Saturday, May 10, 2008

இதெல்லாம் நம்ம ஜோடீஸ்:-))))

இந்த மாசம் ஜோடி போட்டுக்கலாமுன்னு சொன்னதும் பஹூத் குஷ் ஹுவா:-))))



போனவாரம் நம்ம நானானியுடன் தொலைபேசுனப்பவும் ஜோடியைக் காட்டுவது எப்படி நமக்குக் கைவந்த கலைன்னு சொல்லிக் கலாய்ச்சோம்.


நைஃப் & ஃபோர்க், கப் & சாஸர், பாத்திரம் பண்டமுன்னு எக்கச்சக்கமா இருக்கு. நமக்கென்ன மனக்கவலைன்னு அஸால்டா இருந்தேன்.



நம்மக் கைப்புள்ளெ கடுகு உளுந்துன்னு முந்திக்கிட்டதைப் பார்த்ததும், 'எங்க பேச்சை ஒட்டுக்கேட்டுட்டாரோ'ன்னு ஒரு சந்தேகம்:-)))))( ச்சும்மா....கைப்புள்ளெ கோச்சுக்காதீங்கப்பா)


முதல் படம் போட்டிக்கு.



ஜெயிக்க வைக்கணுமுன்னு வேண்டுதலோடச் சாமியைப் போட்டுருக்கு.


என்ன வேண்டுதலுன்னு அப்பாலே சொல்றேன். சாமிக் குத்தம் வந்துறப்போகுது. பார்த்துக்குங்க. அம்புட்டுதான் சொல்வேன்:-)))


'சோடி'க்க எடுத்த மற்ற படங்கள் எல்லாம் வழக்கம்போல் உங்கள் பார்வைக்கு.

நல்லாப் பழுத்த ஜோடி.

இதுலே உள்ள பெண்மான் வரைஞ்ச ஜோடிப் பேரிக்காய் கீழே.


யானை இல்லாத போட்டிப்படமா? ஊஹூம்......



இந்த மரங்களுக்குப் பெயர் 'கேபேஜ் ட்ரீ' நியூஸியின் நேட்டிவ் மரங்கள் இவை. நம்மத் தோட்டத்தில் இருந்தாலும் வெட்டி எல்லாம் கடாச முடியாது.

குற்றம் பதிவாகிரும். கோர்ட், கேஸ்ன்னு அலைய முடியாது.


தேவலோகத்தில் அன்றலர்ந்த தாமரை (வாடா)மலர்கள்.



சிண்டெரெல்லாவின் தங்கக் காலணி:-) உண்மையான ஜோடி இதுதான். ஒண்ணு இல்லேன்னா மற்ற ஒண்ணு(ம்) இல்லை!
நீயின்றி நானில்லை கண்ணே.......



இந்த கப் & சாஸர்லே ரெண்டு அன்னங்கள் இழைஞ்சு இருக்கறதைக் கவனிச்சீங்களா? ஒரு பதிவுலக நண்பரின் விசேஷ அன்பளிப்பு.
வெட்டி(யா)த் தின்ன
வெட்டாமத் தின்ன
இந்தச் சோடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?



42 comments:

said...

அதான பாத்தேன்! யானையில்லாத போட்டியா? நான் நிஜ வாத்து என்றால்
உங்க வாத்து கப்-அன்-சாஸரில் நீந்துதே!
கரண்டியையும் கத்தியையும் க்ராஸில் வைத்தால் வெட்டியாக் கூட ஏதும் தின்ன முடியாதே?..காரணம் 'பஸ்' என்று அர்த்தமில்லையோ? டீச்சர்!
நாம் கலாச்சதையெல்லாம் போட்டுடீங்க!
வாழ்த்துக்கள்.

said...

எல்லா இரட்டைகளும் நல்லா இருக்கு ?

அந்த பாதுகை இராமரோட பாதுகையா ?

said...

