1857 இல் ஊர் உருவாகி மக்களுக்குத் தேவையான வசதிகள் வர ஆரம்பிச்ச 24 வது வருசம் (1881) வெள்ளத்தால் ஊரில் பாதி அழிஞ்சது. மீதிப்பாதியை அழிச்சுப் புண்ணியம் கட்டிக்கிட்டது அக்னி. மரமும் ஓலையும் வச்சுக் கட்டுன கட்டிடங்கள் எல்லாம் போன இடம் தெரியலை:(
இனிமேப்பட்டு செங்கல் வச்சுக் கட்டிடங்களைக் கட்டணுமுன்னு அப்போ ரெஸிடெண்ட் ஜெனரலா இருந்த Sir Frank Athelstane Swettenham உத்தரவு போட்டுட்டார். பிரிட்டிஷ்காரர் சொன்னதைக் கேக்கணுமா இல்லையா? அவுங்கதானே இப்ப நாட்டைப்புடிச்சு வச்சுக்கிட்டு இருக்காங்க.
ரெண்டு நதிகள் ஓடும் நிலப்பகுதியாக இருந்ததால், அருமையான களிமண் பூமி. செங்கல் அறுத்துச் சுட்டு, கட்ட ஆரம்பிச்சாங்க. ரொம்பவே தரமான செங்கல். ஊரில் இருக்கும் முக்கிய கட்டிடங்கள் எல்லாம் அப்போ கட்டுனவைதான். இந்தப்பகுதிக்கு ப்ரிக் ஃபீல்ட்ஸ் என்றே பெயரும் அமைஞ்சது. நம்ம சிங்காரச் சென்னையின் சூளை, சூளைமேடு கூட இப்படி நம்ம ஊர் உருவான சமயம் செங்கல் சூளை அதிகமா இருந்த பகுதியா இருந்து, அதனால் கிடைச்ச காரணப் பெயரோ என்னவோ?
ஏராளமான இந்தியர்கள் இந்தப்பகுதியில் வசிப்பதால் லிட்டில் இண்டியான்னும் ஒரு செல்லப்பெயர் உண்டு.
மலேயன் ரயில்வேஸ் தொடங்குச்சு 1885. இதுலே வேலை செய்ய இங்கிலாந்துலே இருந்து நேரடியா ஆட்களைக் கொண்டு வர்றதுக்கு பதிலா, அவுங்க தங்கள் அடிமை நாடுகளில் இருந்து ஏற்கெனவே ப்ரிடிஷாரால் பயிற்றுவிக்கப்பட்ட மக்களைக்கொண்டு வரலாமேன்ற யோசனையால் சிலோன்காரர்களைக் கொண்டு வந்தாங்க. அந்தக் கூட்டத்தில் சிலோனீஸ் என்ற வகையில் தமிழர், சிங்களர் எல்லோரும் இருந்தாலும் தமிழர்கள் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமா இருந்துச்சு.
ரயில்வே நிர்வாகம், ஸ்டேஷன் எல்லாம் இருந்த இந்தப் பகுதியிலேயே வசிக்கவும் ஆரம்பிச்சாங்க. கொஞ்சகாலம் கழிச்சு கோவில் ஒன்னு தேவைப்படுதுன்னு 1890 டிசம்பர் 24 க்கு சின்னப்பா என்றவர் வீட்டுலே கூடுன சிலோன்காரர்கள, ஜஸ்ட் வேல் ஒன்னை நட்டு வச்சு முருகனை வழிபட ஆரம்பிச்சாங்க. இந்த முருகன் இருக்கான் பாருங்க...... தமிழன் எங்கியாவது போனால், கூடவே பொட்டியைக் கட்டிக்கிட்டுக் கிளம்பிருவான்:-))))
அப்புறம் கோவில் கட்ட நிலம், செலவுக்கான பணம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா ஒரு ஒழுங்குக்கு வந்து, 1902 வருசம் சின்ன கோபுரத்தோடும், மூலவர் சந்நிதியில் முருகன் சிலையாகவும் அழகா அமைஞ்சு போச்சு. யாழ்பாணத்தில் இருக்கும் நல்லூர் ஸ்ரீ கந்தசாமி கோவிலை முன்மாதிரியா வச்சுக்கிட்டாங்களாம். கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த இன்னொரு இடத்தையும் வாங்கி அங்கே கலாமண்டபம் என்ற பெயரில் ஒரு ஹாலும் கட்டிக்கிட்டாங்க. வீட்டு விழாக்கள் எல்லாம் இங்கே கனஜோராக நடத்திக்கலாமாம்.
கோவில் வாசலுக்குப் போய்ச் சேர்ந்தோம். நூறு வருசத்துக்கு மேல் ஆச்சுன்னாலும் புதுக்கருக்கு அழியாமல் பளிச்ன்னு இருக்கு. ஆகம விதிப்படி பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் எல்லாம் தவறாமல் செஞ்சுடறாங்க.
