Friday, February 07, 2014

ஒரு நடை காசிக்குப்போகலாம், வாறீகளா?


"கடைசி ஆசை என்ன?"

மனம் யோசிக்கும் முன் வாய் சொன்னது   "காசி".

"சரி. போயிடலாம்.சிங்கப்பூரில் இருந்து டில்லி இல்லைன்னா க(கொ)ல்கத்தா  ஃப்ளைட் இருக்கு. அங்கிருந்து  லோகல் ஃப்ளைட் வாரணாசிக்கு. ஓக்கேதானே?"

"இன்னும் ஷார்ட் கட்டா ஒரு ரூட் இருக்கே!"

"எப்படி எப்படி?"

"சிங்கையில் இருந்து சென்னை.  அப்புறம் அங்கிருந்து  டில்லியோ இல்லை கொல்கத்தாவோ?"

"சரியாப்போச்சு. இப்படிச் சுத்தி வளைச்சுப் போகணுமா?"

"ஆமாங்க. இந்தியான்னதும், சென்னையில் கால்குத்தாமல் போய் வர மனசு சம்மதிக்கலையே:("

"அப்படீன்னா  ஒரு வாரத்தில் போய் வரமுடியாது. லீவெல்லாம் என்னன்னு பார்த்துட்டுச் சொல்றேன். ரெண்டு வாரம் போதும்தானே?"

பரபரன்னு  என் மனசு கோட்டை கட்ட ஆரம்பிச்சது. அடுத்த செஷனுக்குள்ளே பக்காவா ப்ளான் பண்ணிக்கணும்.

"சென்னையில் குடும்பத்தையும் நண்பர்களையும் சந்திக்கணும்.  காஞ்சிபுரம் போய்  இந்தமுறை ரெண்டு நாள் தங்கி, தொண்டைநாட்டு திவ்ய தேசங்களை தரிசிக்கணும். அப்புறம்  இதுவரை  போக சான்ஸ் கிடைக்காமல் இருக்கும் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை முக்கியமாக பூரி ஜகந்நாத் தரிசனம்.  காசியில் அதிகநாள் தங்கி அக்கம்பக்கம் எல்லாம் ஒன்னுவிடாமல் பார்க்கணும். அலஹாபாத் த்ரிவேணி  சங்கமம்  இன்க்ளூடட்.  இவ்ளோதூரம் போயிட்டு  அப்படியே  இன்னும் கொஞ்சதூரத்தில் (??!!) இருக்கும் இன்னொரு மோட்சபுரி  அயோத்யாவையும் தரிசனம் செஞ்சுக்கணும். திரும்பவும் சென்னை வந்துட்டு  சிலநாட்கள்  ஓய்வெடுத்துக்கிட்டு  பேசாம சிங்கை வந்து  சீனுவைக்கண்டுக்கிட்டு நியூஸி வந்துடலாம்."

திட்டத்தைக் கேட்டதும் கோபால் 'ஆடி'ப்போயிட்டார்.  அடக்கடவுளே.... சும்மா  இருக்காமல் (என்னை அறியாமல் ) வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டேனா:(

பாவம்:(  அவரைச் சொல்லி என்ன பயன்?  எனக்குக் கொஞ்சம்(?) உடம்பு சரி இல்லை. தினமும் காய்ச்சல் வரும்.  மூணு மணி  நேரம் இருக்கும். போகும்.  பொது மருத்துவர் , பலமுறை  ரத்தப் பரிசோதனைகள் செய்து பார்த்தும், தன்னால்  ஆகாதுன்னு  மருத்துவமனைக்குக் கையைக் காமிச்சுட்டார். நான் சொல்லி இருக்கேன்ல,  எங்க ரீஜன் முழுசுக்கும் ஒரே ஒரு ஆஸ்பத்திரிதான். அதுவும் அரசாங்கம் நடத்துதுன்னு.  அங்கே கூப்பிட்டாங்க.  ஒரு மூணு மாசம் எக்ஸ்ரேக்கள், ஸிடி ஸ்கேன்கள், எம் ஆர் ஐகள் அது இதுன்னு இடைவிடாத பரிசோதனைகள். எங்கூர் ஆஸ்பத்திரியில் உள்ள  எல்லா விதமான மெஷீன்களுக்குள்ளூம் புகுந்து புறப்பட்டேன். நியூக்ளியர்  பாடி ஸ்கேன்  என்று கூட ஒன்னு!

ஒவ்வொரு சோதனை முடிஞ்சதும்  ஒரு ஸிடி கொடுத்துருவாங்க. ஒரு சின்ன லைப்ரரி வைக்கும் அளவுக்கு  இப்ப  நம்மிடம் இருக்கு:-))  எனக்கு என்ன பிரச்சனைன்னு  எனக்கும் தெரியாது அவுங்களுக்கும் தெரியாது!  இன்னும் புதுசா எதாவது மெஷீன் ஆஸ்பத்திரிக்கு  வந்துருக்கான்னு கூடக் கேட்டுருக்கேன் எனக்கான மருத்துவ  நிபுணரிடம்.

ஒரு வழியா  ஒரு லிம்ப் நோட்,  அளவில் பெருசா வளருதுன்னும் அது புற்று நோய்  சம்பந்தமுள்ளதா இருக்கலாமோன்னும் யூகம்.  அதுக்கு ஒரு பயாப்ஸி செஞ்சு  புற்று இல்லைன்ற குட் நியூஸ் கொடுத்த கையோடு,   அந்த வளர்ச்சியைத் தடுக்க  மருந்து எடுத்துக்கணுமுன்னு  சொன்னார் மருத்துவர்.  ஆஹா நோ ஒர்ரீஸ்ன்னு சொன்னதும் மருந்து வகைகளை  வீட்டுக்கு  அனுப்பினாங்க.  மயக்கம் போட்டு விழாத குறை.  பதினேழு மாத்திரைகள் . ஒரே சமயத்தில் முழுங்கணும்.

முதல் பத்து நாட்கள்  மருந்தின் வீரியத்தாலும் உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் போனதாலும்  இப்பவோ எப்பவோ என்ற நிலைக்குப் போனதும் கோபால் பயந்துட்டார்.  கடைசி ஆசை என்னன்னு கேட்டது அப்போதான்.
பிறகு  மருத்துவர் வேற மருந்துகளை மாத்திக்கொடுத்தார். எண்ணிக்கை என்னவோ அதே தான்:( அதிகம் பிரச்சனை இல்லாமல் ஆனது. இதுக்கிடையில் ஒவ்வொரு முறை மருத்துவரைப் பார்க்கப்போகும் முதல் நாள் ரத்தப் பரிசோதனைக்குப்போய் வரணும். மாசத்துக்கு மூணு நாலு முறை.







கோபாலுக்கு பயம் தெளிய ஆரம்பிச்சது. ஆனால் கைகேயிக்குக் கொடுத்த வாக்கை  கேன்ஸல் செய்ய முடியுமோ?
வார்த்தை தவறி விட்டாய் கண்ணப்பான்ற குற்றச்சாட்டை  தினமும் தாங்க  திடமனசு வேணுமே!  இப்படித்தான் ஆரம்பிச்சது நம்ம காசிப் பயணம்.



வருசாந்திர லீவும்  கூடவே இன்னும்  சிலநாட்களும் சனி ஞாயிறுகளுமா  கூட்டிப்பெருக்கி  மூணரை வாரம் என்று முடிவாச்சு. ஒருமாதிரியா இதைச் சரி செஞ்சு ஏர்லைன்ஸ் டிக்கெட்டுகளையும்  தங்குமிடங்களையும் தேர்ந்தெடுத்து  தேவையானவைகளைச் செஞ்சு முடிக்கணும்.  முதலில் நம்ம ராஜலக்ஷ்மிக்கு  ஹாஸ்டல் கிடைக்கணுமே!  வழக்கமான இடத்தில்  போன ஜனவரியிலேயே புக்கிங்  முடிஞ்சு போச்சு.  கடைசியில் செயிண்ட்  க்ளாஸ் அமைஞ்சது.






