Showing posts with label ஸ்ரீரங்கம். Show all posts
Showing posts with label ஸ்ரீரங்கம். Show all posts

Wednesday, March 04, 2020

ஒன்பது வகை தீபங்களோடு பெரியபெருமாள் தரிசனம் ( பயணத்தொடர் 2020 பகுதி 22 )

மறுநாள் காலையில் சீக்கிரமா எழுந்து கடமைகளை முடிச்சுட்டு ஆறரைக்கு ரெடி ஆனோம்.  மாடியில் இருக்கும் நம்ம  முருகனிடம்,   நம்மைக்கூட்டிப்போய் அம்மா மண்டபத்துலே இறக்கி விடச் சொல்லியாச்.  இந்த ஹயக்ரீவாவில்  நம்ம அறைகளை விட ட்ரைவர்ஸ் தங்குமிடம் சூப்பர்!  மொட்டைமாடியில் ஒரு பெரிய அறை. அங்கேயே பாத்ரூம் வசதிகள் உண்டு. முக்கியமாச் சொல்ல வேண்டியது.... கோபுர தரிசனம்.  ஹைய்யோ!!!!! ஒரே ஒரு குறை என்னன்னா... லிஃப்ட் வசதி இல்லை. ரெண்டாம் மாடியில் இருந்து படிகளேறணும்.
அம்மாமண்டபம் கலகலன்னு இருக்கு.  முருகனைத் திரும்பிப்போகச் சொல்லியாச்சு. அவர் போய்க் குளிச்சு ரெடியாகட்டும். தேவைன்னா..... செல்லில் கூப்பிட்டால் ஆச்சு.


குடும்ப விஷயமா ஒரு சாந்தி செஞ்சுக்கணும், வாத்தியார் கிடைச்சாக் கொள்ளாம்னு தேடியதில் கிடைச்சார்.  போன வேலையும் ஆச்சு.  எல்லாம் ஆனதும்தான் வாத்யார் பெயரைக் கேட்டேன். ரங்கராஜன். அவருடைய அசிஸ்டன்ட் கண்ணன்.  நன்றி சொல்லிட்டு ஒரு க்ளிக்.  அப்படியே அம்மா மண்டபத்துச் சந்நிதிகளில்  தரிசனம் முடிச்சுக்கிட்டு, ப்ரியாவுக்குக் கொஞ்சம் பழம் வாங்கிக் கொடுத்தோம்.  சமர்த்துச் செல்லம். பத்து வயசாச்சாம்.






மக்களுக்கு என்னென்னவோ கோரிக்கைகள், வேண்டுதல்கள்.......  அங்கங்கே  இவைகளுக்கான சேவைகள்..... இப்படிப் போகுது வாழ்க்கை. அப்பதான் அபியைப் பார்த்தேன். கொஞ்சநேரம் பேசிட்டு ஒரு க்ளிக் ஆச்சு.  வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடிச்சு ஹயக்ரீவா வந்துட்டோம்.




பாலாஜிபவனில் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டுக் கோவிலுக்குப் போனோம். அதிகப்பட்சமா ரெண்டு மணி நேரம்தானாம். பதினொன்னுக்கு ஊரைவிட்டுக்  கிளம்பிடணுமாம். 'நம்மவர்' ஆர்டர்!!!

'நேத்துப் பெரியவர் தரிசனம் கிடைக்கலையே... இப்ப முதலில் அவரை தரிசனம் பண்ணிக்கலாமு'ன்னார். நாந்தான் 'வேணாம்..... தாயாரைத் தரிசனம் பண்ணிக்கலாம். போதும்'னு சொன்னேன்.  இவ்ளோ தூரம் வந்துட்டுப் பெருமாளைப் பார்க்காமல் போறதான்னுட்டு விடுவிடுன்னு இவர் நடக்க, நானும் கூடவே ஓடவேண்டியதாப் போச்சு.  ரெண்டு மணி நேரத்துக்குள்  தரிசனம் முடிச்சு, ஆண்டாள் புது வீட்டையும் பார்க்க முடியுமோன்னு என் கவலை.
கார்த்திகை கோபுரவாசலாண்டை, நேத்து நடந்த சொக்கப்பனை சமாச்சாரமெல்லாம் சுத்தம் செஞ்சுட்டாங்க!  முஹூத்தக்கால் தென்னை நட்டுவைக்க தரையில் ஒரு  கல்லைப் பெயர்த்துருக்காங்க.  அதை அப்புறம் திருப்பி வச்சுருவாங்கதான். தரையில் கொஞ்சம் கருமை படிஞ்சுருக்கு. அப்புறமாத் தேய்ச்சுக் கழுவி விடுவாங்க போல....
கருட மண்டபத்தில் இருக்கும் பெரிய திருவடியைக் கும்பிட்டதும் ஆலிநாடன் வீதி ஆர்யபடாள் கோபுர வாசல் வழியா உள்ளே போறோம்.

