Monday, May 01, 2006

மறுபடியும் சனி(கிழமை)

பயண விவரம் பகுதி 22

திரும்பிப் பாக்கறதுக்குள்ளே இன்னொரு சனிக்கிழமை. எதை வேணான்னு நினைக்கிறமோ, அதே திரும்பத்திரும்பமனசுக்குள்ளே வந்து உக்காந்துக்குது பார்த்தீங்களா? இன்னிக்கு 'வேற' எந்தக் கோயிலுக்குப் போலாமுன்னு யோசனை.


அதுக்கு முன்னாலே டிவியிலே காமிக்கற கோயிலைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். என்னதான் பக்தின்னாலும் ஒரேசேனல் பார்க்க முடியுதா? மனுஷனுக்கு ஆப்ஷனே கூடாது. இருந்தா இப்படி நம்மளைப் போலத்தான்......


ஒரு சேனல்லே விளம்பரம் போய்க்கிட்டு இருந்துச்சு. இப்பக் கொஞ்சகாலமாக் கவனிச்சதுலே படங்கள், நாடகங்கள்,இன்னும் என்னென்னவோ வருதே, அதையெல்லாம் விட விளம்பரங்கள் அட்டகாசமா இருக்குங்க. எதுக்குத்தான்'ஆட்'ன்னு இல்லாம சட்டினிக் கடலைக்குக்கூட வந்துருச்சு. இது எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. 'ஜெயம் கடலைச்சட்டினி, இல்லாட்டா பட்டினி'ன்னு ஒரு ச்சின்னப்பையன் கையை 'க(த்)தம்'ன்ற மாதிரி ஆட்டிக்கிட்டே சொல்றான்.சொல்லவேண்டியதை 'நறுக்'னு பத்துப் பதினைஞ்சு நொடியிலே புரிய வச்சுடறாங்க இந்த விளம்பர கர்த்தாக்கள்.


இங்கே நியூஸியிலேயும் சாட்சி & சாட்சின்னு ஒரு புகழ்பெற்ற விளம்பரக்கம்பெனி எடுக்கறதெல்லாம் நல்லாவே இருக்கும்.இதுலே வருசம் ஒருதடவை, 'பெஸ்ட் & வொர்ஸ்ட் ஆட்' ங்களுக்கு பரிசு வேற கொடுப்பாங்க. நம்ம தமிழ்மணம் கருவிப்பட்டையிலே இருக்கு பாருங்க, ஓட்டுப் போடற ' தம்ப்ஸ் அப் & தம்ப்ஸ் டவுன் டிசைன்' அதையேதான் பரிசாகக் கொடுப்பாங்க. தங்கக் 'கலர்'லே செஞ்சிருப்பாங்க.


இந்தவாரம் முதல் ஒரு ரூபாய்க்கு தினகரன் தமிழ் செய்தித்தாள் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. இதுக்கும் என்னா விளம்பரம் வந்துச்சுன்றீங்க? 'ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்? ஒரு ஐஸ்க்ரீம் கோன் கூட வாங்க முடியாது, அது இதுன்னு தினமும் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. தருமம் கேக்கறவங்க கூட ஒரு ரூபாய்க் காசைக் கொடுத்தாக் கொஞ்சம் கேவலமா நம்மைப் பாக்கறாங்களே, அப்படி இருக்க ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்குமாம்'னு நானும் நினைச்சேன். அப்புறம் 'கவுண்ட் டவுன்' ஆரம்பிச்சாங்க, இன்னும் அஞ்சு நாள்'ன்னு. கடைசியிலே விவரம் தெரிஞ்சது தினகரன் பேப்பர்னு.நானும் ஒரு நாள் வாங்கிப் பார்த்தேன். 16 பக்கம். பரவாயில்லையேன்னு இருந்துச்சு. இன்னமும் ஒரு ரூபாய்தானா? இல்லே விலையை ஏத்திட்டாங்களா?


