நினைவுக்காக மரம் நடுவதைப்போல் நான் செடிகளை நடுவது வழக்கம். கார்டனியா என்னும் பூ..... மலர்ந்துருக்கு. பாரிஜாதம்னு கூடச் சொல்வாங்க. ரொம்பவே நல்ல வசீகரமான மணம் ! பார்க்க, நம்மூர் அடுக்கு நந்தியாவெட்டை போல இருக்கும். ஆச்சு பதிமூணு வருஷம்....
நான் மாமியார் மெச்சிய மருமகள் !
நெசமாவா ?
பின்னே ! ஆரம்பத்தில் இருந்தே வெளியூர், வெளிநாடுன்னு இருந்துட்டேன். டிசம்பர், நமக்குக் கோடை காலம். தாமரை மலர ஆரம்பிச்சது. அப்பப்ப ஒன்னு ரெண்டுன்னு இன்னும் ஒரு மூணுமாசத்துக்கு... கண்ணுக்கு விருந்துதான். ராஸ்பெர்ரி புதரில் கெம்புக்கல் கம்மல்கள்..... பேரனின் ஃபேவரைட் !
க்றிஸ்மஸ் அலங்காரங்கள், கொஞ்சம் செஞ்சேன். இது நம்ம ஃபிஜி வாசத்தில் உண்டான வழக்கம். அப்போ வெறும் கலர் லைட்ஸ் மட்டும்தான். இங்கே நியூஸி வந்தாட்டு, முதல் வருஷம் உண்மையான பைன் மரக்கிளையில் க்றிஸ்மஸ் மரம் வாங்கினோம். தோட்டத்தில் மண்ணில் நட்டு அலங்கரிக்க, ரொம்பவே கஷ்டமாப் போச்சு. அவ்ளோ பெருங்கிளை ! பயங்கர கனம். ஆழமான குழி தோண்டவே படாதபாடு பட்டாச்சு.
நம்ம கஷ்டம் புரிஞ்ச சீனர், தங்கள் கைவேலையைக் காமிச்சாங்க. வீட்டுக்குள் வைக்கும் மரங்கள் வந்தாச்சு. ஒன்னு வாங்கினால்...... பல வருஷம் தாங்கும்! நம்ம வீட்டில் இங்கே 2003 இலிருந்து கொலுவைக்க ஆரம்பிச்சபிறகு, முக்கியமான நம் பண்டிகைகளுக்குச் சின்னதா ஒரு டிஸ்ப்ளே செஞ்சு வைக்க ஆரம்பிச்சு, அது க்றிஸ்மஸுக்கும் தொத்திக்கிச்சு ! என்ன ஒன்னு.... அந்தந்த விழா முடிஞ்சதும், அலங்கார சமாச்சாரங்களைக் கவனமாப் பிரிச்சுத் தனிப்பெட்டிகளில் எடுத்துவைக்கணும். அட்டைப் பெட்டிகளின் மேல் பெயர் எழுதிவைக்க மறக்கக்கூடாது ! வாசலில் மாட்டிவைக்க ஒரு மலர்வளையம். (எல்லாம் சொந்த சாஹித்யமே ! பழசாகிப்போன குக்கர் காஸ்கெட் இருந்ததே ! ஹிஹி )பேரனுக்காக அவன் கைக்கெட்டும் உயரத்தில் ரெண்டு தாத்தாக்கள்.
பதினாறு பேர் வந்து குடிலின் முன் பாடிக்கிட்டு இருக்காங்க. சாந்தாவின் வீட்டில் கடைசி நேர பரபரப்பு. அவரோட கார், நம்ம இவனுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு.ரயில் எஞ்சினும்தான் ! தொட்டு விளையாடட்டுமுன்னு விட்டுட்டேன்.
கார்த்திகை தீபத்திருவிழா வந்தது.... இந்த வருஷம் என்னவோ.... கார்த்திகைமாசக் கட்டக் கடைசியில்! முடிஞ்ச அளவில் சுமாராக் கொண்டாடினோம். மார்கழியும் பிறந்தது.... நம்ம ஜன்னு சம்ப்ரதாயமான மடிஸார் கட்டி ஆண்டாளானாள் ! முதல்நாள் மட்டும் வாசலிலே பூசணிப்பூ :-)
தோழியின் நடனப்பள்ளியின் ஆண்டுவிழா. நம்ம ஊரில் மட்டும் மூணு பரதநாட்டியப் பள்ளிக்கூடம் இருக்கு, தெரியுமோ ? இந்தமுறை கொஞ்சம் சின்ன அளவில் ஒன்னரை மணி நேர நிகழ்ச்சிகள் மட்டும் என்பதால் போயிருந்தோம். கால் இருக்கும் நிலையில் ரொம்ப நேரம் காலைத் தொங்கப்போட்டு உக்கார முடியாது. என்னதான் சொல்லுங்க.... பரதநாட்டிய உடையில் நம்ம பிள்ளைகளைப் பார்த்தாலே...மனசு கிறங்கிப்போயிருது !
