Monday, December 19, 2011

பஸ் (ஓடிப்)போயிருச்சா? அச்சச்ச்சோ.....

மக்கள்ஸ் சொந்தமா பஸ்களை ஓடவிட்டுட்டு எல்லோரும் மொதலாளிமாரா இருந்தது 'யாருக்கோ' பிடிக்கலை:-( சந்தடி சாக்குலே நானும் ஒரு மூணு பஸ்ஸுக்குச் சொந்தகாரியானேன்னா பாருங்க. பதிவுலக நண்பர்கள் இங்கே வண்டி ஓட்டிக்கிட்டு ஆன்னா ஊன்னா பதிலடி கொடுத்துக்கிட்டும் ஆதரிச்சுக்கிட்டும் எதிர்வினைகள் கொடுத்துக்கிட்டே இருந்தாங்க. நல்லபடியா பதிவு போடும் மக்கள்ஸோட 'எழுத்துவேலைகள் அப்படியப்படியே நின்னுபோயிருந்துச்சு.
பஸ்ஸை நிப்பாட்டப்போறாங்கன்னு கூச்சல் கிளம்புனதும் இந்த கூகுள்+ மெள்ள மெள்ள வந்து இடம் பிடிச்சு நிக்குது இப்போதைக்கு. இதுலே நாம் இதுவரை 'கேள்விப்படாத நபர்கள் ' எல்லாம் உங்க வட்டத்துலே சேர்ந்துக்கவான்னு கேட்டுக்கிட்டே இருக்காங்களா..... யார் என்னான்னு ஒரு பிடியும் கிட்டமாட்டேங்குது . வேணாமுன்னு விடலாமுன்னா..... ஒருவேளை நம்ம 'ரசிகர்களா' இருந்துட்டா? தினமும் ஒரு பத்திருபது பேர் மெயில்பாக்ஸ் வழி வந்துக்கிட்டே இருக்காங்கப்பா.

கூகுள்ப்ளஸும் 'யாருன்னு தெரியலைன்னா சேர்த்துக்காதே. நிர்பந்தம் ஒன்னும் இல்லையாக்கும் கேட்டோ'ன்னாலும்.....
கடைசியா ஒரு வழி கண்டேன். அவுங்க வட்டத்துலே நமக்குத் தெரிஞ்சவங்க இருந்துட்டால்.....'ஆஹா...நண்பருக்கு நண்பர்' என்ற கணக்கு. நம்ம நட்டுதான் இப்போதைக்கு ஆபத்பாந்தவனா ஆதர்ஸக்குழந்தையா இருக்கான். இடதுபக்கம் ஒரு பார்வை. குழந்தை இருக்கானா...... சரி. நாமும் க்ளிக். ஆனா எதுக்கும் இருக்கட்டுமுன்னு 'ஜஸ்ட்'ன்னு ஒன்னு போட்டுவச்சு ஜஸ்டிஃபை பண்ணி இருக்கேன்.

அபி அப்பா , ஏற்கெனவே என்னை 'குலசேகரனை ஃபாலோ' பண்ண வச்சதுலே நம்ம கோபால் ஒரு கொலைவெறியோடு இருக்கார். இப்போ நட்டு படம் போட்டு வர்றவரும் அவரேன்னு தெரிஞ்சால் என்ன ஆகப்போகுதோ!!!
சரி. நீங்கெல்லாம் எப்படி இந்தப் பிரச்சனையை சமாளிக்கிறீங்கன்னு சொல்லுங்களேன்.

சீரியஸ் பதிவு என்றதால் நிலமையைக் 'கட்டுப்படுத்த' அழகுத்தெரப்பியா கொஞ்சம் படங்கள். எல்லாம் நம்மூட்டு ரோசாக்கள்.


19 comments:

said...

நான் + பக்கம் போவதே இல்லை.

said...

பஸ்சும் புரியலே ப்ளஸ்சும் புரியலிங்க. அதுக்குள்ளாற ஒண்ணை மூடிட்டாங்களா? சரிதான்.

said...

நல்லபடியா பதிவு போடும் மக்கள்ஸோட 'எழுத்துவேலைகள் அப்படியப்படியே நின்னுபோயிருந்துச்சு.//

உண்மை, உண்மை.

மலர்கள் கொள்ளை அழகு.

said...

அட என் ஃபேவர்டி வயலட் கலர் ரோஸ் :)) சூப்பர்

said...

பூக்களை எல்லாம் ரொம்பவே ரசிச்சேன். என்னையும் +ல வட்டத்துல சேத்து சில மெயில் வந்தது. ஆனா எனக்குத்தான் இது புரியலை. யார்ட்டயாவது கத்துகலாம்னு இருக்கேன் டீச்சர்!

said...

நான் பஸ் ஓட்டினதும் இல்லை. + உம் தெரியாது!

said...

grrrrrrrrrrrrrrrrrrஎக்கச்சக்கமா ஓடிட்டு இருந்த பஸ் ஸ்டான்டை இழுத்து மூடிட்டாங்க! :(((( துக்கம் கொண்டாடிட்டுத் தான் இருக்கேன்.

