Friday, May 23, 2008

தங்கம் தங்கம் என்று என்னை ஏன்?

என்னைத் தெரியுதுங்களா? நாந்தாங்க தங்கம். இன்னிக்கு உங்களோடு கொஞ்சம் பேசலாமுன்னு இங்கே எட்டிப் பார்த்தேன். பூமியில் புதைஞ்சுருக்கும் எல்லா உலோகம் போலவும்தாங்க நான். ஆனா என்னோட பளபளப்பு..... இதைவிட என்னோட கருக்காத தன்மைதான் மக்களை ஆட்டிவைக்குதோன்னு இருக்கு. அதிலும் அந்த மஞ்சள் நிறம் கொஞ்சம் தூக்கலா இருக்கேனா....ஜனங்க என்னை ரொம்ப மங்களகரமானதுன்னு நினைச்சுக்கிட்டு இந்தப் பாடு படுத்தறாங்க.



தங்கச்சுரங்கங்களில் ஏராளமாக் கிடைச்சுக்கிட்டு இருந்த காலத்தில்கூட இம்முட்டு நகைநட்டு நம்மாளுங்க செஞ்சு போட்டுக்கலை. இப்ப என்ன விலை விக்குது பாருங்க!!!! ஆனாலும் நகைக்கடைகளில் கூட்டம் குறைஞ்சதோ?


ஒரு ஆறாயிரம் வருசமாத்தான் நான் நகைநட்டா இருக்கேனாம். எப்ப எந்த மகா(பாவி)ன் என்னை முதல்முதலில் தோண்டுனானோ..........நான் பாட்டுக்கு நிம்மதியாக் கிடந்துருப்பேன்.....ஹூம்........



என்னாலே எவ்வளவு மகிழ்ச்சி மக்களுக்குத் தரமுடியுமோ அதே அளவு துக்கத்தையும் தரமுடியும்! கொலை கொள்ளையெல்லாம் பலசமயம் எனக்காகவே, என்னைக் கைப்பற்றவே நடக்குது. சிலசமயம் வெறும் காப்பவுனுக்குக்கூட புள்ளைகளைக் கொன்னு போட்டுடறானுங்கன்னு செய்தி வரும்போது அப்படியேத் துடிச்சுப்போயிடறேன்..... கல்யாணக் கனவு நிறைவேறாமக் கண்ணீர் வடிக்கும் பெண்கள் நிலை......... சொல்லவே வேணாம்(-:


பவுனு பவுனுன்னு சொல்றமே....... அப்படி வாங்கும் ஒரு பவுனில் எவ்வளோ சுத்தத் தங்கம் இருக்கு? அதான் 22 கேரட்ன்னு சொல்லி இருக்குல்லே. 22 பங்கு தங்கம். அப்ப அதுலே இருக்கும் மீதி ரெண்டு கேரட்?


நாம பொதுவா நினைப்பது போல அது செம்பு மட்டும் இல்லையாம். அதுலே ஒரு பங்கு வெள்ளியும், நாலு பங்கு செம்பும் சேர்த்து 'அலாய்'ன்னு கலக்கறாங்க.


அதான் கலப்படமுன்னு தெரிஞ்சிருச்சுல்லே..... சரியான அளவுதான் கலக்குறாங்களான்னா..... அது அவுங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச 'ரகசியம்'
இந்தியாவிலே அதிலும் குறிப்பாச் சென்னையில் வாங்கும் தங்க நகைகளில் 22 கேரட்ன்னு சொல்லி விக்கறாங்களே தவிர, அதுலே 21, 19 கேரட் இருந்தாவே ஜாஸ்தியாம். சிங்கப்பூர், துபாய் தங்க நகைகளில் 22ன்னா 22 இருக்காம். அதான் அதோட கலர் மங்காம பளிச்சுன்னு இருக்குன்னு மக்களோட எண்ணம்.



இந்த அழகுலே, பேஷன் மாறுதுன்னு நகைகளைத் திரும்பத்திரும்ப மாத்தி எடுத்தோமுன்னா.....கழுதை தேய்ஞ்சுக் கட்டெறும்பு ஆன கதைதான். ஒவ்வொருமுறையும் பழைய நகைகளை மாத்தும்போது சேதாரமுன்னு சொல்லி, துண்டுக்கடுதாசியில் நிறைய என்னென்னவோ எழுதிக் கூட்டிக் கழிச்சு 'இவ்வளவு வரும்மா இதுக்கு. நீங்க மேலே இன்ன தொகையைக் கட்டிட்டு இந்தப் புது நகையை எடுத்துக்குங்க'ன்னு சொல்றாங்க.