கோபுர வாசலில் 'டூஸ் அண்ட் டோண்ட்ஸ்' (எச்சரிக்கை) ஒட்டி வச்சுருக்காங்க. அஞ்சாவது பாய்ண்ட்டைப் பார்த்ததும் மனசு அப்படியே நொந்து போச்சு:( உள்ளே போய் கடவுள் கந்தசாமியை தரிசனம் செஞ்சுக்கிட்டு வெளியே வந்தோம். கோவிலுக்கு நேர் எதிரா இருக்கும் தெருவில் நடக்க ஆரம்பிச்சோம்.
கொஞ்சதூரத்தில் ஏகப்பட்ட புறாக்கள் தரையில்! கிட்டப்போய்ப் பார்த்தால் ரெண்டு மூணு கிலோ அரிசியைத் தரையில் கொட்டி வச்சுருக்காங்க. அதுவும் கார் நிறுத்தும் இடத்தில். என்ன வழிபாடோ தெரியலை. அடுத்து குழலோடு க்ருஷ்ணன், வாவான்னான். வீர ஹனுமான் கோவிலாம். கோவிலைப் புதுப்பிக்கும் வேலை நடக்குதுன்னு எல்லோரையும் தாற்காலிக கொட்டகையில் கொண்டு வந்து வச்சுருக்காங்க.
தொட்டடுத்து இன்னொரு கோவில். மகாமுனீஸ்வரர் ஆலயம். எல்லோரும் ஷெட்டுக்கு வந்துட்டாங்க. அவரவருக்கு அவரவர் சாமிகள் வேண்டித்தான் இருக்கு. கோவில்களுக்கு பக்ககத்திலும் எதிர்வாடையிலும் பூமாலைக்கடைகள். ஆர்கிட் பூக்களை வச்சுக் கட்டுன அழகான மாலைகள்.
இங்கிருந்து தலையைத் திருப்பிப்பார்த்தால் கந்தசாமி கோவில் கம்பீரமா இருக்கு!
இன்னும் கொஞ்சதூரம் சிறுநடையில் புத்தகக்கடை ஒன்னு கன்ணில் பட்டது. காலத்தில் உறைஞ்சு போன தோற்றம் கடைக்கும் கடை ஓனருக்கும். நமக்கான வாசிப்புக்கு ஒன்னும் அகப்படலை. அப்படியும் தேடுனதில் ' சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது - சிவசங்கரி.' பழையகால டைப்ரைட்டர்முன் கைகட்டி இருந்த பெண்மணி, கையில் வாங்கிப் பார்த்து கால்குலேட்டரில் தட்டி 17 வெள்ளின்னார். இந்திய ரூபாயை ரிங்கிட்டுக்கு மாத்தி மேலே ஒரு 12 ரிங்கிட் லாபம் வச்சுக்கறாங்க. நாள் முச்சூடும் புத்தகங்களுக்கு முன் வெறித்த பார்வையுடன் இருந்து பாருங்க..... அவுங்க கஷ்டம் புரியும்!
மணி பத்தேகால் கூட இல்லை, வெயில் வாட்டி எடுக்குது. கே எல் சுற்றுலாப்பயணிகளுக்கான வரைபடம், மலேசிய நாடு முழுமைக்கும் உள்ள வழிகாட்டிகள் இப்படி ரொம்ப அழகா அருமையா விமானநிலையம், ஹொட்டேல்கள் இப்படி பல இடங்களில் குவிச்சுப்போட்டு வச்சுருக்காங்க. கைப்பைக்குள் இருந்த ப்ரோஷரைப் பார்த்து அடுத்துப்போக வேண்டிய இடத்துக்கு ஒரு டெக்ஸி அகப்படுமான்னு நின்னதில் ஒரு டெக்ஸி கிடைச்சது.
வண்டியில் ஏறி உக்கார்ந்து வண்டி நகர ஆரம்பிச்சதும் ரெயில்வே ஸ்டேஷன் என்றார் நம்மவர். தலையை ஆட்டிய ஓட்டுனர் (தமிழர்) அடுத்த முப்பது விநாடிகளில் ஒரு பாலத்தாண்டை வண்டியை நிறுத்தி இந்தப்பாலத்தில் போங்க என்றார். பயணக்கட்டணம் மூணு வெள்ளி. கொடுத்துட்டு இறங்கும்போது சரியா முக்கால் நிமிசம் ஆகி இருந்துச்சு. ஆனால் இந்தமுக்கால் நிமிசத்தில் கூட சொல்லவேண்டிய அறிவுரையை மறக்காமல் சொன்னதுக்கு அவரைப் பாராட்டத்தான்(?!) வேணும்.
"சங்கிலியைக் கழட்டிப் பையில் வச்சுக்குங்கம்மா. மலாய்க்காரனுங்க சரியான திருட்டுப் பசங்க,அறுத்துக்கிட்டு ஓடிடுவாங்க"
இதென்னடா பெரிய அபகடமா இருக்கேன்னு பாலத்துக்குமேல் நடக்கும்போது சங்கிலியைக் கழட்டிக் கைப்பைக்குள் வச்சேன். இப்பப் பையைக் கட்டிக் காப்பாத்தணும். நல்லவேளையா நம்ம ஹொட்டேலில் எலெக்ட்ரானிக் ஸேஃப் இருப்பதால் அதில் பாஸ்போர்ட்டுகளை வச்சுப்பூட்டி இருக்கோம். இல்லேன்னா நாந்தான் சுமப்பவள்.