வெஸ்ட் மாம்பலம் உமாபதி எக்ஸ்டென்ஷன்லே ஒரு காளி கோயில் இருக்கு. அது கல்கத்தாவிலே இருக்கற தக்ஷிணேஸ்வர் கோயிலை மாதிரியே கட்டப்பட்டிருக்குன்னு எப்பவோ படிச்சது. தேடிப்பிடிச்சுப் போனேன். ச்சின்னக்கோயில். நுழைஞ்சதும் இடதுபக்கம் செருப்பு வைக்க ஒரு ஷெல்ஃப். ஒரு படி ஏறிப்போற உயரத்துலே ஒரு பெரிய ஹால். தியான மண்டபம்.அங்கே இடது கைப்பக்கம் ஒரு ச்சின்ன அறை. ஆஃபீஸ். மண்டபத்துக்கு வலது பக்கம் கோயில். கோபுரம் மட்டும் கொஞ்சம் வித்தியாசமான டிஸைன். ஆனா கோவில், நம்ம கிராமத்துப் பக்கம் இருக்குமேங்க மாரியம்மன் கோவில் அவ்வளொ பெருசுதான். பத்தடிக்குப் பத்தடி. வாசல்லே ஒரு பக்கம் ராமகிருஷ்ணர், இன்னொரு பக்கம் சாரதாம்பாள்.ச்சின்ன சிலைகள். மூலவர் கல்கத்தா காளி. சூலமும், 16 கைகளுமா,நீளமா நாக்கைத் தொங்கவச்சுக்கிட்டு. காலடியில்அரக்கன். மூணடி உயரச் சிலையாத்தான் இருக்கும்.


கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டுத் திரும்பும்போது ஃபோட்டொ எடுக்கலாமான்னு அந்த ஆஃபீஸ்லே கேட்டேன். கூடாதுன்னுபதில் வந்தது. சரி. அவுங்க நம்பிக்கை அதுன்னுட்டு வந்துட்டேன். வெளியே வந்து தெருவுலே இருந்து கோபுரத்தைமட்டுமாவது எடுத்திருக்கலாம். ஆனா தோணலை. ப்ரேக்ஃபாஸ்ட்டை முடிச்சுக்கலாமுன்னு 'கீதாஞ்சலி'க்குப் போனேன்.


இட்டிலி வடை. வடை உளுந்து வடைதான். அதான் மசால் வடையே கிடைக்கலையே! வடையை முறிச்சு வாயிலே போட்டப்ப என்னவோ ஒரு வாசனை. பிடிக்கலை. பரிமாறினவர்கிட்டே சொன்னதும், அவர் அதை எடுத்துக்கிட்டுப்போய் கல்லாவுலே உக்கார்ந்திருந்தவரோடு என்னமோ சொன்னார். அப்புறம் திரும்ப வந்து வேற கொண்டு வரவான்னுகேட்டார். வேணாமுன்னு சொல்லிட்டேன். காஃபி குடிச்சுக்கிட்டு இருக்கப்ப, இட்டிலி தின்ன தட்டை எடுக்க வந்த பையனுக்குஅதிகம் இருந்தா ஒரு 11 வயசுதான் இருக்கணும். குழந்தைத் தொழிலாளியோ? வயசு எத்தனைன்னு கேட்டேன்.பையன் ஒருமாதிரி முழிச்சுக்கிட்டே 17ன்னு கூசாமச் சொன்னான். நல்ல ட்ரெயினிங் கொடுத்துருக்காங்க.


வெளியே வந்தப்ப ரோடுலே எதிர்வரிசையிலே நம்ம சிவாவிஷ்ணு கோயில். சரின்னு அங்கே போனேன். நல்லதாப்போச்சு. யாக குண்டங்கள் வச்சு ஹோமம் நடக்குது. மஹாவிஷ்ணு, தேவியரும் உற்சவ மூர்த்திகளா அலங்காரத்தோடு அந்த ஹோமகுண்டத்துக்கு முன்னாலெ இருக்காங்க. ஒரு இருவது இருவத்தஞ்சுபேர் மந்திரங்களைச் சொல்லிக்கிட்டு இருக்காங்க.வேத விற்பன்னர்கள்? இருக்கும். ஸ்வாஹாவுக்கு குண்டத்துலே நெய் வுழுது. என்னன்னு சரியாப் புரியாட்டாலும் ஒரே மாதிரி கோரஸ்ஸா சொல்றதைக் கேக்கறதும் நல்லாத்தான் இருந்துச்சு. என்னமோ 'இது நம்ம ஆளு' படம்நினைவுக்கு வந்துச்சு. ஒரு இடத்துலே உக்காந்து கவனிச்சுக்கிட்டு( வேடிக்கை?) பார்த்துக்கிட்டு இருந்தேன்.


