Monday, January 30, 2012

கப்பலும் கண்டெய்னர்களும் (கப்பல் மினித்தொடர் 4)

மறுநாள் ஜெயராமனும் சரவணனுமா வீட்டுக்கு 'சொல்லிக்கிட்டுப் போக' வந்தாங்க. அப்ப ஒரு ஃப்ளவர் வாஸ் (ரெண்டடி உசரம்) எனக்குப் பரிசாக் கொண்டு வந்துதந்தார் ஜெயராமன். வியட்நாமுலே வாங்குனதாம். ப்ளேனில் கொண்டு போக வசதி இல்லை. உடைஞ்சு போயிரும். உங்க வீட்டுலே எங்க நினைவா இருக்கட்டுமுன்னார். அதான் டிவி இருக்கே நினைவுக்குன்னா.,..... கேட்டால்தானே?

அங்கங்கே சேகரிச்ச நல்ல பொருட்களைக் கொண்டு போக முடியாதுன்ற நிலையில் மற்றவர்களும் ஏதோ வந்த விலைக்குக் கொடுத்துட்டாங்கன்னு சொல்லி வருத்தப்பட்டார். செலவுக்குக் காசு வேண்டி பொருட்களை விற்கவருபவர்களிடம் இந்த அடகுக் கடைக்காரர்கள் அடாவடி பேரம் பேசுவதும் இப்படித்தான்., எங்கூர் சூதாட்ட விடுதிக்குப் பக்கத்திலும் இந்த அடகுக்கடைகள் உண்டு. ஆடுபவர்கள் அவசரக் காசு பார்க்க சரியான இடம் அதுதான். சுற்றுலா வருபவர்கள் கூட நகைகளை இப்படி அடமானம் வச்சுட்டுத் திருப்பாமல் போயிடுவாங்க. அதெல்லாம் அப்புறம் ஒரு ஏழெட்டு மாசம் கழிச்சு ஏலத்துக்கு வரும். இப்படி அவசரக் காசுக்காக அலையும் இடங்களில் துறைமுகம் இருக்கும் பேட்டையும் ஒன்னு.

துறைமுக நகரங்களில் 'பலான' தொழில்களுக்கு எப்பவுமே கொஞ்சம் கூடுதலான கிராக்கி. தண்ணீரிலேயே பலமாதங்கள் பயணப்பட்டுவரும் கடலோடிகளில் பலர் பலவிதமான பசிகளில் வாடி இருப்பதும், கரை சேர்ந்தவுடன் சிலபல வழிகளில் தாற்காலிக விருந்துக்குப் போவதும் உண்டுதான். கப்பல்வரவைக் காத்து நிற்கும் பாலியல் தொழிலாளர்களும் காசு பார்க்க நேருவது அப்போதுதானே.

ஒரு சமயம் பாலியல் தொழிலாளி ஒருவருக்கு, கொரியன் மாலுமி 'சர்வீஸ் சார்ஜா' அம்பதாயிரம் கொரியன் வொன் கொடுத்துட்டுப் போயிருக்கார். அம்பதாயிரமுன்னதும் அந்தப் பெண்ணுக்கு உடம்பெல்லாம் ஆடிப்போச்சு. இவ்ளோ பெரிய தொகை இதுவரை கிடைச்சதில்லை என்ற பரவசத்தில் தூக்கம் பிடிக்கலை. அந்தக் காசை மறுநாள் பேங்குலே கொண்டு மாத்தறதுக்குள்ளே அது உள்ளுர்க்காசு எவ்வளவா இருக்குமுன்னு தெரிஞ்சுக்காட்டா தலையே வெடிச்சுடும் போல இருந்துருக்கு. கையில் காசு வந்தவுடன் என்னென்னெ செய்யணுமுன்னு மனக்கணக்குப்போட்டுப் பார்த்துருக்காங்க. தாங்க முடியலை. அர்த்த ராத்திரியில் பேங்கின் அவசரச்சேவை எண்ணைக் கூப்பிட்டு 'அம்மாம் பெரிய தொகை'க்கு நியூஸி டாலர் எவ்ளோ வருமுன்னு ஆசையா விசாரிச்சு இருக்காங்க. கணக்குப் போட்டுப் பார்த்துட்டு சொன்னாங்களாம் முப்பது டாலரும் சொச்சமும்! பல வருசங்களுக்கு முன் ஒரு சமயம் உள்ளூர் பத்திரிகையில் வந்த சேதி இது.

