Monday, March 22, 2010

சும்மாச் சுத்துனபோது...............கண்ணில் பட்டவை

புது நகரின் முதல் கட்ட நிர்மாணத்தில் 30 தொகுதி (செக்டர்)களுக்கான வேலை ஆரம்பிச்சது. நகரின் சனத்தொகை அப்போ ஒன்னரை லட்சம். புது நகரில் வீடு கட்ட நிலம் ஒதுக்கறோமுன்னு அரசு சொல்லுது. .வாங்க ஆளில்லை. நாலைஞ்சு கனால்களா விசாலமான இடங்கள். நாம் க்ரவுண்டுன்னு சொல்வதை இங்கே கனால்''னு சொல்றாங்க. ராணுவத்தில் இருப்போருக்கும், அரசு உத்தியோகஸ்தர்களுக்கும் முன்னுரிமை. ( இப்பவும் புது வீடுகள் விற்பனையில் மேற்பட்டோருக்கு ஸ்பெஷல் டிஸ்கவுண்டு உண்டு. உள்ளூர் தினசரியில் பார்த்தேன்.) அஞ்சாயிரமுன்னு கூவிக்கூவி வித்தாங்களாம். இப்போ அதே இடங்கள் கோடிகளில். (அப்போ ரொம்பவே சல்லிசு இல்லை?. ஆனா அப்பப் பவுன் அம்பது ரூபாயா இருந்த காலம். கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் கணக்கு சரியா வருமோ!)
தாராளமா இடம் இருக்கேன்னு பெரூசா பங்களாக்கள் கட்டிக்கிட்டு மிச்சம் இருக்கும் இடங்களில் பூச்செடிகள், புல்வெளிகள்ன்னு போட்டு வச்சுருந்துருக்காங்க. செடிகள் கொழிச்சு வளர்ந்ததைப்போல சனமும் இத்தனை வேகமாப் பெருகுமுன்னு நினைச்சுக்கூடப் பார்த்திருக்க மாட்டாங்க. அடுத்த கட்ட வேலையா ஒரு 17 செக்டர்கள் கட்டுனப்ப மூணரை லட்சம் மக்கள் அந்த 17 இடத்துக்கும் வர ரெடியா நிக்கறாங்க. சின்னச்சின்னதா வீட்டுமனைகளைப் பிரிச்சுக் கொடுக்கும்படியா ஆச்சு. அரை கனால், ஒரு கனால்ன்னு கிடைச்சதால் இண்டு இடுக்கு விடாம தோளோடு தோள் சேர்த்து நிக்கும்படியா வீடுகள் முளைச்சது. அவுங்கவுங்க விருப்பத்தின் படி வர்ணமடிச்ச சுவர்கள்.
நியூஸியில் இருக்கும் பூக்கள் வகை எல்லாம் இங்கேயும் இருக்கு. குளிர்காலநிலையும் அப்படித்தான். அதான் நியூஸியில் இருக்கும் பஞ்சாபிகள் ஹோம்சிக்கே இல்லாம இருக்காங்க போல்!

வீட்டின் கேட்டுக்கு முன்னால் ஆறடி இடம் விட்டுத்தான் காம்பவுண்ட் சுவர் கட்டணும். அதனால் எந்த தெருவைப் பார்த்தாலும் ரெண்டு பக்கமும் ஆறாறடி இடம் கிடக்கு. பெரிய சாலைகளில் இதெல்லாம் நடைபாதைகளா இருந்தாலும்., ரெஸிடென்ஸி ஏரியாக்களில் சரியான விதி முறைகள் இல்லையோன்னு ஒரு தோணல். சில குடியிருப்புப் பகுதிகளில் அந்த இடங்களை அழகான பூந்தோட்டமாக மாத்தி வச்சுருக்காங்க. அசோக மரங்களை ஒரே அளவு கன்றுகளா நட்டு வச்சு அவை வளர்ந்து உயரமாகும் சமயங்களில் ஒரே அளவில் அதுகளை கீழ்ப்பகுதியில் உள்ள இலைகளைத் தரிச்சு டோப்பியாரி செஞ்சு வச்சுருக்காங்க.
அசோகமரமுன்னு இல்லை இன்னும் வெவ்வேறு மரங்களையும் ஒவ்வொரு டிசைனில் வெட்டி வச்சுருக்காங்க. சில வீடுகளில் அருமையான கத்தாழைச்செடிகள். சிலதில் பூச்செடிகள் இப்படிக் கண்ணுக்கு விருந்தா இருக்கு. இன்னும் பலவீடுகளில் கூடுதல் அழகுன்னு மண்தொட்டிகளில் பூச்செடிகளை வச்சு காம்பவுண்டுச் சுவற்றில் ஏற்றியிருக்காங்க. செடிகளுக்குத் தண்ணீர் விடும்போது மண் கரைஞ்சு சுவர் அழுக்கு ஆகாதோ? இதுலே பக்கத்து வீட்டுக்காரரோடு போட்டி உண்டோ என்னமோ! ஒன்னுக்கொன்னு வாங்கலை!!!என்னமோப்பா......இதெல்லாம் இந்த ரெண்டாங்கட்டமா வந்த செக்டர் பகுதிகளில் அதிகம்.
முதல் கட்டத்தில் வந்த பங்களாக்களில் உள்ளே இருக்கும் அலங்காரமும் கவனிப்பும் அவ்வளவாக வெளியில் இல்லை. சிலர் அப்படியே மொட்டையாவும் விட்டு வச்சுருக்காங்க. எல்லாம் வீட்டு உரிமையாளர்களின் ரசனையைப் பொறுத்தது. வெள்ளைக்கார நாடுகளில் இப்படி பசேல்ன்னு வீட்டுத்தோட்டங்களை வச்சாலும் நாங்களேதான் மாங்குமாங்குன்னு தோட்ட வேலையும் செய்வோம். மணிக்கணக்கில் கூலி கொடுத்துக் கட்டுப்படி ஆகாதே! ஆனால் இந்தியாவில் வேலையாட்களுக்கு தினக்கூலி, மாசச் சம்பளம் என்பதால் வீட்டுவேலைகளுடன் தோட்ட வேலைக்கும் ஆள் கிடைச்சுருது. தோட்டவேலை தெரிஞ்சவங்களுக்கு (?) இங்கே 'வேலை போயிருச்சு' என்ற நிலமை இல்லவே இல்லை. அழகாத்தான் பராமரிக்கிறாங்க.
இன்னொரு விஷயம் இங்கே தண்ணீர் பஞ்சமும் இல்லையாம். அதே போல பவர் கட்டும். அங்கே சந்திச்ச ஒரு தோழி ஒருவருடன் (அதெல்லாம் ஃப்ரெண்ட் பண்ணிருவொம்லே) கொஞ்சநேரம் உரையாடிக் (?)கொண்டிருந்தபோது கேள்விப்பட்டவை இவை. அநேகவீடுகளில் வேலைக்காரர்களுக்கு ஒரு அறை இருக்கு. 'லிவ் இன் செர்வெண்ட்ஸ்'. வீடுகளில் காய்கறிகள் வெட்டிக்கொடுக்கன்னே 'சிலர்' உதவியாளர்களை வச்சுருக்காங்களாம். 'இதுக்குன்னு தனியா வேணுமா என்ன?' சட்னு உடனே கோபாலைத் திரும்பிப் பார்த்தேன், பொருள்பட:-) . பணக்காரன் அப்படித்தான் இருப்பான்னு சொல்லலாமுன்னா..... எல்லோருமே அந்த வகையில் இல்லை. அந்தச் 'சிலர்' நம்மைப்போன்ற மிடில் க்ளாஸ் மக்கள்தான்.
இன்னும் மக்கள்தொகை நெருக்கமா இருக்கும் பக்கம் போகலை. பொருளாதாரத்தில் கீழ்ப்படியில் நிக்கும் மக்கள்ஸ் எந்த இடத்தில் இருக்காங்கன்னு பார்க்கணும். தனிநபர் வருமானமுன்னு அரசு புள்ளிவிவரம் அறிவிப்பது 99262 ரூபாய்களாம். .இந்திய மாநிலங்களிலும் சரி, இல்லை, இருக்கும் ஏழு யூனியன் பிரதேசங்களிலும் சரி இந்தச் சண்டிகர்தான் முதலிடத்தில் நிக்குது. நாட்டின் பணக்கார ஊர்.

நாட்டின் பிரபலங்கள் பலர் இந்த ஊர்லேதான் இருக்காங்களாம். நம்ம கபில் தேவ், ப்ளையிங் சிக் மில்க்கா சிங், தங்கப் பதக்கம் கொண்டுவந்த அபிநவ் பிந்த்ரா, இன்னும் சிலபல க்ரிக்கெட் வீரர்(???) கள், சினிமா நடிகை(கொஞ்சம் பழையவர்) பூனம் தில்லான்னு சொல்லலாம். இந்தக் கூட்டத்துலே..............ப்ச்......... வேணாம்...............
என்னதான் ஒட்டி ஒட்டி இருந்தாலும் 'நீ வேற நான் வேற'ன்னு காமிச்சுக்கணும். இப்படித்தான் இருக்கு சண்டிகரும் ஹரியானாவும். ட்ராஃபிக் போலீஸ் யூனிஃபார்மில்கூட வெவ்வேற நிறம். அங்கே வெள்ளையும் நீலமும், இங்கே வெள்ளையும் காக்கியும். அங்கே நிறைய டர்பன்கள், குருத்வாராக்கள். இங்கே இந்த ஹரியான மாநிலத்துலே இந்துக்கள் 90 சதமானமாம். சீக்கியர்கள் வெறும் 6 சதமானம்தான். அங்கே பஞ்சாப்லே ஏறக்கொறைய 60 சதம் சீக்கியர்கள். இந்துக்கள் கிட்டத்தட்ட 37 சதம். பாக்கி மற்றவர்கள். சண்டிகர் ஏற்கெனவே பஞ்சாப் மாநில ஊர்தானே அதனால் ஊர் முழுசும் சீக்கியர்கள் நிறையவே இருக்காங்க. ஏற்கெனவே ஒரு இடத்தில் குறிப்பிட்டதுபோல ஒரு படத்தைக் கவனமாக் க்ளிக் செய்யும்போது(ம்) எதாவது ஒரு ஓரத்துலே டர்பன் விழுந்துருது:-)

இன்னொன்னும் கண்ணுலே பட்டது. சண்டிகர் பகுதிகளில் ஏராளமான குருத்வாராக்கள். சர்ச்சும் மசூதியும் எங்கியோ ஒன்னு. பஞ்ச்குலாப் பகுதிகளில் நாலைஞ்சு இந்துக்கோவில்கள் இருக்குன்னு கேள்வி. போய்ப் பார்க்க நேரம் இல்லை. இங்கே நம்ம தமிழ்நாட்டிலே ஏராளமான சர்ச்சுகளும் மசூதிகளும் வந்திருப்பதைக் கவனிச்சேன். 35 வருசத்துக்கு முன்னே சென்னையில் இருந்தப்ப இவ்வளவு இல்லை. மக்கள் தொகையும் அப்போ இவ்வளவு இல்லைன்னு வையுங்க. சரி அது இருக்கட்டும்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் எங்கே வசிக்கிறாங்கன்னு கொஞ்சம் தேடியதில் சண்டிகர் ஹௌஸிங்க் போர்டு அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டி விட்டுருக்கு. ஒரு அறை ஃப்ளாட்களும், வெறும் ஒற்றை அறைகளும் சில செக்டர்களில் இருக்காம். செக்டர் 17 என்பது நகர மையம். அதைச்சுற்றி இருப்பவை கொஞ்சம் வசதியான ஏரியாக்கள். இப்படிச் சுற்றுச்சுற்றாப்போய் நகருக்கு வெளிப்புறச் சுற்றில் ரொம்பச் சின்ன வீடுகள் இருக்காம்.
இங்கே நம் சென்னையைப்போல நடைபாதை குடித்தனங்கள் இல்லவே இல்லை. அங்கே வசிக்கும் நிலமையில் இருப்பவர்களைப்போல் சண்டிகர் மாநிலத்திலும் மக்களே இருக்கமாட்டாங்களான்ற என் கேள்விக்கு ஊர் சுற்றும் சமயம் ஒரு நாளில் பதில் கிடைச்சது. நகருக்கு வெளியே மண்சுவர்களால் குடிசைகள் கட்டிக்கிட்டு இருக்காங்க இவுங்க எல்லோரும். அதுவும் ஹரியானா பகுதிகளில்தான் பார்த்தேன். ஒருவேளை மொஹாலி பக்கம் போயிருந்தால் அங்கேயும் இருக்குமோ என்னவோ.


ஆனால் ஒன்னு. உழைச்சுப் பிழைக்கும் மக்கள் இவுங்க. அதனால் வந்த ஒரு பெருமிதம் முகத்தில் தெரியத்தான் செய்யுது! சைக்கிள் ரிக்ஷா இன்னும் இருக்கு இங்கே. ஒரு நாள் ச்சும்மா ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி வந்தேன். ரெண்டு ரெண்டரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும். சட்னு தெருவின் குறுக்காலே பாயாமலும், ஒருவழிப்பாதையில் நுழையாமலும் முறைப்படி அத்தனை பெரிய ரவுண்டாணாவைச் சுத்திக் கொண்டுவந்து விட்டார். இத்தனைக்கும் தெரு காலியா இருந்துச்சு. எவ்வளவுன்னு கேட்டப்ப .... முப்பது ரூபாய். முப்பதுக்குத்தான் போவேன் முப்பதுக்குத்தான் வருவேன்னார்:-)


27 comments:

said...

அது என்ன சர்வீஸ்டு அப்பார்ட்மெண்ட மாதிரியா டீச்சர்? (அந்த பச்சை சுடிதார் போட பொன்ணு ஃபோட்டோ..)

said...

பஞ்சாப், சிம்லா போகணும்னு எவ்ளோ நாளா ஆசை, இனி ரொம்ப காலத்துக்கு நிறைவேறாது.. ஆக நீங்க சுத்தி காமிக்கறதை நல்லா கண்ணை விரிச்சு பாத்துக்கிர்றேன். :) இந்த ஊரு இந்தியாவுல தான் இருக்கா, எப்படி விட்டு வெச்சுருப்பாங்க இப்படி? :O

said...

யப்பா...சூப்பர் ரோடு டீச்சர்..!

said...

சும்மா சுத்தினதுக்கே இவ்வளவு மேட்டர்ன்னா!!!!!

டீச்சர்க்கு திருஷ்டி சுத்தி போடணும்...

said...

அதென்ன நியூசியப் பற்றிச் சொல்லிப் புட்டு இந்தியா பற்றி லபக்கென்று தாவிட்டீங்கள்? நியூசி பற்றி நிறைய எதிர்பார்க்கிறோம். நியூசியில் ஸினோ இருக்கா?? (Snow - வெலிங்டன், ஒக்லண்டி முதலிய அனைத்து மாநிலங்களிலுமா? அல்லது குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமா)நல்லாப் புகைப் படம் எடுக்கிறீங்கள். நியூசிலாந்து பற்றி ஸ்பெசல் பதிவு தருவீர்கள் என நம்புறேன்.
இப்படிக்கு நெக்ஸ் டோர் நேபர்....

அதங்க பக்கத்து ஊர்....

said...

அதென்ன போக முப்பது வர முப்பது. அறுபது ரூபாயா? அந்த வீடு நல்லா இருக்குப்பா. ஏதோ டாக்டர்னு போர்ட் போட்டு இருந்ததே!! சரி சரி சென்னையை விட்டுட்டு ந்ல்ல ஊருக்குத் தான் போறீங்க அது நிம்மதிதான்.தண்ணீர் விட்டுக் கழுவு வாங்களோ ரோட்டை!!

said...

அடேங்கப்பா!
ஒரு ஊருக்கு குடிபோற முன்னாலே
அந்த ஊரைப்பத்தி இவ்வளவு ஸ்டடி
பண்ணிட்டுதான் போவீங்களா?

said...

அதென்ன‌ டிராபிக் ல‌யிட் அங்க‌ இருக்கு?

said...

வாங்க பொற்கொடி.

பொதுவா பச்சைச் சுடின்னா அது நானாகத்தான் இருப்பேன்:-)

படத்தில் உள்ள பெண், தோழியின் வீட்டுவேலைகளில் உதவி செய்யும் நபர்.

இப்போ உங்களுக்காக ஷிம்லா போகணுங்கறீங்க. செஞ்சுறலாம். பதிவர்களுக்காக எந்தக் 'கஷ்டமும்' படத்தயார்:-)

said...

வாங்க கோபி.

ராணுவம் பிலிபிலுன்னு ஊரில் நடமாடுவதால் எல்லாம் ஒரு ஒழுங்கில் இருக்கு!!!!

said...

வாங்க சிந்து.

து..து...து.... சொல்லிட்டேன் திருஷ்டிக்கு:-)

said...

வாங்க கமல்.

நியூஸியைப் பத்திப் போதும் போதும் என்ற அளவுக்குப் புலம்பியாச்சு. அதுதான் 'நியூஸிலாந்து' என்ற தலைப்பில் புத்தகமா வெளிவருது. இன்னும் ஒரு பத்து நாளில் புத்தகம் கைக்கு வந்துரும்.

இதற்கான அணிந்துரையை எழுத்தாளர். இரா.முருகன் அவருடைய வலைப்பதிவில் போட்டுருக்கார். பாருங்க நேரம் கிடைச்சால். தலைப்பு நியூஸிச் சேச்சி
கூகுளிச்சால் வருமுன்னு நினைக்கிறேன்

said...

வாங்க வல்லி.

அப்படித்தான் இருக்கணும். போக 30தான் கொடுத்தேன்:-)

மழைன்னு ஒரு ரோடு கழுவும் மெஷீன் இருக்கேப்பா!!!

said...

வாங்க சிஜி.

எல்லாம் தாடிக்காரர் சொல்லிப்போனதுதான்.

'எண்ணித் துணிக கருமம்'!!!!!

said...

வாங்க குமார்.

அது ஊருக்கு வெளியே இருக்கும் சாலையின் ட்ராஃபிக் லைட்!

லைட்டுக்கு அந்தப்பக்கம் வெட்டவெளி மட்டும். அதில்தான் குடிசைகள்.

said...

சும்மா சுத்தி, சுத்தி போட்டோ சுட்டு இருக்கீங்க. நல்ல இருக்கு. நியூசி போட்டோ இருந்தா, அதையும் கொஞ்சம் போடுங்கம்மா.

said...

வாங்க முகுந்த் அம்மா.

நம்ம இடுகைகளில் எக்கச்சக்கமா நியூஸி படங்களைப் போட்டுருக்கேன்.

http://thulasidhalam.blogspot.com/2007/12/blog-post_24.html


http://thulasidhalam.blogspot.com/2007/12/just-to-keep-in-touch.html

ச்சும்மா ஒரு சாம்பிளுக்கு ரெண்டு சுட்டி இருக்கு பாருங்க.

ப்ளொக்கர் தகராறு செய்வதால் பழைய இடுகைகளில் நல்லதா செலக்ட் செஞ்சு தர முடியலை:(

said...

nice thanks for sharing

said...

ஆகா காய்கறின்னதும் உங்களுக்கு கோபால் சார் ஞாபகம் வந்துடுமே. எங்க பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு டீச்சர். வர்ற ஆண்கள் தினத்தில் நாங்க சங்கம் வைக்கப் போறதா இருக்கேம்,

அந்த நாலது போட்டாவில் எப்படி என்னைக் கேக்காமல் எங்க வீட்டைப் படம் பிடித்தீர்கள்.

ரவுண்டானாவில் ரோடு அருமையா இருக்கு.

அப்புறம் ஒரு இரகசியக் கேள்வி, அந்த சைக்கிள் ரிக்சா என்ன ஆச்சுன்னு சொல்லவேயில்லை.

நல்ல பதிவு, நன்றி டீச்சர்.

said...

ஆஹா எத்தனை தகவல்கள் . பகிர்வுக்கு நன்றி !

said...

இதமான மனம் வார்த்தைகளும் படங்களும்.

ஒரு உண்மை தெரிஞ்சாகனும்?

said...

வாங்க ராம்ஜி யாஹூ/

தொடர்ந்து வருவது மகிழ்ச்சி.

said...

வாங்க பித்தனின் வாக்கு.

அவ்வளவு கல்நெஞ்சுக்காரியா நான்,
காய்கறின்னதும் கோபால் நினைவு வர?

வெங்காயத்துக்கு மட்டுமே கோபாலைப் பிடிக்கும்:-)

அதுலே ஒரு ஒல்லிப் பொண்ணு ஏறிப்போவதை கவனிக்கலையா? த்ஸொ த்ஸோ....

said...

வாங்க சங்கர்.

நாளை மக்காநாள் நம்ம பதிவுலே விஷயமே இல்லைன்னு யாராவது நாக்கு மேலே பல்லைப்போட்டுச் சொல்லிட்டாங்கன்னா?

said...

வாங்க ஜோதிஜி.

உண்மையை 'அங்கே' சொல்லிட்டேன்!

said...

எல்லாம் நல்லாக இருக்கு.

said...

வாங்க மாதேவி.

நன்றி