Thursday, May 11, 2006

கட் பல்லு & புல் பாடி வொர்க்

பயண விவரம் பகுதி 25


"எதிர்லே இருக்கே அது ஜிம் . கொஞ்சம் தள்ளி இந்தப் பக்கம் பாருங்க அது குழந்தைகள் காப்பகம், கூடவேநர்சரி ஸ்கூல்"


" அட. அப்படீங்களா?"


" இது ஹெல்த் கேர் செண்ட்டர்"" சந்தோஷமா இருக்கே. இன்னும் விவரமாச் சொல்லுங்க"

"அதாங்க, நல்ல தார் ரோடு, நிறைய மரங்கள் , மரத்தை யாரும் ஒடைச்சிடாம இருக்க அதைச் சுத்தி பாதுகாப்பு வேலி, தெரு விளக்குங்க, அருமையான தொலைத்தொடர்புக்கு கம்யூனிகேஷன் சிஸ்டம்,இண்டர்நெட், கேபிள் டிவி."


"அடடே. ம். சொல்லுங்க"


"நல்ல ஷாப்பிங் செண்ட்டர், ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர், அதுலே ATMவசதி, நீச்சல் குளம், ரெஸ்டாரண்ட், ஓய்வா நடக்கறதுக்கும், ஜாகிங் பண்ணறவங்களுக்கும் தனியா ஒரு இடம், குழந்தைகள் விளையாடத் தனிப் பகுதி, அங்கங்கேச் சின்னதா அழகான மரங்களோடு பார்க், விருந்து நிகழ்ச்சிக்கு ஒரு பெரிய ஹால். 24 மணி நேரமும் செக்யூரிட்டி.பக்கத்துலே இருக்கற பஸ் ஸ்டாப்புவரை கொண்டு விடறதுக்கும், கூட்டிவர்றதுக்கும் மினிவேன் ......."

" என்னங்க, நிஜமாவா இவ்வளவும்?"

" ஆமாங்க. க்ளப் வேற வருது. அதுலே ஸ்பா, ஜிம், sauna, டென்னிஸ் கோர்ட், பேட்மிண்ட்டன் கோர்ட், ஸ்நூக்கர் டேபிள்எல்லாம் உலகத்தரத்துலே இருக்கு."


திறந்தவாய் மூடாம அந்தப் 'பொட்டல் காட்டுலே' அவர் கை காட்டுன பக்கமெல்லாம் திரும்பித்திரும்பிப் பார்த்து ஒரேகழுத்து வலி.


"வீடுங்க எல்லாமே 100% வாஸ்து பிரகாரம்தான் கட்டித்தருவோம். நிறையப்பேர் புக் பண்ணிட்டாங்க. இன்னும் கொஞ்சம்தான்இடம் இருக்கு. நாங்களே பேங்கு லோனுக்கும் ஏற்பாடு செஞ்சு தரோம்."


" தண்ணி வசதி....."


" வீட்டுவீட்டுக்குத் தனி போர்வெல் போடறோம். தண்ணிக் கஷ்டமே இருக்காது. மொத்தம் 1400. எல்லாமே தனித்தனி பங்களா. இண்ட்டர் நேஷனல் ஏர்ப்போர்ட் இங்கே வருது. ரொம்பப் பக்கம்"


மனசுக்குள்ளே 'திருமதி ஒரு வெகுமதி' படம் வந்து போகுது.


ரெண்டு மாடல் வீடுங்க மட்டும்தான் அங்கே இருக்கு. உள்ளே போய்ப் பார்த்தா நல்லாவே இருக்கு, குட்டிக்குட்டியா சிட்டிங் ரூம், டைனிங், கிச்சன், பெட்ரூமுன்னு!ச்சும்மாச் சொல்லக்கூடாது அழகா ஃபர்னிஷிங் பண்ணி வச்சிருக்காங்க. டைல்ஸ், பெயிண்ட் எல்லாம் நல்ல அருமையானகலர் காம்பினேஷன். பேசாம ஒண்ணு வாங்கி போட்டுரலாமான்னு ஆசையாத்தான் இருக்கு.


