Saturday, March 31, 2007

தில்லிஹாட்


நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 10 )பதினைஞ்சு ரூபாய் கொடுத்து ஒரு டிக்கெட் வாங்கிக்கிட்டு 'தில்லிஹாட்'குள்ளே நுழைஞ்சேன். 200 கைவினைப் பொருட்கள் கடைகளும்,25 சாப்பாட்டுக்கடைகளும் இருக்கு. தில்லி சுற்றுலாக்கழகம் இதுக்குத் துணை நிக்குதுன்னு சொன்னாங்க.
இங்கேயும் பாதுகாப்புப் பரிசோதனைகள். பூரா டெல்லியும் ஒரு நடுக்கத்துலே இருக்கு போல. முதலில் கண்ணுலே பட்டதைச் சொல்லணுமுன்னா தமிழ்நாட்டுக்கே வந்துட்டோமோன்னு இருந்துச்சு. 'பூம்புகார்'லே பார்த்த மரச்சாமான்களும், தஞ்சாவூர் படங்களுமா ஒரு அலங்காரம். நம்ம யானைகள் வேற இருக்கு.இன்னும் உள்ளெ நடந்தால் தலையணை உறைகள், குஷன் கவர்கள், படுக்கை விரிப்புகள்ன்னு பல. ஜில்லாலி பில்லாலின்னு நகைக்கடைகள். வெள்ளி( வெள்ளை)க் கம்பியிலே கட்டுனது, பாசிமணிகள், செயற்கைக் கற்கள் பதிச்சதுன்னு நிரம்பி இருக்கு. இளவயசுகளைக் கவரும் கடைகள் இதுதான் போல. மொத்தக்கூட்டத்துலே முக்காலே மூணுவீசம் இங்கேதான்.பெயிண்டிங் விற்பனை, தரைக்கம்பளம்னு இன்னும் கொஞ்சம் அங்கங்கே. பிலிகிரி வேலைப்பாடுகள் ஒண்ணு ரெண்டு.ஒயிட்மெட்டல் சாமான்கள், பித்தளைக் கிண்ணங்கள்ன்னு இன்னும் நாலைஞ்சு. விலை என்னவோ கூடுதல்ன்னுஒரு எண்ணம் எனக்கு. படுக்கைவிரிப்பு ஒரு செட் மட்டும் பேரம் பேசி வாங்குனேன். விற்பனையில் எல்லாம் ச்சின்னவயசுப் பசங்க. 'ஆண்ட்டி ஆண்ட்டி'ன்னு சட்னு உறவுமுறை வச்சுக் கொண்டாடுதுங்க.
சாப்பாட்டுப் பிரிவு பார்த்தாலே அவ்வளவு சுகமில்லை. வெளியே உக்காந்து சாப்புட மேசையெல்லாம் போட்டு இருக்கும் ஃபுட் கோர்ட்டுங்கதான். 'சாட்' சாப்புட்டுக்கிட்டு இருக்காங்க மக்கள்ஸ். தமிழ்நாடு மாநில சாப்பாட்டுக்கடை ஒன்னு இருக்கு. ஊஹூம்................பேசாம சரவணபவன் கிளையா இருக்கக்கூடாதா?இருக்கறதுலேயே எனக்கு ஆர்வமா இருந்த கடைகள், பூச்செடிகள், அலங்காரச்செடிகள் விற்பனைதான். நல்லநல்ல கத்தாழை & கள்ளிச்செடிகள் இருக்கு. பராமரிப்பு சுலபம். உத்தரப்பிரதேசக் கைவினைக் கலைஞர்களுக்கான இந்த அமைப்பு ஓரளவு அவுங்களுக்கு உதவியா இருக்குமுன்னுதான் நினைக்கிறேன். மொத்தம் 6 ஏக்கர் நிலத்துலே அமைச்சிருக்காங்க. படுக்கைவிரிப்புக் கடைப்பசங்க எல்லாரும் காசியிலே இருந்து வந்தவங்களாம். வருசம் ஒருமுறை ஊர்ப்பக்கம் போய் வராங்களாம். சித்திரம் வரையும் ஆட்கள் வெவ்வேற மாநிலங்களுக்கு அங்கங்கே பொருட்காட்சிகள் நடக்கும்போது போய்வர்றது உண்டாம். வள்ளுவர் கோட்டத்தைப் பத்தி ஒருத்தர் நினைவு கூர்ந்தார். நம்மளைப் பார்த்ததும்தான் 'மத்ராஸி'ன்னு தெரிஞ்சுருதே.
நம்மூர் உழவர் சந்தை மாதிரியா இது? கைவினைப் பொருட்கள் செய்யறவங்க இங்கே வந்து நேரடியாக் கடை போட்டுக்கலாமுன்னு சொன்னாலும், இன்னும் இடைத்தரகர்கள் மூலமாத்தான் வியாபாரம் நடக்குது. இங்கே வந்து உக்காந்துக்கிட்டா அங்கேபொருட்களைச் செய்யறது யாரு? இதே சாமான்களை முந்தி ஒரு காலத்துலே ஜன்பத் ப்ளாட்ஃபாரத்துலே பார்த்துருக்கேன்.அப்ப 100 ரூபாய்க்கு வாங்குன பெயிண்டிங் இப்ப இங்கே 3000 ரூபாய்ன்னு கூசாமச் சொல்றாங்க. விலைவாசி ஏத்தமுன்னாலும் இப்படியா? இந்தமுறை இன்னும் ஜன்பத் ஷாப்பிங் போகலை. முடிஞ்சா இன்னிக்குப் போகணும்.கரோல் பாக்லே ஒரு வேலை இருந்துச்சு. அதை முடிச்சுக்கிட்டு வரலாமுன்னு போனப்பயும் அந்த ஹனுமார் காட்சிகொடுத்தார். இருக்குமிடம் ஷிருடிசாயி கோயில். விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் இருக்கும் விஸ்வரூபம்! கண்ணு 'குறுகுறு'ன்னு நம்மையே பார்க்குதோன்னு இருக்கு. எப்பக் கட்டி முடிக்கப்போறாங்களோ? இப்ப எல்லா கோயிலும் மூடி இருக்கும் நேரம். அப்புறம் பார்க்கலாம்.