அடுத்தநாள் காலையிலே கிளம்பிருவோம். முகம் கோணாமல் இத்தனை மாசம் உபசரிச்சீங்கன்னார். இதென்னங்க பெரிய விஷயமுன்னு சொன்னாலும் எங்களுக்கும் ஏதோ சொந்தம் வீட்டுட்டுப் போறதுபோல் மனம் கலங்கி இருந்துச்சு. கண்காணாத தேசத்தில் இருக்கோம். நம்ம மக்களைப் பார்த்தால் சொந்தமுன்னுதானே தோணுது, இல்லீங்களா?

கிறைஸ்ட்சர்ச்சுக்கு என்னைக்கு விமானம் ஏற வர்றீங்கன்ற விவரத்தை டிமருவில் இருந்து புறப்படுமுன் ஃபோனில் சொல்லுங்கன்னோம். நாங்க மெட்ராஸ் வந்தா கட்டாயம் சந்திக்கணுமுன்னு விலாசம் எல்லாம் எழுதிக் கொடுத்துட்டுப் போனாங்க.

நம்ம ஊரில் இருந்து தெற்கே பயணப்பட்டால் ஒரு 160 கிமீ தூரத்தில் கிழக்குக் கடற்கரையில் இருக்கு இந்த டிமரு என்னும் ஊர். துறைமுகம் இருக்கும் நகர். இதை சரக்குகள் ஏத்தி இறக்க மட்டுமே பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க. முன்னொரு காலத்தில் திமிங்கில வேட்டைக்கான whale Stationகளில் இதுவும் ஒன்னு. சமீபகாலமாக திமிங்கில வேட்டை கூடாதுன்னு நாங்க தடை கோரிக்கிட்டு இருக்கோம். ஆனாலும் இந்த ஜப்பான் நாட்டுக்காரர்கள் கேக்கமாட்டேங்கறாங்க:( இப்போ டிமரின் ஜனத்தொகை 27 ஆயிரம். இந்தத் துறைமுகம் கட்டறதுக்கு முன்னே.... அந்த வழியாப்போன நிறையக் கப்பல்கள் தரை தட்டி உடைஞ்சுக்கு. அப்படி கடற்பாறைகள் தண்ணீருக்கடியில் ஓசைப்படாமல் உக்கார்ந்திருக்கும் இடம்.

குளிர்ந்து போன ஒரு எரிமலையின் Mt Horrible volcano குழம்பு சிந்துன இடம்தான் இப்போ ஊர். எங்கூர் போல எங்கெங்கு காணினும் சமதரையா இல்லாம ஏத்தமும் இறக்கமுமா இருக்கும். சரித்திர முக்கியத்துவம் உள்ள ஊர். வெள்ளையர் இங்கு குடியேறுமுன்பே மண்ணின் மைந்தர்களான மாவொரிகள் (கிபி1400) அங்கே இருந்துருக்காங்க. இந்த ஊர் டி ம ரு என்பதே மாவொரிகள் வச்ச பெயர்தான். Te Tihi-o-Maru என்று இருந்தது வெள்ளையரின் நாக்குலே விழுந்து இப்போ டிமருன்னு மருவியிருக்கு.

நியூஸியின் தெற்குத்தீவைச் சுத்திப் பார்க்கவரும் பயணிகள் எங்க ஊரில்(கிறைஸ்ட்சர்ச்) இருந்து (சினிமாப் புகழ்) க்வீன்ஸ்டவுனுக்குப் போகணுமுன்னாலும் இல்லே உலகின் தென்கோடி நிலம்வரை போய்ப் பார்க்கணுமுன்னாலும் இந்த ஊரைக் கடந்துதான் போகணும். இந்த ஊரில் இருக்கும் ரோஸ் கார்டனும், ம்யூஸியமும் தெற்குத்தீவில் மூணாம் இடத்தைப் பிடிச்சு வச்சுருக்கு! குட்டியூண்டு ஏர்ப்போர்ட் கூட இங்கே இருக்கு.

ஒரு நாலு நாளில் அங்கிருந்து தொலைபேசி, ஊரைவிட்டுப் புறப்படப் போறோம். ஒரு பெரிய வேன் ஏற்பாடு செஞ்சுருக்காங்க. பத்தரைக்கு உங்கூர் விமான நிலையத்துக்கு வந்துருவோம்ன்னு சரவணன் சொன்னார். கோபாலுக்கு ஆஃபீஸில் முக்கிய வேலை இருந்ததால் நான் மட்டும் விமான நிலையம் போய் அவுங்களைப் பார்த்துப் பேசிட்டு வழி அனுப்பிட்டு வந்தேன். நியூஸி அனுபவங்கள் அவுங்க வாழ்க்கையில் முக்கியமானதாகக் கூட இருக்கலாம். கப்பலை வி(த்து)ட்டுப் போறதுன்னா சும்மாவா?

இனிமே கப்பல் வாழ்க்கை வேணாம். வேற வேலை பார்த்துக்கப் போறோமுன்னு எல்லோரும் கோரஸாச் சொன்னாங்க. ஆனால்...இதுகூட ஒரு பிரசவ வைராக்கியம்தான்:-)
சில வருசங்களுக்குப் பிறகு நம்ம துறைமுகத்துலே ஓப்பன் டே வச்சு ஊர்மக்களை வாவான்னு கூப்பிட்டு, அங்கே வேலைகள் எப்படி நடக்குது என்னென்ன வசதி இருக்கு என்றெல்லாம் காமிச்சாங்க. கப்பல் ஆசையில் அதையும் போய்ப் பார்த்து வந்தோம். கண்டெயினர் டெர்மினலில் இருக்கும் ஆயிரக்கணக்கான கண்டெய்னர்களை கணினி எப்படிக் கண்டுபிடிச்சு அந்தந்தக் கப்பலில் ஏத்துதுன்னு பார்த்து அம்பரந்து போயிட்டேன். பெரிய பெரிய க்ரேன்கள் நிமிசத்துலே அம்மாம் பெரிய இரும்புப்பெட்டியை அலேக்காத் துக்கிக் கப்பலில் அடுக்கி விட்டுருது
அப்போ நம்ம வீட்டுச் சாமான்கள் ஒருநாள் இப்படி இங்கே வந்து நிக்கப்போதுன்னு கனவுகூடக் காணலை. ரெண்டரை வருசம் முந்தி ஒரு இடமாற்றம் வந்துச்சுன்னு சாமான்செட்டுகளைக் கண்டெய்னரில் ஏத்தி அனுப்புனோம். ரெண்டரை மாசத்துலே சென்னைத் துறைமுகத்துக்கு வந்துருச்சு. நம்ம ஏஜண்டு எங்க ரெண்டு பேருக்கும் ஒரு நாள் பாஸ் ஒன்னு வாங்கித்தந்து ஏகப்பட்ட முன்னறிவிப்புகள் எல்லாம் சொல்லித் துறைமுகத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனார். அதுலே ரொம்ப முக்கியமானது கேமெரா கொண்டுவரக் கூடாது:(

கெடுபிடிகள் எல்லாம் கடந்து உள்ளே போனோம்.நம்ம கண் முன்னால் கண்டெயினர் பூட்டை வெட்டித் திறந்தாங்க. ஒரு பரிசோதகர் லிஸ்ட்டை ஒரு பார்வையிட்டு, அதிகாரியைக் கூப்பிட்டு வந்தார். டிவி, ஃப்ரிட்ஜ் மட்டும் பெரிய அளவுலே இருப்பதால் அதுக்கு ட்யூட்டி கட்டிடுங்கன்னு சொன்னதும் அதை அலுவலகத்தில் கட்டினோம். அவ்ளோதான். கண்டெயினர் நம்ம தெருவுக்குள் வர அனுமதி இல்லைன்னு ஏஜண்டு, அவுங்க குடோனுக்குக் கொண்டுபோய் சாமான்களை வேற ரெண்டு ட்ரக்கில் ஏத்திக் கொண்டுவந்து வீட்டில் அடுக்கி வச்சுட்டுப் போனாங்க.

