Tuesday, May 06, 2008

அடிக் கள்ளி ...சொல்லவே இல்லே!!!!!

சொல்லாம ஒளிச்சு வைக்கிற சேதியா இது? நர்ஸரிகூட தயாராகி ஆச்சே ஆறேழு மாசம். அப்புறம் சொல்லிக்கலாமுன்னு கொஞ்சம் தள்ளிப்போட்டதுதான். இப்பத்தான் வேளையும் வந்துச்சு.

இதுலே இத்தனை வகை இருக்கான்னு பிரமிச்சுப் போனவள்தான். ஒவ்வொண்ணா வாங்கிச் சேர்க்க ஆரம்பிச்சேன். வகைக்கு ஒண்ணே ஒண்ணுன்னு வச்சுக்க முடியாது. எப்படியாவது அதுலே இருந்து இன்னொண்ணை உருவாக்கிடணும். அப்பத்தான் என் மனசு ஆறும்



கீழே உதிர்ந்த இதழ்களை விடமாட்டேனே....... ஆரம்ப காலத்தில் ( 6 மாசம் இருக்குமோ)



எப்படி இருந்த அது இப்படி ஆகிருச்சு பாருங்க!


'அம்மா கையிலே கொடுத்துப்போடுச் சின்னக்கண்ணு,
அவுங்க ஆறை நூறு ஆக்குவாங்கச் செல்லக்கண்ணு'

பச்சைநிறத்துலே இத்தனை தினுசா? இதுகளை வளர்க்க ரொம்பவும் சிரமப்படவேண்டாம். பொருத்தமான இடம் அமைஞ்சுட்டா 90 சதமானம் பிரச்சனை தீர்ந்துச்சு. தினம் தண்ணீ ஊத்தி வளர்க்கணுமுன்னு நிர்பந்தமில்லை.


இன்னும் சொல்லப்போனா..... தினம் தண்ணீ ஊத்துனீங்கன்னா சங்குதான்:-)))


நம்ம வீட்டுப்பழக்கத்தின்படி பேரை மாத்திருவோம். நான்கூடக் கேல்விப்பட்டிருக்கேன்...நம்ம பக்கம் சில வீடுகளில் வீட்டுக்கு வந்த மருமகளின் பேரை மாத்தி வச்சுருவாங்களாம். என்ன அக்கிரமம் பாருங்க. பொறந்த வீட்டுச் சம்பந்தம் அடியோட போயிரணுமா? அப்ப அங்கிருந்து வாங்குன சீர்செனத்தியெல்லாம்? திருப்பித் தந்துருவாங்களா? மக்கள் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை(-:



நான் அவ்வளவு கிராதகி இல்லை. வைக்கும் பேர் சும்மா ஒரு செல்லப்பேர்தான். பலசமயம் 'காரணப் பெயராகவும்' அமைஞ்சுரும். சிலதுக்கு ஏற்கெனவே நல்ல பேர் அமைஞ்சுருக்கும். அதை மட்டும் அப்படியே விட்டுர்றதுதான்:-) சில அதிர்ஷடம் கெட்டதுகளுக்கு இன்னும் பேர் அமையலைன்னு நினைச்சுக்கணும்.

இதுக்குப்பேர் திருப்பாச்சி. (அரிவாளைத் தீட்டிக்கிட்டு வரட்டா?)
ஒவ்வொரு இதழும் அரிவாள் போல வளைஞ்சு காத்திரமா இருக்கு பாருங்க.
இதுக்கு ஏற்கெனவே நல்ல பேரா அமைஞ்சு போச்சு. ஜெல்லி பீன்.


இது பில் குத்தி
நம்மூர்லே பழங்கால ஓட்டலுக்குப் போனா பில்லுக்குப் பணம் கொடுக்கும் சமயம், நம்ம பில்லை வாங்கி அங்கே இருக்கும் ஒரு கம்பியில் குத்தி வச்சுக்குவாங்க. அப்புறமா கல்லாக் கணக்கைச் சரிபார்க்க உதவும்.
இதுவும் அதேபோல ஒரு கம்பியில் ஒவ்வொண்ணா மாட்டி வச்சுருக்கும் டிசைனை நினைவு படுத்துது:-)

இவுங்க பேர் முத்தம்மா. அவுங்க வச்ச பெயரும் பொருத்தமாத்தான் இருக்கு. பீட்ஸ் ப்ளாண்ட்.

இதுக்கு பர்ரோஸ் டெயில்ன்னு பேர்
இது பார்த்தீங்களா? விசிறி வாழை(!)



பச்சை ரோசா


இது சேப்புக்கல்லு (சிகப்புக்கல்லு)

இது கோணியூசி
இதுக்கு இன்னும் பெயர் வைக்கலை.



இப்பச் சொன்னது எல்லாம் succulents வகை. இதுகள் எல்லாம் 12 குடும்பத்தைச் சேர்ந்தவைகளாம்.


இதுக்கும் Cactus க்கும் என்ன வித்தியாசம்?

நாளைக்கு(ம்) வகுப்பு இருக்கு. அப்பச் சொல்லறேன்.
தாவர இயல் வகுப்புக்குப் பேர் கொடுக்காதவுங்களுக்கு ரெண்டு நாளைக்கு விடுமுறை:-))


43 comments:

said...

பேர் எல்லாம் பொருத்தமா, நல்லா இருக்கு. நல்ல ரசனை உங்களுக்கு :)

said...

பில்குத்தியும்,முத்தம்மாவும் தனிச்சு தெரியறாங்க....
தசாவதாரத்தாவரங்கள்:-)))

said...

இம்புட்டும் நீங்களா வளர்த்திங்க...நல்லாருக்கு ;)

\\இது பில் குத்தி \\

பில் குத்தி பார்க்கும் போது பொருமாள் கோவில் வடை மாலை தான் ஞாபகத்துக்கு வருது ;)

\\\பச்சை ரோசா\\

ரோசா ரொம்ப அழகாக இருக்கு ;)

said...

அடி கள்ளி..சொல்லவேஇல்லையே...
ன்னு தலைப்பைப் பார்த்ததும் டிவியில் காபி விளம்பரத்தில் ஒரு சின்ன காபி கப்பை நகர்த்துவாளே அந்த விஷயம் என்று நினைத்தேன். இதில் சப்பாத்திகள்ளி கூட இல்லையே.

சகாதேவன்

said...

பெயர் பொருத்தம் சூப்பர். பச்சை ரோசா ரொம்ப நல்லா இருக்கு.

said...

எனக்குப் பிடித்தது ப்ர்ரோஸ் டெயிலும், பச்சை ரோஜாவும்!

வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் நீங்கள்தானா? (முன் ஜென்மத்தில்)

எங்க கொத்தானாரைக் காணோம் - ஹவுஸ் அரெஸ்ட்டா?:-))))

said...

நம்ம ஜிரா தொடர் வச்சது போல கள்ளியிலும் (இத்தனை) பாலா?

said...

//எங்க கொத்தானாரைக் காணோம் - ஹவுஸ் அரெஸ்ட்டா?:-))))//

நம்ம பின்னூட்டத்தை வெளியிட மாட்டேங்கறாங்க வாத்தியாரே!!

said...

எல்லா குட்டிகளும் அழகுதான். ஒரு முத்தம் என் சார்பா கொடுத்திடுங்க.

said...

வாங்க ரவிசங்கர்.

வாழ்க்கையில் எல்லாத்தையும் ரசிக்கணும் இல்லையா?

said...

வாங்க தங்ஸ்.


இது ரொம்ப 'ரேர், எக்ஸ்க்ளூசிவ்' ன்னு சொன்னாப் போதுமே எனக்கு.
ஒரே பாய்ச்சல்தான்:-)

said...

வாங்க கோபி.

ஹா....... வடையை ஞாபகப்படுத்தீங்களா?.....

ம்ம்ம்ம்ம்ம் வடை கிடைச்சால்தான் மலை(?) ஏறுவேன்.........
ம்ம்ம்ம்ம்ம்

எங்கேடா......வடை..... சீக்கிரம் படையலைப் போடுங்க.....

said...

வாங்க சகா.

இப்படி ஒரு விளம்பரம் இருக்கா? அட! இங்கே நம்மகிட்டே சன்னோ மூனோ ஒண்ணுமே இல்லை(-:

சப்பாத்திக்கள்ளீயா?

'வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம்...
சப்பாத்தி முள் கொத்தோடக் குத்திக்குச்சாம்:-)))

புதுமொழி:-)

said...

வாங்க பிரேம்ஜி.

பச்சை வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம்....

said...

