Friday, November 11, 2005

நியூஸிலாந்து பகுதி 25


நொவா ஸீலாண்டியா


பத்து கோல்கொண்டா ப்ளாங்கெட்....

ம்ம்ம் இருக்கு


90 கிலோ கிராம்பு, ஜாதிக்காய், ஜாதிபத்ரி, ப்யூட்டர் (pewter)இருக்கா?

இருக்கு.

பத்து பாக்கெட் சைனீஸ் தங்கக் கம்பிங்க

ஆமா, இருக்கு.


இரும்புலே செஞ்ச பாத்திரம் 25

ஆமா.

ச்சைனீஸ் கண்ணாடிங்க ச்சின்னது 500. இருக்குல்லே? பத்திரம்.
உடைஞ்சுரப்போகுது.

முத்துமாலை 3

ஒரு பித்தளைக் கும்பா. பெரூசு.


எல்லாத்தையும் கணக்குப் பார்த்து ஒரு பாய்மரக்கப்பல்லே ஏத்தியாச்சு.
கூடவே இன்னோருபாய்மரக்கப்பலும் வருது. அதுலே இரும்புலே செஞ்ச ஷார்ட் ரேஞ் துப்பாக்கிங்க, லாங் ரேஞ்சுலேசுடற கேனன் இப்படி, சண்டைக்குத்தேவையான வஸ்துங்க. இந்தக் கப்பலுக்குப் பேரு Heemskerck.
மத்த சாமான்களை ஏத்திக்கிட்டு வர்றதுக்குப் பேரு Zeehaen.


வருஷம் 1642. டச்சு நாட்டைச் சேர்ந்த 'ஏபெல் டாஸ்மென்'( Abel Tasman)ன்றவர் டச்சு வியாபாரம் நடந்துக்கிட்டுஇருந்த இடமான ஜாவா( சாவகத்தீவு?) இந்தோனேசியாவிலே இருந்து கிளம்பி கிழக்குப் பக்கமாஏதாவது பெரிய நிலம் இருக்குமா? அங்கே இருக்கற ஜனங்களோட வியாபாரம் வச்சுக்கலாமான்னுவராங்க. அப்பக்கூடப்பாருங்க. வியாபாரம் ஒருபக்கமுன்னா, சண்டை அடுத்தபக்கமுன்னு ரெண்டுகப்பலுங்களிலே வராங்க.


அஞ்சுமாசப் பிரயாணம் முடிஞ்சது. இந்த நாட்டோட தெற்குத்தீவுலே மேற்குக் கடற்கரைப்பக்கம் வந்து சேர்ந்தாச்சு. அங்கே இறங்கலை. வடக்கு நோக்கி மேலே அப்படியே நிலத்தையொட்டி பிரயாணம் செய்யறாங்க.


சுமார் 1000 வருசத்துக்குமுன்னே இங்கே வந்து சேர்ந்துட்ட மவோரிங்க பாட்டும் கதையுமா இருந்து பல்கிப் பெருகிட்டாங்க. அங்கங்கே குழுகுழுவாப் பிரிஞ்சுபோய் தனித்தனி கிராமமா வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க.எல்லாம் கடலை ஒட்டி இருக்கப்பட்ட இடங்கள். சாப்பாடு அங்கெதானே இருக்கு? மீன், ச்சிப்பின்னு கடல் உணவுங்க.


மனுஷரைப் பார்த்த ஏபெலோட படகு ஒரு இடத்துலே நிக்குது. அங்கே இருந்த Ngati Tumata Kokiri Tribe கூட்டமா கனூலே( Canoe)வந்து ஏபெலோட படகை இடிக்கறாங்க. அதுலே இருக்கற டச்சு ஆட்களை mere ன்னுசொல்ற மரத்தடியாலே அடிக்கறாங்க. மூணு வெள்ளைக்காரங்களுக்கு அப்பவே மோட்சம். ஒருத்தருக்கு பயங்கர அடி.இது சரிப்படாதுன்னுட்டு ஏபெல் அங்கிருந்து கிளம்பிப்போயிடறாங்க. அடிபட்ட ஆளும் இப்ப செத்துடறார். சரியானகொலைகாரப் பசங்கடா இவுங்கன்னுட்டு அந்த இடத்துக்கு Murderer's Bay ன்னு பேர் வச்சுட்டார்.கொலைகாரன்பேட்டை?


