Monday, November 14, 2005

கடைசின்னு நினைச்சது........

கடைசின்னு நினைச்சது கடைசி இல்லையாம்!


நம்ம தமிழ்ச் சங்கத்துலே தீபாவளிக் கொண்டாட்டம் இப்பத்தான் ரெண்டு நாளைக்கு முன்னாலே நடந்துச்சு.'ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் கதை' இல்லீங்க. இந்தவருஷம் நடந்த ஒம்போது தீபாவளிக் கொண்டாட்டத்துலேஇது எப்படியோ கட்டக் கடைசியாப் போச்சு. அது பரவாயில்லை. வருசம் முழுசும் கொண்டாடினாலும்நமக்கு அலுப்புத் தட்டப்போகுதா என்ன?


கலை நிகழ்ச்சிகள் ரொம்ப அருமையா அமைஞ்சுபோச்சு. அதிலும் கண்ணுலே நீர்மல்க( ஆனந்தக்கண்ணீருங்க!)ச்சின்னக்குழந்தை 'யானை வந்தது' பாட்டைப் பாடுனது ரொம்ப ஜோர். எனக்கு யானை பிடிக்குமுன்னு அந்தப்'பிஞ்சு'க்குத் தெரிஞ்சிருக்கு பாருங்களேன். பட்டு வேட்டியெல்லாம் கட்டிக்கிட்டு ஐயா அட்டகாசமாவேற வந்தாரு.


விருந்தினர்களா வந்தவுங்களும் அருமையான நிகழ்ச்சிகளைக் கொடுத்தாங்க. கண்ணுக்கு விருந்துதான் போங்க.விருந்துன்னதும் ஞாபகம் வருது பாருங்க, கட்டாயம் மெனுவைக் கேக்க ஆவலா இருப்பீங்கன்னு. ஆனா அது கொஞ்சம் கஷ்டம்தாங்க. விதம் விதமா சமைச்சுக் கொண்டுவந்துட்டாங்க நம்ம ஜனங்க. எதைச் சொல்றது எதை விடறது?ஆனாலும் கொஞ்சம் முயற்சி செய்யறேன்....


நிறைய சாப்பாடு இருக்கு, இன்னும், தட்டுலே எடுத்துக்கிட்டுவந்து சாப்புடுங்கன்னு 'மைக்'லே கெஞ்சும்படியாயிருச்சுங்க.புட்டு, இடியாப்பம், இட்டிலி, சப்பாத்தி, கறிவகைகள், கொழுக்கட்டை, வடை, ஃப்ரைடு ரைஸ், இன்னும் என்னென்னவோபோங்க.


சாப்பாடெல்லாம் ஆனப்புறம் பட்டாஸ் வெடிச்சு கொண்டாட்டத்தை முடிச்சோம்லெ. ஏதோ பிரிட்டிஷ் நரகாசுரன்'கை ஃபாக்ஸ்' புண்ணியத்துலே நம்ம பட்டாஸ் தேவைகள் ஒருவழியா பூர்த்தியாயிருது. அதுவரைக்கும் சந்தோஷம்தான்.மத்தாப்பூ இல்லாத தீபாவளியை நினைச்சுக்கூடப் பார்க்கமுடியலைங்களே!


எங்க தமிழ்ச்சங்கம் ஒரு 'வெப்சைட்'வச்சிருக்கு. அதுலே போய், அங்கே இருக்கற போட்டோ ஆல்பத்துலே பாருங்க.

http://www.canterburytamilsociety.org/


கல்யாணத்துக்குப் போன பெண்ணை, திடீர்மணமகளா ஆக்கிட்டாங்கன்னு அப்பப்ப பேப்பரிலே படிக்கறோம் பாருங்க,அதேபோலதான் இன்னொண்ணு நடந்துச்சு.