ஆஹா..படங்கள்...வாவ் டீச்சர்..
அதிலும் முதல் படம்...உள்ளம் கொள்ளை போகுதே :)

இன்னும் கொஞ்சம் நகர்த்தி எடுத்திருந்தீங்கன்னா அந்த சிவப்புத் தூணுக்கும் ஒரு சேர்ந்திருக்கும் டீச்சர்..!

பரிசு கிடைச்சவுடனே ஸ்டுடண்ட்ஸ்க்கு ட்ரீட் தந்துடணும்..இப்பவே சொல்லிட்டேன் :)

said...

உங்க கிட்ட இருக்க ஜோடியெல்லாம் போட பதிவு தாங்குமா.. போதும் போதும் இதுபோதும்.. அன்னம் சூப்பர்...

said...

துளசி மேடம்! முதல் படம் சூப்பர். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

said...

அக்கா.,. படங்கள் அருமை:)
(இதும் மாம்ஸ் எடுத்துக்கொடுத்தது தானே:P)

அப்புறம் அந்த பழுத்த ஜோடிகளுக்கு நம்முடைய வாழ்த்துக்களையும் தெரிவிச்சுடுங்களேன்:)

said...

சரியான சரி சோடி
ஆனை மேல அம்பாரி
கணக்கா வழக்கா கடல் போல் ஏராளம்....

Anonymous said...

ராதாகிருஷ்ணர் கிட்ட போட்டியில கெலிக்க வைக்க சொல்லிதான வேண்டிக்கிட்டீங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள்

said...

வணக்கம் டீச்சர்.

இராதாகிருஷ்ணர் அருமை.வேண்டுதல் மந்திரம் 'PIT வெற்றி நமக்கே, PIT வெற்றி நமக்கே' தனே.:))))).

சும்மா சொன்னேன் டிச்சர் :-).படம் நல்லா இருக்கு.அன்னம் ஸாசர் அழகா இருக்கு.வாழ்த்துகள்.

said...

சாமி துணையோட, யானை பலத்தோட கோதாவுல இறங்கீட்டீங்களா...வாழ்த்துக்கள்

said...

முதல் படம் கலக்கல்....வாழ்த்துக்கள் டீச்சர் ;))

\\பரிசு கிடைச்சவுடனே ஸ்டுடண்ட்ஸ்க்கு ட்ரீட் தந்துடணும்..இப்பவே சொல்லிட்டேன் :)\\

ரீப்பிட்டே...

said...

துளசி,
ராதா கிருஷ்ணர் அலங்காரமும் தீமும் சூப்பர்தான்.
ஆனா எனக்குப் பிடிச்சது மாமா மாமி ஊஞ்சல் ஜோடி. ஜோடின்னா இவங்கதான். கையைப் பிடிச்சிட்டு இருக்கிற போஸ் அழகோ அழகு.
யானை தாய்லாண்தா?
அலங்காரம் செய்தே விக்கிறாங்களா.
என்னா அருமையா இருக்கும்மா!
வெற்றிக்கு வாழ்த்துகள்.

said...

//தேவலோகத்தில் அன்றலர்ந்த தாமரை (வாடா)மலர்கள்.///

நல்லா இருக்கு :)))

said...

வாங்க நானானி.

இந்த எட்டீக்(கட்டு) எல்லாம் என்னாமாத் தெரியுது!!!!!

இங்கே கத்தியையும் முள்கரண்டியையும் = வைச்சுட்டோமுன்னா 'கதம் கதம்'தான்:-)))))

அப்புறம் வாயைத் திறக்க முடியாது.

said...

வாங்க கோவியாரே.

ராமனா? சரியாப்போச்சு..... எந்த யுகத்தில் இருக்கீங்க?

இது சீதையின் பாதுகை:-)

said...

வாங்க ரிஷான்.

கிராப் பண்ணறேன்னு சம்மர் அடிச்சுட்டேன். அதான் ஒரு தூண் காலி:-)))))

வெற்றி என்னப்பா வெற்றி?

நானெல்லாம் கலந்துக்கிட்டாத்தானே உங்களுக்கெல்லாம் பரிசு!!!

