'நாளைக்குக் காலையிலே கிளம்பணும். கொண்டு போகும் சின்ன சூட்கேஸில் உனக்குத் தேவையானவைகளை எடுத்து வச்சுரும்மா. புடவை ரெண்டு மூணு கட்டாயம் இருக்கட்டும். ட்ரெஸ் கோட் இருக்காம் 'என்று சொல்லி பயமுறுத்திக்கிட்டு இருக்கார் கோபால்.
கேரளப் பயணம் போக முடிவு செஞ்சதுலே இருந்தே தினம் 'புடவை, புடவை, ட்ரெஸ் கோட்' எல்லாம் கேட்டுக்கேட்டே காது புளிச்சுப்போனது உண்மை. ஒரு முண்டு செட்டும் கொண்டுபோயிருந்தேன்.
புடவை ஒன்னும் பிரச்சனையே இல்லை.வில்லியாக இருப்பது ப்ளவுஸ்தான். தீர்வும் அப்பவே கண்டுபிடிச்சுட்டேன்! நல்லா ஒர்க்கவுட் ஆகுது. குட்டிச்சாத்தான் வேலை!
சுட்டி வேலை செய்யலையோன்னு ஒரு சம்ஸயம். இதைப் பாருங்க நேரம் இருந்தால்....
http://thulasidhalam.blogspot.co.nz/2010/04/blog-post_04.html
//பிரச்சனைன்னு வந்தபிறகு அதுலே இருந்து தப்பிக்க வழி தேடும் மனசு, ஒரு ஐடியாவைக் கண்டு பிடிச்சது. தேவைகள்தானே கண்டுபிடிப்புகளின் தாய்! கேரளா முண்டு பாரம்பரிய உடைதானே? அதை எடுத்துக்கிட்டுப் போகலாம். தேவைப்பட்டால் சல்வார் மேலேயே அடிமுண்டு சுத்திக்கிட்டு, மேல்முண்டை தாவணியாப் போட்டுக்கலாம். அப்ப ப்ளவுஸ்? நோ ஒர்ரீஸ். அதான் கமீஸ் போட்டுருக்கோமே!!!!! சரிகை முண்டு என்பதால் ப்ளவுஸுக்கு எந்தக் கலரும் ப்ரிண்டும் ஓக்கே:-) கட்டிப் பார்த்தேன். ரெண்டே நிமிஷம். பர்ஃபெக்ட்!//
ஆளுக்கொரு கேபின் பேக். மற்ற பெரிய பெட்டிகளை இங்கே லோட்டஸிலோ இல்லை அண்ணன் வீட்டிலோ வச்சுட்டுப் போகலாம் என்ற எண்ணம்.
இந்தப்பதிவு எழுதும் சமயம் நம்ம கோபால் எதோ ஒரு தெலுகு சானல் போடப்போய் அதுலே திருப்பதிக்கு ட்ரெஸ் கோட் என்னன்னு வரிகள் ஸ்கிரீன் அடியில் போய்க்கிட்டு இருந்துச்சு. புடவை ஓக்கே. சுடிதார் வித் துப்பட்டா ஓக்கே. ஸல்வார் கமீஸ் வித் துப்பட்டா ஓக்கே. அப்ப துப்பட்டாவில் தான் இருக்கு, சூக்ஷ்மம் :-) பாவடையுடன் தாவணி கட்டாயம் இருக்கணுமாம். ஹாஃப் ஸாரீஸ். அப்ப சின்னக்குழந்தைகள் பட்டுப்பாவாடையுடன் தாவணி போட்டுக்கணும். பிஞ்சுகள் கவுன் நோ வா? ஹூம்.... பழங்காலத்து சிற்பங்கள், சித்திரங்களைப் பார்த்து ட்ரெஸ் கோட் வைக்கலை என்பதே இப்போதைய ஆறுதல். மார்க்கச்சை வேணுமுன்னு கச்சை கட்டுனாங்கன்னா நாம் அம்பேல்:-))))
இந்த வருசத்தின் முக்கிய திட்டம், கேரள மாநிலத்திலிருக்கும் திவ்ய தேசங்களை தரிசிப்பது. அதுக்கான திட்டம்'தீட்டிக்கொண்டு' இருந்தப்பதான் மதுரை தமிழ்ப் பதிவர் மாநாட்டு சமாச்சாரமும் கிடைச்சது.
