மகாபலிச் சக்ரவர்த்தியின் கதையை ஞாபகப்படுத்திக்குங்க. அவர் யாருன்னு தெரியாதவங்க போனவாரம் பத்திரிகை செய்தியையாவது பார்த்துருப்பீங்கதானே?
சமீபத்துலே தன்னை மாவேலியின் (அப்பவும் சக்ரவர்த்தி!! அதான் வீரவாள் க்ரீடம் எல்லாம் 55 லட்சத்துக்கு வித்துருக்கார்) மரபுலே ஆட்சி புரிபவர்னு சொல்லிக்கிட்டு இருக்கார் ஸோ அவருதாங்க இவரு:-)))))
சரி. நம்ம கதைக்குப் போகலாம். வாமன அவதாரம் எடுத்து வந்து தன் காலடியால் அளந்து மூணு அடி நிலம் வேணுமுன்னு யாசிக்கிறார் விஷ்ணு.. மகாபலிக்குத் தெரிஞ்சுபோச்சு! அதான் இவர் யாருன்னு. அசுரர்களின் குரு சுக்ராச்சாரியார், அரசன் காதில் வந்து போட்டுக் குடுத்துட்டாரே. 'வந்திருப்பவன் சாதாரண ஆள் இல்லை. ஒன்னும் கொடுக்காதே'ன்னார். மகாபலிக்கு ஒரு பக்கம் பெருமிதம். ஆனானப்பட்ட மகாவிஷ்ணுவே நம்மிடம் யாசிக்க வந்துருக்காரேன்னு. 'கேட்டதைக் கொடுக்காம என்னால் இருக்கமுடியாது'ன்னு கிண்டியைக் கொண்டுவரச்சொன்னார். கையில் நீர் ஊற்றி தாரை வார்த்து தருமம் செய்யணும்.நோ தண்ணி நோ தருமம். 'இவன் என்ன சிஷ்யன்? குரு பேச்சைக் கேக்கலை:( அழிஞ்சுபோகப்போறான்.' எப்படியாவது இதை நிறுத்தணுமுன்னு யோசிச்ச சுக்ராச்சாரியார் வண்டு ரூபம் எடுத்துக் கிண்டிக்குள்ளே நுழைஞ்சு மூக்கு பாகத்தை அடைச்சுக்கிட்டார்.
கிண்டியைச் சரிச்சாத் தண்ணீர் வரலை. என்னமோ அடைச்சுக்கிட்டு இருக்குன்னு கீழே இருந்த தர்ப்பைப்புல்லை எடுத்து அடுத்தபக்கம் குத்திவிட்டார் ராஜா. 'ஆ'ன்னு ஒரு சத்தம். வண்டு வெளியே வந்து விழுந்துச்சு. வண்டின் ரூபம் மாறி சுய உருவோடு கண்ணில் ரத்தம் வழிய நிக்கறார் குரு. அதான் யாருக்காவது எதாவது மனசு வந்து கொடுக்கும்போது தடுக்கக் கூடாதுன்றது.
தண்ணீரைக் கையில் ஊற்றி 'தந்தேன்' என்றார் மகாபலி. வாமனர் விஸ்வரூபம் எடுக்கறார். நெடுநெடுன்னு வளர்ந்துக்கிட்டே போறார். ஒரு காலை மேலே தூக்கி மேலுலகம் ஏழை(7)யும் அளக்கறார். கால் உயர்ந்து பிரம்மா இருக்கும் சத்திய லோகத்துக்குப் போகுது. அட! நம்ம மகாவிஷ்ணுவின் திருப்பாதம் என்று ஆனந்தப்பட்ட பிரம்மா ஆகாயத்துலே ஓடிக்கொண்டிருக்கும் கங்கையில் (இதுதான் ஆகாயகங்கை) தன் கமண்டலத்தை முக்கி கங்கை நீரை எடுத்துப் பெருமாளின் கால் விரலில் ஊற்றி அபிஷேகம் செய்யறார். அந்த நீர் அவர் விரலில் வழிஞ்சு சரேல்ன்னு கீழே இறங்குது. நேரா அது வந்து பூமியைத் தொட்ட இடத்தில் இருந்து ஓடி வரும் போது வழியில் விஷ்ணுவின் மற்றொரு பாதம். ஹரி கி பொவ்டி.பிரம்மா ஆகாயகங்கையால் விஷ்ணுவின் பாதத்துக்கு அபிஷேகம் செய்யறார்.
(பெயிண்ட் அடிச்சுட்டு அந்த டின்களையெல்லாம் எங்கே வச்சுட்டுப் போயிருக்காங்க பாருங்க)
கதைக்கு இன்னொரு வெர்ஷன் இருக்கு.
