Showing posts with label PIT. Show all posts
Showing posts with label PIT. Show all posts

Tuesday, February 10, 2009

ஜலக்ரீடை

குளிக்கும்போது பார்க்கக்கூடாதுதான். ஆனா நாமென்ன அவுங்க பாத்ரூமிலயாப் போய் எட்டிப் பார்த்தோம். நம்ம கண்ணுமுன்னாலேயே தண்ணீரில் ஆடி அட்டகாசம் பண்ணுனா ......எப்படிங்க?

இன்னும் நல்லத் தெளிவா எடுக்கலாமுன்னா...... நடுவிலே ஒரு டபுள் க்ளேஸ்டு விண்டோ...நந்தி போல(-: மேலும் வெளிப்புறம் 'படப்பிடிப்பு'க்குன்னு போனால்..... நடிகநடிகையர்கள் 'பறந்து' போயிருவாங்க.



படப்பிடிப்புக்குன்னு நான் தயாரா இல்லாத சமயம். அடுக்களை ஜன்னலில் கிடைச்ச காட்சி. ரெண்டு நிமிசம்தான் என்றாலுமே ஸ்டெடியாக் கேமெராவைப் பிடிக்கவும் முடியலை. (வயசாகுதே) ஊமைப்படத்துக்கு இசை சேர்க்கும் வழி யாராவது சொல்லிக் கொடுத்தால்....முயற்சிக்கலாம்.

நம்ம நானானி ஒரு சமயம், குருவிகளே அருகிப்போச்சு, பார்க்க முடியலைன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அவுங்களை நினைச்சுக்கிட்டே இந்தப் பதிவைப் போட்டேன்.


ஆக்ஷன் ஃபோட்டோ எடுக்கும் அளவுக்குத் திறமை இல்லைன்னாலும் சிலசமயம் சில ஷாட்கள் நல்லா அமைஞ்சுருதுன்னு எண்ணம். மேலே உள்ள படத்தை இந்த மாசம் பிட்டுக்கு அனுப்பியாச்சு. எல்லாம் இருத்தலின் அடையாளமே.

Tuesday, January 13, 2009

PITம் பழமும்

எங்க வீட்டில் பிட்டு செய்தால் (அதாங்க, புட்டு அவிச்சால்) துருவியதேங்காய், நெய், சக்கரை சேர்த்துச் சாப்புடுவோம். வேலை அதிகமுன்னு இதை அடிக்கடி செய்ய மாட்டாங்க. ஆனால் கேழ்வரகு மாவில் கொஞ்சம் சுலபமாச் செய்யலாமுன்னு சொல்வாங்க. அதுக்கும் தண்ணீர் கலந்த மாவை சுளகில் போட்டுக் கட்டியில்லாம மெதுவா உதிர்க்கவும் நிறைய நேரம் எடுக்கும்.

கேரளா, போன புதுசுலே எனக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்துருந்துச்சு. அனுதினமும் பிற்பகலில் விமலா , ஊறவச்ச அரிசியை உரலில் இடிச்சு மாவாக்கறதை வேடிக்கைப் பார்ப்பேன். இட்லி தோசைக்குக்கூட இப்படி இடிச்ச மாவுதான் மீனாட்சி அம்மா வீட்டில். உளுந்தை மட்டும் ஊறவச்சு அரைச்சுச் சேர்ப்பாங்க.

அதுக்குப்பிறகு குடிபோன அன்னம்மாச் சேச்சி வீட்டில் ஆட்டுக்கல்கூட இல்லை. அங்கே வீட்டு வேலைக்கு உதவும் புஷ்பாவும் தினசரி அரிசிமாவு இடிப்பாங்க. உளுந்து? அம்மிக்கல்லில் அரைச்சு, இடிச்சமாவுடன் சேர்த்துக் கலக்கித் தோசை வார்ப்பாங்க. எனக்கு அம்மிக்கல்லில் அரைக்கும் உளுந்துமாவு இன்னும் வியப்பான வியப்பு.

பிட்டை விட்டுட்டு இட்லிதோசைக்குத் தாவிட்டேனே......போட்டும். பிட்டுக்கு மேற்படி ரெண்டு இடங்களிலும் பழம்( நேந்திர வாழைப்பழம்)தான் தொட்டுக்க. அதுவும் காலை ஆகாரமா இருந்தால் பழம் மட்டும்தான்.

கேரளாவில், எப்போவாவது ஹோட்டலுக்குச் சாப்பிடப்போனால் பிட்டுக்குக்கூடவேக் கொத்துக்கடலைக் கறி, முட்டை பொரிச்சதுன்னு கிடைச்சப்ப எப்படி இதெல்லாம்? காலங்கார்த்தாலே இவ்வளவு கனமாச் சாப்பிட முடியுமா என்பதே என் கேள்வி.

இங்கே உள்ள நண்பர் (இலங்கைத் தமிழர்) புட்டு செஞ்சு அதை காய்கறிகளுடன் பொரிச்சுச் சாப்பிடுவார்.

