நல்லவேளை மழை இல்லை. வெயிலும் வந்துருக்கு. பீச்சில் நல்ல கூட்டம்.... இன்னும் இருபத்திநாலு மணி நேரம்தான் இங்கே இருக்கப்போறோம் என்பதால் கொஞ்சம் ஊருக்குள் போய் சுத்திப் பார்த்துட்டு வரணும்.
காலையில் தயாராகி, கீழே ரெஸ்ட்டாரண்டுக்குப்போய் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சோம். ராவோடராவா தரையெல்லாம் சுத்தப்படுத்தி இருக்காங்க. எல்லாம் பளிச் !
மூணுநாளா அடிச்சுப் பேய்ஞ்ச மழையில் குளிரில் நடுங்கிக்கிட்டு இருந்த செல்லங்கள் எல்லாம் நிம்மதியா அங்கங்கே படுத்து சூரியக் குளியலில்:-)
வைஷ்ணவத்துக்கு ஜெகத்துக்கே நாதர் இருந்தால் சைவத்துக்கு லோகத்துக்கே நாதர் இருக்க வேணாமோ? இப்போ நாம் போகும் கோவில் ஸ்ரீ லோகநாத் மந்திர். புபனேஷ்வரில் பார்த்த பக்தர்கள் (தோளில் காவடியுடன் நடைப்பயணத்தில் வர்றவங்க ) அவுங்க கொண்டுவரும் தீர்த்தத்தை இங்கே இந்தக் கோவில் சிவனுக்குத்தான் அபிஷேகம் பண்ணறாங்க.
பீச் ரோடுவழியா அந்தக் கோவில் பார்க்கிங்கில் கொண்டுவிட்ட ஆட்டோக்காரர், 'வெயிட் பண்ணவா'ன்னு கேட்டார். கொஞ்ச நேரம் கோவிலைச் சுத்திப் பார்க்கலாமேன்னு வேணாமுன்னுட்டோம். இறங்கி கோவில் முகப்பு அலங்கார வாசலாண்டை போனால்.... கோவிலுக்குள் முழுசும் வெள்ளக்காடு! இவ்ளோ தீர்த்தமா அபிஷேகம் பண்ணி இருப்பாங்க?
இந்தக்கோவில், ஜகந்நாத் கோவிலைவிட வயசில் மூத்தது. திரேதா யுகத்து சமாச்சாரம். நம்ம ஸ்ரீராமன், தன்கையால் பிரதிஷ்டை செய்து பூஜித்த சிவலிங்கம் இங்கே இருக்கு. கங்கை, தலையில் உக்கார்ந்துருப்பதால் சதா அபிஷேகம்தான். இதனால் சிவன் எப்பவும் தண்ணீருக்குள் உக்கார்ந்துருப்பாராம். (ஜலகண்டேஸ்வரர் ? )
ஆனால் இப்ப என்னன்னா....முக்கால்வாசிக் கோவிலே தண்ணிக்குள்ளே இருக்கே....
இந்தப் பக்கங்களில் கோவில்களின் கருவறைகள் எல்லாம் தரை மட்டத்துலே இருந்து கீழே இறங்கிப்போய் தரிசிக்கும் வகையில்தான் அமைச்சு இருக்காங்க. நேத்து போன 'மா ராம சண்டி கோவில்'கூட இப்படித்தானே இருந்துச்சு!
ஸ்ரீ ஜகந்நாத் கோவிலை மட்டும் ரொம்ப உயரமா பூரா நிலத்தையும் உயர்த்திட்டுத்தான் கட்டுனாங்களாம்! வெள்ள பாதிப்பு இருக்கக்கூடாதுன்னு அரசர் இந்த்ரத்யும்னன் போட்ட கணக்கு !
நீந்திப்போய் தண்ணிக்குள் இருக்கும் சிவனைத் தரிசிக்க நம்மால் முடியாதுன்றதால் திரும்பிப்போகலாமுன்னு பார்த்தால் வண்டி ஒன்னும் கிடைக்காதுன்னார் அங்கிருந்த ஒரு நபர். இந்த களேபரத்தில் லோகநாத் கோவிலைக் கிளிக்க மறந்து போச்சு. தண்ணீர் பார்த்த அதிர்ச்சிதான்...
அப்புறம் வலையில் தேடி ரெண்டு படம் போட்டுருக்கேன்.
கூகுளாண்டவருக்கு நன்றி. ஆனாலும் நாங்க பார்த்ததைவிடப் படத்துலே தண்ணீர் கொஞ்சம் குறைவுதான்...
