Monday, December 24, 2007

கிவி ஸ்டைல் கிறிஸ்மஸ்

மக்கள்ஸ் வந்தவுடன் முதலில் வயிற்றுக்கு உணவு. அப்புறம்தான் கலைவிழா.


நான்
சாதம்
சிக்கன் கறி ( மெட்ராஸ் சிக்கன் கறி)
லேம்ப் கறி ( ரோகன் ஜோஷ்)
மிக்ஸட் வெஜிடபிள் கறி
ரைய்த்தா
பப்படம்


வெஜிடேரியன் மக்களுக்கு :

பாலக் பனீர்
தால் மக்கானி
மிக்ஸட் வெஜிடபிள் கறி
நான்
சாதம்
ரைய்த்தா
பப்படம்


ஜூஸ் வகைகள், கோக், ஃபாண்டா இத்தியாதிகள் தாகம் தணிக்க.

கிறைஸ்ட்சர்ச் கேரளா அசோஸியேஷனின் கிறிஸ்மஸ் விழா.
சாப்பாடு வகைகளை இங்கே நமக்குத் தெரிந்த ஒரு உணவகத்தில் இருந்து வாங்கினோம். ரொம்பவும் நல்ல முறையில் தயாரித்து, பரிமாறும் பாத்திரங்களுடன் வழங்கினார்கள்.

நானும் கோபாலும் காய்கறிப்பிரிவில் எல்லாருக்கும் சோறு போட்டுப் புண்ணியம் தேடிக்கிட்டோம்:-)

மாலை 6.15க்கு ஆரம்பித்து 7.15க்கு எல்லாரும் சாப்பிட்டாச்சு. 7.30க்குக் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாச்சு.

வழக்கமான பாட்டுக்களும், பாலிவுட் நடனங்களும், சிறுத்தா என்னும் தெலுங்குப்படத்தில் வரும் ஒரு ரீமிக்ஸ் பாட்டுக்கான நடனம்னு மேடையில் பலதும் போனது.

இங்குள்ள பெல்லிடான்ஸ் நடனப்பள்ளியில் ஃப்யூஷன் செய்யறொமுன்னு மவோரிகளின் காப்பா ஹாக்கா நடனத்தையும் பெல்லிடான்ஸையும் சேர்த்து ஆடுனாங்க. மவோரிகள் போல தாடையில் பச்சை குத்திக்கிட்டு( எல்லாம் வரையறதுதான். டெம்ப்ரரி டாட்டூ)

( உங்களுக்காக ஒரு பெல்லீ டான்ஸ் ஐட்டம் ப்லொக்கர்லே நேரிடையா அப்லோடு பண்ணினா......ரொம்ப நேரம் அப்லோடிங் அப்லோடிங் னு சொல்லிக்கிட்டே இருந்து கடைசியில் கழிச்சுவிட்டுருச்சு. அதிர்ஷ்டக்கட்டைங்கப்பா )

ஒரு பாதிரியார் கிறிஸ்மஸ் மெஸேஜ் சொன்னார். திருமணம், குடும்ப அந்நியோனியம், அருமையான கலைகலாச்சாரப் பின்னணி இருக்கும் நாடுன்னு இந்தியாவையும், கேரளத்தையும் புகழ்ந்து நாலு வார்த்தைப் பேசினார்.

( இது பெல்லி டான்ஸுக்கு முந்தின நிகழ்ச்சி. அவர் முடிச்சுட்டு விடை பெற்றுப்போனதும்தான் ஆட்டம் ஆஆஆஆஆரம்பம்:-)

இடைவேளையில் எல்லாருக்கும் ஐஸ்க்ரீம்( லெமன் & வெனிலா)

சூப்பர் ஐயிட்டமுன்னா ஒரு ராஜஸ்தானி ஃபோ(ல்)க் டான்ஸ். அருமையான ஆட்டம்.



நல்ல கூட்டம்தான். 170 பேர் வந்திருந்தாங்க. கிறிஸ்மஸ் தாத்தா வரும்போதே மணி பத்தேகால் ஆயிருச்சு. அதுக்கப்புறம் 'பூகி வூகி'ன்னு எல்லோரும் ஆட ஆரம்பிச்சாங்க. நாங்க கழண்டுக்கிட்டோம்.

