Friday, January 07, 2022

விட்டதைப் பிடிக்கலாமா?

போனவருஷம் எத்தனை பதிவுன்னு போய்ப் பார்த்தால்  வெறும் பத்து :-(

என்ன நடந்துச்சுன்னு சொல்லாமலேயே வருஷம் போனால் நல்லாவா இருக்கு ?  அதான்  முக்கியமா என்னென்ன நடந்துச்சுன்னு ( நிலநடுக்கம் & கோவிட் தவிர) கோடி காமிச்சுட்டு நடப்புக்கு வரலாமுன்னு.....
வீட்டுக்குள்  அலங்காரம் பண்ணலாமுன்னு ஆரம்பிச்சு ஜனவரியில் பொங்கலாச்சு.  அதுக்கு ரெண்டுநாள் முதலே  நம்ம ஆஞ்சிக்குப் பொறந்தநாள் கொண்டாட்டம்.  அப்புறம்  பொங்கல் சிறப்பு உடையலங்காரம் நம்ம பசங்களுக்கு!

நம்ம பதிவர் சங்கீதா ராமசாமிதான் உடைகளை அனுப்புனாங்க. ஜன்னுவுக்கு மட்டும்தான். கிச்சாவுக்கு ரெடிமேட் கிடைக்காது. குட்டியூண்டா இருக்கானே !  (வளரவே இல்லை பாருங்க ! ) நானே தைச்சுப்போடறதுதான் வழக்கம். அப்படியே ஆச்சு .


வீக் எண்ட் வரட்டுமுன்னு காத்திருந்து நம்ம புள்ளையார் கோவில் சத்சங்கத்துப் பொங்கல் விழாவில் பெரியவளா லட்சணமா அடுப்பைப் பத்தவச்சுப் பாலை ஊத்தினேன். அரிசியும் சேர்த்தேன். கூடவே வெல்லமும் நெய்யும் :-)
மாசக்கடைசியில் தைப்பூசத்திருவிழா!

பால்குடமும் காவடியுமா அமர்க்களம்தான் போங்க !  முக்கிய விருந்தினராக நம்ம நியூஸி நாட்டு  அமைச்சர் (நம்ம தொகுதிதான் ) வந்துருந்தாங்க. கொஞ்சம் பொங்கல் பற்றித் தனியா விளக்கம் சொன்னதும்,  அவுங்க பேச்சில் பொங்கலின் சிறப்பைப் பற்றிச் சொன்னாங்க. (என்ன இருந்தாலும் அரசியல் வியாதி இல்லையோ ! )

ஃபிப்ரவரியிலே இன்னொரு சமாச்சாரமா மகளின் திருமணநாள் &  நம்ம பொறந்தநாள். அடுத்தடுத்த தினங்களில் என்பதால்  மகளுக்கு முன்னுரிமை கொடுத்தேன். இங்கே புதுசா ஆரம்பிச்சுருந்த Catnap Cafe வில் போய் அங்கிருக்கும் பூனைக்குட்டிகளைக் கொஞ்சிட்டு அங்கேயே காஃபி & கேக்  சாப்ட்டுட்டு, இன்னொரு இடத்தில் போய் ஐஸ்க்ரீம்னு ........... 
ஒரு அம்பதறுபது பூனைக்குட்டிகள் !  ஜாலியோ ஜாலி :-)
 


பரிசு ஒன்னும் இல்லைன்னு சொல்லக்கூடாது.....     ஒரு கார் வாங்கினோம்.  பஸ்ஸுலே போய் கார் டெலிவரி எடுத்துக்கிட்டு வந்தோம். நமக்கு சீனியர் சிட்டிஸன் கார்டு கொடுத்துருக்காங்க. இதைக் காமிச்சு பேருந்துப் பயணம் இலவசமாப் போகலாம். 
இங்கே எங்கூரில் வருஷாவருஷம் Culture Galore  என்ற விழா நடக்கும். ஏகப்பட்ட Ethnic Communities  இருக்கும் நாடு என்பதால்  பலவிதமான கலைகலாச்சார நிகழ்ச்சிகளை ஒருக்கிணைச்சு நடத்துது நம்ம சிட்டிக் கவுன்ஸில்.  அங்கே நாம் போனப்ப, அவுங்கவுங்க மொழியில் எப்படி வரவேற்பீங்கன்னு  எழுதச் சொன்னாங்களா..... நான் தமிழ் மொழியை அறிமுகப்படுத்திட்டு வந்தேன்.

