Thursday, March 18, 2010

அச்சச்சோ..... பீங்கான் கிண்ணம் உடைஞ்சுருச்சா? த்ஸொ த்ஸொ.... இங்கே கொண்டா....

நேக் சந்த் ஸேணின்னு ஒருத்தர் 18 வருசமா ரகசியமாச் செஞ்ச காரியம் ஒன்னு அம்பலத்துக்கு வந்துருச்சு! குர்தஸ்பூர் என்ற ஊரைச்சேர்ந்தவர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினை வந்தப்ப இவரோட ஊர் பாகிஸ்தானுக்குப் போயிருச்சு. அப்ப இவுங்க குடும்பம் கிளம்பி சண்டிகர் வந்துட்டாங்க. இவருக்கு வயசு அப்போ 23. இங்கே அபோதான் புதிய தலைநகர் நிர்மாண் வேலைகள் தொடங்கப்போகும் சமயம். திட்டம் தீட்டிக்கிட்டு இருந்தாங்க. சாலைகள் போடணும். அதுக்கு ஆய்வாளர்கள் நிறையப்பேர் தேவைபட்டாங்க. அப்போ இவருக்கும் பொதுப்பணித் துறையில் ஒரு ரோட் இன்ஸ்பெக்டரா வேலை கிடைச்சது. இவருக்கு தன்னுடைய 60 வது வயசுலே பத்மஸ்ரீ பட்டம் கிடச்சது. எதுக்கு? நல்லா ரோடு போட்டதுக்கா? ஊஹூம்....... பின்னே?

ரோடு இன்ஸ்பெக்டரா வேலை பார்த்த சமயம், தன்னுடைய ஓய்வு நேரங்களில் இடிபாடுகளுக்கிடையில் ச்சும்மாச் சுத்திப் பார்த்து உடைஞ்ச பீங்கான் துண்டுகளைப் பொறுக்கி எடுத்து சேமிச்சுக்கிட்டு இருந்தார். அப்போ சண்டிகர், அங்கங்கே சில வீடுகள், கட்டிடங்கள்ன்னு சின்ன ஊரா இருந்துச்சு. சுக்னா ஏரிக்குப் பக்கத்துலே( இப்போ இந்த ஏரி சுற்றுலாத்தலமா இருக்கு. அன்னப்பறவைப் படகை . 'உலவும் தென்றல் காற்றினிலே.....' பாடிக்கிட்டே ஓட்டிக்கிட்டுப் போகலாம்)

(சிங்கிளுக்கு நல்ல படம் சிக்குச்சு. ஆனால்..... அனுப்ப முடியலை)

காடாட்டம் புதர்கள் இருந்த பகுதியில் இந்த சேகரிச்ச சாமான்களைச் சேர்த்துவச்சு அதைக் கொண்டு சிற்பமோ இல்லை பொம்மையோ ஏதோ ஒன்னு பண்ணி அங்கங்கே வச்சுக்கிட்டு இருந்துருக்கார். கற்பனை வளம் கூடுனதால் பலவித மிருகங்கள், மனிதர்களின் பலவிதமான போஸ்கள்னு மனுசர் தன்னுடைய 'ஓய்வு நேரத்துல்லே இதே வேலை'யா இருந்துருக்கார். இது இந்த ஏரிக்குத் தண்ணீர் வரும் வழியா இருப்பதால் இந்த இடத்தை அரசாங்கம் ச்சும்மாப்போட்டு வச்சுருந்துச்சு. ஊருக்கு ஒதுக்குப்புறமா வேற இருந்துச்சா...அதனால் யார் கவனமும் இதில் படலை.
ஒருநாள் யாரோ எப்படியோ இதைக் கண்டுபிடிச்சுட்டாங்க. இது 1975வது வருசம் 1957வது வருசத்துலே இருந்து ஆரம்பிச்ச பொம்மை வரிசைகள் இந்தப் பதினெட்டு வருசத்துக்குள்ளே 12 ஏக்கர் இடத்தைப் பிடிச்சுருந்துச்சு.
அரசாங்க இடத்தைப் பயன்படுத்துனது சட்டத்துக்கு புறம்பான செயல். உடனே இதையெல்லாம் இடிச்சு நொருக்கி அப்புறப்படுத்தணுமுன்னு உத்தரவாச்சு. மனசு உடைஞ்சுபோச்சு மனுசருக்கு. ஆனால் பொதுமக்கள் கிட்டே இந்தப் பிரச்சனையைக் கொண்டுபோனார். ஏகோபித்த மக்கள் ஆதரவு கிடைச்சது. இதை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கலாமுன்னு இந்தத் தோட்டத்தை 1976 இல் அரசே திறந்து வச்சுருச்சு. நேக் சந்துக்கு 'ராக் கார்டன் சப் டிவிஷனல் எஞ்சிநீயர் என்ற பதவியையும் கொடுத்து சம்பளமும் கொடுத்த அரசு 50 பேரை அவருக்கு உதவியாளர்களா வச்சுக்கச் சொல்லிருச்சு. இப்ப முழுநேரமும் பொம்மை செய்வதே தொழில். 1983வது வருசம் இந்தக் கல்த்தோட்டத்தைப் பாராட்டி அரசு ஒரு தபால்தலைகூட வெளியிட்டு இருக்காங்க
(பள்ளிக்கூடப் பசங்க கூட்டம் வந்துருக்கு)

அரசின் ஆதரவும் கிடைச்சதும் நகரின் பலபாகங்களில் உடைஞ்ச பீங்கான்கள், கண்ணாடித்துண்டுகள், மறு சுழற்சிக்கான பொருட்கள் எல்லாத்துக்கும் சேகரிப்பு நிலையங்கள் தொடங்கினார் நேக் சந்த். இந்தத் தோட்டம் முழுக்க முழுக்க ரீசைக்க்ளீங் மெட்டீரியல்ஸ் வச்சே உண்டாக்கப்பட்டது. 1996 வது வருசம் மனுசர் வெளிநாட்டுக்குப் போயிருந்த சமயம் விஷமிகள் உள்ளே புகுந்து சேதம் பண்ணிட்டாங்க. அதுக்குள்ளே பொதுமக்கள் ஆதரவால் ராக் கார்டன் சொஸைட்டி ஒன்னு அமைஞ்சு இருந்ததால் அவுங்க ஆதரவோடு எல்லாத்தையும் சரிப்படுத்தி மீண்டும் காட்சிக்கு வச்சாங்க. கொஞ்சம் கொஞ்சமா இந்த 12 ஏக்கர் இப்போ 40 ஏக்கரா வளர்ந்து போயிருக்கு. அங்கங்கே நீர்வீழ்ச்சிகள், குளங்கள், விதவிதமான பொம்மைகள், காங்க்ரீட்பொம்மைகளுக்கு பீங்கானால் ஆடைகள்ன்னு ஒரே அட்டகாசம்.
முதலில் வெறும் கல் காங்க்ரீட் பொம்மைகள்னு ஆரம்பிச்சு, நீர்நிலைகள், பீங்கான் மிருகங்கள் மனிதர்கள்ன்னு போய் இப்ப மூணாவது கட்டமா பொழுதுபோக்கு, விளையாட்டுப்பகுதிகள்னு பரவிக்கிடக்கு. வளைவு வளைவான வாசல்களுடன் மீன்காட்சி சாலைகள், குழந்தைகளுக்கான ஒட்டகச்சவாரி, கோட்டைவாசல் போன்ற அமைப்பில் வரிசைவரிசையா ஊஞ்சல், கலை நிகழ்ச்சிகள் நடக்கும்போது உக்கார்ந்து பார்க்க ஆம்பிதியேட்டர்கள் படிவரிசைகள் இப்படி ஏராளம். சினிமாப் படங்களுக்கு ஏற்றமாதிரி இடம். எப்படி விட்டு வச்சுருக்காங்கன்னு தெரியலை. அட்லீஸ்ட் ஒரு டூயட்டாவது எடுத்துருக்கலாம்.
உடைஞ்ச கண்ணாடி வளையல் புடவைகள் கட்டிக்கிட்டு நிற்கும் அழகிகள்:-)


இது நம்ம ஸ்பெஷல்:-)
சிரிக்கவைக்கும் கண்ணாடியில்:-)


