Wednesday, March 21, 2007

கல்காஜி மந்திர்

நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 6)

கடுகையும் கறுப்பு எள்ளையும் கலந்து ஒரு முறத்தில் போட்டுக் கொடுத்துருவாங்களாம். யாருக்கு?குட்டிச்சாத்தானுக்கு. அதுபாட்டுக்கு ஒரு மூலையில் உக்காந்து ரெண்டையும் தனித்தனியே பொறுக்கி எடுத்து வைக்குமாம். எல்லாத்தையும் செஞ்சு முடிச்சதும் தனித்தனியா இருக்கறதை மறுபடியும் ஒண்ணாக்கொட்டி அதுகிட்டே கொடுப்பாங்களாம். அப்படி ஒரு வேலையும் கொடுக்கலேன்னா............என்ன செய்ய? என்ன செய்ய? ன்னு கேட்டு ஆளைப் பிச்சு எடுத்துருமாம். இதை யாரோ கோபாலுக்குச் சொல்லிட்டாங்க போல. மறுநாள் வேலைக்குக் கிளம்பும்போது 'இங்கே கல்கி மந்திர்ன்னு ஒண்ணு இருக்காம்.அங்கே போயிட்டு வாயேன்'ன்னார்.

'டெல்லியிலே சுத்திப்பார்க்க இடமா இல்லை? இன்னிக்குக் கார் வேற இருக்காது. நீங்க எடுத்துக்கிட்டுப் போறீங்க. இங்கேயே பக்கத்துலே எங்கேயாவது போறேனே'ன்னு சொன்னதுக்கு, 'வாசல்லே டாக்ஸி இருக்கு.பேசாம அதுலே போயிட்டு வா. நல்ல சக்தி வாய்ந்த கோயிலாம்'ன்னார். என்னுடைய ப்ளான், இன்னிக்கு இங்கே இருக்கும் ஹரே கிருஷ்ணா கோயில். சரி, கல்கியைப் பார்த்துட்டுப் போகலாமுன்னு டாக்ஸி எடுத்தேன்.

பஞ்சாபி இளைஞர் டாக்ஸி ஓட்டிக்கிட்டே போறார் போறார், சுத்திச் சுத்தி எங்கெங்கேயோ போறார். மதுரா போற ரோடுலே நேராப் போனாலே நேரு ப்ளேஸ் வந்துருக்கும். கிழக்கு கைலாஸ் தாண்டி தாமரைக் கோயில் பக்கம் போனா ஆச்சு. ஆனாத் தொழிற்பேட்டை இருக்கும் பக்கமெல்லாம் கொண்டுபோய் காமிச்சுக்கிட்டு இருக்கார். ஏறும்போதே மீட்டர் இருக்குன்னு உத்திரவாதம் கொடுத்தவர்தான். சொந்த ஊர் எங்கேன்னு கேட்டதுக்கு லுதியானான்னு சொன்னப்பவே நான் புரிஞ்சுக்கிட்டு இருந்திருக்கணும்.

தலைநகரம், கனகம்பீரமா இருக்கும் தெருக்கள், எல்லாம் மாடர்ன் பியூட்டீஸ்ன்னு இருந்த காட்சி 'சட்'ன்னு மாறி ஒரு அறுதப் பழைய கிராமத்துக்கு வந்தமாதிரி இருக்கு. செம்மண் பூமி. சரியான பாதைகள் கூட இல்லை. இதுலே என்னை இறக்கி விட்டுட்டு இன்ஸ்ட்ரக்ஷன் வேற!

"யார் கிட்டேயும் பேச வேணாம். இப்படியே நேராக் கோயிலுக்குப் போயிட்டு வந்துரணும். நான் இங்கேயே காத்திருப்பேன். நான் போயிட்டா அவ்ளோதான். திரும்பிப்போக வண்டியே கிடைக்காது. பத்திரமாப் போயிட்டு வா ஆண்ட்டி"

என் மூஞ்சியில் இருந்த திகைப்பைப் பார்த்துட்டு .............