'அட ராமா' வெயிட்டிங் போடவான்னு கேட்ட ஆட்டோக்காரரை அனுப்பிட்டோமேன்னு கார்பார்க்கில் இருந்து சாலையைத் தேடி நடந்தால் .... ஆ.... நாம் வந்த ஆட்டோக்காரர் நம்ம வரவை எதிர்பார்த்து நிக்கிறார்!! எப்படியும் இதுகள் வரத்தான் போகுதுன்னு தெரியாமலா இருக்கும் :-)
இப்பத் திரும்பிப்போக டபுள் ரேட் ! வேற வழி! ஜகந்நாத் கோவிலாண்டை இறக்கி விடச் சொன்னோம். அதான், அந்த பக்கத்துச் சந்தாண்டை.
இறக்கி விட்ட இடத்துலே பார்த்தால்.... நம்ம இஸ்கான் கோவில் ! க்ருஷ்ணனே நம்மை வரவச்சுட்டான். குறுகலா இருந்த மாடிப்படியேறி மேலே போனால்.... பெரிய ஹாலின் ஒரு பக்கம் சந்நிதி. அழகான மண்டபத்தில் ஸ்ரீ கிருஷ்ணனும் ராதையும். கிருஷ்ணனுக்கு வலப்புறம் ஸ்ரீ சைதன்யா. (ஒருவேளை பூரி என்பதால் கிருஷ்ணனும் அண்ணன் தங்கையுமோ என்னவோ?) அங்கே இருந்த பட்டரைக் கேட்டுருக்கலாம். அவர் கண்மூடி ஜெபிச்சுக்கிட்டு இருந்ததால் தொந்திரவு பண்ணலை.... மண்டபத்தையொட்டி உயரமான பீடத்தில் ஒரு தொட்டியில் 'நான்' !
சந்நிதிக்கு எதிரில் வழக்கமா இருக்கும் ஸ்ரீல பிரபுபாதா அவர்களின் உருவச்சிலை மட்டுமில்லாமல் இன்னொரு சிலையும் வச்சுருக்காங்க. சச்சிதானந்த பக்திவிநோத தாக்கூர். ஸ்ரீ சைதன்யா மஹாப்ரபுவின் உபதேசங்களையும் பக்திமார்கத்தையும் பரப்பியவர். கௌடியா வைஷ்ணவம் என்ற பிரிவை உண்டாக்கியவர். இவர் மறைவுக்குப்பின் இவருடைய புதல்வர் பக்திசித்தாந்த சரஸ்வதி அவர்கள்(சந்யாசாஸ்ரமப் பெயர்) கௌடியா மடத்தை உருவாக்கினார். இந்தக் கோவிலே கௌடியா மடத்தைச் சேர்ந்ததுதான்.
சந்நிதியைச் சுற்றி வரும்போது என் கேள்விக்கு விடை கிடைச்சது.
நாங்கள் கொஞ்ச நேரம் அமைதியாக, சந்நிதி முன்னால் உக்கார்ந்து தியானம் செஞ்சுட்டுக் கீழே படி இறங்கி எதிர்வாடையில் இருக்கும் கௌடியாமடத்துக்குள் போனோம். முற்றத்தில் அழகான மாடத்தில் 'நான்' ! (வரவர தற்பெருமை அதிகமாகிக்கிட்டே போகுதே.... பெருமாளே..... )
உள்ளே கோவில் இருக்கு. சந்நிதியில் மூவர். சைதன்யா, க்ருஷ்ணன், ராதை ! சந்நிதிக்கதவு மூடியிருந்தாலும் கம்பி வழியா தரிசனம் ஆச்சு.
'நம்மவர்' செல்லில் விவரம் பார்த்தவர் 'பக்கத்துலே ஸ்வர்கத்வார்னு ஒன்னு இருக்கு'ன்னார். ஆஹா.....
அஞ்சு நிமிட் நடக்கணுமாம். அதனால் என்ன சொர்கவாசல் பார்க்க ஆசையாத்தானே இருக்கும், இல்லையா? என்ன கோவிலுன்னு தெரியலையேன்னு ஆர்வமா நடந்து போனா.... அட! உண்மையிலேயே எனக்கு ரொம்பப் பிடிச்ச இடம்தான்!
கடற்கரையை ஒட்டியே பீச்சில் அமைச்சுருக்காங்க.... பூரி நகரின் சுடுகாடு ! இந்த இடத்து பீச், ஸ்வர்கத்வார் பீச். ரொம்பப் புனிதமான இடம். இந்த இடத்தில் சமுத்திர ஸ்நானம் செய்வது உத்தமம். ஒவ்வொரு அமாவாசைக்கும் நம்ம ஜகந்நாத் இந்தக் கடற்கரைக்குத்தான் வந்து போறாராம் !