பாலத்தினடியில் தண்டவாளங்களும், குஆலா லம்பூர் என்ற ஸ்டேஷன் பெயரும் தெரிஞ்சது
.
முதல் ரயில் போக்குவரத்து தொடங்குனது 1886 செப்டம்பர் KL to Klang . ஒரு 49 கிமீ தூரம். ரயில்வே ஸ்டெஷன் கட்டிடம் அப்போதான் கட்டி முடிச்சுருந்தாங்க. the residence of the British Resident, வீடு அங்கே பக்கத்திலிருந்ததால் ரெஸிடெண்ட் ஸ்டேஷன் என்ற பெயர் அமைஞ்சது. சில வருசங்களில் ரயில்பாதைகள் நீட்டிக்கப்பட்டு இந்த ஊருக்கும் சிங்கைக்கும் ரயில் பயணம் ஆரம்பிச்சது. தாய்லாந்து வரைகூட ரயிலில் போகலாம்!
ரெஸிடெண்ட் ஸ்டேஷன் கட்டிடம் ஆங்கிலேய கட்டிடக்கலை நிபுணர்களால் அமைக்கப்பட்டாலும், இருக்கும் நாட்டின் மதம் அனுசரிச்சு முகலாய கட்டிடக்கலைப் பாணியையும் கலந்து கட்டுனதே! தரமான உள்ளூர் செங்கல் பயன்படுத்தியிருந்தாங்க. சூளை ரொம்பவே பக்கம் என்றபடியால் சுடச்சுடக் கிடைச்சிருக்கலாம். அப்புறம் ஒரு இருபத்தினாலு வருசம் கழிச்சு (1910 ) புனரமைப்பு செஞ்சாங்க.
இப்பப் பார்க்கும்போதும் ஏதோ ராக்ஷஸ சைஸ் பறவை ஒன்னு அப்படியே சிறகுகளை விரிச்சு இறங்கி உக்கார்ந்தது போலத்தான் தோணும். நம்ம கேமெராவில் ஒரு ஃப்ரேமுக்குள் அடங்காது:(பிட் பிட்டா எடுத்தோம்.
வேறொரு சென்ட்ரல் ஸ்டேஷன் கட்டுனதும் இங்கே ரயில் நடமாட்டம் அவ்வளவா இல்லையேன்னு அழகான இந்த பாரம்பரியமுள்ள கட்டிடத்தை வீணாக்காமல் ஹொட்டேல் ஹெரிடேஜ், ஸ்டேஷன் ஹொட்டேலா மாத்திட்டாங்க. வெளியே இருக்கும் அழகும் எதோ போன வருசம் கட்டுனமாதிரி இருக்கும் புதுமையும் உள்ளே இல்லையாம். கார்பெட், அறைகள் எல்லாம் மக்கல் மணமென்று ஹொட்டேல் ரிவ்யூஸ் சொல்லுது. ஒருவேளை 'பழமை போற்றுதும்' வகையில் 127 வருச கார்பெட் விட்டுவைக்கப் பட்டுள்ளதோ என்னமோ!!!
இந்த ஸ்டேஷனுக்கு எதிர்சாரியில் பிரமாண்டமான ரயில்வே நிர்வாக அலுவலகம், சட்னு பார்க்க லண்டன் பார்லிமெண்ட் பில்டிங் போல நீளமா அரைத்தெருவுக்கு இடம் பிடிச்சிருக்கு. இதுவும் அட்டகாசமான அழகுதான்! நம்ம சி,சென்னையில் செண்ட்ரல் ஸ்டேஷனைத் தொட்டடுத்து ரயில்வே ஆஃபீஸ் ஒன்னு தங்கசாலைத் தெரு ஆரம்பத்தில் அட்டகாசமா இருக்கும் கவனிச்சு இருக்கீங்களா?
நம்ம குடும்பத்தில் ரெயில்வேகாரர்கள் அதிகம் என்பதால் ரயில்வேன்னா ஒரு பாசம் பொத்துக்கிட்டு வந்துரும், எனக்கு கேட்டோ:-)
அக்கரையில் இருந்து படம் எடுக்கலாமுன்னு நினைச்சால்..... இங்கே எங்கேயுமே ஸீப்ரா க்ராஸிங் என் கண்ணில் படலை. அட்லீஸ்ட் சிக்னலில் வண்டி நிற்கும்போது பச்சை மனுசன் உண்டான்னா அவரையும் காணோம்? சர்புர்ன்னு தலை தெறிக்கும் வேகத்தில் கார்கள். நான் போகும்போது கூடவே (ஓடி)வான்றார் இவர். ஒரு வழியா எதிர்க்கரை போய்ச் சேர்ந்தோம்.
இனி எங்கே? எடு ப்ரோஷரை......
தொடரும்....:-)