Monday, April 17, 2023

மூக்குத்தியம்மன்னு பெயர் வச்சுருக்கலாமோ ? கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 36

இப்ப நாம் இங்கே கோவில்தெருவில் இருக்கோமில்லையா.......   இங்கே  நாலு கோவில்கள்  அடுத்தடுத்து இருப்பது ரொம்பவே வசதி போங்க !  நாம் இப்போ இருட்டினபிறகு வந்துட்டோமேன்னு  முதலில் தோணுச்சு. போனமுறை பகலில் வந்ததால்  படங்கள் எல்லாம் பளிச்.  இந்தக்கோவில் தெருவே இப்போ ரெண்டாவது மூணாவதுன்னு விரிவாகிக்கிடக்கு !
அடுத்த கோவிலில் கங்கையம்மன்  இருக்காங்க.  புதுசா  படிகள் ஏறும் இடத்துலேயே ஒரு சூலம் !  அதுலே கண்கள் !   மூக்கில் ரெண்டு பக்கமும் மூக்குத்தி !  மூக்கு வாய், கண்ணு, நெத்தி, தலையில் க்ரீடம் இப்படி அருமையா செஞ்சுருக்காங்க. யாரோட ஐடியாவோ.... சூப்பர் !    
அஞ்சு நிலைக்கோபுரம். கோபுரத்தின் முகப்பில்  இடது காலை மடிச்சுப்போட்டு உக்கார்ந்திருக்கும்  கங்கையம்மன். கங்கையம்மன் என்ற அம்பாள் ஸ்வரூமா இல்லை நம்ம கங்கா நதிக்காரியான்னு தெரியலை.....
கங்கம்மா.... இங்கே உள்ளூர் தெய்வமாம்.  1928  முதல்  வருஷாந்திரத்திருவிழா மூணு நாட்களுக்கு ஊரே கூடிக் கொண்டாடுவாங்களாம்.  2004 இல்தான் நாம் இப்போ பார்த்துக்கிட்டு இருக்கும் கோவிலை இங்கே புதுசாக் கட்டி, கங்கையம்மன் குடியேறி இருக்காள் !   அப்போ முதல் திருவிழாவும்  இங்கேயே நடக்க ஆரம்பிச்சுருக்கு. 
படிகளேறி உள்ளே போறோம்.  மூலவர் நிகுநிகுன்னு கருப்பு நிறத்தில் இடக்காலை மடிச்சு, வலதுகாலைத் தொங்கவிட்டு நிம்மதியா அமர்ந்த கோலம் ! 
படம்: மூலவர், ஆண்டவர் அருளியது

புள்ளையார், சுப்ரமண்ய ஸ்வாமி, நவக்ரஹங்கள்னு தனித்தனி சந்நிதிகள்.  கருவறையை வலம் வரலாம். விஸ்தாரமாத்தான் கட்டி இருக்காங்க. ஒரு மூலையில் அட்டகாசமான அலங்காரங்களோடு தேவி ! ஹைய்யோ!!!  என்ன அழகு !

முருகன், பிக்கல் பிடுங்கல் இல்லாமல் தனியா இருக்கான். முகத்தில் நிம்மதி தெரிஞ்சது எனக்கு :-)
அழகான தேர் ஒன்னு ஒரு பக்கம்.  உற்சவரை வச்சு மேல் தளத்துலேயே சுத்திவருவாங்கன்னு நினைக்கிறேன்.

உற்சவரும்  தனியா ஒரு அழகு மாடத்தில்  அலங்கார பூஷிதையாக  இருக்காள் !  தனியாக ஒரு சக்தி ஆயுதம், மக்களின் வேண்டுகோளைச் சுமந்துக்கிட்டு நிக்குது !

போனமுறை உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. இப்போ செல்ஃபோன் காலம் வந்துட்டதால்  கொஞ்சம்  சட்டதிட்டங்கள் இளகி இருக்கு போல.  மூலவரை எடுக்க மட்டும் தடைன்னு நினைக்கிறேன். அதனால் என்ன இப்பெல்லாம் கூகுளில் எல்லாப்படங்களும் மூலவர்களும், அபிஷேகம் பூஜை உட்படக் கிடைச்சுக்கிட்டு இருக்கே!
ச்சும்மா சொல்லக்கூடாது.... அப்பழுக்கில்லாமல் கோவில் ரொம்பவே பளிச்ன்னு இருக்கு ! 
தொட்டடுத்த கோவில் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம ஸ்வாமிக்கானது.  போனமுறை பார்த்த மாதிரியேதான்.  புதுசா ஒன்னும் இல்லை என்பதால்  அப்போ எழுதுன பதிவின் சுட்டியை கீழே கொடுத்துருக்கேன்.  நேரம் இருந்தால் எட்டிப்பாருங்கள்.

http://thulasidhalam.blogspot.com/2014/12/2.html

வாசலில் இருந்த யானைதான் கொஞ்சம் இளைச்சமாதிரி தெரியுது...... ப்ச்....
அடுத்த கோவில் காடுமல்லீஸ்வரர் கோவில். இருட்டிப்போனதால்  போகலை.  நந்தி தீர்த்தக்கோவிலுக்கு எதிர்ப்புறம் இருக்கும் இந்தக் கோவில்கள் எல்லாமே சின்னக்குன்று மேல் வரிசை கட்டி இருப்பதால்   படிகள் ஏறிப்போகும்  வகையில்தான்  இருக்கு!

காடுமல்லீஸ்வரர் பதிவு இங்கே :-)  

 http://thulasidhalam.blogspot.com/2014/12/4.html

ரொம்ப இருட்டுறதுக்கு முன்னால் வீடு போகணும். அதுக்கு முன்னே  நம்ம வசூல்ராஜாவை பார்த்துட்டுப்போயிடலாமுன்னு அடுத்த தெருவுக்குப் போனோம்.  திருப்பதி தேவஸ்தானக்கோவில்தான்.
படிகள் ஏறிப்போகும்போது  இடது பக்கம்  ஸ்ரீ ராமர் சந்நிதியும்,  வலதுபக்கம் ஸ்ரீ க்ருஷ்ணர் சந்நிதியுமா அழகு !  மற்றபடி கோவிலுக்குள் படம் எடுக்கத்தடை.  பெருமாளும் தாயாருமா  தனிச்சந்நிதிகளில் இருக்காங்க. பெரிய திருவடி, பெருமாளை நோக்கி.........

எதுக்கு இப்படிக் கடன் வாங்கிக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு,  முழிச்சுக்கிட்டு (!) நிக்கணுமுன்னு தெரியலை....  அப்படியாவது மனைவி கூட இருக்காளோ ?  அவள் பாட்டுக்கு மலை அடிவாரத்திலும், இவர் பாட்டுக்கு மலையுச்சியிலுமா என்ன வாழ்க்கை? ப்ச்.... இப்படி வெவ்வேற ஊர்களில் கட்டிவிட்டக் கோவில்களில் மட்டுமே இருவரும்  ஒன்னா இல்லேன்னாலும் ஓரிடத்தில்  இருக்காங்க..


கோவில் வாசலில் 'நான்' 

ஏழேகால் மணிக்கு வீடு திரும்பினோம். சுடச்சுட இட்லி ரெடி. பாவம்.....  உடல்நிலை சரியில்லாத  ஓர்ப்படி  சமைச்சு வச்சுருக்காங்க.  கூடவே நாத்தனார் இருந்தது நல்லதாப் போச்சு. 

மச்சினர் பிஸினஸ்  கில்லி !
அங்கே ரெண்டு புடவைகளில் என் பெயர் எழுதியிருந்தது !   மச்சினரின் ட்ரைவர் தேவாதான் ஷிவாஸ் கேலக்ஸியில் கொண்டு வந்து விட்டுட்டுப்போனார். 


தொடரும்.......  :-)


11 comments:

said...

நான் அவ்வப்போது செல்லும் கோவில் ல்க்ஷ்மி நரசிம்மர் கோவில். இங்கு பத்துநாள் வாஹன உற்சவங்கள் நடக்கும்போது கலந்துகொண்டிருக்கிறேன். அதில் ஒரு நாள், சாப்பிட்ட சாப்பாடு உடனுக்குடன் ஜெரிக்கும்படி, அடுத்த அம்மன் கோவில் வாசலில் தேர்த்திருவிழாவிற்கான மேளச் சத்தம்.

said...

அருமை நன்றி

said...

படங்கள் பிரமாதம். சூலத்தில் முகம் சூப்பர்.

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

திருவிழா என்றால் சத்தம் இல்லாமல் என்ன ?

ஸ்ரீ லக்ஷ்மிநரஸிம்ஹர் கோவில் கருவறை வாசல் முகப்பில் தசாவதார வெள்ளி அலங்காரம் அருமை !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஸ்ரீராம்,

அந்த ஐடியா அருமைதான் !

said...

பங்க்ளூர் கோயில்கள்...அம்மன் கோயில் அழகா இருக்கு போனதில்லை.

இங்க அகரா கோயில் போயிருக்கீங்களா துளசிக்கா? பெரிய ஆஞ்சு, பூரி ஜகன்நாதர் கோயில் அந்தக் கோயில் பூரி கோயில் போலவே ஆனா சின்னதா பூரி கோயில் வேலைப்பாடுகளுடன் அழகா இருக்கும்.

அடுத்து அடுத்து கோயில்கள்தான். 6, 7 இருக்கு தமிழ்நாட்டு கோபுரம் பாணி பாலாஜி கோயில் ஒண்ணும் இருக்கு.

கீதா

said...

வாங்க கீதா,

அகரா கோவில் எல்லாம் போனதில்லை. ஒரு முறை விஸ்வஷாந்தி ஆஸ்ரமம் கோவிலுக்குப்போனோம். திரும்பி வரும்போது ஒரு மாருதி தாம் போனோம். பெரிய ஆஞ்சி இருந்தார் !

said...

மூக்குத்தி அம்மன் நல்ல பெயர்.

நரிசனம் பெற்றோம்.

said...

தரிசனம் பெற்றோம்.

said...

வாங்க மாதேவி,

அந்த சூலம் ரொம்பவே அழகு !