காசியைப்போல்.... இதுவும் ஒரு புண்ணிய பூமி. இங்கே எரியூட்டும் உடம்பின் ஆத்மா நேரடியா ஸ்ரீ வைகுண்டம் போயிருமுன்னு ஒரு நம்பிக்கை இருப்பதால், அக்கம்பக்க கிராமங்களில் இருந்தும் உடல்கள் வந்துக்கிட்டேதான் இருக்குமாம். சிதையின் வெளிச்சம் இரவெல்லாம் இருக்கும்னு சொல்றாங்க. எரிக்கக் கொண்டுவரும் ஒரு உடலுக்குப் பூரி முனிசிபாலிட்டி வசூலிக்கும் சார்ஜ் எவ்ளோ தெரியுமா? வெறும் முப்பத்தியொன்பது ரூபாய்தான் !
ஆஹா.... இவ்ளோதானான்னு நினைச்சுக்கப்டாது..... இதைக் கட்டுனதும் உங்களுக்கு அனுமதி கிடைக்கும். அவ்ளோதான். மத்தபடி எல்லா இடங்களையும் போலவே 'ஸ்கை இஸ் த லிமிட் !' ( காசியில் பார்த்த பேரம் படியாத உடல் தண்ணிக்குள்ளே கிடந்தது நினைவுக்கு வருதே....)
நாம் அங்கிருந்த சொல்ப நேரத்தில் ரெண்டுமூணு பேர் சொர்கத்துக்குப் போய்க்கிட்டு இருந்தாங்க. ஸ்மசானத்துலே ஒரு காளி கோவில்கூட இருக்கு! 'அவளுக்கு'ப் பொருத்தமான இடம்தான் !
எரிஞ்சுக்கிட்டு இருந்த ஒருவரின் உறவினர்கள் கூட்டம் ஒன்னு பேசுறது யதேச்சையாக் காதில் விழுந்தது.... ஏகாதசி மரணம், த்வாதசி தகனம்னு.... லேசா விசாரிச்சேன்.... இன்றைக்கு துவாதசியாமே! பயணத்துலே நாள் கிழமை ஒன்னும் சரியாத் தெரியறதில்லைப்பா.....
அப்ப நேத்து ஏகாதசியா? பெருமாளும், ஜயவிஜயர்கள் அரக்கர்களாப் பிறந்தபோதும் எவ்வளவு கருணை செஞ்சுருக்கார் பாருங்க..... தினம் தினம் கோபுரதரிசனம் கண்டு கோடி கோடிப் புண்ணியம் சேர்த்துக்கிட்டவருக்கு ஏகாதசி மரணம் அமைஞ்சது அவன் பெருங்கருணைதானே ! ஆனாப் பாருங்க..... தகனம் இல்லைன்னு நினைக்கிறேன்.... புதைக்க இடம் கேட்டு 'தவம்' இருப்பதாக வலைச்சேதி ஒன்னு கிடைச்சது, இன்றைக்குக் காலையில்.... எப்படியோ நல்லது நடந்தாச் சரி....
உள்ளே மணலில் இறங்கி எல்லாம் நடக்கலை. முகப்புக் கட்டடத்தாண்டை நின்னு கொஞ்சம் க்ளிக்கிட்டு வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடிச்சோம்.
இதே பீச் ரோடு வழியாகவே போகலாம்.... நியூ மரீன் ட்ரைவ் ரோடுன்னு பெயர். இந்த ரோடும், ஸ்வர்கத்வார் ரோடும் சந்திக்கும் இடத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவுக்கு ஒரு சிலை வச்சுருக்காங்க. அழகான சிலைதான்!
இந்த ஜங்ஷன் நிறைய கடைகளோடு கலகலன்னு இருக்கு. பீச்சில் எக்கச்சக்கமான சிறு தள்ளுவண்டி வியாபாரங்கள்.... இன்னும் கடைகளைத் திறக்கலை.... பயணம் வந்த சனமும் தண்ணீராண்டை நிக்கறாங்க...
மணி பத்தரைதான் ஆச்சு.....கையில் கெமெரா இருப்பதால் இப்பக் கோவிலுக்கும் போக முடியாது.... அறைக்குப் போய், அடுத்து என்ன செய்யலாமுன்னு பார்க்கலாம்.
வெயில் வந்ததால்...வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பிக்கிட்டு இருக்கு.....
இன்னும் எட்டுநாளில் இந்தியாவை விட்டுக் கிளம்பறோம். பூரியில் இருந்து சென்னை போனதும் செய்ய வேண்டிய வேலைகள், கடமைகள் என்னென்ன, அதுக்கு எவ்ளோ நேரம், நாள் ஒதுக்கணும்னு 'பேசி'க்கிட்டு இருந்ததில் நேரம் ஓடியே போச்சு. சட்னு ஒரு முடிவுக்கு வர முடியுதா? வாண்ட் லிஸ்ட் பெருசா இருக்கே எனக்கு....
பகல் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டுக் கோவிலுக்குப் போகலாமுன்னு ரூம் சர்வீஸ் மெனு பார்த்தால் ஒன்னும் சரிப்படலை. ஸ்ப்ரிங் ரோலும், சிப்ஸும் சொன்னோம். வந்தது. பூரிக்குள் காய்கறி வச்சுச் சுருட்டிப் பொரிச்சுருக்காங்க. ஸ்ப்ரிங் ரோலாம்! போகட்டும்....
பூரியில் பூரி சாப்பிடலை என்ற குறை வேணாம்.... கேட்டோ :-)
தொடரும்......... :-)
நண்பர்கள் அனைவருக்கும் உங்கள் துளசிதளத்தின் அன்பான தீபாவளி வாழ்த்து(க்)கள்!

14 comments:
செல்லங்களின் படங்கள் கவர்கின்றன!
wall painting ..மிக அழகு மா
ஸ்ரீ லோகநாத் மந்திர்,.....அடடா எவ்வொலோ தண்ணி
இஸ்கான் கோவில் ..சுத்தம் அழகு ..
தங்களுக்கும் எங்களின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மா
உங்களிருவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.
நியூசிலாந்திலா இந்த முறை தீபாவளி?
கோவில் கோவிலாகச் சுற்றும் உங்களுக்கு தீபாவளி நல் வாழ்த்துகள்
துளசி அக்கா குடும்பத்தாருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :) ரஜ்ஜூவுக்கும் வாழ்த்துக்களை சொல்ல சொன்னாங்க அவரோட ரிலேட்டிவ்ஸ் ஜெசி ,மல்ட்டி
ஜலகண்டேஸ்வரர் ,கிருஷ்ணா ராதா,ஸ்வர்கத்வார், கண்டுகொண்டோம்.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்துகள்.
வாங்க ஸ்ரீராம்,
பாவம் செல்லங்கள். காற்றிலும் மழையிலும் நடுங்கியபடி பீச் வாக்கிங் வேற !
வாங்க அனுப்ரேம்,
வாழ்த்துகளுக்கு நன்றி !
வாங்க நெல்லைத்தமிழன்.
வாழ்த்துகளுக்கு நன்றி !
எப்பவும் நியூஸியில்தான் தீபாவளி. அத்தி பூத்தாப்போல் சில சமயம் இந்தியாவில் அமைஞ்சுடறது !
வாங்க ஜிஎம்பி ஐயா.
இல்லாதபோதுதான் அருமை தெரியும்.... எங்களுக்குக் கோவில் :-)
வாழ்த்துகளுக்கு நன்றி !
வாங்க ஏஞ்சல்,
வாழ்த்துகளுக்கு நன்றி ! புதுசா மல்ட்டி வந்துருக்காப்ல?
எப்போ? ஜெஸ்ஸிக்கும் மல்ட்டிக்கும் ரஜ்ஜுவின் அன்பு இத்துடன். இப்பெல்லாம் ரஜ்ஜு எங்கோ வேலைக்குப் போறான்னு நினைக்கிறேன். காலையில் நாலு மணிக்கே பிடுங்கி எடுத்து அஞ்சு மணிக்குச் சாப்பாடு போட வைக்கிறான். அப்புறம் வீட்டைவிட்டுப் போனால் ராத்திரி பத்தரை, பதினொன்னுக்கு வீடு திரும்பல். என்ன ரகசிய வாழ்க்கைன்னு தெரியலை.... சித்தரோன்னு எனக்கு ஒரு சம்ஸயம்....
வாங்க மாதேவி,
வாழ்த்துகளுக்கு நன்றி !
அக்கா மல்ட்டி 2016 இல் எங்க வளர்ப்பு மகளாக வந்தாள் :)
ரஜ்ஜூவ follow பண்ணி பாருங்க :) எங்கயாச்சும் குடும்பம் செட்டப் செஞ்சிட்டானோ என்னவோ :)
ஹாஹா இங்கேயும் 5 மணிக்கு எழுப்பி பெர்ட் வாட்சிங் போயிடுவா ஜெஸ்ஸி :)
@ஏஞ்சல்,
மல்ட்டியோட படம் ஒன்னு போடுங்கப்பா ! ஜெஸ்ஸிகூட இணக்கமா இருக்காளா?
Post a Comment