Wednesday, November 03, 2010

என்ன பெரிய மனுஷரோ.................

கலாகிராமத்தில் வேடிக்கை பார்த்துக்கிட்டே போய்க்கிட்டு இருக்கும்போது
சின்னதா உசத்தி இருக்கும் ஒரு வட்ட மேடையில் ஓய்வெடுக்கும் (பொய்க்கால்) குதிரையும் சுத்திவர நமக்கெல்லாம் உக்காரக் குட்டிச்சுவருமா ஒரு அமைப்பு. உள்ளே நுழைய களிமண் பூசி மெழுகுன நுழைவு வாசல். நகரின் நாகரீகத்தை விட்டு விலகி கிராமச்சூழலுக்கு நம்மை அறிமுகப்படுத்திக்கலாம்.
அஸ்ஸாம் ஸ்டாலில் பெயிண்டிங் சிலது விற்பனைக்கு ...... சுருட்டுப் பிடிக்கும் அம்மாவைப் பாருங்க. சூப்பரா இருக்கு இல்லே? நான் முகபாவனையைச் சொல்றேன்.
ஒரு பக்கம் பூராவும் தீனிக்கடைகள். உக்கார்ந்து சாப்பிட வசதியா எல்லோருக்கும் பொதுவான ஒரு ஃபுட் கோர்ட். உள்ளூர் கடை ஒன்னு இட்டிலி, மசால்தோசை, வடை, சாம்பார்ன்னு தென்னிந்திய சாப்பாடு போடுது:-)
ஹரியானா ஜிலேபின்னு பெருசா, குண்டா, அழகே இல்லாத ஒரு வகை.
ஒரு சின்ன டீக்கடையில் ராஜஸ்தான் பாரம்பரிய உடைகளில், அடுப்பு மூட்டி டீ போட்டுக் கொடுக்கறாங்க.
அசம்பாவிதம் நடந்தா, உடனே ஏரியாவைக் கண்டுபிடிக்கக் காவல் மாடமும் காவல்காரரும்.

ஒரு கடையில் சணல் அழகிகள் மூக்கும் முழியுமா மனசை அள்ளிக்கிட்டுப் போறாங்க. ஆசையை அடக்க முடியாமல் ஒரு இளைஞர் தொட்டுத்தொட்டுப் பார்த்துக்கிட்டே இருந்தார். ரெண்டடி உசரம் இருக்கும். விலை 1050 ரூ. எனக்கும் பிடிச்சு இருந்துச்சு. க்ளிக்குனதோடு விட்டுட்டேன். அப்பா...... என்ன ஒரு தீர்க்கமான நாசி!
சல்வார் கமீஸ், புடவை, மேசைவிரிப்பு, குஷன் கவர்ஸ் இப்படிக் கடைகளும், பீங்கான் சாமான்கள், வீட்டு அலங்காரப்பொருட்கள் கடைகளும் ஏராளம். நகர்ந்து போகும்போதே சட்னு பெருமாள் தரிசனம் கொடுத்தார். தஞ்சாவூர் பெயிண்டிங்ஸ். கும்பகோணத்துக்காரர் ஒருத்தர் ஸ்டால் போட்டுருக்கார். போன வருசமும் வந்தாராம். மேளாவில் தமிழ்நாட்டுப் பிரதிநிதியா வந்த ஒரே தமிழர் இவர்தான். வழக்கமா இருக்கும் நம்ம சாமிப் படங்கள் தவிர்த்து தாய்லாந்து நடனப்பெண் படம் ஒன்னு அட்டகாசமா இருக்கு. இதே படம் போன வருசமும் வந்து போயிருக்கு! அஞ்சுதலைப் பிள்ளையார் (ஹேரம்ப கணபதி?) அருமை.

ராக் கார்டன் சிலைகள் சிலதை இங்கே காட்சிக்கு வச்சுருக்காங்க. ராக் கார்டனைப் பத்தி முந்தி எழுதுனது இங்கே.