இது மூன்றாம் திருச்சுற்று ‘குலசேகரன் திருச்சுற்று’ என்று அழைக்கப்படுகிறது. இதன் வாசலை ‘ஆர்யபடாள் வாசல்’  என்று அழைக்கிறார்கள். (படர் – வீரர். ‘படர்கள்’ என்பது மருவி ‘படாள்’ ஆகியது.) வங்கப் பகுதியான கௌட தேச அரசர் ஒருவர், தான் மிக விரும்பி ஏராளமான திரவியங்களை திருவரங்கனுக்கு அளிக்க முன்வந்தார். ஆனால் கோவிலார் அந்தச் செல்வத்தின் மூலம் குறித்துச் சந்தேகப்பட்டு அவற்றை ஏற்க மறுத்தனர். விரக்தி அடைந்த மன்னன் அவற்றை அந்த வாசலிலேயே போட்டுவிட்டு, தன் தேசத்து ஆரிய அந்தணர்களைக் காவலுக்கும் வைத்துவிட்டுப் போய்விட்டான். ஆரிய அந்தண வீரர்கள் பலகாலம் காவல் காத்த நேர்த்தியைப் பார்த்து கோவிலில் திரவியங்களை ஏற்றுக்கொண்டு அவர்களையே கோவில் காவலர்களாகவும் நியமித்தார்களாம். அவர்கள் இந்த வாசலைக் காவல் காத்து வந்தார்கள் என்பதால் அவர்களின் பெயரிலேயே இந்த வாசல் அழைக்கப்படுகிறது. பின்னர் இராமானுஜர் ஊழியர்களின் பல பிரிவுகளை (கொத்து என்று சொல்வர்) ஏற்படுத்தி ஒவ்வொருவருக்கும் ஒரு வேலையை ஒதுக்கிக்கொடுத்தார் என்ற குறிப்பு கோயிலொழுகில் இருக்கிறது. அதில் காவலர் பிரிவின் பெயர் ஆரியபடாள்.

வலையில்  கிடைச்ச விவரம். Tamil Heritage Trust க்கு நம் நன்றி .

கோபுரவாசலுக்குள் நுழைஞ்சு பவித்ர மண்டபம், ஊஞ்சல் மண்டபம் தாண்டி கொடிமரத்தாண்டை போய் ஸேவிச்சுட்டு, தரிசன டிக்கெட் வாங்கிக்கலாமுன்னு போனால்....  'மங்களஹாரத்திக்கு  வர்றீங்களா'ன்னார் ஒரு முதிய பட்டர்.  எப்பவாம் ? இன்னும் கொஞ்ச நேரத்திலாம்.  சரின்னு அதுக்கான டிக்கெட்டுகளை வாங்கினோம்.  ஒரு அஞ்சு நிமிஷம் ஆகும்னு சொன்னார். ஆகட்டும்..... அதுவரை நம்ம யானையைப் பார்த்தால் ஆச்சு!  காதுலே சங்கு !