போரூர் பக்கத்துலே 'இவிபி மெகா டவுன்' வருதாமே, அங்கேதான் நிக்கறோம். அந்த சைட்டுலே நின்னு பார்த்தா,தொலை தூரத்துலே வீராணம் தண்ணி வர்றதுக்குப் போட்ட குழாய்கள் தெரியுது. கூடவே ஒரு பை பாஸ் ரோடு கண்ணுலே பட்டது. போனவருசம் பெய்ஞ்ச மாதிரி மழை வந்தா அங்கெல்லாம் வெள்ளக் காடாயிரும் போல.நாமளே அங்கே போய் இருக்கறதுன்னா பரவாயில்லை. வாடகைக்குப் போகட்டும்னு வாங்கிவிட முடியாதுன்னு நினைக்கிறேன். அம்மாந்தூரத்துலே யாரு வாடகைக்கு வீடு எடுப்பாங்க? வாங்குற கடனுக்கு வட்டியாவது தேறுமான்னுபார்க்கணும். இப்படியெல்லாம் மனசுக்குள்ளே கணக்குப் போட்டுக்கிட்டு நாங்க( நானும், அண்ணனும் & அண்ணியும்)திரும்பி தி.நகர் வரை வந்தோம். அங்கே ஒரு வேலையை முடிச்சுக்கிட்டு சாப்புடலாமுன்னு செட்டிநாட்டுக்குப் போனோம்.உள்ளே அலங்காரம் எல்லாம் அட்டகாசமா இருந்துச்சு. செட்டிநாடுன்னு சொல்லிக்கிட்டு பரிமாறுனவங்க எல்லாம் பஞ்சகச்சம் மாதிரி ஒரு வேஷ்டி/வேட்டி கட்டி இருந்தாங்க. நார்த் இண்டியன் ஸ்டைலிலே ஒரு ஜிப்பா டாப்!எனக்கென்னமோ அங்கே சாப்பாடு ரொம்ப சுமார்னு பட்டது. இதைவிட அருமையா நானே சமைக்கிறதாலெ அப்படித்தோணியிருக்கும்:-))) சாப்பாடு நல்லா இல்லைன்றதாலே மெனுவைச் சொல்லலை. அண்ணி அருமையா சமைப்பாங்க.சமையல் மட்டுமில்லை, ரொம்ப அருமையா துணிகளை டிஸைன் செய்வாங்க. எனக்குத் தைக்கறதுக்கு 'ஆர்வம்'வந்ததே அவுங்களாலேதான். என்னைவிட வயசுலே ச்சின்னவங்கதான். படு ஸ்மார்ட். சட்னு கோபம் வரவே வராது.எல்லாத்தையும் எளிமையா எடுத்துப்பாங்க. பெரியமனசு. அதனாலே எங்களுக்கெல்லாம் ஒரு 'ரோல் மாடல்'னு வச்சுக்கலாம்.


இவ்வளவு தூரம் வந்துட்டு ச்சும்மாப் போயிரமுடியுமா? பாண்டி பஜார்லே ஒரு சுத்து. இங்கே எங்கியோ நரசுஸ் காஃபிகிடைக்குதாமே அங்கே போகலாம்னு அண்ணி சொன்னாங்க. தேடிக்கிட்டே நடந்தோம். கடைசியிலே கடையைக் கண்டுபிடிச்சது நாந்தான். காஃபி வாசனை வருதான்னு 'மோப்பம்' புடிச்சுக்கிட்டே போயிட்டேன். கடைக்காரர்கிட்டே இதைச்சொன்னதும் அவருக்குப் பரம சந்தோஷம். கொஞ்சம் காஃபி வகைகளைப் பத்தி அளந்துட்டு இந்த 'சிக்கரி' யைப்பத்தி விசாரிச்சேன். பத்து பெர்ஸண்ட் சிக்கரி சேர்த்தா காஃபி நல்லா திக்காவும் மணமாவும் இருக்குமாம். அதையும்ஒரு கை பார்த்துரலாமுன்னு ஒரு 50 கிராம் பாக்கெட்( ரெண்டே ரூபாய்தான்) வாங்கி வந்தேன். காஃபி பவுடர் கலர்லெயே இருக்கு. இங்கே 'நாய்' பிடிச்சாச் சொல்லிக்கலாமுன்னு இருந்தேன்.


