலேயே ஆணிஅடிச்சாப்புலே நின்னேன். அஞ்சே நிமிசம். கண்ணைத் துடைச்சுக்கிட்டு விறுவிறுன்னு 'என் வீட்டுக்கு' வந்தேன். யார்கிட்டேயும் ஒன்னும் சொல்லலை. காலையில் , 'அக்கா வீட்டுக்குப்போய்ப் பார்த்துட்டு வரேன்'னு ஆரம்பிச்சார் அப்பா. எனக்கிருந்த ஆத்திரத்துலே, கைப்பையைத் திறந்து 'இந்தாங்க டிக்கெட்டுக்குக் காசு' ன்னு எடுத்து ஜன்னல் கட்டையில் வச்சுட்டு வேலைக்குக் கிளம்பிப் போயிட்டேன். வழக்கமா அண்ணன் கூடத்தான் போறது. நான் வேகமாப் போறதைப் பார்த்துட்டு, அவரும் பாதிச் சாப்பாட்டுலே எந்திருச்சுச் சட்டையை மாட்டிக்கிட்டு, ஓடோடிவந்து 'எக்ஸ்ப்ரெஸ் கெட்டது போ' ன்னு என்னைப் பிடிச்சார். ரெயில்வேக்காரனுக்கு ரயிலை விட்டா வேற உதாரணம்கூட வராது போல.

'பெரியப்பாவைக் குற்றம் சொல்ல முடியாது. அவர் வழி அப்படி. கொஞ்சநாள் அக்கா வீட்டுக்குப் போயிட்டுத்தான் வரட்டுமே' ன்னதும்தான் அக்காவுக்கு இவர் வரப்போறதைச் சொல்லணுமேன்னப்ப, . அண்ணந்தான் கார்டு போட்டுருன்னுச்சு. வேலைக்குப் போனதும் அங்கிருந்து. 'இதுபோல அப்பா இங்கே எங்கூட இருக்கார். உங்களையெல்லாம் பார்க்கணுமாம். வருவார்'னு ரெண்டு வரி எழுதிப்போட்டேன். சாயங்காலம் வீட்டுக்கு வந்தா, பையைத் தூக்கிக்கிட்டு அண்ணனும் தம்பியுமா தயாரா இருக்காங்க. இன்னிக்கே போறாராம். நானும் அண்ணனுமா கூடவே போய் ரயிலேத்திட்டு வந்தோம்.
இன்னிக்கு நடந்த நடையிலே...... மனசும் உடம்பும் தளர்ந்து போயிருந்துச்சு.
சித்திதான் வெறும் வயித்துலே படுக்கக்கூடாதுன்னு தொந்திரவு செஞ்சு சோத்தை போட்டாங்க. என் லெட்டர் போய்ச் சேர ரெண்டு நாளாகுமே, அதுக்குள்ளே திடீர்னு போகணுமுன்னா எப்படின்னதுக்கு, அண்ணனும் தம்பியுமா மத்தியானம் தபாலாபீஸ்லே போய் 'அப்பா வந்துக்கிட்டு இருக்காரு'ன்னு தந்தி கொடுத்தாங்களாம். நல்ல விவரம்தான்.....
ஆனா..... தந்தின்னதும் அக்கா பயப்படாம இருக்கணும்.

ஒரு நாலைஞ்சு நாளுலே, அப்பா, நுணுக்கி நுணுக்கி ஒரு கார்டுலே நிறைய எழுதி அனுப்புனார். எல்லாரும் நல்லா இருக்காங்களாம். மாமா ரொம்பத் தங்கமானவராம். (இவர் மகளோட கல்யாணத்துக்கூட வராமப் போனவர், இப்போ ஏழு பிள்ளைங்க பிறந்தபிறகு முதல்முறையா மருமகப்பிள்ளையைத் தங்கமா பித்தளையான்னு உரைச்சுப் பார்க்கறார்) ரொம்பப் பிரியமா இருக்காங்களாம். கொஞ்சநாள் அங்கேதான் இருக்கணுமுன்னு மாமா வற்புறுத்திச் சொல்றாராம். என் கவலைதான் அவருக்கு இப்போ இருக்காம். கொஞ்ச நாளுன்னா எவ்வளோ நாள்? எனக்கும் அதுதான் கவலையா இருக்கு.

சித்திதான் சொன்னாங்க, 'எதுக்காக வீட்டை அனாவசியமா வாடகைக்கு எடுத்தே? பேசாம இங்கேயே இருந்துருக்கலாம்.' அதுவும் சரியாத்தான் இருந்துச்சு. வீட்டைக் காலி செஞ்சு எதிர்வீட்டுக்கே போயிட்டேன். ஒன்னும் சரிவராத மாதிரி இருக்கு. குடும்பம் என்றதே குழப்பமோன்னு ஒரு பயம். திரும்ப விடுதிக்கே போயிறலாமான்னு இருந்துச்சு. என்னுடைய அதிர்ஷ்டம், பழைய அறையிலேயே இடம் காலியா இருக்குன்னு தெரிஞ்சதும் அங்கே போயிட்டேன். சித்தப்பாச்சித்திக்கு மன வருத்தம்தான். ஆனா புரிஞ்சுக்கிட்டாங்க. வாராவாரம் வந்துட்டுப் போகணுமுன்னு சொல்லிட்டுச் சித்தி அழுதாங்க. இந்தச் சித்திக்கு இது ஒரு பழக்கம். ஆன்னா ஊன்னா அழுதுருவாங்க. நானும் சின்னப் பிள்ளையா இருந்தப்ப, (அம்மா இருந்த காலத்துலே) அம்மாவோ,அக்காங்களோ எதாவது சொன்னவுடனே அழுது ஆகாத்தியம் பண்ணுவேன். நீலிக்குக் கண்ணீர் நெத்தியிலேன்னுவாங்க எங்கம்மா. பாவம் இந்தச் சித்தியும். சொந்தம் பந்தம் இவ்வளவு இருந்தும் மூத்தார் செய்கைக்கு இவுங்க குடும்பத்துக்குத் தண்டனை.

ஒரு சமயம் அங்கே போனப்ப, பாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு விவரம் கிடைச்சது. ஆஸ்பத்திரியில் இல்லையாம். வீட்டுக்கு அனுப்பிட்டாங்களாம். சித்திக்கும் ரொம்ப ஆசையா இருக்காம் போய்ப் பார்க்க. ஆனா அங்கே பேயாட்டம் ஆடுவாங்கன்ற பயம்தான். 'தலையைச் சீவிடுவாங்களா?'ன்னு கேட்டாள் சித்தி பொண்ணு. 'சீவுனா பரவாயில்லை. பேச்சுக் கேக்க முடியாது'ன்னேன். அடுத்தவாரம் வரேன். போய்ப் பார்க்கலாமுன்னு சொன்னேன். எண்ணி நாலாவது நாள், வேலையில் இருக்கும்போது அண்ணன், ஃபோன் செஞ்சு, இதுமாதிரி பாட்டி இறந்துட்டாங்க. இன்னிக்கே எடுக்கப்போறாங்க. நான் லீவு போட்டுட்டேன். நீயும் வர்றதா இருந்தா வா'ன்னார். கிளம்பிப்போனோம். போற வழியில்தான் எப்படி உனக்குத் தெரியும்? யார் சொன்னான்னதுக்கு, சித்தப்பா காலையில் மருந்து வாங்க மெடிக்கல்ஸ்க்கு போனப்ப, அங்கே யாரோ சொன்னாங்களாம். அதுக்குள்ளே அண்ணன் கிளம்பி வேலைக்குப் போயிட்டாருன்னதும், பேங்க் மேனேஜர் வீட்டுலே போய் ( சித்தியும் அந்தம்மாவும் சத் சங்கம் பஜனைன்னு சிநேகிதம். சித்தி நல்லோணம் மலையாளம் சம்சாரிக்குன்னதாணு காரணம்) மகனுக்கு போன் போட்டுச் சொல்லி இருக்காங்க..