பகீரதன்னு ஒரு அரசன் இருந்தான். அவனுடைய முன்னோர்கள் ஒரு காலத்துலே கபில முனிவரின் கண்பார்வை பட்டு எரிஞ்சு சாம்பலாப் போயிட்டாங்க. அந்த சாம்பலே ஒரு சின்ன மலைமாதிரி குவியலா இருந்துச்சு. மொத்தம் அறுபதினாயிரம் ஆட்களாச்சே எரிஞ்சு போனது.
இவுங்க அப்பா சகரன் என்ற பெயருள்ள அரசன், அசுவமேத யாகத்துக்குத் தயார் செஞ்சு அனுப்பின குதிரையை இந்திரன் திருடிப்போய் கபில மகரிஷி ஆஸ்ரமத்துலே கட்டிப்போட்டுட்டான். ஏன்? அசுவமேத யாகம் செஞ்சவங்களுக்கு இந்திரப் பதவி கிடைச்சுருமாம். தன் பதவியைக் காப்பாத்திக்க என்னெல்லாம் செய்யறாங்க பாருங்க!
குதிரையைக் காணோமேன்னு எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்துட்டு பாதாளலோகம் போயிப் பார்க்கலாமுன்னு இந்த அறுபதினாயிரம் சகோதரர்களும் போயிருக்காங்க.
முனிவர் தேமேன்னு கண்ணைமூடித் தவம் செஞ்சுக்கிட்டு இருந்துருக்கார். குதிரை பாட்டுக்கு அங்கே ஓரமா மேய்ஞ்சுக்கிட்டு இருக்கு.
'இத்தைப் பார்றா...... திருடியாந்துட்டு ஒன்னும் தெரியாதவராட்டம் கண்ணை மூடிக்கிட்டு இருக்கறதை!' ஓங்கி அவருக்கு ஒன்னு கொடுத்தாங்க. முனிவர் மகாவிஷ்ணுவின் அம்சம். தவம் கலைஞ்சு, கண்ணைத் திறந்து பார்த்தார். எல்லோரும் அப்படியே எரிஞ்சு சாம்பலாயிட்டாங்க. ப்ரெஸண்ட் இந்திரன் இப்படி நடக்குமுன்னுதானே ஐடியா செஞ்சான்.கபிலாஸ்ரமம்
குதிரையைத் தேடிப்போன தன்மக்கள் கூட்டம் வரலையே என்ன ஆச்சோன்னு ராஜாவுக்கு குழப்பம். பேரனைக் கூப்பிட்டு உங்க சித்தப்பாமார் போய் பலவருசங்களாச்சு..... இன்னும் வந்து சேரலை. போய்ப் பார்த்துட்டு வான்னார்.
இவன் போய்ப் பார்க்கிறான். சாம்பல் மலையும் கட்டி இருக்கும் குதிரையும் கண்ணில் பட்டுச்சு. என்ன ஏதுன்னு யோசிக்கும்போது அங்கே கருடர் வர்றார். இவர் இந்த அறுபதினாயிரம் பேருக்கும் தாய்மாமன். நடந்த சம்பவங்களை எடுத்துச்சொல்லி, நீ குதிரையை அவுத்துக்கிட்டுப்போய் யாகத்தை முடிச்சுரு. உங்க சித்தப்பன்மார் தெரியாம பாவம் செஞ்சு இந்த கதிக்கு ஆளாகிட்டாங்க. இந்தப் பாவம் தொலைஞ்சு அவுங்களுக்கு நல்ல கதி கிடைக்கணுமுன்னா கங்கை நதி நீரில் இவுங்க சாம்பலைக் கரைக்கணுமுன்னு சொல்லிட்டுப் போனார்.அசுவமேதயாகம்
கங்கை எங்கே?
பர்வதராஜாவான ஹிமவானுக்கு மனோரமைன்னு ஒரு மனைவி. அவுங்களுக்கு ரெண்டு பெண் குழந்தைகள். மூத்தது கங்கா. இளையது உமா. 'மூத்த மகளை எங்க ஊருக்கு அனுப்புங்க'ன்னு தேவர்கள் எல்லோரும் வந்து வேண்டிக்கிட்டு தேவலோகத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. சகல பாவங்களையும் போக்கும் சக்தி பெற்றவள். அதனால் பயங்கர டிமாண்டு. அங்கே ஆகாசத்தில் கங்கையா ஓடிக்கிட்டு இருக்காள். தேவர்களும் எதாவது பாவம் செஞ்சா சட்னு கங்கையில் முங்கி பாபத்தை நீக்கிக்கிடுவாங்க. திரும்ப பாவம் செஞ்சால்? அதான் கங்கா இருக்காளே!