'ஹை ஸ்டைல்' போகலாமுன்னு அண்ணா நகர் போனோம். கடை அருமையாத்தான் இருக்கு. பார்க்கிங்தான் கஷ்டம்.ரொம்பச் சின்ன இடத்துக்குள்ளே, வண்டியை கொண்டு நிறுத்த பயமா இருக்கு. ஏற்கெனவே புத்தம் புது வண்டியிலே ரெண்டு கீறல் விழுந்துருச்சு. ஆனா அங்கே இருக்கற கடையின் காவற்காரர், 'முன்னே வா வா'ன்னு கையைக் காமிக்கிறார். டைட்டாப் பார்க் செஞ்சுட்டாக் கதவைத் திறக்க முடியாது. அப்புறம் எப்படி இறங்கறதாம்?


கீழே பேஸ்மெண்ட்லே புடவைகள், சுடிதார் எல்லாம் வச்சிருக்காங்க. அருமையான வேலைப்பாடுகள். 'தங்க வேட்டை' புடவைகளாம். கட் பல்லு டிஸைன். ' ஃபுல் பாடி வொர்க். நல்லா இருக்கே' ன்னு சொன்னது யாருன்னா அண்ணன்! எனக்கோ ஒரே ஆச்சரியம், இதெல்லாம்கூட இவருக்குத் தெரியுமான்னு. அப்ப மெதுவாச் சொல்றார், 'சில டெர்ம்ஸ் கத்து வச்சுக்கிட்டு இருக்கேன். அப்பப்ப எடுத்து விடணும். இல்லேன்னா உங்க அண்ணி நம்மளை ஓரங்கட்டிருவாங்க'ன்னு.கட் பல்லு டிஸைன். தகதகன்னு சம்கி எல்லாம் வச்சுத் தைச்சு நல்லாதான் இருக்கு. முந்தானை தோளிலே கொசுவ வேணாம். அப்படியே தோளிலே 'சக்'னு நிக்குது! விலையும் மோசமில்லை.ஆனா ரொம்பச் சின்னப் பசங்களுக்குத்தான் நல்லா இருக்கும். 22ன்னா தேவலை. ஆனா ஒல்லியா இருக்கணும். இந்த ரெண்டுவகையிலும் சேர முடியாததாலே இது அவுட்.இப்படி ஊர் சுத்தறதுக்கு நடுவிலேயும், அண்ணன் வீட்டை ( தற்போதைய)விக்கறதுக்கு விளம்பரம் கொடுத்துருந்ததாலே, வீட்டைப்பார்க்கவும் ஆட்கள் வர்றதாலெ வீட்டுக்கும், கடைக்குமா ஓடிக்கிட்டு இருந்தோம். பன்னெண்டு வருஷப் பேச்சு வேறதொடர்ந்துக்கிட்டு இருந்தது. வீடு பார்க்க வந்தவங்களோடவும் பேரமுன்னு நாள் பறந்துதான் போச்சு.


'நம்பிக்கை துரோகம் மகா பாவம்' என்ற கருத்து இருக்கறதாலே, 'நம்மை நம்பி' வாங்கிவச்ச அநேகத் தீனிகளையும்,போதாதுன்னு வீட்டுலே சமைச்சுப் போட்ட விருந்தையும் பழங்கதைகளைத் 'தொட்டுக்கிட்டே' ஒரு பிடி பிடிச்சுட்டு,குமரன் நகரை இருட்டுலே வலம்வந்த புண்ணியத்தையும் தேடிக்கிட்டேன். கூடவே ப்ரவுஸிங் செண்ட்டர்லே பசியாலேதுடிச்சுக்கிட்டு இருந்த கொசுக்களுக்கும் ரத்ததானம் செஞ்சுட்டு வீட்டுக்கு வந்தோம்.