அப்ப நம்ம மது செல்லுலே கூப்புட்டு, மத்தியானம் சாப்பாடு அவுங்க வீட்டுலேன்னுட்டாங்க. இன்னிக்கு இன்னொரு சக வலைஞரான எஸ்கேவை சந்திக்கறதா இருந்தமேன்னு கேட்டதுக்கு 'அவருக்கும் சேர்த்துதான் சோறு'ன்னாங்க.கொஞ்சம் கூடமாட உதவியா இருக்கட்டுமேன்னு சீக்கிரம் அவுங்க வீட்டுக்குப் போனா........


யமகாதகி! எல்லா வேலையையும் சமையல் உள்பட செஞ்சு வச்சுருக்காங்க. நாங்க உலகவிஷயங்களைத் துவைச்சு அலசறப்ப எஸ்கேவும் வந்துட்டார். நாட்டு நடப்பை இன்னும் நீட்டிவலிச்சுப் பேசறோம். இதோ வரேன்னு உள்ளே போன மதுவெளியே வரவே இல்லை. என்னன்னு போய்ப் பார்த்தா இன்னும் ரெண்டு கறிகளை எக்ஸ்ட்ராவா சமைச்சுக்கிட்டுஇருக்காங்க. அப்பளம், வத்தல், வடாம்னு எக்கச்சக்க வறுவல்கள்.


சாப்புட உக்கார்ந்தா தட்டே கண்ணுக்குத் தெரியலை. அவ்வளோ வகைகள். நானா இருந்திருந்தா,அது ஒரு வாரம் மெனு.


சாப்பாடானதும் நண்பர் கிளம்பிட்டார். நாங்கதான் மறுநாள் நடக்கப்போற இலக்கியச்சந்திப்பைப்((!!!) பத்திப் பேசிக்கிட்டுஇருந்தோம்.


இந்த மங்கையர் மலர் எல்லாம் பார்த்து, சில கடைகளைக் குறிச்சு வச்சுருந்தேன். அதுலே ஒண்ணு 'தேஜஸ்'. பரிசுப்பொருள்கள் விக்கறாங்களாம். தங்கமுலாம் பூசியதாம். முக்கியமா நோட் பண்ணிக்க வேண்டியது விலைகள் ஸ்டார்ட்ஸ்ஃப்ரம் 150 ரூபாய். இங்கே கொண்டு வர்றதுக்கும் சில பரிசுகள் வாங்கிக்கணுமேன்னு போனேன். அட்ரஸ் சரியாத் தெரியாம( எங்கேயும் டோர் நம்பரே போடறதில்லைப்பா) ஆட்டொலே அலைஞ்சு, கண்டுபிடிச்சாச்சு.


ரெண்டாவது மாடியிலே ஷோ ரூம் இருக்கு. முக்கியமாச் சொல்லவேண்டியது, இங்கே லிஃப்ட் ஆப்பரேட்டரா ஒருஉடல் ஊனமுள்ளவர் இருக்கார். நல்ல நட்பான பேச்சு, சிரிச்ச முகம். பளிச்சுன்னு இருக்கார். நாள் முழுக்க லிஃப்ட்க்குள்ளே இருக்கணுமுன்னாலும், தன்னோட சொந்த உழைப்பாலே வாழறோம் என்ற தன்னம்பிக்கையோடுஇருக்கார்.


கடைக்குள்ளே போனா ரொம்ப அழகழகா நிறைய பொருட்கள் மின்னிக்கிட்டு இருந்துச்சு. ஒரு நோட்டம் விட்டுட்டு,நம்ம 150 ரூபாய் சமாச்சாரங்களைத் தேடுனா, அது ஒண்ணும் அவ்வளவா சுவாரஸியப் படலை. 295க்கு மேலேஇருக்கறதெல்லாம் பரவாயில்லை. ஒருத்தருக்குக் கொடுக்கறதுக் கொஞ்சமாவது நல்லா இருக்கணுமா இல்லையா?அதுலெ சிலதை வாங்கிக்கிட்டு வீடுபோய்ச் சேர்ந்தேன்.