கிறிஸ்மஸ் தினம் காலை  நியூஸி ஒன்பது மணிக்கு விமான நிலையம்போய்ச் சேர்ந்தோம். ஸ்மாட்ர்ட்கேட்ஸ்  வச்சுருப்பதால்  ஆஸி அண்ட் நியூஸி  குடிமக்கள்  வரிசையில் நின்னு கவுண்ட்டர் ஆஃபீஸரைப் பார்க்க வேண்டியதோ, பாஸ்போர்ட்டில்  அவுங்களிடம் ஸ்டாம்ப் வாங்கிக்க வேண்டியதோ இல்லை. எல்லாம்  மெஷீன் செஞ்சுருது. Departure card formalities ரொம்பவே எளிமைப்படுத்திட்டாங்க.  பாஸ்போர்ட் நம்பரை எழுதினால் போதும். பயணியின் கையொப்பம் கூடத்  தேவை இல்லையாம். செல்ஃப் சிங்கை வழியாகச் சிங்காரச்சென்னை. இருபத்தியிரண்டு  மணி நேரம் ஆச்சு சென்னையில் நம்ம தங்குமிடத்தில் போய்ச் சேரும்போது.

கூடவே வாங்க.  என்னதான் ஆச்சுன்னு பார்த்துடலாம். ஓக்கேவா?

தொடரும்........:-)

PIN குறிப்பு:  படங்கள்  சிங்கை விமான நிலையம் சாங்கியில் பார்த்த காட்சிகளில்  சில. Peranakan Museum  கடனுதவி செய்த பொருட்கள் இவை.



















39 comments:

said...

பூரண நலத்துடன் இருப்பார் அம்மா... தொடர்கிறேன்...

said...

ஒரு நடை காசிக்கு......

பயணத்தில் நானும் தொடர்கிறேன்.

காசியிலிருந்து திரும்பியபோது நீங்கள் பேசியது நினைவில்.....

said...

Teacher,

Take care of your health.
Thanks to Gopal sir.(sponsorship courtesy)!
Am ready to travel along!

Regards,
Ezhilarasi Pazhanivel

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்


விடிய விடிய ராமாயணம் கேட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பான்னு சொன்னது நினைவுக்கு வருது:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பயணம் முடிவானதும் உங்க காசி பதிவுகளையும் நம்ம முத்துலட்சுமியின் காசியையும் விழுந்து விழுந்து வாசிச்சேன்:-)

said...

வாங்க எழிலரசி பழனிவேல்.

ரொம்ப மகிழ்ச்சி. எதுக்குக்ம் ஒரு ஸ்வெட்டர், ஷால் எடுத்துக்குங்க. அங்கே குளிர்காலம்.

said...

நீங்க காசிக்கு போகிறோம் என்று சொன்ன பொது,

நானும் கூட வரலாமா என்று கேட்கவேண்டும் என நினைத்தேன்.

ஆனா கேட்கவில்லை.

இப்பொழுது உங்க கூட வருகிறேன்.

சுப்பு தாத்தா.

said...

துள்சிக்கா.. மொதல்ல உடம்பைப் பார்த்துக்கோங்க.

கூடவே வர்றேன்.. காசியில் கட்டிக்கிட்ட புண்ணியத்தில் பங்கு போட்டுக்க :-))

said...

அருமையான தொடக்கம் !! ஜாடிகள் சூப்பர் !!
take care of your health Thulasi .

said...

உங்கள் தளத்தை தொடர்ந்து வாசிப்பவள் நான் ஆனால் பின்னூட்டம் இடுவது மிகவும் குறைவு ... எப்படித்தான் இவ்வளவு சுவாரஸ்யமாக பயணக்கட்டுரை எழுதிகிறீர்கள் என்று தினம் ஆச்சரியப் படுவேன்... நானும் பயணப் பிரியை என்பதால் உங்கள் கட்டுரைகள் வழியே நானும் பயணித்துக்கொண்டே இருக்கிறேன்..
இனி காசியும் உங்கள் தயவால் கண்டு விடுவேன் :) .... தொடர்ந்து வருவேன்...

said...