வனவாசம் முடிஞ்சு இங்கே திரும்பி வந்தபோது அதே ஏஜண்டுகள் மூலம் கண்டெயினர் மும்பையில் இருந்து கிளம்புச்சு. ட்ராக்கிங் செஞ்சு பார்த்துக்கிட்டே இருந்தோம். கொரியாவரை ஒழுங்கா வந்த கப்பலை அப்புறம் ட்ராக் பண்ண முடியாப்போய் என்ன ஆச்சோ ஏதாச்சொன்னு கவலை. ஒரு வழியா மூணரை மாசம் கழிச்சு லிட்டில்டன் போர்ட்டுக்கு வந்து சேர்ந்துச்சு.

நவராத்ரி சமயம். போதுமான பொம்மைகள் இல்லாம ஒரு வழியா ஒப்பேத்தினேன். ( இல்லாட்டா...கிழிச்சேன்!) விஜயதசமியன்னிக்கு கண்டெயினரை வீட்டு வாசலில் கொண்டுவந்து இறக்கி வச்சார். ட்ரக்கை ஓட்டிவந்தவர்.... 'அட! இங்கே இருந்து கண்டெயினரை எடுத்துப்போக நாந்தான் வந்துருந்தேன். இப்ப நானே திரும்பக் கொண்டுவந்துட்டேன்னு சந்தோஷத்தோடு சொல்லிக்கிட்டே தனி ஆளா இயந்திரத்தை இயக்கினார். உள்ளூர் ஏஜண்டு நம்ம கண் முன்னால் கண்டெயினரைத் திறந்தார். லிஸ்ட்டைப் பார்த்து ஒரு அஞ்சு பொதிகளை பரிசோதிக்கணுமுன்னு நியூஸி MAF பிரிவு (Ministry of Agriculture and Forestry சொல்லி இருந்தாங்கன்னு அந்தக் குறிப்பிட்ட பொதிகளை அப்படியே வச்சுட்டு, மற்ற சாமான்களைப் பிரிச்சு வீட்டில் அடுக்கி வச்சுக்கிட்டு இருந்தாங்க. சொன்ன நேரத்துக்கு MAF பிரிவு பரிசோதகர் வந்தார்.

தொடரும்.............:-)

17 comments:

said...

அட டீச்சர் என்னது என்னிக்கும் இல்லாத அதிசயமா நாலே வரில இப்படி ஒரேதா 20 வருஷத்தை தாண்டிட்டீங்க..? மினித்தொடர்னாலும் இப்படிலாம் அராஜகம் பண்ணப்பிடாது.. :)))

said...

இப்ப அந்த சரவணன் ஜயராமன் கூடல்லாம் தொடர்புல இருக்கீங்களா, இல்லை என்ன கோர்த்தல் வரப்போகுது இந்த கதைலன்னு ஆர்வமா இருக்கேன்! (அப்படிலாம் ஒண்ணுமில்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க! அந்த அப்புறம் கதைகள் பத்தாயிரத்தில ஒண்ணே ஒண்ணாவது என் ஆயுசுல படிச்சதா இருக்கட்டுமேன்னு ஒரு நப்பாசை!)

said...

அந்த பத்திரிகையில் வந்த முப்பது டாலர் செய்தி ...பாவந்தான்
சுனாமி வந்த சமயம் ஜெர்மனில பேங்க் உள்ளே பெரிய பாட்டில் வச்சிருந்தாங்க .பணம் சேர்க்க .அதில நிறைய கிட்டத்தட்ட முக்காவாசி பாக் afrikan மற்றும் ஜப்பான் yen அப்புறம் நிறைய பெரியசைஸ் நோட்டுக்கள் விழுதிருன்தது அங்கிருந்த வயசானவங்க பலர் ஆஹா இவ்ளோ பெரிய அளவா இருக்கே எவ்ளோ வேல்யூ இருக்கும்னு ஆச்சர்யபட்டுபோனாங்க .
மனசுக்குள் சிரிச்சிட்டே வந்திட்டேன் .

தொடர்கிறேன் உங்களுடன் ...கப்பல் பிரயாணம் இன்ட்ரஸ்டா செல்கிறது

said...

