Monday, January 24, 2022

மா(ட்)டாரிகி Matariki

புதுசா இருக்கா ?  ரொம்பகாலமா  இங்கத்து மவொரிகளுக்கிடையில்  கொண்டாடப்பட்டு வரும் விழாதான் இது.  இது அவுங்க புதுவருஷ விழா !  ஆண்டுப்பிறப்பு !

இப்பதான் இதைப்பற்றிய விவரங்கள் சில வருஷங்களாய் வெளிவர ஆரம்பிச்சுருக்கு!

போன வருஷம் கொஞ்சம் பரவலாப் பேசப்பட்டது. இந்த வருஷம்  இன்னும் கொஞ்சம் அதிகமா ...... அநேகமா   வரும் காலங்களில் விஸ்வரூபம் எடுக்குமுன்னு நினைக்கிறேன்.

வருஷப்பிறப்பை விளக்கு ஏத்தி வச்சுக் கொண்டாடும் வகையில்,   நகரின் சில முக்கிய இடங்களை  வண்ண விளக்குகளால் அலங்கரிச்சு இருக்காங்க.  விளக்குன்னு வச்சால் கண்ணுக்கு முன்னால் கலர் பல்புகளால்  ஏத்தி வைக்கிறதில்லையாக்கும்..... எல்லாம் 'பெயின்டிங் தெ டௌன் ரெட் 'னு சொல்லும் விதமா.....   கண்மறைவில் இருந்து வரும் வண்ணங்கள்  பலநிறங்களில் மாறிமாறி வரும் வகையில் ஒரு அலங்காரம். 

இந்த ஒளிவண்ணங்கள் பூத்துவரும் நிகழ்ச்சிக்கு 'டீரமா மாய்  Tirama Mai' என்ற மவொரிப் பெயர் வச்சுருக்காங்க.  நாட்டின் மும்மொழிக் கொள்கையில் மவொரி இடம் பெற்றாலும்..... இந்த மொழிக்குன்னு ஒரு எழுத்துரு இல்லாததால் இங்லிஷ் எழுத்துகளையே பயன்படுத்திக்கிறாங்க. பல தீவு நாடுகளில் இப்படித்தான்  இருக்கு. நமக்கும் படிக்க எளிதாப் போச்சு, பாருங்களேன் !  பேசத்தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லது. கொஞ்சம் மெனெக்கெடணும்.... பார்க்கலாம்..... கிடைக்குதான்னு.....

நமக்கும் மவொரியர்களுக்கும் பலவிதங்களில் ஒற்றுமை இருக்குன்னு ஏற்கெனவே மவொரி கதைகள் சிலதை 'முழி பெயர்க்கும் போது' தெரிஞ்சுக்கிட்டேன்.  கதைகள்  நியூஸிலாந்து புத்தகத்தில் அச்சு வடிவத்தில்  இருக்கு.  இங்கே நம்ம வலைப்பக்கத்திலும் இருக்கு :-)
 (பெயர் 'துளசிதளம்'  தேடினால் கண்டடைவீர்கள். கூகுள் பின்னே எதுக்கு இருக்காம் ? வலையை வீசிப்பாருங்க.... சிக்கும். )

மவொரிகளுக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம்.  அதிலும் கடவுளே அனைத்தையும் படைத்தார். அவருக்கு உதவி செய்யவும், அவரின் கீழ் உலகைப் பராமரிக்கவும்  நிறைய உபகடவுள்கள்/ தேவதைகளையும் உருவாக்கினார்னு சொல்றாங்க.  வானமே தந்தை, பூமியே தாய். அப்புறம் காற்று, தண்ணீர், நெருப்பு, காடு, போர், காலநிலை, நிலநடுக்கம், மிருகங்கள், பறவைகள், இடி மின்னல், சூரியன், சந்திரன், காய்கனிகள், விளைச்சல்ன்னு ஏகப்பட்டத் தனித்தனி டிபார்ட்மென்ட்க்கான கடவுளர்கள் இருக்காங்க. சக்கரைவள்ளிக்கிழங்குக்குக்கூடத் தனிக்கடவுள் இருக்காருன்னா பாருங்க !
போகட்டும்.... இப்போ இந்த வருஷப்பிறப்பு விவரம் பார்க்கலாம்.
ஒன்பது நக்ஷத்திரங்களின் கூட்டம் வானில் தென்படும் காலத்தில்  ஆண்டுப்பிறப்புக்கான ஒருக்கம் நடக்கிறது. ஹா..... ஒன்பது நக்ஷத்திரங்களா ?  இந்த ஒன்பதுக்கும் தனித்தனிப்பெயர்கள்,  அதற்கு உண்டான தெய்வங்கள், அந்த தெய்வங்களுக்கு உரித்தான கடமைகள்,  இவைகள் எப்படி விண்ணுலகையும் மண்ணுலகையும்  நல்ல முறையில் ஆட்சி செய்வதுன்னு பலப்பல சமாச்சாரங்களைத் தெரிஞ்சுக்கும்போது  எனக்குக் கிடைச்சது வியப்பே !  வியப்பைத்தவிர வேறொன்றில்லை !