ஏங்க, இந்தக் கொசுங்க எல்லாம் பத்தடிக்கு மேலே பறக்காதாமே? அதுனாலே மாடி வீட்டுலே இருந்தா கொசு வராதாமே! இப்படியெல்லாம் மக்கள்ஸ் சொல்லிக்கிட்டு இருக்கறதை மட்டும் நம்பிராதீங்க. ஏங்க கொசுவுக்கு மட்டும் மூளை, புத்தி எல்லாம் இல்லையா? ஒரு மாடிக்கு, அதான் பத்தடி பறந்து வந்துருது. அங்கிருந்து பத்தடி தானேங்க அடுத்த மாடி?இப்படியே எத்தனை மாடி இருந்தாலும் வருமுங்க. இல்லேன்னா இருக்கவே இருக்கு படிக்கட்டு. அதுலேயும் உக்கார்ந்து உக்கார்ந்து வந்துருதுங்க.


எப்படியோ, நாளைக்கு இதுங்க என்னைக் காணாமத் தவிக்கப் போதுங்க, பாவம்.

34 comments:

said...

உங்க அண்ணன் நல்லா விவரமா இருக்காருங்கக்கா.. பின்ன, யாரோட அண்ணன் ? :) :)

டி.நகர், போரூர், அண்ணா நகர்னு சென்னை பூரா ஒரே நாள்ல சுத்தி இருக்கீங்க.. நல்லவேளை இந்த வெயிலுக்கு முன்னே வந்துட்டுப் போய்ட்டீங்க :)

said...

அப்பா !துளசி நானே பவர் ப்ராப்லெத்திலே முழி முழினு தவிக்கும்போது, இப்படி ஒரு லாஃபிங் புத்தா ஸ்டொரி போட்டு விட்டீஙக. ஹாட்ஸ் ஆஃப்.
இனிமே சிரித்தால் பல்லு சுளுக்கிக்கும் கொசு தாண்டும் தாண்டும். நம்ம கூவம் கொஞச பவரா வைச்சிருக்கு?அந்த பவரில் சண்டிரனுக்கே கொசு போனதாக சாட்சி உண்டு.

said...

தலைப்பை பார்த்தா எதோ பயில்வான் பேசற நினைப்பு வந்து உள்ளார பாத்தா இது பொம்பளைங்க சமாச்சாரமுங்கோ.. ரொம்பநாளா உங்க இந்திய அனுபவங்கள எழதிட்டிருக்கீங்க போலிருக்கு. நான் இனிமேதான் எல்லாத்தையும் படிக்கனும். கொஞ்சநாள் வலைப்பதிவுகளுக்கு அந்நியப்பட்டு போயிட்டேன்ல ;-) ஆமா எப்போ மறுபடி நியூஸி போறீங்க...

said...

வாம்மா பொன்ஸ்,
இப்படிப் பட்ட பிஸியான நேரம்( வாக்கு எண்ணறாங்களாமே!)னு இருந்துராம வந்ததுக்கு நன்றி.

ஊர் சுத்தறதுதான் நம்ம பொழைப்பாச்சே.
அண்ணன் நல்ல விவரமானவர்தான். வீட்டுலே நாங்க இருந்தா ஒரே சிரிப்புத்தான்.

ஆமாம். வெய்யல் ரொம்பப் போடுதா?

பத்திரம்.

said...

மானு,

யாருக்கு பவர்னு இப்பத்தெரிஞ்சுருமே! இன்னும் பவர் ப்ராப்ளமா?:-))))

said...

அடடே, நீங்களா? வாங்க வாங்க!

//வலைப்பதிவுகளுக்கு அந்நியப்பட்டு போயிட்டேன்ல //

அந்நியப்பட்டதுதான் எல்லாருக்கும் தெரிஞ்சுபோச்சே!

நியூஸிக்கு எப்ப வரேனா? வந்து சேர்ந்தபிறகுதானே இந்த பிரலாபத்தை ஆரம்பிச்சு
நடத்திக்கிட்டு வரேன்:-)))

அது பாட்டுக்கு போய்க்கிட்டு இருக்கு. ஒரு முப்பது தேறுமோ என்னவோ

said...

kumran nagar browsing centre ulle pona kosukkal ellam veliye vara
mudiyama thavikkudham.....
hmm..ratha dhanam yaru senjadhu.......?

said...