" வெயிட்டிங் சார்ஜ்கூட தர வேணாம்.இங்கேயே காத்திருக்கறேன்"

ஒரு சின்ன குன்றுமேலே கோயில் இருக்கு போல. அகலமான பாதைதான். கல் பாவி இருக்கு.

அங்கங்கே சின்ன ஏத்தம். ரெண்டு பக்கமும் கடைகள். எல்லாம் கோவில் சம்பந்தபட்ட சாமான்கள்.வளையல்களாக் குவிச்சு வச்சிருக்காங்க. சிகப்புக் கயிறுகள் கொத்துக் கொத்தா தொங்குது. வெள்ளையா பாப்கார்ன் பொறிச்சதுபோல இருக்கும் இனிப்புவகைகள் இருக்கு. சாமிக்குப் படைக்க வாங்கிக்கிட்டுப் போறாங்க மக்கள்ஸ்.

கடைக்காரர்களே செலவு செஞ்சு போட்டுக்கிட்ட பாதையோ என்னவோ சில இடத்துலே அலங்காரமா டைல்ஸ் கூட பதிச்சு இருக்காங்க. கடைகடைக்குப் பக்திபாட்டு முழங்குது. எல்லாம் சேர்ந்து கலந்துகட்டியாஒரு இரைச்சல். இதுலே கடைக்காரர்கள் போறவர்றவங்களைக் கூவிக்கூவி கூப்புடறாங்க. எதோ திருவிழா சமயம் திருத்தணியிலே இருக்கறமாதிரி ஒரு தோணல்.
பக்கா கிராமத்து ஜனங்கள். பதினைஞ்சு இருபது நிமிஷத்துலே டெல்லின்னு ஒரு இடம் இருக்குதுன்னுகூடத் தெரிஞ்சிருக்குமோ என்னவோ?

படியேறிப்போனேன். பாதுகாப்பு, பரிசோதனைகள் இப்படி ஒண்ணுமே இல்லை. படிச்சவுங்க இருக்கற இடத்துலேதான் ஆபத்து இருக்கும்போல. கோயிலில் கூட்டமான கூட்டம். ஆரஞ்சு நிறத்துலே மெழுகிவச்ச ஒரு பெரிய பாறை. இதுதான் கல்காஜி. சுயம்பு. சுத்திவந்து கும்பிடலாம். ஆனா சுத்தவிடாம வழியை மறைக்கிற மாதிரி பலர் நின்னுக்கிட்டு இருக்காங்க. அவுங்க முழங்கைவரை சிகப்புக் கயிறுகள். அதுலே இருந்து ஒவ்வொண்ணா எடுத்து ஜனங்கள் கையிலே மணிக்கட்டுலே கட்டுறாங்க. கட்டிக்கிட்டவங்க அவுங்களுக்குக் காசு கொடுக்கறாங்க.பயங்கரப் போட்டா போட்டி யாரு கட்டுறதுன்னு. 'கட்டிக்கோ கட்டிக்கோ'ன்னு என்னைப் பார்த்து கூச்சல். 'நஹி நஹி'ன்னுசொல்றதைப் பார்த்து, 'சாமிக் கயிறை வேணாங்குது! இப்படியும் ஒரு ஜென்மமா?'ன்னு ஒரு பார்வை. ஒரு மாதிரி சமாளிச்சு வெளியே வந்து அந்தச் சின்னக்கோயிலை வலம் வந்தேன். அங்கே ஒரு வாசல் போல வெளிச்சம் தெரிஞ்சது.

அதுக்குள்ளே எட்டிப் பார்த்தால்................ ச்சின்னதா ஒரு ஷாமியானா போட்டு வச்சிருக்கு. திண்டுதிம்மாசுன்னு சிலது கிடக்கு. அதுலே சரிஞ்சாப்புலே சாய்ஞ்சு உக்கார்ந்துருக்கார் தாடியும் மீசையுமா ஒரு பெரியவர். தலையெல்லாம் சடைசடையா இருக்கு. அதுலே ஒரு தலைப்பாகை. சிகப்புக் கலருலே ஒரு கோட்டுமாதிரி போட்டுருக்கார். அவருடைய வலதுகையிலே ஒரு உடுக்கை. முன்னாலே ஒரு பெரிய தாம்பாளத்துலே குங்குமம் நிரம்பி இருக்கு. உடுக்கையை அப்பப்பஆட்டிக்கிட்டு இருக்கார்.'
ட்டூஊஊஊஊங்.....டுமுரு... டுமுரு.. டுமுரு.. டுமுரு.. ட்டூஊஊஊஊஊஊங்'
ஜனங்க அவர் காலுலே வுழுந்து கும்புடுது. ஒருகையாலே குங்குமத்தை வாரி அவுங்க நெத்தியிலே பூசறார். காணிக்கையை அவர்முன்னாலே இருக்கற இன்னொரு தட்டுலே போடறாங்க.

'டமரு வாலா லால் பாபா'ன்னு அந்த ஷாமியானாவுலே ஒரு பேனர் எழுதித் தொங்குது.

எதையுமே நம்புனாத்தான் தெய்வம். மக்கள் முகத்துலே இருந்த பரவசமே அவுங்க நம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காமிக்குது. கள்ளமில்லாத கிராமத்து மக்கள். கும்பலாக் குழந்தையும் குட்டியுமா சந்தோஷமாச் சிரிச்சுப் பேசிக்கிட்டு உக்கார்ந்திருக்காங்க. பிள்ளைங்க கோயிலைச் சுத்திச்சுத்தி ஓடிவிளையாடுதுங்க. இது ஒரு புது அனுபவம்தான்னு கீழே இறங்கி வந்தேன். நண்டும் சிண்டுமாப் பசங்க கூடவே ஒட்டிக்கிட்டு வருதுங்க காசு கொடு காசு கொடுன்னுக்கிட்டு.

க்யான்சிங் டாக்ஸியிலே தூக்கம். அங்கே இருந்து இஸ்கான் போனோம். வழக்கம்போலவே(!!) வெயிட் பண்ணறேன்னு சொன்னவர்கிட்டே,'வேணாம். நீங்க போகலாம். எனக்கு நேரமாகும்'னு சொன்னாலும் கேக்கற மாதிரி இல்லை. 'எனக்கு வெயிட்டிங் சார்ஜ் வேணவே வேணாம். ச்சும்மா இங்கே காத்திருக்கறேன்'. இதென்னடா வம்பாப்போச்சு. கணக்கைச் சொல்லுப்பா........ன்னு கெஞ்சறேன். 350 ரூபாய் ஆச்சு. 'மீட்டர் த்தோ பராபர் ஹை'.500 ரூபாய் நோட்டு எடுத்துக் கொடுத்தால் பாக்கி 100 ரூபாய் தரார். இன்னும் 50? 'எனக்கு இனாம் தரக்கூடாதா? பாக்கி அந்த அம்பதைக் கண்டிப்பா வேணுமுன்னா தரேன். இனாம் வச்சுக்கோன்னு சொன்னா வச்சுக்கறேன்'

தப்பிச்சாப்போதுமுன்னு இறங்கி ஓடுனேன் கோயிலைப் பார்த்து. இந்த ஹரே கிருஷ்ணா கோயிலும் ஒரு குன்று மேலேதான் இருக்கு. பிரபலமான இடங்களைப்போல இங்கேயும் பாதுகாப்புக்காக எலெக்ட்ரானிக் கேட் வச்சிருந்தாங்க. ஆனா தடவல்கள் இல்லை. கைப் பையை மட்டும் திறந்து காமிச்சாப் போதும். கோயிலுக்குள்ளே ஒரு குழு பஜனை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. மூணு மாடங்கள் அமைச்சு விக்கிரகங்கள். எல்லாமே
பளிங்குச்சிலைகள். அதுலே அந்த ராமர், லக்ஷ்மணர், சீதாவுடன் அமெரிக்கையா உக்கார்ந்துருக்கற அனுமார் கொள்ளை அழகு.உயிரோட்டமான கண்கள். ச்செல்லம்போல இருக்கார்.
இங்கே படம் எடுத்துக்கலாமுன்னு சொன்னாங்க. கோயில் வாசலில்வெளி முற்றத்தில் ஒரு கருடாழ்வார் சிலை. அமர்க்களமா இருக்கு. ராதா பார்த்தசாரதின்னு ஒரு விக்கிரகம் தாடி மீசையோடுஇருக்கு.(படம். பதிவின் ஆரம்பத்தில்)

கொஞ்சம் கீழே அஞ்சாறுபடி இறங்கிவந்தா, இன்னொரு பகுதியிலே வீடியோ படம் காமிக்கிறாங்க. ஆரம்பிக்கப்போறாங்க,உள்ளே வர்றீங்களான்னு ஒருத்தர் கேட்டார். பக்திப்படம் பார்க்கலாமுன்னு நினைச்சாலும், இப்ப வேணாமுன்னுமுடிவு செஞ்சுட்டேன்.

கொஞ்சம் உயரமான குன்றுமேலே எழும்பி இருக்கும் கோயில். குன்றின் அமைப்பையொட்டி ஒவ்வொரு நிலையிலும் ஒரு கட்டிடமா இருக்கு. புத்தகம், போஸ்ட்டர்கள் , ஜெபமாலைகள், துளசிமணிமாலைன்னு விக்கற கடைகள், பக்கத்துலேயேசிற்றுண்டி வியாபாரம். வாசலிலே ஒரு மேஜை போட்டு ஒலிஒளி, ஃபிலிம்ஷோ அறிவிப்பு செஞ்சுக்கிட்டே, ச்சின்னதா நினைவுப்பொருட்களாக கண்ணன் படம் போட்ட கீ செயின், நெத்திக்கு இட்டுக்கும் கோபிச்சந்தனம் வகையறாக்களை விற்கும் இடம், அங்கங்கே நின்னு அக்கம்பக்கத்து வியூக்களை பார்க்கும் விதமான விசாலமான காலி இடங்கள்,ஏற்றவும் கீழ் தளத்துலே 'கோபால்ஸ் ரெஸ்டாரண்டு'ன்னு சாப்பாட்டுக் கடை இப்படி நல்லாதான் கட்டி இருக்காங்க.

நேத்து ஒரு வலைப்பதிவர் சந்திப்பு நடந்துச்சே அதைப் பத்தி யோசிச்சுக்கிட்டே படிகள் இறங்கிவந்து உள்ளே எலெக்ட்ரானிக் கேட் (எப்படியும் இதைத் தாண்டித்தானே வரணும்?)அருகே இருக்கும் கட்டைச்சுவரில் உக்கார்ந்து நண்பருக்காகக் காத்திருந்தேன்.இன்னிக்கும் நடக்கப்போவது ஒரு வலைப்பதிவர் சந்திப்பு!

தொடரும்..........

27 comments:

said...

"கடுகையும் கறுப்பு எள்ளையும் கலந்து ஒரு முறத்தில் போட்டுக் கொடுத்துருவாங்களாம். யாருக்கு?குட்டிச்சாத்தானுக்கு. அதுபாட்டுக்கு ஒரு மூலையில் உக்காந்து ரெண்டையும் தனித்தனியே பொறுக்கி எடுத்து வைக்குமாம். எல்லாத்தையும் செஞ்சு முடிச்சதும் தனித்தனியா இருக்கறதை மறுபடியும் ஒண்ணாக்கொட்டி அதுகிட்டே கொடுப்பாங்களாம். அப்படி ஒரு வேலையும் கொடுக்கலேன்னா"
நல்ல comparison.சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

said...

டில்லில அஞ்சு வருஷம் இருந்தேன், ஆனா நீங்க சொன்ன இந்த இடமெல்லாம் போனதில்லை. ஒரு கனாட் பிளேஸ், சாகுந்தலா பத்தி எழுதுங்க ப்ளீஸ். நல்ல இருக்கு படமெல்லாம். எங்க வீட்டில் இருக்கிற கருடன் மாதிரி அப்படியே இருக்கு, சைஸ் பெரிசு:))

said...