டெர்ரகோட்டா கலைப்பொருட்கள் குவிஞ்சு கிடக்கு. மத்தியபிரதேஷ் மாநிலத்தில் இருந்து பித்தளைச்சிலைகளும் யானைகளுமா பளபளன்னு வச்சுருக்காங்க. 35 கிலோ ஒரு யானை. ஜோடி நாற்பத்தைஞ்சு ஆயிரம்தான். ச்சீச்சீ...........இந்தப் பழம் ரொம்பவே புளிக்குது........ யக்...யாருக்கு வேணும்.....போ போ......

ஒரு நந்தி கொஞ்சம் வித்தியாசமா இருக்கேன்னு பார்த்து வச்சுக்கிட்டேன்.
அங்கங்கே திருநங்கைகள் அழகா உடைகள் அணிஞ்சு பவனி வர்றாங்க. அந்த உயரத்துக்கு ஆடை அணிகள் ரொம்ப எடுப்பா இருக்கு.

முகலாயர் காலத்துலே ராஜ குடும்பத்துக்குன்னே ரொம்ப அபூர்வமா செய்ய ஆரம்பிச்ச கண்ணாடி நகைகள் (Thewa art jewellary) இப்போ நமக்காகவும் வெளிவந்துருச்சு. கண்ணாடி மேலே 23 காரட் தங்கத் தகடைப் பதிச்சு அதுலே நகைகளைச் 'செதுக்குறாங்க' கொஞ்சம் கனமா இருக்கும் நகைகள். நம்ம பர்ஸும் ரொம்ப கனமாத்தான் இருந்தாகணும். ஆனால் ரசிக்க காசு வேணுமா என்ன? உலகம் முழுக்க இதுக்கு நல்ல டிமாண்ட் இருக்காம். இதுவரை 9 தேசிய விருதை வாங்கி இருக்காம். ராஜஸ்தான் மாநிலம் இதன் தாயகம். இந்த வகைக்கு, ப்ரிட்டிஷ் ராஜ் காலத்துலே ஏகப்பட்ட நகைநட்டுகளுக்கும். அலங்காரச் சாதனங்களுக்கும் டிமாண்ட் கூடிப்போயி, அங்கிருந்து வந்தவர்கள் கொண்டுபோனதில் பலதும் இன்னையக் கணக்குலே ஆண்ட்டீக் நகைக்கடைகளில் விக்டோரியன் ஜூவல்லரி கலெஷன்ஸ் என்ற பெயரில் சக்கைப்போடு போடுது.
இந்த மேளா நடக்கும் பத்து தினங்களில் தினமும் மாலை ஆறரைக்குக் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செஞ்சுருக்காங்க. திறந்தவெளி அரங்கில் பிரமாண்டமா ஒரு மேடை. பாட்டு கேக்க ஆரம்பிச்சதும் நாமும் அங்கே போய்ச் சேர்ந்தோம். முன் வரிசையில் இடம் கிடைச்சது.வடகிழக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் ஃபேஷன் பரேடு ஆரம்பமாச்சு. பல மாநிலங்களில் பெண்கள் புடவைதான் கட்டி வர்றாங்க. ப்ளவுஸ் மட்டும் கை நீளமா முன்கை வரை இருக்கு. நாகாலாந்துலே மட்டும் புடவையைக் காணோம்.
கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாச்சு. மிருதங்கத்தைக் கழுத்தில் தொங்கவிட்டு, அதை வாசிச்சுக்கிட்டு வெள்ளை உடுப்பும், மஞ்சள் உடுப்புமா ரெண்டு குழுவினர் ஆடோ ஆடுன்னு ஆடுனாங்க.. நல்ல ரிதம். நம்மூர் பறை போல இருக்கும் ஒரு மேளம். இதுக்கு ரெண்டு பக்கமும் மூடி இருக்கு. அதை அடிச்சுக்கிட்டே சுத்தி சுத்திவந்து, தரையில் இருந்து எகிறி வானத்துலே ஒரு அஞ்சாறடி உசரத்துக்குத் தாவிக் குதிச்சு சுத்தி வந்துகிட்டே ஆடுனாங்க. அப்புறம் பேம்பூ டான்ஸ். நீங்களும் பார்த்துருப்பீங்க. நீளமான மூங்கில்களை குறுக்கும் நெடுக்குமாக் கட்டம் போட்டதுபோல வச்சு ஆண்கள் அதைச் சேர்த்தும் பிரிச்சும் தட்டத்தட்ட பெண்கள் ஆடிக்கிட்டே கட்டத்துக்குள் போய்ப்போய் காலை வச்சு வெளியில் குதிக்கிறாங்க. நல்ல கவனமா ஆடவேண்டிய நடனம். கவனம் விலகுனா கால் போச்சு:( படார்ன்னு அடிச்சுரும்.
இந்த நடனவகைகளில் காலை மட்டும் கவனிக்கணும். அதுக்கு உசர மேடை சரிப்படாது. ஆம்பி தியேட்டர் மாதிரி கொஞ்சம் பள்ளத்துலே மேடை இருந்தா அருமையா இருந்துருக்கும். இப்பத்தான் நம் வரிசைக்கு முன்னால் போட்டுருந்த விவிஐபி இருக்கைகளுக்கு சிலர் வந்தாங்க. அரசாங்க உயர் அதிகாரியோ இல்லை சுற்றுலா அமைச்சரோ யாரோ ஒருத்தர்.