பணமாக் கொடுப்பாங்களா? ஊஹூம்..... அதுக்கு மேனேஜரைப் பார்க்கணும். அங்கே போனா இன்னும் துண்டுக் கடுதாசி. கடைசியில் அவுங்க சொல்லும் தொகைக்கு வெறுத்துப்போய், ச்சீ.... இதுக்கு பேசாம மொதல்லே சொன்னக் காசை நாமே(கொஞ்சூண்டு பேரம் பேசித்தான்) கொடுத்துட்டுப் புது நகை வாங்கிக்கலாமுன்னு தோணிப்போகும். இருந்துட்டுப்போகட்டும் இன்னொரு கம்மலு.... கடைக்காரர்களுக்கு நம்ம காசை வாங்கும்போது இருக்கும் ஜோர்
நமக்குத் திருப்பிக் காசாக் கொடுக்கும்போது இருக்கவே இருக்காது.



இந்தக் கஷ்டம் வேணாமுன்னுதான் புதுசா KDM வச்சுப் பத்த வச்ச நகைகள் கவர்ச்சியா இருக்கு. இதை வித்தால் சேதாரமுன்னு 'அவ்வளவா'க் காசு கொறையாது. இது எப்படி? (அப்படின்னு நாம் நினைக்கும்படிப் பண்ணுவாங்க KDM soldering செஞ்சதை வாங்கும்போது)


பொதுவா 22 கேரட் தங்கம் 1000 C சூட்டுலே உருகும். நகையில் பத்தவைக்கும்போது அதே 22 கேரட் தங்கத்தூளில் பத்தவைச்சா பத்தவைக்கும் இடத்தில் உள்ள நகையும் சேர்த்து உருகி அந்த இடத்தோட டிசைன் அழிஞ்சுருமே.. இதைத் தவிர்க்கத்தான் cadmium பயன்படுத்தறாங்க.


பத்தவைக்கும் விசயத்துக்கும் 22 கிராம் சுத்தத் தங்கத்துடன் 2 கிராம் கேட்மியம் சேர்த்து இளக்கி வச்சுக்குவாங்களாம். இதுவும் 22 கேரட் ஆகிருது. இதோட உருகும் சூடு 800 C. நகையில் பத்தவைக்கும்போது இது சட்னு உருகிப் பத்திக்குமாம். நகை டிஸைனுக்கு கெடுதி வராது.


திரும்ப இந்த நகைகளை அழிச்சுச் செய்யறதுக்குன்னு உருக்குனா சேதாரம் இல்லாம 22 கேரட் தங்கமே இருப்பதால் அன்னிக்கு விலையில் 22 கேரட் தங்கம் இருக்கும் விலை மதிப்பு இதுக்கு வந்துருமாம். இப்படியெல்லாம் சொல்லி 'கஷ்டமர்'களைக் கவர்கிறார்கள்.


பலசமயங்களில் பார்த்தீங்கன்னா...நல்ல கடைகளில் வாங்குன நகைகளில்கூடப் பத்தவச்ச இடம் பல்லை இளிச்சுக்கிட்டு லேசா வேற நிறத்தில் மங்கலாத் தெரியும். ஆனா மேலே சொன்ன முறைகளில் பத்தவச்ச நகைகளில் எல்லா நிறமும் ஒன்னுபோல (மங்கலாவா? ச்சீச்சீ...) இருக்கு(மாம்)


சந்தேகம் இருந்தால் 'Red heat solder test' ன்னு ஒன்னு செஞ்சு பார்க்கலாம். இது எப்படி?

பத்தவச்ச பகுதியை நல்லாப் பழுக்கச் சிவந்த நிறம் வரும்வரைச் சூடாக்கிக் குளிரவைக்கணும். ஆறுனதும் நீர்த்த கந்தக அமிலக் கரைசலில் போட்டுக் கொதிக்க வைக்கணும். இவ்வளவு செஞ்சதுக்கப்புறமும் பத்தவச்ச இடம் நிற மாறுதல் இல்லாம 22 கேரட் தங்க நிறத்துலேயே இருக்கணும். பெரிய கடைகளில் இதைச் செஞ்சு காமிப்பாங்க போல. அதுக்காக ஒரு கிராம் தங்கம் வாங்கி இதைச் செஞ்சுகாமின்னு கேக்கறது டூ மச்:-)