இளையமகள் உமா, 'கட்டுனா பரமசிவனைத்தான் கட்டுவேன்'னு பலகாலம் தவமிருந்து சிவனையே கட்டிக்கிட்டாள். அவுங்களுக்கு ரெண்டு பிள்ளைகளும் ஆச்சு.
ராஜாவோட பேரன், குதிரையைக் கொண்டுபோய் தாத்தாவிடம் ஒப்படைச்சுட்டு சித்தப்பன்மாருக்காக கங்கையை பூலோகத்துக்குக் கொண்டு வர்றது எப்படின்னு யோசிச்சுக்கிட்டே இருக்கான். ஒன்னும் புரிபடலை. காலம் கடந்து போய்க்கிட்டே இருக்கு. அவன் காலம் முடிஞ்சு அவனோட பேரன் பகீரதன் காலமும் வந்துச்சு. இந்த பகீரதனுக்கு மூத்த தாத்தா பெரிய தாத்தா, எள்ளுத்தாத்தா கொள்ளுத்தாத்தா, தாத்தா, அப்பான்னு ன்னு ஆறு தலைமுறை 'கங்கை' யோசனையிலேயே இருந்தது தெரியும். தலைமுறை தலைமுறையா வீட்டுலே இதே பேச்சா இருந்துருக்கும் போல.
நல்லகதி கிடைக்காமல் பரிதவிக்கும் அறுபதினாயிரம் ஆத்மாக்களுக்கு நாமாவது எதாவது செய்யணுமுன்னு தீவிரமா யோசிக்கிறான். தாத்தாக்கள் பட்ட கவலையைப் பத்திச் சொல்லி வச்சுட்டுப்போக, இவனுக்குப் பிள்ளைகளும் இல்லை. ஒரே கல்லுலே ரெண்டு மாம்பழமுன்னு(எனக்குக் காய் பிடிக்காது) காட்டுக்குப்போய் பிரம்மனைக் குறிச்சுத் தவம் இருக்கான்.பகீரதன் தவம் (மல்லை)
பலவருசங்களுக்குப்பிறகு தவம் பலிச்சு பிரம்மா தோன்றினார். என்ன வேணுமுன்னு கேட்க அவன் சொல்றான்.... 'என் குலம் தழைக்க பிள்ளை ஒன்னு வேணும். என் மூதாதையர்கள் சாம்பலைக் கரைக்க கங்கையும் வேணும்.'
'செஞ்சுருவோம். ஆனா ஒரு பிரச்சனை இருக்கே'ன்னார் பிரம்மா. 'கங்கை ஆகாயத்துலே இருந்து பயங்கர வேகத்துலே பூமிக்கு வரும்போது தாங்கிப்பிடிக்க யாரும் இல்லைன்னா அப்படியே பாதாளத்துக்குள்ளே இறங்கிக் காணாமப் போயிருவாள். அதனால் தாங்கும் சக்தியுள்ளவரைத் தேடு'ன்னார்.
'அட தேவுடா '......... இப்படியெல்லாம் சொன்னா என்ன செய்யறது? நீங்களே சொல்லுங்க அப்பேர்ப்பட்ட சக்தியுள்ளவர் யாருன்னு!
"வேற யார். சாக்ஷாத் சிவ பெருமான்தான். கங்கையோ மச்சினிச்சி வேற! அதனால் தாங்கிப்பிடிக்கும் சக்தி அவருக்கு மட்டுமே! நீ போய் அவரைக் குறித்து தவம் செஞ்சு பிரார்த்தித்து கேளு"
மறுபடி கடும் தவம் புரிந்தான் பகீரதன். சிவனும் உச்சி குளிர்ந்துபோய் பகீரதன் முன்னே தோன்றி என்ன ஏதுன்னு விவரம் கேட்டுக்கிட்டு தாவி வரும் கங்கையைத் தாங்கிக்கச் சம்மதம் சொன்னார்.
படுவேகத்தோடு வானத்தில் இருந்து இறங்கின கங்கைக்கு தன்னுடைய அபார சக்திமீது கொஞ்சம் கர்வம் வந்துச்சு. சிவனையே ஒரு தள்ளு தள்ளப்போறோமுன்னு நினைக்கிறாள். தலையை நீட்டிய சிவன் தன்னுடைய சடாமுடிக்குள்ளே கங்கையைச் சிறைபிடிச்சுட்டார். சொட்டுத்தண்ணி வெளியில் விழலை. பார்த்துக்கிட்டே இருந்த பகீரதனுக்கு 'பகீர்'ன்னு ஆகிப்போச்சு.