ஆமாம்.....  நமக்கும் நம்ம ஜோதிட முறையில்  நவக்ரஹங்கள்தானே  மேற்பட்ட வேலைகளை/ கடமைகளைச் செய்கின்றன இல்லையோ ? 

இந்த நட்சத்திரக்கூட்டம், ஜூன்/ஜூலை மாசத்தில்தான் நம்ம கண்களுக்குப் புலப்படும். மவொரி காலண்டரில் o Pipiri ki மாசத்துக்கும்  o Hōngongoi மாசத்துக்கும் இடையில் இருக்கும் காலம்.


மவொரிகளின் கோரிக்கையை அங்கீகரிச்சு இனி மவொரி புத்தாண்டுக்கும்  ஒரு அரசு விடுமுறை உண்டுன்னு , மந்திரி சபையில் முடிவு செஞ்சுருக்காங்க.  சந்திரக்காலண்டரை அனுசரிச்சு வர்றதால் வெவ்வேற தேதிகளில் 29 June to 11 July 2021.  வருதேன்னு அடுத்த முப்பது ஆண்டுகளுக்கான தேதி கூட முடிவு பண்ணியாச்சு.  இந்த வருஷத்துக்கு Matariki Fri, 24 Jun 2022. வருஷத்துக்குப் பத்து நாட்களா இருந்த அரசு விடுமுறைகள் இனிமேப்பட்டுப் பதினொன்னு ! 

பெரிய  திருவிழாதான் இது. வருஷப்பிறப்பு நாளுக்கு ரெண்டு வாரம் இருக்கும்போதே விழா ஆரம்பிச்சுருது. ரெண்டு வாரம் முடிஞ்சு அடுத்தநாள்  வருஷம் பொறக்குது. அரசு விடுமுறை!  முன்னேற்பாடுகளுடன் அரசு நடத்தும் வாணவேடிக்கையோடு விழா முடியும். ஆகமொத்தம் பதினைஞ்சுநாள் திருவிழா! 

இந்த விழா இல்லாமல், கடந்த நாப்பத்தியேழு வருஷங்களா இன்னொரு தனிப்பட்ட விழாவும் இதே ஜூன் மாசத்தில் நமக்கும் உண்டு.  வெளிநாட்டு வாழ்க்கைன்னு ஆரம்பிச்ச இந்த நாப்பது வருசங்களில் நம்ம விழாவுக்கே அரசு விடுமுறை பலசமயம் வாய்ச்சுருதுன்னா பாருங்க !  மாட்சிமைதாங்கிய மஹாராணியம்மாவின் பொறந்தநாளுக்கான அரசு விடுமுறை சமயமா அமைஞ்சுருக்கு !8 comments:

said...

அருமை நன்றி

said...

சூப்பர்! தகவல்களும் படங்களும் நல்லாருக்கு. இந்த வருஷமும் இப்ப ஒவ்வொண்ணா உங்களுக்குத் தொடங்கிருச்சு போல கொண்டாட்டம். அடுத்து ஜூன்ல ஒரே கொண்டாட்டம்தான் ஏஞ்சாய் மாடி..!!!!!

கீதா

said...

மவோரி விழாக்கள் நன்றாக உள்ளன.
ஒன்பது நட்சத்திரங்களின் ஆட்சி எம்முடன் நன்கு ஒத்துத்தான் போகிறது.

said...

தகவல்கள் அனைத்தும் நன்று. படங்களும் சிறப்பு.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க கீதா,

வழக்கம்போல் இருக்கும் விழாக்கள்தான். ஆனாலும் இப்போ கோவிடின் புது அவதாரங்கள் வெவ்வேற முகம் காட்டிக்கிட்டு வர்றதால் அப்பப்ப அரசு என்ன தீர்வு சொல்லுதோ அதற்கேற்ப ஆடிக்கிட்டு இருக்கோம்.

ட்ராஃபிக் லைட் சிஸ்டமாம். க்ரீனே இல்லாத ட்ராஃபிக் லைட். ஆரஞ்சுலே இருந்த நாங்கள். நேத்து ராத்ரி 12 மணியில் இருந்து சிகப்புக்கு முழுநாடும் மாறியாச். நாட்டுக்குள்ளே வந்துட்டானாம் அந்த ஓமிரான். ஏமிரான்னு கேக்கணும். அவன் வருகையை முன்னிட்டு எல்லோரும் மெடிக்கல் ஷாப் ஷாப்பிங் முடிச்சாச். பாராஸிட்டமால், Ibuprofen, Cough Syrup, hand lotion, N95 Mask, Strepsils எல்லாம் ரெடி. வந்துட்டா, ஒரே அமுக்தான் :-)

said...

வாங்க மாதேவி.

அந்த நவகிரஹங்களில் கூட ஏழுதான் ப்ரதானம். பாக்கி ரெண்டுக்கு சின்னக்கடமைகள். நம்ம ராஹூ கேது போல !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !