Thursday, July 12, 2007

எ.கி.எ.செ? பகுதி 9

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?

'சூர்யா' எழுப்புனதும் சூடா ஒரு காஃபி குடிச்சுட்டு நடக்கறதுக்குப் போனோம். உடற்பயிற்சியைக் கொண்டாடும்
ஆட்கள் எங்கே பார்த்தாலும். ஆத்தங்கரை வழக்கத்தைவிட அதிகமான சுறுசுறுப்போடு இருக்கு. நேத்து விபத்து
நடந்திருக்கக் கூடிய இடத்தை ஒரு பயத்தோடு எட்டிப்பார்த்தேன். கர்மசிரத்தையா கயிறு கட்டிக்கிட்டி இருக்கார் ஒருத்தர்.
இறங்கி ஏறுவாராம். "தலையில் ஹெல்மெட் போட்டுக்கோ. உனக்கு எதாவது ஆச்சுன்னா அதுக்கு நான் ஜவாப்தாரி இல்லை"ன்னு
கவுன்சில் போர்டு வச்சுருக்கு. ச்சின்னச்சின்ன விரிப்புகள் போட்டு அதுலே பஸ்கி, தண்டால்னு பயிற்சி செய்யும் ஆட்கள், அதலபாதாளத்தில் ஆற்றங்கரையில்.













அந்த சர்ச் கோவிலுக்குள் போய் எட்டிப்பார்த்தோம். உள் அரங்கத்துலே ரெண்டுமூணுபேர் என்னமோ அலுவலா இருந்தாங்க.
பார்வையாளர்கள் நேரம் காலை 9 முதல்னு ஒரு அறிவிப்பைப் பார்த்ததும் ஓசைப்படாமல் அங்கிருந்து நகர்ந்துட்டோம்.



இன்னிக்கு சவுத் பேங்க் போகலாமுன்னு எண்ணம் இருந்துச்சு. இந்த ஆற்றின் தெற்குப் பகுதி. இந்த ஆறுமே ச்சும்மா சொல்லக்கூடாது. மக்கள்ஸ் விரும்புறமாதிரி அப்படி வளைஞ்சு வளைஞ்சு இல்லாதநெளிவுகள் எல்லாம் காட்டிக்கிட்டு இருக்கு. தண்ணி வியூக்குத் தவிக்கிறவங்க ச்சும்மா இருப்பாங்களா? இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுன்னு எட்டுத் திசைகளிலும் எதாவது பண்ணி வச்சுருக்காங்க.


சனிக்கிழமையானதாலே
விடுமுறைக்கூட்டம் இருக்குமுன்னு நினைச்சேன். கார் பார்க்கிங்தான் எங்கே போனாலும் ஒரு தொந்திரவு. இங்கே
ஒரு இடத்தில் ஒரு காருக்கு 10 டாலர்னு பார்த்து விசாரிச்சதுலே நாள் பூராவும் நிறுத்தினாலும் பத்து டாலர்தானாம்.
ஒருமுறை உள்ளே கார் போக பத்துன்னு சொன்னாங்க. கார் பார்க் கட்டிவிட்டாவே பில்லியனர் ஆயிறலாம் போல!






வண்டியை நிறுத்திட்டு நதிக்கரையில் நடந்து போனோம். இதோ நான் தேடிவந்த இடம். நேப்பாளக் கோயில். "நேப்பாள்
ஷாந்தி மந்திர்". 1988லே நடந்த எக்ஸ்போ சமயத்துலே நேபாள நாட்டுக் கலைஞர்கள் தயார் செஞ்சது. அப்பதான்
ஆஸ்ட்ராலியாவுக்கு வெள்ளையர்கள் வந்து 200வது வருஷக் கொண்டாட்டம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. உள்ளே
வெவ்வேற முகத்தால் எல்லாத் திசைகளையும் பார்க்கும் கடவுள் சிலை.