நம்ம வீட்டில் கிறிஸ்மஸ் ட்ரீ எங்கே, ஏன் இன்னும் வைக்கலைன்னு ஐலாவுக்கு ஒரே கேள்வி.

வச்சாப்போச்சு. தேடி எடுத்து அலங்கரிச்சு, சாண்ட்டா பொம்மையுடன், ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் மிட்டாய்களையும் போட்டு வச்சேன். இது இன்னும் கொஞ்சம் கூட்டத்தை வசீகரித்தது:-)))) பசங்களுடன் பூனியும் ஆலியும் வந்து வந்து போகிறார்கள். 'எப்படியோ தொலையுங்க' என்ற மனோ பாவத்துடன் நம்ம ஜிக்கேயும் ஜிக்குஜூவும்.


இன்னும் கொஞ்சம் அடிஷனல் அட்ராக்ஷன் இருக்கட்டுமேன்னு நம்ம ஜாப்பனீஸ் நீடில் பைன் மரத்தையும் அலங்கரிச்சோம்.

ஆச்சு...பொழுது விடிஞ்சாப் பண்டிகை. வழக்கம்போல இன்னிக்கு இரவு நம்ம கதீட்ரலுக்கு ஒரு விஸிட் அடிக்கணும்.

எனக்கு 'நம்ம வீட்டு சாண்ட்டா' ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் 500 ஜிபி பரிசாகக்
கொடுத்தார். தமிழ்ச்சேவை செய்யணுமில்லே:-))))




அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்து(க்)கள்.




36 comments:

said...

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் துளசி!!
அப்பரம் என்ன இப்படி ஒரு unromantic gift அ கொடுத்துட்டார் உங்க ஊரு ஸாண்டா??were you a bad girl last year??:):)

said...

வாங்க ராதா.


//were you a bad girl last year??:):)//

ஆமாம்ப்பா.....:-))))

பொழுதண்ணிக்கும் தமிழ்மணத்தை மேய்ஞ்சுக்கிட்டு இருந்ததை 'நாசூக்கா' நினைவுபடுத்தறாரோ?

ஆனா, வசதியாத்தான் இருக்கு. நம்ம புலமைகளால் ஆன பதிவுகளையும், நம்ம கைவண்ணங்களையும் சேமிச்சுக்கிட்டு அப்புறம் மக்கள்ஸைப் படுத்தலாம்:-)))

உங்களுக்கும் வாழ்த்து(க்)கள் ராதா.

said...

இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் துளசியக்கா.

said...

ரீச்சர், கிறுத்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். சாண்டா எனக்கும் அதையேதான் தரதா சொல்லி இருக்கார். ;)

அப்புறம் அந்த சோபா செட் வாங்கியாச்சு!! ரொம்பவே சீக்கிரமா இல்ல! :))

said...

மரக்கறிக்கு தனியிடமா?பரவாயில்லையே!!
யாருங்க அந்த "தப்பித்த" அதிர்ஷ்டக்கார கட்டை? :-))
அப்பாடி! இ.கொத்தனார் வருவதரற்குள் கேட்டாகிவிட்டது.!!

said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க வீட்டுக்கு வந்துருக்கேன்.

ரெண்டு வாரம் லீவ். மூத்த மகள் வீட்டுல (கே.எல்). ஜனவரி 6ம் தேதிதான் ரிட்டர்ன். ஊர் சுத்துறதுக்கிடையில கொஞ்சம் தமிழ்மணம் பக்கமும் வரணும்னு இருக்கேன். ஆனா மகள் நெட் பக்கமே போக்கூடாதுன்னு ஆர்டர்:-(.

இப்ப எல்லாரும் ஷாப்பிங் போயிருக்கறதால அஞ்சு நிமிஷம் கேப்புல வந்துட்டேன்:-)))

ஒங்க கிறீஸ்துமஸ் கலைநிகழ்ச்சி போலவே இங்கயும் கே.எல் சர்ச்சில இன்னைக்கி வச்சிருக்காங்க போக முடியுமான்னுதான் தெரியல..

கிறிஸ்த்துமஸ் விழா இப்பல்லாம் யூனிவர்சல் திருவிழா மாதிரி எங்க திரும்பினாலும் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள்....

அனைவருக்கும் இனிய கிறீஸ்துமஸ் வாழ்த்துக்கள்..

said...

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் டீச்சர்.