அப்பாடா...சரவணன் அண்ட் குரூப் ஊருக்கு போய் சேர்ந்தாங்களா....

இப்போதும் அவர்களுடன் பேசுகிறீர்களா...

said...

"கப்பலும் கண்டெய்னர்களும் (கப்பல் மினித்தொடர் 4)"

பிரம்மாண்ட பகிர்வு.. பாராட்டுக்கள்..

said...

உங்கள் நினைவுச் சக்தி என்னை அசர வைக்குது டீச்சர்.....

கப்பல் பயணம் எங்களுக்கு நல்லாப் போயிட்டு இருக்கு...

தொடரட்டும்...

said...

வாங்க பொற்கொடி.

சினிமாவில் மட்டும் 'பீஸ் ஸால் கே பாத்'ன்னா சும்மா இருக்கீங்க!!!!!

சரவணன், ஜெயராமன் ரெண்டுபேரும் சென்னைவாசிகளாச்சேன்னு 'சம்பவம்' நடந்த மறுவருசம் ஊருக்குப் போனபோது தொலைபேசியில் கூப்பிட்டால்......

அதுதான் 'கோடி' காமிச்சேனே...கவனிக்கலையா? பிரசவ வைராக்கியம்.

//அந்த அப்புறம் கதைகள் பத்தாயிரத்தில ஒண்ணே ஒண்ணாவது என் ஆயுசுல படிச்சதா இருக்கட்டுமேன்னு ஒரு நப்பாசை!)//

இதுதானே வேணாங்கறது...... பத்தாயிரம் எங்கேருன்ந்து வந்துச்சு? சொன்னது ஆயிரத்தைந்நூறுதான். அதுலே ரெண்டு மூணு வெளியிட்டாச்சு போன வருசமே!

ஆங்,.....பத்தாயிரமுன்னதும்தான் நினைக்கு வருது இன்னொரு விஷயம். நேத்து ராத்திரி 1.41 மணிக்கு எங்க பத்தாயிரத்து ஆஃப்டர் ஷாக் வந்துருச்சு! இன்னிக்கு டிவியில் ஒரே கொண்டாட்டம்தான் போங்க.

said...

வாங்க ஏஞ்சலீன்.

ஆசியக்காசுகள் விவரம் படா தமாஷ்தான்.

கம்போடியா போய் இறங்குனதும் இன்ஸ்டண்ட் மில்லியனர் ஆயிட்டேன்:-)

said...

வாங்க கோவை2தில்லி.

வருசம் கழிச்சு தொடர்பு கொண்டால்...... கடலோடிகள் கரையில் இல்லைன்னு தெரியவந்தது!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

அப்படி பிரமாண்டமா இருந்ததைப் பிரிச்சு வித்துட்டாங்கப்பா!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அநேகமா அடுத்த பகுதியில் முடிவடையும் என எதிர்பார்ப்பு.

said...

endru thaniyum indha boogamba thaagam? :( Stay safe(!) all of you..

said...

கப்பல் தொடர் வந்து பார்க்கத் தாமதமாகிவிட்டது. நெருங்கிய உறவினர் நலமில்லாமல் ஹொஸ்பிரலில் ஒரு வாரம் அனுமதி காலை7....மாலை 7.30வரை டியூட்டி நமது கையில் பின் திரும்பி வீட்டுக் கடமைகள் கணனிப் பக்கம் திரும்ப நேரமிருக்கவில்லை.

விடுபட்டவை அனைத்தையும் சென்று பார்க்கின்றேன்.

said...

Just now read this series... kalakkal...:)

said...

டாங்க்கீஸ்ப்பா பொற்கொடி!

said...

வாங்க மாதேவி.
உறவினர் நலமா இருக்காரா?

கப்பல் எங்கே ஓடியாப் போகப்போகுது?

மெதுவா ஆறுதலா வாங்க. மிதப்புலேதான் இருக்கும்:-)

said...

வாங்க அப்பாவி தங்கமணி.

என்ன கலக்கலோ..... உங்க ஆசீர்வாதத்தை வாசிச்சு ..... கலங்கிப்போச்சு மனசு.