அப்பத்தான் ஞாபகம் வந்தது மயிலாப்பூர்வரை ஒருக்காப் போணுமேன்னு. அங்கேயும் போயிட்டு,அப்படியே 'சுக்ரா'வோடபுது ஷோரூம் பார்த்துட்டு, உரிமையாளர் கல்கி ராஜுவோட கொஞ்சநேரம் கதை அளந்துட்டு வந்தேன். புது ஷோரூம்விவரமும், அழைப்புப் பத்திரிக்கையும் ரெண்டு மாசத்துக்கு முந்தி நியூசிக்கு அனுப்பி இருந்தார். இவுங்கபழைய கடைக்கு முன்னாலெ தெப்பக்குளச்சுவரை ஒட்டி, இவுங்களோட மியூசிக் ஷாப் ஒண்ணு இருக்கு. அங்கேயும்ஒரு நோட்டம் விட்டுட்டு, பழைய படங்கள்(அறுதப்பழசு) சிலதை வாங்கிக்கிட்டு வந்தேன். பொறுங்க. அதையெல்லாம் பார்த்துட்டுவிமரிசனம் செஞ்சாப்போச்சு. 108 திருப்பதிகள், மதுரை மீனாட்சி & சித்திரைத் திருவிழா விசிடிங்க கூடக் கிடைச்சதுங்க. ஒரேபக்திதான் போங்க. எல்லாம் போற வழிக்குப் புண்ணியம்தான்.

30 comments:

said...

pora vazhikku punniyamdhan..........
aama yanai size punniyam

said...

யானை சைஸு எல்லாம் போதாது. இன்னும் புண்ணியம் தேடிக்கணும்.

நம்ம மனசை நோகடிச்சவுங்களுக்கும் சேர்த்து.

said...

அட..எங்களுக்கெல்லாம் எப்படா அடுத்த சனிக்கிழமை வரும்னு இருக்குது! (அப்ப தானே அடுத்த நாள் லீவ்!)

said...

ஐய்யோ, எனக்கும் சனிக்கிழமை பிடிக்கும். வீக் எண்ட் ஆச்சே. ஆனால் நான் பயப்பட்டது நம்ம
ச்சென்னை, வெங்கடநாராயணா ரோடு கோவில் பட்டர்கள் செய்யும் அட்டகாசச் சனிக்கு.

said...

துளசி நல்ல விருந்து சாப்பிட்ட மாதிரி இருக்கு.GK நல்ல இருக்காரா?தேஜஸில் அழகான மந்தபம் பார்தேர்களா/அவஙக எல்லத்தையும் தங்கம் ஆக்கி தராஙகளாமே?ஸ்மைலி பொட்டு கொள்ளவும்

said...

டெக்கான் க்ரானிக்கல் 1.50 ரூபாயாகிடிச்சு.தினகரன் இன்னும் 1 ரூபா தான். விலை ஏத்தினா டப்பா டான்ஸ் ஆடிடும்னு மாறன்ஸ்க்கு தெரியாதா என்ன?

said...

மானு,

'எல்லாத்தையும்'ன்றதுக்கா இல்லே, தங்கமாகித் தர்றதுக்கா?
எதுக்கு ஸ்மைலி போடணும்?

மண்டபம் எல்லாம் நல்லா இருந்தது. அதை வாங்கினா, நான் ரிட்டன் டிக்கெட்டை வித்துக் காசு கட்டிட்டு, நியூஸிக்கு நடந்தேதான் வரணும்.

ஜிகே நல்லா இருக்கார். அவருக்கென்ன பதிவு, பின்னூட்டம்னு கவலை இருக்கா என்ன? :-)

said...

மாயவரத்தாரே,

ஒரு வேளை எலக்ஷன் முடியட்டுமுன்னு இருக்காரோ என்னவோ? ஒன்னுன்றது ரெண்டு ஆகுமோ இல்லே கொஞ்சம் மலிவா ஒன்னரை ஆகுமோ?

பார்க்கலாம்.
இன்னும் எட்டு நாள்தான் இருக்காமே.

கெட்டிக்காரன் புளுகு எட்டே நாள்'னு பழமொழி அனாவசியமா இப்ப ஞாபகம் வருது.

said...

ஒவ்வொரு சனிக்கிழமையும் கோவிலுக்குப் போவது இந்தியாவில் மட்டுமா அல்லது நியூசீ யிலுமா ?
சனிக்கிழமைதோறும் ஒரு கோவிலைப் பற்றி எழுதுங்களேன்.

said...

துளசி, அது யாரு, என்ன சுக்ரா கல்கி ராஜூ? விளக்கவும்

ஹூம்! ரூபி மேட்டரைப் பார்த்ததும், ஓடோடி வரூவீங்கன்னு நெனச்சேன். ஏமாத்திட்டீங்களே .. துளசி :-(

said...

உஷா,
எங்கியோ தப்பு நடக்குது.

ரூபியைப் பார்த்ததும் ஓடோடி வந்தேன். கமெண்ட்ஸ் பப்ளீஷ் ஆகலையே ன்னு மனவருத்தம் ஆச்சு. அப்படியும்
இன்னிக்கு ஒரு கமெண்ட்ஸ் அனுப்புனேன்.

இதுமட்டுமா,

போன பதிவுக்கும் அனுப்புனதும் மாடரேஷன் ஆகலை.

பப்ளிஷ் செய்ய லாயக் இல்லைன்னு விட்டுட்டீங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

இப்ப வயத்துலே (சூடான) பாலை வார்த்திருக்கீங்க. கொஞ்சம் உங்க தபால்பெட்டியைப் பாருங்க.

said...

ஐயோ ஐயோ ரெண்டு கமெண்டுப் போச்சே, போயிந்தே . இப்பக்கூட பார்த்தேன். உங்க பெயரில் எதுவும் காணோம். நல்ல வேளையா சொன்னீங்களே. நான் ஆபாசம் மற்றும் பிறர் பெயரில் இடப்படும் கமெண்ட் மட்டுமே டெலிட் செய்வேன். நீங்க, பர்சனல் மெயில் அனுப்புவதாய் சொன்னீங்களே அதுவும் வரவில்லை. அனுப்புனீங்களா?

said...

மணியன்,

உலகத்துலே எங்கே இருந்தாலும் சனிக்கிழமைக்கு ஒரு கோயிலுக்குப் போறதுன்றது பழகிப்போச்சு.
இந்துக்கோயில் இல்லாத ஊர்லே இருந்தாலும், சர்ச்சுக்குப் போயிருவேன்.
எல்லா சாமியும் ஒண்ணுதானே? மனசுலே இருக்கற சாமியை எங்கே வச்சுக் கும்பிட்டா என்னன்னுதான்.

//சனிக்கிழமைதோறும் ஒரு கோவிலைப் பற்றி எழுதுங்களேன்.//

'ஒரு' கோயிலைப் பத்திதான் எழுதணும்:-)

இங்கே எங்க ஊர்லே ஒரே ஒரு இந்துக்கோயில்தாங்க இருக்கு.
அதுவும் இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில்தான்.

said...

உஷா, அதென்ன ரெண்டு கமெண்ட்ஸ்? மொத்தம் மூணு .அப்புறம் ஒரு தனி மடல்.
எல்லாமே காணோமா? அக்கிரமமா இருக்கு!

said...

துள்சி என்ன இது? எத்தனை கமெண்டுக்கள் இப்படி போச்சோ? வேற யாருக்கு இபப்டி ஆச்சு. நான் வேணும் என்றே போடவில்லை என்று தப்பாய் நினைத்திருப்பாங்களே? தோ வாரேன். பிளாக்கர் உள்ள போனா இருக்கும் இல்லே?
அது சரி எந்த மெயில் ஐடிக்கு பர்சனல் மெயில் அனுப்புனீங்க? ஜீ மெயிலுக்கா? ஆனா பிளாக்கர்ல கொடுத்த ஐடி வேற ஆச்சே?

said...