ஒருநாள் மாலுக்குப் பேரனோடும் மகளோடும் போயிருந்தோம். அதுவரை வீட்டிலும், ப்ளே சென்ட்டரிலும் படத்தில் பார்த்த சாண்ட்டாவை 'நேரில்' கண்டதும் பிரமிச்சுப்போயிட்டான் ! நான் சாண்ட்டாவிடம் கொஞ்சம் கதையடிச்சுட்டு வந்தேன்.
கண்ட்ரி சைடில் புதுவீடு கட்டிப்போன தோழியின் வீட்டில் நம்ம ஆர்யசமாஜின் மாதாந்திர ஹோமம். அங்கத்தினர் வீடுகளில் சுழற்சிமுறையில் மாதம் ஒருமுறை நடக்கும் வகை. நான் பொதுவா வீடுகளில் நடக்கும் ஹோமங்களில் பங்கெடுப்பதில்லை. ஹால்களில் நடந்தால் போவேன். எல்லாம் இந்தக் கால் பிரச்சனையால்தான். கீழே உட்கார முடியாது. தோழியும் அவர் கணவரும் நம்ம யோகா குழுவின் அங்கங்கள் என்பதால் ரெண்டுபக்கத்திலும் சொந்தமாகிட்டாங்களே !!!
இங்கே கோடை விடுமுறை, க்றிஸ்மஸ் சமயம்தான் என்பதால் பொதுவா டிசம்பர் மூணாம் வாரம் தொடங்கி, ஜனவரி முதல் வாரம் வரை சகல இடங்களிலும் விடுமுறைதான். பள்ளிகள், கலாசாலைகள் எல்லாம் சுமார் ரெண்டு முதல் மூணு மாசம் வரைகூட..... நம்ம யோகா வகுப்புக்கும் விடுமுறைக் காலம் உண்டு. லீவில் ஊருக்குப்போய்வரும் வழக்கமும் இருக்கே ! நம்ம யோகா வகுப்பின் கடைசி நாள், க்றிஸ்மஸ் பார்ட்டி ! நம்ம விழாக்களுக்கெல்லாம் அவைகளை அனுசரிச்சு ட்ரெஸ் கோட் கூட வச்சுக்குவோம். இப்ப க்றிஸ்மஸ் கலர்ஸ்..... சிகப்பு, பச்சை! விழா இனிதே நடந்தது..... இனி ஜனவரி கடைசியிலோ. ஃபிப்ரவரி முதல் வாரமோ.... ஒரு புதன்கிழமையில் வகுப்பு ஆரம்பிக்கும் !
நம்ம கேரளா க்ளப்பின் க்றிஸ்மஸ் பார்ட்டிக்கு இந்தமுறை மகள் குடும்பமும் வந்தாங்க.
வழக்கமா க்றிஸ்மஸ் ஈவ் , நம்ம கதீட்ரலுக்குப் போய்வருவதெல்லாம் , நிலநடுக்கம் வந்து கதீட்ரலே அழிஞ்சு போனதும் நின்னே போச்சு. வீட்டாண்டை இருக்கும் சர்சுக்கு க்றிஸ்மஸ் திருநாளுக்கு முதல்நாள் பகலில் போய் வருவோம். ஈ காக்கா இருக்காது. ஏகாந்த தரிசனம்தான் எப்போதும்.
இந்தமுறை பகலில் போகமுடியலை. ராத்ரி 11.30 சர்வீஸ்தான் கூட்டமா இருக்குமுன்னு நினைச்சுப்போனா..... ஒன்பதே காலுக்கே நல்ல கூட்டம் ! ராத்ரி 12க்கு ஆகும் ஜனனம், சீக்கிரமாகவே ஆகி இருக்கு !!!!! அதுவும் குடிலுக்குள் இல்லாமல்.... ஆல்டரின் முன்பக்கம் !!! சம்ப்ரதாயங்களில் மாற்றம் வந்துக்கிட்டு இருக்கு......
அடுத்த பேட்டையில் க்றிஸ்மஸ் லைட்ஸ் அலங்காரம் இப்போ ஒரு மூணு வருஷமா நடக்குது. அங்கே போய் எட்டிப்பார்த்துட்டு ராத்ரி பத்துக்கு வீடு திரும்பியாச்சு.
மெர்ரி க்றிஸ்மஸ் !!!!
0 comments:
Post a Comment