Wednesday, April 12, 2023

குடும்பமும் கோவில் தெருவும் கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 35

காலை ப்ரேக்ஃபாஸ்ட் ஆனதும் கிளம்பிட்டோம்.  தினமும் என்ன  வடைன்னு  இருந்துட்டேன்.  இன்றைக்குக் குடும்ப சந்திப்பு. எவ்வளவு நேரம் ஆகும் என்ற விவரம் இல்லாததால் தினேஷ் நம்மை மல்லேஸ்வரத்தில் மச்சினர் வீட்டில் இறக்கிவிட்டால் போதும். 
போய்ச்சேரவே முக்கால் மணி ஆச்சு.  எதிர்பாராத விதமா  என் ஒரே நாத்தனார், சென்னையிலிருந்து வந்துருந்தாங்க. மச்சினர் மனைவிக்கு உடல் நலக்குறைவு. அதனால் உதவிக்கு வந்துருந்தாங்க. நாங்களுமே இதே காரணத்தால்தான் பெங்களூரு வந்ததும் கூட. போனஸ்தான் அந்த லேபக்ஷி !

என் காது அடைஞ்சு கிடக்குன்னு சொன்னேனே.......  அதுலே ஒரு மாற்றமும் இல்லை.  அதுவும் நல்லதுக்குத்தான்னு நினைச்சேன்.  பேசாம சைன் லேங்குவேஜ் கத்துக்கப்போறேன்.  எங்க நியூஸியில் இதுவும் ஒரு அஃபீஸியல் லேங்குவேஜ் தான். ஆமாம்.... நான் மட்டும் கத்துண்டா எப்படி ? என்னோடு பேசறவங்க எல்லோரும் கத்துண்டாத்தானே ....  நடக்கற  காரியமா ?  என்னமோ போங்க.... இப்போதைக்கு உலகம் அமைதியாக இருக்கு !  இருக்கட்டும்.
மேலே படம் : நம்மவரின் தங்கையும் தம்பியும்

நம்ம வீட்டில் இப்போது  குடும்பத்துக்கு மூத்தவர் என்ற  பதவி நம்மவருக்குத்தான் !  அண்ணனைப் பார்த்த 'மகிழ்ச்சியில் ' வீட்டின் பாசமலர்கள் ஊர்க்கதை எல்லாம் அளந்து சந்தோஷமா இருக்காங்க. எல்லாம் காதுலே 'விழுந்த' ஓர்ப்படியின் முகபாவத்துலே இருந்து கொஞ்சம் புரிஞ்சுக்க முடிஞ்சது.... அக்கப்போர்....  அப்ப  நான் ?  முகத்தில் புன்னகை இழையோட (கஷ்டப்பட்டு) சாந்தமா  முகத்தை வச்சுக்கிட்டு  இருந்தேன் :-)
மச்சினர் காய் வாங்கப்போய் வந்தார். ஆஹா..... தெரிஞ்சுருந்தால் கூடப்போயிருக்கலாமே...


சமையல் முடிக்கறதுக்குள்ளே    வெளியே கடைக்குப் போய் வரலாமுன்னு நாங்க கிளம்பினோம்.  மச்சினர் வீட்டில் கார் பார்க்கிங் இடம் கிடையாது என்பதால்,  பக்கத்துலே ஒரு நண்பர் வீட்டாண்டை வண்டியை நிறுத்தி வைக்கறதுதான் வழக்கம்.  வண்டி தேவைப்படும்போது ட்ரைவருக்குப் ஃபோன் பண்ணால், அவர் எடுத்துக்கிட்டு வருவார்.

அதே போல் தேவா வண்டியைக் கொண்டுவந்ததும் நாங்க மூவரும் கிளம்பினோம்.  எட்டாவது க்ராஸில் சேகர் ஸ்டோருக்குப் போறோம். பார்க்கிங்  கஷ்டம் என்பதால்... தேவா எங்களை இறக்கி விட்டுட்டு எங்கெயாவது  போய் நிறுத்திக்குவார். நம் வேலை முடிஞ்சதும்  கூப்பிட்டால் ஆச்சு.  அவுங்களுக்கு இதெல்லாம் பழகிப்போனாலும், எனெக்கென்னவோ சல்யமாத்தான் தெரிஞ்சது. 
ஸ்வச்பாரத் காரணமோ என்னவோ.....    அங்கங்கே சுகாதாரம் பேணல் !