பாட்டி வீட்டு வாசலில் நல்ல கூட்டம். அந்த ஊர்லே முக்காவாசிப் பசங்களுக்குப் பாட்டிதான் முதல்வகுப்பு டீச்சர்ன்னு மரியாதை கூடுதல் நல்ல நாளுலேயே கல்யாணம், காது குத்து, குழந்தை பொறந்துருக்குன்னு ஆளுங்க வந்து பத்திரிக்கை வச்சு அழைக்கிறது உண்டு. நானும், சித்தப்பாச்சித்தி குடும்பமும் வாசல்கூட்டத்துலேயே ஓரமா நின்னுக்கிட்டு இருந்தோம். சொந்தக்காரங்க கூட்டம் எக்கச்சக்கம். யாரும் எங்களைச் சட்டையே செய்யலை. சாங்கியம் செய்யும்போது 'பேரப்புள்ளைங்க எல்லாம் நெய்ப்பந்தம் பிடிக்க வாங்க'ன்னாங்க. போறதா வேணாமான்னு தயக்கம். அதுக்குள்ளே மத்தவங்க எல்லாம் சுத்தி முடிச்சாங்க. இன்னும் யார் இருக்கான்னு அவுங்க கேட்டுக்கிட்டு இருக்கறப்பவே.... 'அவ்வளவுதான் எல்லாரும் ஆச்சு' ன்னு அண்ணன் சொல்லிட்டார். சாவு எடுத்துட்டாங்க. சாவு வீட்டுலே சொல்லிக்கிட்டுப் போற வழக்கம் இல்லைன்றது நல்லதாப் போச்சு.

எங்களுக்கு இருந்த உரிமையைக்கூட நிலைநாட்டிக்க முடியலைன்னு நானும் சித்தப்பாசித்தி பசங்களும் குமுறிக்கிட்டே வீட்டுக்கு வந்தோம். போனாப் போகுது. அந்தவரைக் கடைசியா முகம் பார்த்தோமே அது போதுமுன்னு சித்தி சொன்னாங்க. சாவு சமாச்சாரம் அக்காவுக்குப் போயிருக்குமா? மாமாவாவது ஓடிவந்துருப்பாரே. அவர் வந்துருந்தா நம்மை இப்படி ஓரங்கட்டி இருக்கமாட்டார். சொன்னாங்களா இல்லையான்னு எனக்கு மண்டைக் குடைச்சல்.


தொடரும்......................

38 comments:

said...

அப்பாடா..நாந்தான் இன்னிக்கு முதல் ஆளா ? :)

said...

நெருங்கிய உறவுகளுக்குள் இவ்வளவு மனஸ்தாபங்களா? உங்க அண்ணா ரொம்பவுமே வீம்புக்காரர் போலிருக்கே? சாவும் கல்யாணமும் பிரிந்த உறவுகளை ஒண்ணு சேர்க்கும்னு சொல்வாங்களே ? உங்க விசயத்துல தப்பா போய்டுச்சே..

said...

திருச்செங்கோடு ? நீங்களா ?

கோபால் சார் அப்படியா?

நீங்களே ஆமாம்னு பதில் போடக் கூடாது ?
சாரை சொல்லச் சொல்லுங்க

said...