ஒரு இடத்தில் நினைவுப்பொருட்கள் விற்பனைக்கு சின்னதா ஒரு ஸ்டால். கல்தோட்டம் பற்றிய புத்தகம் ஒரு 12 பக்கம் விற்பனைக்கு இருக்கு. விலை 60 ரூபாய். யாரும் வாங்கறதில்லை போல. படம் எடுக்கத் தடை ஒன்னும் இல்லாதப்ப யார் புத்தகம் வாங்குவா சொல்லுங்க? விலையை 20 ரூ. வச்சுருந்தால் அநேகமாக ஒரு 10% மக்களாவது வாங்க வாய்ப்பிருக்கு.
வெளியே போகும் வழின்னு எங்கேயும் போர்டு வைக்கலை. நாங்கள் நடந்து களைச்சு மூணாம் கட்டம் வந்தபிறகு வெளியேறும் வழியைக் காணோமேன்னு விசாரிச்சால் மூணாம் கட்டத்துக்குப் போகும் வழின்னு ஒரு அறிவிப்பு இருந்துச்சு பாருங்க. அதுக்கு எதிர்த்திசையில் போகணுமுன்னு சொல்றாங்க. எல்லா இடங்களையும்விட இந்த மூணாம் கட்டத்துலே தான் சனம் கூடுதல். தீனிக்கடைகளில் வாங்கிக்கிட்டு ஓய்வா உக்காந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. அதுக்குத் தகுந்த மாதிரி பெரிய ஹாலில் இருக்கைகளும் திண்ணைகளும் ஏராளம். குப்பைகள் இல்லாம இந்த தோட்டம் பூராவும் பளிச்ன்னு இருக்கு.
நேக் சந்தின் பல பொம்மைகள் / சிலைகள் இப்போ உலகம் முழுசும் பரவலா அங்கங்கே இருக்கும் ஆர்ட் கேலரிகளில் இடம்பிடிச்சுருக்காம்

தரை முழுசும் கல்லுகள் பதிச்சே கரடு முரடாக இருப்பதால் கால் சரியில்லாம இருந்தால் இங்கே நடப்பது ரொம்பக் கஷ்டம். வீல் சேர் ஆக்ஸெஸ் கிடையாது.

39 comments:

said...

தங்களின் அனுபவப் பகிர்வு அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்!

said...

நல்ல கட்டுரை. எனக்கும் இந்த தோட்டம் பார்க்கனும் என்று ஆசையாக இருக்கு. இதுல பூந்து சேதம் பண்ணினார்கள் பாருங்க,, சே எப்படிப்பட்ட மனுசங்க.
நல்ல படங்களுடன் அருமையான தகவல். இதுல ஒரு பொய் சொல்லிட்டிங்க டீச்சர்.

உண்மையான உருவத்தைக் காட்டும் கண்ணாடியப் போயி, சிரிக்க வைக்கும் கண்ணாடின்னு சொல்லிட்டிங்களே. உங்களை கரட்டாதானே காட்டுது.
உங்க கூட சுத்தி கோபால் சார் இளைச்சுட்டார். ஹா ஹா ஹா. (கையில பிரம்பு எதுவும் இல்லைதானே).

டீச்சர் நான் இன்று பாகற்க்காய் பிட்ல பதிவு போட்டுள்ளேன், படிக்கவும். நன்றி.

said...

நல்ல கட்டுரை. எனக்கும் இந்த தோட்டம் பார்க்கனும் என்று ஆசையாக இருக்கு. இதுல பூந்து சேதம் பண்ணினார்கள் பாருங்க,, சே எப்படிப்பட்ட மனுசங்க.
நல்ல படங்களுடன் அருமையான தகவல்.

இதுல ஒரு பொய் சொல்லிட்டிங்க டீச்சர்.

உண்மையான உருவத்தைக் காட்டும் கண்ணாடியப் போயி, சிரிக்க வைக்கும் கண்ணாடின்னு சொல்லிட்டிங்களே.

உங்களை கரட்டாதானே காட்டுது.
உங்க கூட சுத்தி கோபால் சார் இளைச்சுட்டார். ஹா ஹா ஹா. (கையில பிரம்பு எதுவும் இல்லைதானே).

டீச்சர் நான் இன்று பாகற்க்காய் பிட்ல பதிவு போட்டுள்ளேன், படிக்கவும். நன்றி.

said...

மனுசன் அதை ஒரு தவமாவே செய்திருப்பார் போலயே.. :)

said...

niraya padatula paarthu iruken

said...

வெகு சுவாரஸ்யம். பகிர்வுக்கு நன்றி!

//மனசு உடைஞ்சுபோச்சு மனுசருக்கு. ஆனால் பொதுமக்கள் கிட்டே இந்தப் பிரச்சனையைக் கொண்டுபோனார். ஏகோபித்த மக்கள் ஆதரவு கிடைச்சது. இதை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கலாமுன்னு இந்தத் தோட்டத்தை 1976 இல் அரசே திறந்து வச்சுருச்சு.//

அட, பரவாயில்லையே?

அன்னத்தைப் பார்த்ததும் ‘ஆகா சிங்கிளுக்கு’ என மனம் கூவ கீழே நீங்களும் சொல்லியிருக்கீங்க அதையே:)!

said...