மேடை நிகழ்ச்சியைப் படம் எடுத்துக்கிட்டு இருந்த போட்டோஃகிராஃபர்கள் எல்லாரும் சொல்லி வச்சமாதிரி இந்தப் பக்கம் திருப்பி க்ளிக்கோ க்ளிக். அவுங்க உக்காருமுன் நாலைஞ்சு பணியாளர்கள் வந்து அந்த இருக்கைகளைப் பாய்ஞ்சு பாய்ஞ்சு துடைச்சாங்க. அமர்ந்ததும் ஏழெட்டுப்பேர் அவுங்களுக்காக டீயும் தின்பண்டங்களுமா தூக்கிக்கிட்டு ஓடி வந்தாங்க. எல்லாம் பளபளன்னு ஸில்வர் சர்வீஸ்.

மேடையிலோ, நாட்டியம் நடந்துக்கிட்டு இருக்கு. பொதுமக்கள் பார்வைக்கு இடைஞ்சலா இருக்கோமேன்னு யாருமே நினைக்கலை. உபசரிப்புலே மட்டும் கவனம். குளிர் சீஸன் தொடங்கிருச்சு இங்கே. சூடான சாய் இதமா இருந்துருக்கும். போகட்டும். நமக்கு விரோதம் ஏதுமில்லை. எனக்கு ஒரே ஒரு வருத்தம் என்னன்னா....... அதைக் குடிச்சு முடிச்ச அடுத்த வினாடி எழுந்து போனதுதான். அவ்வளவு முக்கியஸ்தர், மேடைக்குப்போய் பங்கேற்கும் கலைஞர்களை ரெண்டு வார்த்தைப் பாராட்டிப் பேசி இருக்கலாம் தானே? என்ன பெரிய மனுசங்களோ:( வந்தார், தின்றார், சென்றார்!
நாகாலாந்துவாசிகளின் குழுநடனம் ஊலா....ஹூலான்னு ஆரம்பிச்சது. அவுங்க ஊலாவை மொழிபெயர்த்து மைக்கில் சொன்னார் ஒருத்தர்.'வோ லோக் அப்னா பாஷாமே போல்தே ஹை(ங்) 'மேய்ன் தும் ஸே ப்யார் கர்தா ஹூம்'. உடனே கோபால் என் பக்கம் திரும்பி ஊலா ஊலான்னார். நானும் ஊலா ஊலான்னேன்:-)