என் முதல் பையன் கார்க்கி கிறிஸ்மஸ் அன்னைக்குத்தான் பிறந்தான். பாருங்க. அவன் பிறந்த நாளை உலகமே கொண்டாடுது.

கடைசி படத்துல கிஃப்ட் ஒண்ணு வச்சிருக்கீங்களே... யாருக்கு?

said...

நல்ல பரிசுதான். இனி விரிவான பதிவுகளை எதிர்நோக்கலாமா ?

உங்கள் பதிவிற்கு பின்னூட்டம் போடமுடியாமல் கூட இருந்தேன் என்றால் எத்தனை நேரம் இணையத்தில் செலவழிக்க முடிந்தது என்று தெரிகிறது :(

அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் மற்றும் புதுவருட வாழ்த்துக்கள் !!

said...

உங்களுக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா...

இந்த ந.ஓ.க போட்டி கதை படித்து உங்கள் கருத்து சொல்லுங்க

http://arataiarangam.blogspot.com

வீ எம்

said...

துள்சிங்க,

இருந்தாலும் அநியாயத்துக்கு ரொம்ப சின்ன ட்ரீ...

முதல் சாப்பாட்டை பார்த்தவுடன் நாக்கில் நீர் :-P

பெல்லி டான்ஸ் அப்லோட் பண்ணியிருக்கலாம் ;)...

ஹாப்பி ஹாலிடேய்ஸ்!

said...

வாங்க கைப்புள்ளெ.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி. உங்களுக்கும் இனிய பண்டிகைக் கால வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க கொத்ஸ்.

ஒருவேளை சாண்ட்டா ஹோல்சேலில் வாங்கிவச்சுருக்காரோ? :-))))
ஆனாலும் பயனுள்ள பரிசுதான்.

அந்த சோஃபா செட்?

இனிமேல் நீங்க(ளும்) ஒரு lazy boy:-)))))

said...

வாங்க குமார்.

//இ.கொத்தனார் வருவதரற்குள் கேட்டாகிவிட்டது.!!//

ஊஹூம்...நோ ச்சான்ஸ். பாருங்க உங்களுக்கு முன்னால் நிக்கறார்:-))))

நம்ம ப்ளொக்கர் டேஷ் போர்டிலிருந்தே
டான்ஸை வலை ஏத்தினேன். அதுதான் 'தடா' போட்டுருச்சு:-))))

பேசாம யூ ட்யூப் வழியா வந்துருக்கலாம்:-))))

said...

வாங்க டிபிஆர்ஜோ.

ரொம்ப நாளைக்கு ரொம்ப நாள்.

நீங்க முந்தி ஒருமுறை சொன்னது நினைவில் இருந்துச்சு.அதனால்
நேத்து 'நேட்டிவிட்டி ஸீன்' சுடலாமுன்னு சர்ச்சுக்கு போனேன். இப்ப இங்கே எல்லாமே ரொம்ப மாறிக்கிட்டு இருக்கு.

எங்கேயும் இல்லை(-:

ஜாலியா விடுமுறையை அனுபவிங்க. தமிழ்மணம் எங்கே போகப்போகுது?

போனவாரம் இங்கே ஒரு சர்ச்சில் வழக்கமான சர்வீஸ் நேரத்தில் மலையாளப் பாட்டுடன் ,'பாட்டுக் குர்பானி' செஞ்சோம். ஒரு மணி நேரம் அருமையா இருந்தது. நாட்டிலே இருந்தொரு அச்சன் வந்ந்நிருந்நு.

கிவி மக்கள்ஸ் ஆச்சரியத்தோட பார்த்தாங்க:-)))))


உங்களுக்கும், மகள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் & புதுவருட வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க ஆடுமாடு.

மகனுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.

அந்த கிஃப்ட் பாக்ஸ்?

அதுதான் எனக்கு நம்மவீட்டு சாண்ட்டா கொடுத்த பரிசு:-))))

சேமிப்பை ஊக்குவிச்சுட்டார்:-)

said...

வாங்க மணியன்.

நலமா?

நேரம்? அது பேரக்குழந்தையைக் கொஞ்சுவதில் போயிருக்கும்:-)))

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பண்டிகைக்கால வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க வீ.எம்.

எங்கே ஆளையே காணோம்?

நலம்தானே?