எனக்கென்னன்னா..... எதுக்கு இவ்வளோ சிரமம்? பேசாம 24 கேரட் சுத்தத் தங்கத்துலேயே நகைகள் செஞ்சுக்கிட்டா என்ன? ஆங்...... ரொம்ப மிருதுவா இருக்குமாம் சுத்தத் தங்கம். டிசைன் செஞ்சு எடுக்கத் தாங்காதாம். ஆனா தாய்லாந்து, சீனா, ஹாங்காங் எல்லாம் 24 கேரட் தங்கநகைகள்தான் செய்யராங்க. போட்டுக்கவும் போட்டுக்கராங்க. அப்படி ஒன்னும் ஆனதாத் தெரியலையே.....


இன்னொண்ணு சொல்லிக்கறேன். இந்த எடை விசயம்? பூனா, பாம்பாய்லே நகை எதாவது வாங்குனோமுன்னா.... நாம் தேர்ந்தெடுக்கும் நகையைக் கடைக்காரப்பையன் கொண்டுபோய் ஒரு இடத்துலே எடை போட்டு அவுங்க கொடுக்கும் ரசீதைக் கொண்டுவருவான். இந்த எடைபோடும் இடம் எல்லா நகைக்கடைக்காரர்களுக்கும் பொது. ஏமாத்தும் வேலையெல்லாம் இருக்காது.
அவுங்க எழுதி அனுப்பும் எடையை நம்பி வாங்கலாம். 'சத்திய பீடம்'ன்னு இதுக்குப் பெயர். இப்படி ஒரு அமைப்பு நம்ம பக்கங்களில் இல்லையே...ஏன்?


என்னதான் விலை உச்சாணிக்கொம்பில் ஏறிக்கிட்டேப் போனாலும் இந்த நகை ஆர்வம் மட்டும் நம்ம மக்களிடம் குறைவதே இல்லை. கஷ்டப்பட்டுச் சம்பாரிச்சக் காசை நகையிலே போடும்போதுக் கவனிச்சுப் பார்த்து வாங்குங்கப்பா.


சேமிப்பு என்ற வகையில் வாங்கும்போது நகையா வாங்காமல் பிஸ்கோத்து வாங்குனா விக்கும்போது சுலபம். ஆனா...... ஆண்டு அனுபவிச்சுப் பார்க்காமல் அது என்ன வாழ்க்கை? இப்பெல்லாம் ஆம்புளைங்களுக்கும் நகை ஆசை கூடிக்கிட்டு வருது.


கல்யாணங்களுக்கு இத்தனை பவுன் நகை போடணுமுன்னு மாப்பிள்ளை வீட்டு நிர்ப்பந்தங்கள் எல்லாம் மாறிப்போச்சாம். கேக்கவே மகிழ்ச்சியா இருக்கா? ஸ்டாப்.....


இப்பெல்லாம் கிலோக் கணக்குதானாம். எங்கே? கேரளாவில்.


எல்லாத்தையும் காப்பியடிக்கும் நம்மூர் மக்கள் இதை மட்டுமாவது காப்பியடிக்காமல் இருக்கணும்.


சரி. இப்பத் தேர்வுக்கான கேள்விகள்:


ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் என்றால் எத்தனை கிராம்?
தண்ணீரைவிடத் தங்கம் எத்தனை மடங்கு அடர்த்தி கூடியது?

47 comments:

said...

தங்கத்தை தோண்டியெடுப்பதால் ஏற்ப்படும் சுற்றுச்சுழல் மாசுப் பற்றியும், தங்கத்தை அபகரிப்பதர்க்காக ஆப்ரிக்க தேச மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே.

said...

முதலில் கேள்விகளுக்குப் பதில் சொல்லட்டுமா?

1) 31.1034768 கிராம்கள்
2) 19.3 மடங்கு

இதெல்லாம் எப்படித் தெரியுமுன்னு கேட்கறீங்களா? எங்க தாத்தா நகைக்கடை வெச்சு இருந்தாரு. அப்போ கணக்கு வழக்குப் பார்க்க ஒரு கம்பியூட்டர் வாங்கினாரு. அதுல விளையாட அடிக்கடி போவேன். அதே மாதிரி நாமளும் வாங்கணுமுன்னு ரொம்ப ஆசை. அதை வாங்கின பின்னாடி விளையாடும் ஆசை போயி இணையத்தில் மேயுற ஆசைதான். அப்போதான் இணையத்தின் ஆண்டவனாம் கூகிளாண்டவரைக் கண்டேன். அப்புறம் என்ன, யாரு என்ன கேட்டாலும் அவராண்டை போய் கேட்கறதுதான். அதே மாதிரிதான் இந்த ரெண்டு கேள்விக்கும் பதில் தெரிஞ்சுக்கிட்டது. :))

said...