பவர் ப்ரொப் முடியப்போகுது. எங்க வீட்டிலே மின்சக்தி வந்துவிட்டது. வெளிலே என்ன எல்லாமோ நடக்குதுங்க. இன்னிக்கு வாக் பொகிறது கட். எகப்பட்ட வெடி வெடிக்கிராஙக. காஸ், பெட்
ரோல் விலை அதிகமாகப் போகிறது.
மத்த புலம்பலை ப்லொக் போஸ்ட் ஆக போடலாம்.

said...

என்னங்க இந்த நேரத்தில போயி கோபால் பல்பொடி அது இது பதிவு போட்டுகிட்டு. யாராவது வந்து வையப் போறாங்க. பாத்து. மத்த படி ஊரெல்லாம் நல்லா சுத்தியிருக்கீங்க. சந்தோஷம். அம்புட்டுதான். :)

said...

sivagnanamji,

ஒரு வேண்டுகோள்.
இங்க, ஜோசப் சார் பதிவுல எல்லாம் தொடர்ந்து வந்து பின்னூட்டமிடறீங்க. ஆனா எப்பவுமே ஆங்கிலத்தில். அது படிக்கக் கஷ்டமா இருக்கே.

கொஞ்சம் தமிழில் தட்டெழுதக்கூடாதா?

said...

சிவஞானம்ஜி,

ஏன் தவிக்காது? அதான் இனிப்பு ரத்தம் குடிச்சுக் குடிச்சு குண்டாயிருச்சே:-))

அங்கே பாருங்க, கொத்ஸ் உங்க கிட்டே என்னவோ கேக்கறார்.

said...

மானு,
புலம்பல் போஸ்ட்டை எதிர்பார்க்கிறோம்.

said...

கொத்ஸ்,

இந்த நேரத்துலே இங்கே என்ன செய்யறீங்க? யாராவது பார்த்தால் 'உங்களை'
வையப்போறாங்க. இவ்வளோ பரபரப்புலே,பதிவைப் படிச்சு அதுக்குப்
பின்னூட்டம் வேற போட்டுருக்கீங்க?:-))

said...

thamizhil thattachu seyvadhu eppadi enru teriyavillai
eppadi enbadhai vilakkinal miga nanri
thelivaga kooravum enakku computer
patri adippadai arivu kooda kidaiyadhu

said...

ஏங்க, இந்தக் கொசுங்க எல்லாம் பத்தடிக்கு மேலே பறக்காதாமே? அதுனாலே மாடி வீட்டுலே இருந்தா கொசு வராதாமே! இப்படியெல்லாம் மக்கள்ஸ் சொல்லிக்கிட்டு இருக்கறதை மட்டும் நம்பிராதீங்க. ஏங்க கொசுவுக்கு மட்டும் மூளை, புத்தி எல்லாம் இல்லையா? ஒரு மாடிக்கு, அதான் பத்தடி பறந்து வந்துருது. அங்கிருந்து பத்தடி தானேங்க அடுத்த மாடி?இப்படியே எத்தனை மாடி இருந்தாலும் வருமுங்க. இல்லேன்னா இருக்கவே இருக்கு படிக்கட்டு. அதுலேயும் உக்கார்ந்து உக்கார்ந்து வந்துருதுங்க.//

உங்களுக்கு ஒன்னு தெரியுமா துளசி.. நியூயார்க்ல 32வது மாடி வரைக்கும் கொசு வந்துருமாம். அதுவும் என்ன மாதிரி கொசு.. ஈ மாதிரி பெரீரீரீசா.. கொசுவுக்குத்தான் ரெக்கை இருக்கே. பறக்காதா என்ன? அதுவும் உங்கள் மாதிரி (சாரி என்னெ மாதிரி) சக்கரை ஜாஸ்தியாருக்கற ஆளுங்களக் கண்டா கொசுவுக்கு ரொம்பவும் கொண்டாட்டமாயிருமில்லே அதான்..

said...