எப்படியோ சர்வேசன் காணாமப் போனவங்களையெல்லாம் கண்டுபிடிச்சுக்
கொடுத்துட்டார்:-)

கதை படிச்சுட்டு 'அங்கேயே' சொல்வேன்:-)))

உங்களுக்கும் பண்டிகைக்கால வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க தெ.கா.

குழந்தை நலமா?

டேபிள்டாப் மரம்தான். அதான் குட்டியா இருக்கு:-))) அதுவே லைட்டிங்கோட வந்தது. பேட்டரி இருக்கும்வரை ஓடட்டுமுன்னு விட்டுருக்கேன்.

அதான் பெரிய மரத்தைத் தோட்டத்தில் அலங்கரிச்சாச்சே. அது போதாதா நான் கொண்டாடும் அழகுக்கு? :-)))))


உங்களுக்கும் விடுமுறைக்கால வாழ்த்து(க்)கள்.

said...

துளசி..

எனக்கு தோனினது சொல்லிடறேன்.. உண்மை...மூனாவது ஃபோடோவில நீங்க சூப்பர்.. வேலை களைப்புல இருக்கீங்க போல... இருந்தாலும் என்னமோ ஒரு அழகு அந்த போட்டோல.. என் கல்லூரி நண்பன் ஒருத்தன் சொல்லுவான்... அவசர அவசரமா வேலை செய்திட்டு இருக்கும்போது எங்க அம்மா எனக்கு ரொம்ப அழகா தெரிவாங்கன்னு.. அது நியாபகம் வருது எனக்கு

புத்தாண்டு வாழ்த்துக்கள்.. பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

said...

துள்சி! அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.அருமையாக கொண்டாடிவிட்டீர்கள். அதுக்கு தூக்கமுடியாமல் ஒரு பரிசும் கிடைத்துவிட்டது. ஜமாயுங்கோ.
என்னோட வாழ்த்தையும் வந்து வாங்கிக்கோங்கோ!!சேரியா?
பார்ட்டி ஐட்டங்கள் பார்த்து உமிழ்நீர் அளவுக்கதிகமாக சுரக்கிறது.

said...

mmmm நானும் அங்கே இருந்து கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் போல இருக்கிறது. சாண்டாவின் பரிசு பயனுள்ள ஒன்று. மெனு பிரமாதம். கிறிஸ்துமஸ் மரம் அருமை. ஐலா, பூனி, ஆலி, ஜீக்கே, ஜீகேச்சூ, அப்புறம் கோபால் - துளசி அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். ( இங்கெ இன்னிக்குத்தான் இப்போ த்ஹன் கிறிஸ்துமஸ்). நல்ல பதிவுக்கு நன்றி

said...

வாங்க மங்கை.

//என்னமோ ஒரு அழகு அந்த போட்டோல.. //

இருக்காதா பின்னே? பக்கத்துலே யார்? அங்கே இருந்து கொஞ்சம் அழகை வாங்கிக்கிட்டேன்:-))))

உங்களுக்கும் விழாக்கால வாழ்த்து(க்)கள்.

பல்லாண்டு எல்லாம் தாங்காதுப்பா.
பார்க்கலாம், வண்டி இன்னும் மோசமா ஆகாம எவ்வளோ நாள் ஓடுதுன்னு:)))

said...

வாங்க நானானி.

அங்கே வத்தக்குழம்புப்பொடியெல்லாம் பண்ணி ஜமாய்ச்சுக்கிட்டு எங்க நாக்கு ஏங்கும்படி செஞ்சுக்கிட்டு இருக்கீங்க.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

அடுத்த கிறிஸ்மஸ் வரைக்கும் வச்சுக்கணும்.ஆமா......

said...

வாங்க சீனா.

நீங்க குறிப்பிட்டா எல்லோருக்கும் வாழ்த்தைச் சொல்லியாச்சு:-)

அதுவும் இன்னிக்குக் காலையில் நம்ம ஜோனத்தன் ( ஐலா & கோவின் ஒரே அண்ணன்) புழக்கடையில் நம்ம சத்தம் கேட்டவுடனே வேலிமீது ஏறி எட்டிப்பார்த்து அவனுக்கு 'சாண்ட்டா' கொடுத்த அத்தனை பரிசுகளையும் ஒப்பிச்சுட்டான்.