வாங்க சிபி அப்பா.

தங்கத்தாலே வரும் கஷ்டநஷ்டங்கள் கொஞ்சநஞ்சமா?

கடைசியில் பார்த்தால் கண்ணீர்தான் மிஞ்சும்.

எப்படி அலையராங்கன்னு பாருங்க இதுக்குப் பின்னால்(-:

said...

வாங்க கொத்ஸ்.

லீடரா கொக்கா?

இன்னும் நாலுபேரு 'சாமி' கும்பிட்டுட்டு வரட்டுமே :-)

said...

நல்ல ஒரு பதிவில் சென்னையை இகழ்ந்தது சகிக்க முடியவில்லை!

ஆதாரத்துடன் சொல்லி இருக்கலாம்!

said...

வாங்க வி எஸ் கே.

சென்னையை இகழ்ந்துட்டேனா?

எப்படி?

நகைத்தரத்தைச் சொல்றிங்களா?
நம்மகிட்டேயே நாலைஞ்சு இப்படிக் கிடக்குது.

said...

//. 'சத்திய பீடம்'ன்னு இதுக்குப் பெயர். இப்படி ஒரு அமைப்பு நம்ம பக்கங்களில் இல்லையே//

இது மாதிரி தான் நம்ம ஊர் "மத்யஸ்த்தக் கடை " அப்படிங்கறது...மதுரை-காரைக்குடி போன்ற இடங்களில் இன்றும் இருக்கு..

அவங்க ஏதும் விற்க மாட்டார்கள்...பொன்னின் மாற்றை சொல்வது, வெயிட் பார்த்து சொல்வது, போன்றவை மட்டும் செய்வர்...இது அந்த ஏரியா நகை வியாபாரிகள் சங்கத்திலிருந்து நடத்தப்படும் சேவை...

said...

எனக்குத்தான் பேர்லயே தங்கம் இருக்கே:))

said...

ஒரு டிராய் அவுன்ஸ் = 31.10 கிராம் தங்கம்
தங்கம் தண்ணிரை விட 19.3 மடங்கு அடர்த்தி அதிகமானது.
சரியா டீச்சர்.

said...

நகை ஆசை அன்னைக்கும் இல்லை இன்னைக்கும் இல்லை துளசி .. ஆனா பத்து இருபது ரூபாய் தோடு கடை பாத்தா நானும் பொண்ணும் அப்படியே நின்னுடுவோம். :)))

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கத் தலைவிக்கு:))

said...

யாரு அந்த தலைவிங்கறிங்களா? கீதா அக்காதானாம். நீங்க தங்கம்ன்னதும் ஞாபகம் வந்துருச்சு:P

said...

துளசி அக்கா.. எனக்கு ஒரு டவுட்டு ,

அடிக்கடி, நகை நட்டு வாங்கனும்ங்கறாய்ங்களே.. நகை ஓகே.. அதென்ன நட்டு???:)))))

said...

உன்னாண்ட இம்மாம் சமாச்சாரம் கீதா..தங்கமே தங்கம்!!!!

எனக்கு நகை ஆசையே கிடையாது.என் மகளுக்கோ கழுத்தில் கையில் காதில் இருப்பது தெரியாத வகையில் மெல்லிசாக வேண்டும்.
இப்போது சில நகைக் கடை விளம்பரங்களில் வரும் டிசைன்களைப் பார்க்கும் போது ரவிக்கையே போடவேண்டாம் போல!!!!

said...

ஆமாங்க,இந்த தங்கம் ரொம்பவே ஏறி போச்சு. ரொம்ப அனியாயம்.


@my inlaws, என்னது கல்யாண நாளுக்கு மோதிரம் போட போறீங்களா? இதோ வந்துட்டே இருக்கேன். :))

said...

டீச்சர்..

இன்றைய நிலவரப்படி உங்க வீட்ல எத்தனை கிலோ தேறும்..?

தங்கமே தங்கம்னு சொல்லிச் சொல்லி.. தங்கமா வாங்கிக் குவிச்சீங்கின்னா விலை ஏறாம என்ன செய்யும்?