உங்க வகுப்புல முதல் வரிசையில நிக்கணும்னு என்னோட நீண்ட நாள் ஆசை இன்னிக்குத்தான் நிறைவேறிடுச்சு டீச்சர் :)

//அங்கே போய் அவரைச் சந்திச்சது, விடாப்பிடியாக் கையோடு கூட்டிவந்தது, சித்தப்பா வீட்டுலே நேராப்போய் இறங்குனதுன்னு எல்லாம் அப்புறம் கதைகளில் வேணுமுன்னாச் சொல்லலாம்.//

ஆஹா..அடுத்த மெகா சீரியலுக்கு இப்பவே கிளிப்பிங்க்ஸா? :)
ஆவலோடு வெய்ட்டிங் டீச்சர்.. அதையும் ஆரம்பிச்சிடுங்க.. :)

'அக்கா' ஒருநாள்..
'அப்புறம் கதைகள்' அடுத்தநாள்ன்னு தொடர்ந்து போடலாமே டீச்சர்.. :)

said...

உள்ளேன் ரீச்சர்!

said...

வாங்க ரிஷான்.

வகுப்புக்கு முதலிலே வர இவ்வளவு ஆர்வமா? பேஷ் பேஷ்.

இவ்வளோ நல்ல மாணவர்களை அடையக் கொடுத்துவச்சுருக்கேனோ!!!!!

சைடு பை சைடாப் போட முடியாதுன்னு நினைக்கிறென்.

அக்கா அடுத்த பாகத்தோடு முடியுது:-)

said...

வாங்க நரேன்.

வீம்பு அவருக்கு மட்டுமா?

வீம்புக்கார குடும்பமாகிப்போச்சு. அவுங்க இப்படி இருக்கணுமுன்னா நானும் எவ்வளவு அடங்காம இருந்துருப்பேன்னு நினைச்சுப் பார்க்கணும்:-)

//சாவும் கல்யாணமும் பிரிந்த உறவுகளை ஒண்ணு சேர்க்கும்னு சொல்வாங்களே //

என்னதான் சேர்ந்தாலும் பழைய ஒட்டுதல் இருக்காது. மேலோட்டமான உறவா ஆகிரும். இது(வும்) என் அனுபவம்தான்.

கோபால் சாரும் இதேதான் சொல்வார். இல்லேன்னா முப்பத்திநாலரை தாக்குப் பிடிச்சிருக்குமா? :-)))))

said...

வாங்க கொத்ஸ்.

பதிஞ்சாச்சு. கோ டு த கடைசி பெஞ்ச்:-)

said...

ம்ம். இத்தனை நடந்திருக்கா? பாட்டிக்கு புதுமைப் பெண் தெரியாது போயிருக்கலாம். படிக்கும் எங்களுக்கு?

said...

நாங்களும் ஆஜராயிட்டோமில்ல...

மே ஐ கம் இன் டீச்சர்...?

ஏதோ எல்லா உறவுக்காரங்களும் ஒண்ணா சேர்ந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசின திருப்தி வருது டீச்சர் உங்க பதிவை வாசிக்கும் போது ,தொடர்ந்து உங்க பதிவுகளை வாசிக்க முடிவு பண்ணி இருக்கேன்.

said...

அப்பா போல் வீட்டை விட்டு பிரிந்து வாழக் கூடியவர்கள் நிறைய பேரைப் பார்த்து இருக்கேன். எங்களது வீட்டுக்கு அருகில் ஒரு தூரத்து சொந்த அத்தை இருந்தார்கள். அவரது கணவர் வீட்டில் தங்கவே மாட்டார். சில நாட்கள் வருவார். பல ஆண்டுகள் காணாமல் போய் விடுவார்கள். அப்படியும் 6 ஆண்கள், ஒரு பெண் என்று 7 குழந்தைகள் வேறு. எப்படியோ எல்லாவரையும் அத்தை நன்றாக வளர்த்தாங்க.... சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் அனைவரும் ஒரு விழாவுக்காக ஒரு இடத்திற்கு சென்றிருந்தோம். அங்கு அவர் வந்து இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பின் அவரை அத்தை அங்கு சந்தித்தார். மிகவும் பாசத்துடன் பேசிக் கொண்டிருந்தார். சில மணி நேரங்களில் சரி நான் கிளம்புகிறேன் என்று சென்று விட்டார். அவ்வளவு தான்.. அதற்குப் பின் அவர் வரவில்லை. மனிதர் நல்ல மனிதராகவே தெரிந்தார். ஆனால் அவருடைய நோக்கங்கள் குடும்பம் என்று கூண்டுக்குள் அடைபடக் கூடாது என்பது ஏதாவது சித்தாந்தமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதைச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை.