குளிர்காலைச் சோம்பல் முடிஞ்சு தில்லியேபரபரப்பா இயங்குது. அந்த ஓட்டத்தில் நாமும் கலந்துக்கலைன்னா எப்படி? போகும் வழியில் நம்ம அடையாறு ஆலமரம்போல வேரும் விழுதுமா ஒரு பிரமாண்டமான ஆலமரம் நகரத்துக்குள்ளில்.


தொடரும்...........
----------------

24 comments:

said...

முதல் 3 படங்களைப் பார்த்ததும்,சரி இங்கிருந்து உங்கள் ஊருக்கு வாங்கிப்போனதை போட்டிருக்கீர்கள் என்று நினைத்தேன்.
:-))

said...

வாங்க குமார்.

இதானே? இவ்வளவும் வாங்க ஐவேஜ் ஏது?

ஆமா, முந்தாநேத்து உங்க 'ச்சிங்கைச்சீனு' படம் பார்த்தீங்களா?

said...

முதல் படத்தில்
பெருமாள் படத்துக்குக் கீழே ரெண்டு குட்டி யானைகள்!
அவற்றை டீச்சர் விலைகொடுத்து ஓட்டிக் கொண்டுப் போய் விட்டதாக ஒரு சேதி வந்ததே! :-)

said...

பாக்கவே சந்தோஷமா இருக்கும் ...ஊருல இருந்து வரவங்கள கூட்டிட்டு போற ஒரு சுற்றுலா இடங்களில் இதுவும் ஒண்ணு அப்படியே சுத்திட்டு கடைசியா எதாச்சும் ஒன்னோ ரெண்டோ குறைச்ச விலையா இருக்கறதா வாங்கிட்டு வருவேன்.
போன மாசம் பாண்டிச்சேரி ஆளுங்க கடையில் இருந்து நிஜ சங்குபுஷ்பம் ஒட்டி செய்த கீ செயின் ஹோல்டர் வாங்கிட்டு வந்தேன். பூவ காயவச்சு பாடம் பண்ணி மரத்தட்டுல ஒட்டி அது மேல பிளாஸ்டிக்
பேப்பர் அப்படியே லேமினேஷன் மாதிரி.அங்க விலையெல்லாம் கொஞ்சம் கூடுதல் தான்.ஆனா என்னல்லாம் கிடைக்குது ஒவ்வொரு ஊருலன்னு தெரிஞ்சுக்கலாம்.

said...

வாங்க KRS.

யானை எங்கே வாங்கறது?
நிஜமாவே யானை விலை(-:

திருநெல்வேலிக்கே அல்வாவான்னு வந்துட்டேன்:-)

said...

வாங்க முத்துலெட்சுமி.

சங்கு புஷ்பம்? பார்த்து எவ்வளோ நாளாச்சு? இப்ப நீங்க சொன்னதும்தான்
ஞாபகம் வருது. எவ்வளோ அழகு இல்லே?