வாங்க கமல்.

முதல் வருகை போல இருக்கே!

நலமா?

பக்கத்து நாட்டுக்காரர் ஆகிட்டீங்க! நெக்ஸ்ட் டோர் நெய்பர்:-)))

ஆதரவுக்கு நன்றி.

said...

வாங்க பித்தனின் வாக்கு.

உண்மைதான். பித்துப்பிடிச்சதுபோல் வாயைத் திறந்தால் ஒரே பொய்:-)))))

அதானே கண்ணாடி எங்கியாவது பொய் சொல்லுமா?

அது எப்படி எனக்குப் பிடிக்காத காயாப் பார்த்துச் சமையல் செய்றீங்க?

ஒருநாள் 'பாயில்டு பீன்ஸ்' செய்முறை எழுதுங்க:-)

said...

வாங்க எல் கே.

இந்தி சினிமாக்களிலா?

நான் இப்போ படம் பார்ப்பதே அபூர்வம். இந்த 9 மாசத்தில் ரெண்டே படம்தான் பார்த்தேன்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

மக்கள் உணர்வுக்கு மதிப்புக் கொடுத்த அரசு!

அபூர்வம்.

பாராட்டத்தான் வேணும்.

நம்ம பக்கங்களிலும் மக்கள் ஆர்வமா லஞ்சம் கொடுக்கும்போது 'அ.வியாதி'யால் வேணாமுன்னு சொல்ல முடியுதா?

said...

எனக்கும் ஒரு வளையல் புடவை ஆர்டர் ப்ளீஸ்....

அருமையான படத்துடன் கூடிய பகிர்வு...

said...

//அன்னப்பறவை படகில் “உலவும் தென்றல் காற்றினிலே” பாடிக்கிட்டே ஓட்டிக்கிட்டுப் போகலாம்//

ஆகா,கற்பனை நன்றாக உள்ளது.

அன்னம் அழகு.

said...

சுவாரஸ்யம்

said...

துளசி, எவ்வளவு பெரிய சாட்தனை செய்திருக்கிறார் மனுஷன். அதுக்கு அப்ப்ரூவலும் கிடைத்திருக்கிறதே.அதைச் சொல்லணும். கண்ணுக்கு விருந்து. நாள் பூரா பார்த்தாக் கூட அலுக்காது போல,.நன்றிப்பா. இப்பத்தான் கேள்விப்படறேன் இதைப் பற்றி.

said...

/இந்தத் தோட்டத்தை 1976 ல் அரசே
திறந்து வச்சிருச்சு/

ஆச்சரியமா இருக்கே!
ஓ! எமர்ஜென்சி காலமா.....

said...

டீச்சர் எங்க போனாலும் ஸ்கூல் பசங்க வந்துடுறாங்கல்ல ! ;-))

said...

Pictures are simply superb. Especially the first one!Hope you are having a good time.

said...

வாங்க கண்மணி.

இப்போ வரும் 'beads' வச்ச புடவைகளைவிடவும் கொஞ்சம் கனமா இருக்கும் பரவாயில்லையா? :-)

said...

வாங்க கோமதி அரசு.

நன்றி.

ஒரிஜனலும் டூப்ளிகேட்டும் பிரமாதமா இருக்குங்க:-)

said...

வாங்க புதுகைத் தென்றல்..

உங்கள் சமீபத்திய வெற்றிக்கு வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க வல்லி.

தியானமாச் செஞ்சுருக்கார். அதுதான் பலன் கிடைச்சுருக்கு.

நம்ம ஆஸ்ரமத்துலே இந்த தியானத்தைச் சொல்லிக்கொடுக்கலாமுன்னு இருக்கேன்.

ஒரு லோடு களிமண் ஆர்டர் கொடுத்தால் போதும்தானே?" :-)))))

said...

வாங்க சிஜி.

'தூக்கம்' கலைஞ்சதா?

எமர்ஜென்ஸியால் நல்ல பலன்கள் கிடைச்சுருக்கு போல!!!!!!

said...

வாங்க கோபி.

என் தொழிலை ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்காங்க!!!!

said...

வாங்க சந்தியா.

அத்தனை படங்களில் அதென்ன கரெக்ட்டா 'முதல்' படத்தைக் கண்டுபிடிச்சீங்க!!!!

'அதை மட்டும்' விக்கியில் இருந்து எடுத்தேன்.

said...

வண்ணப் பொம்மைகளின் தோட்டம் கொள்ளை அழகு.

நேக் சந்த் ஸேணின் கலைஆர்வம் திகைக்க வைக்குது.

