Wednesday, June 01, 2022

வருஷம் முடியப்போகுதாம்லெ !

இந்தக் கோவிட் வந்ததால் தள்ளிப்போட்ட பல சமாச்சாரங்களில் எங்க யோகா குழு அங்கத்தின்  புதுவீட்டு கிரஹப்ரவேசமும் ஒன்னு !  இங்கெல்லாம் கிரஹப்ரவேசத்துக்கு மாடும் கன்னுமா எல்லாம்  சிட்டிக்குள் கொண்டுவரமுடியாது.  
அதுக்காக நாம் விட்டுடமுடியுமா ? 

நம்ம வீட்டுக்கு, மகள் வீட்டுக்கெல்லாம் நம்ம சொந்த மாடுகளும் கன்னுகளுமா  'சாஸ்த்ர சம்ப்ரதாயப்படி'  முடிஞ்சவரை எல்லாம் செஞ்சோம், கேட்டோ ! இப்பவும் அடுக்களை ஜன்னல்கட்டையில் நிம்மதியா உக்கார்ந்துருக்காங்க. ஆகி வந்த  மாடுகள் !

எப்போ நிலமை சரியாகுமுன்னு காத்திருக்க முடியுதா ? வீட்டுவரை பூஜை செஞ்சு அவுங்க புது வீட்டுக்குப் போயிட்டாலும்,  நண்பர்களைக் கூப்பிடாதது ஒரு பெரிய மனக்குறை இல்லையா ?  இந்த 2021 முடியறதுக்குள்ளேயாவது  நடத்திப்புடணுமுன்னு ........ நாள் ஒதுக்கியாச்சு !

சிம்பிளான சாப்பாடு, பாட்டு, சின்ன கேம்ஸ்னு ஏற்பாடு. House Warming  you see :-) ரொம்ப மெனெக்கெட வேணாமுன்னு சொல்லிட்டோம்.  பாவ்பாஜி போதாதா என்ன ?  டிஸ்ஸர்ட் வகைகள் வேற இருக்கே! கூடிக்கும்மியடிச்சுட்டு வந்தோம் :-)



வருஷக்கடைசி விஸிட்டாக இருக்கட்டுமேன்னு நாங்க போனது ,  நம்ம நியூ ப்ரைட்டன்  பீச். பொதுவா இங்கே வரமாட்டோம்.  இயற்கையா விடாம, கடற்கரையில் கட்டடமெல்லாம் கட்டிவிட்டுருப்பாங்க. போதாக்குறைக்கு ஒரு  Pier வேற.    அதுலே சீனக்கூட்டம் கூடி தூண்டில் போட்டு மீன் புடிச்சுக்கிட்டும்  பிடிச்ச மீனைச் சுத்தம் பண்ணிக்கிட்டும் இருப்பாங்க.  ஒரே  மணம்தான் போங்க..... அதனால்  அந்தக் குறிப்பிட்ட இடத்துக்குப் போக விருப்பம் இல்லை.  கொஞ்சம் தள்ளி வார்மெமோரியல்  கார் பார்க்கில் கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்தோம். கடற்புறாக்கூட்டம்   வந்து கண்டுக்கிட்டுப்போனாங்க.

போகணுமுன்னு நினைச்சுத் தள்ளிப்போட்டுக்கிட்டே வந்துட்டோமோன்னு  வருஷக்கடைசி நாள்  எனக்கு இந்த ஊரில் கிடைச்சுருக்கும் அண்ணி வீட்டுக்குப் போயிட்டு வந்தோம். நியூஸி  வந்தது முதல் பழக்கம். உள்ளூர் ஹாக்கி டீமில் விளையாடிக்கிட்டு இருந்தவர் அந்த அண்ணன்.  உடல்நிலையில் மாற்றமானப்ப.....   வேற விளையாட்டுக்கு மாறிட்டார். இப்பெல்லாம் கோல்ஃப்தான்.  சீனியர் கோல்ஃபர் போட்டியில் ஜெயிச்சுருக்கார்! அந்தக் காலத்தில்  ஃபிஜி போறதுக்காக கப்பலில் ஏறிய  சிலபல  குஜராத்தியர்கள், தவறுதலாக நியூஸி வந்து இறங்குனது சரித்திரம். அவர்களில் ஒருவர் இந்த அண்ணனுடைய அப்பா ! 
இவுங்க வீட்டில் இருக்கும் விண்டேஜ் வண்டி, இன்னும் நல்லாவே ஓடுது. ஒரிஜினல் இஞ்சின்தான் இப்பவும்  . நேரடியா இங்கிலாந்தில் இருந்து வந்ததாம். 