விழாவைப் பார்க்கப்போன இடத்துலேதான் தெரிஞ்சது, இந்தவருஷக் கலைகலாச்சார ஒருங்கிணைப்பாளர் வரமுடியாமப்போச்சுன்னு. என்னையே 'நடத்தித் தரும்படி'க் கேட்டுக்கிட்டாங்க. நமக்குத்தான் இதுலே 'பல வருட'அனுபவம் இருக்கேன்னுதயங்காம ஏத்துக்கிட்டேன். அதான் ஏற்கெனவே ஐட்டங்கள் எல்லாம் தயார் செஞ்சிருந்தாங்கல்லே:-))


அப்புறம்?


அப்புறமென்ன, தூள் கிளப்பிட்டோம்லெ!


ஒம்போதாவது கொண்டாட்டம் முடிஞ்சது. அப்பாடான்னு பெருமூச்சுவிடறதுக்கு முன்னாலே நியூஸ் வருது,அடுத்தவாரம் ,நம்ம ஊர் கேரளா சங்கத்துலே தீபாவளியாம்!


போற போக்கைப் பார்த்தா, அடுத்தவருஷம் தீபாவளி வர்றவரை இந்தவருஷ தீபாவளியைக் கொண்டாடப்போறலட்சணம் தெரியுது:-)))))


இன்னைக்குக் 'குழந்தைகள் தினம்' என்றபடியாலே, இந்தப் பதிவை உலகின் அனைத்துக்குழந்தைகளுக்கும் சமர்ப்பிக்கின்றேன்.


புள்ளைங்களா, எல்லோரும் நல்லா இருங்க.

15 comments:

said...

periyamma,
poonai kuttyum athina kaalum nalla iruku.

said...

//அதான் ஏற்கெனவே ஐட்டங்கள் எல்லாம் தயார் செஞ்சிருந்தாங்கல்லே//

ஐட்டங்கள்னு சொன்னோன்ன வேணாம்னா சொல்லப்போறீங்க? :P

டெம்ப்ளேட் மாத்தியாச்சா?? வலதுபக்கம் நிறையஇடம் காலிமனையா வீணா கிடக்கே.. டெக்ஸ்ட் பகுதியை அகலப்படுத்தக்கூடாதா? ரொம்ப தூரம் ஸ்க்ரோல் பண்ணவேண்டியிருக்கு..

said...

சிநேகிதி,
நமக்கு யானையும் பூனையும் ரொம்பப் பிடிச்சதாச்சே. உங்களுக்கும் 'பூனைப் பிடிச்சது பாக்கியம்':-)

said...

ராமநாதன்,

காலிமனை இப்படித்தான் விடணுமுன்னு இங்கே ஒரு நியமம் நியூஸியிலே இருக்கு.
வீடுகட்டற மனையிலே 40%தான் கட்டிடம். பாக்கி தோட்டம்!

எதுக்கும் நம்ம தொழில்நுட்ப வித்தகர் கிட்டே கேட்டுப்பாக்கறேன்.

said...

எங்களுக்கும் சேர்த்துதானே வழ்ழ்த்துக்கள்?

said...

thulasi
you rnew template looks different!! I am used to the old one with elephants..:(

said...

சிங் செயக்குமார்,

குழந்தைமனசு இருக்கற எல்லாருக்கும் சேர்த்துத்தான் வாழ்த்துக்கள்.

பத்மா,

இன்னும் பலவிதமான டிஸைன்களைப் பரிசோதனையாப் பண்ணறதுன்னு இப்போதைய முடிவு:-)))))

said...

periyamma i'm gonna try these templates too.
tx

said...

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வருமென்பது இதுதானோ?
firefoxல் படிப்பது கஷ்டமாக இருக்கிறதே? தவிர பின்னணி அழகு உங்கள் எழுத்திலிருந்து திசை திருப்புகிறது.

said...

அந்த காலத்தில தீவாளியை மாசம் பூர கொண்டாடிருக்காங்க!

said...