ஒன்னுமே நடக்கலைன்னு நினைச்சு இப்போப் பார்த்தால் ஏகப்பட்டவை நடந்துருக்கே !

மீதி இன்னொரு பதிவில் பார்க்கலாம் !

22 comments:

said...

வாவ், நன்றி

said...

மகிழ்ச்சியாக சிறப்பாக கொண்டாடி இருக்கிறீர்கள்.  டொயோட்டா கார் என்றதும் எனக்கு நினைத்தாலே இனிக்கும் படமும் ரஜினியும் நினைவுக்கு வந்தார்கள்!

said...

சிறப்பு. ரசித்தேன்.

said...

அட்டகாசம் துளசிமா.

ரஜ்ஜு+ இண்டர் நேஷனல் உடை, முக்கியமா பாலி உடை ரொம்பப்
பிடிச்சது.

said...

கொண்டாட்டங்கள் அனைத்தும் சிறப்பு. எங்கும் மகிழ்ச்சி பரவட்டும்.

said...

சிறப்பான நிகழ்வுகள். பூனை பாஷை அற்புதம்!

said...

சிறப்பான நிகழ்வுகள். அழகான படங்கள். பூனை பாஷை அற்புதம்

said...

வாழ்க தமிழ்...

said...

துளசிக்கா ஆஹா பூனைங்க கூட கொஞ்சிட்டு வந்தீங்களா...நம்ம ரஜ்ஜுவை பார்த்துவிட்டேன் ரொம்ப நாளாச்சு!!! பசங்க ட்ரெஸ் சூப்பர். எப்படி ஜன்னுக்கு இப்படி அழகா பொருந்திய உடை செம இல்ல!!?

நல்ல நிகழ்வுகள். நம்ம ஊர்ப் பசங்க அங்க போயும் காவடி எல்லாம் தூக்குறாங்களே!

படங்கள் எல்லாம் அழகு. கார் சூப்பரா இருக்கு. வாழ்த்துகள்!

கீதா

said...

மகிழ்ச்சியான நிகழ்வுகள்.

said...

கிச்சாவுக்கு நீங்க தைச்ச ட்ரெஸ் சூப்பரா இருக்கு அக்கா. எப்படி மினி எல்லாம் இவ்வளவு அழகா தைக்கறீங்க! எல்லாத்துலயும் கலக்கறீங்க!

கீதா

said...

வாங்க விஸ்வநாத்,

வருகைக்கு நன்றி !

said...

வாங்க ஸ்ரீராம்,

நினைத்தாலே இனிக்கும் பார்த்தபடம்தான். ஆனால் அந்த டொயோட்டாகார் நினைவுக்கு வரலையே.......... ப்ச்....

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா!

வருகைக்கு நன்றி !

said...

வாங்க வல்லி,

வருகைக்கும் ரசனைக்கும் நன்றிப்பா !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

மகிழ்ச்சி பரவட்டும்... ததாஸ்து !

said...

வாங்க பானுமதி,

ரஜ்ஜுவிடம் பூனை பாஷை பற்றிச் சொன்னால்.... எங்க ஸ்கூலில் வேற சிலபஸ் என்கிறான் :-)

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்,

நன்றியும் அன்பும்!

said...

வாங்க கீதா.

நம்ம ஜன்னு ரொம்பவே அதிர்ஷ்டக்காரி. எதுவுமே அட்டகாசமா அமைஞ்சுருது. இப்பெல்லாம் அப்பாவே பார்த்துப் பார்த்து வாங்கித் தர்றார்! அவளுக்கு நானும் தைச்சுப்போடறேன். கிச்சாவுக்கு ரெடிமேட் கிடைக்கவே கிடைக்காது. பாவம் குழந்தை.... ச்சும்மா விட மனசு வர்றதில்லை. பிறப்பால் அவள் சீனத்தி, இவன் ப்ரிட்டிஷ் :-)

பசங்க பஜனையும் நல்லாவே பாடறாங்க ! இதோ இந்தப் பொங்கலுக்கும் காவடியும் பால்குடமும் உண்டு !

said...

வாங்க மாதேவி.

ரசிப்புக்கு நன்றிப்பா !

said...

Good Blogger

said...

வாங்க தமிழ் கவிதைகள்.

நன்றி !