கொடிமரத்தின் பின்னால் இருந்த கம்பித்தடுப்பின் வழியாக  நம்மைக் கூட்டிப் போனாங்க. போனமுறை  விஸ்வரூபம் பார்த்தோமே, அதே இடத்தில்  கருவறை நோக்கிக் கீழே உக்கார்ந்தோம். முழங்கால் பிரச்சனை இருக்குதான். ஆனால் அதை இப்போதைக்குப் பெருமாளே பார்த்துக்கட்டும்னு துணிஞ்சுட்டேன். நம்ம முருகனும் நம்மோடு வந்தார். சின்னக் கூட்டம்தான். ஒரு முப்பதுபேர் இருக்கலாம். மெல்லிஸா .... கருவறைக்குத் திரை போட்டுருந்தாங்க.  அதன் பின்னால்  பட்டர்ஸ்வாமிகளின் நடமாட்டம் தெரிஞ்சது. கொஞ்ச நேரத்தில் திரை விலகி, ஒன்பதுவகை ஆரத்தி ஆச்சு!   இது புதுசா ஆரம்பிச்சுருக்கும் சேவை(யாம்!) ஆரத்தி காமிச்சு முடிச்சதும், நாங்க வரிசையில் போய் பெரிய பெருமாளை தரிசனம் பண்ணிக்கலாம். தள்ளுமுள்ளு, ஜருகு எல்லாம் இல்லாமல் தரிசனமும் ஆச்சு. போயிட்டு வர்ரோமுன்னு சொல்லிக்கிட்டேன். எல்லாம் ஒரு இருபத்தியஞ்சு நிமிட்தான்!  வெளியே வர்றோம், முருகனின் கையில் மஞ்சள் பைகள்!  பையை  வண்டியில் வைக்கச் சொன்னோம் முருகனிடம்.
இந்த சேவையில் நமக்குக் கொடுக்கும் பிரஸாதம் இது.  (உள்ளே லட்டு, முறுக்கு, அதிரசம் இன்னும் சில வகைகள் எல்லாம் இருந்தன.  அதை அப்போ பார்க்கலை. பாவம் பெருமாள், அவருக்கு எப்பவும் தச்சு மம்முதான். இதெல்லாம் அவர் கண்ணுலேயே காட்டறதில்லையாக்கும்.... )  வெளியே வந்து சேனைமுதலியாரை (விஷ்வக்ஸேனர்) கும்பிட்டுப் படிகள் ஏறி தங்க விமான தரிசனம் செஞ்சோம்.
வைகுண்ட வாசலை இந்தப்பக்கம் இருந்து தரிசனம் செஞ்சுட்டு,  கொடிமரத்துக்கு அந்தாண்டை இருக்கும் பிரகாரத்தின் மூலையில் இருக்கும் நம்ம அன்னமூர்த்தியை தரிசனம்  செஞ்சுக்கிட்டோம். நம்ம நண்பர் பதிவர் வெங்கட் நாகராஜின் தந்தைதான் ஏழு வருஷங்களுக்கு முன் இவரைப் பற்றி நமக்குச் சொன்னவர்.  "இவரை வணங்கினால் நம் பூலோக வாழ்க்கை முடியும்வரை, நமக்கு அன்னத்துக்குப் பஞ்சம் இருக்காது"  'நம்மவருக்கு ரசஞ்சாதமும், எனக்குத் தச்சு மம்மும் கேரண்டீ !


இன்னொருக்காப் பெரிய திருவடியை சேவிச்சு விடை வாங்கியாச்சு.  சக்கரத்தாழ்வாரை நோக்கிப் போகும்போது அமிர்தகலச கருடர் சந்நிதி திறந்து இருப்பதைக் கவனிச்சு அங்கேயும் போய் கும்பிட்டோம்.  இங்கே  இந்த ஏழு பிரகாரம் உள்ள  கோவிலில் ஏராளமான சந்நிதிகள் இருந்தாலும் எல்லாமும் எப்போதும் திறந்துருக்காது. கிடைச்சால்  நம்ம பாக்கியம் என்றுதான் இருக்கணும்.

அடுத்து வேணுகோபாலன் சந்நிதி !  கொள்ளை அழகுள்ள சிற்பங்கள் இங்கே ஏராளம்.  அங்கே போனால்..... நல்ல கேமெராவில்  வளைச்சு வளைச்சுப் படம் எடுத்துக்கிட்டு இருந்தார் ஒரு இளைஞர். ஒரு ஒரிஜினல் ஃபொட்டாக்ராஃபர்கிட்டே  பேச்சுக் கொடுத்தால் நமக்கும் அந்தக் கலையின் நுணுக்கம் ஏதாவது வசப்படுமோன்னு .....