இந்தமுறை அதைச்சுற்றி கண்ணாடித் தடுப்புப்
போட்டு ஒரு ஸீத்ரூ உண்டியலா ஆக்கி வச்சுருக்காங்க. அழகான மரவேலைப்பாடுகள். செதுக்கி, இழைச்சு வச்சுருக்காங்க.
வெளியே ரெண்டு யானைகள், அழகான வெங்கல மணின்னு அம்சமா இருக்கு. உள்ளே ஒரு பெஞ்சு இருக்கை. பின்பக்கம்
புத்த ஸ்தூபியின் அடிப்பாகம் இல்லேன்னா நம்ம கோயில்களில் இருக்கும் பலிபீடம்போல ஒண்ணு இருக்கு. ஒரு ச்சின்ன
செவ்வக வடிவக் குளம். கோயிலைசுத்தி மூங்கில் வனம். அங்கே இருந்து மரப்பாதைப் பாலம் வழியா ஒரு ட்ராப்பிகல்
தோட்டத்தைக் கடந்து போகலாம். பெரணிச்செடிகள் நிறைஞ்சு கிடக்கு.மணி ப்ளாண்ட்ன்னு சொல்வோம் பாருங்க,
அது அப்படிச் செழிப்பா வளர்ந்து மரங்களில் ஏறிப்பிடிச்சிருக்கு. ஒவ்வொரு இலையும் பிரமாண்டம். பேசாம வாழை
இலைக்குப் பதிலா அதுலே சோறு போட்டுச் சாப்புட்டறலாம்( எங்கே போனாலும் இந்த சோத்து நினைவுதான். ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்........)







இந்த ஊருக்கு 'பீச்' இல்லாத குறையை நிவர்த்தி செய்யறதுக்கு ஒரு செயற்கைக் கடற்கரை உண்டாக்கி வச்சுருக்கு
நகரசபை. அதை எதுக்குப் பாழாக்கணுமுன்னு அங்கங்கே நீச்சலுடையில் மக்கள். சிலர் சூரியக்குளியல் நடத்திக்கிட்டு இருக்காங்க.
செயற்கைக்கடலில் ச்சின்னதா அலை அடிக்குது. இன்னும் அட்மாஸ்பியர்க்கு வலுவூட்ட வேணுமுன்னு ஒரு 'லைஃப்கார்டு' பத்தடி உயர ஏணியில் உக்கார்ந்து 'கடலில்' குளிக்கும் ஜனங்களைக் கவனிச்சுக்கிட்டு இருக்கார். அதைத் தொட்டடுத்து சின்னப் பிள்ளைகளுக்கான நீச்சல்குளம். நீர்விளையாட்டுதான் அங்கே.






இன்னிக்குச் சனிக்கிழமையாப்போனது நல்லதுதான். இங்கே ஒரு மார்க்கெட் சனிக்கிழமைகளில் நடக்குது. கூடாரங்கள்
நாலுவரிசைகளில் முளைச்சிருக்கு. அந்தப் பகுதிக்குப் போனால் கண்முன்னே எதுத்தாப்புலே, நேத்து இருந்து மனசுலே
குடைஞ்சுக்கிட்டு இருந்த விஷயம். ஆஸ்ட்ராலியாவின் பழங்குடியைச் சேர்ந்த ஒருத்தர் டிட்ஜெரிடூ வச்சு வாசிக்கிறார்.
மரத்தினால் செஞ்ச ஒரு ஒன்னரை மீட்டர் வரும் குழாய். அதில் அவர் ஊதும் சத்தம் விநோதமா ஒலிக்குது. நான் படம் எடுக்கறதைப் பார்த்துட்டு, 'எடுத்துக்கோ'ன்னு சொல்லி கையால் ஜாடை காமிச்சுட்டு அவர் ஊதிக்கிட்டே இருந்தார். இதை ஊதறதுக்கு எவ்வளோ மூச்சடக்கி வாசிக்கணும், இது எவ்வளோ கஷ்டமுன்னு தெரிஞ்சுக்கிட்டு இருந்ததாலே ஒரு நிமிஷம்
போதுமே. நன்றி சொல்லிட்டு, அவருக்குக் கொஞ்சம் காசு கொடுத்துட்டு வந்தேன்.

இங்கே போட்டுருக்குப் பாருங்க.






இவுங்களைப் பத்திக் கொஞ்சம் சொல்லணுமுன்னு இருக்கேன். அடுத்த பதிவுக்குக் கட்டாயம் வந்து பாருங்க.


கொஞ்சம் மனசைக் கல்லாக்கிக்கிட்டு வாங்க.


தொடரும்............