ச்சீ.. இந்தச் சனியனை எவளாவது வாங்குவாளா..? அப்படீன்னு நினைச்சுக்கிட்டு ஒரு மாசம் உலகம் பூரா இருக்குற அத்தனை ஆத்தாமார்களும் கொஞ்சம் அடங்கினா..

விலை குறையுமா? குறையாதா..?

ஆம்பளைங்க எல்லாரும் மூச்சு விடுவானுகளா? மாட்டானுகளா..?

என்னத்த சொல்றது..?

"ஆவது பொன்னாலே.. அழிவது பெண்ணாலே.."

said...

\\ச்சீ.. இந்தச் சனியனை எவளாவது வாங்குவாளா..? அப்படீன்னு நினைச்சுக்கிட்டு ஒரு மாசம் உலகம் பூரா இருக்குற அத்தனை ஆத்தாமார்களும் கொஞ்சம் அடங்கினா..\\
கணவர்களின் கண்ணீர் துடைக்க கருத்து தந்த உண்மைத்தமிழன் அண்ணாச்சி வாழ்க

said...

சூப்பர் விஷயம்...;)

said...

டீச்சர்,

இப்போ தங்கத்துல வெள்ளைத் தங்கம்,அப்புறம் பிளாட்டினம் நகைகள் இரண்டும் எல்லோராலும் விரும்பி விரும்பி வாங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
நீங்க மட்டும் இன்னும் தங்கத்துலயே இருந்தால் எப்படி டீச்சர்?வீட்டுக்காரர்கிட்ட கொஞ்சம் சொல்லுங்க.

அப்புறம் 24 கேரட்,22 கேரட்,18 கேரட்,14 கேரட்கள்ல நகை (தங்கம் / பிளாட்டினம்) வாங்கும் போது நீங்கள் வாங்கும் கடையில் பில்லோடு சேர்த்து அந்த நகையில் பயன்படுத்தப்பட்ட தங்கத்திற்கான தனிப்பட்ட சேர்டிபிகேட் கேளுங்கள்.எல்லா நகைக்கடைகளிலும் இது கொடுக்கப்படும்.அது அத்தனை நாடுகளிலும் செல்லுபடியாவதோடு நகையை விற்க நேரிடின் சேதாரம் கவனத்தில் கொள்ளப்படுவது குறைவு.அத்துடன் விற்கும் சமயத்தில் ஆகக்கூடிய பெறுமதிக்கு விற்கலாம்.

இன்னும் நீங்கள் சொல்வது போல 24 கேரட் தங்க பிஸ்கட்களாகவும் சேமிக்கலாம்.ஆனால் அதனைச் சேமிக்க வங்கியில் லாக்கர் இருப்பது நலம்.இல்லாவிடில் இரவில் தூக்கம் வராது.. :)

said...

2008 9:19 PM
<==
முரளிகண்ணன் said...
\\ச்சீ.. இந்தச் சனியனை எவளாவது வாங்குவாளா..? அப்படீன்னு நினைச்சுக்கிட்டு ஒரு மாசம் உலகம் பூரா இருக்குற அத்தனை ஆத்தாமார்களும் கொஞ்சம் அடங்கினா..\\
கணவர்களின் கண்ணீர் துடைக்க கருத்து தந்த உண்மைத்தமிழன் அண்ணாச்சி வாழ்க
==>
ரிப்பிட்டேய்....

said...

வாங்க மதுரையம்பதி.
//இது மாதிரி தான் நம்ம ஊர் "மத்யஸ்த்தக் கடை " அப்படிங்கறது...மதுரை-காரைக்குடி போன்ற இடங்களில் இன்றும் இருக்கு..

அவங்க ஏதும் விற்க மாட்டார்கள்...பொன்னின் மாற்றை சொல்வது, வெயிட் பார்த்து சொல்வது, போன்றவை மட்டும் செய்வர்...இது அந்த ஏரியா நகை வியாபாரிகள் சங்கத்திலிருந்து நடத்தப்படும் சேவை...//

நல்ல சேவைதாங்க. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.

said...

வாங்க தங்ஸ்.

பேருலே இருக்குன்னு சொன்னதும்தான் நினைவுக்கு வருது.

தங்கத்துமேலே இருக்கும் மதிப்பால்தானே, பொன்னம்மா, பொன்னைய்யன்,
தங்கப்பன், தங்கவேலுன்னு வச்சுருக்காங்க. வெள்ளைக்காரங்களும் இப்படித்தான் போல. கோல்டீன்னு இருக்கே:-)))))

said...