வாங்க வாத்தியார் ஐயா.

பர்ரோஸ் டெயிலு அதுபாட்டுக்கு அழகா இன்னொரு தொட்டியில் அடர்த்தியா வந்துருக்கு.

பச்சை ரோசாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆகிட்டாங்க:-)

அதுகிட்டே சொன்னேன். சிரிக்குது:-)

கொத்ஸைக் காணோம்!!!

said...

வாங்க பிரபா.

இன்னும் ஏகப்பட்ட பால்கள் இருக்கு:-)

(நான்)க(பெ)ற்றது இவ்வளவுதான்.

said...

வாங்க கொத்ஸ்.

//நம்ம பின்னூட்டத்தை வெளியிட மாட்டேங்கறாங்க வாத்தியாரே!!//

ஆஹா..... இதுமாதிரி எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க?

நாக்குமேலே பல்லைப்போட்டுச் சொல்றதா?

said...

வாங்க உஷா.

ஆஹா..... முத்தமா?

உ.கு ஏதும் உண்டா? :-))))

said...

அடாடா..எத்தனை அழகான கள்ளிகள்.

எங்கள் வீட்டில் இதில் நான்கைந்துதான் உள்ளன.. :(

திருப்பாச்சியும்,பில்குத்தியும் இன்னிக்குத் தான் பார்க்குறேன்,கேள்விப்படுறேன்.

படங்களும்,கருத்துக்களும் சூப்பர் டீச்சர்.
அடுத்த வகுப்புக்கு என் பெயரையும் எழுதிக்குங்க..:)

Anonymous said...

\\இன்னும் சொல்லப்போனா..... தினம் தண்ணீ ஊத்துனீங்கன்னா சங்குதான்:-)))\\

அதையும் நாம பண்ணியாச்சுல்ல, ஒண்ண வாங்கி ரொம்ம்ம்ம்ம்ம்ப கவனமா தினமும் தண்ணி ஊத்திட்டு ஏன் வரமாட்டேங்குதுன்னு கார்டன் செண்டர்ல போய் கேட்ட உங்களமாதிரிதான் சொன்னாங்க.

said...

வணக்கம் டீச்சர்,

உள்ளேன் அம்மா.

பச்சை ரோசா ரசிகர்கள் மன்றத்துல என்னையும் சேர்த்துருங்க.:)

said...

துளசி ரொம்ப நல்லா இருக்கு வகையெல்லாமே அதோட பேரும் பொருத்தமான அழகு.. .. நான் பாட்டனி தான் படிக்கனும்ன்னி இருந்தேன்.. கைகூடாம போயிடுச்சு.. அத்னால் வகுப்புக்கு கண்டிப்பா வரேன்..

said...

துள்சி!
'மாமியார் இருக்கை' அதாவது mother-in-law's seat' அப்டீனு ஒரு காக்டஸ்
இருக்கே? அது உங்கட்ட இல்லீயா?
பேர் வெச்சவுஹளுக்கு எம்மாம் நல்லமனசு!!!!

said...

//இது பார்த்தீங்களா? விசிறி வாழை(!)
//

காக்க காக்க படத்தில் வரும்
"ஒரு ஊரில் அழகே ஒருத்தி பிறந்தவள் இவள் தானே!" என்ற சோதிகா (ஜோ வடமொழியாமே) பாட்டுல ஒரு சரணம் வரும்.

"புடவையின் தேர்ந்த மடிப்பில் விசிறி வாழைகள்"

கவிஞர் தாமரை என்ன சொல்லி இருக்காரு?னு மண்டை காஞ்சு போயிருந்தேன்.

தீர்ந்தது சந்தேகம்! :)))

ஆயிரம் பொற்காசுகள் எங்கே?னு அட்சய திரியிம் அதுவுமா கேட்ககூடாது. :p

பாருங்க எவ்ளோ கவனமா நோட் பண்ணிருக்கேன்! (சோதிகாவ இல்ல, பாடல் வரிகளை) :)

said...

//சொல்லாம ஒளிச்சு வைக்கிற சேதியா இது? நர்ஸரிகூட தயாராகி ஆச்சே ஆறேழு மாசம். அப்புறம் சொல்லிக்கலாமுன்னு கொஞ்சம் தள்ளிப்போட்டதுதான். இப்பத்தான் வேளையும் வந்துச்சு.//

:)))))))

______________

இப்படி ஒரு பின்னூட்டம் போட்டு இருந்தேன். அதைக் காணும். அதான்....

said...

வாங்க ரிஷான்.

இங்கே சொன்னது பாதி,
சொல்லாமல் விட்ட மீதி தான்:-))))

ஒருநாளைக்கு 'எண்ணி'ப்பார்க்கணும்.!

said...

வாங்க சின்ன அம்மிணி.

இங்க வந்துருந்தப்ப நேரில் ஒரு வகுப்பு எடுக்கும் வாய்ப்பைக் கொடுக்காமப்
போயிட்டீங்களே(-:

said...

வாங்க புதுவண்டு


பச்சைக்கு இத்தனை ரசிகர்களா? :-)))

இந்தப் பூவில் தேன் இருக்குமா?

said...

வாங்க கயல்விழி.

பதிவு போட்டப்ப யாரு இதைப் படிக்கபோறாங்கன்னு நினைச்சேன்.
ஆனா தாவரம் எப்படி இத்தனை பேரைக் கவர்ந்துருக்குன்னு பார்த்தால் வியப்புதான்.

நானே தோட்டவேலைன்னா ஓடி ஒளியும் ஆள்தான். இப்ப எப்படி செடிக்கூட்டம் வச்சுருக்கேன்னு பாருங்க:-)))

ஆனா முக்கால்வாசி வீட்டுக்குள் தோட்டம்தான். குளிருலே வெளியே போய் வேலை செய்ய உடம்பு வணங்காது.

said...

வாங்க நானானி.

மாமியார் இருக்கை அடுத்த பதிவில் வருது:-))))

உலகம்பூரா மாமியார்களைப் பற்றிய எண்ணம் ஒன்றேதானா?
உலகப் பெண்கள் ஒற்றுமை வாழ்க:-)

said...

வாங்க அம்பி.

பாட்டெல்லாம் ஓட்டுறதுதான் நம்ம வீட்டில்.

ஆனாலும் அநியாயத்துக்குப் பாடல்வரிகளை ஆராய்ஞ்சுருக்கீங்க!!!!
இதுக்கே ஒரு எக்ஸ்ட்ரா பாத்திரத்தில் கேசரி கொடுக்கலாமே:-)))

ஆமாம்....சல்வார் கமீஸுக்கு விசிறிவாழை சரிப்படாது.

said...

கொத்ஸ்,

நெசமாவாச் சொல்றிங்க?

said...

இது கள்ளிதானா. காக்டஸோனு பார்த்தேன்.

ரொம்ப நல்லா இருக்கு பச்சைத்தாமரை.
பச்சத்தாமரைப் பூவிலிருப்பாள்
அப்டீன்னு பாடலாமா.

சிங்கத்துகிட்டக் காண்பித்தால் ஹ்ம்ம்னு பெருமூச்சு விடுவார்.

.

said...

//இதுக்கே ஒரு எக்ஸ்ட்ரா பாத்திரத்தில் கேசரி கொடுக்கலாமே//

:)))
ஒரு பாத்ரம் தானா? :p

said...

முதல்ல என்னை மன்னித்து விடுங்க, நான் வலைப்பதிவுக்கு புதிது...நீங்க மேடி :))) னு நினைத்துட்டு இருந்தேன் மேடம்னு தெரியாம உங்க பேரை பார்த்து .... உங்க பதிவு சூப்பரா இருந்தது.

இந்த மாதிரி தாங்க எங்க அலுவலகத்துல ஒரு செடி இருந்தது எவனுமே தண்ணீர் ஊற்றவில்லை, அட பாவிகளா! செடிய வித்துட்டு இப்படி கண்டுக்காகம இருக்கரானுகலேன்னு நான் பொறுப்பா தண்ணீர் ஊற்றினேன், அப்புறம் பார்த்தா செடி காலி ஆகிடுச்சு..இது வரைக்கும் அது புரியாம இருந்தது...செடி வைத்தவங்க வந்து எப்படி இது இந்த மாதிரி செத்து போச்சுன்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தாங்க... மவனே நான் வாயே திறக்கலையே ....

said...

//பேர் எல்லாம் பொருத்தமா, நல்லா இருக்கு. நல்ல ரசனை உங்களுக்கு :)//

ரிப்ப்பீட்டேய்.


//இன்னும் சொல்லப்போனா..... தினம் தண்ணீ ஊத்துனீங்கன்னா சங்குதான்:-)))//
பக்கத்து வீட்டுல ஊருக்குப் போறோம்னு ஒரு வாரம் செடிகளுக்குத் தண்ணி ஊத்த சொன்னாங்க. கள்ளிக்குத் தாராளமா தண்ணி ஊத்துனேன். சங்கு ஊதீட்டாங்களா என்னானு தெரியலை.
:((

said...

வாங்க வல்லி..

அடடா..... பெருமூச்சா?

சிங்கம் முழங்குமுன்னு அங்கே சொல்லிக்கிட்டு இருந்தாங்க:-)

காக்டெஸ் என்ற பேரிலேயே எல்லாத்தையும் அடைச்சுருவோமா?

ரொம்ப நாளைக்கு முன்னாலேயே
அழகான தமிழ்சொல் இருக்க ஆங்கிலம் ஏன்னு கேட்டார்!!!

said...

என்ன அம்பி,

பாத்திரம் போறாதா?

அப்ப ஆண்டாளம்மா அழகனுக்குக் கொடுத்ததுபோல் 100 தடா?

said...

வாங்க கிரி.

கரகாட்டக்காரனைப் பார்த்தவுடனே வலைக்குப் புதுசுன்னு தெரிஞ்சுருச்சு:-)))

said...

வாங்க கைப்புள்ளெ,

இன்னும் பக்கத்துவூட்டுக்கு பேச்சுவரத்து உண்டா?

உண்டானால் சங்கு ஊதலை:-)))

said...

//கரகாட்டக்காரனைப் பார்த்தவுடனே வலைக்குப் புதுசுன்னு தெரிஞ்சுருச்சு:-)))//

மொச பிடிக்குற நாய் மூஞ்சிய பார்த்தாலே தெரியும்னு சொல்லுவாங்க.. அதெப்படிங்க அவ்வளவு உறுதியா கண்டு பிடித்தீங்க...அந்த அளவுக்கா கேவலமா எழுதி இருந்தேன்.

தனியா ஒரு ரூம்ல உட்காந்தும் யோசித்து பார்த்தேன் ஒண்ணும் பிடிபடல :))))

தயவு செய்து சொல்லுங்க.. நானும் கொஞ்சம் தெரிஞ்சுக்கிறேன்...தவறு இருந்தா திருத்திக்கிறேன்.. :D அனுபவஸ்தங்க நீங்க, பதிவுலையும் வயதிலையும் ..பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரின்னு கேட்டுக்கிறேன் :)))

said...

கிரி,

வலை உலகில் இவ்வளவு பணிவு, பதுசு (பதவிசு)எல்லாம் ஆகாது.

அம்புட்டுதான் சொல்ல முடியும்.:-))))


கொஞ்சநாளில் தேறிடுவீங்கன்னு பட்சி சொல்லுது:-)

said...

//வலை உலகில் இவ்வளவு பணிவு, பதுசு (பதவிசு)எல்லாம் ஆகாது.//

ஹா ஹா ஹா தெரியும்ங்க ஆனா என்னால மாற்றி கொள்ள முடியலை. அப்படியே பழகி விட்டேன். இது போலி பணிவு இல்லை ;) அந்த பதவிசு தான் என்னன்னு தெரியல.கேள்வி பட்டு இருக்கேன் ஆனால் அர்த்தம் தெரியவில்லை.

//கொஞ்சநாளில் தேறிடுவீங்கன்னு பட்சி சொல்லுது:-)//

எனக்கு அப்படி தோன்றவில்லைங்க.. :D நம்ம வசந்தம் ரவி மனசாட்சி ய கழட்டி வைத்துட்டு வந்தா தான் வலைப்பதிவில குப்பை கொட்ட முடியும்னு சொன்னாரு? அது எனக்கு ரொம்ப சிரமம், நான் என் வலைப்பதிவுக்கே மனசாட்சி னு தான் பேர் வைத்து இருக்கேன், ஹீ ஹீ அதனால வாய்ப்பே இல்லைன்னு நினைக்கிறேன். எது எப்படி இருந்தாலும் நான் தொடர்ந்து இப்படியே தான் எழுத போறேன். நீங்க வந்து நிறை குறைகளை சொல்லிட்டு போங்க. உங்க அறிவுரைக்கு ;) ரொம்ப நன்றி.