கங்கை வெளியே வர துடியாத் துடிக்கிறாள். கர்வம் அடங்குச்சு. அப்போ சிவன் தன்னுடைய சடாமுடிகளுக்கிடையில் ஏழு இடத்தில் கொஞ்சம் கொஞ்சமா கங்கையை வெளியே மெல்ல விட்டார். சின்னதா ஏழு நதிகளா வெளியே வந்த கங்கை கிழக்குப்பக்கம் மூணு மேற்குப்பக்கம் மூணுன்னு பாய ஆரம்பிக்க பாக்கி இருந்த ஏழாவது நதி பகீரதன் பின்னே போக ஆரம்பிச்சது. இனி எல்லாம் சுபமேன்னு முடிஞ்சதா? இல்லையே.....
ஒரு இடத்தில் ஜன்ஹூன்னு ஒரு ரிஷியின் யாகசாலையைக் கடக்கும்போது அங்கிருந்த எல்லாப் பொருட்களையும் தண்ணீர் அடிச்சுக்கிட்டுப் போக ஆரம்பிச்சதும் அந்த ரிஷி சட்னு நதியைக் கையால் எடுத்து உறிஞ்சிக் குடிச்சுட்டார். பகீரதனுக்கு மறுபடி பகீர்!
மகரிஷியிடம் மன்றாடிக்கேட்டபிறகு அவர் மனம் இரங்கி தன் காது வழியா நதியை வெளியே விட்டார். பகீரதன் பாதாளலோகத்துக்குப்போய் முன்னோர்கள் சாம்பலைக் கங்கையில் கரைத்து அவர்களுக்கு மோட்சம் கிடைக்க வழி செய்தான்.
இப்படிப்போகுது கங்கை பூமிக்கு வந்த கதை. பகீரதன் கொண்டு வந்ததால் பாகீரதி, ஜான்ஹூ முனிவர் காதில் இருந்து வெளிவந்ததால் ஜான்ஹவி, அப்புறம் அலகாநந்தா, மந்தாகினின்னு பல இடங்களில் பல பெயர்களில் இருக்காள் இந்த கங்கை.
பாலத்தின் மேலே நடந்து இடப்பக்கம் இருக்கும் படிகளில் இறங்காமல் நேராப் போனால் கடைசியில் காலணி பாதுகாத்துத் தரும் இடம் வருது. அங்கே காலணிகளைக் கொடுத்துட்டு படித்துறைக்கு போறோம்.
அஞ்சரைக்கு இன்னும் அஞ்சே நிமிஷங்கள் பாக்கி. எங்கே பார்த்தாலும் மக்கள். கூட்டமான கூட்டம்.
தொடரும்.............................:-)
Friday, February 11, 2011
கங்கைக்கரை ஓரம்...............எக்கச்சக்கக் கூட்டம்............
Posted by
துளசி கோபால்
at
2/11/2011 09:09:00 PM
16
comments
Labels: அனுபவம் Haridwar Hari ki Pauri
காலளவு ' நீளம்' 310 கிலோ மீட்டர்.
ஒரு புதன்கிழமை இன்ப அதிர்ச்சி ஒன்னு கொடுத்தார் கோபால். இந்த வீக் எண்ட் நீ ஆசைப்பட்ட ஒரு இடத்துக்குப் போலாமா?
ஐய்யோ ஐயோ..... நான் ஆசைபட்ட இடங்கள் ஏராளமா இருக்கே...இப்ப எதுன்னு போகப்போறோம்!!!!!
'ஹரித்வார் ரிஷிகேஷ்' சொல்லி வாய் மூடலை..... வெறும் வீக் எண்டா? ஊஹூம்.... போதாது.
வெள்ளிக்கிழமை மத்தியானமாக் கிளம்புனா சாயந்திரம் போயிடலாம். ஞாயிறு மாலை கிளம்புனா ராத்திரி வீடு. வெறும் 208 கிலோ மீட்டர்தான். மிஞ்சிமிஞ்சிப்போனா மூணரை நாலு மணி நேரம் ஆகும். ஹொட்டேல் புக் பண்ணிடலாம். நெட்லே பாரு என்ன இருக்குன்னு.......
ராஜா ஜி நேஷனல் பார்க்குக்கு முன்னால் பார்க்வ்யூ ....பேரே நல்லா இருக்கேன்னு வலைமூலமா பதிவு செஞ்சு வச்சோம்.
ரெண்டே நாள் போதாதுன்னு நான் அரிச்சு எடுத்து, ரெண்டரைநாளா இருக்கட்டுமேன்னு வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கே கிளம்பிட்டோம். சண்டிகர்-யமுனாநகர்-ஹரித்வார். சரியா பகல் ஒன்னரை இல்லை ரெண்டு மணிக்குப் போயிறமாட்டோமா! (ஹூம்.... நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குது)
யமுனா நகரைத் தாண்டும்போதே மணி ரெண்டு. எல்லோருக்கும் நல்ல பசி. கண்ணுக்கு தென்பட்ட தாபாக்கள் எல்லாம் அவ்வளவு சரியா இல்லை. நம்ம ட்ரைவர் ப்ரதீப் மட்டுமாவது எங்காவது நிறுத்தி சாப்பிடட்டுமேன்னால் ....பரவாயில்லைன்னு பதில் வருது.
குறுகலான சாலை. ஹைவேதான். ஆனாலும் ........... இதுலே ட்ராக்டர்கள். எருமை மாட்டு வண்டிகள்ன்னு இருக்கும் இடத்தை அடைச்சுக்கிட்டு மெதுஓட்டம். எதிரே வரும் இதே மாதிரி வரிசைகள். இன்னும் பஸ், ட்ரக், போக்குவரத்து வேற. சாலைகள் எல்லாம் பைபாஸா இல்லாம ஊருக்குள்ளேயே போகுது. ஊர் வருவதற்கு ஒரு கிலோ மீட்டர் முன்னாலேயே ரெண்டு பக்கமும் நெருக்கமான கடைகள் ஆரம்பிச்சுருது. இது ஊர் கடந்து ஒரு கிலோமீட்டர்வரையும் இருக்கு. காய்கறிகள். பழங்கள், மசாலாச் சாமான்கள் இப்படி எல்லாமே சாலையை ஒட்டிய தரையில் குவிச்சு வச்சுருக்கு. மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடின்னு பொடிவகைகள் அப்படியே சின்னச்சின்னக் கும்மாச்சியா திறந்து கிடக்கு. 100 கிராம் வாங்குனா அதுலே ஒரு 75 கிராம் தூசியும் மண்ணுமாத்தான் இருக்கப்போகுது. சின்னதும் பெருசுமான ஊர்களுக்குத் தகுந்தபடி மக்கள் கூட்டம் மொய்க்குது.
பார்க்வியூ ஹொட்டேலுக்கு ஃபோன் பண்ணி 'லேண்ட் மார்க் சொல்லுங்க. ஊருக்குள் வந்தாச்சு'ன்னா.......'ரிஷிகேஷ் போகும் ரோடுலேயே வாங்க. ஷாந்தி குஞ்ஜ்க்கு நேரெதிரா இருக்கு'ன்னாங்க. சாலைக்கு ரெண்டு பக்கத்துக்கும் ஆளுக்கொருத்தராக் கண் நட்டுக்கிட்டே வந்ததில் என் பக்கம் பார்க் வியூவைக் கண்டுபிடிச்சுட்டேன்!
உள்ளூர்லே பார்க்க வேண்டிய இடங்கள் எவைன்னு கேட்டதுக்கு ரெண்டு நிறங்களில் விவரம் அடங்கிய தாள் கிடைச்சது. ஒன்னு ஹரித்வார், இன்னொன்னு ரிஷிகேஷ். மாலை அஞ்சரைக்கு கங்கை ஆரத்தி இருக்கு. சீக்கிரம் கிளம்பிப்போனா பார்க்கலாம். இல்லேன்னா கூட்டம் வந்துருமுன்னு சொன்னார். ஆமாம்...இங்கே ஹொட்டேலில் கூட்டமே இல்லையேன்னா.... குளிர்காலம். அதான் டூரிஸ்ட் கூட்டம் இல்லைன்னார்.
வெய்யில் காலமுன்னா மாலை ஆறு மணிக்கு நடக்கும் ஆரத்தியை குளிர்காலங்களில் அரைமணி நேரம் சீக்கிரமா ஆரம்பிச்சுருவாங்களாம். இந்தக் காலங்களில் சீக்கிரம் இருட்டிப்போகுதுல்லே?
கங்கையில் நீர் உள்ளவரை என் கணவரின் ஆயுள் இருக்கட்டும் என்று கதாநாயகி பாடறாங்க. சுஹாக் ராத் என்ற ஹிந்திப் படத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய பாட்டு இது. 1968 லே வந்த படம்.
கங்கை ஒரு ஜீவநதி. நினைவில் இருக்கட்டும்:-)
இந்த இடம்தான் ஹரி கி பொவ்ரி./ பொவ்டி ( Hari Ki Pauri )ஹரியின் பாதம். அதான் 310 கிலோமீட்டர் நீளம்.
இந்தப் பதிவை எழுதும்போது கோபாலிடம் சொன்னேன். பெருமாள் விஸ்வரூபம் எடுத்தப்ப அவர் பாதம் 310 கிலோமீட்டர் நீளம்.
"எதுலே போட்டுருக்கான்?"
அய்ய...... ப்ரிண்டுலே வந்ததெல்லாம் உண்மைன்னு நம்பும் ஒரு ஜீவன்:(
நானே கணக்குப் போட்டுக் கண்டுபிடிச்சதை நம்பமாட்டாராமா?
"எதுலேயாவது போட்டாத்தானா? நாந்தான் சொல்றேன். முன்னுத்திப்பத்து."
"எப்படி? "
"இருங்க விலாவரியா அடுத்த பதிவுலே சொல்றேன்."
தொடரும்.............................:-))))
Posted by
துளசி கோபால்
at
2/11/2011 03:04:00 PM
36
comments
Labels: 108 திவ்யதேசம், அனுபவம் Haridwar
Wednesday, February 09, 2011
தேரே முஸ்குரானா யாத் ஆனேகி காபில் நஹி ஹை !!!!
க்யோன்? தும் தோ ஏக் பேவஃபா ஹை.
ஓ ரியலி??
பஞ்சாப் யுனிவர்ஸிடியில் மாலைநேர வகுப்புகளுக்காக ஒரு தனிக் கட்டிடம். அதுக்குள்ளே ஒரு சின்ன ஆடிட்டோரியம். போய்ச்சேர்ந்தப்ப மேடை அலங்காரம் முடிஞ்சபாடில்லை. ஒரு இளம்பெண் அறிவிப்பாளரா இருக்கப்போறதுக்காக இன்னிக்குப் புடவைகட்டி, தலைமுடியை ஸ்டைலா அப்படியே பரத்திவிட்டு. நாஸுக்கா அப்பப்ப முடியைக் கோதிவிட்டுக்கிட்டே மைக் பிடிச்சு இன்னிக்கு என்ன ஏது ன்னு அறிவிப்பு செஞ்சு பார்த்தார். சும்மா ட்ரயல்தான். நாங்க ரெண்டு பெரும் கைதட்டி 'ஊக்கு வித்தோம்'. பாவம்..... ட்ரயல் ட்ரயலாவே நின்னுடப்போகுதுன்னு அப்போ நாங்க ஊகிக்கலை :(இன்னிக்கு அதிசயமா ஒரு அம்மா வந்து பண்டிட் பீம்ஸென் ஜோஷி அவர்கள் படத்துக்கு ஊதுவத்தி ஏத்தி வச்சாங்க. வழக்கம்போல் 'கலைஞர்' கையால் பூச்சொரிதல் இருக்காதுன்னு முன்கூட்டியே தெரிஞ்சுருக்குமோ!
பூனாவில் நாம் இருந்தப்ப நம்ம வீட்டுக்கு முன்பக்கம் இருந்த கூர்க்கா ரெஜிமெண்ட் மைதானத்துக்கு அந்தப் பக்கம் ஒரு தர்கா. நம்ம வீடு இருந்த வரிசையில் பேர்பாதி வீடுகளில் இஸ்லாமியர் இருக்காங்க. நமக்கு அவுங்க எல்லோருமே பயங்கர நட்புதான். இந்து முஸ்லீம் விரோதம் ஒன்னும் அப்போ கிடையாது. எல்லோரும் தாயும் புள்ளையுமாத்தான் இருப்போம். இப்பவும் அப்படித்தான் இருக்கோம்.
நம்ம கீழ்வீட்டு உம்மா கூட நான் அந்த தர்கா போய்வருவேன். அவுங்க என் கூட கோர்புரி பஸார் அனுமனைக் கும்பிட வருவாங்க. ஒரு சமயம் தர்காவில் எதோ விழா. அங்கே கவாலி பாட ஜானி பாபு வர்றார். நிகழ்ச்சி ராத்திரி பத்து மணிக்கு. அதனால் லேடீஸ் யாரும் வரமாட்டாங்களாம். நீச்சே உப்பா நம்ம கோபாலைக் கூட்டிக்கிட்டுப் போனார்.
ரெண்டு மணிக்குத் திரும்பி வந்த கோபாலுக்கு முகமெல்லாம் தூக்கக் கலக்கத்தோடு அப்படி ஒரு மகிழ்ச்சி. நமக்கு இதுவரை கவாலின்னா அது சினிமாவில் வருவதுதான். முக்கியமா ரிஷிகபூரின் பர்தா ஹே பர்தா ஹைதான். அதான் நாம் பூனா வந்தபிறகு பார்த்த முதல் ஹிந்திப்படம்.
