Friday, December 07, 2007

தீபா....ஹோம்வொர்க் செஞ்சுட்டேன்......

தீபா,

நீங்க ''மேக்ரோ' சொன்னது இதுதான்னு புரிஞ்சுக்கிட்டு(????) கிட்டே அதாவது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பக்கிட்ட்டே போய் கிளிக்குனது இவையெல்லாம்.
எதாவது தேறுமா, அட்லீஸ்ட் பாஸ் மார்க்கையாவது தொடுவேனான்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க.
ஹோம்வொர்க் செஞ்சுட்டேன்:-))))
நாளைக்கு யாரும் நான் PIT வகுப்புக்கே வந்ததில்லைன்னு சொல்லிறக்கூடாது பாருங்க......
அதான்....
வீட்டுலே ஒண்ணையும் விட்டுவைக்கலை. தோசையைக்கூடச் 'சுட்டுட்டேன்':-)))))

47 comments:

said...

அம்மா,

படங்கெளெல்லாம் மிகத்துல்லியமாக இருக்கு, கேமரா கண்ணுக்கு திருஷ்டி துத்திப் போடனும். எடுத்தவங்களுக்கு அல்ல.
:)

said...

வாங்க கோவியாரே.

துத்திப் போட்டாச்சு;-))))

said...

மூணாவது படம் அருமை

said...

அம்மா,

தலைப்பு 'சரோஜா சாமான் நிக்கலோ' டைப்பில் இருக்கு.

புரியல்ல...தயவுசெய்து விளக்கவும்.
:)

said...

பூக்களும் நல்லாயிருக்கு; எடுத்த விதமும் நல்லா இருக்கு.

said...

வாங்க இளா.

அப்ப.....ஒன்னு தேறுச்சா?:-)))

said...

கோவியாரே,

நீங்க புகைப்பட வகுப்புக்கு வராம மட்டம் போடுற விஷயம் இப்பத் தெரிஞ்சுபோச்சு:-))))

said...

வாங்க செல்லி.

அங்கேயும் இந்த முறை நல்ல மழைன்னு நம்ம நண்பர் குடும்பம் ( from Moorooka)சொன்னாங்களே.

தோட்டத்துலே பூக்கள் கொழிக்கும் நேரமல்லவா?

உங்க படங்களை இன்னும் காணோமே.....

said...

Rose looks better.
Peacock feather lost in clour.. too old?

said...

உங்க ஊர் தோசை ஏன் பூண்டு மாதிரி இருக்கு பாட்டி

said...

வாங்க குமார்.

மயிலிறகுக்கு லைட்டிங் சரியில்லை.

மயில் ஓல்ட் ஆனபிறகு செத்துப்போச்சு. அதோட இறகுதான் அது.

உள்ளூரில் வாங்குனது. இங்கே இதையெல்லாம் கொண்டுவந்தால் ஏர்ப்போர்ட்லே பிடிச்சுக்குவாங்க(-:

said...

வாப்பா பேரா.

வெங்காய தோசை மாதிரி இது பூண்டு தோசை:-))))

ச்சும்மா...... இது நம்ம வீட்டுலே விளைஞ்சது. சந்தடிச்சாக்குலே இதையும் சுட்டுப்போட்டேன்;-))))

said...

//அங்கேயும் இந்த முறை நல்ல மழைன்னு நம்ம நண்பர் குடும்பம் ( from Moorooka)சொன்னாங்களே.

தோட்டத்துலே பூக்கள் கொழிக்கும் நேரமல்லவா?//
ஆமாம்.
மல்லிகை, ரோஜா, நந்தியாவட்டை, அடுக்குமல்லி என்க வீட்டில தினமும் இப்போ பூக்கிறது.

said...