விதி யாரை விட்டது? காசியைப் பற்றி நல்லதை மட்டும் எழுதுங்கள்.

said...

காசிக்கு வர நானும் தயார். ஒரு பைசா செலவில்லாமல் உடல் நோகாமல் உட்கார்ந்த இடத்திலிருந்தே உலகத்தைச் சுற்றிவருகிறோம் உங்கள் எழுத்துக்கள் மூலம். நன்றி டீச்சர். இருவரின் உடல்நிலையையும் கவனித்துக்கொள்ளவும்.

said...

சின்னச் செய்திகள் சொல்லும் படங்கள் சிருங்காரமாய் உள்ளது.

நேரம் இருக்கும் போது வெள்ளை அடிமைகள் மின் நூலை வாசித்துப் பாருங்கள்.

http://freetamilebooks.com/ebooks/white-slaves/

said...

பூரண சுகமடைய வேண்டிக்கொள்கிறேன்..
முடியாததைச் சொல்லும்பொழுதும் அருமையாக எழுதி இருக்கிறீர்களே! படங்கள் அழகு, பகிர்விற்கு நன்றி!

said...


உங்கள் பதிவை பார்த்தவுடனேயே படித்து விட்டேன்.

// எனக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கும் தெரியாது அவுங்களுக்கும் தெரியாது! இன்னும் புதுசா எதாவது மெஷீன் ஆஸ்பத்திரிக்கு வந்துருக்கான்னு கூடக் கேட்டுருக்கேன் எனக்கான மருத்துவ நிபுணரிடம். //

உங்கள் பதிவில் இந்த வரிகளையும், அடுத்து வந்த வரிகளையும் படித்தவுடன் என்ன எழுதுவதென்றே எனக்கு தெரியவில்லை.

said...

ரீச்சர்,

முதலில் பிறந்த நாள் வாழ்த்துகள். சேட்டில் சொன்னேன். வந்துதான்னு தெரியலை.

ஒவ்வொருத்தருக்கா உடம்புக்கு வருதே. பார்த்துக்குங்க.

கோபால் சார் இளைச்சு பிட்டா இருக்கார். வாழ்த்துகள்.

யூஎஸ் தொடர் எப்போ ஆரம்பிக்குது? :)

said...

புது மிஷினா? இப்ப தான் கோவையில் தயாரிக்கிறார்களாம்....அதெல்லாம் தேவைப்படாது,கவலைப்படாதீர்கள்.

said...

வாழ்த்துகள் துளசி.மறுபிறவி எடுத்ததற்கு. காசிப் புண்ணியம் எல்லாம் எங்களுக்கும் நீங்கள் போகும்போதே வந்துவிட்டது.

said...

teacher,
take care of your health,
i m thought that why u have not called me before leaving india, now i got answer from "oru nadai kasai poolamam " - good take care definitely you will come with good health along gopal sir again in near future to india we will meet in Chennai
thanks
yours
ananthu

said...

நான் போக வேண்டிய இடத்தில் காசி இருக்கு.. அதனால் நான் ரெடி :-)

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

நீங்களும் அக்காவும் போய் வந்த இடத்துக்கு நாங்க போகுமுன் உங்கள் ஆசிகளைப் பெறத்தான் வந்தோம்.

பேச்சு சுவாரசியத்தில் கூடவாங்கன்னு சொல்ல விட்டுப்போச்:-)))

said...

வாங்க சசி கலா.

ஸ்பெல்லிங் மிஷ்டேக்கு இல்லைன்னு நம்பறேன்:-))))

said...

வாங்க சாந்தி.

ஆஹா..... புத்தக வெளியீட்டுடன் பூனை(ப்பெயரும்) வெளியே ஓடிப்போச்சா!!!!

வெரி குட்.

எதுக்கும் ஒரு ஷாலும் ஸ்வெட்டரும் எடுத்துக்குங்க. லேசாக் குளிர் இருக்கு அங்கே!

said...

தகவலுக்கு நன்றி D D

said...

வாங்க காற்றில் எந்தன் கீதம்.

வணக்கம். நலமா?