இப்படிப் பலவிதமான 'தொட்டுக்க'கள் இருந்தாலும் ஏத்தப்பழம்தான் என்னோட சாய்ஸ்:-)))

தலைப்புலே இருக்கும் பிட்டுக்கும், மேலே சொன்ன பிட்டுக்கும் இருக்கும் ஒரே சம்பந்தம் வாழைப்பழம்தான். பொதுவா வாழைக்குலையில் காய்கள் நல்லா முற்றுனதும் அறுத்துக் கொண்டுவந்து பழுக்கவிடுவாங்க. மரத்திலேயே பழுக்கவிட்டுப் பார்த்ததே இல்லை நான். அந்தக் குறையை நிவர்த்தி செய்யணுமுன்னு இங்கே எங்கூர் தாவர இயல் பூங்காவில் (கண்ணாடி வீடு) இருப்பவர்களுக்குத் தோணிப்போச்சு.

போனவாரம் அங்கே போனப்ப, ரெண்டு வாழைமரத்தில் குலைதள்ளி நிக்குது. அதுலே ஒன்னு பழுத்த பழங்களோடு. காணக்கிடைக்காத அபூர்வ காட்சியாச்சேன்னு க்ளிக்கினேன். வாழைக்கன்னுகளும் ஒரு ஏழெட்டு அங்கங்கே நிக்குதுங்க ஆள் உயரத்தில். பழத்தோடு இருக்கும் மரங்கள் அஞ்சு மீட்டர் உயரம் இருக்கு.



ஒரு பத்து வருசம் முன்பு நம்மூர் பூங்காவில் இருக்கும் கண்ணாடிவீட்டில் ஒன்னேஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒரே ஒரு மரம் இருந்துச்சு. அதைப் பார்த்தவுடன் எனக்குப் பயங்கர சந்தோஷம் & ஹோம்சிக். இந்த மரத்தைப் பார்க்கணுமுன்னே அப்பப்பப் போய்வருவேன். எந்தப் படுபாவியோ இந்த மரத்தைக் கண்டம் துண்டமா வெட்டிப் போட்ட விஷயம் தினசரியில் வந்ததும் அப்படியே மனசொடிஞ்சு போயிட்டேன்.

ஒரு அஞ்சு வருசம் முன்னே, தற்செயலா ஒரு வாழைமரம் விற்பனைக்குக் கடையில் இருந்ததைப் பார்த்ததும் வாங்கிவந்தேன். அஞ்சு மீட்டர் வரை வளருமுன்னு விவரம் போட்டுருந்துச்சு. நம்ம வீட்டில் குளிர்வந்தவுடன் மண்டையைப் போட்டு, வெய்யில் வந்தவுடன் உயிர்வந்துன்னு இன்னும் ஜீவனோடு இருக்கு. இப்ப வீட்டில் ஒரு கன்ஸர்வேட்டரி இருப்பதால் கொஞ்சம் நல்லமுறையிலே பிழைச்சுக் கிடக்கு.



அதுக்கூடப் பாருங்க, கொஞ்சம் வெய்யில் வந்துக்கேன்னு எடுத்து வெளியில் வச்ச உடனே இருக்கும் நாலைஞ்சு இலைகளும் பழுத்துருச்சு. க்ளொரஃபில் வேணாமாமே! (மேலே உள்ள மூணு படங்களும் வருசத்துக்கு ஒன்னான வளர்ச்சி)

இப்போதான் ஒரு மீட்டர் உயரம். இன்னும் நாலு மீட்டர் வளர்ந்ததும் வாழைக்குலை தள்ளும். அப்போ எல்லாருக்கும் பழம்பறிச்சுத் தர்றேன்.

இந்தப் படம்தான், இந்த மாசத்துக்கான நம்ம பிட் போட்டிக்கு என் சமர்ப்பணம்

Monday, February 04, 2008

பிட்டுக்குச் சுமந்த வளையம்

பிப்ரவரி மாத புகைப்படப் போட்டிக்கான பங்களிப்பு.






PIT புகைப்படப் போட்டிக்காக எடுத்த படங்களில் சில(!!) இங்கே.
முதல் இரண்டும் போட்டியில் கலந்து கொள்பவை.
அப்ப மீதி இருக்கறது?
ஏங்க, எடுத்ததோ எடுத்தாச்சு. அதையெல்லாம் உங்கள் பார்வைக்கு வைக்கலேன்னா நம்ம திறமை(?) உங்களுக்கு எப்படித் தெரியும்?
என்ன தைரியத்துலே நானும் போட்டிக்குப் படம் அனுப்பறேன்னு யாரும் கேக்காதீங்க.......
மோசமான படத்துக்கும் எதோ பரிசு கிடைக்குமுன்னு இங்கே யாரோ சொன்னது என் கண்ணிலும் விழுந்தது:-)))

Friday, December 07, 2007

தீபா....ஹோம்வொர்க் செஞ்சுட்டேன்......

தீபா,

நீங்க ''மேக்ரோ' சொன்னது இதுதான்னு புரிஞ்சுக்கிட்டு(????) கிட்டே அதாவது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பக்கிட்ட்டே போய் கிளிக்குனது இவையெல்லாம்.
எதாவது தேறுமா, அட்லீஸ்ட் பாஸ் மார்க்கையாவது தொடுவேனான்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க.
ஹோம்வொர்க் செஞ்சுட்டேன்:-))))
நாளைக்கு யாரும் நான் PIT வகுப்புக்கே வந்ததில்லைன்னு சொல்லிறக்கூடாது பாருங்க......
அதான்....
வீட்டுலே ஒண்ணையும் விட்டுவைக்கலை. தோசையைக்கூடச் 'சுட்டுட்டேன்':-)))))