பயணத்திட்டத்தில் இருந்த சேலம், திருச்செங்கோடு,நாமக்கல், கரூரை கழற்றிவிட்டுட்டு மதுரையை சேர்த்துக்கிட்டோம். ஞாயிறு மாநாடு என்பதால் சனி மாலை மதுரை போய்ச் சேரும்படியான திட்டம்.
இன்றைக்கு வெள்ளிக்கிழமை. நம்ம அநந்தபதுமனை ஸேவிச்சு, பயணச் சேதியை சொல்லிட்டு வரணும். அடையாறு கிளம்பினோம். தி. நகரில் ரெண்டு தெரு தாண்டிக்கிட்டு இருக்கும்போதே நம்ம கண்ணாடிக்கடைக்கு ஒரு ஃபோன் போட்டு கண்ணாடி ரெடி செய்ய ஒரு நினைவூட்டல் கொடுத்தால்.... கண்ணாடிகள் தயாரா இருக்குன்னாங்க. மதியம் போய் வாங்கிக்கணும்.
இப்போ பெருமாள்! அடையார் அனந்த பத்மநாபன்!
வழக்கம்போல் ஹாயா தாய்ச்சிண்டு மேலே கண்களை நட்டு, ஆழ்ந்த சிந்தனையில் இருக்கார்! ஹை அண்ட் பை சொல்லிட்டு, வழக்கம்போல் தர்மபரிபாலன சபாவை எட்டிப் பார்த்தால் பயங்கரக்கூட்டம். கோவிலில் இருந்து அந்த ஹாலுக்குப்போகும் கம்பிக் கதவு மூடி வச்சுருக்கு. என்னன்னு பார்க்கணுமேன்னு வெளிப்புறம் சுத்திக்கிட்டுப்போகும்போது விஷயம் தெரிஞ்சது. இன்றைக்கு கந்தசஷ்டி விழாவின் ஆரம்பநாள்.
கல்யாணவீட்டு வரவேற்பு போல் சந்தனம், குங்குமம், விபூதி, கல்கண்டு எல்லாம் வச்சு கூடவே அன்றைக்குப் பாடப்போகும் திருப்புகழ் பதிகங்களை அச்சடிச்ச தாள். ஒரு பத்து பதினைஞ்சு பாட்டுகள் இருக்கு அதில்.
ஹாலில் வரிசைகளில் மக்கள் தரையில் உக்கார்ந்திருக்காங்க. இந்தப்பக்கம் சில வரிசை நாற்காலிகளில் மூட்டு கேஸ்கள். ஒரு அரைமணி போல நாமுமிருந்து சில பாட்டுகளைக் கூடவே பாடிட்டு(?!) ஏற்கெனவே சொல்லி வச்சுருந்தநேரத்துக்கு அலைகள் அருணா சீனிவாசன் வீட்டிற்குப்போனோம். இதே அடையார்தான். இவுங்க இண்டியன் எக்ஸ்ப்ரெஸில் எழுதறாங்க. நம்ம மரத்தடி காலத்தோழி!