இதெல்லாம் என் கண்ணுலே அப்பப் படலை(-:

பட்டுருந்தாலும் பார்த்துப் பெருமூச்சு விட்டுட்டு வந்துருப்பேன். இங்கே
அதெல்லாம் ஒண்ணும் கொண்டுவரமுடியாது.(-: மாட்டிக்கிட்டா பத்தாயிரம்
டாலர் வரை ஃபைன் கட்டணு(மா)ம்.

said...

படமெல்லாம் நல்லா இருக்கு துளசி. தில்லி ஹாட்ன என்ன அர்த்தம்.
சென்னையில் இப்போது எங்க பர்த்தாலும் இந்த மாதிரிக் கடைகள் தான்.

அதுவும் ஒரு சொளகுல(வட்டம்)
சித்திரம் வரைந்து வித்ததை ரொம்ப நாள் முன்னாலே வாங்கினேன்.
நவராத்திரிக்கு வச்சு கொடுத்தா நம்ம மங்கையருக்கு அவ்வளவா ரசிக்கலை:-)

said...

படமெல்லாம் சூப்பர்!
//இடைத்தரகர்கள் மூலமாத்தான் வியாபாரம் நடக்குது//
இவங்க தானே கொள்ளை லாபமடிக்கிறாங்க.கஷ்டப்பட்டுச் செய்தவனோட உழைப்பெல்லாம் இவங்க தான் உறிஞ்சி எடுத்திர்றாங்க.

said...

//விற்பனையில் எல்லாம் ச்சின்னவயசுப் பசங்க. 'ஆண்ட்டி ஆண்ட்டி'ன்னு சட்னு உறவுமுறை வச்சுக் கொண்டாடுதுங்க.//

அங்கயும் அப்படித்தானாக்கா? :))

said...

நீங்க போட்டிருக்கற அனுமான் 108 அடியாம் ..108 நாமம் ஜெபிப்பார்ங்கறதாலயாம். உலகத்துலயே உயரமான அசையும் சிலையா இதை செய்யறாங்களாம் இன்னைக்கு பேப்பரில் இருக்கு.
சுவிட்ச் போட்டா அனுமானோட கை நகர்ந்து திறந்து இதயத்தில் இருந்து ஒரு தட்டு வெளியே வருமாம் அதுல தங்கத்துல செஞ்ச ராமன் சீதா உருவம் வருமாம்.

said...

வாங்க வல்லி.

தில்லி சூடுன்னு சொல்லவா? :-))))

தில்லி 'ஹாத்' ( உதவும் கரங்கள்?)

எப்படியோ உதவிக்கு யாராவது தில்லி நண்பர்கள் வரணும்:-))))

said...

வாங்க செல்லி.

இந்த 'மார்கெட்டிங்' ஒரு பிரச்சனைதான். ஆனா தரகர்கள் இல்லேன்னா
தயாரிப்புகளை எப்படி விப்பாங்க?

அவ்வளவு வாடகை கொடுத்து வியாபாரம் நடத்த முடியுமா?

said...

//அங்கயும் அப்படித்தானாக்கா? :)) //

ஆமாம், கொத்ஸ்தம்பி:-)

said...

என்னங்க முத்துலெட்சுமி.

சிலை வேலை முடிஞ்சுருச்சா? திறப்பு விழாவா?

சூப்பர் செய்தியா இருக்கேங்க. தங்கத் தட்டா?
நமக்கு(ம்) ஒரு தட்டு தருவாங்கல்லே?

said...

அடடடடா... சூப்பர் பயணக்கட்டுரைங்க..

படமும் செய்தியும் அசத்தறீங்க..

இப்படியே இந்தியா முழுசும் சுத்தி ஒரு புத்தகமாவே போட்டுருங்க.. பிச்சிக்கிட்டு போகும்..:))

said...

வாங்க டிபிஆர்ஜோ.

இன்னும் 999 பேர் வாங்கறேன்னு கேரண்டி கொடுத்தா நான் புத்தகம் போடத்தயார்:-)))))

இல்லே நீங்களே வாங்கிக்கிட்டாலும் சரிதான்.

said...

டீச்சர், ஆயிரம் சொன்னாலும் இந்தக் கைவினைப்பொருள்கள் விஷயத்துல மேற்கு வங்கத்த அடிச்சுக்கவே முடியாது. இடைத்தரகெல்லாம் கிடையாது. ரொம்பக் கொறைஞ்ச விலைல நல்ல தரமான பொருட்கள். டெர்ரோகோட்டா ஹரிக்கேன் விளக்கு முப்பது ரூவா. அந்த வெளக்குல இருந்த வேலைப்பாட்டுக்கு மத்த ஊர்கள்ள 300-400 ரூவா போடுவாங்க. பத்து ரூவாய்க்கு துர்க்கா முகங்கள். டெர்ரகோட்டாதான். ஆனா திருத்தம்னா திருத்தம்..அப்படியொரு திருத்தம். அதே மாதிரி பல பொருட்கள். உண்மையிலேயே நான் அசந்துட்டேன்.

said...