இன்னிக்கு கறுப்பு வெள்ளின்றது என் கணக்குலெ சரியாப் போச்சு(-:

தமிழ்மணத்துலே சேர்க்கவே முடியலை. இப்ப மறுபடியும் வெளியிட்டுப் பார்க்கலாமேன்னு ஒரு எண்ணம். ச்சூ மந்திரக்காளி......... எல்லாம் சரியாப் போச்சு:-)))) ஹங்........... போச்சா இல்லையா?

Tuesday, July 10, 2007

பனி நீராவி

வரேன், வந்துக்கிட்டே இருக்கேன், இதோ அதோன்னு பயங்காட்டிக்கிட்டு இருந்த குளிர் கடைசியில் வந்தேவந்துருச்சு. ஜூன் மாசம் தொடங்கி ஒவ்வொரு நாளும், 'இன்னிக்குப் பரவாயில்லை'ன்னே சொல்லிக்கிட்டு இருந்தேன்.நியுஸியில் அதிகாரபூர்வமான குளிர்காலம் தொடங்கறது ஜூன் முதல்தேதி. இது மூணு மாசத்துக்கு, ஆகஸ்ட் வரை இருக்கும்.ஆனா நமக்கு மட்டும் இந்தக்காலம் இன்னொரு ரெண்டு மாசம், முன்பாரம் பின்பாரமா 'மே'யும், செப்டம்பருமா நீட்டிரும்.



குளிர் அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும் கழுதைன்னு விடமுடியாது. 'பவர் பில்' வரும்போது உங்க மயக்கத்துக்கு நான் கேரண்டி:-) இன்னிக்குப் பொழுது விடிஞ்சதும் வழக்கம்போல நம்ம 'தாமரைக்குளம்' பக்கம் கண்ணு போச்சு.கோகியும் வேற, வெளியே அவனுக்காகவும், மற்ற உயிர்களுக்காகவும் வச்சுருந்த தண்ணீர் பாத்திரத்துக்குப் பக்கத்துலே சோகமே உருவான முகத்துடன், ஒரு பரிதாபப் பார்வையை நம்ம மேல் வீசினான். எல்லாமே உறைஞ்சுகிடக்கு. தாமரைக்குளத்தில் புதுசா வச்ச தண்ணிப்பம்பு 'ஹீனமா' பொழியுது.




இந்தமாதிரி நாட்களில் சூரியன் மட்டும் வந்துருச்சுன்னா அன்னிக்கு பூலோக சொர்க்கம்தான். ஆஹா.........வெயில் எவ்வளோ இதமா இருக்கு. நம்ம வீட்டுப் பக்கம் மெயின் ரோடிலே இருந்து பார்த்தாவே, பவுடர் பூசிய மலை பளிச்னு தெரியும். அந்தப்பக்கம் போகும்போதும் வரும்போதும் 'வா வா பக்கம் வா'ன்னு கூப்புடும். பகல் சாப்பாட்டுக்கு அப்புறம் கிளம்பியாச்சு.



வழியிலேயே இருக்கும் நம்ம கிர்வி பிள்ளையார் கோயிலுக்கு முதல்லே போகணும். ஒரு 27 வருஷமாகுது இதைக் கட்டி. சலசலன்னுஓடும் கால்வாய். அதுக்கு நடுவிலே ச்சின்ன மண்டபம். மண்டபத்துக்குள்ளெ நுழைஞ்சு ஓடும் தண்ணீர். பிள்ளையார் கோயிலுக்கு இதைவிடப் பொருத்தமான இடம் வேற எங்கே கிடைக்கும்? அந்த மண்டபத்துலே தண்ணீர் மட்டத்துக்கு மேலே ஒரு பலகைபோட்டு அதுமேலே பிள்ளையாரை வச்சு வருசம் 19 ஆச்சு. இது என் மனக்கோயில் பிள்ளையார்.












கேண்டர்பரி ப்ளெயின்ஸ்க்கு கொவாய் நதியிலே இருந்து தண்ணீர் கொண்டு வரலாமுன்னு ஐடியாக் கொடுத்து அதைச் செயல்படுத்த எல்லா ஏற்பாடும் 1877- 1880 களில் செஞ்ச De Renzie James Brett அவர்களின் செயலைப் பாராட்டி 1980-ல் வச்ச நினைவுச்சின்னம். நாளைய மக்களுக்காக இன்றைய மக்கள் செஞ்சதுன்னு ஒரு plaque. நான் இந்தப்பக்கம் தண்ணியைப் படமெடுக்கும்போது, கெமாரவை சட்னு எங்கிட்டே இருந்து வாங்கி அவசரமா இன்னொரு தண்ணியைப் படம்எடுக்கறார் இவர். சரி போட்டும். ஆளுக்கொரு தண்ணீர்:-)