Anonymous said...

அந்த கண்ணாடி வளையல்கள் அணிந்து இருக்கும் பொம்மைகள் அழகு. சந்துக்கு ஒரு ஓஓஒ

said...

வாங்க மாதேவி..

ஹாபி என்பது அதீத ஆர்வத்தால் அடிக்ஷன் ஆகிருது. இப்போ தமிழ்மணம் பார்ப்பதும் வலைப்பதிவு எழுதுவதும் போல!

said...

வாங்க சின்ன அம்மிணி..

நானும் அங்கே ஓ ஓஓன்னு அசந்துபோயிட்டேன்:-)

said...

இப்பத்தான் மனஸா கிட்டிருந்து வந்தேன்.அதுக்குள்ள பீங்கான் கிண்ணம்.

படங்கள் இந்தியா மேல் பொறாமை பட வைக்குதுங்க டீச்சர்.அதுவும் அந்த முதல் படம் கண்ணுல தொட்டு ஒத்திக்கலாம் போல.

said...

சிங்கம் மட்டுமில்ல அன்னம் கூட சிங்கிளா வரும் போல.

இப்படி ஒரு ஊரே இருக்கறது அரசாங்கத்துக்கு அப்புறம் நீங்க சொல்லித்தான் எல்லோருக்கும் தெரியும் போல இருக்குது.அழகான இடுகை டீச்சர்.

said...

வாங்க ராஜ நடராஜன்.

பார்த்துங்க...... கண்ணு பத்திரம். 'சுட்ட' படம், கண்ணைச் சுட்டுறப்போகுது!

உலகமெங்கும் அழகான ஊர்களுக்காப் பஞ்சம்? நமக்குத்தான் போய்ப் பார்க்க வாய்ப்பதில்லை. ஆனால் கிடைச்சா விட்டுறக்கூடாது. இதுதான் நம்ம வகுப்புலே இப்போதையப் பாடம்.

said...

Found u too! but not as fast as u..obviously! :):). Now regarding ur post- wow..a real, worthy travelogue! The pictures r fantastic and ur simple writing style takes the reader to that place itself! excellent!

Btw..U really r a very friendly person...and when i was driving back to home after the meet..i already started missing u!
Happy days.tc

Hey..only recently i started writing in Blogspot. my other URL is www.umbrella.incubation360.com. there u can read all my blogs. and in Ibibo.com [www.umbrella22.ibibo.com.blogs]also.

said...

வாங்க என் குடையே!

தமிழ் பதிவர்களில் இதுவரை மழைமட்டும்தான் இருந்தாங்க. அப்பாடா..... இனி நனைய வேணாம். குடையே வந்தாச்சு!

இங்கிலிபீஸை மட்டும் வச்சுக்காமத் தமிழுக்கும் வாங்கப்பா.

உங்க பதிவுகள் படிச்சேன். சூப்பர்.

பின்னூட்டப் பொட்டியில் அந்த வேர்டு வெரிஃபிகேஷனைத் தூக்கிருங்க. அதுக்குப் பதிலா 'மாடு விரட்டலாம்:-)

ச்சும்மா.....
மாடரேஷன் வச்சுக்குங்க. வேணாததை அங்கேயே கழிச்சுக் கட்டுவது சுலபம்:-)

said...

இப்படி டீச்சர் மட்டும் போனா எப்படி?

பீங்கான் உடைஞ்சதுக்கே இப்படின்னா...கொள்ளை அழகு ஒவ்வொண்ணும்,தோட்டம் அதைவிட.

said...

வாங்க சிந்து.

இது ஒரு ஸைஃபர் பயணம்.

ஆனா பூஜ்யமாகாமல் இருக்கனும்:-)

said...

அருமையான இடம்.

அழகான புகைப்படங்கள். செலவில்லாமலே உங்க பதிவுல படிச்சு தெரிந்து கொள்ள நிறைய இருக்கு டீச்சர்.

வாழ்த்துகள்.

said...

வாங்க சூர்யா.

'பதிவில் ஒரு தகவல்'ன்னு புத்தகம் போட்டுறலாமா? :-))))

said...

அருமை...

//சினிமாப் படங்களுக்கு ஏற்றமாதிரி இடம். எப்படி விட்டு வச்சுருக்காங்கன்னு தெரியலை. அட்லீஸ்ட் ஒரு டூயட்டாவது //

அதானே?..

said...

வாங்க சாந்தி.

நேரில் பார்த்தால் இன்னும் அழகாக இருக்குப்பா.

வருகைக்கு நன்றி.