கொரோனா பலி போட்டதில் எங்க நியூ இயர் கொண்டாட்டமும் ஒன்னு.பாட்டுக்கச்சேரியும் வாண/வான வேடிக்கையுமா இருக்கும்.  ஏற்கெனவே க்றிஸ்மஸ் சமயத்தில்  நடக்கும் ஸாண்ட்டா பரேடுக்கு ஆப்பு வச்சாச்.  இப்ப இதுக்கும். நம்மூரு சிட்டிக்கவுன்ஸில் நடத்தும் வகைகள் இவை.  நடத்தறதுக்குக் காசு இல்லையாம்.  (ஙே..... ) பழியை யார்மேலே போடலாமுன்னு பார்த்தால் வகையா வந்து மாட்டுனது கொரோனாதான்! 

சம்ப்ரதாயத்தை விடவேணாமேன்னு நாங்க, முன் வாசல்  அறையில் விளக்கெல்லாம் போட்டு,  ராத்ரி பனிரெண்டுவரை முழிச்சுருந்து ஆக்லாந்து நகர் புதுவருஷக் கொண்டாட்டத்தை டிவியில் பார்த்தோம்.  இதுலே பாருங்க.... எங்களுக்கு இப்போ சம்மர் என்றதால் டேலைட் ஸேவிங்ஸ் உண்டு. நியாயமான நேரம் இப்ப பதினொன்னுதான்.  நியூஸி டேட் லைனில் இருப்பதால் எதுன்னாலும் நாள் ஆரம்பிக்கிறது இங்கேதானே ! 'ஊருலகத்துக்கு முந்தி எல்லாத்தையும்  செய்யறது நானு'ன்னு ஒரு பெருமை வேற நமக்கு.  ஃபிஜியும் டேட் லைனில்தான் இருக்கு என்றாலும் ட்ராப்பிக்கல் என்பதால் வருஷம் முழுக்க வெயில்தான்.  இந்த வருஷம் முதல் அவுங்களும் டே லைட் ஸேவிங்க்ஸ்னு  நேரத்தை மாத்தி இருக்காங்களாம்.  இது என்னடாப் புதுக்கதைன்னு தோணுது.  எப்படியோ.... 'இனி நாங்களும்  நியூஸிகூடச் சேர்ந்தே நியூ இயர் கொண்டாடுவோம்'னு ஆரம்பிச்சுருக்காங்க......


 
புதுவருஷம் வருதுடான்னதும்  வரவேற்புக்குத் தயாராகி வாசலில் காத்திருந்தான்..... செல்லம்:-) அப்ப மணி ஒன்பதுதான்.....

துல்ஸிவிலாஸில் புதுவருஷ லஞ்ச்.... பேல் பேல்  :-)   சனிக்கிழமை என்பதால் வழக்கம்போல் சாயங்கால ஆரத்திக்குக் கோவிலுக்குப்போய் சாமிக்கு ஹேப்பி நியூ இயர் சொல்லிட்டு வந்தோம்.  வழக்கத்தைவிட இன்றைக்குக் கூட்டம் அதிகம்.


சாமி கும்பிடுவதில்கூட வடக்குக்கும் தெற்குக்கும் வித்தியாசம் இருக்குல்லே ? மறுநாள் (ஜனவரி 2) மார்கழி மாசம் மூலநக்ஷத்திரம் என்பதால் நம்ம பக்கங்களில் ஆஞ்சி பொறந்தநாள்  கொண்டாடுவோம்தானே. அதனால் நம்ம வீட்டு ஆஞ்சிகளுக்கு சிறப்பு வழிபாடு உண்டு. பூஜைக்கான ஏற்பாடுகளைக் கொஞ்சம் செஞ்சு வச்சேன். 