மார்கெட்டாண்டை இறங்கிக்கிட்டோம். முதல் காட்சியே.... ஹைய்யோ!!!
பூஜைப்பொருட்கள், அலங்காரங்கள், சின்ன சிற்பங்கள்னு  கடை முழுக்க கலகலன்னு  இருக்கு.  மயிலை மாடவீதி விஜயா ஸ்டோர்ஸ் போலன்னு  வச்சுக்கலாம்.  ஆனால் விலை கொஞ்சம் அதிகமுன்னு தோணுது இப்போ !





மச்சினர் குடும்பம்  இங்கே  பலவருஷ வாடிக்கையாளர்.  'தேவை !' யானவைகளை வாங்கினேன்:-) ஒன்னரைக்கு வீடு திரும்பி, விருந்து சாப்பிட்டுக் கொஞ்சநேரம் ஓய்வு. இந்த வீட்டில் எனக்குப்பிடிச்சது.... கட்டும்போது வெட்டாமல் விட்டு வச்சுருக்கும் தென்னை !

சாயங்காலமாக் கிளம்பி டெம்பிள் ஸ்ட்ரீட் போறோம். எனக்கு ரொம்பவே பிடிச்ச தெரு ! 

நந்தி தீர்த் கோவிலுக்குப் போக வளாகத்தில் நுழைஞ்சால்...........   ஏகப்பட்ட அகல்கள் ஜ்வலிக்க  லிங்கமும் சிவனுமாக   .........   புதுசா இருக்கே !
இன்றைக்கு கார்த்திக் ஸோமவாரமாம். ஸ்பெஷல் பூஜை !  சூரியக் கேலண்டரைத் தொடரும் நமக்குத்தான் இது ஐப்பசி மாசம். கன்னடர்களுக்கு  சந்திரக் கேலண்டர் (லூனார் )தான்,  என்பதால் அவுங்களுக்கு இப்போ கார்த்திகை மாசம் !

எனக்கும்  இப்படி ஒரு காட்சி இது முதல்முறைஎன்பதால் கண்கள் விரிய ரசிச்சேன். எட்டுக்கைகளுடன் சிவனும்,  எதிரில்  ஒரு யாககுண்டமும் !  
போனமுறை இங்கே நாம் வந்தது 2014 இல். எட்டுவருஷ இடைவெளியில் ஏகப்பட்ட மாற்றங்கள் !! 

இந்தக்கோவில் பற்றிய நம்ம பதிவு இங்கே !

http://thulasidhalam.blogspot.com/2014/12/3.html

நந்தி தீர்த் கோவிலுக்குள் போறோம்.  யூகிச்ச மாதிரியே செல்வச்செழிப்பு கூடியிருக்கு !  எல்லாம் பளபளன்னு .......  அழகோ அழகு ! 



நிம்மதியான தரிசனம் அமைஞ்சது!   

வாங்க... அடுத்த கோவிலுக்குப் போகலாம். தெருப்பெயர் நல்ல தேர்வு !!!!
      
தொடரும்........... :-)




7 comments:

said...

தொடர்றோம் நன்றி

said...

நந்தி தீர்த் கோவில் -- அழகு

said...


நெருங்கிய உறவுகளைச் சந்திப்பது சந்தொஷமான விஷயம்...
அட! மல்லேஸ்வரம் 8 வது க்ராஸ் போனீங்களா....

மார்க்கெட் தெரு...ஆமா விலை கொஞ்சம் கூடுதல்தான். பங்களூர்லதான் இருக்கீங்களா துளசிக்கா? நம்ம மக்கள் இங்க இருக்காங்களே அதான் கேட்டேன். அனுபிரேம், நெல்லை, பானுக்கா, கௌதமன் அண்ணா, ஜி எம் பி சார், நானு...ஆனா ஆளுகொரு பக்கம்...வடக்கு தெற்கு மேற்குகிழக்குன்னு....

கீதா

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க கீதா,

ரெண்டுநாள்தான் பெங்களூருப்பா. ஒருநாள் லேபக்ஷி ஆச்சு. அடுத்தநாள் உறவினர் வீடு !

நீங்க சொன்னாப்லெ எல்லோரும் ஆளுக்கொரு மூலைதான். நம்ம ராமலக்ஷ்மியையும், ஜி எம் பி ஐயாவையும் பழைய பயணங்களில் சந்தித்தோம். ஒருமுறை நம்ம ஹரியண்ணாவையும் ! ஒருமுறை நம்ம ராகவன், இளவஞ்சி, சுதர்ஸன் ஆகியோரையும் !

said...

வாங்க அனுப்ரேம்,

அந்தத் தெருவில் எல்லாக் கோவில்களுமே அழகுதான் !

said...

நந்திதீர்த் கோவில் கண்ணைப் பறிக்கும் அழகுடன் இருக்கிறது.