Thursday, March 29, 2007

கிடக்கறது கிடக்கட்டும், லீ' யைத் தூக்கி......

ச்சும்மா இருந்து தொலைக்கலாமா இல்லையா? மாட்டேன்.......... முடியாது.

மொதல்லே இதுக்கு ஒரு விளக்கம் யாராவது சொல்லுங்க. தலைப்பு வைக்கறதுக்குநிஜமாவே 'உக்காந்து' யோசிப்பாங்களா? என்னமோ ச்சீனாக்காரனைப் பத்திக் கதைன்னுபார்த்தா.............. லீலாதரனாம்ப்பா! அதைச் சுருக்கி 'லீ' சரியாபோச்சு.



ஒவ்வொரு ஆளா ஆரம்பத்துலே அறிமுகம் ஆகுது. அவுங்க எல்லாருக்கும் சோறு போடஒரு அக்கா என்னப்போல! உழையோ உழையோன்னு உழைச்சுக் காசு சேப்பாங்க இவுங்க.எதுக்கு? துப்பாக்கி வாங்கிக்கணுமாம். கொலை செய்யணுமுன்னா துப்பாக்கிதான். இல்லேன்னா????முடியவே முடியாத்.
போட்டுத் தள்ளப்போறது யாரை?


விளையாட்டுத்துறை மந்திரியை!


இப்பக் கிரிக்கெட்டுலே தோத்ததுக்கா?


ச்சீச்சீ....இல்லைப்பா. புட்பால் டீமை கண்டுக்காமப் போனதுக்கு.


எதுக்குக் கிரிக்கெட்டைவிட புட்பால் ஒசத்தி? ன்னு லீ விளக்கமெல்லாம் சொல்றாரு.


இவ்வ்ளோ கூட்டமாப் பையனுங்க இருக்காங்க. அப்ப கதாநாயகி இல்லையா?


ஏன் இல்லாம? ஒரு பொண்ணு இருக்கு. இருக்கு. இருக்கு. பொருத்தமா பைத்தாரஸ்பத்ரியில் வேலை வேற செய்யுதே!


படத்தயாரிப்பாளர் தன் பையனுக்காகவே மெனெக்கெட்டு செஞ்ச படம்.


யாரு.............. தயாரிப்பாளர்?


நாயகனின் அப்பா.


அவர் பேரு?


சத்தியராஜு.

12 comments:

said...

ரூம்போட்டு யோசிப்பாங்களோ!

said...

இல்லியா பின்னே?

வாங்க சிவமுருகன்,

பெத்த புள்ளைக்காக என்னவெல்லாம் செய்யணும் பாருங்க.:-))))

said...

ஒஹோ, இது தந்தை மகற்காற்றும் உதவியா? படம் பார்த்தப்போ இதை கவனிக்கவே இல்லயே நான். எனக்கென்னவோ படம் ஒரளவுக்கு பிடிச்சிருந்தது. இதுவரை சிபி நடிச்சு வந்த்ததிலேயே ஒரளவு நல்ல இயல்பான கதைன்னா அது இந்த படத்துலதான்னு நினைக்கிறேன்.

said...

நானும் இதேமாதித்தான் நினைச்சேன். அதாவது ஏதொ Bruce Lee அப்பிப் படமாக்கம் என்று.
படத்தை பாக்கப் பாக்க எரிச்சலாத் தான் இருந்தது.
உப்புச் சப்பத்த கதையும், படத்தின்ர பேரும்!

said...

ல லா லி லீ....
எழுதிப்பார்த்தாலும் பிரயோசனம் உண்டு.......

said...

வாங்க லக்ஷ்மி.

ஒரு க்ரூப்பாப் பசங்க ( பதிவர்கள் மாதிரி?) இருந்துக்கிட்டுன்னு ஆரம்பிக்கிற சினிமாங்க
எக்கச்சக்கமா வந்து அலுத்துப்போச்சு. இதுலே நாயகனைச் செல்லமாக்கூப்புடணுமுன்னே
பில்லு, லொள்ளூன்னு பேருங்க வேற.

இப்ப நம்ம கிரிக்கெட்டு நிலமை இருக்கற இருப்புக்கு மத்த விளையாட்டை
எப்படியாவது முன்னேத்தணுமுன்னுதான் இருக்கு. சில வசனங்க்கள் நல்லா ஷார்ப்பாவும்
இருக்கு இந்தப் படத்துலே.

மனுஷனுடைய பொழுதுபோக்குக்கு ஸ்போர்ட்ஸ்ன்னு ஆரம்பிச்சு, இப்ப ஸ்போர்ட்ஸ்தான் வாழ்க்கைன்ற
அளவுக்கு உலகம் போயிருச்சு. எவ்வளோ நேரம், பணம் எல்லாம் விரயம்தான்.என்னவோ போங்க.

said...

வாங்க செல்லி.

படத்தோட கதையைவிட இந்தப் பேருங்கதான் பேஜாரு பண்ணிருது.

said...

வாங்க சிஜி.

என்ன பாதியிலேயே விட்டுட்டீங்க. ல முதல் லெள வரை எழுதலையா? :-))))

said...

டீச்சர் சாமி பத்திப் பேசும் போது லீ பத்தியா? பாயாசத்துக்கு நடுவில பச்சை மிளகாய் மாதிரி. போங்க டீச்சர்.

said...

வாங்க கொத்ஸ்.

சாமிக்கு நடுவுலே ஆசாமி வரக்கூடாதா?

அப்பப்ப இகத்தையும் சேர்த்துக்கணுமேய்யா பரத்துக்கு நடுவில்:-)

இல்லேன்னா, 'இதென்ன டீச்சர் காவிப்புடவை கட்டிக்கிச்சு?'ன்னு சேதி பரவிடாது?
அது பாட்டுக்கு அது இது பாட்டுக்கு இதுன்னு அதென்ன சொல்வாங்க?..........ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஆங்.........தாமரை இலைத் தண்ணிபோல இருக்கணும்ப்பா.

said...

ல லா லி லீ....
எழுதிப்பார்த்தாலும் பிரயோசனம் உண்டு//
:-)எங்ஏ பாத்தீங்க இந்தப் படத்தை ஐயோ பாவமே. அப்பாவாவது ரசிக்கலாம். பையன் பாவம்.
உழைப்பெல்லாம் வீணாகுது நம்மா ஊரில. இப்படித்தான்.
பொறுமையாப் பாத்தீங்களே.!!

said...

வல்லி,

குமுதம் விமரிசனம் படம் நல்லாருக்குன்னு சொல்லுது.

கிரிக்கெட் ஆட்கள் மீதுள்ள கோபம் காரணமா? :-)))))