இங்கே(யும்) தீபாவளி இனிப்புகளை உள்ளே தள்ளினேன். பெருமாளே..... டாக்டர் வீலருக்கு சேதியைச் சொல்லிறாதே. இவுங்க நியூஸியில் நம்ம ஃபேமிலி டாக்டர். நல்லவேளை தமிழ் படிக்கத்தெரியாது அவுங்களுக்கு:-)
அரட்டைக் கச்சேரியை முடிச்சுட்டு, லேட்டிஸ் ப்ரிட்ஜ் சாலையிலிருக்கும் லைட்டுக் கடைகளில் ஒரு ரெண்டு மூணு கடைகளுக்குப்போய் குத்து விளக்குக்கான மின்சாரவிளக்கு தேடினோம். இங்கேயும் கிடைக்கலை:(
மதிய சாப்பாடு மயிலை சரவணபவன். கோபாலுக்குத் தாலி. எனக்கு பூரி:-)
அப்படியே பக்கத்தில் இருக்கும் விஜயா ஸ்டோர்ஸ். சாமிக்கான சாமான்களை வாங்கிக்கணும். தனித்தனியா கடைக்குன்னு கிளம்பாம போற போக்கில் எந்தக் கடைகள் கிடைக்குதோ அங்கெ போய்த் தேடினால் சிலசமயம் கண்டடைவோம். கலசத்துக்கு வைக்கும் அலங்காரத் தேங்காய் கிடைச்சது.நகைநட்டு ஒன்னும் சரிப்படலை. கல்வச்ச நாமங்களும், கண்களும் ஆப்ட்டது:-) இன் னும் பலருக்கு நாமம் போட வேண்டித்தான் இருக்கு நம்மூட்டில்!
அறைக்கு வரும்வழியில் தோழி வீடு அடுத்த ஸ்டாப். செட்டில் ஆயிட்டாங்களான்னு பார்த்துட்டு பைபை சொல்லிக்கணும். இன்னும் ஒரு பதினேழு நாளைக்குப் பார்க்கமாட்டோமே:-(
வரப்போகும் விசேஷத்து ஏற்பாடுகளில் ரொம்ப பிஸியா இருக்கும் நேரம் என்றாலும் நமக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்கினாங்க.
அவுங்க வீட்டிலிருந்து கிளம்பி எல்டாம்ஸ் சாலை வழியா வரும்போது ஒரு வீட்டின் முன் நிறையக் கூட்டம். டிவி சேனல் ஒன்னு பெரிய வேன் வச்சுக்கிட்டு என்னமோ ஷூட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. டிவி சீரியலோன்னு பார்த்தால்.... இல்லையாம். பழைய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரனின் வீடு அதுன்னு நம்ம சீனிவாசன் சொன்னார். அப்புறம் மாலையில்தான் டிவி போட்டப்ப அவர் சாமிகிட்டே போன விஷயம் தெரிஞ்சது:(
பொதுவா நீண்டகாலமாக ட்ராவல்ஸ் வண்டி ஓட்டுபவர்களுக்கு முக்கிய புள்ளிகள் வீடெல்லாம் (சின்னவீடு உட்பட!) தெரிஞ்சிருக்கு. போறபோக்குலே இது இன்னார்வீடுன்னு சொல்றது வழக்கம்:-)
அறைக்கு வந்து கொஞ்சநேரம் ஓய்வு எடுத்துக்கிட்டு மறுபடி அக்குப்ரெஷர் டாக்டர் ஜெயலக்ஷ்மியை பார்க்கப் போனோம். வரச்சொல்லி இருந்தாங்களே. நேத்து மாலை முதல் காதுகளைக் கிள்ளிக்கிள்ளித் தோள்வலி கொஞ்சம் குறைஞ்சுதான் இருந்துச்சு.
இன்றைக்கு இன்னும் சில புள்ளிகளைக் குறிச்சுக்கொடுத்து அழுத்தம் கொடுக்கச் சொன்னதுடன், மோதிரம் ஒன்னும் கொடுத்தாங்க. அதெப்படி ரெண்டு ஆளுக்கு ஒன்னுன்னு இன்னொன்னும் கேட்டு வாங்கினோம்:-) இதை கை விரல்களில் (பின்னே? மோதிரமாச்சே!) போட்டுக்கிட்டு விரலில் ஒவ்வொரு கணுவிலும் மும்மூணுமுறை உருட்டணும். நரம்புகளில் அழுத்தம் கொடுப்பதோடு ரத்த ஓட்டமும் சீராகுமாம்.
எனக்கு மட்டும் ஒரு காது மடலில் மொட்டைக் கம்பி வச்சு லேசாய் துளைப்பதுபோல் திருகுனதும் 'ஓ...காது குத்தி விடப்போறாங்க. புதுசா சின்ன அழகான காதணி வாங்கிக்கணும். வைரமா இருந்தால் விசேஷமு'ன்னு நினைக்கும்போதே கடுகு சைஸில் ஒரு கருப்பு சமாச்சாரத்தை அந்தப் பள்ளத்தில் வச்சு அதுக்கு மேலே ஒரு துளியூண்டு டேப் போட்டு ஒட்டுனாங்க. அட.... இதுநம்மூரில் செல்லங்களுக்கு மைக்ரோ சிப் வைக்கும் சமாச்சாரம்போலன்னு நினைச்சேன்.
ஆனா.... இது சரியாக் காதின் எந்தப் புள்ளியில் அழுத்தம் கொடுக்கணுமுன்னு நமக்கு அடையாளம் காமிக்கும் கைடாம். ரெண்டு மூணு நாளில் விழுந்துரும். ஆனால் அதுக்குள்ளே சரியான புள்ளி எங்கேன்னு உங்களுக்குப் பழகிருமுன்னும் சொன்னாங்க டாக்டரம்மா.
ஒவ்வொரு புள்ளிகளைப்பற்றி சொல்லும்போதெல்லாம்.... எல்லாம் புத்தகத்தில் இருக்கு. தரேன் தரேன்னு சொல்லிக்கிட்டும் இருந்தாங்க.
இவுங்க உடல்நலம்பற்றி முக்கியமா அக்குப்ரெஷர் சிகிச்சை பற்றி விளக்கமா நிறைய புத்தகங்கள் எழுதி இருக்காங்க. அதுலே உடல்நலம் உங்கள் கையில் என்ற புத்தகத்தைக் காமிச்சு இது இங்கிலீஷிலும் இருக்கு. எது வேணுமுன்னு கேட்டதும் அதுலே ஒன்னு இதுலே ஒன்னுன்னு ஒன்னுபோலச் சொன்னோம்.
சான்ஸ் கிடைச்சா விடமுடியுமான்னு நம்ம கோபால், என்னைக்காமிச்சு ' இவுங்க எழுதுவாங்க'ன்னார்:-) அடடே அப்படியான்னு ஆர்வத்தோடு விவரமெல்லாம் கேட்டுக்கிட்டு, ஒரு பெரிய அலமாரியைத் திறந்து அவுங்க எழுதிய புத்தகங்களைக் காமிச்சாங்க. ஏகப்பட்டவை. அதிலிருந்தும் ரெண்டு புத்தகங்களை எடுத்துக்கிட்டோம்.
சந்தடிசாக்குலே மதுரையில் பதிவர் மாநாட்டுக்குப் போறோம். அப்படியே கோவில்கள் விஸிட்ன்னு தெற்குப்பக்கம் போறோமுன்னு சொன்னோம். தென்நாட்டுப் பயணம் போய் வந்ததும் ஒருமுறை வந்துட்டுப் போங்கன்னு சொன்னாங்க.
இந்த ரெண்டு நாட்களில் நான் கவனிச்சது , ஏராளமான நோயாளிகள்(!) வந்துக்கிட்டே இருக்காங்க. திங்கக்கிழமை விடுமுறை. அன்றைக்குத்தான் எழுதுவாங்களாம். நம்மைப்போல் டொக் டொக்ன்னு தட்டச்சு இல்லையாம். பேனாவும் பேப்பருமா வச்சு பயங்கர ஸ்பீடில் எழுதுவாங்களாம். அம்பதறுபது பக்கமெல்லாம் ஜூஜுபின்னதும் 'ஹைய்யோ'ன்னு இருந்துச்சு எனக்கு.
வர்ற கூட்டத்தைப் பார்த்தால் இதுவரை ஒவ்வொரு புத்தகமும் ஏகப்பட்ட பதிப்புகள் ஆகி இருக்கும். இப்பக்கூட ஒரு பெரிய புத்தகம் (விலை 1000 ரூ) பற்றிய விமரிசனம் ஹிந்துவில் வந்திருக்குன்னு நோட்டீஸ் போர்டில் இருந்த விமரிசனக்கட்டிங் காமிச்சாங்க. இன்னும் விற்பனைக்கு வரலை. அநேகமா அடுத்த வாரம் வந்திருமுன்னு அவுங்க பப்ளிஷர் (லிஃப்கோ) சொன்னாராம்!