பார்த்தவரை போதுமுன்னு கிளம்புனதும், பார்த்து வச்ச நந்தியைக் கையில் பிடிச்சுக்கிட்டுப் போகலாமுன்னா.............'நந்தி இருந்தா வீட்டுக்கு நல்லது இல்லை'யாம். நம்ம வாஸ்து நிபுணர் ரீல் விடறார். ' நந்தி மாதிரி குறுக்கே வராதீங்க. எப்படி நல்லது ஆகாமப் போகுதுன்னு பார்க்கணும் எனக்கு'.. இந்தக் கூட்டத்துலே அந்தக் கடை எங்கே இருக்கோன்னு தேடும் பாவனையில் நேரா அந்தப் பக்கம் போறார். தோ....ஆப்டுடுத்து!
அங்கே புத்தகம் படிக்கும் புள்ளையார் ஒருத்தர் இருந்தார். கட்டாயம் நம்ம பர்ஸைக் கடிப்பாருன்னு சொல்லும் சைஸ். நந்தியிலே நிக்கலாமுன்னு கொஞ்சம் பேரம் பேசி வீட்டுக்குக் கொண்டுவந்துட்டேன்.
நந்தி அழகா இருக்கா?

PIN குறிப்பு: தீவாலி மேளா இன்னும் ரெண்டு மூணு இடத்துலே நடக்குது. அதை அப்புறம் பார்க்கலாம். படிச்சவன் ஒருத்தன் அசிங்கமா நடந்துகிட்டான்ப்பா.:(

31 comments:

said...

வடக்கே கிராமத்துப்பெண்கள் சிலருக்கு, பீடி, சுருட்டு பிடிக்கும் வழக்கம் உண்டு. அதுவும் வயதானவர்களுக்கு மட்டுமே. காய்கறிக்கூடையை வெச்சிக்கிட்டு மார்க்கெட்டுல உக்காந்திருக்கிற பெண்கள் பிடிக்கிறதை பார்த்து மொதல்ல அதிர்ச்சியாயிருந்தது. அப்றம், கடந்து போக பழகிட்டேன் :-))))))))))

said...

பெண் ஓவியம்,சணல்பெண் எல்லாமே அழகு. எனக்கு...:(

நந்தியார் மனத்தைக் கொள்ளை கொள்கிறார்.

said...

ஆந்திராப் பக்கமும் சுருட்டுப்பிடிப்பாங்க.ஆனா ரொம்ப டேஞ்சரா தீ இருக்கும் பக்கம் வாய்க்குள் இருக்கும்!


எங்க நியூஸியிலே, புகை சமாச்சாரத்துலே ஆண்களைவிட பெண்கள் கூடுதல்:(

2025க்குள்ளே சிகரெட்டைக் கம்ப்ளீட்டா நாட்டைவிட்டு வெளியேத்தும் ஒரு திட்டம் இருக்காம்.

வந்தால் நல்லது.

said...

வாங்க மாதேவி.

//எனக்கு...:( //

எதுக்கு இம்மாம் சோகம்?

said...

டீச்சர்
சுப்பெரோ சூப்பர் போங்க.
அதுவும் அந்த பிள்ளையார் என் கண்ண விட்டு அகலவே மாட்டேங்குது.ஐயோ எவ்ளோ அழகா இருகரறு.எல்லா படங்களுமே கொள்ளை அழகு.இங்க தான் முதல் முறை திருநங்கைகள மரியதைய நடத்துறாங்க போல.அந்த surrutu பிடிக்கிற அம்மா சூப்பர்.ஆனா அந்த சனல் அம்மா வ என்னால நம்பவே முடியல.இதுவே இங்க அமெரிக்க வ இருந்து இதுக்கு நுழைவு டிக்கெட் போடு நல்ல சம்பாரிச்சு இருப்பான்.நம்ப மக்களுக்கு எவ்ளவோ திறமை இருக்கு நம்மக்கு தான் மார்க்கெட் பண்ண தெரியல ;-(

said...

நந்தி அழகா இருக்கார்.

புத்தகம் படிக்கிற பிள்ளையார் சூப்பர் (ஏன் பறவைப்பார்வையில்?)

said...

உங்க புண்ணியத்துல இந்தியாவை ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு இருக்கோம்.

said...

என்ன பெரிய மனுசங்களோ:( வந்தார், தின்றார், சென்றார்!//

அதனாலதான் அவர் பெரிய மனுஷர்!!

said...

நந்தி அழகோ அழகு.

காந்திக் கண்ணாடி, தலையுடன் புத்தகம் வாசிக்கும் பிள்ளையாரும் சூப்பர்.

said...

அட!நானும் ஜவஹர் கலா கேந்த்ரா பற்றி எழுதலாம் போல??!!!

said...

நந்தி,பிள்ளயார்,சணல் பெண் எல்லாமே சூப்பர் பா. பக்கத்தில இருந்தால் அந்த மூங்கில் நாட்டியத்தையும் படம் எடுத்திருப்பீங்க.அதான் பெரியவங்க இப்படி அமோகமா நடந்துகிட்டுப் போய்ட்டாங்க:(
ஆமாம் யார் என்ன சொன்னாங்க.வருத்தப் பட்டு இருக்கீங்க???????சொல்லுங்கப்பா.

said...

பிள்ளையாருக்கூட கண்ணாடியா,ஆனாலும் அவர் உட்கார்ந்து படிக்கும் விதம் அழகு,நந்தியாரும் மனதை கவருகிறார் டீச்சர்.கடைசியில் என்ன டீச்சர் வருத்தம்.

said...

the reading Ganesh is simply superb! You should get that too. Pcitures are superb as usual. Hapy Diwali to you and Gopal Sir!

said...

என்க்கு ரொம்ப நாளா இருக்கிற சந்தேகம். ஏன் அஸ்ஸாம் மக்களின் முக அமைப்புமட்டும் மொத்தத்தில் வித்யாசமா இருக்கு? ஜீன் என்று சொல்லி விடாதீங்க? வேறு எதும் முக்கிய காரணங்கள் உண்டா?

said...

//ஆமாம் யார் என்ன சொன்னாங்க.வருத்தப் பட்டு இருக்கீங்க???????சொல்லுங்க//

எல்லோரும் வெயிட்டிங்கில் இருக்கோம்..

said...

அன்பு து ளசி ! இன்று "பிரதோஷம்". நந்தி தர்சனம் அருமை. மிக்கநன்றி. (பதிவின் இறுதி வரி பற்றி:::-- சூரியனைப் பார்த்து சிலசமயம் நாய் குரைக்கும்! காரணம் தெரியாது ! சூரியன் கவலைப் படுவதும் இல்லை.)

said...

வாங்க விஜி.

எங்கூர்லே ஐமீன் நியூஸியிலே திருநங்கைகளை மரியாதையாத்தான் நடத்துறாங்க. ஒருத்தர் பார்லிமெண்ட் அங்கத்தினராக்கூட இருக்கார்.

சணல்பெண் நெஜமாவே அட்டகாசமா இருந்தாள். அவள் கட்டி இருக்கும் உடுப்பு கூட அருமையாக் கொசுவி இருந்துச்சுப்பா.

said...

வாங்க கயலு.

குனிஞ்சு 'அவர்' முகம் பார்க்க என்னாலே முடியலைப்பா:(

said...

வாங்க தமிழ் உதயம்.

இந்தியா மட்டுமா... கொஞ்சம் நாலெட்டு பின்னால் போனால் சில வெளிநாடுகள் கூட சுத்திப் பார்க்கலாம்.

said...

வாங்க டி பி ஆர்.

ஆஹா.....பெரிய மனுஷன் அடையாளமா அது!!!!!!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அவர் வேற மின்னலடிக்கும் மொட்டைத்தலையா இருந்தார். அதான் ஃப்ளாஷ் இல்லாம எடுத்தால் அவ்வளவு நல்லா வரலை. ஆனாலும் நல்லாவே இருந்தார்ப்பா.

said...

வாங்க அன்புடன் அருணா.

எழுதுங்கப்பா....அது எங்கே இருக்கு?
விரைவில் எதிர்பார்க்கிறென்.

said...

வாங்க வல்லி.

மூங்கில் நடனம் எடுத்தாலும் படம் க்ளியரா இல்லைப்பா. அதான் போடலை.

நம்மை யாரும் ஒன்னும் சொல்லலை. ஆனால் நம் மனசு வலிக்கும் சம்பவம் அங்கே நடந்துபோச்சுப்பா:(

said...

வாங்க சுமதி.

ரசிப்புக்கு நன்றிப்பா.

நடந்ததை ஒரு பதிவா போடறேன். அப்பத்தான் மனசு ஆறும்.

said...

வாங்க சந்தியா.

அவர் கொஞ்சம் பெரியவர்ன்னு சொன்னேனே. அதான் பயந்துக்கிட்டு விலைகூடக் கேக்கலை:(

தீபாவளி வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க ஜோதிஜி.

இந்தக் கோணத்துலே சிந்திச்சுப் பார்த்ததே இல்லை. ஆராயவேண்டிய விஷயம்தான். செஞ்சுருவோம்!!!!

கலைக்குழுவில் ஆடிய ஒருவர், நியூஸியில் நம்ம வீட்டு கிச்சனைச் செஞ்சு தந்த ஹாங்காக் கிங் மாதிரியே இருந்தார்.

அப்ப அந்த முகவெட்டு இங்கிருந்து அப்படியே பரவிப்போயிருக்கு!

said...

வாங்க அமைதிச்சாரல்.

வெயிட்டிங்கா...... அப்ப எழுதிடறேன் சீக்கிரம்:-)

said...

வாங்க பத்மா சூரி.


அட! அன்னிக்குப் ப்ரதோஷமா!!!! எப்படியோ நந்தி வந்துட்டார் பாருங்க!

நமக்கு நேரடியா ஒன்னும் நடக்கலை பத்மா. ஆனால்..... ப்ச்....
ஆண்களின் உலகம் இது.

said...

//
அவ்வளவு முக்கியஸ்தர், மேடைக்குப்போய் பங்கேற்கும் கலைஞர்களை ரெண்டு வார்த்தைப் பாராட்டிப் பேசி இருக்கலாம் தானே?
//
அவருக்கு எவ்ளோ முக்கியமான அரசாங்க ஜோலி(?) இருக்கும்.அத்த விட்டுட்டு இதுக்கெல்லாம் அவருக்கு நேரம் இருக்குமா :(
தீபாவளி வாழ்த்துக்கள்........

said...

***துளசி கோபால் said...

வாங்க பத்மா சூரி.


அட! அன்னிக்குப் ப்ரதோஷமா!!!! எப்படியோ நந்தி வந்துட்டார் பாருங்க!

நமக்கு நேரடியா ஒன்னும் நடக்கலை பத்மா. ஆனால்..... ப்ச்....
ஆண்களின் உலகம் இது.***

என்ன டீச்சர், தீபாவளி நேரத்திலே இப்படி ஒரு தலைப்பு!!!

ஆண்கள் உலகம்தான்,

படச்சது பிரம்மாவாம்

காப்பது விஷ்னு வாம்

அழிப்பது சிவனாம்

இதுக்கு இடையில் கஷ்டப்படுத்த "இதுபோல் ஆண்கள்"!

சரி, இந்த நெனைப்பை தலைமுழுகிட்டு, தீபாவள் கொண்டாடுங்க, டீச்சர்! வாழ்த்துக்கள்!

said...

oops! I did not even review what I wrote in my "response"! Somehow clicked the "wrong" button! :( Hope, no serious errors! Anyway, Happy DeepavaLi teacher- for you and for your elephant too! :)