கோவில் சிற்பங்களைப் பழுது பார்க்கும் பிரிவில் இருக்காராம்.  உடைந்த சிற்பங்களைப் படம் எடுத்து,  உடைஞ்சு  காணாமல் போன பகுதியைக்  கம்ப்யூட்டர் உதவியுடன் சிருஷ்டிச்சு, அதே போல் கல்லில் செதுக்கி இங்கே கொண்டுவந்து, திரும்பப் பொருத்திருவாங்களாம். இந்தச் சிலையில் இப்போ கை மிஸ்ஸிங். அதனால் கை செய்யணும் என்றார்!  வாவ்.....   பார்த்தால்   ஒட்டுவேலை தெரியுமான்னால்.... தெரியாதாம்!  இதுக்கான நிதியை வாரி வழங்கறவங்க... நம்ம டிவிஎஸ் காரர்களே!
நம்ம செல்ஃபோனைக் கொடுத்து அவருக்கும் ஒரு வேலை வச்சேன் :-)
அந்த ஏரியாவின் பின்னாலேதான் நம்ம ஆண்டாளின் புதுவீடு ! சுமாராத்தான் கட்டி இருக்காங்க. உயரம் போதாதுன்னு என் நினைப்பு. காற்றோட்டம் இருக்குன்னாலும் இன்னும் கூரை உயரமா இருந்தால்தான் வெக்கை இல்லாமல் இருக்கும், இல்லே?

உள்ளே செல்லம் நின்னுக்கிட்டு இருந்தாள். இவளும் இப்போக் கொஞ்சம் குள்ளமாத்தெரியறாளே.... என் கண்ணுதான் கோளாறோ?  உள் ஆண்டாளின்  பக்கத்து வீட்டுக்காரிதான்  இவள்!  ஆண்டாளும் ஆண்டாளுமா  சேர்த்து வச்சுருக்காங்க !
முந்தி காலியா இருந்த மாடத்துலே புதுசா ஒரு சிலை.  பொருத்தமா இல்லையே.....
'நம்மவர்' சொன்ன ரெண்டு மணிநேரம் போயே போச்.  ஹயக்ரீவாவுக்குப்போய்  செக்கவுட் செஞ்சுட்டுக் கிளம்பும்போது மணி பதினொன்னரை.

 தொடரும்......... :-)

Monday, March 02, 2020

ரங்கனின் அருளால்....... (பயணத்தொடர் 2020 பகுதி 21 )

ஒவ்வொரு ப்ரகாரமாப்போய்  தரிசனம் செஞ்சுக்கிட்டே சுத்தி வர்றோம். தாயார் சந்நிதியில் நிம்மதியான தரிசனம். மேட்டழகிய சிங்கரும் கருணை காட்டினார். சித்திரங்கள் எல்லாம் பளிச்ன்னு.... புதுப்பிச்சுருக்காங்களோ?

கொஞ்சநேரம் அங்கே படிகளில் உக்கார்ந்துருந்தோம். ஹைய்யோ.... என்ன ஒரு நிம்மதி !








திரும்ப சுத்தப்போனோம். சனம் ஆஞ்சியைப் பார்த்தா மட்டும் சும்மா விடாது இல்லே?
கண்ணாடியறை ஆண்டாள், கண்ணாடி மூலமே கெமெராவில் சிக்கினாள் !
வெள்ளைக்கோபுரத்தாண்டை வந்ததும்,  அக்காவைப்போய்ப் பார்த்துட்டு வரலாமேன்னு தோணுச்சு. அட!   இன்னொரு சொந்தமும் இருக்குல்லே? எப்படி மறந்தேன்? நெருங்கிய தோழியின் ஓர்ப்படி. ஆனால்  தோழியின் கணவர் 'மன்னி'ன்னு கூப்பிடறதால் தோழியும் மன்னின்னே குறிப்பிடுவாங்க. ஆனால் எனக்கு அவுங்க 'அக்கா'தான்!   இந்த கோபுரவாசலில் இருந்து இடதுபுறம் ரெண்டு நிமிட் நடையில் அவுங்க வீட்டுக்குப் போயிடலாம்.