மரம்,செடி,கொடி,புல்,பூண்டு என்று ஒரு பேச்சுக்கு சொல்வார்கள். சைக்கிள் கேப்-பிலே பூண்டையும் சுட்டுபோட்டீங்களே! பலே!(சுட்ட பூண்டு எனக்கு மிகவும் பிடிக்குமாக்கும்!)அழகழகான மலர்களும் சூப்பர் காமிராவுமிருந்தால் எந்தக் கை க்ளிக்கினாலும் இப்படித்தான் சூப்பராக வரும்.துள்சி!
ஆனாலும் நன்றாகவே சுட்டிருக்கிறீர்கள்!
ஆரஞ்சு ரோஸ் அழகு.வெற்றிக்கு வாழ்த்துக்கள்!!

said...

அக்கா
நல்லா இருக்கு படமெல்லாம். கீழே தேதி தெரியுதே, அத எடுத்து விடுங்களேன்.

said...

அருமையான படங்கள். பார்க்க பார்க்க அலுக்காத மலர்கள்.


எனது லேட்டஸ்ட் பதிவு தாயன்பு பார்க்க vaanga.

said...

4, 5 நல்லாயிருக்கு

said...

சூப்பரு எல்லா படங்களும்.. ஆமா துளசி அக்கா அது என்ன கடைசியா ரெண்டு காஞ்சிப்போன வெங்காயம்(மாதிரி)
இதுல ஏதாவது உள்குத்து இருக்குதா?..ஹிஹி..:)

said...

urs very excellent blog

by
www.madhubalan.co.cc

said...

குட்-கேர்ள்... இப்படி இல்லையா இருக்கணும்.. சும்ம வந்து அட்டெண்டென்ஸ் மட்டும் வச்சு நிறைய பேர் எச்கேப்பாயிடுறாங்க.. அவங்களுக்கெல்லாம் நீங்க தான் கிளாஸ்-லீடர்... சரியா...
... ஹ்ம்ம்.. எங்கே ஹோம்வர்க்கை காட்டுங்க....ஆங்.. ...ஹ்ம்ம்.. வாவ்்... ஓ.. ஆட.. ஆஹா.... அட்ராசக்கை...(கைய்யை பின்னாடி வச்சிகிட்டு... ஹ்ம்)... மேலே சொன்ன எல்லாமே... in order

ஆங் :-
மயில் ரக்கைக்கு ஏதோ trainee மொட்டை அடிக்க தெரியாம மொட்டை அடிச்ச மாதிரி இருக்கே...இல்லே நீங்க ரொம்ப கிட்டெ போனதிலெ பயத்திலே எல்லாம் கொட்டி போச்சா ? ? ?

ஹ்ம்ம :-
நல்லா இருக்கு

வாவ்்:-
சூப்பர்ங்கக்கா... நல்ல perspective. Ligting கூட கச்சிதமா இருக்கு ( 8 /10)

ஓ:-
இன்ன்னும் கொஞ்சம் angular ஆ எடுத்திருக்கலாமோ ? ? ?

ஆட:-
Totally unfurled, partially unfurled and waiting to be unfurled ன்னு இருக்கிர எல்லா இதழ்களையும் சரியா காமிச்சிருக்கீங்க.. (6/10)

ஆஹா :
perspective லே வித்திய்சம் இல்லைன்னாலும்.. this is much better for presentation.. good (7/10)

அட்ராசக்கை :-
நிஜமவே.. அசத்திட்டீங்க போங்க.. . அட அட.. என்ன ஒரு attention to detail இந்த படத்திலே... யக்கோவ்... எங்கேயோ... போயிட்டீங்க... (9/10)
.... (10/10.. எல்லாம் குடுக்க மாட்டேன்.. ஓகேவா.. இது தான் ஹைய்யெஸ்ட்)

said...

டீச்சர், முதலாவதும் மூன்றாவதும் சூப்பர்.

பூக்கள் சரி.

வெள்ளைப்பூண்டு?(கடைசிப் படம்)

said...

நடுவர் குழுவில் 'தேறாதவர்கள்' இல்லையென்றால்..கண்டிப்பாக 'ஒன்றாவது' தேறும் :)

பொறுமையா எடுத்துருக்கீங்க...வெற்றிக்கு வாழ்த்துக்கள்!!

said...