அப்பா அம்மாவுக்கு என்ன பரிசு நீ கொடுத்தேன்னு கோபால் கேட்டார். அதுக்கு அவன் பதில்:

நான் ஏழை. காசில்லை. என்னுடைய சேமிப்பு முழுசையும் ஸ்கூல் கேம்புக்குக் கொடுத்தேன். அதுவே பத்தலை. மீதியை அப்பா கொடுத்தார்.
அதனாலே காசில்லை என்ற என் நிலையைச் சொல்லி மன்னிப்பு கேட்டேன் என்றானே பாருங்க:-)))))


எங்களுக்கு இன்னிக்கு எந்தக் கடையும் கிடையாது. நாடு முழுசும் பந்த்:-))))

said...

ஜோனத்தன் கொடுத்த பரிசு தான் சிறந்த பரிசு

said...

//இருக்காதா பின்னே? பக்கத்துலே யார்? அங்கே இருந்து கொஞ்சம் அழகை வாங்கிக்கிட்டேன்:-))))///

இதான்..இதான் எதிர்பார்த்தங்கோவ்..

said...

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் டீச்சர்.

எனக்கு பரிசு?:)))

said...

இப்படி எச்சில் ஊற வெச்சுட்டீங்களே?மசால் வடையக்காணோம்??

விடுமுறைக்கால வாழ்த்துக்கள்!

said...

அக்கா!
அழகாகக் கொண்டாடியுள்ளீங்க, எனக்கு மிகப் பிடித்தது , வெளியே உள்ள மரத்தை அலங்கரித்தது. இது நல்ல திட்டமும் கூட (நிலம் உள்ளோருக்கு)

said...

அக்கா , கதை படிச்சு கருத்து சொன்னதுக்கு மிக்க நன்றி. சர்வேசன் போல் ஆரம்பம் ஆகிவிட்டது.. படிச்சதில் பிடிச்ச கதைக்கு ஒரு ஓட்டு போடுங்க..

said...

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

டீச்சர்,
உங்களுக்கு எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் பரிசு ஓக்கே! என்னமோ சேவை பண்ணிட்டுப் போங்க!

வேர் இஸ் தி கிப்ட் ஃபார் ஜிகே & ஜிக்குஜூ? எங்கே அந்த சாண்டா?

பி.கு
அந்த அப்பளக் கூடை போஸ் அமர்க்களம்! :-)))

said...

வாங்க குசும்ப்ஸ்.

புதுவருச வாழ்த்து(க்)கள்.

குசும்பு கு(ரை)றையாம நீடூழி வாழ்க என வாழ்த்துகின்றேன்.

ஆசிகள்தான் பரிசு:-)))

said...

வாங்க தங்ஸ்.

மசால்வடை போட்டு மாளாது இந்தக்கூட்டத்துக்கு(-:

அதான் இன்னிக்கு வீட்டுவரையில் மெது(???) வடை போட்டுட்டேன்.

இங்கே MTR வடை மிக்ஸ் கிடைச்சது. அதைப் பரிசோதிச்சுப் பார்த்தாச்சு.

அவுங்க சொன்ன செய்முறைப்படித் தண்ணீர் கலந்தா அதை 'வடைத்தோசை'யாத்தான் ஊத்தணும்:-))))

said...

வாங்க யோகன்.

எனக்கும் இந்த உயிர்மரம் பிடிச்சுப்போச்சு. இந்த ஐடியா இதுவரைத் தோணாமப்போச்சேன்னு இருக்கு.

தோட்டமே இப்ப ஜொலிக்குது.

அலங்காரத்தைக் கழட்ட மனசில்லை. இருந்துட்டுப் போகட்டுமே. வருசம் முழுசும் கண்ணுக்கு விருந்து:-))))

said...

வி.எம்.

இப்பத்தான் மறுபடி எல்லாத்தையும் ஒரு முறை படிச்சுக்கிட்டு இருக்கேன். ச்சும்மாச் சொல்லக்கூடாது. ஒவ்வொரு கதையும் 'நச்'சாத்தான் இருக்கு:-)))

said...

வாங்க கே ஆர் எஸ்.
'சாண்ட்டா' புதுவருசத்துக்குத் தனக்குன்னே ஒரு 80ஜிபி வாங்கிக்கிட்டார்.

பசங்களுக்கு எக்ஸ்ட்ரா உபச்சாரம் சாப்பாடுதான். அவுங்க பிராண்டைத்தேடி அலைஞ்சு வாங்கறோம்.

ஃப்ரெஷ் என்பதால் அப்பப்ப வாங்கணும்:-)))))