இன்னும் அப்படியே வடக்கு நோக்கியே கப்பலுங்க போகுது. வடகோடிக்கு டச்சு நாட்டு கவர்னர் ஜெனரலுடைய மனைவியின்பேரை வச்சுட்டார். Cape Maria Van Diemen! தேசபக்தி வேணுமுல்லே?


'எல்லா உள்ளூர் ஆளுங்களுமா இப்படி இருப்பாங்க? சிநேகமான ஆளுங்க இல்லாமயா போயிருவாங்க? இன்னும்கொஞ்சம் பொறுமையாப் பார்க்கலாமு'ன்னு ஒரு தீவுகிட்டே கப்பலை நிறுத்துனாங்க. அந்தத் தீவுக்கு இப்ப மூணு ராஜாதீவு( Three Kings Islands)ன்னு பேரு. அங்கேயும் மவோரி ஆட்கள் வந்து சத்தம்போட்டு விரட்டிவிட்டாங்க.நிலத்தைப் பார்த்துக்கூட தரையிலே காலுகுத்த முடியாம ஒரு தவிப்பு. திரும்பிப் போயிடறதுதான் நல்லது.ஏற்கெனவே கடல்நோய்வந்து பலபேரும் செத்தாச்சு. மிச்சம் மீதி இருந்தவங்களிலே இப்ப நாலுபேர் அவுட்.


புதுசா நாம கண்டு பிடிச்ச இந்த இடத்துக்கு ஒரு பேரு வைக்கலாமுன்னு Staten Landtnu வச்சாராம். அதுக்குசிலவருசம் கழிச்சு ஐரோப்பாவுலே இந்த புது இடத்துக்குப் பேர் NOVA ZEELANDIA ன்னு ஆயிருச்சாம்.அப்ப நெதர்லாந்துலே ஒரு கடற்கரையோரப் பகுதிக்கு Zeeland ன்னு பேர். அதனாலே இது புது(NOVA)ஸீலேண்ட் .


திரும்பிப் போயிட்டாங்களே தவிர இந்தப் புது இடத்தைப் பத்தின பேச்சு அங்கே நிறையவே நடந்திருக்கு. கொஞ்சம்கொஞ்சமா விவரங்கள் அக்கம்பக்கத்து நாடுகளுக்கும் பரவிக்கிட்டே போய் இருக்கு. அதானே, ஜனங்க வாய் ச்சும்மாஇருக்குமா?


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

19 comments:

said...

இதுதான் உங்க சரித்திர வகுப்பா?? இதுவரை மிஸ் பண்ணிட்டேனே...இனிமேல் தொடர்ந்து படிக்கவேண்டியது தான்...

said...

குமரன்,

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துருக்கேன்னு ஒரு டயலாக் வுட்டுருக்கலாமுல்லே?

இதுக்கு முந்தி ச்சும்மா ஒரு 24 பகுதிதான் போய் இருக்கு. நேரம் கிடைக்கிறப்பப் படிச்சாலும் போதும்.

பரிட்சைக்கு இன்னும் நாள் இருக்கு:-))

said...

யெக்கோவ்... கும்புடுறேன்க்கா... நல்லா இருக்கீங்களா..? நானும் உங்க வகுப்ப அங்கங்க கட் அடிச்சிட்டேன்க்கா... முடிஞ்ச வரைக்கும் ஒழுங்கா படிக்கப் பாக்குறேன். நேத்து உங்க வலைப்பூவுல நீங்க சொல்லியிருந்தபடி பின்னூட்டம் போடப் பாத்தா.. ஹஹஹா... ஒண்ணுமே வரலக்கா..!

said...

வீட்டிலே எத்தனை பூனை வழக்குரீங்க!
சரித்திரம்?! இப்பவாச்சும் ஒழுங்கப்படிக்கனும்.

said...