கிர்வியிலே இருந்து டார்ஃபீல்ட் ஒரு பதினைஞ்சு நிமிஷ தூரம்தான். புதுசா நாலைஞ்சு கடைகள் வந்திருக்கு. இதுலேஒரு பெயிண்ட் விற்கும் கடையும் சேர்த்தி. வருசாவருசம் பெயிண்ட் திருவிழா நடத்தாம இருக்கும் வீடுகளை இங்கே விரல்விட்டு எண்ணிறலாம். முக்காலே மூணேயரைக்கால் வீசம் 'தன்கையே தனக்குதவி' என்றதாலே கோடை வந்தவுடன், வீட்டுப் பராமரிப்புன்னு குறைஞ்சபட்சம் ஒரு சுவத்தையாவது பெயிண்ட் அடிக்கலைன்னா எங்களுக்கு இந்த ஜென்மம் சாபல்யமாகாது.




ஓசை செல்லாவின் புகைப்படவகுப்பில் சேர்ந்துருக்கோமே, வீட்டுப் பாடத்துக்கு நாலு படம் எடுத்துக்கலாமுன்னு,அசையாத சப்ஜெக்ட்டைப் பார்த்தால்.........என் 'கண்ணுக்கே சரியான கோணம் இல்லை. இன்னும் கொஞ்சம் போகலாமுன்னு போய்க்கிட்டு இருக்கோம். வழியிலே எல்லாம் கறுப்பு ஐஸ் நல்லவேளை உருகி இருந்துச்சு.' மவுண்ட் ஹட்' க்குப் போறவங்க செயின் போட்டுக்குங்கோன்ற அறிவிப்பைப் பார்த்ததும் என்னையறியாமலேயே, 'கழுத்துலே சங்கிலி' இருக்கான்னு தடவிப் பார்த்துக்கிட்டேன்.









போனவருசம் 'க்ரே மவுத் போனப்ப ஸ்ப்ரிங் ஃபீல்ட் ரெயில் நிலையத்துலே இருந்து பனிமலைகள் கையெட்டும் தூரத்துலே இருந்த நினைவு வரவே, இன்னும் கொஞ்சம் தூரம்தானே? அங்கேயே போய் ஹொம்வொர்க் முடிச்சுக்கலாமுன்னு........................மெயின் ரோடிலே இருந்து வலது பக்கம், ரெயில் நிலையத்துக்குத் திரும்பும்போதே, எதோ சீன் மாறினாப்போல தரையெல்லாம் வெள்ளை.இளவெய்யிலில் மினுங்கும் பனித்தூள். ரெயில் நிலயத்து வாசலில் நாலு கார்கள். ஆஹா...........யாரோ வந்துருக்காங்க. அங்கே வேலைசெய்யற ஸ்டேஷன் மாஸ்டர், அவரோட உதவி ஆள், அங்கே இருக்கும் டீ ரூம் பார்த்துக்க ஒரு ஆள்னு மூணு பேரோட மூணு வண்டியைத் தவிர்த்து இன்னொரு வண்டி நிக்குதுன்னா....................என்னமோ நடக்குது!! இப்ப நம்ம வண்டி வேற. என் கணக்குத் தப்பலை. 2 +2 ! கூட்டமா இருக்கோம். ( நாலு பேர் இருந்தால் கூட்டம் எனக் கொள்க)









ப்ளாட்ஃபாரத்துலே ரெண்டுபேர் நிக்கறாங்க. கையிலே கெமரா இருக்கு. நாமும் அங்கே போய்ப் பார்க்கலாமுன்னா,ப்ளாட்ஃபாரம் டிக்கெட் வாங்கலையேன்னு கோபால் சொல்றார். 'அதெல்லாம் கவலைப்படாதீங்க. இங்கெல்லாம் ப்ளாட்ஃபாரம் வரை வந்ததுக்கு நமக்குத்தான் அவுங்க காசு கொடுப்பாங்க. கொடுக்கணும்.ஆமா'