இடதுபக்கம், ஆண்டாள் வீடு இருக்கேன்னு தலையைத் திருப்பினால்......... வீட்டையே காணோம்.  என்ன ஆச்சு? தாங்க முடியாம, ஒரு வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கிட்டு இருந்த பெண்ணைக் கேட்டேன்.  ஆண்டாளுக்குப் புதுவீடு கோவிலுக்குள்ளேயே கட்டியாச்சாம் !
ஹா..... எங்கே ? எங்கே?  விசாரிக்கணும்........
மாடியேறிப்போனால், வீட்டு வாசலில் கார்த்திகை அகல்விளக்குகள்!  ஏத்தி வச்சுட்டு அப்பத்தான் உள்ளே காலடி எடுத்து வச்சுருக்காங்க, டான்னு துளசி ஆஜர்! அக்காவுக்கு ரொம்ப சந்தோஷமாப் போயிருச்சு. 'விளக்கேத்தி வைச்சவுடன் வந்துட்டேம்மா. மனசு நிறைஞ்சுத்  திருப்தியா இருக்கு'ன்னு சொன்னாங்க. அத்திம்பேர் கையில் ஒரு தட்டில் அகல்கள் ஏந்தி நின்னுக்கிட்டு இருந்தாரா, 'நம்மவர்' சட்னு போய் தட்டை வாங்கிக்கிட்டார். அப்புறம் அவுங்க ரெண்டுபேருமாப் போய் பால்கனி கைப்பிடிச்சுவரில் வரிசையை அடுக்கி வச்சாங்க. ஹாலில், அறைகளில், வாசலில்னு எல்லா இடங்களிலும் ஜோதிமயம்!


'ஸ்வாமி நமஸ்காரம் பண்ணிக்கோ'ன்னு அக்கா கூப்பிட்டதும் பூஜையுள்ளுக்குப் போனேன். கார்த்திகைதீபம் ஸ்பெஷல் பொரியுருண்டை நிவேத்யம் !  அம்மாவுக்கு முடியலைன்னு மும்பையில் இருந்து மகள் செய்து அனுப்பியது. அன்றைக்குத்தான் வந்துருக்கு, துல்ஸி ஆஜர் ஹோ !   என்ன டைமிங் பாருங்க :-)



கோவில் காலண்டர் படி அன்றைக்குத்தான் தீபம்.  பெரியவர்களை வணங்கி ஆசி வாங்கிக்கிட்டுக் கிளம்பியாச். பால்கனியில்  வந்து நின்னு வழி அனுப்பிது  பிடிச்சுருக்கு  ! க்ளிக் க்ளிக்.



வீதி முழுசும்  வீடுகளில் விளக்கேத்தி வச்சுருக்காங்க. இப்படிப் பார்த்தே ரொம்ப வருஷமாச்சு.  அந்தி மயங்கும் நேரம் என்ன ஒரு  அமைதி !


திரும்பக் கோவிலுக்குள் போனோம்.  நம்ம உடையவர் சந்நிதி  வெளி மண்டபம், உள் மண்டபம் எல்லாம் ஜிலுஜிலுன்னு விளக்குகள் ! குருவை  வணங்கி வெளியே வந்தால்....
சொக்கப்பனையாண்டை கூட்டம் சேர்ந்துருக்கு!  மணி இன்னும் ஆறேகால் கூட ஆகலை.  எட்டுமணிக்குத்தானே  விழா   ஆரம்பம். அறைக்குப் போயிட்டு வரலாமுன்னார் 'நம்மவர்'.
ராஜகோபுரத்துலே இருந்து காலை வீசிப்போட்டு நடந்தா அஞ்சே நிமிட்டில் ஹயக்ரீவா வந்துடலாம். ( இருக்கற கூட்டத்துலே எங்கேன்னு காலை வீசிப்போட ? ) கோவிலைச் சுத்தி இருக்கும் எல்லா தெருக்களையும் ஒன்வேயா மாத்தி வச்சுட்டதால் நாமும்  காரில் சுத்திச் சுத்திதான் போகணும். பத்து நிமிட் ஆகும்.