நம்மாள் வந்து பார்த்துட்டு சரின்னுச்சு :-) மறுநாள் சக்கப்ரதமன் நிவேத்யம்.
நம்ம சநாதன் தரம் சபாவில்  ஆஞ்சி பிரதிஷ்டை பண்ணி இருக்கோம்னு சொல்லி இருக்கேனில்லையா..... அவரையும் போய் தரிசனம் செஞ்சுக்கிட்டு வந்தோம்.  காலை பூஜை நடக்கும் சமயம்.  (ஸ்கூல் )மாஸ்டர் ஜகத்சிங் பூஜையை ஆரம்பிச்சுருந்தார்.  நாங்களும் கலந்துக்கிட்டு ஹனுமன்சாலீஸா படிச்சோம்.   சபா கட்டடத்தில் மராமத்து வேலைகள் நடக்குது.  சுத்திவர ஃபென்ஸ் போடறோம். அடுக்களையைப் புதுப்பிக்கறோம்.





இந்த வகையில் ஃபிஜி மக்களுக்கு இருக்கும் ஒற்றுமையைப் பாராட்டத்தான் வேணும்.  'சிறுகக்கட்டிப் பெருக வாழ் ' என்னும்  வகை.   விற்பனைக்கு வந்த  ஒரு ஹாலை எல்லோரும்,  ஆளுக்கு இவ்வளவுன்னு பணம் போட்டு  வாங்கிட்டு, இப்ப நம் தேவையை அனுசரிச்சுக் கொஞ்சம் கொஞ்சமா சரிப்படுத்திக்கிட்டு இருக்கோம். பூஜை சமயங்களில் பத்து இருபதுன்னு  சாமிக்குக் காணிக்கை போடுவதால் அதில் சேரும்  பணமெல்லாம்  ஹாலுக்கான பராமரிப்புச் செலவுக்கு  உதவுது.  ச்சும்மாச் சொல்லக்கூடாது.... ஃபிஜி மக்கள் கடும் உழைப்பாளிகள்.  பெயிண்டிங், மரவேலை, கட்டடம் கட்டுவதுன்னு எல்லா வேலைகளுக்கும் ஈகோ பார்க்காமல்  எப்ப நேரம் கிடைக்குதோ அப்பெல்லாம் வந்து வாலண்டியர் வேலைகளைச் செய்து கொடுப்பாங்க. எங்க பண்டிட் கூட இங்கே  ஜாய்னராகத்தான் ஒரு கம்பெனியில் வேலை செய்யறார்.  அடுக்களைப் புதுப்பித்தல் அவரே !  

(இவ்வளவு ஒற்றுமை நம்ம புள்ளையார் கோவில் பக்தர்களுக்கு இருந்திருந்தால்  எப்பவோ கோவிலைக் கட்ட ஆரம்பித்துருக்கலாம்.....    மன்னிக்கணும். சொல்லாமல் இருக்க முடியலை..... )      

PINகுறிப்பு : 2021 நிகழ்வுகளையெல்லாம்  கூடியவரை ஒருவழியாப் பதிவு செஞ்சுட்டு இப்போ 2022க்குள் வந்தாச் :-)இனி தொய்வு வராமல் பார்த்துக்கணும்   (புதுவருஷத்தீர்மானம் ? )



5 comments:

said...

2021 நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது...... இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. பதிவுகள் தொடரட்டும்.

said...

பல விழாக்களையும் கண்டு கொண்டோம்.
புதுக் கொண்டாட்டங்களையும் காண வருகிறோம்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

இந்த ஐந்து மாதங்களையும் சோம்பல் இல்லாமல் கடக்கணுமேன்னு.... நினைச்சுக்கறேன்.

மனுஷன் என்ன மரமா ? எங்கேயும் போகாமல் ஒரே இடத்தில் இருப்பது மனச் சோர்வைத் தருகிறது என்பதே உண்மை...

சரியா ?

said...

வாங்க மாதேவி,

மிகவும் நன்றிப்பா!

said...

வருஷம் முச்சூடும் நடந்தது எல்லாம் ஒரே மூச்சுல சொல்லி முடிச்சிட்டீங்கக்கா. சூப்பர்.

ஆஞ்சு அழகோ அழகு! ரஜ்ஜுவையும் கண் குளிரக் கண்டாச்சு. வழக்கம் போல ஆராய்ச்சி, வாசல்ல யாரு வராங்கனு பார்க்கறது எல்லாம் ..

துளசிக்கா வெளியில் போகாமல் இருப்பது கஷ்டம் தான். எனக்கும்.

தொடருங்கள் உங்கள் பயணங்கள் படங்கள் வழியாச்சும் பார்த்து ரசித்து சந்தோஷப்பட்டுக்குவோம்.

கீதா