Anonymous said...

அண்ணன் சண்டை போடாத ஆளே இல்ல போல இருக்கு குடும்பத்தில :(

said...

ம்ம்ம்..எக்ஸ்ப்ரெஸ் வேகம்...அந்த தொடர்கதையை நிறையவே ஞாபகப்படுத்து இந்த 14ம் பாகம்.!!

\\'பேரப்புள்ளைங்க எல்லாம் நெய்ப்பந்தம் பிடிக்க வாங்க\\

நான் பிடிச்சிருக்கேன்....இன்னும் பிடிக்க ஒரு வாய்ப்பு கூட இருக்கு ஊர்ல.!!! ஆனா இந்த முறை முடியுமான்னு தெரியல..;)))

said...

\\அக்கா அடுத்த பாகத்தோடு முடியுது:-)\\\

ஆகா....அய்யோ..எனக்கு க்ளைமாக்சை நினைச்ச பயமாக இருக்கு...!!!

said...

அப்பா...... கடிதம் வந்தே ரெண்டு மாசம் ஆகி இருக்கு. என் பெயருக்கு வந்துருக்கு. ஆனாலும் அதை எல்லாரும் படிச்சுட்டாங்க(-:
:))))

அஞ்சே நிமிசம். கண்ணைத் துடைச்சுக்கிட்டு விறுவிறுன்னு 'என் வீட்டுக்கு' வந்தேன்.
’என் வீடு’ - அடேங்கப்பா எவ்ளோ பெருமை.

ஓடோடிவந்து 'எக்ஸ்ப்ரெஸ் கெட்டது போ' ன்னு என்னைப் பிடிச்சார். ரெயில்வேக்காரனுக்கு ரயிலை விட்டா வேற உதாரணம்கூட வராது போல
:)))))))

(இவர் மகளோட கல்யாணத்துக்கூட வராமப் போனவர், இப்போ ஏழு பிள்ளைங்க பிறந்தபிறகு முதல்முறையா மருமகப்பிள்ளையைத் தங்கமா பித்தளையான்னு உரைச்சுப் பார்க்கறார்)
:)-


சாங்கியம் செய்யும்போது 'பேரப்புள்ளைங்க எல்லாம் நெய்ப்பந்தம் பிடிக்க வாங்க'ன்னாங்க. போறதா வேணாமான்னு தயக்கம். அதுக்குள்ளே மத்தவங்க எல்லாம் சுத்தி முடிச்சாங்க. இன்னும் யார் இருக்கான்னு அவுங்க கேட்டுக்கிட்டு இருக்கறப்பவே.... 'அவ்வளவுதான் எல்லாரும் ஆச்சு' ன்னு அண்ணன் சொல்லிட்டார். சாவு எடுத்துட்டாங்க. //

அண்ணன் ஏன் இவ்ளோ கடுமையா இருக்கார். ரொம்ப கஷ்டமா இருந்துச்சு படிக்கறச்சே.

சாவு வீட்டுலே சொல்லிக்கிட்டுப் போற வழக்கம் இல்லைன்றது நல்லதாப் போச்சு.
மறுமொழியே இல்லை.

சொன்னாங்களா இல்லையான்னு எனக்கு மண்டைக் குடைச்சல்.//
எங்களுக்கும் தான்.

said...

என்ன அடுத்த பாகம் முடியுதா.. அப்ப இது மெகா சீரியல் இல்லையா. ...
ம்... நீங்க படா ஆளுன்னு தெரியுது அப்பறம் கதைகள் மேல ஒரு இண்ட்ரஸ்ட் கூடுது..

said...

வாங்க ராமலக்ஷ்மி.

ஓஹோ.... இதுதான் 'புதுமைப்பெண்'ணா?:-))))))

said...

வாங்க மிஸஸ் டவுட்.

வகுப்புலே வந்து சேர்ந்ததுக்கு நன்றி.

ஒரு எண்ணூத்துச் சொச்சம் அரியர்ஸ் இருக்கு. நிதானமாப் படிங்க.

'சந்தேகம்' வந்தால் கட்டாயம் கேக்கணும்,ஆமா:-)))))

said...

வாங்க தமிழ்பிரியன்.

இதுபோல சில அப்பாக்கள் நடந்து கொள்வதற்கு உளவியல் ரீதியான காரணங்கள் அநேகம் இருக்கலாம். அதுலே ஒன்னு ஆன்மீகம்.

said...

வாங்க சின்ன அம்மிணி.
அண்ணன் சண்டைன்னு ஒன்னும் வாயைத் திறந்து போட்டதே இல்லைப்பா. முகமே எல்லாத்தையும் சொல்லிரும்(-:

said...

வாங்க கோபி.

பயப்படாதீங்க. நடப்பது நடக்கட்டுமுன்னு இருக்க வேண்டியதுதான்.

said...

வாங்க அமித்து அம்மா.

வரிவரியாப் படிச்சுப் பின்னூட்டியதுக்கு நன்றி.

ஒருவேளை, நாங்க ஓரமா நின்னுக்கிட்டு இருந்ததை அவர் கவனிக்கலையோ என்னவோ!!!!

தப்பு எங்க மேலேயும் இருக்கு. ரொம்ப யோசிக்காமச் சட்னு முன்னே போயிருக்கலாம். தோணலையே(-:

said...

வாங்க கயலு.

அடுத்தபாகம் நாளைக்கே வருது.
சட்னு முடிச்சுட்டா மனசுக்கு நிம்மதியா இருக்குமுன்னு ஒரு தோணல்.

அப்புறம் கதைகளை அப்புறமாப் பார்க்கலாம்.

said...

//ஒரு எண்ணூத்துச் சொச்சம் அரியர்ஸ் இருக்கு. நிதானமாப் படிங்க.

'சந்தேகம்' வந்தால் கட்டாயம் கேக்கணும்,ஆமா:-)))))//

ஆனாலும் இது ரொம்ப அநியாயம் துளசி டீச்சர் ! நான் அழுதுருவேன் வேணாம்...என்னைப் புது கிளாஸ்ல போட்ருங்க ப்ளீஸ் .நான் இப்பத்திய பாடங்களைப் படிச்சி பாஸ் பண்ணிட்டு பழைய பாடத்துக்குப் போய்க்கறேன்(இந்தக் காலத்துப் பசங்க எல்லாத்தையும் தலைகீழா தான் செய்யராங்கானு டீச்சர்ஸ் சொன்னாலும் பரவாயில்லை?!!!

said...

//இன்னும் யார் இருக்கான்னு அவுங்க கேட்டுக்கிட்டு இருக்கறப்பவே.... 'அவ்வளவுதான் எல்லாரும் ஆச்சு' ன்னு அண்ணன் சொல்லிட்டார். சாவு எடுத்துட்டாங்க. சாவு வீட்டுலே சொல்லிக்கிட்டுப் போற வழக்கம் இல்லைன்றது நல்லதாப் போச்சு.//

படிக்கிற எனக்கே கஷ்டமா இருக்கு. அங்க நின்ன உங்க வேதனை புரியுது டீச்சர்.

டீச்சர் நான் போன பதிவுல சொன்னது எல்லாத்தையும் பிரிச்சி போட சொல்லல.

labels gadget ON செய்தா போதும்

said...

இன்னைக்கு நான் தான் கடைசியா டீச்சர்? அது என்ன முப்பத்தி நாலரை வருஷம் டீச்சர்? நாளைக்கு வேற கடைசி பகுதினு சொல்லறீங்க....அது வேற கவலையா இருக்கு...வேற எதுக்கு,சொந்த கதை சோக கதையெல்லாம் பகிர்ந்திட்டிருந்தோம். இனி?????

said...

சூப்பர் ரீச்சர்.. நான் பரவாயில்லை.. விட்டு விட்டாவது பாடங்களை படிச்சேன். உங்க ஃபிஜி தொடர் வேற ஒரு இடத்தில பதில் சொல்ல உதவியது.

said...

போய் டீக்கடையில் சாயா, சிகெரெட்,பீடி. சித்தப்பா பீடி என்றதால் அப்பாவும் அப்பப்பப் பீடி. எனக்கு எரிச்சலா இருந்தாலும் போகட்டும் ஒன்னும் சொல்லவேணாம்.//

அப்படிதான் இருக்கனும். இவ்வளவு பெரிய கதை இருந்தா நான் 100 பாகம் எழுதியிருப்பேன்

said...

என்னங்க மிஸஸ் டவுட்,

டீச்சரையே மிரட்டுனா எப்படி?

கடைசி பெஞ்சுலே க்ளாஸ் லீடர் இருக்கார் பாருங்க. அவர்கிட்டே கேட்டு எதை முன்னாலே படிக்கணும், எது பரிட்சைக்கு வர்ற பகுதின்னு தெரிஞ்சுக்குங்க:-))))

said...

நான் ஆதவன்,

//labels gadget ON//

எப்படிச் செய்யணும்? போன தலைமுறை டீச்சராச்சேப்பா நான். அதுவும் க கை நா(-:

said...

வாங்க சிந்து.

அந்த //முப்பத்தி நாலரை வருஷம் //

கோபாலுக்குச் சனி பிடிச்சு இன்னும் விலகலை!!!!

said...

வாங்க இலா.

//உங்க ஃபிஜி தொடர் வேற ஒரு இடத்தில பதில் சொல்ல உதவியது.//

ஆஹா...ஆஹா....

'பயனில சொல்லாமை'யில் நான் இல்லை என்பதே மகிழ்ச்சி.

said...

வாங்க குடுகுடுப்பை.

துளசிதளத்தில் பதிவுகள் எல்லாம் ரொம்ப நீளமுன்னு பலர் கும்முவாங்க.
அதையெல்லாம் நாலுதுண்டா ஆக்கி வெளியிட்டு இருந்தால்..... இந்நேரம் மூவாயிரத்துச் சொச்சம் பதிவுகளா ஆகி இருக்கும்:-))))))

said...

நரேன்,

//திருச்செங்கோடு ? நீங்களா ?

கோபால் சார் அப்படியா?

நீங்களே ஆமாம்னு பதில் போடக் கூடாது ?
சாரை சொல்லச் சொல்லுங்க//


உங்க கேள்விக்குக் கோபால் சொன்ன பதில்.

கல்கத்தா.

said...

இல்லியா பின்னே, அந்தக் காலக் கட்டத்தில் படித்து உங்கள் காலிலே நின்று, குடும்பமே எதிர்த்த போதும் எடுத்த முடிவுகளிலிருந்து விலகாமல் தனியாக வீடு எடுத்து அப்பாவை அழைத்து வைத்துக் கொண்டது எல்லாம் வியக்க வைக்கிறது.

said...

ராமலக்ஷ்மி,

ரொம்பத் துள்ளிக்கிட்டு இருக்கான்னு 'நான் வாங்குனதெல்லாம்' எனக்குத்தான் தெரியும்:-))))

said...

உங்களுக்கும், கோபால் சார் மற்றும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்ந்துக்கள், துளசி டீச்சர்!

said...

வாங்க வருண்.
நன்றிப்பா.

உங்களுக்கும் எங்கள் அன்பான புதுவருட வாழ்த்து(க்)கள்.