இருவரிடம் விசாரிச்சதுலே தெரிஞ்சது, இன்னிக்கு ஸ்டீம் ட்ரெயினாம். காலையில் இந்தப் போயிருக்கு. இப்பத் திரும்பி வரும் நேரமாம்.அதோ அங்கே தூரத்துலே புகை தெரியுது பாருங்க. வருசம் ரெண்டு முறை மட்டும் போகும் நீராவி எஞ்சின். எண்ணி நாலே பெட்டிகள்.ச்சிக்ன்னு வந்துக்கிட்டிருக்கு, வெள்ளைப் புகையோடு நம்ம ரயில் வண்டி. மூணு நிமிஷம் நிறுத்தினாங்க. எஞ்சினுள்ளே எட்டிப்பார்த்தேன்.நீராவியைப் பாழாக்க வேணாமுன்னு ஒரு கெட்டில் இருக்கு. சூடான காஃபி?






திகுதிகுன்னு எரியும் தீ, அதுக்குள்ளே நிலக்கரியை வாரிப்போடும் எஞ்சின் ட்ரைவர், அவருடைய முகம், உடுப்பு எல்லாம் அழுக்காக்கும் கறுப்புப் புகை, நிலக்கரி நிறைஞ்சிருக்கும் திறந்தவெளிப்பகுதின்னு ஒண்ணுமே இல்லை.
எஞ்சினைத் தொடர்வது 'மெயின்லைன் ஸ்டீம்'னு பேர் பொறிச்ச டாங்கர். அதுக்குள்ளே தண்ணீரைக் கொதிக்க வச்சு ஆவியாக்கி எஞ்சினை ஓட்டறாங்க. டீஸல் பயன்படுத்தறாங்களாம் அடுப்பெரிக்க! இப்பப் புரியுது ஏன் சுத்தமா இருக்குன்னு. செலவு இதுக்கு அதிகம் என்றதாலே 'ஸ்பெஷல் எக்ஸ்கர்ஷன் ட்ரிப்'ன்னு வருசத்துலே ஒரு சில நாட்கள் மட்டுமே ஓடுது.
வண்டி கிளம்புனதும் எல்லாருக்கும் டாடா காமிச்சு வழியனுப்பி வச்சுட்டுப் பார்த்தா........... உண்மைக்குமே கூட்டம்தாங்க.எதிர்வரிசையில் வேற ரெண்டு பேர் நின்னுக்கிட்டு இருந்தாங்களே!


ஹப்பா.......... எவ்வளோ நாளாச்சு இந்த நீராவி எஞ்சினைப் பார்த்து!!!! எவ்வளோ ஆவி.........





தெரிஞ்சிருந்தா வீட்டுலே இருந்த இட்லி மாவைக் கொண்டாந்துருப்பேன்.
ரயில் நிலையத்துலே இலவசமா எடுத்துக்கோன்னு மூணு புத்தகம். இங்கே அடுத்து இருக்கும் சுற்றுலாத் தலங்களைப்பற்றிய விவரங்களும், தெற்குத்தீவின் ஒரு பெரீய்ய்ய்ய போஸ்டரும் (88 x 62 அளவு). ஹூ....ம் இப்படி அள்ளி வீசுனா ஏன் ரெயில்வே இலாக்கா நஷ்டத்துலே ஓடாது?



திரும்பிவரும்போது, போனவாரம் கப்பல், இந்த வாரம் ரயிலான்னு கேட்டார் கோபால். ஏன், அதுக்கு முந்தினவாரம் குதிரை ரேஸ் 'பார்க்கக் கிடைச்சது' மறந்துபோச்சான்னு கேட்டு வாய் மூடலை.......... முன்வண்டியில், குளித்த முடித்துத் தன் ஆறடிக் கூந்தலை ஹாய்யா வெளியே நீட்டிக் காயவைக்கும்அழகி/அழகன்/அழகு!














செல்லா, கொஞ்சம் பார்த்து மார்க் போடுங்க. 67 கிலோ மீட்டர் போய் எடுத்த படம்.
நம்ம கெமெரா லென்ஸ்லே கரும்புள்ளிகள் விழுந்துருக்கு. அதைப்போக்கும் உபாயம் என்னவோ?



இது என்ன?


இது என்னன்னு யாராவது சொல்லுங்கோ.
தமிழ்மணம் இப்படி ஒரு பதிவே இல்லைன்னு சாதிக்குது. அதான் மறுபடியும்
உடனுக்குடனே மீண்டும் மீள்பதிவாப் போடறென்(-: