Wednesday, August 03, 2022

சொந்தமா ஒரு இசைவிழா !

மே மாசத்தை  ம்யூஸிக் மாசமா அறிவிச்சுருந்தது  நியூஸி அரசு.  அங்கங்கே 'பாட்டுக் கச்சேரிகள் '  நடந்ததுன்னாலும்  இந்த கோவிட் காரணம் பெருசா ஒன்னும் பேசப்படலை. நம்மூரில் ரேவதி  பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் ஒரு சின்ன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சு நமக்கு அழைப்பு அனுப்பினாங்க.  தோழியின்  கலைப்பள்ளிதான் இது. பரதநாட்டியம் & பாட்டு சொல்லித் தர்றாங்க. வீக் எண்டுகளில் வகுப்பு !    
கச்சேரி நடக்கும் ஹால், நம்மூர் கிளை நூலகம் ஒன்றில். நிலநடுக்கத்திற்குப் பிறகு கட்டுன  புதிய கட்டடங்களில் ஒன்னு !   இங்கே சின்னதும் பெரியதுமா ரெண்டு ஹால்கள்  உண்டு. வாடகைக்கு எடுக்கலாம்.  கம்யூனிட்டிக்கான நிகழ்ச்சிகளுக்கு வாடகை குறைவாகவும், தனியாரின் நிகழ்வுகளுக்கு வாடகை அதிகமாகவும் நம்ம சிட்டிக் கவுன்ஸில் வசூலிக்குது. மகளின் கல்யாண வரவேற்பு இங்கேதான் நடத்தினோம்..
உள்ளே போனவுடன் கண்ணில் பட்டவை தப்லாக்களும் சிதாரும் ! ஹா.....
இங்கே யார் சிதார் வாசிக்கப்போறாங்கன்னு ....... 

 நம்ம ஃபிஜி இந்திய நண்பர் அவிநாஷ்தாஸ் தான்  ஒரு காலத்தில்  சிதார் வாசிச்சுக்கிட்டு இருந்தார்.  சின்ன இசைக்குழு ஒன்னு தனிப்பட்ட ஆர்வத்தில் நடத்திக்கிட்டு இருந்தார் அப்போ.  மகள்  ஃப்ளூட் வாசிப்பாள் என்பதால் அந்த இசைக்குழுவில் இருந்தாள். 'நம்மவர்' ஆரம்பிச்ச இந்தியன் க்ளப்பின்  ஆரம்ப நிகழ்ச்சியே  இந்திய சுதந்திரப் பொன்விழா கொண்டாட்டம்தான்.  அதுலே  அவிநாஷ் Bபையாவின் இசைக்குழுவினரின் கச்சேரி இருந்தது.  காலப்போக்கில் ஒவ்வொன்னாக் காணாமப்போயிருச்சே ! அப்போ எடுத்த படங்களின் தரம்கூட சரியில்லை என்பது வருத்தமே! 

பாட்டு சொல்லிக்கும் சின்னக்குட்டிகள், நியூஸி தேசிய கீதம் பாட நிகழ்ச்சி ஆரம்பம். நம்ம தோழியும் சிட்டிக்கவுன்ஸிலருமான  டாக்டர் சுநிதா கௌதம்  இசைவிழாவைத் தொடங்கி வச்சாங்க. மாணவர்களின்  வயலின், கீ போர்டு,  வாய்ப்பாட்டுன்னு  சில. 

நம்ம நண்பர் ஜோஷுவா தேவன்பு ( பெங்களூர்க்காரர்)  தப்லா வாசிப்பார். இவரும்   தப்லா சொல்லித்தரும் வகுப்பு நடத்தறார். எல்லாம் வீக் எண்டுகளில்தான்.  கற்றுக்கொள்ள ஆர்வம் இருந்தால் எந்தக் கலையையும் கைவசப்படுத்தலாம்தானே! 

தன்னுடைய மாணவர்கள் இருவரை மேடை ஏத்தினார்.  நல்லாத்தான் வாசிச்சாங்க.


அப்புறம் மூவர் வந்தாங்க. Nelson Myers-Daly , நம்ம  பண்டிட் சௌராஸியா (Pandit Hariprasad Chaurasia )வின் இசையில் மயங்கி அவரையே மானஸிக குருவாக  பூஜித்து, குழலிசைக் கற்றவர்.     சின்மயானந்தா மிஷனின்  அங்கம். Monk Party என்ற இசைக்குழுவை நடத்தறார். உலகெங்கும் உள்ள சின்மயானந்தா மிஷனின்  சபைகளில்  இவருடைய கச்சேரிகள் நடந்துருக்கு ! குழல் மட்டுமில்லாமல்  தப்லாவும், மற்ற இசைக்கருவிகளும் கூட வாசிப்பாராம்.   
Liam Oliver சிதாரும் சாரங்கியும் வாசிச்சார்.  

தப்லா வாசிச்சவர் பெயர்தான் நினைவில் இல்லை.  (அப்ப மத்த ரெண்டு பெயர் எப்படின்னு கேக்கமாட்டீங்கதானே ? இவுங்க நம்ம ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ் என்பதை சொல்லிக்கொண்டு.....)  வேறொரு பதிவில் இவர் பெயரைத் தோழியிடம் கேட்கப்போய் இன்னொரு தோழி உடனே பதில் அனுப்பிவிட்டார். தப்லா வாசிச்சவர் பெயர் Louis Talbot . 

சிதார், சாரங்கி, தப்லா, பாஸூரின்னு அமர்க்களம் போங்க !   நம்மூரில்தான்  இவுங்க இருக்காங்கன்றதே இப்பதான் தெரிஞ்சது. 

அநேகமா கீழே சேர்த்த ஃபேஸ்புக் பதிவின் லிங்கை Copy & Paste பண்ணினால் பார்க்கலாமுன்னு நினைக்கிறேன்.

https://www.facebook.com/gopal.tulsi/posts/pfbid0w9SH38xjrRFoEmZ7eehzDveMHGGcYFEMN7trHm2wDhBnN8Gjv27u9scKPyi7UMhCl

ஒன்னேகால் மணி நேர நிகழ்ச்சி  என்பதால் நேரம் போனதே தெரியலை! 













நம்ம யோகா குழுவினர் சிலரும் வந்துருந்தாங்க.  அப்புறம் எங்கள் 'பேச்சுக் கச்சேரி'யும்  தொடர்ந்தது :-)


7 comments:

said...

உங்களை ஒரு க்ரூப் போட்டோ எடுக்கணும் என்பதற்காக கோபால் சாரின் சேரைப் பிடித்துக்கொண்டு அவரை போட்டோகிராபராக ஆக்கிட்டீங்களே

said...

சிறப்பான இசைவிழாவாக இருக்கிறது. படங்கள் அனைத்தும் அருமை.

said...

பேஸ்புக்கில் பார்த்த உங்கள் நடனம் இந்த நிகழ்ச்சியில்தானா?

said...

அருமயான நிகழ்ச்சி,

ஃபேஸ்புக் லிங்க் - கேட்டேன் துளசிக்கா. நம்மூர் சக்கரவாஹம் ராகம் - ஹிந்துஸ்தானி ஆஹிர் பைரவி? போல இருக்கு

கீதா

said...

வாங்க மாதேவி,

மிகவும் நன்றிப்பா !

said...

வாங்க ஸ்ரீராம்,

ஓ... அது நம்ம யோகா குழுவில் மிட் விண்ட்டர் & முன்கூட்டிய சுதந்திரதின விழா!

said...

வாங்க கீதா,

ஆஹா... அப்படியா ! அவ்வளவு இசை ஞானம் எனக்கில்லையேப்பா ......