மெயில் போட்டால் கண்டுக்கறதே இல்லையா? ஒரு ரிக்வெஸ்ட் கேட்டிருக்கேன், பாருங்க. :))))))

said...

பஸ்ஸில அரட்டை நிறைய இருந்தது. + ல நம்ம பதிவுகளை உடனே பதிச்சுடலாம்.
நானே தலை கால் புரியாமல் இப்ப நண்பர்கள் சர்க்கிள்ள மட்டும் நிறுத்தி வச்சிருக்கேன்.
கூகிள் சாட்,யாஹூ சாட் மாதிரிதான்.

said...

எனக்கும் பஸ்ஸும் தெரியாது. +ம் தெரியாது....

ரோஜாக்கள் மயக்குது. அழகோ அழகு...
சுத்தி போட்டுங்க.

said...

பஸ் ல பாட்டெல்லாம் செம ஜோராப்போட்டு ஓட்டிக்கிட்டிருந்தோம்..ஹ்ம்.. இருந்தாலும் கூகிளுக்கு இவ்ளோ ஆகாது.. நம்ம பயனாளர்களின் கருத்தை கவனிக்காம இப்படி அராஜகமாப்போச்சே.. :(

said...

ரீடர் தொரந்த உடனே உங்க பதிவு கண்ல பட்டா ஒரு சந்தோஷம்.

ரோஜாக்கள் கொள்ள அழகு!

said...

வாவ் டீச்சர்.. ரோஜா ரொம்ப அழகு..அதிலும் 'உஜாலா' போட்டு ஊற வைத்த நிறத்தில் மூன்றாவதாக ஒரு ரோஜா - அந் நிறத்தில் கொள்ளை அழகு.. :-)

இன்றுதான் அந்த நிறத்தில் ரோஜாவைப் பார்க்கிறேன்.. எப்படி டீச்சர் இது?

said...

பஸ் - பிளஸ் ஒண்ணும் புரியமாட்டேங்குது.. தினம் தினம் யார் யாரோ பிளஸ் போடறாங்க... யாருன்னே தெரியல.... :(

எனக்கும் இதே குழப்பம் - யாரை நானும் பிள்ஸ் பண்ணறதுன்னு...

said...

பூக்கள் மனதை அள்ளுகின்றன. மஞ்சள், வயலட் ரோஜாக்கள் மிக அழகு.

ப்ளஸில் தெரிந்த பெயராக இருந்தால் நண்பர் வட்டத்தில் சேர்த்துக் கொண்டு மற்றவரை இக்னோர் சொல்லி வருகிறேன்.

/ஒருவேளை நம்ம 'ரசிகர்களா' இருந்துட்டா? / நல்ல கேள்வி:)! நாம் ப்ளாக் செய்யாததால் அவர்களால் நம் போஸ்ட்களை படிக்க முடியும் என்றே எண்ணுகிறேன். பதிவுகள் பகிர சுலபமாகவே உள்ளது. முத்துலெட்சுமிக்குப் பாட்டு பற்றிக் கவலை. எனக்கு ஒருபதிவின் 4 படங்கள் வரை பஸ்ஸில் காட்டலாம். இங்க அது முடியாதே என்று கவலை:)!

said...

பஸ்ஸுல நான் போனதில்லை.

மூஞ்சிப்புத்தகத்துக்கும் ப்ளஸ்ஸுக்கும் ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லாத மாதிரிதான் இருக்கு. அங்கே ஃப்ரெண்ட் ரிக்கொஸ்ட்.. இங்கே வட்டத்துக்குள்ள கூட்டல். ஆனாலும் யார் ப்ளஸ் போட்டாலும் அங்கே போய் பார்த்து பழக்கப்பட்ட ஆட்கள் இருந்தா நண்பருக்கு நண்பர் எனக்கும் நண்பர்ன்னு ரைட் கொடுத்துடறதுதான். இல்லைன்னா ஒரு கும்பிடு போட்டுடுவேன் :-)

உங்கூட்டு தோட்டம் ஜூப்பரா இருக்கு. பர்ப்பிள் அசத்துது.

said...

நண்பருக்கு நண்பர் முறை முகப்புத்தகத்தில் எனக்கு ஒத்துவரவில்லை சாந்தி. பிறகு நிறைய பேரை சத்தமில்லாமல் கழற்றி விட்டேன்:)!

said...

சத்தமா சொல்லிட்டேனோ:(, :)!!

said...

அழ்கு ரோஜாக்கள்

உள்ளம் கொள்ளை போனதே!

பஸ் போனால் என்ன ??

said...

பஸ் + கிடையாது.

துளசிக்குப் போட்டியாக வீட்டில் ரோஜாக்கள் :)))

மிக அழகிய பூக்கள் ரொம்பப் பிடித்தன.