படத்தை எல்லாம் சுட்டுக்கிட்டேன். :))

said...

படங்கள் அருமை துளசி மேடம்..

said...

Thulasi Madam,

Superb pictures !

தாங்கள் எடுத்த புகைப்படங்களா இவை ? :)

said...

எல்லாம் நல்ல ஃபோட்டோ மாதிரியே இருக்கு.

said...

வாங்க நானானி.

எந்தக் கை கிளிக்கினாலும்.....?

நடுக்கமுள்ள கையானாலுமா? :-)))

அழகான மலர்கள் இருக்கு. சூப்பர் கேமெராவுக்குத்தான் இப்ப அடி போட்டுக்கிட்டு இருக்கேன்:-)))


இங்கே சுட்டப்பூண்டுவைப் பொடிப்பொடியா அரிஞ்சு ஒரு சின்னமலை போல குவியலாக்கி( நம்மூர் பொரிகடலைக் கடை ஞாபகம் வருது) மார்க்கெட்லே விக்கறாங்க.

வந்து சேருங்க. கடையையே உங்களுக்கு வாங்கிறலாம்:-))))

said...

வாங்க ஆனந்த்.


தேதி எல்லாம் எனக்கு டயரிக்குறிப்புதான். இல்லேன்னா எப்பன்னு மறந்துருவேனே(-:

said...

வாங்க புதுகைத் தென்றல்.

உங்க வீட்டுக்குப் போயிட்டுவந்தேன்:-)

said...

வாங்க தேவ்.

ரெண்டாவது தேறுச்சே:-))))

said...

வாங்க ரசிகன்.

நமக்கு எதுக்குப்பா இந்த உ & வெ. கு??????

(அடுத்த பதிவுக்குத் தலைப்புக் கிடைச்சிருச்சு.

'அக்கா ஒரு அப்பாவி')

அதான் சமையல் பண்ணும்ப்போது கண்ணில் படும் முளைச்சு வர்ற சமாச்சாரங்களை உடனே ஒரு தொட்டியில் நட்டு வச்சுருவேன். இப்படி நட்ட பூண்டின் அறுவடை நாள் படம் அது:-)))))

said...

வாங்க மதுபாலன்.

முதல்முறை வந்துருக்கீங்க.
வருகைக்கு நன்றி.

காவிரிக்கரையா? சந்தோஷம்.

மீண்டும் மீண்டும் வருக:-)))

said...

வாங்க சிங். செயகுமார்.

அடடா....எவ்வளோ நாளாச்சு பார்த்து!!!!!
நலமா? சிங்கை திரும்பியாச்சா?

said...

வாங்க தீபா.

முதலில் ஹோம்வொர்க்கைப் பார்த்து மதிப்பெண் போட்டதுக்கு நன்றி.

இப்ப எங்களுக்கு சம்மர்னு சொல்றாங்க. அதான் மயிலிறகுக்குச் சம்மர் கட் அடிச்சிருக்கு:-)))

உங்க பின்னூட்டத்தைக் காமிச்சு ஒரு (இன்னும்) நல்ல கேமெராவுக்கு அடி போட்டுக்கிட்டு இருக்கேன்:-)))))

நல்லாப் படிக்கிற புள்ளைக்கு வசதி செஞ்சு கொடுக்கணுமா இல்லையா? :-)))

said...

வாங்க ஆடுமாடு.

அது என் கையால் நட்டு விளைஞ்சதாச்சேன்னு ஒரு அபிமானம்தான்:-))))

said...

வாங்க தஞ்சாவூரான்.

இது போட்டிக்கு அனுப்புன பதிவு இல்லீங்க.

ஹோம்வொர்க்தான்:-))))

said...

வாங்க கொத்ஸ்.

வெறிக்கிடையிலும் சுட நேரம் இருந்துச்சா? :-))))

said...

வாங்க பாசமலர்.

மலருக்கு மலர் நன்றி சொல்லிக்குதாமே!!!

said...

வாங்க (நட்சத்திர) பாலா.