ஐயா! நான் இன்னைக்கு வகுப்புக்கு வந்துட்டேன். பிரசண்ட் போட்டுருங்க டீச்சர். ரெண்டு நாளா வேலை இருந்ததால வரமுடியலை. இன்னைக்கு வந்து நீங்க தலைமை ஏத்து நடத்துனதப் பத்திப் படிச்சிட்டேன் டீச்சர்.

said...

மணியன்,

பின்னணியிலே இருக்கற பூனை கொள்ளை அழகு இல்லே? firefoxல் படிப்பது கஷ்டம்ன்னா சொல்றீங்க?
நம்ம தொ.நு.வி. கிட்டேதாங்க கேக்கணும்.கேட்டுச் சொல்றேனே.


உதயகுமார்,

இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மாசமாக் கொண்டாடுறோம் பாருங்க:-)))

அதானே, பழைய நடைமுறைகளை அவ்வளோ சீக்கிரம் வுட்டுருவோமா என்ன?:-)


ராகவன்,

அதெல்லாம் பிரசெண்ட் போட்டாச்சு. ஆமாம் படிச்சீங்களே, யாராவது நான் போட்டுருந்த லிங்குலே போய்
எங்கூருப் புள்ளைங்க பாடற/ஆடற படத்தைப் பார்த்தீங்களா?

அட, குறைஞ்சபட்சம் சிலர்(!) கட்டியிருக்கற புடவைகளையாவது கவனிச்சீங்களா?
வரவர யாருக்கும் வகுப்புலே கவனமே இல்லை போங்க.

said...

// அட, குறைஞ்சபட்சம் சிலர்(!) கட்டியிருக்கற புடவைகளையாவது கவனிச்சீங்களா?
வரவர யாருக்கும் வகுப்புலே கவனமே இல்லை போங்க. //

அதப் பாக்கலை டீச்சர். யாராவது பாஷனா ஜீன்ஸ் கார்ட்ராய் போட்டுட்டு வந்திருந்தா ஆர்வமா பாத்திருப்போம். ஆனால் இப்பப் போயி பாக்குறேன் டீச்சர்.

said...

நான் அந்த லிங்கைப் பார்த்தேன், குறிப்பு எழுத மறந்து விட்டேன், மிஸ்.

கத்திரிப்பூ கலரில் புட்டா போட்ட புடவை நன்றாக இருக்கிறது. திரு. கோபால் பயமின்றி மத்தாப்பு விடுகிறார். எங்கள் மிஸ் எம் ஜி ஆர் போல வலது கையில் கடிகாரம் கட்டுகிறார்.குழந்தைகள் (பெருசுகளும் தான்) நடனமும் நாடகமும் நடத்தினார்கள்.

பாஸா டீச்சர் ?

said...

மணியன்,

100க்கு 100. வெரிகுட்.


பார்த்தீங்களா, வகுப்புலே இப்பப் புதுசாச் சேர்ந்தவர் எவ்வளவு கவனமாப் படிக்கிறார்.
பழைய மாணவர்கள் இங்கே அங்கேன்னு வேடிக்கைபார்த்துக்கிட்டுக் கவனம் சிதறிக்கிடக்குறீங்க.
இதுலே ஒருத்தர் 'அப்பீட்' வாங்கிக்கறேன்னு சொல்லிகிட்டு இருக்கார்.

நான் என் சிலபஸ்ஸை நடத்திக்கிட்டேப் போறேன். பின்னாளில் வாழ்க்கை நல்லா அமையணுமுன்னா
இப்ப நல்லாப் படிங்க.

அப்ப, அந்தக் காலத்துலே வகுப்புலே கலாட்டா பண்ணிக்கிட்டு இருந்தவுங்க கதியைப்
பார்த்தீங்களா? எல்லாம் பதிவு போட்டுக்கிட்டு இருக்காங்க:-)))))))))))