துளசி,,

உங்க பதிவ படிச்சிட்டு சிரிச்சத விட உங்களுக்கு பின்னூட்டமும் அதுக்கு நீங்க கொடுத்திருக்கற பதில படிச்சிட்டு சிரிச்சதுதான் ஜாஸ்தி..

டென்ஷனா இருக்கும்போது உங்க பதிவுகள படிச்சாலே போறும்னு நினைக்கிறேன். Ha, ha, ha!!

said...

போரூருங்கறதும் திருப்போரூர்ங்கறதும் ஒன்னா? திருப்போரூர்ல ஒரு ரொம்பப் பழைய முருகன் கோயில் இருக்கு. போயிருக்கேன் நான்.

டீ.நகர்ல சாப்பிட்டீங்களா...அங்கதான் சரவணபவன் இருக்கே...அதுக்குப் போயிருக்கலாம்ல...அசைவம்னா...அப்படியே நகண்டு பொன்னுச்சாமி அஞ்சப்பர்னு போயிருக்கலாம்.

நரசுஸ் காப்பிக்கடை எனக்கு நல்லாத் தெரியும். பாண்டி பஜாருக்குச் சின்னப் புள்ளைல போகும் போது நரசுஸ் காப்பிக் கடைல கண்டிப்பா ஐஸ்கிரீம் வாங்கித் திங்கறது வழக்கமா இருந்துச்சு. இப்பவும் கோன் ஐஸ் விக்கிறாங்களா?

அப்புறம் அண்ணாநகர் ஹை ஸ்டைல் நானும் போயிருக்கேன். வாங்குன நினைவு இல்ல. அந்த ரோட்டுலயே நெறையக் கடைக இருக்கே.

டீச்சர்...கொசுக்களால ரொம்ப ஒயரத்துக்குப் பறக்க முடியாது. ஆனா பரிணாம வளர்ச்சீல அதுக்கு அந்தத் திறமை வந்தாலும் வரலாம். நம்ப முடியாது.

said...

சிவஞானம்ஜி,
எழில்நிலா தளத்தில் எப்படி தமிழில் படிப்பது/எழுதுவது என்று விளக்கியிருக்கிறார்கள். எப்படி தமிழில் தட்டச்சுவது என்றும் அங்கே கொடுத்திருக்கிறார்கள்.

said...

//தி.நகர் வரை வந்தோம். அங்கே ஒரு வேலையை முடிச்சுக்கிட்டு சாப்புடலாமுன்னு செட்டிநாட்டுக்குப் போனோம்.உள்ளே அலங்காரம் எல்லாம் அட்டகாசமா இருந்துச்சு.//

தப்பு பண்ணிட்டிங்க துளசியக்கா! பாண்டி பஜாரில் இருந்து காரைக்குடிக்கு போகாமா நேரா போயி லெப்ட் எடுத்து இருந்திங்கனா அம்மா ரெஸ்டாண்ட்ல ஒரு பிடி பிடிச்சி இருக்கலாம். மிஸ் பண்ணிட்டிங்க.
அன்புடன்
நாகை சிவா

said...

சிவஞானம்ஜி,

பாருங்க உங்க சந்தேகத்தைத் தீர்த்து வச்சுட்டார் மணியன்.
நீங்க தரப்போகும் பொற்கிழியை அவருக்கே டைரக்ட்டா அனுப்பிருங்க:-))))

said...

வாங்க டிபிஆர்ஜோ,

கொசுக்களைப் பத்தின கருத்தை ராகவன் கண்டிப்பா மாத்திக்கணும்.
மாத்திக்குவார், உங்க 'நியூயார்க் கொசு சரிதம்' படிச்ச பிறகு.

நல்லவேளைங்க எனக்குச் சக்கரை இல்லை. இல்லேன்னா அந்த கொசுங்களும்
டயாபட்டீக்கா ஆகி இருக்கும்.

எப்படியோ ஒரு நொடியாவது சிரிக்க முடியறதே சந்தோஷம்தாங்க.

said...

ராகவன்,

போரூர், திருப்போரூர் ரெண்டும் வெவ்வேற இடங்கள்(னு நினைக்கிறேன்).
திருப்போரூர் முருகன் கோவில் நிறைய சினிமாக்களில் வந்திருக்கேங்க. நான் இன்னும் போனதில்லை.

//டீ.நகர்ல சாப்பிட்டீங்களா...//
சரியாப்போச்சு. நம்ம தாவளமே டி.நகர்தாங்க. அங்கேதானே 5 வாரம் இருந்தோம். சரவணபவன்லேதான்
தினம் காலை உணவு.

நரசுஸ்லே கோன் ஐஸ்கிரீம் இல்லைங்களே. வெறும்காப்பிக் கொட்டை, வறுத்து அரைச்சுன்னுதான் வியாபாரம்.

அண்ணாநகர்லெதான் இப்ப மவுண்ட்ரோடு, டி.நகர் கடைங்க எல்லாம் கிளை தொடங்கிருச்சுங்க. இங்கேயே இனி
எல்லா பர்ச்சேஸையும் முடிச்சுக்கலாம்.

நம்ம டிபிஆர் ஜோவோட பின்னூட்டம் பாருங்க. உங்க 'கொசு ஐயம்' தெளிவிச்சிருக்கார்.

அஞ்சப்பர் எல்லாம் இதுவரை போனதே இல்லீங்களே(-:

சரி. எல்லாம் அடுத்த முறை பார்த்துக்கிடலாம்.

said...

மணியன்,
நன்றிங்க.

சிவஞானம்ஜிக்குப் பதிலை 'கைநாட்டின் பார்வையில் கலப்பை'ன்னு ஒரு
பதிவாப் போடலாமுன்னு இருந்தேன். காப்பாத்தி(க்கி)ட்டீங்க.

said...

நாகைசிவா,

இந்தியாவுக்கு வந்தவுடனே முழு வெஜிடெரியனா மாறிடுவேன். மெலிஞ்சு கிடக்கற
ஆடு, கோழியைப் பார்த்தாத் திங்க மனசு வர்றதில்லையேப்பா.

அடுத்தமுறை அம்மாவைக் கண்டுக்கறேன்.

said...

thulasi,
pls convey my thanks to manian.
i am trying. hope i will definitely join you at the earliest

said...

thulasi,
please convey my thanks to manian
i am trying

said...

மணியன்,

சிவஞானம்ஜி உங்களுக்கு நன்றி சொல்லச் சொன்னார்.

விரைவில் எதிர்பார்க்கலாமாம்
தமிழில் பின்னூட்டம்ஸ்:-)))

said...

ஆஹா,கரும்பு தின்னக் கூலி மாதிரி யாரோ அழகாக எழுதிய உதவிப் பக்கத்தை சுட்டியதற்கு நன்றியா ? ஆனாலும் அதிலும் ஒரு பதிவு எழுதும் வாய்ப்பைக் காணும் உங்கள் குணம்தான் நாளும் ஒரு பதிவு எழுத உங்களுக்கு துணை கொடுக்கிறது :)

போரூர் கோடம்பாக்கத்தை அடுத்து ஆற்காட்டு சாலையில் உள்ளது. திருப்போருர் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ளது. அருமையான் முருகன் தலம்.

said...

நல்ல பதிவு!!

said...

மணியன்,

கோயில் விவரத்து நன்றி.

சிவபாலன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
( இப்படித்தானே சொல்லணும்? ம்)

said...
This comment has been removed by a blog administrator.
said...

சிவபாலன்,

என்ன ஆச்சு? பயந்துட்டீங்களா?
'அங்கே' இப்படி நடந்து போச்சுன்னு 'இங்கே' வந்து சொல்றீங்க?

'நல்ல பதிவு'ன்னு இங்கே முந்தி போட்ட பின்னூட்டத்தைப் பத்திச் சொல்லலைதானே? :-))))

said...

நிச்சயமாக பயம் கிடையாது!!

ஆனால் என் மேல் தவறான முத்திரை விழுவதை நான் விரும்பவில்லை.

said...

உங்கள் பதிவு மிக நன்றாக உள்ளது!!

என் பின்னூடத்தை அனுமதிற்தற்கு நன்றி!!

உங்கம் பணி தொடர வாழ்த்துக்கள்!!