கரெக்சனுக்கு நன்றி துளசி :D

இந்த முறை தில்லிப் பக்கமும் எட்டி (எட்டி மட்டுமே) பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கும். அப்ப என்னவெல்லாம் செய்யலாம் என்று ஐடியா கொடுக்கிற மாதிரி நிறைய விஷயங்கள்

said...

வாங்க ராகவன்.

அடடா..நீங்க சொன்ன பக்கமெல்லாம் கட்டாயம் போய்த்தான் தீரணும்போல
இருக்கே!
கோபால், 'பதீக்' படுக்கை விரிப்பும், தக்ஷிணேஸ்வரர் கோயில் வாசலில் விற்கும்
பித்தளை அகல்களும்தான் வாங்கிவந்தார்(-:

இங்கே trade aidன்னு ஒரு கடை இருக்கு. பலநாட்டுக் கைவினைப்பொருட்களும்
(குறிப்பாக ரொம்ப வருமானமில்லாம நலிஞ்சிருக்கும் சமுதாயத்தினர் செய்யறது)
விக்கறாங்க. அங்கேதான் வழக்கமாப் பரிசுப்பொருட்கள் வாங்கறது. போய்ப் பார்க்கணும்
துர்க்கா முகம் இருக்கான்னு. போன முறை நடுவில் மகிஷாசுர மர்த்தினி, ரெண்டு பக்கமும்
லக்ஷ்மி, சரஸ்வதி, பிள்ளையார் & முருகன்னு இருந்தது கிடைச்சது. டெர்ரகோட்டாதான்.
முகம் திருத்தமா இல்லேன்னாலும் விடமனசில்லை.

said...

ஆஹா......... இதென்ன பாபாவின் தரிசனம் இங்கே!!!!!!

உள்ளூர்லேயே பார்க்காம விட்டதுன்னு நிறைய இருக்கு பாபா(-:

said...

// துளசி கோபால் said...
வாங்க ராகவன்.

அடடா..நீங்க சொன்ன பக்கமெல்லாம் கட்டாயம் போய்த்தான் தீரணும்போல
இருக்கே!
கோபால், 'பதீக்' படுக்கை விரிப்பும், தக்ஷிணேஸ்வரர் கோயில் வாசலில் விற்கும்
பித்தளை அகல்களும்தான் வாங்கிவந்தார்(-: //

டீச்சர், தொக்கினேஷ்வர் கோயிலே மிக அழகு. ரொம்ப ரொம்ப. அதுல மகாகாளியைச் செம்பருத்தி மாலைகளோட பார்க்கின்ற காட்சி இருக்குதே! மகமாயி!

அங்கயும் நல்ல கைவினைப் பொருட்கள் கெடைக்கும். அங்க போனா லுச்சியும் கூகுனியும் சாப்பிடக் கிடைக்கும். லுச்சிங்குறது பூரி மாதிரி. கூகுனிங்குறது பருப்பு வகை. ரொம்ப நல்லாயிருக்கும்.

said...

ராகவன்,

செம்பருத்திக் காளியா? ஜோரா இருக்குமே!

நம்மூர்களிலேயே என்னென்னெல்லாம் இருக்கு பாருங்க. வாழ்நாள் போதுமான்னு தெரியலை
அனுபவிக்க!

அடுத்தமுறை 'பார்க்க' வேண்டியது: லுச்சி & கூகுனி

நோ 'லபக்'

said...

ஷாகுந்தலா, பிரகதி மைதான் பத்தியெல்லாம் எப்ப எழுத போறீங்க/ படமெல்லாம் நல்லா இருக்கு, லோதி கார்டன் படமும் அழகா இருந்தது. எல்லா பதிவுக்கும் இங்கேயே சொல்லிடறனே.

said...

வாங்க பத்மா.

பிரகதி மைதான் பக்கம் போய்ப்போய் வந்தேனே தவிர உள்ளே போக வாய்க்கலை.
ஷாகுந்தலம் போலாமுன்னாலும் ஒரே ஃபில்ம் ஷோவா இருந்துச்சு. இவரும்
ஆஃபீஸ் வேலையில். தனியாப் போக ஒரு சோம்பல்தான்(-: