Friday, December 25, 2015

இத்தைப் பார்றா....இன்னும் பிள்ளை பிறக்கலை(யாம்!)(க்றிஸ்மஸ் ஸ்பெஷல் !)

நேத்து க்றிஸ்மஸ் ஈவ்.  எங்கூர்லே கடந்த 68 வருசமா இந்த நாளுக்குப் பாடும் கொயர்   இசைக் குழு ( ஒரு குழுன்னு சொல்ல முடியாது. இங்கிருக்கும் பலதரப்பட்ட இசை குழுக்கள் சேர்ந்தது )மாலை 9 மணிக்கு இசை நிகழ்ச்சிக்கு வழக்கம்போல் ஏற்பாடு செஞ்சுருக்கு.


 நாம் கொஞ்சம் லேட்டத்தான் போய்ச்சேர்ந்தோம்.  தூரத்தில் வண்டியைப் பார்க் செய்யும்போதே  'ஜாய் டு த வொர்ல்ட்' கேக்குதுன்னார்  நம்மவர்.

லேட்டிமர் சதுக்கத்தில்தான் நிகழ்ச்சி. நல்ல கூட்டம்.  நாம் அங்கே இடம் தேடும் சமயம் சைலன்ட் நைட் பாடறாங்க. கொஞ்சம் ஒரு வீடியோ க்ளிப்  இங்கே ஃபேஸ்புக்கில் நேத்து இரவு  திரும்பிவந்ததுமே போட்டு வச்சேன்.

https://www.facebook.com/gopal.tulsi/videos/10205513465098564/?pnref=story

 தெரிந்த பாட்டுகள்தான் பலதும் என்றதால்  ரசிக்கமுடிஞ்சது. ஒன்பது மணிக்கு ஆரம்பிச்சு சரியா பத்தேகாலுக்கு முடிச்சுட்டாங்க.

வானில் தூக்கி நிறுத்திய நக்ஷத்திரத்துக்குக் கொஞ்சம் விளக்கு போட்டுருக்கலாம்.

இந்தச் சதுக்கத்துக்கு நேரெதிரிதில்தான் நம்மூர் அட்டைக்கோவில்.  அங்கே போய் பார்த்துட்டு சாமி கும்பிட்டு வரலாமுன்னு போனோம். இசை நிகழ்ச்சிக்கு வந்தவங்களில்  பாதிப்பேர் இப்படி.பெரிய க்றிஸ்மஸ் மரம் நல்ல அலங்காரத்தில்.

 உள்ளே லைட்டிங்ஸ் அழகா அமைச்சிருப்பதால் அட்டைக்கோவில் பற்றிய வெறுப்பு கூட அவ்வளவா மனசில் தோணலை எனக்கு. ஏறக்குறைய அன்பென்னும் வடிமா மாறிக்கிட்டு இருந்தேன், வீட்டுக்கு வரும்வரை :-)
கொஞ்சம் படங்களை க்ளிக்கிட்டு நேட்டிவிட்டி ஸீன் எடுக்கும்போதுதான் க்ரிபில் அம்மா அப்பா இருக்காங்க. குழந்தையைக் காணோம்!

ஐயோ  குழந்தை எங்கேன்னு  என்னையறியாமல் கொஞ்சம் சத்தமாக் கேட்டுட்டேனோ ........   பக்கத்துலே நின்னுக்கிட்டு இருந்த இன்னொரு பெண்மணி, ' இன்னும் பிறக்கலை. மணி இப்போ பத்தரைதான்'னாங்க. நல்லொரு பொட்டிச் சிரி :-))))  டைம்லி ஜோக் :-)


அப்புறம் பிறந்துருப்பாரென்று  நம்புவோமாக! நண்பர்கள், வாசகர்கள்  அனைவருக்கும்  துளசிதளம் , க்றிஸ்மஸ் வாழ்த்துகளைச் சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறது!

மெர்ரி க்றிஸ்மஸ்!


இனி புது வருசத்தில் சந்திப்போம் !5 comments:

said...

பிள்ளைத்தாச்சியை இப்படி அம்போன்னு உட்டுட்டு வரலாமா?

said...

சுவாரஸ்யமாய் எழுதியிருக்கிறீர்கள். கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்

said...

அழகுப் படங்கள். ஆனந்தம் தெறிக்கிறாது. பிள்ளை பொறந்திடுச்சானு எதுக்கும் ஒரு எட்டுப் போய்ப் பார்த்துரட்டு வாங்க துளசி.
உங்களுக்கும் ,கோபாலூக்கூம், ரஜ்ஜுவுக்கு இனிய க்றிஸ்மஸ், புத்தாண்டு வாழ்த்துகள்.

said...

Merry Christmas! Happy New Year 2016! :)

said...

நண்பர்களுக்கு நன்றிகள்.


புதுவருசம் பொலிவாக இருக்கணும்.

புள்ளைத்தாய்ச்சி, பெற்றெடுத்து டிஸ்சார்ஜாகி வீட்டுக்குப் போயிட்டாங்க(ளாம்!)