தனிமடல் உங்க யாஹூ ஐடிக்கு.
மத்த மூணூம் உங்க பின்னூட்டப் பெட்டியிலே போட்டேன்.

ஸ்டாம்பு ஒட்டலை. அதான் வரலையோ?:-)

said...

துளசி இப்போ தான் யொசனை செய்தேன். ( கஷ்டப்பட்டு)நீங்க எனக்கு கமெந்ட்ஸ் போடவேஏஏ இல்லை.நீஙகளே பின்னூட்டம் இட வில்லையானால் யார் தான் வருவாரொ?

said...

//namma manasai...............//
ah! evlov peiya manasu
vazhga valamudan

said...

வல்லி,

உங்க பதிவுலே போய்ப் பாருங்க. ஸார் போஸ்ட்!


சிவஞானம்ஜி,

இப்பவே எல்லாப் பாராட்டையும் சொல்லிட்டா எப்படி?
இன்னும் நாள் இருக்கே:-)))

said...

அக்கா, தினகரன் இன்னும் ஒரு ரூபாய்தான்.. தேர்தலுக்கு அப்புறம் ஏத்துவாங்களா இருக்கும். இப்போ அவங்க கொள்கை முழக்கத்துக்கு ஒரு மலிவு விலை பத்திரிக்கை வேணுமே...

said...

பொன்ஸ்,

இன்னும் 10 நாளுலே விலை ஏறிடுமா? அப்ப கவுண்ட் டவுன் இருக்காது. அப்படியே 'இன்று முதல்'னு
சொல்லிருவாங்க.:-))))

said...

மனுஷனுக்கு ஆப்ஷனே கூடாது.//

ஆனா வாழ்க்கை ஒரேயடியா போரடிச்சிருமே..

said...

டிபிஆர் ஜோ,

போரடிக்குதுன்னு எல்லாத்தையும் மாத்த முடியுமா?

பார்த்துங்க, கவனமா இருங்க:-)))

said...

அம்மா,
இப்போ ஐ.டி. யுகப்படி இந்த பழமொழிய மாத்திட்டாங்க,
motherboard -க்கு வந்தது keyboard-டோட போச்சு

said...

//ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்? ஒரு ஐஸ்க்ரீம் கோன் கூட வாங்க முடியாது//
உண்மையாவா? இங்கே IKEA அங்காடிலே 40 சதத்துக்கு ஐஸ்க்ரீம் கிடைக்குமே.. பேசாம இங்கேயே வந்துருங்க என்ன! :O)

said...

சிவமுருகன்,

:-)))))

பழமொழிகள் புத்தகம் ஒண்ணு கி.வா.ஜ. தொகுத்துப் போட்டுருந்தார். தலகாணி சைஸூ.

பேசாம நாம எல்லாம் சேர்ந்து புதுமொழிகள் கலெக்ஷன் ஆரம்பிச்சுற வேண்டியதுதான்.

said...

ஷ்ரேயா,

ரூபாய்க்கும், ஆஸிக் காசுக்கும் ஒரே மதிப்பா? ஒரு ரூபாய்க்கு சரியாச் சொன்னா உங்க 3 செண்ட்.
அதுக்கு என்ன கிடைக்கும் உங்க IKEAலே?

said...

அஸ்கு புஸ்கு. இங்கத்தேய 3 சதமா உங்க ஒரு வெள்ளி!!??
இப்பத்தான் பாத்தேன்.. சரியாச் சொல்றதுன்னா, ஒரு நியுஸி வெள்ளி = AUD 0.7895 (0.7895 அவுஸ்திரேலிய சதம் )வாங்கும். கிட்டத்தட்ட 2 IKEA ஐஸ்க்ரீம், but not quite :O(

said...

ஷ்ரேயா,
நியூசி வெள்ளி இல்லையம்மா.
இது ரூபாய்!
இந்திய ரூபாய்.
இந்திய ரூபாய்.
இந்திய ரூபாய்.
இந்திய ரூபாய் மட்டுமே. இந்திய ரூபாயைத் தவிர வேற ஏதும் இல்லை.

said...

Oops! :O|