முதல் வருகைக்கும் தொடர்ந்த வாசிப்புக்கும் நன்றீஸ்.

பயணம் உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லதே!

said...

வாங்க கீதமஞ்சரி.

புலம்பல்களைச் சொல்லவும் உங்களையெல்லாம் கேட்க வைக்கவுமா இருக்கேனோன்னு ஒரு பயம்தான்.

ஆர்ம்சேர் ட்ராவலர்ஸ் கைடு என்பதில் மகிழ்ச்சியே.

ஆதரவுக்கு நன்றிகள்.

said...

வாங்க ஜோதிஜி.

கட்டாயம் வாசிப்பேன். இப்போது உண்மையிலேயே நேரப்பிரச்சனை அதிகம்.

உடல்நிலை காரணம் (டைம் மேனேஜ்மெண்ட் சரிவரலை:

said...

வாங்க தேன்மதுரத் தமிழ் கிரேஸ்.

எவ்வளவு அழகான பெயர்!

வணக்கம். நலமா?

அன்புக்கு நன்றி.

said...

வாங்க தமிழ் இளங்கோ.

உடம்புன்னு இருந்தால் எதாவது சுகக்கேடு வரத்தானே செய்யும்? இதுவும் கடந்து போகுமுன்னு இருக்க வேண்டியதுதான்.

என்ன ஒன்னு..... நம்முடைய வழக்கமான செயல்களுக்குக் கொஞ்சம் பாதிப்பு உண்டு.

தங்கள் அன்புக்கு நன்றி.

said...

வாங்க கொத்ஸ்,

வாழ்த்துகளுக்கு நன்றி.

கணினி நேரம் இப்போ குறைஞ்சு போச்சு. ஆனாலும் பொழுது விடிஞ்சதும் 'ஆன்' பண்ணி வச்சுருவேன்:-)

அப்பப்போ உடம்புக்கு வர்றது சாமி அனுப்பும் எச்சரிக்கைக் கடிதம்:-)

போயிட்டுப்போகுது போங்க:-)

யூ எஸ் தொடர் எழுத இப்பதான் டிக்கெட்டுக்கு பார்த்துக்கிட்டு இருக்கோம். ஸ்பெஷல்ஸ் வரும்போது 'சட்'னு கோபாலுக்கு சட்னு லீவு எடுக்க முடியாது:(

எப்ப வருவேன்னு எனக்கே தெரியாது. ஆனால் வருவேன்:-)

said...

வாங்க குமார்.

ததாஸ்து!

'அப்படியே ஆகுக!'

said...

வாங்க வல்லி.

இந்த அன்புக்கு என்ன கைமாறு !!!

நன்றீஸ்ப்பா.

said...

வாங்க அனந்து.

அடுத்தமுறை கட்டாயம் சந்திப்போம்.

நம்பிக்கைதான் வாழ்க்கை, இல்லையோ?

அன்புக்கு நன்றி.

said...

வாங்க கிரி.

சான்ஸ் கிடைச்சால் விடாதீங்க.

வாழ்வில் ஒருமுறை தரிசிக்க வேண்டிய இடமே!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

அன்னப்பறவையா இல்லையேன்னு இப்போதைக்கு ஒரு கவலை:(

said...

நலம்பெறவேண்டுகிறேன்.

காசி பயணத்தில் தொடர்கிறேன்

said...

படங்களைக் காட்டிப் பதிவை சிறப்பாகக் கொண்டு வந்துள்ளீர்கள். யாவும் நலமடைய தொடர்கின்றேன்

said...

பூரணநலத்துக்கு பிரார்த்தனைகள் துளசிம்மா.என்னது சென்னைக்கு வந்தீர்களா?ஒரு கால் பண்ணக்கூடாது?

said...

உடல்நலக் குறைவிலும் எல்லா இடத்திற்குப் போகணும் என்று போய்வருகிறீர்களே, அந்த மனோதிடம் எனக்கும் வரவேண்டும் என்று சிங்கை சீனுவிடம் அடுத்தமுறை போகும்போது பிரார்த்தித்துக் கொள்ளுங்கள், துளசி!