புத்தம்புது ஒரு ரூபா நோட்டுகளை அப்படியே சட்டைப் பாக்கெட்டில் இருந்து உருவி உருவிப் போட்டுக்கிட்டு இருந்தராம் உப்பா!!!! இதுக்குன்னே புது நோட்டுகளை பேங்கிலே போய் வாங்கிவந்துருக்கார். 70களில் ஒரு ரூபாய் கொஞ்சம் பெரிய காசுதான். நமக்கோ அப்ப கட்டை சம்பளம். அதான் வியப்பில் இவருக்குக் கண்கள் விரிஞ்சுபோயிருக்கு அங்கே!
ஆறு மணி நிகழ்ச்சிக்குப் பத்து நிமிசம் இருக்கும்போது ஏழுபேர் பரபரப்பா நுழைஞ்சாங்க. மேடையில் போட்டுவச்சுருந்த சின்ன மெத்தையில் ஆறு பேர் தப்லா, மத்தளம், ஹார்மோனியங்கள் மைன்னு பரபரன்னு செட் செஞ்சு நடுவில் ஒரு இடம்விட்டு உக்கார்ந்தாங்க. தலைவர் அதுவரை பார்வையாளர்களுக்குன்னு இருந்த இருக்கையில் உக்கார்ந்துருந்தார். முழுக்கை வச்ச பட்டு ஜிப்பா. கழுத்தில் முத்து ஆரங்கள் இப்படி......
பார்க்க ரொம்ப சாதாரணமா இருக்காரேன்னு முதலில் நினைச்சுட்டேன்.
அப்புறம் வலையில் தேடுனா ............. (இதுக்குத்தான் தாடி சொல்லி இருக்கார் உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று) தலையில் ஒரு குட்டு வச்சுக்கிட்டேன்.
உஸ்தாத் காதர் நியாஸி ( Qadar Niazi )அண்ட் பார்ட்டி இன்னிக்குப் பாடப்போறாங்க. உஸ்தாத் காதர் அவர்கள் கவாலி ஸாம்ராட் என்ற பட்டத்தை இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஸெயில் ஸிங்கிடம் பெற்றவர். அவர் மகன்கள் ரெண்டுபேரும் ஹைதர் & ஹஸன், அப்பாகூடவே பாடறாங்க இப்போ. சுமார் 700 வருசங்களா இவரோட முன்னோர்கள் பரம்பரையாவே கவ்வாலி பாடகர்கள்தானாம். சூஃபி ஞானி ஹஸ்ரத் நிஸாமுதீன் ஆவ்லியாவின் பரம்பரையில் வந்தவர் இவர்.
கவ்வாலி இசைக்கு நல்ல பாரம்பரியம் இருக்கு. கிட்டத்தட்ட 1200 வருசங்களுக்கு முற்பட்டது. பெர்ஸியாவிலே ஆரம்பிச்சதுன்னு சொல்றாங்க. உருது, ஹிந்தி, பஞ்சாபின்னு பல மொழிகளில் கவ்வாலி பாட்டுகள் இருக்கு. (தமிழில் இருக்கான்னு தெரியலை)
கவாலின்னதும் நமக்கு நினைவுக்கு வரும் பாடகர் நம்ம நுஸ்ரத் ஃபடே அலி கான் அவர்கள்தான். நிறைய ஸீடீக்கள் கேட்டிருக்கேன். 49 வயசுலேயே போயிட்டார்:(
இந்த வகைப் பாடல்களுக்குன்னு சில நியமங்கள் இருக்கு. லீட் சிங்கரா ஒருத்தர். அவர்கூடவே சேர்ந்து பாட பக்கத்துக்கொன்னா ரெண்டு பாடகர்கள். பலசமயங்களில் இவுங்களே ஹார்மோனியம் வாசிச்சுக்கிட்டே பாடுவாங்க. சில சமயங்களில் ஹார்மோனியம் வாசிக்கத் தனி ஆட்கள். அப்புறம் பின்பாட்டுக்கு ரெண்டு பேர். தப்லா, டோலக் வாசிக்க ரெண்டு பேர் இப்படி சின்னக் குழுன்னாக்கூட 7 பேர் வேணும். இன்னும்கூட விதி முறைகள் இருக்கலாம். எனக்குத்தான் சரியாத் தெரியலை:(ஹார்மோனியம் ஒலிக்க ஆரம்பிச்ச சமயம் திடீர்னு மின்சாரம் போயிருச்சு. வரும் வருமுன்னு இருந்தால்......ஊஹூம். ஏற்கெனவே சுமார் வெளிச்சம்தான். இந்த அழகில் உள்ளதும் போச்சுரா..... கதை:( இப்போ மட்டும் நம்ம விஜயகாந்த் இருக்கணும், மொபைல்ஃபோன் வெளிச்சம் போட்டுருப்பார்னு என் மனசுலே தோணுச்சு பாருங்க...... இதைப் படிச்சதுபோல் சட்னு நாலைஞ்சு செல்போன் ஒளி அங்கங்கே இருந்து வந்துச்சு.