முருகன் தம்பி நல்லா இருக்கீங்களா? நானும் உங்க பக்கம் வ்ந்து பார்த்துட்டுத்தான் போறேன்.

இன்னிக்குப் பின்னூட்டப்பெட்டியை போட்டுருக்கு. நட்சத்திரம்தான் வரலை(-:

அதுலே போடற ஓட்டு எப்பவுமே நம்மதுன்றதாலே( ஒரு ஓட்டுத்தானேவுழுது தினமும்)
வர்றப்ப வரட்டுமுன்னு மெத்தனமாஇருக்கேன்.

said...

சித்தன்,

நம்ம தெருவுலே சராசரியா வூட்டுக்கு ரெண்டு பூனைங்க.
நம்ம வூட்டுலே போனமாசம்தான் ஒரு பூனைக்கு முடிவு ஏற்பட்டுருச்சு. இப்ப இருக்கறது ஒண்ணுதான்(இப்போதைக்கு)

எப்படியோ சரித்திரவகுப்புக்கு அட்டெண்டன்ஸ் கூடிக்கிட்டு வருது!

said...

உங்களுக்கென்னப்பா...கைவசம் கூடவே ஆளு இருக்கு...நினச்சா web site design மாத்திக்கிறீங்க...
அது சரி ஒண்ணு பூன..இல்ல..ஆன (யானை) போட்டுக்கிறத விட்டுட்டு புலியாயிட்டீங்க?? (அதான் உண்மையோ?)

said...
This comment has been removed by a blog administrator.
said...

ஆனாலும் இந்த வெள்ளைக்காரங்களுக்கு கற்பனைவளம் கொஞ்சம் குறைச்சல்தான்..

இப்பிடி நாங்க பேர் வைச்சா..யோசிச்சுப்பாருங்க.. புதுமதுரை, க்றைஸ்ட்சர்ச், நியூஸிலாந்து ... :O)

said...

தருமி,
அதென்ன உங்களுக்குப் பூனைகூட புலியா இருக்கா?

சரி. புலின்னே வச்சுக்கிடலாம். ஒரு கம்பீரம் வருதுல்லே?

said...

ஷ்ரேயா,

மதுரைன்னதும் ஞாபகம் வருது. மானாமதுரைன்னு ஒரு ஊர் இருக்கு தெரியுமில்லெ?

நம்ம டெல்லியிலேயே நியூ டெல்லி இருக்கு. இதுவும் துரைகளின் தெரிவுதான்.

( இந்த வார்த்தை 'தெரிவு'ன்றது சரியான பதமா?)

said...

தருமி சொன்னதை வைத்து உங்களுக்கு ஒரு பட்டம் கொடுத்திடலாம்-`பூனை ஒன்று புலியாகிறது'

said...

"மானாமதுரை மாமரக் கிளையிலே, பச்சைக்கிளியொண்ணு கேட்டுது கேட்டுது.."


ahhhhhh!...அர்விந்சுவாமி....(கண்கள் திறந்து கனவு காணும் ஷ்ரேயா!!) ;O)

said...

தாணு,

மதுமிதா இப்பத்தான் பட்டங்களை வாரி வாரி வழ்ங்கிட்டுகொஞ்சமேகொஞ்சம் ஓய்ஞ்சுபோய் இருக்காங்க. இப்பநீங்க அடுத்த 'பட்ட வள்ளி'யா?:-))))

said...

ஷ்ரேயா,

அரவிந்தசாமி.....?

உங்களுக்கு என்னமோ ஆயிக்கிடக்கு:-)

said...

கொஞ்சம் கரீட்டா சொல்றீங்களா? இது புலித்தோல் போர்த்திய பூனையா? இல்ல..பூனைத்தோல் போர்த்திய புலியா?

said...

இந்த நியூசிலாந்து பேரு இங்கிலீஷ் மாலுமி கேப்டன் ஜேம்ஸ் குக் வச்சப் பேரு இல்ல?

said...

தருமி,

அது அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏத்தமாதிரி மாறிக்கும்:-)))

said...

உதயகுமார்,

டச்சுப் பேரை பிரிட்டிஷ்காரர்கள் இங்கிலீஷா மாத்திக்கிட்டாங்க.