கூட்டம் சேரணுமா இல்லையா? :-))))

said...

வாங்க கயல்விழி.

அன்னம் ஜப்ப்பானிலே செஞ்சு, தைவான்காரரால் நியூசிக்கு அனுப்பப்பட்டது. அழகா இருக்கா?
இந்த செட்டுலே 'ஜக்' இன்னும் கொள்ளை அழகு.

அன்ன(த்தின்)வாயில் தேனீர்::-)

said...

வாங்க பிரேம்ஜி.

நானெல்லாம் உ(ஒ)ப்புக்குச் சப்பாணிதான் இந்த ஆட்டத்தில்:-)

said...

வாங்க ரசிகன்.

எதுக்கெடுத்தாலும் மாம்ஸ்?

ஊஹூம்.......

'அன்லெஸ் அதர்வைஸ் ஸ்டேட்டட்'
டிஸ்கி கொடுக்கணுமா?

said...

வாங்க கொத்ஸ்.

நலமா?

ச்சும்மாத்தான் கேக்கறேன்......

கொஞ்ச நேரம் தூங்கிட்டு வாங்க.

said...

வாங்க சின்ன அம்மிணி.

வேண்டுதல் என்னென்ன சொன்னா.....

ஆட்டோ வந்துருமுன்னு பயம்தான்:-)

said...

வாங்க நியூபீ.

அன்னத்தைப் பிடிக்காத வண்டு உண்டா? :-))))

said...

வாங்க நெல்லை சிவா.

பலம் வேண்டித்தானே இருக்கு?

தனிச்சுப் போராட முடியாதுப்பா:-)))

said...

வாங்க கோபி.

வேண்டுதல் தெரியாமத் 'தலை' விடுறீங்க.

கவனம். அவ்ளோதான் இப்பச் சொல்ல முடியும்:-)

said...

வாங்க வல்லி.

இங்கே கோயிலில் இவுங்க ரெண்டுபேரும் கிருஷ்ண சைதன்யாவும், நித்ய பரமானந்தாவும்தான்.

Gaura Nitai

நம்ம தோழியும் தோழனும்தான் ஊஞ்சலில். தோழி இந்த வயசிலும் பெயிண்டிங் ஹாபியாப் பண்ணுறாங்க.
அந்த பேரிக்காய் அவுங்க வரைஞ்சதுதான். அவருக்கு இப்போதைய ஹாபி சுடொகு.


யானை இங்கே வாங்குனதுதாம்ப்பா.

எல்லாப் பெருமையும் சீனருக்கே:-)

said...

வாங்க ஆயில்யன்.

தாமரையில் லக்ஷ்மி உக்கார்ந்துத் தங்கக்காசு கொட்டுறது கண்ணுக்குத் தெரியுதா?

எல்லாம் அக்ஷ்ய திருதியை 'தேங்காயின்' மகிமை:-)

said...

அத்தனை படங்களும் super.எது முந்தும் என உங்க பதிவிலேயே ஒரு race விடலாம் போலிருக்கே!

"வெட்டி(யா) திங்க"
"வெட்டாம திங்க"

சிரிப்புத் தாங்கலே!

said...

அன்னம் கொள்ளை அழகு. சீதா பாதுகை போட்டிக்கு வைத்துஇருக்கலாம்

said...

வாங்க ராமலக்ஷ்மி.

சிரிப்பு உடலுக்கு நல்லது:-))))

said...

வாங்க முரளிகண்ணன்.

சீதாக்களுக்கே 33% இன்னும் கிடைக்கலை. இதுலே பாதுகைக்கு ஏது இடம்?

அன்னம் நேரில் பார்த்தால் கொள்ளை அழகுதான். படத்தில் அதன் அழகை ஜஸ்டிஃபை பண்ணமுடியலை.

said...

அன்னமும்,சாமி படமும் சூப்பர்..

said...

துளசி,

ராதை - கிருஷ்ணன் - முதல் பரிசு வாங்க எழுந்து வந்துருவாங்க போல இருக்கு

மத்த படங்களும் சூப்பர்

யானை - அன்னம் - தோழர்,தோழி
பாதுகை பேரிக்கா - அய்யோ கலக்கறீங்க போங்க

பின்னாலே ஓடி வருவாங்க எல்லாருமே

said...

வாங்க தங்ஸ்.

சாமி எப்பவுமே சூப்பர்தான்:-))))

said...

வாங்க செல்வி.

படம் பார்த்துக்கிட்டேத் தொடுக்குறீங்களா?

சரத்தைச் சொன்னேன்:-)

said...

ஒரு யானையோ பூனையோ கிடைக்காதா என்ன? ன்னு சொன்னீங்க! எப்படியோ யானை கிடைச்சிருச்சு.பூனை கிடைக்கிலீங்களா?

said...

வாங்க நட்டு.

யானைகளை ஜோடியா நிக்கவச்சவளுக்குப் பூனைகளை ஒரு ஃப்ரேமில் நிக்கவைக்க முடியலையே.....

க்ளிக்கறதுக்குள்ளே இங்கேயும் அங்கேயுமாப் போகுதுங்க ரெண்டும்.

அதான்..... நோ பூனைஸ்

said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......

said...

வாங்க செல்வா.

என்ன சீற்றம்?

சிங்கத்துக்குச் சிக்கு எடுத்துட்டேனா? ;-))))

said...

உங்களை ஏன் எல்லோரும் டீச்சர் என்று அழைக்கிறார்கள் எனப் புது வரவான எனக்கு இப்போது புரிகிறது. வீட்டுக்குள்ளேயே எப்படியெல்லாம் variety-ஆக (குறிப்பாக kitchen-னிலும் கூட) எப்படியெல்லாம் ஜோடி சேர்க்கலாம் என்பதற்கு உங்கள் பதிவு inspiration-ஆக இருந்தது. நானும் ஜோடிக்காக ஒரு ஜோடி பதிவிட்டிருக்கிறேன். நேரம் கிடைக்கையிலே ஒரு எட்டு வந்து, முடிந்தால் மோதிரக் குட்டும் வைக்கிறது!!!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

மோதிரக்கையால் -----வச்சாச்சு.

ஆனா குட்டு இல்லைப்பா... ஷொட்டு:-)))

said...

வந்தமைக்கும் வைத்த ஷொட்டுக்கும் நன்றிகள் பல! ஜோடிக்காக நானிட்ட ஒரு ஜோடி பதிவுகளிலே போட்டிப் படங்கள் கொண்ட முந்தைய பதிவை நீங்க தூக்கிட்டீங்க போலிருக்கே:-))))! வீட்டு(குள்ளி)லே காய்த்த பலாக்களுடன் வெளியிலே கிடைத்த கனிகளையும் அதில் படைத்திருக்கிறேன். மும்மூர்த்திகளில் ஒருவரது ஜோடியை உம் பதிவில் தரிசித்து மற்றவரை ஜோடியுடன் என் பதிவில் தரிசிக்கத் தந்திருக்கிறேன். உங்க இஷ்ட விலங்குகளும் ஒரு ஜோடி இருக்கிறது madam!

said...

வந்தமைக்கும் வைத்த ஷொட்டுக்கும் நன்றிகள் பல! ஜோடிக்காக நானிட்ட ஒரு ஜோடி பதிவுகளிலே போட்டிப் படங்கள் கொண்ட முந்தைய பதிவை நீங்க தூக்கிட்டீங்க போலிருக்கே:-))))! வீட்டு(குள்ளி)லே காய்த்த பலாக்களுடன் வெளியிலே கிடைத்த கனிகளையும் அதில் படைத்திருக்கிறேன். மும்மூர்த்திகளில் ஒருவரது ஜோடியை உம் பதிவில் தரிசித்து மற்றவரை ஜோடியுடன் என் பதிவில் தரிசிக்கத் தந்திருக்கிறேன். உங்க இஷ்ட விலங்குகளும் ஒரு ஜோடி இருக்கிறது madam!