அரைமணி போல ஆனதும் கிளம்பலாமுன்னு பிடுங்கியெடுத்தேன். ஏழேகாலுக்குக் கிளம்பினோம். இன்னும் முக்கால் மணி நேரம் இருக்குன்னு முணுமுணுத்துக்கிட்டே வந்தார். ராஜகோபுரத்தாண்டை இறங்கி நேரா நடந்தால் ஆச்சு. கடைகண்ணிகளை வேடிக்கை பார்த்தமாதிரியும் இருக்குமேன்னதும் அப்படியே ஆச்சு.  கோவிலுக்குள் போனால், சொக்கப்பனையாண்டை கூட்டமானகூட்டம் !  ஏழரை கூட ஆகலை.
ரங்கவிலாஸ் மண்டபத்தின் அந்தக்கோடியாண்டை  ஓரமா நமக்குக் கொஞ்சம் இடம் கிடைச்சது.  ஒரு தள்ளு தள்ளினால் நான் மண்டபத்துலே இருந்து, கீழே உக்கார்ந்துருக்கும் சனத்து மேலே விழுந்துருவேன்....
கம்பித்தடுப்பு வச்சு சனத்தை அந்தாண்டை தள்ளிட்டு, கம்பித்தடுப்புக்குள்ளே காவல்துறை கூட்டம் ! இதுலே  முக்கிய அங்கங்கள், அவர்கள் குடும்பத்தினர்னு அந்தப்பக்கம் கூட்டம் சேர்ந்துக்கிட்டே இருக்கு.    காவல்துறையினர், சனங்கள் பக்கம் திரும்பி, 'அப்படியே உக்காருங்க.  உக்கார்ந்தே பார்க்கலாமு'ன்னு சொல்றதைக்கேட்டு சிரிப்புதான்:-)  சுவர் போல முன்னால் கூட்டமா நின்னு மறைச்சுக்கிட்டா, சனம் எப்படிப் பார்க்கும்?
எட்டிருபத்தியஞ்சு மணிவரை  சனக்கூட்டத்தையும், அதிகாரிகள் கூட்டத்தையும் வேடிக்கை பார்த்துக்கிட்டு நிக்கறோம். திடீர்னு கார்த்திகை  கோபுரம் வழியா  ஆட்கள்  திமுதிமுன்னு வெளியே வர, கொட்டுச்சத்தம், தீவட்டி தொடர்ந்து, நம்பெருமாள் ஜாலியா வெளியே வர்றார்!  கதிர் அலங்காரமாம்!
வந்தவர் சொக்கப்பனையை ஒரு சுத்து சுத்திவந்து நேரா சக்கரத்தாழ்வார் சந்நிதியாண்டை போய் நின்னார்.
சொக்கப்பனைக்கு அந்தாண்டை நம்ம ராமானுஜர் சந்நிதிவரை இதே போலக்கூட்டம்  நெருக்கியடிச்சு நிக்குது.
அப்புறம்  நம்பெருமாள்  தீவட்டியை ஒரு ஆளிடம் கொடுத்தனுப்ப....  அவர் வந்து சொக்கப்பனையை மூணு சுத்து சுத்திவந்து,  தீவட்டியை உள்ளே நுழைச்சார். இப்போ தீவட்டி, பனையின் தலைக்குமேலே தெரிஞ்சது.

நான் வீடியோ எடுத்துக்கிட்டு இருக்கேன். அப்பப்ப சில க்ளிக்ஸும். ஒரே வீடியோவா எடுக்காதே.... சின்னச் சின்ன க்ளிப்ஸா எடுன்னு எனக்கு உத்தரவு வேற அப்பப்ப. அதுதான் வலையேத்த ஈஸியாம் (!). இப்படியே மூணு எடுத்தேன். அதைத்தான் இங்கே வரிசையாப் போட்டுருக்கேன்...

நல்லாக் காய்ஞ்ச பனையோலையில் தீ சட்னு பிடிச்சுச் சடசடன்னு எரிய ஆரம்பிச்சது. ஒரே வெக்கை.... ரெண்டு மூணு நிமிஷத்துலேயே.... ஓலைகள் எரிஞ்சு விழுந்து, உள்ளே இருக்கும் எலும்புக்கூடு தெரிஞ்சது. நடுவிலே முஹூத்தக்கால் நிற்க சுத்திவர மூங்கில் கழிகளால்  ஃப்ரேம் கட்டி அதுக்கு மேலே பனையோலை மட்டைகளைப் போர்த்தி இருக்காங்க.

ரங்கனின்  அருளால்.......  வாழ்க்கையில் முதல்முறையாக் காணக்கிடைச்சது!

ஆட்டம் க்ளோஸ்.   கூட்டம் கலைய நேரமாகும்தான்..... கொஞ்சமா நஞ்சமா.....

  முஹூர்த்தக்கால்தான் நின்னு நிதானமா எரியுது.

நம்ம  நம்பெருமாள்தான் பயங்கர பிஸி.  இங்கிருந்து கிளம்பி 9.15 மணிக்கு தாயாா் சன்னதியில் நம்பெருமாள் திருவந்திக்காப்பு கண்டருளியபின்  சந்தனு மண்டபத்துக்குப்போய்  9.45 மணிக்கு ஸ்ரீ முக பட்டயம் படித்தல் நிகழ்ச்சி முடிச்சுட்டு திருக்கைத்தல சேவையுடன் சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு 10.15 மணிக்கு கருவறைக்குப் போவாராம்.  அதுவரை நாம்  கூடவே போகலை.  அவருக்கென்ன, காலில் இருக்கும் தங்கச்செருப்பைத்தான்  கழட்டறதே இல்லையே..... நாம் அப்படியா?

 ரங்கா கோபுரத்தாண்டை நாம் காலணிகளைக் காப்பகத்தில் கொடுத்தப்பவே.... ஒன்பது மணிக்கு மூடிருவோம் என்றதால்  சட்னு கிளம்பி அங்கே ஓடினோம். போன  வேலை ஆச்சு.  முருகனிடம் ,  ராஜகோபுரத்தாண்டை நம்மை இறக்கி விட்ட இடத்துக்கு  வரச்சொல்லி சேதி அனுப்பிட்டு, நாங்க  ஒவ்வொரு கோபுரவாசலையும் கடந்து போறோம்.

முந்தியெல்லாம் கேரளாவில் மட்டும் கிடைச்ச  அவுங்க  ஸாரீஸ், இப்ப பேஷனாகிப்போய் எல்லா ஊர்களிலும் கிடைக்குதுபோல !  ரொம்ப அழகழகானவை கண்ணில் பட்டது. ஆனால் நமக்கு நிக்க நேரமில்லை.... முன்னால் பரபரன்னு நடந்து போய்க்கிட்டு இருக்கார் 'நம்மவர்'.
ஹயக்ரீவாப் போனதும் டின்னரை முடிச்சுக்கிட்டே அறைக்குப் போகலாமுன்னு பாலாஜிபவனில் நுழைஞ்சாச். எனக்கு  இடியாப்பம். வரட்டும்னு காத்திருந்த போது........

"நீங்க துளசி கோபால்தானே...."

"ஆமாம்... நீங்க? "

ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் விஜயா ஸ்வாமிநாதனுடன் சந்திப்பு !
முதல்முறை சந்திக்கறோம் என்ற உணர்வு வரவே இல்லை.... ஏதோ காலங்காலங்காலமா தினமும் பார்த்துக்கும் வகையில் பேச்சுக்கச்சேரி ஆரம்பமாச்சுன்னு சொல்லவும் வேணுமோ? :-)
ஒரு கல்யாணத்துக்கு வந்துருக்காங்க. தங்கல் இங்கேதான்.  திரு ஸ்வாமிநாதனுடன் 'நம்மவர்' பேசிக்கிட்டு இருந்தார். நம்ம பயணத்திட்டத்தை விசாரிச்சவர், மறுநாள் நாம் முதல்முறையாகப் போகும் கோவிலில், தெரிஞ்சவர்  ஒருவரை சந்திக்கச் சொல்லி செல்ஃபோன் நம்பரும் கொடுத்தாராம். நல்ல தரிசனத்துக்கு கேரண்டீ !

நாலைஞ்சு க்ளிக்ஸோடு குட் நைட் ஆச்சு :-)

தொடரும்....... :-)

PINகுறிப்பு: நேத்து சூப்பர்மார்கெட்டில் ஃப்ரீஸர் பை செக்‌ஷனைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல்,  ஒரு  பணியாளரை உதவி கேட்டால்....  அவுங்க 'நீங்க துளசி கோபால்தானே?'ன்னு கேட்டாங்க. ஆமாம். நீங்கன்னு...... இழுத்தால், 'நான் ஸோனி. உங்க ஃபேஸ்புக் ஃப்ரெண்ட். கிருஷ்ணா உங்க வீட்டுக்கு வந்ததைப் பார்த்தேன்'றாங்க.  ஃபிஜியா? எஸ்.   ஆஹா..... வாட் எ ஸ்மால் வொர்ல்ட் !!!