வாங்க கிரிக்கெட் ரசிகன்.

'ஆண்டவன்' சொன்ன பதில் தவறாகுமா?:-))))

said...

வாங்க கயலு.


ஆசைன்னு அலையாம இருந்தாலும் அவசியத்துக்குன்னுக் கொஞ்சம் வாங்கத்தானே வேணும்?

said...

வாங்க ரசிகன்.

தங்கத்தலைவி ஊருலே இல்லை போல!

ஆமாம். இப்படி டவுட்டு வரலாமா?

தங்குகளுக்கு நகை & ரங்குகளுக்கு நட்டு.

ஸோ...... சிம்பிள்:-)

said...

வாங்க நானானி.

எதுவுமே அளவோடு இருக்கணும். நீங்க சொன்னது ரொம்பச் சரி. சில நகைக்கடை விளம்பரங்களைப் பார்த்தால்..... 'இருக்கு'ன்றதாலே எல்லாத்தையும் 'அள்ளி'ப்போட்டுக்கிட்ட மாதிரி அசிங்கமா இருக்குப்பா(-:

கூகுளில் எதாவது படம் இருக்கான்னு தேடுனேன்....அப்ப..
ஐயோ..... போருக்குப்போகும்போது மாட்டும் கவசமா?

http://img154.imageshack.us/img154/7611/image5pa5.jpg

said...

வாங்க அம்பி.

மோதிரமா? எங்கே? எங்கே?

ஐயோ..... என் வீக் பாய்ண்ட் தெரிஞ்சுபோச்சா? :-))))

said...

வாங்க உண்மைத் தமிழன்.

//இன்றைய நிலவரப்படி உங்க வீட்ல எத்தனை கிலோ தேறும்..?//

அதிகம் இல்லை. என்ன ஒரு எழுபது கிலோ இருக்கலாம்.
எங்க வீட்டுத் தங்கமே நாந்தாங்க.
'வைரம்' ஒரு ஆறு கிலோ தேறும்.
எடை பார்க்க மெசினில் வச்சால் 'மியாவ்'ங்குது:-)

ஆத்தாக்கள் எல்லாம் அடங்கியாச்சு. கடைக்காரப்பனுங்க அடங்க மாட்டேங்கிறாங்க.
மொதல்லே அவுங்களை நிறுத்தச் சொல்லுங்க......

said...

வாங்க முரளிகண்ணன்.

உண்மைத்தமிழன் இன்னும் 'இக்கரை'யில்தான் இருக்கார். 'அக்கரை' போனதும் தெரியும்.

said...

வாங்க கோபி.

சூப்பரோ சூப்பர்?

said...

வாங்க ரிஷான்.

வெள்ளைத்தங்கம் ரோஸ் தங்கம் எல்லாம் அவ்வளவா அப்பீல் ஆகலைங்க. அதிலும் ப்ளாட்டினம் போடறதுக்குப் பதிலா இங்கே கிடைக்கும் ஸ்டெர்லிங் ஸில்வர் எவ்வளவோ தேவலை.

எப்போதாவது வாங்கும் சிலதுக்குச் சர்ட்டிஃபிகேட் வாங்கணும்தான். இல்லேன்னா இன்ஷூரன்ஸ் எடுக்கறதும் கஷ்டம்.

பொதுவா நான் இங்கே 'எதுவும்' வாங்குவதில்லை. காசைக் கொண்டு போய் ஒன்பதில் போட விருப்பமில்லை.

said...

வாங்க சாமான்யன் சிவா.

விரைவில் தங்கூஸ் வரட்டுமென வாழ்த்துகின்றோம்:-)

said...

அன்புத் துளசி ஒரு அவசியம் ஆபத்துக்குத் தான் தங்கம்.

கொஞ்சம் அசந்தாலும் நம்ம அடித்துக் கொண்டு போய் விடும் தங்க ஆசை.
பழசைக் கொடுத்துப் புதிசு வாங்க இப்ப ஒருகடை நல்லா இருக்கு. தனிஷ்க்.

பேரன், பேத்தினு வரும்போது அதுகளுக்கும் போட வேண்டி இருக்கு இல்ல. அளவோட சேர்த்து வளமோடு வாழலாம். சென்னையில ஏமாத்தறது சகஜம்.

said...

// இப்பெல்லாம் கிலோக் கணக்குதானாம். எங்கே? கேரளாவில்.//

உண்மைதானுங்க..என்னோட ஃப்ரென்ட் வீட்டிலே கூட அதுபோலத்தான் வேணும்போல‌
பேசினாகளாம். ஃப்ரென்ட் வீட்டிலேயும் சரின்னு சொல்லிட்டகளாம்.
கல்யாணத்தின்னிக்கு எங்கேங்க. நாங்க கேட்டதுன்னு மாப்பிள்ளை வீட்டார் முறைச்சப்ப,
பெண் வீட்டார் ஒரு வேயிங் மிஷின் கொண்டு வந்தாங்களாம்.
என்னங்க இதுன்னு அவுக கேட்டப்ப,
பொண்ணைக் கூப்பிட்டு மிஷின் மேல நிக்க வச்சாகளாம்.
"பாருங்க ... சும்மா இல்ல ..43 கிலோ தரப்போரோம்.
எங்க பொண்ணு மனசும் தங்கம்.
பேரும் தங்கம் . "
அப்படின்னு அத்தினி பேரு மத்தியிலே பேசிட்டாகளாம்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பின் குறிப்பு: துளசின்னு பேரு இருந்தா என்ன செய்வாக ? ! தெரியல்லையே ?.

said...

யக்கோவ் 1கிராம் தங்கத்துக்கு கொலை கொள்ளைனு சொல்லுதீகளே கம்மலோடு காதை அறுத்துப் போனவன் கவரிங் னு தெரிஞ்சதும் கடுப்புல கொன்னுட்டானாம்.என்ன சொல்ல?
இந்த அட்சய திருதியை வந்தில்ல மக்களைப் பாடாப் படுத்துது.
இப்ப தங்கம்மாவை விட பிளாட்டினம் கேர்ள்ஸ் க்குதான் மவுசு.

said...

// தண்ணீரைவிடத் தங்கம் எத்தனை மடங்கு அடர்த்தி கூடியது?//

அவங்க அவங்க வீட்டு அம்மா அவ்வப்போது
அட்சய த்ருதியை வரும்பொழுது பொல பொல வென‌
விடும் கண்ணீரை விட அடர்த்தியாகவா இருக்கும் ?

மீனாட்சி பாட்டி.

said...

//அதிகம் இல்லை. என்ன ஒரு எழுபது கிலோ இருக்கலாம்.
எங்க வீட்டுத் தங்கமே நாந்தாங்க.
'வைரம்' ஒரு ஆறு கிலோ தேறும்.
எடை பார்க்க மெசினில் வச்சால் 'மியாவ்'ங்குது:-)//

Creativity in answering.

I really wanted to see your reply for the comment.

said...

வாங்க வல்லி.

இந்த 'தனிஷ்க்' வருமுன் சமீபத்தில் ஒரு 14 வருசம் முன்பு ஒரு 'கஸானா'
வந்தது நினைவிருக்கா?

அங்கே நகை வாங்கியபோது அவர்கள் அச்சிட்டுக் கொடுத்த விவரங்கள் இப்போ 'அந்த மூன்று பைகள்' உள்ளே இருந்துச்சுப்பா.

நம்ம மக்கள்ஸ்க்கு கொஞ்சம் சொல்லலாமுன்னுதான்.....

//சென்னையில ஏமாத்தறது சகஜம்.//

அப்பவே இப்படின்னா இப்ப எப்படி இருக்கும்!!!!

said...

வாங்க சுப்பு ரத்தினம்.

துளசியின் வெயிட் தெரியாமச் சொல்லிட்டீங்க.

நான் என்ன சொல்றேன்னா......

தராசின் ஒரு தட்டில் தங்கமா நிறைச்சுட்டு, அடுத்த தட்டுலே ஒரு 'துளசி'யை வச்சுப்பாருங்க.

என்ன இருந்தாலும் பெருமாளுக்குப் பிரியமானவள் இல்லையோ:-))))

said...

வாங்க கண்மணி.

திருநெல்வேலியிலும் 'ப்ளாட்டினம் கேர்ள்ஸ்' தானா? அடிச்சக்கை.

ஸ்டெர்லிங் ஸில்வர் போட்டுக்கிட்டா அதைப் பிளாட்டினமுன்னு நினைச்சுக் கொன்னு போட்டுருவாங்க போல(-:

said...

வாங்க மீனாட்சி பாட்டி.

//அட்சய த்ருதியை வரும்பொழுது பொல பொல வென‌
விடும் கண்ணீரை விட அடர்த்தியாகவா ...//

இந்த பாக்கியம் எனக்கில்லை பாட்டி.
நான் இந்தியாவில் இருந்த காலங்களில் 'அட்சய த்ருதியை' வரவே இல்லை (-:

அப்படி ஒன்னு இருக்குன்னு கூடத் தெரியாது.

சொன்னா நம்பணும்.ஆமா...

said...

வாங்க நன்மனம்.

எதுக்கு இந்த விபரீத ஆசையும் விஷப் 'பரிட்சை'யும்?

நான் என்ன 'பத்தவைப்பா'? ரெட் ஹீட் டெஸ்ட் செய்யறதுக்கு?

இப்படியெல்லாம் எதிர்பார்த்தால் உங்களைக் 'கோகி' கிட்டே புடிச்சுக் கொடுத்துருவேன்.:-))))

said...

'தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ' என்ற பாட்டிக்கே அர்த்தமில்லை போலிருக்கே! KDM, 22 கேரட் தங்கங்களின் தரங்களுக்கு நீங்கள் தந்துள்ள விளக்கங்கள் உபயோகமானவை. 24 கேரட்டையும் கவனிக்கலாம். 5 பவுன் சிங்கப்பூர் சங்கலியை உள்ளங்கையில் இட்டால் உருட்டி அடக்கி விடலாம், அத்தனை மெலிசு, டெய்லி யூஸ்க்கும் பெஸ்ட் என்பாள் என் தங்கை.

said...

உலோகத் தங்கத்தை விடுங்க! துளசிதளம் 'தலையில' ஊர்வலம் போகிற 'உங்க பசங்க' அமைதியான த(ந்)ங்கங்கள்! ஆனால், வந்தாரை வரவேற்றுச் செல்வோரை வழியனுப்பிப் பதிவேட்டின் பக்கத்தில் ஆனந்தத் தாண்டவமாடும் 'பெரிய கருப்பன்' இருக்காரே...! என்னா குதி என்னா குதி? இப்பதான் பார்த்தேன். சூப்பர். எத்தனை பேர் வந்து குதித்தாலும் தாங்குமாறு தளத்துக்குதான் பலமான அஸ்திவாரம்தான் இட்டிருகிறீர்களே! அதனால் கவலையில்லை:-)))!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

24 ஒன்னும் ஆகறதில்லைதாங்க.

நான் 24 வருசமாக் கழட்டாம பயன்படுத்தறேன் நம்ம தமிழ்சினிமா செண்டிமெண்ட் விசயத்தை.

ஒரே ஒருமுறை மெயில் பாக்ஸில் குனிஞ்சு பார்த்துட்டு நிமிரும்போது தகரத்தில் மாட்டி பட்னு அறுந்துருச்சு.

இங்கே அதைப் பத்தவைக்கறதுக்குள்ளே தலையால் தண்ணி குடிக்கும்படி ஆச்சு.

இங்கே வெறும் 9 கேரட்தான்.

ஆனா 20 கிலோ கேரட்ஸ் அஞ்சு வெள்ளிக்குக் கிடைக்கும்:-))))

எல்லாம் குதிரைக்குத் தீவனம்தான்.

நம்ம பசங்க கலெக்ஷன் ரொம்பக் கூடிக்கிட்டே வருது.

மதர்ஸ் டேக்கு ஒரு அஞ்சு மகள் வாங்கிவந்து கொடுத்தாள்.


அஸ்திவாரம் பலமாக் கட்டுனது நம்ம மதி.

'மரத்தடி'க்கு வேடிக்கை பார்க்கப்போன என்னை இவ்வளவுதூரம் கொண்டுவந்துவிட்ட தோழி மதி.

said...

இன்னும் கொஞ்ச நாள்ல இந்த மாதிரி பதிவெல்லாம் படிச்சுத் தான் தங்கத்தைப் பத்தி தெரிஞ்சுக்கணும்ன்னு நினைக்கிறேன் துளசிக்கா. நல்லா விலாவாரியா விளக்கிப் போட்டீங்க.

said...

வாங்க குமரன்.

இனிமேல் தங்கமரம் ஒன்னு வீட்டுவீட்டுக்கு வச்சுக்கணும்.

நம்ம ராகவன்கிட்டே கேட்டுப்பார்க்கலாம்..... கன்னு கிடைக்குமான்னு:-)))