அக்காவ்,
கால்கா மந்திர் ரொம்ப பிரபல்யமானது. கண்ணனுக்கு முன்ன பிறந்த கால்கா மாதாவ, கம்சன் வெட்டியெறிஞ்சப்ப உடலின் ஒரு பாகம்(என்னன்ன ஞாபகம் வரல) விழுந்த இடமுன்னு சொல்வாங்க. நவராத்திரிக்கு செம கூட்டமாயிருக்கும். அன்னதானம், தண்ணிப்பந்தலுன்னு ஒரே கோலாகலம்தான்.
இது இருப்பதென்னவோ, தாமரைக்கோவிலின் மற்ற பக்கம்தான்.
ஒரே பக்திமயமாத்தான் இருந்திருக்கு உங்க தில்லி பயணம். சத்தர்பூர் கோவில் போயிருந்திங்களா?

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

வாய்விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப்போகுமாம்:-))))))

என்னைச் சும்மா இருக்கவிட்டாலும்.................

said...

வாங்க பத்மா.

அதான் 'இடும்பிக்கு வேற வழி'ன்னு சொல்லி இருக்கேன்லெ:-))))
கன்னாட் ப்ளேஸ்தானே? எழுதிட்டாப்போச்சு:-)

said...

வாங்க கஸ்தூரிப்பெண்ணே.

//சத்தர்பூர் கோவில் போயிருந்திங்களா? //

இதானே வேணாங்கறது:-))) இப்பவே எல்லாக் கோயிலும் போயிட்டா,
அடுத்தமுறை டில்லி போறப்ப எதைப் பார்க்கறது?
விட்டுவச்சுருக்கேன்:-))))

பக்திமயமா? எல்லாம் போற வழிக்குப் புண்ணியம் தேடிக்கத்தான்!

said...

படிக்க ரொம்ப நல்லா இருக்கு துளசி. கல்கா தேவி டெல்லிவாசிகளுக்கு கண்கண்ட தெய்வம். வெள்ளிக்கிழமை, பௌர்ணமி நவராத்திரி நாட்களில் கூட்டம் தாங்காது.
ரொம்ப சக்திவாய்ந்த கோயில்.

அடுத்தமுறை சத்தர்புர் கோயில் அவசியம் போய் வாங்க. முழுசும் தங்கத்தாலான மஹிஷாசுரமர்த்தினியைப் பாத்துக்கிட்டே இருக்கலாம்.இந்திரா காந்தி ஒவ்வொரு பௌர்ணமியும் தவறாத இங்க வருவாங்களாம்.

said...

டீச்சர், சும்மாச் சொல்லக்கூடாது. கோபால்ஜி உங்களை நல்லாவே புரிஞ்சி வெச்சு இருக்கார். ஒரு ஒரு முறையும் அவர் உங்களை தனியா அனுப்புற தூரம் ஜாஸ்தியாகிக்கிட்டே இருக்கு. ஜாக்கிரதை.

அப்புறம் அமெரிக்கையானா என்ன? ஹிஹி...

said...

சின்ன அம்மிணி, பத்மா, கஸ்தூரிப்பெண், ஜெயஸ்ரீ, நீங்கன்னு ஒரே பெண்கள் கூட்டமா இருக்கே... தனி ஒருவனா வந்து மாட்டிக்கிட்டான் படுவான்னு போட்டு வாங்கிடாதீங்கக்கோவ்....

said...

பாவம் இ.கொத்தனாரை காப்பாற்ற வந்துவிட்டேன்.!!
கல்காஜி போன ஞாபகம் இல்லை.எப்படி விட்டேன் என்று தெரியவில்லை.
அடுத்த தடவை போய் பார்க்கவேண்டும்.

said...

வாங்க ஜெய்ஸ்ரீ.

//கல்கா தேவி டெல்லிவாசிகளுக்கு கண்கண்ட தெய்வம்.
வெள்ளிக்கிழமை, பௌர்ணமி நவராத்திரி நாட்களில் கூட்டம் தாங்காது.//
உங்க பின்னூட்டம் படிச்சதும்தான் எப்படி இவ்வளோ கூட்டம் வர்ற கோயிலுக்கு
பாதுகாப்புன்னு ஒண்ணு இல்லவே இல்லைன்றதை நினைச்சா ஆச்சரியமா இருக்கு.

ஒப்புக்கு ஒரு மரச்சட்டம் (எலெக்ட்ரானிக் கேட்) அங்கே நிக்குது. பக்கத்துலே யாருமே இல்லை.
எல்லாரும் அதுக்குள்ளெ நுழையாம பக்கத்துலே தாண்டிப்போனாங்க.நானும்தான்!

அடுத்தமுறை விசிட் பண்ணவேண்டிய கோயிலில் சத்தர்பூரைச் சேர்த்தாச்சு.

said...

வாங்க கொத்ஸ்.

//கோபால்ஜி உங்களை நல்லாவே புரிஞ்சி வெச்சு இருக்கார்//

முப்பத்திரெண்டே முக்கால் வருஷத்துலே இதைக்கூடப்
புரிஞ்சுக்கலைன்னாதான் கஷ்டம்:-))))

//அப்புறம் அமெரிக்கையானா என்ன? ஹிஹி//

அமெரிக்கனுக்குப் பெண்பால் ன்னு நினைச்சுக்கிட்டீங்களா?

அடடடா............... அடக்கம் ஒடுக்கமான்னு ன்னு அர்த்தம்.

'நானிருக்க பயமேன்'னு குமார் வந்துட்டார்ப்பா உங்களைக் காப்பாத்த:-)

said...

வாங்க குமார்.
உங்க லிஸ்ட்டும் வளருது இல்லே? :-))))

said...

//அடுத்தமுறை விசிட் பண்ணவேண்டிய கோயிலில் சத்தர்பூரைச் சேர்த்தாச்சு//

சத்தர்பூர் போகும்போது பௌர்ணமி நாளாப் பாத்து போங்க. தங்கத்தாலான மஹிஷாசுரமர்த்தினி க்கு தனி சன்னதி. அது பௌர்ணமி யிலயும் நவராத்திரியிலும் மட்டும்தான் பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும்.

பிர்லா மந்திர் போனீங்களா ?

said...

பொரிச்ச பாப்கார்ன் மாதிரி இருக்குன்னு சொன்னீங்களே..அது சீனியுருண்டைகள். வாங்கித் தின்னுறாதீங்க. கர்நாடகா, ஆந்திரா தொடங்கி..மேல எல்லா மாநிலங்கள்ளயும் அதத்தான் தர்ராங்க. நெனைக்கைலேயே ஒடம்பு புல்லரிக்குது.

அந்த லூதியானா டிரைவரு...பயங்கர ஆளாயிருப்பாரு போல. நல்லவேளை..அவனை அனுப்பீட்டீங்க.

said...

\\இதானே வேணாங்கறது:-))) இப்பவே எல்லாக் கோயிலும் போயிட்டா,
அடுத்தமுறை டில்லி போறப்ப எதைப் பார்க்கறது?
விட்டுவச்சுருக்கேன்:-))))//

அதுசரி...இங்க இருந்துகிட்டே இன்னும் முழுசா முடிக்க முடியல.
வர்ர ஒருவாரத்துல இவ்வளவு விவரமா சுத்திட்டு பதிவு போட்டு கலக்கறீங்க.
51 சக்தி பீட் ல ஒரு கோயிலாச்சே .
நாங்க போனப்போ பிக்பாக்கெட் மற்றும் செயின் திருட்டுக்கு பயந்து போர்த்தி மூடி போகச் சொன்னாங்க கல்கா மந்திர்ல.கூட்டமான கூட்டம்
தான் எப்போதும்.

said...

என்னங்க கொத்ஸ்,
கோபால் எவ்ளோவ் முயற்சி செஞ்சாலும் நம்ம டீச்சர்ட்டே
எடுபடல்லே பார்த்தீங்களா?
டீச்சர்னா சும்மாவா?

சிஜி

said...

சரிங்க ஜெயஸ்ரீ.
பேசாம பஞ்சாங்கத்தை எடுத்துக்கிட்டுப் போயிடறேன்.

பிர்லா மந்திர் போனமுறை , இந்தமுறைன்னு ரெண்டு தரம் போயிருக்கேன்.
அது பத்தி ஒரு பதிவும் போட்டேனே நீங்க பார்க்கலையா?

இங்கேஇருக்கு பாருங்க.

said...

வாங்க ராகவன்.
பயணத்துலே அப்படி எதுவும் வெளியிலே சாப்புடறது இல்லை. கோயில் பிரசாதமா இருந்தாலும்
அதேதான். அதெல்லாம் சாமி புரிஞ்சுக்குவார்.இல்லீங்களா?

க்யான் சிங்கைக் கழட்டி விடறதுக்குள்ளே போதும் போதுமுன்னு ஆயிருச்சு:-))))

said...

வாங்க முத்துலெட்சுமி.

சக்தி பீடக் கோயிலா? அட! தெரியாமப்போச்சே.

பிக்பாக்கெட் இருக்காங்களாமா? அதான்
க்யான்சிங் எச்சரிக்கை விட்டாருபோல:-)))

said...

வாங்க சிஜி.

இது என்னங்க அநியாயம்? டீச்சருக்குச் சப்போர்ட் செய்யறமாதிரியா?
இல்லே கோபாலுக்கு சப்போர்ட்டா?
எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்,ஆமா:-))))))

said...

துளசியக்கா!
உங்க புண்ணியத்தில நானும் கோவில் கோவிலா ஏறி இறங்கிறன். நிற்க இந்த டாக்சிக்காரர் போல இங்கேயும் உள்ளார்கள். நான் ஏறியதும் அவர்களுடன் கதை கொடுத்து பல வருடம் பாரிசில் குப்பை கொட்டுகிறேன் என்பதை சொல்லாமல் சொல்லிவிடுவேன்.
இல்லையோ நம்ம காசில அவன் பாரிசை சுற்றிப் பார்த்திடுவான்.(குறிப்பாக இந்த டாக்சிக்காரர்கள் வெளிநாட்டவராக இருப்பார்கள்)
அனுமார் மிக லட்சணமாக உள்ளார்.

said...

கல்காஜி மந்திர்.டெல்லிலே இத்தனை கோவில்கள் இருக்கும்னு தெரியாது துளசி.
உங்களுக்குனு டாக்சிகாரர் வேற வராரே.:-)
கருடன் நல்ல அழகு. கண் நல்லா வரைஞ்ச மாதிரி இருக்கு.கர்னாடகா பக்கத்திலே எல்ல விக்ரகத்துக்கும் இப்படிச் செது பார்த்து இருக்கேன்.
வலைப் பதிவர் கூட்டம் பதிவு எப்பொ?

said...

வாங்க யோகன்.

கோயில் சுத்திக் கிடைக்கிற புண்ணியத்தைத்
தமிழ்மணக் குடும்பத்துக்குக் கொடுத்துறப்போறேன்:-))))

said...

வாங்க வல்லி.

டில்லியிலே கோவிலுக்கு என்ன பஞ்சம்? நமக்குத்தான் நேரம் இருக்கணும்
அங்கெல்லாம் போக.

வலைப்பதிவர் சந்திப்பா?
தோ.............வந்துக்கிட்டு இருக்கு:-))))

said...

கல்காஜி மந்திர்ன்னவுடனே கல்கியின் கோவில்ன்னு நெனைச்சுக்கிட்டேன். அதுவும் நீங்க எள்ளு கடுகுன்னு தொடங்கியிருந்தீங்களா கல்கி இல்லாட்டி சனீஸ்வரன் கோவில்ன்னு நெனைச்சுக்கிட்டேன். பின்னூட்டங்களைப் படிச்சப் பின்னாடி தான் கண்ணனின் முன் பிறந்த கருமாரி தேவியின் கோவில்ன்னு புரிஞ்சது.

யோகன் ஐயா சொன்ன மாதிரி உங்க புண்ணியத்தால கோவில் கோவிலா போய் பாக்கறேன் நானும்.

said...

வாங்க குமரன்.

எள்ளு கடுகுன்னு இல்லாம 'எள்ளு உளுந்து'ன்னு இருந்துருக்கணும்,இல்லே? :-)))))
தெரியாமப்போச்சேப்பா..............
டெல்லியிலே எக்கச்சக்கமான கோயில்கள். எப்படின்னுதான் எனக்கு ஆச்சரியம்!
இத்தனைக்கும் அங்கேதான் அன்னியப் படையெடுப்பு நிறைய நடந்துருக்கு.