அங்கங்கே ஒன்னு ரெண்டு மெழுகுவத்திகள் கொண்டு வந்து ஏத்தி வச்சாங்க. அப்ப திடீர்னு 'இப்போ நிறைய டீ கேண்டில்ஸ் ஏத்திவச்சுப் பாடுனா எவ்வளோ நல்லா இருக்கும் இல்லே?ன்னு கோபாலிடம் கிசுகிசுத்தேன். 'கேண்டில் லைட் கவ்வாலி' ன்றார் அவர். என் மனசில் தோணியதை யார் கண்டுபிடிச்சாங்களோ தெரியலை, ஒரு பெரிய பாக்கெட் மெழுகுவத்திகளைக் கொண்டுவந்து வரிசையா மேடையின் முன்பக்கத்துலே ஏத்தி வச்சாங்க.
அரை இருட்டுலே பந்தா ஏதுமில்லாம தலைமைப்பாடகர் காதர் நியாஸி மேடைக்குப்போய் நடுவில் உட்கார்ந்தார். 'அல்லா ஹூ' பாடலைக்கடவுள் வாழ்த்தா ஆரம்பிச்சார். பாட்டுப் பட்டையைக் கிளப்புது. மக்கள்ஸ் எல்லாம் இசையின் தாளத்துக்கேத்தபடி கைதட்டிக்கிட்டே கேக்கறோம். பாடல் முடிவுறும் சமயம் பளிச்ன்னு விளக்குகள் எரிய ஆரம்பிச்சது. யா அல்லா உன் கருணையே கருணை! ( இன்னிக்கு முழுசும் பயங்கரமாக் காத்து வீசுனதுலே உடைஞ்ச மரக்கிளை பவர் லைன் மேல் விழுந்துருச்சாம். மறுநாள் காலை தினசரியில் போட்டுருக்கு) பெரிய பெரிய கேமெராக்களுடன் அப்பப்ப சிலர் வந்து நாலு ஷாட் எடுத்துக்கிட்டுப் போயிடறாங்க. செய்தித்தாள்களுக்கு சப்ளை?? யாரும் உக்கார்ந்து நிகழ்ச்சியைப் பார்த்தமாதிரித் தெரியலை.அடுத்து 'நய்னா மிலாயே கே' ( Chhap tilak sab chheeni re osey naina milayee ke) ( அடுத்து பஞ்சாபியில் 'ஸஜ்னா தேரே பினா' ( Saanu ik pal chein na aavee sajna tere bina ) அப்புறம்....'பேவஃபா தேரா முஸ்குரானா யாத் ஆனேகி காபில் நஹி ஹை (Bewafa yoon tera muskurana yaad aane ke kabil nahin hai)
பாட்டின் இடையில் அவ்வப்போது நடக்கும் சம்பவங்கள் நாட்டு நிகழ்ச்சிகள் எல்லாம் சட்னு இட்டுக்கட்டிப் பாடும்போது முதலில் நாம் திகைச்சாலும் ஜோக் பிடிபட்டதும் ஆரவாரமும் கைதட்டலும்தான். மொழி அறிவு கொஞ்சம் கூடத்தான் வேணும் இந்நிகழ்ச்சிகளுக்கு. மற்ற கர்நாடக, ஹிந்துஸ்தானி சங்கீதம் போல இசையைச் சும்மா ரசிக்க முடியாது.
மாணவர்கள் கூட்டம் ஒன்னு.... பின் வரிசைகளில். ஏகப்பட்ட விஸில் சப்தமும் இரைச்சலும். முன்னாலயோ இந்த இரைச்சலை அடக்கன்னு மைக்கின் வால்யூமைக் கூட்டிக்கிட்டே போறாங்க. காது நமக்குப் பழுக்குது:(
இதுக்குமேலேயும் இருந்தா காபில் நஹின் ஹை ன்னு கிளம்பிட்டோம்.
கடைசிப் பாட்டாக 'தமாதம் மஸ்த் கலந்தர்' பாடினாராம்.
Posted by
துளசி கோபால்
at
2/09/2011 05:12:00 AM
24
comments
Labels: அனுபவம் Gawwali