கன்ஸல்ட்டிங் ஃபீஸ் ஒரு பக்கமுன்னா இந்த மோதிரம், புத்தகங்கள் எல்லாமும் சேர்த்து ஒரு தொகை வந்துருது. இதை எங்கூர் டாலரில் மற்றும்போது அப்படியொன்னும் பெரிய தொகை இல்லை என்பது ஒரு ஆசுவாசம்.
அறைக்கு வந்து புத்தகங்களையும் மோதிரங்களையும் வச்சுட்டு, கண்ணாடிகளை வாங்கிக்க (தி.நகர் ராகவேந்திரா கோவிலுக்குப் பக்கத்துக்கடை) போனோம். போட்டுப் பார்த்து ஃபிட்டிங் சரியா இருக்கான்னு செக் பண்ணிட்டு, அடுத்ததாக கோபாலுக்கான ஸ்பெஷல் ஷாப்பிங்.
ஐஸ்வர்யம் ரேமாண்ட்ஸ். 90 பாண்டி பஸார். (நம்ம ஷாப்பிங் முக்கால்வாசி இந்த திநகர் ஏரியாவிலேதான் எப்பவும்) நாம் போன நேரத்தில் மெஷர்மெண்ட் மாஸ்டர் வெங்கட் அங்கில்லை. கொஞ்ச நேரத்தில் வந்துருவார், உக்காருங்கன்னாங்க. இந்த 'கொஞ்ச நேரத்தில்' எனக்கு நம்பிக்கை போய் பலவருசங்களாச்சு.
பழைய ஆர்டர் நம்பரைச் சொன்னார் கோபால். ஆர்டர் எடுக்கும் புத்தகங்கள் அடுக்குகளா ஒருஇடத்தில் . சரியாச் சொன்னால் ஒரு பத்து மாசத்துக்கு முந்திதான் வந்துருந்தோம். ஜனவரின்னதும் தேடி எடுத்துட்டார் கடைப்பணியாளர். நம்பரைப் பார்த்தால் கரெக்ட்! எனக்கு ஒரே ஆச்சரியம். எப்படி இவர் சரியா இந்த ஆர்டர் நம்பரை நினைவு வச்சுருக்கார்? சகவாசதோஷமோ!!!!
இன்னிக்கு அவர் போட்டுருக்கும் பேண்ட்ஸ், போனமுறை இங்கே தைச்சு எடுத்துப்போனதுதானாம். இன்னிக்குத்தான் முதல்முறையா அணிஞ்சுருக்கார். அதுலே உள்பக்கம் பாக்கெட் துணியில் இந்த நம்பர் பால்பாய்ண்ட்லே எழுதி இருந்துச்சாம். போட்டுக்கும்போது கவனிச்சுருக்கார்:-)
ஒரு ஆறேழு துணிகளைத் தேர்ந்தெடுத்துட்டு இதே அளவில் தைச்சு வைக்கச்சொல்லிட்டு அறைக்குப் போனோம்.
கோபாலுக்கு துணி எடுக்கும்போது நான் ரொம்பவே தாராளமாத்தான் இருப்பேன். ரெண்டு போதுமுன்னு ஆரம்பிப்பார். சரின்னுட்டா..... என்ன ஆகுமுன்னு ஒருக்கா பார்க்கணும்:-))))
பாக்கிங் ஆரம்பிக்கணும் . நாளைக்கு காலைப்போக்குவரத்து ஆரம்பிக்குமுன் சீக்கிரமாக் கிளம்பணும். ஒரு பத்து நாளைக்குத் தேவையான துணிமணிகளை எடுத்து வச்சுக்கிட்டு கொஞ்சம் பெரிய வண்டியை எடுத்துக்கிட்டு எட்டு மணிக்கு வந்துருங்கன்னு சீனிவாசனிடம் சொல்லியாச்சு.
சென்னைக்குள்ளேயே சுத்தறோமுன்னா நமக்கு டாடா இண்டிகா போதும்.
தொடரும்..............:-)