இதானே வேணாங்கறது?
பின்னே? மண்டபத்தில் யாரோ வந்து எடுத்துக்கொடுத்ததா? :-))))

said...

வாங்க உமையணன்.

//எல்லாம் நல்ல ஃபோட்டோ மாதிரியே இருக்கு.//

மாதிரியே...?

சுத்தம்:-)

said...

துள்சி! நடுங்குற கையானால் என்ன..
ட்ரைபாட் வாங்கி மாட்டிக்கொண்டால்
போச்சு!
ஹையோ!!!சுட்ட பூண்டு பொரிகடலை மாதிரியா..? வாசம் மூக்கைத் துளைக்குதே! ஸ்விஸ் ஏரில் எனக்கு துண்டு போட்டு ஒரு இடம் பிடிக்கவும்.
ஸ்பான்ஸ்ர்டு பை துள்சிம்மா!!!

said...

நானானி,
ஸ்விஸ் ஏர்லே உங்களுக்குத் துண்டுப்போட ஆசைதான்.

ஆனா ஸ்விஸ் ஏர் இங்கு வர்றதில்லையேஏஏஏஏஏஏஏஏ( நடிகர் திலகம் ஸ்டைலில் படிக்கவும்)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உங்களுக்கு ஒத்துக்குமா.......
இல்லையேஏஏஏஏஏஏஏஏ

said...

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ரொம்பப் பிடிக்கும்.

said...

மேடம்,

புகைப்படக் கலையில் எனக்கு அறிவு கிடையாது. ஆனால் உங்க புகைப்படங்கள் மிக நன்றாக இருக்கின்றன என்று மட்டும் சம்பிரதாயமாக இல்லாமல் மனப் பூர்வமாகவே சொல்ல முடிகிறது.

என் பையனுக்கு உங்கதளம் மிகவும் பிடிக்கும். "அய் யானை" என்று குதிக்க ஆரம்பித்து, "பூனை, பூ, பாப்பா, நாய், மரம் . . ." என்று சொல்லிக் கொண்டே வருவான். இயற்கையாக அவனுக்குத் தெரிந்த களங்கமில்லாத அவனுடைய உலக விஷயங்கள் இருக்கிறதல்லவா?

அவன் வேறு எதற்காவது அடம் பிடிக்கும் சமயங்களில் இதனைக் காட்டி அடக்க முடியாமல் இணைய தள இணைப்பு பெப்பே காட்டும் தருணங்கள் எனக்கு மிகவும் சோதனையானவை.

said...

வாங்க ரத்னேஷ் அப்பா.

குழந்தையும் தெய்வமும் பூனையும் கொண்டாடும் இடத்திலேன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க. அவுங்க உலகமே தனி.

நம்ம பதிவில் இருக்கும் நர்த்த(க)கி யானையைக் காமிச்சீங்களா?

பூனையை வச்சு ஒரு விஷயம் இருக்குங்க. யாராவது புதுசா நம்ம வீட்டுக்கு வராங்கன்னு வையுங்க. அவுங்க நம்பத் தகுந்தவங்களான்னு பார்க்க ஒரு பூனை ஜோசியம் இருக்காம்.

அவுங்க பக்கத்திலே வந்து பூனை நின்னால் நம்பலாம். இல்லைன்னா ஏதோ நெகெடிவ் வைப்ஸ் இருக்குமாம்.

இது எப்படி இருக்கு?

நம்ம வீட்டில் நடந்த வலைப்பதிவர் மாநாட்டில் நம்ம பூனை நடுநாயகமா வந்து உக்கார்ந்துச்சு:-))))

said...

//வீட்டுலே ஒண்ணையும் விட்டுவைக்கலை. தோசையைக்கூடச் 'சுட்டுட்டேன்':-)))))
//
Yenga andha Dosai???!?!?!!?

Parcel Anuppavum

said...

வாங்க மங்களூர் சிவா.

அனுப்பிருவேன். needle gone ஆனா நான் பொறுப்பல்ல:-)))